Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகர் வடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர் கழிவுநீர் வாய்க்கால்கள் மாநகர சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது! வாடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சினை பிளாஸ்ரிக் கழிவினால் சூழலுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். 

இரண்டாவது: வீட்டுக்கு வீடு கிணறும் வாயு அடுப்பும் இருக்கும் நகரில், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ வடிகட்டியோ குடிக்காமல் போத்தலில் அடைத்த தண்ணீரை ஏன் இவ்வளவு பயன்படுத்துகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எல்லாம் கொழுப்புத்தான். வேறென்ன. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு பிரச்சினை பிளாஸ்ரிக் கழிவினால் சூழலுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். 

இரண்டாவது: வீட்டுக்கு வீடு கிணறும் வாயு அடுப்பும் இருக்கும் நகரில், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ வடிகட்டியோ குடிக்காமல் போத்தலில் அடைத்த தண்ணீரை ஏன் இவ்வளவு பயன்படுத்துகிறார்கள்?

எல்லாம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வருபவர்களைப் பார்த்து தான். போத்தல் தண்ணீர் குடித்தால் தானாம் மற்றவர்கள் மதிப்பினமாம்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாதவூரான் said:

எல்லாம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வருபவர்களைப் பார்த்து தான். போத்தல் தண்ணீர் குடித்தால் தானாம் மற்றவர்கள் மதிப்பினமாம்

இதென்ன கால கொடுமையா கிடக்கு. நாங்கள் எல்லாம் இங்கே நீண்டநாள் பாவனை போத்தல்களில் தானே வேலைக்கு கூட தண்ணீரை எடுத்து போகிறோம்? அங்கும் போய் பைப் தண்ணியை அல்லவா நிரப்பி குடிக்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாதவூரான் said:

எல்லாம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வருபவர்களைப் பார்த்து தான். போத்தல் தண்ணீர் குடித்தால் தானாம் மற்றவர்கள் மதிப்பினமாம்

உண்மையில் அங்கே நிலத்தடி நீர் குடிக்கும் அளவுக்கு துப்பரவாக கிருமியற்று இருக்கா???

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

உண்மையில் அங்கே நிலத்தடி நீர் குடிக்கும் அளவுக்கு துப்பரவாக கிருமியற்று இருக்கா???

இல்லை.

கொதிக்க வைத்தால் கிருமிகளைக் கொல்லலாம். காபன் வடிகட்டிகளைப் பாவித்தால் தீமை தரும் இரசாயனங்களை அகற்றலாம். இவை போத்தல் தண்ணீரை விட பாதுகாப்பான தண்ணீரையும் தரும். பிளாஸ்ரிக் கழிவையும் குறைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

இல்லை.

கொதிக்க வைத்தால் கிருமிகளைக் கொல்லலாம். காபன் வடிகட்டிகளைப் பாவித்தால் தீமை தரும் இரசாயனங்களை அகற்றலாம். இவை போத்தல் தண்ணீரை விட பாதுகாப்பான தண்ணீரையும் தரும். பிளாஸ்ரிக் கழிவையும் குறைக்கும்!

நாங்கள் பிரான்சில் பைப் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது தான் அதிகம். ஆனால் வெப்ப பூமியான தாயகத்தில் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201222-010800.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் யாழ், வவுனியா, பேராதனை மூன்று இடங்களிலும் கொதிக்க வைத்துக் குடித்திருக்கிறேன். இதற்காகவே சூடாக்கும் கொயில் பாவித்து 230 வோல்ற் கரண்ட் அடியெல்லாம் வாங்கியிருக்கிறேன்! 🤣வவுனியா தண்ணீர் கொதிக்க வைக்கும் பாத்திரம் அப்படியே கல்சியம் காபனேற் படிந்து வெள்ளையாக மாறும்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

நான் யாழ், வவுனியா, பேராதனை மூன்று இடங்களிலும் கொதிக்க வைத்துக் குடித்திருக்கிறேன். இதற்காகவே சூடாக்கும் கொயில் பாவித்து 230 வோல்ற் கரண்ட் அடியெல்லாம் வாங்கியிருக்கிறேன்! 🤣வவுனியா தண்ணீர் கொதிக்க வைக்கும் பாத்திரம் அப்படியே கல்சியம் காபனேற் படிந்து வெள்ளையாக மாறும்!

