Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களுக்குத் தேவை ஆன்மிகமில்லை - விளாசும் மார்க்கண்டேய கட்ஜு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களுக்குத் தேவை ஆன்மிகமில்லை'' - விளாசும் மார்க்கண்டேய கட்ஜு!

மார்க்கண்டேய கட்ஜு - ரஜினிகாந்த்

மார்க்கண்டேய கட்ஜு - ரஜினிகாந்த்

``சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்.''

சர்ச்சைக் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு, அதன் மூலம் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிப்பவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனப் பல விஷயங்களில் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு, தமிழர்கள் மத்தியில் கவனம்பெற்றவர் கட்ஜு. அதேநேரத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக `தமிழர்கள் இந்தி கற்க வேண்டும்' என்று தொடர்ச்சியாகச் சில பதிவுகளை இட்டு, `இந்தியைத் திணிக்கிறார்' என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானவர் இவர். இந்தநிலையில் தற்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்துச் சில கருத்துகளைப் பதிவிட்டு மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார் கட்ஜு.

மார்க்கண்டேய கட்ஜு
 
மார்க்கண்டேய கட்ஜு

அமிதாப் பச்சனைப்போல ரஜினி!

ஏற்கெனவே 2017-ம் ஆண்டு ரஜினிக்கு எதிராகச் சில கருத்துகளைப் பதிவிட்டு, ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானவர் கட்ஜு. 2017-ம் ஆண்டு ரஜினி குறித்து, ``எனக்குத் தென்னிந்தியர்கள் மீது நல்ல மரியாதை உண்டு. ஆனால், அவர்கள் சினிமா நட்சத்திரங்களை தெய்வமாக பாவித்து வழிபடுவது ஏன் என்பது புரியவில்லை. 1967-68 காலகட்டத்தில் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தபோது தமிழ் நண்பர் ஒருவருடன் சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்.

 

அதேபோல தற்போது பல தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். சிலர், அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனவும், முதல்வராக வேண்டும் எனவும் கூறிவருகின்றனர். ஆனால், ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களின் வறுமையைப் போக்கவும், வேலையில்லாத திண்டாட்டத்தைத் தீர்க்கவும், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதாரப் பராமரிப்பு, விவசாயிகளின் கஷ்டம் போன்றவற்றைத் தீர்க்கவும் ஏதாவது தீர்வு ரஜினிகாந்த்திடம் இருக்கிறதா... அவரிடம் எதுவுமே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்?'' என்று பதிவிட்டிருந்தார். அதோடு மட்டும் கட்ஜு நிறுத்திவிடவில்லை. மேலும்,

அமிதாப் பச்சன்போல ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.
மார்க்கண்டேய கட்ஜு
ரஜினி
 
ரஜினி

கட்ஜு முதலில் சொல்லியிருந்த கருத்துகளைக்கூடப் பொறுத்துக்கொண்ட ரஜினி ரசிகர்கள், இறுதியாக அவர் சொன்ன கருத்தைக் கேட்டுக் கொதித்தெழுந்தனர்.

 

ரஜினிக்கு ஆதரவு?!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற `துக்ளக்’ பொன்விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையானது. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள், பெரியாரிய அமைப்புகள் ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தின. அந்தச் சமயத்தில் பெரியார் குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்திருந்தன. அப்போது பெரியார் குறித்த கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார் மார்க்கண்டேய கட்ஜு. அந்தப் பதிவில்,

பெரியாரைப் புகழ்பவர்கள் தங்கள் தலையில் ஒன்றும் இல்லை என்பதை உணராதவர்கள். அவரை மிகப்பெரிய தலைவர்போல சித்திரிக்கிறார்கள். ஆனால், பெரியார் ஆங்கிலேயருக்கு ஏஜென்ட்டாக இருந்தவர். ஆங்கிலேயர்கள் என்ன சொன்னாலும் அதற்கு ஒத்துப்போனவர் பெரியார்.
கட்ஜூ
பெரியார்
 
பெரியார்

கட்ஜு, இந்தப் பதிவில் ரஜினிக்கு ஆதரவளிப்பதாக எங்கும் குறிப்பிடவில்லையென்றாலும், ரஜினிக்கு ஆதரவான கருத்தாகவே இது பார்க்கப்பட்டது. கட்ஜுவின் இந்தப் பதிவை ரஜினி ரசிகர்கள் பலரும் பகிர்ந்தனர்.

மீண்டும் ரஜினியைச் சீண்டும் கட்ஜு!

