Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன்

இன்றைய உலக ஒழுங்குமுறைக்கு அமைவாக மிகவும் சவாலான சூழ்நிலையில் இணைய வழிமூலமாக (Online) விளையாடும் வகையில் 304 (THREE - NOUGHT - FOUR) என்று அழைக்கப்படும் விளையாட்டு மிகமிக சிறப்பாக இணையத்தளத்தில் (the304game.com) வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் இவ் விளையாட் டின் முதலாவது உலகக்கிண்ணப் போட்டியும் இணைய வழித்தடமூடாக ஏற்பாடுசெய்யப்பட்டு நடந்தேறியிருக்கின்றது.

304 விளையாட்டானது இலங்கையில் மிகவும் பிரபலமானது குறிப்பாக தமிழ் மக்களிடையே உயர்கல்வி நிலையாளர்கள் முதல் சாதாரண பாமரமக்கள் வரை 80 வயது தாண்டியும் பலதரப்பட்ட மக்களாலும் விளையாடப்பட்டு வந்தது.

இதற்கென எழுதப்பட்ட விதிமுறைகள் எதுவும் இல்லாது விளையாடப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலும் போட்டிகள் சச்சரவாக முடிவடையும். ஆனாலும் மறு நிமிடமே அதே குழுவினரே இணைந்து விளையாடுவார்கள்.

இவ்வாறாக எழுதப்படாத, ஒழுங்கு படுத்தப்படாத, விதிகளோடு விளையாடப்பட்டு வந்தமையே ஏனைய உலக மக்களிடத்தில் சென்றடையத் தவறிவிட்டது.

இந்த நிலைமையில் கணனி தொழில்நுட்ப துறையில் பயணித்து வரும் கனடா வாழ் ஈழத்தவரான திரு மகேன் வாகீசன் அவர்களது சிந்தனை இன்று ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளுடன் நெறிப்படுத்தப்பட்ட இணைய முறையில் விளையாடும் வகையில் 304 விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருப்பது இவ்விளையாட்டில் ஏற்பட்டுள்ள ஓர் புரட்சியே.

COVID-19 வைரஸின் தொற்றுக்கால உலகளாவிய ஆரம்ப முடக்க காலத்தில், ஆக்கபூர்வமான சமூகமயமாக்கலிற்கான அவசியம் அனைவர்க்குமே ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இணையவழி 304 விளையாட்டு மென்பொருள் உருவாக்கும் சிந்தனை திரு மகேன் வாகீசனுக்கு ஏற்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலான இவரது முயற்சியே, இன்று நாமனைவரும் நட்புறவை தொடர்ந்து பேணும்வகையிலும், அன்பான உணர்வுகள் பேணப்படும் வகையிலும், நல்லதொரு வாய்ப்பை இவ்விளையாட்டு அனைவருக்கும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

அத்துடன் 304 விளையாட்டை விளையாட விரும்பும் அனைவருமே, இதனை நிகழ்நேர, மற்றும் மெய்நிகர் விளையாட்டாகவும், விளையாடும்வகையில், அவர் உருவாக்கியமையானது, 304 விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் எனும் நிலையையும் தொட்டுவிட்டிருக்கிறது.

தற்போது, 25 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் the304game.com என்ற இந்த இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். மற்றும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தங்கள் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்.

இந்த விளையாட்டை மற்ற சமூகத்திரும் விளையாடும் வகையில் செயற்படுத்தி அறிமுகப்படுத்துவதே அடுத்த முக்கிய இலக்காகும். விளையாட்டின் செயற்பாட்டு ஒலி ஒளி விளக்க வீடியோப்பதிவுகள் புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் தங்கள் நண்பர்களுடன் இணைந்து எளிதாக புரிந்துகொண்டு விளையாடமுடியும். இந்த இணைய முகப்பு பயன்பாட்டு முறைகள் அனைத்துமே மிக எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதாரண கணனிகள் அனைத்திலும் கூகிள் குறோம் வழித்தடம் மூலமே விளையாட முடியும்.

கைத்தொலைபேசி (Mobile Phone) மற்றும் ரபிலெற் (Tablet) களில் விளையாடக்கூடிய முறைகள் மட்டும் இன்னும் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் இவற்றிற்கான ஒழுங்கமைப்பு முறைகள் 2021 ம் ஆண்டின் மத்திய பகுதிக்குள் நிறைவுபெற்றுவிடும்.