ம்ம் 80களில் கொழும்பில் தண்ணிக்குள்ள கொயிலை வைத்து பிலேன்ரீ செய்து குடித்த அனுபவம் ஞாபகம் வந்து போகுது 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இல்லை.

கொதிக்க வைத்தால் கிருமிகளைக் கொல்லலாம். காபன் வடிகட்டிகளைப் பாவித்தால் தீமை தரும் இரசாயனங்களை அகற்றலாம். இவை போத்தல் தண்ணீரை விட பாதுகாப்பான தண்ணீரையும் தரும். பிளாஸ்ரிக் கழிவையும் குறைக்கும்!

2 hours ago, விசுகு said:

நாங்கள் பிரான்சில் பைப் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது தான் அதிகம். ஆனால் வெப்ப பூமியான தாயகத்தில் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை

லண்டனில் நாங்கள் யாருமே கொதிக்க வைத்து பருகுவதில்லை. 

போத்தல் தண்ணியை விட பைப்தண்ணி சுத்தமானது என பல ஆய்வுகள் சொல்லியுள்ளன.

ஒரு தடவை கொக்கோகோலா பைப் தண்ணியை போத்தலில் அடைத்து வித்து பணம் பண்ண வெளிகிட்டு பெரும் சர்ச்சையாகியது.

இப்போ யோசித்துபார்த்தால் போனதடவை போனபோது கிணறு இறைக்கவில்லை என்பதால் நானும்  போத்தல் தண்ணி பாவித்தது நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

போத்தல் தண்ணீரில் பிரச்சினை, பிளாஸ்ரிக் போத்தலில் அடைக்கப்பட்டிருப்பதால், வெப்ப நிலைகள் மாறும் போது பிளாஸ்ரிக்கில் இருக்கும் மாசுக்கள் தண்ணீரில் கலக்கும். வெப்ப வலய நாடுகளில் இது அதிகமாக நிகழும்.

எங்கேயும் நகர தண்ணீர் பாதுகாப்பானது. இருக்கும் மாசுக்களை சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும் ppm அளவுக்குக் கீழே வைத்திருப்பார்கள். இன்னொரு படி பாதுகாப்பிற்காக வடிகட்டிகளைப் பாவிக்கலாம். இவை இலகுவான காபன் வடிகட்டிகள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ம்ம் 80களில் கொழும்பில் தண்ணிக்குள்ள கொயிலை வைத்து பிலேன்ரீ செய்து குடித்த அனுபவம் ஞாபகம் வந்து போகுது 😂

இப்பவும் அதே தான் நிகழ்கிறது என்ன அப்ப கொயில் வெளில தெரிஞ்சுது.. இப்ப பல்வேறு வடிவங்களில் கேத்தல்களின் அடியில்.. பக்கவாட்டில்.. மறைச்சு வைச்சு.. விளையாட்டுக் காட்டி விற்கிறாங்கள். அவ்வளவும் தான். அடிப்படையில் எல்லாம் ஒரு பொதுப்படையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

வடிக்கட்டலுக்கு காபனும் தேவையில்லை.. கழியும் தேவையில்லை.. முன்னர் எம்மவர்கள் நல்ல வெண் மணலை துப்பரவு செய்து கச்சானுக்கு வறுப்பது போல் வறுத்து.. பின் துளையிட்ட பானையில் இட்டு வடிகட்டி குடித்தார்கள்.

காபன் வடிகட்டிகள் பாதுகாப்பானவை அல்ல. வியாபார நோக்கில் செய்யப்படும் காபன் வடிகட்டிகளில் இருந்து காபன் துணிக்கைகள் நீரில் கலப்பது கண்டறியப்பட்டுள்ளன. காபன் துணிக்கைகள்.. நீருலர்ந்த பின் காற்றில் பரவி சுவாசப்பைகளை அடையின் அது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும். நீரில் கலந்து உணவுக்கால்வாயை அடைவதும் ஆரோக்கியமல்ல. 

Could a water filter do you more harm than good? Gadgets have no specific health benefits and may remove dissolved material that is good for you

  • A whole new generation of filtration gadgets are promising purer tap water 
  • But some experts say there are no health benefits to using the appliances
  • Tap water in the UK is said to be among the safest and best quality in the world  
  • World Health Organisation (WHO) even confirmed a correlation between drinking harder water and lower rates of heart disease.

https://www.dailymail.co.uk/health/article-5355085/Could-water-filter-harm-good.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பிழம்பு said:

யாழ் நகர் கழிவுநீர் வாய்க்கால்கள் மாநகர சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது! வாடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.

