Jump to content

அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்

Recommended Posts

பதியப்பட்டது

அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்

faheema1-1024x278.jpg
பிரேமவதி மனம்பேரியின் கதை
தமிழில் : ஃபஹீமாஜஹான்
 
maxresdefault1.jpg      ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம  வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினர் 1951ம் ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு 'பிரேமவதி மனம்பேரி' எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக 'பிரேமவதி மனம்பேரி'  நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள். இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தாண்டு அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்டபோது கதிர்காமத்து அழகுராணியாகக் கிரீடம் சூட்டப்பட்டாள். இந்த நிகழ்வு இடம்பெற்று நாள், வாரம், மாதமென ஓராண்டு கடந்தது.
 
            1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழுந்து விட்டெரிகின்ற அரசியல் சூழ்நிலைகளோடு உதயமானது. மக்கள் விடுதலை முன்னணியின் முதல் கிளர்ச்சி ஆரம்பித்ததோடு, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் போலவே கதிர்காமத்திலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபடுகின்றவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் 1947 இலக்கம் 25, இலங்கை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர காலச் சட்டமொன்றை அறிவித்து, அவசர காலச் சட்ட நடைமுறைகளைக் கொண்டுவந்தது.
 
            அதனால், பின்னடைவு காணாத கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கி மூலம் கதிர்காம பொலிஸ் நிலையத்தின் மீது இரு தாக்குதல்களைப் பிரயோகித்தனர். மறு நாள் மீண்டும் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தை விட்டுவிட்டு அங்கிருந்து அம்பாந்தோட்டை வரை பின்வாங்கிச் செல்லவேண்டுமென கதிர்காமப் பொலிஸ் நிலையப் பொலிஸ் அத்தியட்சகரான உடவத்த தீர்மானித்தார்.
 
            கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இராணுவத்தைக் களமிறக்கியது. ஏப்ரல 12 ம் திகதியையடைந்தபோது சில நாட்களுக்கேனும் இராணுவம் பின்வாங்கவேண்டும் என அப் பிரதேசத்துக்குப் பொறுப்பாகவிருந்த  இராணுவ அதிகாரி கர்னல் நுகவெல தீர்மானித்தார். இவ்வாறு இருக்க மூன்றாவது கெமுணு படைப்பிரிவின் லுதினன் ஏ.விஜேசூரிய உள்ளிட்ட இராணுவப் பிரிவொன்று ஏப்ரல் 10 -12 வரை திஸ்ஸமஹாராம நகருக்கு அண்மையில் முகாம் அமைத்துத் தங்கி இருந்திடத் துணிந்தனர்.
 
      சரியாக ஏப்ரல் மாதம் 16ம் திகதி காலை 5.30 மணியளவில் கர்னல் நுகவெல கட்டளையொன்றை விடுத்தார். அதன்படி விஜேசூரிய உள்ளிட்ட இருபத்தைந்து  பேர்களடங்கிய இராணுவ வீரர்கள் குழுவொன்று கதிர்காம நகரைக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. அவர்கள் எவ்வளவு துரிதமாகச் செயற்பட்டார்களெனின் அன்றைய காலைச் சூரியன் கதிர்காமத்திற்கு உதயமாகும் வேளையில், நகரமானது இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி, அந்த விடிகாலையிலேயே கிளர்ச்சியுடன் தொடர்புபட்டவர்களெனக் கூறி, சந்தேகத்தின் பேரில் அனேக இளைஞர் யுவதிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
jvp-in-prison-1971.jpg
    மீசையரும்பத் தொடங்கியிருந்த பள்ளிக்கூட மாணவர் தொடக்கம் திருமணமாகி ஒருநாள் கூடக் கடந்திராத இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட அனேகர் கைது செய்யப்பட்டோரில் இருந்தனர். துரதிஷ்டவசமாக அப்போது 22 வயதையடைந்திருந்த இளம் யுவதியான கதிர்காம அழகுராணியின் பெயரும் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் காணப்பட்டது.
 
      காலை 9 மணியளவில் பொலிஸ் ஜீப் வண்டியொன்று தமது வீட்டின் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த கணத்தில் பிரேமவதியின் தாயாரின் விழிகளில் ஏதோவொரு தீய நிழலொன்றின் சுவடு தென்படலாயிற்று. பொலிஸ் அதிகாரி உடவத்த உள்ளிட்ட குழுவொன்று வீட்டுக்கு வந்தது. கணப்பொழுதில் கதிர்காம அழகு ராணியை அவர்கள் கைது செய்தனர்.
 
            எந்தத் தவறைச் செய்ததற்காக தனது மகளைக் கொண்டு போகிறீர்கள் எனக் கேட்டழுத அந்தத் தாயாருக்கு  
"அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நாங்களும் இவளைக் கொண்டு போகிறோம்"
என்ற பதில் உடவத்தவிடமிருந்து கிடைத்தது.
 
dharman18091605.jpg
 
      பிரேமவதியுடன் மேலும் நான்கு இளம்பெண்கள் பொலீசாரினால் கைது செய்யப் பட்டு இராணுவ முகாமுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
 
      அன்று மாலை கர்னல் நுகவெல இராணுவ முகாமுக்கு வருகை தந்தார். அவ்வேளையில் லுதினன் விஜேசூரிய இந்த ஐந்து யுவதிகளையும் ‘கைது செய்யப்பட்ட பெண் கிளர்ச்சியாளர்கள்’ என்று கூறி அவரின் முன்னிலைக்குக் கொண்டு வந்தான். எனினும் பிரேமவதி அத்தகைய செயலொன்றில் ஈடுபட்டதற்கான அத்தாட்சியாகக் காண்பிப்பதற்கு எந்தவொரு சாட்சியும் அவனிடம் காணப்படவில்லை. ஏப்ரல் 16ம் திகதிக்குப் பின்னர் கிளர்ச்சியாளர்களின் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.
 
      பிரேமவதியைக் கைது செய்த மறுதினம் அதாவது 17 ம் திகதியன்று காலையில் லுதினன் விஜேசூரிய பிரேமவதியை நீண்ட நேரம் விசாரணை செய்தான். எனினும் அவளிடமிருந்து எந்தவொரு விடயத்தையும் வெளிக்கொண்டு வர முடியாமற்போகவே அவள் அணிந்திருக்கும் ஆடைகளைக் களையுமாறு கட்டளையிட்டான். வாழ்வில் ஒருபோதும் நடக்கும் என எதிர்பார்த்திராத நிகழ்ச்சிகளால் அதிர்ச்சியும் களைப்பும் அடைந்திருந்த அவள் அதைக் கேட்டதும் மிகவும் கலக்கமடைந்தாள். அவள் ஆடைகளைக் களைய முடியாதென மறுத்தாள். ஆனாலும் அவளது மறுப்பினால் எந்தவொரு பலனும் கிட்டவில்லை. அவளுக்கு தனது அழகு மேனியை மறைத்துக் கொண்டிருந்த ஆடைகளைக் களைய நேர்ந்தது.
 
maxresdefault.jpg
 
      லுதினன் விஜேசூரியவின் கட்டளைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. நிர்வாணமாக்கப்பட்ட யுவதிக்கு, கைகள் இரண்டையும் மேலுயர்த்தியவண்ணம் கதிர்காம நகரம் பூராகவும் நடந்து செல்லுமாறு அடுத்த கட்டளை விடுக்கப்பட்டது. அவ்வாறு செல்கையில் "நான் ஐந்து வகுப்புகளுக்கும் போனேன்" (கதிர்காமத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யினரால் நடத்தப்பட்ட 5 வகுப்புகள்) என்பதை இடைவிடாது கூறிக் கொண்டு போகுமாறும் கட்டளையிட்டான். அத்துடன் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க, மற்றொரு இராணுவ வீரன் ஆகிய மூவரும் ஆயுதங்களோடு அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்.
 