304 விளையாட்டு சமூகத்தின் மற்றொரு மைல்கல் சாதனை கனடாவின் திரு.சிவகுமார் நவரத்னம் தலைமையிலான the304game.com இன் 1 வது 304 விளையாட்டு உலக போட்டி ஆகும். the304game.com இணையம் இருந்தமையினால் மட்டுமே, இந்த உலகக்கிண்ணப் போட்டியை உலகம் முழுவதும் உள்ள நம்மவர்களை இணைத்து நடாத்த முடிந்திருந்தது

அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், நோர்வே, இலங்கை, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் the304game.com நடத்திய இம்முதலாவது உலகக்கிண்ணப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

போட்டி முடிவுகள்

வெற்றியாளர்கள்

பிரான்ஸ் : (தங்கராசா சிவசிறி, யோகசிங்கம் தம்பா (சுரேன்))

இரண்டாம் இடம்

கனடா : (அருண் நந்தகுமாரன், சிவா இராசியா, ரவி ரவீந்திரன்)

மூன்றாம் இடம்

இலங்கை : (சுரேந்திரநாத் சுரேந்திரகுமார், பிருத்விராஜ் அருள்குமாரன்)
 
https://www.canadamirror.com/canada/04/297203

  • கருத்துக்கள உறவுகள்

அட இதெல்லாம் கூட நடக்குதா.திரு மகேன் வாகீசன் க்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இதெல்லாம் கூட நடக்குதா.திரு மகேன் வாகீசன் க்கு வாழ்த்துக்கள்

நம்ம சிநேகிதம்தான்!

ஃபோனில் விளையாடக்கூடிய அப்ஸும், நண்பர்கள் இல்லாமல் வேர்ச்சுவல் பிளேயர்ஸுடன் விளையாடக்கூடிய வசதிகளையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேலை நடக்கின்றது என்று சொன்னார்😀

  • கருத்துக்கள உறவுகள்

Firefox யிலும் விடுகிறதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Firefox யிலும் விடுகிறதே

Firefox ஒரு browser (உலாவி). இப்போது 304 game desktop வேர்சனாக இருப்பதால் browserகளில்தான் விளையாடமுடியும்.

விரைவில் தனியே app ஆக வரவுள்ளது. அதன் பின்னர் browser தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 16:37, கிருபன் said:

நம்ம சிநேகிதம்தான்!

ஃபோனில் விளையாடக்கூடிய அப்ஸும், நண்பர்கள் இல்லாமல் வேர்ச்சுவல் பிளேயர்ஸுடன் விளையாடக்கூடிய வசதிகளையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேலை நடக்கின்றது என்று சொன்னார்😀

என்னதான் நாலு பேர் இருந்து கைமடக்கி கம்மாரிசு அடிக்க இயலுமோ இந்த இணையத்தில

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னதான் நாலு பேர் இருந்து கைமடக்கி கம்மாரிசு அடிக்க இயலுமோ இந்த இணையத்தில

காட்சை மேசியில் தூக்கி எறிந்து (கோபத்தில்) நான் வரவில்லை உங்களோடு விளையாட எனும் கண்கொள்ளா காட்சியை இணையத்தில் காண முடியாது ,தனி.

மகேன் வாகீசனுக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

காட்சை மேசியில் தூக்கி எறிந்து (கோபத்தில்) நான் வரவில்லை உங்களோடு விளையாட எனும் கண்கொள்ளா காட்சியை இணையத்தில் காண முடியாது ,தனி.

மகேன் வாகீசனுக்கும் வாழ்த்துக்கள்.