கழிவுநீர் வடிகால்களை வருடாவருடம் துப்பரவு செய்தால் ஏனிந்த பிரச்சனை? பிளாஸ்ரிக் போத்தல் நடைமுறையை அரசு ஏன் அனுமதித்தது? பிளாஸ்ரிக் போத்தல்களை வீசுவதற்கு அரசு எங்கேயாவது இடங்கள், குப்பைவாளிகளை ஒதுக்கியதா?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

கழிவுநீர் வடிகால்களை வருடாவருடம் துப்பரவு செய்தால் ஏனிந்த பிரச்சனை? பிளாஸ்ரிக் போத்தல் நடைமுறையை அரசு ஏன் அனுமதித்தது? பிளாஸ்ரிக் போத்தல்களை வீசுவதற்கு அரசு எங்கேயாவது இடங்கள், குப்பைவாளிகளை ஒதுக்கியதா?

கொழும்பு சிங்கள அரசு செய்த வேலை... யாழ்ப்பாணத்தில் இருக்கும் அதன் வால்பிடிகளின் தேவைக்கு ஏற்ப நியமனங்களை செய்தது தான்.

யாழ் மாநகர ஆணையாளராக முன்னர் இருந்த வாகீசன் என்ற ஜப்பானில்.. இத்துறையில் பரீட்சயம் பெற்ற இளையவரை அகற்றி விட்டு.. இன்னொரு வால்பிடியை இறக்கினார்கள். காரணம்.. கடைகளை குத்தகைக்கு விடுவதில்.. தமக்குத் தெரிந்தவர்களுக்கு சலுகை காட்டுகிறார் இல்லை சட்டம் கதைக்கிறார் என்று.

வாகீசன் ஐங்கரநேசனின் மாணவன் மட்டுமன்றி.. அவர்... தான் யாழ் நகரில்.. மூன்று  வகை பின்(Bin) பொறிமுறையை.. மீள்சுழற்றி பொறிமுறையை அறிமுகப்படுத்தியவர். இப்ப ஆளை ஒரு தொழிற்பாடற்ற துறைக்குள் முடக்கிவிட்டார்கள். காரணம்.. மக்களுக்கு உண்மையாக உழைக்கக் கூடாது.. எடுபிடி அரசியல்வாதிகளுக்கு அவர் தம் வால்பிடிகளுக்கு சலாம் போடனுன்னு. 

இப்படிப்பட்ட ஒரு அரசும் நாடும் உள்ள இடத்தில் திறைமைக்கு எங்கு இடம்.. மக்களுக்கு எங்கு விமோசனம்..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

உண்மையில் அங்கே நிலத்தடி நீர் குடிக்கும் அளவுக்கு துப்பரவாக கிருமியற்று இருக்கா???

விசுகர்!
அங்கை ஊரிலை பத்து பரப்பு காணிக்கை ஒரு பெரிய வீடு....வீட்டுக்கு பின் பக்கம் கங்கூஸ்......முன் பக்கம் கிணறு. அந்த கிணத்து தண்ணியிலை தான் குளிக்கிறது. அந்த தண்ணியைத்தான் கிணத்தடியிலையே மடக்கு மடக்கு எண்டு குடிக்கிறது. அப்ப வராத வருத்தமெல்லாம் இப்ப வருது எண்டால் கொஞ்சம் யோசிக்கவேணும் கண்டியளோ. 😎

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20201222-010800.jpg 

பனை ஓலையால் பின்னிய பைகள் ஏராளம் உள்ளது. அவற்றை உபயோகித்தால் மேட்டுக்குடிகளுக்கு அவமானமாம்.🤪

பனை ஓலைகளில் விதவிதமாக கூடைகளை செய்து அசத்தும் பெண்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

போத்தல் தண்ணீரில் பிரச்சினை, பிளாஸ்ரிக் போத்தலில் அடைக்கப்பட்டிருப்பதால், வெப்ப நிலைகள் மாறும் போது பிளாஸ்ரிக்கில் இருக்கும் மாசுக்கள் தண்ணீரில் கலக்கும். வெப்ப வலய நாடுகளில் இது அதிகமாக நிகழும்.