            அந்த அப்பாவி யுவதி சுமார் இருநூறு யார் தூரம் நடந்து சென்றதும் அவளருகே வந்த லுதினன் விஜேசூரிய அவளை உதைத்தான். அதன் பிறகு அவளருகே நின்றவாறே அவள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். வெடிபட்டு கீழே விழுந்த அவள் மேலும் சிறிது தூரம் நிலத்திலே தவழ்ந்தவாறு முன்னோக்கிச் சென்றாள். அதன் பிறகு எழுப்புவதற்கு முயற்சி செய்தாலும் மீண்டும் கீழே சரிந்து வீழ்ந்த அவள் இறந்து விட்டாளென நினைத்த இராணுவக் குழு அவளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு முகாமுக்குத் திரும்பியது.
 
      இறந்துவிட்டதாக நினைத்துத் தெருவில் விட்டு வந்த பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்ற தகவல் முகாமுக்குச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் அந்தக் குழுவை எட்டியது. உடனடியாக துப்பாக்கியுடன் வந்த இராணுவ வீரன் ரத்நாயக்க, உயிருக்காகப் போராடியவாறு தெருவில் வீழ்ந்து கிடந்த அவள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான். அதன் பின்னர் எலடின் எனும் நபரிடம்  குழியொன்றைத் தோண்டி அவளைப் புதைக்குமாறு கூறிவிட்டு இராணுவ வீரன் ரத்நாயக்கா முகாமுக்குத் திரும்பியிருந்தான்.
 
            இறந்து போன யுவதியின் உடலைப் புதைப்பதற்காகச் சென்ற எலடின், இன்னும் அவளது உடலில் உயிர் இருப்பதை அவதானித்தான். உடனடியாக இராணுவ வீரனைப் பின்தொடர்ந்து முகாமுக்கு ஓடி வந்த எலடின் பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்பதைத் தெரிவித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இராணுவத்தினர் அவளைக் கொலைசெய்வதற்காக இன்னொரு இராணுவ வீரனை அனுப்பினர். அவன் தனக்குக் கிடைத்த கட்டளையின் பிரகாரம், பிரேமவதியின் தலையை நோக்கி வெடிவைத்ததோடு அவ் வேட்டினால் ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினரின் மூத்த மகள், கதிர்காம அழகுராணி நிரந்தரமாகவே விழிகளை மூடிக் கொண்டாள். எவ்வாறாயினும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அவளது உடலிலில் இறுதியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவளது உயிரைப்போக்கிய இராணுவ வீரன் யார் என்பது இறுதிவரைக்கும் அறிந்து கொள்ள முடியாமற் போனதால் அவன் "அறிமுகமற்ற துப்பாக்கிதாரி" என வரலாற்றில் பதிவானதோடு அவன் ஒருபோதும் கைது செய்யப் படவும் இல்லை.
 
*******
 
      கிளர்ச்சியின் பின்னர் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவரும் கொலைசெய்வதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவ்விருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். பி..செட்டி, அர்ட்லி பெரேரா .ஆர்.எஸ்.ஆர்.குமாரஸ்வாமி ஆகிய சட்டத்தரணிகள் குழுவொன்று இவர்கள் சார்பில் தோன்றினர். லுதினன் விஜேசூரிய எதிர்ப்பு மனுவொன்றை முன்வைத்துத்  தனது பக்க நியாயங்களைக் குறிப்பிட்டிருந்தான். அதில் கர்னல் நுகவெல மூலம் அவனுக்கு கிளர்ச்சியாளர்களை அழித்துவிடுமாறு கட்டளை கிடைக்கப் பெற்றிருந்தபடியால்தான் கிளர்ச்சியாளர்களை அழித்து மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டிருந்தான். அவ்வாறே சட்டத்தரணி செட்டியும் அப்போது காணப்பட்ட சாட்சிக் கோவையின் 114 வது வாசகத்தின் பிரகாரம் அரசபணியின் செயற்பாடுகள் யாவும் சட்டபூர்வமானவை என்று வாதிட்டார்.
 
      இந்த அனைத்து நிகழ்வுகளும் அவசர காலச் சட்டம் நிலவிய சூழலிலேயே இடம்பெற்றிருந்தது. இச் சம்பவம்  நிகழ்ந்த சமயத்திலும் மோதல் ஏற்படுவதற்கான சூழல் கதிர்காமத்தில் நிலவியதாகச் சட்டத்தரணி செட்டியின் வாதம் அமைந்திருந்தது. எனினும் ஏப்ரல் 17ம் திகதி ஆகும் போது கதிர்காமத்தில் ஆயுத மோதல் ஒன்று நடைபெற்றிருக்காததோடு, அவ்வாறு நடைபெற்றிருந்தாலும் அல்லது இல்லாவிடினும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப் பட்ட நபரொருவரைக் கொலை செய்வதனை நியாயப்படுத்த முடியாதென்பது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவாக அமைந்திருந்தது. இராணுவ வீரனொருவன், மேலதிகாரியின் கட்டளையின் படி செயற்பட்டிருந்தாலும் இச் சட்ட விரோதச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு மேலதிகாரியொருவரின் கட்டளையைப் பின்பற்ற வேண்டியது அக் கட்டளையானது சட்டபூர்வமானதாக இருந்தால் மாத்திரமாகும். வேறு சொற்களில் கூறுவதானால் மேலதிகாரியொருவராக இருந்தாலும் அவர் சட்டத்திற்கு முரணான செயலொன்றைச் செய்யக் கோரும்போது அதனைப் புறக்கணிக்கவே வேண்டும்.
 
      இங்கு இவ்விரு இராணுவ வீரர்களினது சட்டத்தரணிகள் தண்டனைச் சட்டக் கோவையின் 69 வது அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதாவது, ஒன்றைச் செய்வதற்கு சட்டத்தின் மூலம் கட்டுப்பட்டிருப்பதாக 'உளப்பூர்வமாகவே' நம்பிக்கை வைத்துள்ள ஒருவர் செய்கின்ற செயலொன்றானது தவறாகாது என்பதாகும். தண்டனைச் சட்டக் கோவையானது இவ்விடயத்தை மேலும் 'சட்டத்தின் நியமங்களுக்கமைய தனது மேலதிகாரியின் கட்டளையின்படி யுத்த வீரனொருவன் கிளர்ச்சிக் குழுவொன்றைக் நோக்கிச் சுடுவதானது, அந்த வீரனின் எந்தவொரு தவறுமாகாது'  எனத் தெளிவுபடுத்துகிறது. ஆனாலும் அவசரகாலச் சட்டத்தின்கீழ் என்றபோதும் 'உளப்பூர்வமாக' என்பதனூடாகச் சட்டவிரோதச் செயல்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.
 
      இறுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிரதிவாதிகள் இருவருக்கும் 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. 1973 நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு மனு மீதான வழக்கு விசாரணையின் போது நீதிபதி அலஸ் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதென்று தீர்ப்பளித்தனர். பின்னர், அதாவது 1988 ம் ஆண்டு ஜே.வி.பி. உறுப்பினர் குழுவொன்றினால் பிரேமவதியைக் கொலை செய்ததற்கான தண்டனையாக லுதினன் விஜேசூரிய மாத்தறையில் வைத்துக் கொலை செய்யப்பட்டான்.
 
நன்றி: சட்டத்தரணி பிரியலால் சிரிசேன மனோரி கலுகம்பிட்டிய (சமபிம 2010 ஆகஸ்ட்)
எதுவரை இதழ்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சிங்களவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை அறிய தந்தத்துக்கு .

இந்த கதை முன்பே படித்தது ஆனால்  புதிதாய் வந்த யாழ் வித்துவான்களுக்கு தெரியணும் .

Posted
8 hours ago, பெருமாள் said:

நன்றி சிங்களவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை அறிய தந்தத்துக்கு .

இந்த கதை முன்பே படித்தது ஆனால்  புதிதாய் வந்த யாழ் வித்துவான்களுக்கு தெரியணும் .