தற்போது மழைக்காலம் பல வாத்திமார்களுக்கு இதுதான் பொழுது போக்கு ஆனால் இந்த கொரோனாவால் விளையாட முடியல நுணா சரியான மனஸ்த்தாபம் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் நேருக்கு நேர் இருந்துகொண்டு கம்மாரிசு அடிச்சு எதிரணியை திணறடிக்கிற த்ரில் ஆன்லைன்ல கிடைக்குமோ தெரியேல்லை 🙄

எனக்கு மிகப் பிடித்த விளையாட்டு இது. ஊரில் கரண்ட் இல்லா காலங்களில் ஆடப் பழகி பின்னர் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் இணைந்து விளையாடிவரைக்கும் அருமையான நினைவுகள். அதுவும் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் விளையாடும் போது தோற்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர்களும் அப்படிச் செய்ய..... ம்ம்ம் ...அது ஒரு கனா காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஜென்மம் சாபல்யம் அடைந்தது போன்ற ஒரு உணர்வு.......பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன் & இதற்காக அயராது உழைத்த அனைவருக்கும்.........!   💐

  • கருத்துக்கள உறவுகள்

கார்ட்ஸ் லொத்தர் எதுவும் தொடுவதில்லை இன்றுவரை  பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன்க்கு .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அதுவும் டுபாயில் நண்பர் நண்பிகளுடன் விளையாடும் போது தோற்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர்களும் அப்படிச் செய்ய..... ம்ம்ம் ...அது ஒரு கனா காலம்.

🤔சே..……சே……நிழலி நல்ல பொடியன்🤣

2 hours ago, பெருமாள் said:

கார்ட்ஸ் லொத்தர் எதுவும் தொடுவதில்லை இன்றுவரை  பாராட்டுக்கள் திரு. மகேன் வாகீசன்க்கு .

நானும் உங்க கேஸ்தான். ஆனால் லொத்தர் அபப்ப போடுவன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் உங்க கேஸ்தான். ஆனால் லொத்தர் அபப்ப போடுவன். 

லொத்தர் எப்படி போடுவது என்று தெரியாது வேலை இடங்களில் 16 வருடங்களுக்கு முன்பு குருப் லொத்தர் போட  என்னை இழுப்பினம் நான் சம்மதிப்பதில்லை ஆனாலும் என் சம்மதம் இல்லாமல் என்பெயரை போட்டு எடுப்பினம் ஆனாலும் நான் சொல்லியபடிதான் நடக்கும் விழவே  விழாது பல சமயங்களில் மின்சி போனால் ஆளுக்கு 1500 மேல் வராது அப்படி வரும்பணத்தை கூட வேண்டுவதில்லை  அதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் விளையாட்டுக்கள் . 

எல்லாத்தையும் விட மோசமானது சுரண்டல் லொத்தர் வேலையில்  ஒருநாள் அப்போது தற்காலிக வேலையாளுக்கு 50 பவுன்தான் சம்பளம் வேலை முடிந்து வீடு போகாமல் மூலை கடைகளில் ஒரு பியரை  வாங்கி அடித்தபடி சுரண்ட தொடங்குவினம் கடைசியில் 100 பவுனுக்கு மேல் சுரண்டி களைத்து வீடு செல்வினம்  இப்ப நம்மாட்கள் திருந்தி விட்டினம்  வெம்பிளியில் [[பிள்ளையார் மறு  பெயரை கொண்ட கடையில்  பின்பக்கம் பின்னேர பொழுதுகளில் கவனியுங்க இந்திய வடமாநிலத்தவர் சுரண்டிக்கொண்டு இருப்பினம் இந்த குளிரிலும் .

On 29/12/2020 at 13:47, கிருபன் said:

Firefox ஒரு browser (உலாவி). இப்போது 304 game desktop வேர்சனாக இருப்பதால் browserகளில்தான் விளையாடமுடியும்.

விரைவில் தனியே app ஆக வரவுள்ளது. அதன் பின்னர் browser தேவையில்லை

வாகீசன் எனும் பெயர் உடையவர்கள் அநேகமாக உடம்பாய் இருப்பதன் மர்மம் விளங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

லொத்தர் எப்படி போடுவது என்று தெரியாது வேலை இடங்களில் 16 வருடங்களுக்கு முன்பு குருப் லொத்தர் போட  என்னை இழுப்பினம் நான் சம்மதிப்பதில்லை ஆனாலும் என் சம்மதம் இல்லாமல் என்பெயரை போட்டு எடுப்பினம் ஆனாலும் நான் சொல்லியபடிதான் நடக்கும் விழவே  விழாது பல சமயங்களில் மின்சி போனால் ஆளுக்கு 1500 மேல் வராது அப்படி வரும்பணத்தை கூட வேண்டுவதில்லை  அதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் விளையாட்டுக்கள் . 