எங்கேயும் நகர தண்ணீர் பாதுகாப்பானது. இருக்கும் மாசுக்களை சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும் ppm அளவுக்குக் கீழே வைத்திருப்பார்கள். இன்னொரு படி பாதுகாப்பிற்காக வடிகட்டிகளைப் பாவிக்கலாம். இவை இலகுவான காபன் வடிகட்டிகள். 
 
போத்தல் தண்ணீரில் மக்ரோ பிளாஸ்ரிக் கலப்பது கூட. யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கிணற்று தண்ணீர் பாறைகளூடாக இயற்கையாக வடிகட்டப்பட்டு வரும்நீர். இயற்கையாக சுத்தமானது மற்றது ஊரில் பெரும்பாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கிணறு கலக்குவினம். ஆனால் மாரி காலத்தில் புற வெள்ளம் வரச் சந்தர்ப்பம் இருப்பதால் சுடவைத்து ஆறிய தண்ணீரே சுத்தமானது.ஆனால் வவுனியா தண்ணீர்  வடிகட்டிதான் குடிக்க வேண்டும்.நான் முன்பு ஊருக்கு போகும் போது 2010 ,2011 இல் போத்தல் தண்ணீர் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளாலும் புலம்பெயர்ந்தவர்களாலும் தான் பயன்படுத்தப்பட்டது. பின்னர் வந்த வருடங்களில் இந்த பாவனை உள்ளூர் வாசிகளுக்கும் தொற்றி ஒவ்வொரு வருடமும் பாவனை அதிகரித்து சொல்கின்றதே ஒழிய குறையவில்லை. இதுவும் வெளிநாட்டு மோகம் போல பரவி விட்டது. ஊரிலை விற்கும் போத்தல் தண்ணீர் எந்தவித சுத்திக்ரிப்பும் இல்லாமல் தான் போத்தலில் அடைக்கப்படுகிறது. ஒருக்கால் மட்டைத்தேள் கூட இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

இப்பவும் அதே தான் நிகழ்கிறது என்ன அப்ப கொயில் வெளில தெரிஞ்சுது.. இப்ப பல்வேறு வடிவங்களில் கேத்தல்களின் அடியில்.. பக்கவாட்டில்.. மறைச்சு வைச்சு.. விளையாட்டுக் காட்டி விற்கிறாங்கள். அவ்வளவும் தான். அடிப்படையில் எல்லாம் ஒரு பொதுப்படையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

வடிக்கட்டலுக்கு காபனும் தேவையில்லை.. கழியும் தேவையில்லை.. முன்னர் எம்மவர்கள் நல்ல வெண் மணலை துப்பரவு செய்து கச்சானுக்கு வறுப்பது போல் வறுத்து.. பின் துளையிட்ட பானையில் இட்டு வடிகட்டி குடித்தார்கள்.

காபன் வடிகட்டிகள் பாதுகாப்பானவை அல்ல. வியாபார நோக்கில் செய்யப்படும் காபன் வடிகட்டிகளில் இருந்து காபன் துணிக்கைகள் நீரில் கலப்பது கண்டறியப்பட்டுள்ளன. காபன் துணிக்கைகள்.. நீருலர்ந்த பின் காற்றில் பரவி சுவாசப்பைகளை அடையின் அது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும். நீரில் கலந்து உணவுக்கால்வாயை அடைவதும் ஆரோக்கியமல்ல. 

Could a water filter do you more harm than good? Gadgets have no specific health benefits and may remove dissolved material that is good for you

  • A whole new generation of filtration gadgets are promising purer tap water 
  • But some experts say there are no health benefits to using the appliances
  • Tap water in the UK is said to be among the safest and best quality in the world  
  • World Health Organisation (WHO) even confirmed a correlation between drinking harder water and lower rates of heart disease.

https://www.dailymail.co.uk/health/article-5355085/Could-water-filter-harm-good.html

பிரிட்டிஷ் செய்தித் தாளில் இருந்தா விஞ்ஞான ஆரோக்கியத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்?🤔

பாதிப்பெதுவும் அற்ற elemental carbon உலர்ந்தால் பாதிப்பு என்கிறீர்கள், மணலில் இருக்கும் பளிங்கான, மூலக்கூற்றுத் திணிவு கூடிய சிலிக்கன் ஈரொக்சைட் (SiO2) என்ற பளிங்கு எப்படி காபனை விட நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறீர்கள்?
 