ரஜினி தனது அரசியல் வருகை குறித்து, கடந்த டிசம்பர் 3-ம் தேதி அறிவித்திருந்தார். அதன் பின்னர், மார்க்கண்டேய கட்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ``ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். அவரிடம் என்ன இருக்கிறது என்று மக்கள் உற்சாகமடைகிறார்கள்... மக்களின் முக்கியப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவரிடம் யோசனைகள் ஏதாவது இருக்கின்றனவா... அப்படி எதுவும் அவரிடம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழக மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். ஆனால், திரைப்பட நட்சத்திரங்கள்மீது மோகம்கொண்டிருக்கும் விஷயத்தில் மட்டும் முட்டாள்களாகத் தெரிகிறார்கள்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரஜினி குறித்து, ``ரஜினிகாந்த் பெரும்பாலும் அரசியலில், ஆன்மிகம் குறித்தே பேசுகிறார். மக்களுக்கு ஆன்மிகம் தேவைப்படவில்லை. ஆனால், வேலைகள், உணவு, சுகாதாரம், நல்ல கல்வி ஆகியவை தேவைப்படுகின்றன. இவற்றையெல்லாம் மக்களுக்குக் கொடுக்க அவரிடம் எந்த ஐடியாவும் இல்லை. ஆன்மிகம் பற்றிய அவரது பேச்சு, அவர் வெறும் வாய்ப் பேச்சுக்காரர்தான் என்பதைக் குறிக்கிறது. அவரது தலையில் எதுவும் இல்லை என்பதையும் காட்டுகிறது'' என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஜினி
 
ரஜினி

இந்த இரண்டு கருத்துகளும் ரஜினி ரசிகர்களைக் கோபமடையச் செய்திருக்கின்றன. அந்தக் கோபத்தை அவரது பதிவின் கீழுள்ள கமென்ட் செக்‌ஷனில் காட்டிவருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

 

 

https://www.vikatan.com/government-and-politics/politics/retired-supreme-court-judge-markandey-katju-on-rajinikanth-political-entry

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, உடையார் said:

அமிதாப் பச்சன்போல ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.💯

 

2 hours ago, உடையார் said:

பெரியாரைப் புகழ்பவர்கள் தங்கள் தலையில் ஒன்றும் இல்லை என்பதை உணராதவர்கள். அவரை மிகப்பெரிய தலைவர்போல சித்திரிக்கிறார்கள். ஆனால், பெரியார் ஆங்கிலேயருக்கு ஏஜென்ட்டாக இருந்தவர். ஆங்கிலேயர்கள் என்ன சொன்னாலும் அதற்கு ஒத்துப்போனவர் பெரியார்.💯

இதை நாங்கள் சொன்னால் எங்களைப்பற்றி என்னென்னமோ எல்லாம் எழுதுவார்கள்.
இணைப்பிற்கு நன்றி உடையார்.....👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

இதை நாங்கள் சொன்னால் எங்களைப்பற்றி என்னென்னமோ எல்லாம் எழுதுவார்கள்.
இணைப்பிற்கு நன்றி உடையார்.....👍🏽

என்ன அவசரத்துக்கு தேட வராது இப்படியான செய்திகள் இன்று பார்ப்பதுடன் சரி இனி குறித்து வைத்து இருக்கனும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

அதேநேரத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக `தமிழர்கள் இந்தி கற்க வேண்டும்' என்று தொடர்ச்சியாகச் சில பதிவுகளை இட்டு, `இந்தியைத் திணிக்கிறார்' என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானவர் இவர்.

ஆமா கட்ஜுசார்வாழ், பூநூல் தெரியிறதோன்னோ, சத்தே மறச்சுகோங்கண்ணா🤣

இவா எல்லாம் பாக்கிறாளோன்னோ...

பெரியார எதிர்க்கும் போதே இந்த எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு நினைச்சேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை ஏன் புறக்கணிக்க வேண்டும்.

நீதி நிஞாயமான கேள்விகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிஞர் கட்ஜு அவர்கள் உதிர்த்த ஏனைய பொன்மொழிகள்:

1. தலித்துகள் இட ஒதுக்கீட்டை விட்டு விடவேண்டும் 

2. ஹத்திராஸ் பாலியல் வல்லுறவுக்கு வேலை வாய்பின்மையே காரணம்🤦‍♂️

சோசல் மீடியாவில் troll என்பார்களே அப்படி ஒரு பப்ளிசிட்டி பைத்தியம்தான் இந்த கட்ஜு ஐயர். 

ரஜனிகாந்த பேக்குன்னு நமக்கும் தெரியும்தானே அதை இன்னொரு மகா பேக்கு சொல்லணுமாக்கும்😀

கட்ஜுவின் மூடத்தனத்தை விளக்கும் ஒரு கட்டுரை.

https://www.news18.com/news/buzz/you-are-brahmin-markandey-katju-trolled-for-starting-dalits-against-reservation-association-2941187.html 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

அடி செருப்பால...... நீ  தோத்தா மக்கள் தோத்தா மாதிரியா ? இந்த சினிமா பஞ்ச  டைலொக்கெல்லாம் உன் ரசிகர் மன்றத்தோடு வைச்சிக்கோ....🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

என்ன அவசரத்துக்கு தேட வராது இப்படியான செய்திகள் இன்று பார்ப்பதுடன் சரி இனி குறித்து வைத்து இருக்கனும் .

நியாயபூர்வமாக பேசினால் பலருக்கு கெட்ட கோள்வம் வரும்.

 

வலதும் நாமே...

இடதும் நாமே...

மய்யமும் நாமே ...

ஆதரவும் நாமே...

எதிர்ப்பும் நாமே...

சர்வமும் நாமே...