பெருமாள், சிங்களவர்கள் மட்டுமல்ல ஆயுதத்தை  எடுத்து தமது அதிகார மமதையை காட்ட நினைக்கும் அனைவருமே இப்படியான கொடும் செயலைத்தான் செய்வார்கள்.

சிங்களவர் மட்டுமல்ல தமிழரின் விடுதலைக்காக போராட புறப்பட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் இப்படியான  பாதக கொலைகள் பலவற்றை  செய்துள்ளார்கள் என்பதற்கு இப்போது உயிருடன் வாழும் அவர்களின் உறவுகளே சாட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொலைகளும் மரணங்களும் இல்லாத  போராட்டங்களும்  விடுதலைகளும் நாடுகளும் அரசுகளும் இவ்வுலகில் இல்லை.

ஏன் மனிதர்களால் எழுதப்படும் புனை கதைகளில் கூட கொலைகள் இல்லாமல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராணுவ ஆட்சி நடக்கும்போது இப்படியானவற்றை  கண்டும் காணாமல் கடந்துதான் போகவேண்டும்.....!  😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, tulpen said:

புறப்பட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் இப்படியான  பாதக கொலைகள் பலவற்றை  செய்துள்ளார்கள்

அனைத்தும் அல்ல போராட என்று வெளிக்கிட்டு கடைசியில் சிங்கள ஆமியுடன் ஒட்டுக்குழுவாக சேர்ந்து இந்திய ஆமியுடன் ஒட்டுக்குழுவாக சேர்ந்த இயக்கங்கள் என்று திருத்துங்க உங்கடை புண் கடிக்குதெண்டு மற்றவனின் காலை சொறிய  வேண்டாம் மக்களுக்காக கடைசி வரை தன்  உதிரம் உயிரை கொடுத்தவர்களுக்கும்  கொலை கொள்ளை செய்தவர்களையும் ஒன்றாக்க வேண்டாம் .

அதென்ன மற்றைய இனத்தவரை திட்டினால்  உங்களுக்கு தமிழர்கள் மேல் வெறுப்பு தானாக முந்திரிக்கொட்டை போல் வருகிறது ?

உறவுகளே சாட்சி என்று சடையல் வேறை .

கடைசியில் சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்களை கூட ஒன்றாக்கி தமிழர் ஒற்றுமை பற்றி சிந்திப்பவர்கள் செயற்படுத்தினார்கள் நீங்கள்  மட்டும் தமிழர்களை விடிந்தால் பொழுது பட்டும் அதன் பின் நடுசாமத்தில் கூட கொள்ளைக்காரன் கொலைகாரன் என்று திட்டுவதன் மர்மம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, tulpen said:

சிங்களவர் மட்டுமல்ல தமிழரின் விடுதலைக்காக போராட புறப்பட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் இப்படியான  பாதக கொலைகள் பலவற்றை  செய்துள்ளார்கள் என்பதற்கு இப்போது உயிருடன் வாழும் அவர்களின் உறவுகளே சாட்சி. 

தமிழர்களும் இப்படியான  பாதக கொலைகள் பலவற்றை  செய்துள்ளார்கள். ஆகவே சிங்கள இராணுவத்தினர் செய்தவை சரியானதே, அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதுபோல் உங்கள் வாதம் மிகச் சிறந்ததாக உள்ளது.  

அன்று இந்தக் கிளர்ச்சியை அடக்குவததற்கு இராணுவத்துடன் சென்ற காவற்துறை அதிகாரி சம்பந்தன் கூறியது,  இன்று அவர் உயிருடன் இல்லை, விடுதலைப் போராளிகளின் தாக்குதலில் இறந்துவிட்டார்.

அந்த அழகுராணிப் பட்டம் பெற்ற பிரேமவதி மனம்பேரியை இராணுவ றக்வண்டியின் பின்புற விளிம்பில் முழங்கால் இரண்டும் பதியும்படி குப்புறக் கிடத்தி முழங்காலுக்கு அப்பாலுள்ள உடம்பு அந்தரத்தில் தொங்கும்படி அவளின் இரு கால்களையும் இரும்புச் சப்பாத்துகளால் அழுத்திப் பிடித்தபோது, உடம்புப் பாரம் தாங்காது முழங்கால்கள் இரண்டும் முறிந்து உடல் தொங்கி தலை வீதியில் இழுபட வண்டியை ஓட்டிச் சென்றார்களாம். இப்போதும் அவர் கூறியதை நினைத்தால் மனம் பதறுகிறது.    

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பெண்ணின் கொலை கண்டனத்திற்குரியது ...ஆனால் அழகென்பதால்  மட்டும் கொலை செய்யப்படவில்லை ...அவர் பாலியல் வன்புணர்க்கு உள்ளாக்கவில்லை...ஜேவிபியோடு தொடர்பு என்பதாலே கொலை செய்யப்பட்டார்[உண்மை, பொய்க்கு அப்பால்]....இந்த பெண்ணுக்கு அவர்களோடு தொடர்பு இருந்திருக்கா விட்டால் அவர்களும் இந்த பெண்ணின் கொலைக்காய் பழி வாங்கி இருக்க மாட்டார்கள் 
சிங்கள அரசு அவர்களது மொழி பேசும் மக்களையே நாட்டை துண்டாட போகிறார்கள் என்று அழித்தவர்கள் ..அப்படி  இருக்கும் எமது போராட்டத்தை அழித்ததை எப்படி ஒரு இனத்திற்கு எதிரான அழிவு என்று சொல்ல முடியும்?

Posted
1 hour ago, Paanch said:

தமிழர்களும் இப்படியான  பாதக கொலைகள் பலவற்றை  செய்துள்ளார்கள். ஆகவே சிங்கள இராணுவத்தினர் செய்தவை சரியானதே, அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதுபோல் உங்கள் வாதம் மிகச் சிறந்ததாக உள்ளது.  

அன்று இந்தக் கிளர்ச்சியை அடக்குவததற்கு இராணுவத்துடன் சென்ற காவற்துறை அதிகாரி சம்பந்தன் கூறியது,  இன்று அவர் உயிருடன் இல்லை, விடுதலைப் போராளிகளின் தாக்குதலில் இறந்துவிட்டார்.

அந்த அழகுராணிப் பட்டம் பெற்ற பிரேமவதி மனம்பேரியை இராணுவ றக்வண்டியின் பின்புற விளிம்பில் முழங்கால் இரண்டும் பதியும்படி குப்புறக் கிடத்தி முழங்காலுக்கு அப்பாலுள்ள உடம்பு அந்தரத்தில் தொங்கும்படி அவளின் இரு கால்களையும் இரும்புச் சப்பாத்துகளால் அழுத்திப் பிடித்தபோது, உடம்புப் பாரம் தாங்காது முழங்கால்கள் இரண்டும் முறிந்து உடல் தொங்கி தலை வீதியில் இழுபட வண்டியை ஓட்டிச் சென்றார்களாம். இப்போதும் அவர் கூறியதை நினைத்தால் மனம் பதறுகிறது.    

பாஞ்ச், எனது கருத்தில் எங்காவது இராணுவத்தினர் செய்தவை எல்லாம் சரியானது என்று நேரடியாகவோ அதன் பொருள்படவோ கூறப்படுட்டுள்ளதா. உங்கள் கற்பனையை எனது கருத்துக்குள் ஏன் திணிக்கின்றீர்கள்?  மிக தெளிவாக பெருமாளின் கருத்துக்கு பதில் வழங்கினேன்.

கருத்தை மீண்டும் தருகிறேன் வாசித்து அதில் சிங்கள இராணுவம் செய்த‍து சரி என்று பொருள்பட கூறப்படுள்ளதா என்று கூறுங்கள். 

8 hours ago, tulpen said:

பெருமாள், சிங்களவர்கள் மட்டுமல்ல ஆயுதத்தை  எடுத்து தமது அதிகார மமதையை காட்ட நினைக்கும் அனைவருமே இப்படியான கொடும் செயலைத்தான் செய்வார்கள்.