பின் வரும் காரணங்களும் யாழ்ப்பாண மக்களை பிளாஸ்டிக் போத்தல் நீரை அருந்த தள்ளுகின்றன

1. கிணற்றுக்கும் மலசல கூடத்துக்கும் இடையிலான இடைவெளி குறுகிக் கொண்டு வருகின்றமையால் யாழ்ப்பாணத்து நீரில் மலக்கழிவுகள் (giardia e colii) அதிகமாக கலக்கின்றன என்று பலதரப்பாலும் சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றமை

2. யாழ்ப்பாண  விவசாயிகள், தோட்டம் வைத்திருப்பவர்கள் விளைச்சலை அதிகரிக்க மிக மோசமான அளவுக்கு இரசாயன பசளைகளை பயன்படுத்தி வருகின்றமையால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையாக மாறி வருகின்றமை பற்றிய புரிதல்

3. சுன்னாகம் நிலத்தடி நீரில் மின் நிலையத்தில் இருந்து கலந்த ஒயில்

4. நாகரீக மோகம்

5. தண்ணீரை காச்சி எடுத்து போத்தல்களில் கொண்டு வேலைக்கு போவதை விட போத்தல் தண்ணீரை கொண்டு செல்வது இலகு

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

பனை ஓலையால் பின்னிய பைகள் ஏராளம் உள்ளது. அவற்றை உபயோகித்தால் மேட்டுக்குடிகளுக்கு அவமானமாம்.🤪

பனை ஓலைகளில் விதவிதமாக கூடைகளை செய்து அசத்தும் பெண்கள் !

அண்ணை உது எந்த காலம்? இப்ப மேட்டுகுடிகள் ஓலைபையுக்கு மாறி விட்டினம். லண்டன் டியூப்பில் பல மோட்டு குடி பெண்கள் ஒய்யாரமாக ஓலை, துணிபையளை காவுவதை காணலாம்.

கொழும்பிலும் மேட்டுகுடி அலங்கார கடையான ஓடேல் அன்லிமிடெட்டில் இவைதான் நல்லா விக்குது.

எங்களை போன்ற அப்பாவிகள் (மோட்டுக்குடி?) தான் இன்னும் உந்த பத்து பென்ஸ் பிளாஸ்டிக் பாக் பாவிக்கிறது.

2 minutes ago, நிழலி said:

பின் வரும் காரணங்களும் யாழ்ப்பாண மக்களை பிளாஸ்டிக் போத்தல் நீரை அருந்த தள்ளுகின்றன

1. கிணற்றுக்கும் மலசல கூடத்துக்கும் இடையிலான இடைவெளி குறுகிக் கொண்டு வருகின்றமையால் யாழ்ப்பாணத்து நீரில் மலக்கழிவுகள் (giardia e colii) அதிகமாக கலக்கின்றன என்று பலதரப்பாலும் சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றமை

2. யாழ்ப்பாண  விவசாயிகள், தோட்டம் வைத்திருப்பவர்கள் விளைச்சலை அதிகரிக்க மிக மோசமான அளவுக்கு இரசாயன பசளைகளை பயன்படுத்தி வருகின்றமையால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையாக மாறி வருகின்றமை பற்றிய புரிதல்

3. சுன்னாகம் நிலத்தடி நீரில் மின் நிலையத்தில் இருந்து கலந்த ஒயில்

4. நாகரீக மோகம்

5. தண்ணீரை காச்சி எடுத்து போத்தல்களில் கொண்டு வேலைக்கு போவதை விட போத்தல் தண்ணீரை கொண்டு செல்வது இலகு

சில காரணங்கள் வலுவாகவே தெரிகின்றன. போத்தல்களை வெளிநாட்டுகாரரை பார்த்து பாவிப்பதை போல அதை தகுந்த இடத்தில் போடுவதையும் பழகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கால்வாய்களைச் சுத்தம் செய்வதில் சிரமம் உண்டா... இங்கு யேர்மனியில் அப்படித்தான் செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பிரிட்டிஷ் செய்தித் தாளில் இருந்தா விஞ்ஞான ஆரோக்கியத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்?🤔

பாதிப்பெதுவும் அற்ற elemental carbon உலர்ந்தால் பாதிப்பு என்கிறீர்கள், மணலில் இருக்கும் பளிங்கான, மூலக்கூற்றுத் திணிவு கூடிய சிலிக்கன் ஈரொக்சைட் (SiO2) என்ற பளிங்கு எப்படி காபனை விட நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறீர்கள்?
 