பேஷ் பேஷ்...

இடதையும் எதிர்ப்பையும் சும்மா விட்டால் தானே நீங்கள் உள்ளே வரமுடியும்...

*   *   *   *

நம்மைப் போல்...

நம்மில் ஒருவன் போல்...

இடதாகவும் எதிர்ப்பாளனாகவும் காட்டிக்கொண்டு...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்...

நம் மண்டையை நன்னா கழுவி விடுவார்கள்...

மண்டை பத்திரங்கோண்ணா...

Edited by பராபரன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகப் பொருத்தமாக தனது ஒரு ட்வீற்றில்: "தமிழர் வழிக" என்று எழுதியிருக்கிறார், எல்லாரும் வழிகிறார்கள் சொன்னபடியே!😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஷ்புவை கிழித்த பாரதிராஜா மேடையில் விழுந்து விழுந்து சிரித்த சீமான் ...

 

சரியாத்தான் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா..... கேட்டுப்பாருங்கள் தோழர்களே....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மிகப் பொருத்தமாக தனது ஒரு ட்வீற்றில்: "தமிழர் வழிக" என்று எழுதியிருக்கிறார், எல்லாரும் வழிகிறார்கள் சொன்னபடியே!😎

இந்த பழுவேட்டையர் என்ற டிவிட்டர் ஐடி....சரியான டுபாக்கூர் பார்ட்டி. 

கொஞ்சகாலத்துக்கு முன்பு வரையும் சீமானை லெப்ட், ரைட் வாங்கினார்...பின்னர் ஒரு நாள் அசைன்மெண்ட் மாற அப்படியே ஆதரவாளர் ஆகிவிட்டார்.

விடுவார்களா நெட்டிசன்ஸ்- பழையதை எல்லாம் ஸ்கீரீன் ஷாட் எடுத்து போட்டு தொங்கவிட்டார்கள்.

இதை இயக்குவது ஒரு இந்திய தமிழர் ஆனால் தான் இலங்கை தமிழன் என சொல்லிகொள்வார். எதோ ஒரு பதிவில் ஓஎல், ஏஎல் என்றால் என்ன என்று தெரியாமல் ஓவராக சீன் போட்டு - இலங்கை தமிழர்கள் கிண்டி கிழங்கெடுத்து விட்டார்கள்🤣.

வாழ்வில் சுவாரசியம் தொய்யும் போதெல்லாம் இப்படியான டிரம்ப், எச் ராஜா, காயத்திரி ரகுராம் டிவீட்களையும் அவற்றை நெட்டிசன்ஸ் கழுவி, கழுவி ஊதுவதையும் பார்த்தால் நேரம் போவதே தெரியாது🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராடக்கூடிய நேரத்தில் அதனை திசைதிருப்பும் விதமாக இந்தியா முழுக்க பல வேளைகள் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் சூப்பர் ஸ்டாரின் கட்சி அறிமுகம் மற்றும் பிக்பாஸின் சூரப்பாவை போற்று வீடியோ என மக்கள் பலரும்  குற்றம்சாட்டி வருகின்றனர் அதனை விளக்குவதே இந்நிகழ்ச்சி. 

ஒன்றே செய்!
நன்றே செய்!
அதை வச்சி செய்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் வருகையால் யாருக்கு பாதிப்பு? -ஓசையின்றி அதிரும் தமிழக தேர்தல் களம்

ரஜினியின் வருகையால் யாருக்கு பாதிப்பு? -ஓசையின்றி அதிரும் தமிழக தேர்தல் களம்

 

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணி தமிழக அரசியலில் உருவாகும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக அரசியலில் தி.மு.க.வின் வரவு காங்கிரசுக்கு முடிவு கட்டியது. இதன் பின்னர் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மாற்று அணி அமைய வேண்டும் என்கிற கருத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை அனைவரும் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ற வகையில் விஜயகாந்தின் அரசியல் பயணம் அமைந்திருந்தது. முதலில் தனித்துப் போட்டியிட்டு தன்னுடைய பலத்தை காட்டிய விஜயகாந்த் பின்னர் அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவரானார். அதன்பின்னர் கடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார். ஆனால் மக்கள் அவரை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இதுபோன்ற ஒரு சூழலில்தான் மாற்று அரசியலை முன்னிலைப்படுத்தி கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையில் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏதோ ஒரு கட்சியை இருவரின் ஓட்டுகளும் பதம் பார்க்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இப்படி தமிழக மக்கள் சட்டமன்ற-பாராளுமன்ற தேர்தலில் மாறி மாறி வாக்களித்து அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் தொடர்ந்து வெற்றி பெற செய்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவை மாற்றியுள்ளனர். இது போன்ற சூழலில்தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் யாருடைய வாக்கு வங்கியை சிதறடிக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் வரவால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பா? இல்லை தி.மு.க.வுக்கு பாதிப்பா? என்கிற விவாதம் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மாற்றத்திற்காக ரஜினிக்கு வாக்களிப்பார்கள் என்று அவரது ரசிகர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/10143432/2147803/amil-News-Impact-of-Rajini-political-entry-in-Tamil.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.