சிங்களவர் மட்டுமல்ல தமிழரின் விடுதலைக்காக போராட புறப்பட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் இப்படியான  பாதக கொலைகள் பலவற்றை  செய்துள்ளார்கள் என்பதற்கு இப்போது உயிருடன் வாழும் அவர்களின் உறவுகளே சாட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, ரதி said:

சிங்கள அரசு அவர்களது மொழி பேசும் மக்களையே நாட்டை துண்டாட போகிறார்கள் என்று அழித்தவர்கள் ..அப்படி  இருக்கும் எமது போராட்டத்தை அழித்ததை எப்படி ஒரு இனத்திற்கு எதிரான அழிவு என்று சொல்ல முடியும்?

இலங்கை முழுவதும் சிங்கள இனத்தோடு இணைந்து வாழ்ந்த தமிழினதைமட்டும் தடவைக்குத் தடவை இனக்கலவரம் என்று பொய்யாகப் பெயர்சூட்டி அந்த இனத்தைச் சூறையாடி, கொன்றும், அடித்தும் துரத்தியதெல்லாம் ஒரு இனத்திற்கு எதிராநதல்ல.

காற்றின் திசை மாறியதால், கிளாலிக் கடலில் ஒரு வள்ளம் தவறுதலாக ஆனையிறவு இராணுவ முகாமிற்குள் சென்றுவிட அதில் பயணித்த அப்பாவிமக்களைத் தமிழினம் என்ற ஒரே காரணத்திற்காகவும், குமுதினிப் படகில் பயணித்தவர்கள் தமிழினம் என்ற ஒரே காரணத்திற்காகவும், குத்தியும், வெட்டியும் கொல்லப்பட்டது ஒரு இனத்திற்கு எதிரானதல்ல. 

இந்த விக்கினேசுவரன் ஐயா நீதிபதியாகவிருந்து ஓய்வுபெற்றதும் அவர் மூளையும் ஓய்வுபெற்று தமிழின அழிப்பு என்று சிங்களவரைக் குறைகூறி ஏதேதோ புலம்புகிறார். அவரை லண்டன் தேம்சு நதிக்கையிலுள்ள எங்கள் சோதரியிடம் அனுப்பி சில நாட்களுக்கு அவரிடம் பாடங்கள் பயிலும்படி இத்தால் சிபார்சுசெய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை ப்பொலிஸ் இராணுவம்...............போன்ற படைப்பிரிவுகளுக்கு தெரிந்த ஒரேவிடயம் அடி,உதை,சுடு, உடுப்பையகற்றுதல்..........போன்றவை மட்டும்தான்.சட்டப்பிரிவுகள் பற்றி அவர்களுக்குத்தெரியாது. ஜேவிபியின்கிளர்ச்சியேன்றுதான் ஆழைபபதுண்டு. ஆனால் தமிழ் மக்களது. போரட்டமாகும்.என்னைப்பெறுத்தவரையில் ,இலங்கையில் சாதாரணகுடிமகன் தொடக்கம் ஐனதிபதி வரை சட்டத்தின்முன் அனைவரும் சமன்னென்று, ஆட்சிநடந்துகிருக்குமானால் ,நாம் அனைவரும் ,அங்கே சந்தோசமாகவாழ்ந்திருப்போம்,மட்டுமல்ல எந்த  ஒரு ஆயுதப்போரட்டமும் தோன்றியிருக்காது. டககிளஸ் தேவனந்தாவும் அமைச்சாரகியிருக்கமட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரதி said:

சிங்கள அரசு அவர்களது மொழி பேசும் மக்களையே நாட்டை துண்டாட போகிறார்கள் என்று அழித்தவர்கள் ..அப்படி  இருக்கும் எமது போராட்டத்தை அழித்ததை எப்படி ஒரு இனத்திற்கு எதிரான அழிவு என்று சொல்ல முடியும்?

உங்கடை வீட்டில் உங்கள் பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கலாம் 

பக்கத்து வீட்டு காரன் பிள்ளைக்கு உங்களால் அடாத்தாக புகுந்து  தண்டனை குடுத்தால் அதுக்கு என்ன பெயர் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/12/2020 at 03:17, nunavilan said:

அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்

faheema1-1024x278.jpg
பிரேமவதி மனம்பேரியின் கதை
தமிழில் : ஃபஹீமாஜஹான்
 
maxresdefault1.jpg      ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம  வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினர் 1951ம் ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு 'பிரேமவதி மனம்பேரி' எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக 'பிரேமவதி மனம்பேரி'  நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள். இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தாண்டு அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்டபோது கதிர்காமத்து அழகுராணியாகக் கிரீடம் சூட்டப்பட்டாள். இந்த நிகழ்வு இடம்பெற்று நாள், வாரம், மாதமென ஓராண்டு கடந்தது.
 
            1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழுந்து விட்டெரிகின்ற அரசியல் சூழ்நிலைகளோடு உதயமானது. மக்கள் விடுதலை முன்னணியின் முதல் கிளர்ச்சி ஆரம்பித்ததோடு, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் போலவே கதிர்காமத்திலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபடுகின்றவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் 1947 இலக்கம் 25, இலங்கை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர காலச் சட்டமொன்றை அறிவித்து, அவசர காலச் சட்ட நடைமுறைகளைக் கொண்டுவந்தது.
 
            அதனால், பின்னடைவு காணாத கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கி மூலம் கதிர்காம பொலிஸ் நிலையத்தின் மீது இரு தாக்குதல்களைப் பிரயோகித்தனர். மறு நாள் மீண்டும் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தை விட்டுவிட்டு அங்கிருந்து அம்பாந்தோட்டை வரை பின்வாங்கிச் செல்லவேண்டுமென கதிர்காமப் பொலிஸ் நிலையப் பொலிஸ் அத்தியட்சகரான உடவத்த தீர்மானித்தார்.
 
            கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இராணுவத்தைக் களமிறக்கியது. ஏப்ரல 12 ம் திகதியையடைந்தபோது சில நாட்களுக்கேனும் இராணுவம் பின்வாங்கவேண்டும் என அப் பிரதேசத்துக்குப் பொறுப்பாகவிருந்த  இராணுவ அதிகாரி கர்னல் நுகவெல தீர்மானித்தார். இவ்வாறு இருக்க மூன்றாவது கெமுணு படைப்பிரிவின் லுதினன் ஏ.விஜேசூரிய உள்ளிட்ட இராணுவப் பிரிவொன்று ஏப்ரல் 10 -12 வரை திஸ்ஸமஹாராம நகருக்கு அண்மையில் முகாம் அமைத்துத் தங்கி இருந்திடத் துணிந்தனர்.
 
      சரியாக ஏப்ரல் மாதம் 16ம் திகதி காலை 5.30 மணியளவில் கர்னல் நுகவெல கட்டளையொன்றை விடுத்தார். அதன்படி விஜேசூரிய உள்ளிட்ட இருபத்தைந்து  பேர்களடங்கிய இராணுவ வீரர்கள் குழுவொன்று கதிர்காம நகரைக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. அவர்கள் எவ்வளவு துரிதமாகச் செயற்பட்டார்களெனின் அன்றைய காலைச் சூரியன் கதிர்காமத்திற்கு உதயமாகும் வேளையில், நகரமானது இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி, அந்த விடிகாலையிலேயே கிளர்ச்சியுடன் தொடர்புபட்டவர்களெனக் கூறி, சந்தேகத்தின் பேரில் அனேக இளைஞர் யுவதிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
jvp-in-prison-1971.jpg
    மீசையரும்பத் தொடங்கியிருந்த பள்ளிக்கூட மாணவர் தொடக்கம் திருமணமாகி ஒருநாள் கூடக் கடந்திராத இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட அனேகர் கைது செய்யப்பட்டோரில் இருந்தனர். துரதிஷ்டவசமாக அப்போது 22 வயதையடைந்திருந்த இளம் யுவதியான கதிர்காம அழகுராணியின் பெயரும் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் காணப்பட்டது.
 