எல்லாத்தையும் விட மோசமானது சுரண்டல் லொத்தர் வேலையில்  ஒருநாள் அப்போது தற்காலிக வேலையாளுக்கு 50 பவுன்தான் சம்பளம் வேலை முடிந்து வீடு போகாமல் மூலை கடைகளில் ஒரு பியரை  வாங்கி அடித்தபடி சுரண்ட தொடங்குவினம் கடைசியில் 100 பவுனுக்கு மேல் சுரண்டி களைத்து வீடு செல்வினம்  இப்ப நம்மாட்கள் திருந்தி விட்டினம்  வெம்பிளியில் [[பிள்ளையார் மறு  பெயரை கொண்ட கடையில்  பின்பக்கம் பின்னேர பொழுதுகளில் கவனியுங்க இந்திய வடமாநிலத்தவர் சுரண்டிக்கொண்டு இருப்பினம் இந்த குளிரிலும் .

வாகீசன் எனும் பெயர் உடையவர்கள் அநேகமாக உடம்பாய் இருப்பதன் மர்மம் விளங்கவில்லை .

ஓம் அதை நானும் கண்டுள்ளேன். அதை விட மோசம் fruit machines. சில சிக்கின் கடையில் கூட எங்கட ஆக்கள் வச்சிருக்கினம். விளையாட வாறதும் இவையள்தான். இதை விட பெட்டிங் செண்டர் உள்ளே போனாலும் நாத்தம் எடுக்கும் உடுப்புகளோடு கூட தமிழர் பலர் இருப்பதை காணலாம்.

நான் நேசனல் லொட்டரி எப்பவாவது 105 மில்லியன் போன்ற அறிவிப்பை கண்டால், வாங்கும் சாமானோடு ஒன்று வாங்குவேன்.

விழுந்தால் ஊருக்கு எஸ் ஆகிவிடலாம் (அதுவும் இன்னும் 10 வருடத்துக்கு முடியாது) என்ற நப்பாசைதான் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதை விட பெட்டிங் செண்டர் உள்ளே போனாலும் நாத்தம் எடுக்கும் உடுப்புகளோடு கூட தமிழர் பலர் இருப்பதை காணலாம்.

அது வேறை கதை கவன்சில் கொடுத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கிழமைக்கு ஒருக்கா போய் குளித்து விட்டு வரும் கூட்டம் அதுகள் அதுவும் நடக்குதோ தெரியாலை அதுகளுக்கு கொரனோ  தொத்து  கிடையாது நிறைய T  செல்லுடன்  திரிகிற கூட்டம் .😁அதுசரி பெட்டிங்  செண்டருக்கு நீங்கள் ஏன்  போனீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அது வேறை கதை கவன்சில் கொடுத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கிழமைக்கு ஒருக்கா போய் குளித்து விட்டு வரும் கூட்டம் அதுகள் அதுவும் நடக்குதோ தெரியாலை அதுகளுக்கு கொரனோ  தொத்து  கிடையாது நிறைய T  செல்லுடன்  திரிகிற கூட்டம் .😁அதுசரி பெட்டிங்  செண்டருக்கு நீங்கள் ஏன்  போனீர்கள் ?

அது பெரிய கதை பொஸ். குதிரையில ஏறின ஒருத்தர வீட்டுக்காரர் கேட்டு இறக்க முயற்சித்த கதை. ஒரு மாரி இறக்கியாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அது பெரிய கதை பொஸ். குதிரையில ஏறின ஒருத்தர வீட்டுக்காரர் கேட்டு இறக்க முயற்சித்த கதை. ஒரு மாரி இறக்கியாச்சு.

அங்கு ஏறின கூட்டம் லேசிலை  இரங்காயினம் கவனம் நீங்கள் .

2 hours ago, goshan_che said:

நான் நேசனல் லொட்டரி எப்பவாவது 105 மில்லியன் போன்ற அறிவிப்பை கண்டால், வாங்கும் சாமானோடு ஒன்று வாங்குவேன்.

அது ஒரு போதும் விழாது சாமானியர்களை  முட்டாள்களாக்கும்  விளையாட்டு அது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.