The quantitative change and size distribution of particles in the effluents from a sand filter and a granular activated carbon (GAC) filter in a drinking water treatment plant were investigated. The average total concentration of particles in the sand filter effluent during a filter cycle was 148 particles/mL, 27 of which were larger than 2 µm in size. The concentration in the GAC effluent (561 particles/mL) was significantly greater than that in the sand filter effluent. The concentration of particles larger than 2 µm in the GAC filter effluent reached 201 particles/mL, with the amount of particles with sizes between 2 µm and 15 µm increasing. The most probable number (MPN) of carbon fines reached 43 unit/L after six hours and fines between 0.45 µm and 8.0 µm accounted for more than 50%. The total concentration of outflowing bacteria in the GAC filter effluent, 350 CFU (colony-forming units)/mL, was greater than that in the sand filter effluent, 210 CFU/mL. The desorbed bacteria concentration reached an average of 310 CFU/mg fines. The disinfection efficiency of desorbed bacteria was lower than 40% with 1.5 mg/L of chlorine. The disinfection effect showed that the inactivation rate with 2.0 mg/L of chloramine (90%) was higher than that with chlorine (70%). Experimental results indicated that the high particle concentration in raw water and sedimentation effluent led to high levels of outflowing particles in the sand filter effluent. The activated carbon fines in the effluent accounted for a small proportion of the total particle amount, but the existing bacteria attached to carbon fines may influence the drinking water safety. The disinfection efficiency of desorbed bacteria was lower than that of free bacteria with chlorine.

https://www.sciencedirect.com/science/article/pii/S1674237015300119

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கால்வாய்களைச் சுத்தம் செய்வதில் சிரமம் உண்டா... இங்கு யேர்மனியில் அப்படித்தான் செய்கிறார்கள். 

இதில் பிழை மக்கள் மேலும், அதிகாரிகள் மீதும் என்றே நான் நினைகிறேன்.

1. மெத்தனமாக அதிகாரிகள். நெடுக்ஸ் கூறியது போல நல்லவர்களை தூக்கி அடித்துவிட்டு பந்தங்களை பதவியில் இருத்தினால், அவர்களுக்கு எஜமானார் காலை வருடவே நேரம் போதுமாயிருக்கும் போது, வால்காயை எங்கே தூர்வாருவது?

2. மக்களும் கொஞ்சமும் பொறுப்போ, தனிமனித பொறுப்பு கூறலோ இல்லாமல் நடக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

In summary, the data from the present study show adverse effects of elemental carbon (EC)  exposure on lung function among atopic schoolchildren, regardless of their asthma status. These data show the detrimental effects of locating schools in areas exposed to heavy traffic.

Quote

பாதிப்பெதுவும் அற்ற elemental carbon உலர்ந்தால் பாதிப்பு என்கிறீர்கள், மணலில் இருக்கும் பளிங்கான, மூலக்கூற்றுத் திணிவு கூடிய சிலிக்கன் ஈரொக்சைட் (SiO2) என்ற பளிங்கு எப்படி காபனை விட நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறீர்கள்?

பானையில் வைத்தான மணல் வடிகட்டல் முறையில்.. மணல் நீரில் கலப்பதை குறைக்க பல வழிகள் உண்டு. மணல் துணிக்கைகளின் பரிமானம்... காபன் நுண் துணிக்கைகளை விட அதிகம் என்பதாலும்.. மணல் வடிக்கட்டலில் பாவிக்கப்படும் மணல் மீளப் பயன்படுத்தப்படக் கூடியது ஆகையால்.. பயன்பாட்டு அளவை குறைக்கவும் காற்றில் அது கலக்கும் அளவை மிகவும் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால்.. காபன் சிறுதுணிக்கைகள் அப்படி அன்று. அவை உடலில் நுழைந்தால்.. இதர இரசாயனத்தாக்கங்களிலும் ஈடுபட வாய்ப்புள்ளது. அதன் விளைவுகள் கூட ஆபத்தானதாக அமைய முடியும்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.