      காலை 9 மணியளவில் பொலிஸ் ஜீப் வண்டியொன்று தமது வீட்டின் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த கணத்தில் பிரேமவதியின் தாயாரின் விழிகளில் ஏதோவொரு தீய நிழலொன்றின் சுவடு தென்படலாயிற்று. பொலிஸ் அதிகாரி உடவத்த உள்ளிட்ட குழுவொன்று வீட்டுக்கு வந்தது. கணப்பொழுதில் கதிர்காம அழகு ராணியை அவர்கள் கைது செய்தனர்.
 
            எந்தத் தவறைச் செய்ததற்காக தனது மகளைக் கொண்டு போகிறீர்கள் எனக் கேட்டழுத அந்தத் தாயாருக்கு  
"அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நாங்களும் இவளைக் கொண்டு போகிறோம்"
என்ற பதில் உடவத்தவிடமிருந்து கிடைத்தது.
 
dharman18091605.jpg
 
      பிரேமவதியுடன் மேலும் நான்கு இளம்பெண்கள் பொலீசாரினால் கைது செய்யப் பட்டு இராணுவ முகாமுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
 
      அன்று மாலை கர்னல் நுகவெல இராணுவ முகாமுக்கு வருகை தந்தார். அவ்வேளையில் லுதினன் விஜேசூரிய இந்த ஐந்து யுவதிகளையும் ‘கைது செய்யப்பட்ட பெண் கிளர்ச்சியாளர்கள்’ என்று கூறி அவரின் முன்னிலைக்குக் கொண்டு வந்தான். எனினும் பிரேமவதி அத்தகைய செயலொன்றில் ஈடுபட்டதற்கான அத்தாட்சியாகக் காண்பிப்பதற்கு எந்தவொரு சாட்சியும் அவனிடம் காணப்படவில்லை. ஏப்ரல் 16ம் திகதிக்குப் பின்னர் கிளர்ச்சியாளர்களின் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.
 
      பிரேமவதியைக் கைது செய்த மறுதினம் அதாவது 17 ம் திகதியன்று காலையில் லுதினன் விஜேசூரிய பிரேமவதியை நீண்ட நேரம் விசாரணை செய்தான். எனினும் அவளிடமிருந்து எந்தவொரு விடயத்தையும் வெளிக்கொண்டு வர முடியாமற்போகவே அவள் அணிந்திருக்கும் ஆடைகளைக் களையுமாறு கட்டளையிட்டான். வாழ்வில் ஒருபோதும் நடக்கும் என எதிர்பார்த்திராத நிகழ்ச்சிகளால் அதிர்ச்சியும் களைப்பும் அடைந்திருந்த அவள் அதைக் கேட்டதும் மிகவும் கலக்கமடைந்தாள். அவள் ஆடைகளைக் களைய முடியாதென மறுத்தாள். ஆனாலும் அவளது மறுப்பினால் எந்தவொரு பலனும் கிட்டவில்லை. அவளுக்கு தனது அழகு மேனியை மறைத்துக் கொண்டிருந்த ஆடைகளைக் களைய நேர்ந்தது.
 
maxresdefault.jpg
 
      லுதினன் விஜேசூரியவின் கட்டளைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. நிர்வாணமாக்கப்பட்ட யுவதிக்கு, கைகள் இரண்டையும் மேலுயர்த்தியவண்ணம் கதிர்காம நகரம் பூராகவும் நடந்து செல்லுமாறு அடுத்த கட்டளை விடுக்கப்பட்டது. அவ்வாறு செல்கையில் "நான் ஐந்து வகுப்புகளுக்கும் போனேன்" (கதிர்காமத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யினரால் நடத்தப்பட்ட 5 வகுப்புகள்) என்பதை இடைவிடாது கூறிக் கொண்டு போகுமாறும் கட்டளையிட்டான். அத்துடன் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க, மற்றொரு இராணுவ வீரன் ஆகிய மூவரும் ஆயுதங்களோடு அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்.
 
            அந்த அப்பாவி யுவதி சுமார் இருநூறு யார் தூரம் நடந்து சென்றதும் அவளருகே வந்த லுதினன் விஜேசூரிய அவளை உதைத்தான். அதன் பிறகு அவளருகே நின்றவாறே அவள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். வெடிபட்டு கீழே விழுந்த அவள் மேலும் சிறிது தூரம் நிலத்திலே தவழ்ந்தவாறு முன்னோக்கிச் சென்றாள். அதன் பிறகு எழுப்புவதற்கு முயற்சி செய்தாலும் மீண்டும் கீழே சரிந்து வீழ்ந்த அவள் இறந்து விட்டாளென நினைத்த இராணுவக் குழு அவளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு முகாமுக்குத் திரும்பியது.
 
      இறந்துவிட்டதாக நினைத்துத் தெருவில் விட்டு வந்த பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்ற தகவல் முகாமுக்குச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் அந்தக் குழுவை எட்டியது. உடனடியாக துப்பாக்கியுடன் வந்த இராணுவ வீரன் ரத்நாயக்க, உயிருக்காகப் போராடியவாறு தெருவில் வீழ்ந்து கிடந்த அவள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான். அதன் பின்னர் எலடின் எனும் நபரிடம்  குழியொன்றைத் தோண்டி அவளைப் புதைக்குமாறு கூறிவிட்டு இராணுவ வீரன் ரத்நாயக்கா முகாமுக்குத் திரும்பியிருந்தான்.
 
            இறந்து போன யுவதியின் உடலைப் புதைப்பதற்காகச் சென்ற எலடின், இன்னும் அவளது உடலில் உயிர் இருப்பதை அவதானித்தான். உடனடியாக இராணுவ வீரனைப் பின்தொடர்ந்து முகாமுக்கு ஓடி வந்த எலடின் பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்பதைத் தெரிவித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இராணுவத்தினர் அவளைக் கொலைசெய்வதற்காக இன்னொரு இராணுவ வீரனை அனுப்பினர். அவன் தனக்குக் கிடைத்த கட்டளையின் பிரகாரம், பிரேமவதியின் தலையை நோக்கி வெடிவைத்ததோடு அவ் வேட்டினால் ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினரின் மூத்த மகள், கதிர்காம அழகுராணி நிரந்தரமாகவே விழிகளை மூடிக் கொண்டாள். எவ்வாறாயினும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அவளது உடலிலில் இறுதியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவளது உயிரைப்போக்கிய இராணுவ வீரன் யார் என்பது இறுதிவரைக்கும் அறிந்து கொள்ள முடியாமற் போனதால் அவன் "அறிமுகமற்ற துப்பாக்கிதாரி" என வரலாற்றில் பதிவானதோடு அவன் ஒருபோதும் கைது செய்யப் படவும் இல்லை.
 
*******
 
      கிளர்ச்சியின் பின்னர் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவரும் கொலைசெய்வதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவ்விருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். பி..செட்டி, அர்ட்லி பெரேரா .ஆர்.எஸ்.ஆர்.குமாரஸ்வாமி ஆகிய சட்டத்தரணிகள் குழுவொன்று இவர்கள் சார்பில் தோன்றினர். லுதினன் விஜேசூரிய எதிர்ப்பு மனுவொன்றை முன்வைத்துத்  தனது பக்க நியாயங்களைக் குறிப்பிட்டிருந்தான். அதில் கர்னல் நுகவெல மூலம் அவனுக்கு கிளர்ச்சியாளர்களை அழித்துவிடுமாறு கட்டளை கிடைக்கப் பெற்றிருந்தபடியால்தான் கிளர்ச்சியாளர்களை அழித்து மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டிருந்தான். அவ்வாறே சட்டத்தரணி செட்டியும் அப்போது காணப்பட்ட சாட்சிக் கோவையின் 114 வது வாசகத்தின் பிரகாரம் அரசபணியின் செயற்பாடுகள் யாவும் சட்டபூர்வமானவை என்று வாதிட்டார்.
 
      இந்த அனைத்து நிகழ்வுகளும் அவசர காலச் சட்டம் நிலவிய சூழலிலேயே இடம்பெற்றிருந்தது. இச் சம்பவம்  நிகழ்ந்த சமயத்திலும் மோதல் ஏற்படுவதற்கான சூழல் கதிர்காமத்தில் நிலவியதாகச் சட்டத்தரணி செட்டியின் வாதம் அமைந்திருந்தது. எனினும் ஏப்ரல் 17ம் திகதி ஆகும் போது கதிர்காமத்தில் ஆயுத மோதல் ஒன்று நடைபெற்றிருக்காததோடு, அவ்வாறு நடைபெற்றிருந்தாலும் அல்லது இல்லாவிடினும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப் பட்ட நபரொருவரைக் கொலை செய்வதனை நியாயப்படுத்த முடியாதென்பது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவாக அமைந்திருந்தது. இராணுவ வீரனொருவன், மேலதிகாரியின் கட்டளையின் படி செயற்பட்டிருந்தாலும் இச் சட்ட விரோதச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு மேலதிகாரியொருவரின் கட்டளையைப் பின்பற்ற வேண்டியது அக் கட்டளையானது சட்டபூர்வமானதாக இருந்தால் மாத்திரமாகும். வேறு சொற்களில் கூறுவதானால் மேலதிகாரியொருவராக இருந்தாலும் அவர் சட்டத்திற்கு முரணான செயலொன்றைச் செய்யக் கோரும்போது அதனைப் புறக்கணிக்கவே வேண்டும்.
 
      இங்கு இவ்விரு இராணுவ வீரர்களினது சட்டத்தரணிகள் தண்டனைச் சட்டக் கோவையின் 69 வது அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதாவது, ஒன்றைச் செய்வதற்கு சட்டத்தின் மூலம் கட்டுப்பட்டிருப்பதாக 'உளப்பூர்வமாகவே' நம்பிக்கை வைத்துள்ள ஒருவர் செய்கின்ற செயலொன்றானது தவறாகாது என்பதாகும். தண்டனைச் சட்டக் கோவையானது இவ்விடயத்தை மேலும் 'சட்டத்தின் நியமங்களுக்கமைய தனது மேலதிகாரியின் கட்டளையின்படி யுத்த வீரனொருவன் கிளர்ச்சிக் குழுவொன்றைக் நோக்கிச் சுடுவதானது, அந்த வீரனின் எந்தவொரு தவறுமாகாது'  எனத் தெளிவுபடுத்துகிறது. ஆனாலும் அவசரகாலச் சட்டத்தின்கீழ் என்றபோதும் 'உளப்பூர்வமாக' என்பதனூடாகச் சட்டவிரோதச் செயல்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.
 
      இறுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிரதிவாதிகள் இருவருக்கும் 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. 1973 நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு மனு மீதான வழக்கு விசாரணையின் போது நீதிபதி அலஸ் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதென்று தீர்ப்பளித்தனர். பின்னர், அதாவது 1988 ம் ஆண்டு ஜே.வி.பி. உறுப்பினர் குழுவொன்றினால் பிரேமவதியைக் கொலை செய்ததற்கான தண்டனையாக லுதினன் விஜேசூரிய மாத்தறையில் வைத்துக் கொலை செய்யப்பட்டான்.
 
நன்றி: சட்டத்தரணி பிரியலால் சிரிசேன மனோரி கலுகம்பிட்டிய (சமபிம 2010 ஆகஸ்ட்)
எதுவரை இதழ்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேவிபி நாட்டைத்துண்டாடப்போரடவில்லை. முலுநாட்டினட்சியைப்பிடிக.கவே கிளர்ச்சி செய்தார்கள்  அவர்கள் நாட்டை துண்டாடப்போரடியிருந்தல், பல இயக்கங்கள் உருவாகிப்போரடாவேண்டியநிலை  வந்திருக்காது.

துண்டாடப்பட்டதிலொரு துண்டை நாம் பெற்றிருப்போம்.

தமிழன. கண்டி,அனுரதபுரம்,பொலநறுவை,நல்லுர், வன்னி ...........என அந்தக்காலத்திலாட்சி செய்துள்ளான்.

இன்றையநிலையில் ,இலங்கைத்தீவு ஒரு நாடு. அரசியல்வாதிகள்,தேர்தல்சமயங்களில் ,வாக்குப்பெறுவற்க்காச்செல்லும்கதைதான் 

பக்கத்துவீட்டுக்கதை. அப்படியானால் பாரளுமன்றுப்பினர்களாய் ,எங்கே ?ஏன்?. போகிறீர்கள் .பக்கத்துவீட்டுக்கா?   

இலங்கையிலுள்ளயரசியல்  வாதிகளைப்பொறுத்தவரையிலும், என்கணிப்பிலும்

அந்தயரசியல் வாதிகள்  பாரளுமன்றறுப்பினர் பதவிகளை,ஒரு வருவாயிட்டும் 

தொழிலாகக்கருதியதனையடையப்போரடுகிறார்கள். இதன்போது தமிழர் பிராச்சனை பேசுபொருளாகிறது. தமிழ்ப்பிரதிநிதிகள், தமிழர்பிரச்சனைக்காப்போரடவில்லை.

போரடப்போவதுமில்லை.  அப்படிபோரடவேண்டுமென்றவெண்ணமிருந்திருந்தால்,

இவர்கள்,ஒற்றுமையாவதற்க்கு எந்ததடையுமிராது.

ஜேர்மான் தேர்த்தல் முறை மிகச்சிறந்ததேர்தல்முறையாகும். அதன்சிறப்பு ஒவ்வோரு வாக்குக்கும் மதிப்புயுண்டுயேன்பதேயாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவில் "50 "உறுபபினருக்குரிய மாநிலத்தில் கூடிய வாக்குவீதத்தைப்பெறும் கட்சி அந்த "50" உறுப்பினரையும் பெறறுவிடும்.

மேற்படிமாநிலத்தில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கையதிகரித்துச்செல்லுமபோது, கூடுதல் வாக்குப்பெறும் கட்சியின் வாக்குவீதம் குறைந்துசெலலும் . 30%கூடவரலாம் மிச்ச 70%க்கு உறுப்பனரில்லை.

30% க்குமட்டும் அனைத்து உறுப.பினரும்போவது சரியா? தயவுசெயது பிழையிருப்பின் திருத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/12/2020 at 03:09, பெருமாள் said:

நன்றி சிங்களவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை அறிய தந்தத்துக்கு .

சிங்களவர்கள் எப்படி என்பதை 1989 இந்திய இராணுவத்தினால் நடத்தப்பட்ட வல்வைப் படுகொலையின் பின்னர் கட்டுப்பெத்த/மொல்பேயில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது அறிந்துகொண்டேன்.

பல இரவுகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்கும். காலையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பின்னால் ஓடும் ஆற்றைக் கடக்கும் கொஸ்பலாங்க பாலத்தில் நின்று பார்தால் ஜேவிபி என்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் பொலித்தீன் பையால் முகம் மூடிக்கட்டப்பட்ட இளைஞர்களின் உடல்கள் ஆற்றில் அலையோட்டத்திற்குள் நீருக்குள் நிற்பது மாதிரி மேலும் கீழும் ஆடிக்கொண்டிருக்கும். எப்படி அவ்வாறு நிற்பது மாதிரி கொல்லப்பட்ட உடல்களை மிதக்கவைப்பார்கள் என்று அந்த  ஞாபகம் வரும்போதெல்லாம் தோன்றுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

கால்களில்  பாரத்தை கட்டி விட்டால்  அப்படி மிதக்கும் என நினைக்கிறேன் . மக்களிடையே அதிக பீதியை  வேணுமெண்டே கிளப்ப  இவ்வளவு காலம் ஆகியும் இன்னும் அதன் கோரம் அன்று பார்ப்பவர்களின் நினைவுகளில் தங்கிவிடும். 

வல்வை  படுகொலையிலும்  வேணுமெண்டே  இறந்தவர்களை அடையாளம் காணாத அளவுக்கு அழுகிய பின்னர்தான் மூன்றாம் நாள் மதியம் அளவில்தான்  இந்திய ராணுவம் அங்கிருந்து அகன்றது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

அமெரிக்காவில் "50 "உறுபபினருக்குரிய மாநிலத்தில் கூடிய வாக்குவீதத்தைப்பெறும் கட்சி அந்த "50" உறுப்பினரையும் பெறறுவிடும்.

மேற்படிமாநிலத்தில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கையதிகரித்துச்செல்லுமபோது, கூடுதல் வாக்குப்பெறும் கட்சியின் வாக்குவீதம் குறைந்துசெலலும் . 30%கூடவரலாம் மிச்ச 70%க்கு உறுப்பனரில்லை.

30% க்குமட்டும் அனைத்து உறுப.பினரும்போவது சரியா? தயவுசெயது பிழையிருப்பின் திருத்தவும்.

ஜேர்மன் முறை என்று நீங்கள் சொல்வது விகிதாசார பிரதிநிதிதுவத்தைதானே? இதுதான் ஜனாதிபதி தேர்தல் தவிர் தேர்தலகளில் இலங்கையிலும் உள்ளது.

இந்த தேர்தல் முறையில் குறைந்த வாக்கு எடுக்கும் கட்சிகளும் பிரதிநிதிதுவம் பெற முடியும். ஆனால் அது நன்மையாகவும் முடியும், தீமையாகவும் முடியலாம்.

உதாரணதுக்கு ஜேர்மன் சட்டபடி நாஜிவாதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இதை ஒத்த கருதுடைய கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியிட்டு, தமது விகிதாசாரத்தை படிபடியாக கூட்டி, ஒரு கட்டத்தில் அவர்களில் ஆட்சி தங்கும் நிலையை உருவாக்கி, பின்னர் நாஜி கொள்கை மீதான தடையை நீக்கும் படி வற்புறுத்தலாம்.

இப்படி ஒரு அரசியலைதான் இத்தாலியில் பைவ் ஸ்டாரும் ஜேர்மனியில் ஏஎப்டி யும் முன்னெடுக்கிறன.

ஆனால் first past the post சிஸ்டம் இருக்கும் யூகே, அமெரிக்காவில் இது அவ்வளவு இலகுவில் சாத்தியமாகாது. இங்கேயும் பல அடிபடைவாத கட்சிகள் இருந்தாலும் அவை பாராளுமன்றில் ஒரு சீட்டைதானும் எடுப்பதில்லை.

அமெரிக்காவில் popular vote அடிப்படையில் ஜனாதிபதியை முடிவு செய்யாமைக்கும் இதுவே காரணம். ஒரு சில மாநிலத்தில் 98% வாக்கை பெற்றே ஒருவர் popular vote ஐ வெல்லலாம். ஆனால் பெரும்பான்மையான மாநில மக்கள் அவரை மறுதலித்து இருக்கலாம்.

இதை தவிர்க்கும் பொருட்டே மாநிலங்களுக்கு சனதொகை அடிப்படையில் electoral college வாக்குகள் கொடுக்கபடுகிறன. 

ஆனால் எல்லா மாநிலங்களும் தமது முழு வாக்குகளையும் 50% மேல் எடுத்தவருக்கு கொடுப்பதில்லை. 

மெய்ன், மொண்டானா போன்றவை தமது electoral college வாக்குகளை சதவீத அடிப்படையில் இரு வேட்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎19‎-‎12‎-‎2020 at 20:09, Paanch said:

இலங்கை முழுவதும் சிங்கள இனத்தோடு இணைந்து வாழ்ந்த தமிழினதைமட்டும் தடவைக்குத் தடவை இனக்கலவரம் என்று பொய்யாகப் பெயர்சூட்டி அந்த இனத்தைச் சூறையாடி, கொன்றும், அடித்தும் துரத்தியதெல்லாம் ஒரு இனத்திற்கு எதிராநதல்ல.

காற்றின் திசை மாறியதால், கிளாலிக் கடலில் ஒரு வள்ளம் தவறுதலாக ஆனையிறவு இராணுவ முகாமிற்குள் சென்றுவிட அதில் பயணித்த அப்பாவிமக்களைத் தமிழினம் என்ற ஒரே காரணத்திற்காகவும், குமுதினிப் படகில் பயணித்தவர்கள் தமிழினம் என்ற ஒரே காரணத்திற்காகவும், குத்தியும், வெட்டியும் கொல்லப்பட்டது ஒரு இனத்திற்கு எதிரானதல்ல. 

இந்த விக்கினேசுவரன் ஐயா நீதிபதியாகவிருந்து ஓய்வுபெற்றதும் அவர் மூளையும் ஓய்வுபெற்று தமிழின அழிப்பு என்று சிங்களவரைக் குறைகூறி ஏதேதோ புலம்புகிறார். அவரை லண்டன் தேம்சு நதிக்கையிலுள்ள எங்கள் சோதரியிடம் அனுப்பி சில நாட்களுக்கு அவரிடம் பாடங்கள் பயிலும்படி இத்தால் சிபார்சுசெய்கிறேன்.

உங்களுக்கு விளங்காத மாதிரி தமிழ் எழுதியது என் தப்புத் தான் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

உங்களுக்கு விளங்காத மாதிரி தமிழ் எழுதியது என் தப்புத் தான் 

விளங்காத மாதிரி தமிழ் எழுதினீர்களா  நீங்கள் எழுதியது எனக்கு விளங்கியதே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

உங்களுக்கு விளங்காத மாதிரி தமிழ் எழுதியது என் தப்புத் தான் 
 
இது உங்கள் தப்பென்று எனக்குத் தோன்றவில்லை தங்கையே! எனது மப்பாகவும் இருக்கலாம்.! முதல்நாள் இரவுதான் வெள்ளிக்கிழமை, தமிழ் சிறியைச் சந்தித்துவிட்டு வந்திருந்தேன்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

ஜேர்மன் முறை என்று நீங்கள் சொல்வது விகிதாசார பிரதிநிதிதுவத்தைதானே? இதுதான் ஜனாதிபதி தேர்தல் தவிர் தேர்தலகளில் இலங்கையிலும் உள்ளது.

இந்த தேர்தல் முறையில் குறைந்த வாக்கு எடுக்கும் கட்சிகளும் பிரதிநிதிதுவம் பெற முடியும். ஆனால் அது நன்மையாகவும் முடியும், தீமையாகவும் முடியலாம்.

உதாரணதுக்கு ஜேர்மன் சட்டபடி நாஜிவாதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இதை ஒத்த கருதுடைய கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியிட்டு, தமது விகிதாசாரத்தை படிபடியாக கூட்டி, ஒரு கட்டத்தில் அவர்களில் ஆட்சி தங்கும் நிலையை உருவாக்கி, பின்னர் நாஜி கொள்கை மீதான தடையை நீக்கும் படி வற்புறுத்தலாம்.

இப்படி ஒரு அரசியலைதான் இத்தாலியில் பைவ் ஸ்டாரும் ஜேர்மனியில் ஏஎப்டி யும் முன்னெடுக்கிறன.

ஆனால் first past the post சிஸ்டம் இருக்கும் யூகே, அமெரிக்காவில் இது அவ்வளவு இலகுவில் சாத்தியமாகாது. இங்கேயும் பல அடிபடைவாத கட்சிகள் இருந்தாலும் அவை பாராளுமன்றில் ஒரு சீட்டைதானும் எடுப்பதில்லை.

அமெரிக்காவில் popular vote அடிப்படையில் ஜனாதிபதியை முடிவு செய்யாமைக்கும் இதுவே காரணம். ஒரு சில மாநிலத்தில் 98% வாக்கை பெற்றே ஒருவர் popular vote ஐ வெல்லலாம். ஆனால் பெரும்பான்மையான மாநில மக்கள் அவரை மறுதலித்து இருக்கலாம்.

இதை தவிர்க்கும் பொருட்டே மாநிலங்களுக்கு சனதொகை அடிப்படையில் electoral college வாக்குகள் கொடுக்கபடுகிறன. 

ஆனால் எல்லா மாநிலங்களும் தமது முழு வாக்குகளையும் 50% மேல் எடுத்தவருக்கு கொடுப்பதில்லை. 

மெய்ன், மொண்டானா போன்றவை தமது electoral college வாக்குகளை சதவீத அடிப்படையில் இரு வேட்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறன.

உங்கள் நீண்டவிளக்கத்துக்கு மிக்கநன்றி.   ஜெர்மானியில் 50%தொகுதிமுறைப்படியும்,50%விகிநசாரப்படியும் தெரிவு செய்வார்கள்.

குறைந்தது 5%வாக்குக்கள் அல்லது 3 தொகுதிகளைப்பெற்ற கட்சிகளுக்கு

விகிதசாரப்படி  உறுப்பினர் வழங்கப்படும் .

Cdu.. Spd. . Grune.  Fdp.  Dps.. போன்றகட்சிகள் கூட்டணி வைக்கும்.

ஆனால்Afd உடன்எந்தக்கட்சியும் உட்டணி வைக்காது .எனவே  அவர்களால்,

ஆட்சிஅமைக்வே...ஆட்சியில்பங்குபற்றவே...பாரளுமன்றத்தில் ஒர் தீர்மானத்தை

நிறைவேற்றவே ..முடியாது.   ஜெர்மானியாரின் குழந்தைப்பிறப்புவீதம் குறைவு,

ஆனால் வெளிநாட்டாவரின் குழந்தைபிறப.பு வீதம் அதிகம்.

பெற்றேரிலேருவருக்கு  நிரநதாரவதிவிடயுரிமையிருப்பின்,....2000 ஆண்டின் பின்

பிறந்த வெளிநாட்டுக்குழந்தைகள் ஜெர்மானியாரவர். நாசிகளுக்கு வாக்கு வங்கி

வளர்ச்சிவீதம் குறைவு....நாசிகளுக்கு ஏதிரான வாக்கு வங்கி வளர்ச்சிவீதம் அதிகம்.....

துருக்கியஜெர்மானியாரும்....பெரும்பான்மை ஜெர்மானியாரும் Afd க்கட்சியை

அதரிக்கமாட்டார்கள்....ருசியாஜெர்மானியார்....ருமேனியாஜெர்மானியார்.  

போலந்துஜெர்மானியார்......நாசிகளுடனைந்தல்....மாற்றம்வரமிகமிக குறைந்த

சந்தர்ப்பமுண்டு....இங்கு ஒர்கட்சி தனிந்து ஆட்சியமைக்கமுடியாது......

நாசிகள்  கிளர்ச்சிசெய்யவும் ....வன்முறைகளைச்செய்யவுமுடியும் ......

இது என்கருந்து ...சிலசமயம் இதற்க்கு நேர்ஏதிர்மாறகவும் நடைபெறலாம்...

இதில சரிபிழைகளை...தமிழசிரி...குமாரசாமி.....வாத்தியார்....பான்ஸ்......

மற்றும்...நீங்களும். பதிவுயிடலாம்........ ...

இவ்வளவு உலகயரசியலறிவுள்ள இலங்கை தமிழர் பிரச்சனைக்கு....என்னமாதிரியான

தீர்வுசாத்தியமென எழுதுங்கள்........

,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு நிதிமன்றங்களாலும்...சட்டத்தரணிகளாலும்..இந்த சிறிய இராணுவக்குழுவிலுள்ள சுட்டவனை விசாரிந்து  கண்டரியமுடியவில்லை...

2009ஆம் ஆண்டு பல இராணுவககுழுக்களலும்  நவீன ஆயுதங்களலும்

தரை..கடல்....ஆகாயம் என மும்மார்க்கங்களலும்  மேற்கொள்ளப்பட்டதாக்குதல்களில் படுகொலைசெய்யப்பட்ட  1 50 000

தமிழ்மக்களை படுகொலைசெய்யப்பட்ட வழக்கை இவர்கள் விசாரிக்கத்தகுதியற்றவாரகள்......எனவே ஒன்றல்ல. பலசர்வதேசநீதிமன்றங்கள்

விசாரிக்கவேண்டும்.

1951ஆம் ஆண்டு. பிறந்தவர். ..1971ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டார்..

வயது 22 சரியா?😁🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kandiah57 said:

உங்கள் நீண்டவிளக்கத்துக்கு மிக்கநன்றி.   ஜெர்மானியில் 50%தொகுதிமுறைப்படியும்,50%விகிநசாரப்படியும் தெரிவு செய்வார்கள்.

குறைந்தது 5%வாக்குக்கள் அல்லது 3 தொகுதிகளைப்பெற்ற கட்சிகளுக்கு

விகிதசாரப்படி  உறுப்பினர் வழங்கப்படும் .

Cdu.. Spd. . Grune.  Fdp.  Dps.. போன்றகட்சிகள் கூட்டணி வைக்கும்.

ஆனால்Afd உடன்எந்தக்கட்சியும் உட்டணி வைக்காது .எனவே  அவர்களால்,

ஆட்சிஅமைக்வே...ஆட்சியில்பங்குபற்றவே...பாரளுமன்றத்தில் ஒர் தீர்மானத்தை

நிறைவேற்றவே ..முடியாது.   ஜெர்மானியாரின் குழந்தைப்பிறப்புவீதம் குறைவு,

ஆனால் வெளிநாட்டாவரின் குழந்தைபிறப.பு வீதம் அதிகம்.

பெற்றேரிலேருவருக்கு  நிரநதாரவதிவிடயுரிமையிருப்பின்,....2000 ஆண்டின் பின்

பிறந்த வெளிநாட்டுக்குழந்தைகள் ஜெர்மானியாரவர். நாசிகளுக்கு வாக்கு வங்கி

வளர்ச்சிவீதம் குறைவு....நாசிகளுக்கு ஏதிரான வாக்கு வங்கி வளர்ச்சிவீதம் அதிகம்.....

துருக்கியஜெர்மானியாரும்....பெரும்பான்மை ஜெர்மானியாரும் Afd க்கட்சியை

அதரிக்கமாட்டார்கள்....ருசியாஜெர்மானியார்....ருமேனியாஜெர்மானியார்.  

போலந்துஜெர்மானியார்......நாசிகளுடனைந்தல்....மாற்றம்வரமிகமிக குறைந்த

சந்தர்ப்பமுண்டு....இங்கு ஒர்கட்சி தனிந்து ஆட்சியமைக்கமுடியாது......

நாசிகள்  கிளர்ச்சிசெய்யவும் ....வன்முறைகளைச்செய்யவுமுடியும் ......

இது என்கருந்து ...சிலசமயம் இதற்க்கு நேர்ஏதிர்மாறகவும் நடைபெறலாம்...

இதில சரிபிழைகளை...தமிழசிரி...குமாரசாமி.....வாத்தியார்....பான்ஸ்......

மற்றும்...நீங்களும். பதிவுயிடலாம்........ ...

இவ்வளவு உலகயரசியலறிவுள்ள இலங்கை தமிழர் பிரச்சனைக்கு....என்னமாதிரியான

தீர்வுசாத்தியமென எழுதுங்கள்........

,

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜேர்மனியில் கலப்பு தேர்தல் முறை பயன்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தகவல்களுக்கு நன்றி.

இதே போல் ஒரு முறையை கொண்டு வருவதாகதான் இலங்கையில் நல்லாட்சி அரசின் திட்டமும் இருந்தது. திட்டமாகவே முடிந்தும் போனது.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ஒரு சிகரெட் பக்கற்றின் பின் பக்கத்தில் எழுதலாம். ஆனால் பிரச்சனை தீர்வு முறையில் அல்ல, அதை பிக்குகளை, பேரினவாதிகளை ஏற்க வைப்பதுதான் பிரச்சினை.

அதற்கான வழி யாருக்கும் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.