Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா

Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 

Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December

இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன்.

தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பிரதமரின் இந்த ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு, பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. 

ஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாக மாரிசன் கூறினார். 

வெள்ளையின ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டில் குடியேறுவதற்கு முன்பே பல பத்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் தீவு ஆஸ்திரேலியா. 

அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர் என அழைக்கப்படும் தேசிய கீதத்தில் இருந்து 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என பொருள் தரும் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி நீக்கப்பட்டு, 'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது. 

நாம் இளமையானவர்கள் என்று பொருள் தந்த இடம், தற்போது நாம் ஒன்றே என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 

நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிளாடிஸ் பெரஜிக்லியன் இந்த மாற்றத்தைப் பரிந்துரைத்தார். 

இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன். 

"இந்த மாற்றம், நாடாக நாம் கடந்து வந்த தூரத்தை அங்கீகரிக்கிறது. 300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடம் இருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதை இது அங்கீகரிக்கிறது" என்று அவர் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது ஆஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

"பூர்வகுடிகள் மூலமாக மிகப் பழமையான தொடர்ச்சியான பண்பாடு நம்மிடம் இருக்கிறது என்பது குறித்து நாம் பெருமைப்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பேனீஸ். 

சமீப ஆண்டுகளில் பண்பாட்டு, அரசியல் நிகழ்வுகளில் தங்கள் நாட்டின் பழமையான பூர்வகுடி வரலாற்றை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டிசம்பர் மாதம் தேசிய ரக்பி அணி வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை ஒரு பூர்வகுடி மொழியில் முதல் முதலாகப் பாடியது குறிப்பிடத்தக்கது. சிட்னி பகுதியை சேர்ந்த இயோரா நேஷன் என்ற மக்கள் குழுவின் மொழியில் தேசிய கீதத்தைப் பாடிய பிறகு அவர்கள், ஆங்கிலத்தில் பாடினார்கள்.
 
https://www.bbc.com/tamil/global-55504502

  • கருத்துக்கள உறவுகள்

2008 ஆண்டில் முன்னாள் பிரதமர் Kevin Rudd அவுஸ்ரேலிய பூர்வீக்குடிகளிடம் மன்னிப்புக்கேட்டார்.. 12 ஆண்டுகளின் பின் தேசியகீதத்தில் அவர்களை(First Nations People) அங்கீகரித்திருக்கிறார்கள்.. ஆனால் Closing the Gap நடவடிக்கைகள் இன்னமும் நீண்ட துராம் பயணிக்கவேண்டியதைதான் காட்டுகிறது.

இன்னமும் அவர்களின் வாழ்க்கைத்தரம், கல்வியறிவு முன்னேறவில்லை. வன்முறைகள் குறையவில்லை..

இன்னமும் மிகமிக பின்தங்கிய இடங்களில்(முக்கியமாக Nothern Territory) அவர்களின் அடிப்படை வசதிகளில்லாமல் இருக்கிறார்கள். 

இன்னும் சிலர் 26th January அவுஸ்ரேலிய தினம் இல்லை அது பூர்வீக குடிகளின் வரலாற்றில் துக்கதினம், என கூறத்தொடங்கிவிட்டார்கள்

https://www.google.com.au/amp/s/www.aljazeera.com/amp/news/2021/1/1/we-are-one-and-free-australia-amends-national-anthem

  • கருத்துக்கள உறவுகள்

பூர்வகுடிகளை துவக்கையும் பீரங்கியையும் வைத்து அழித்தொழித்து அடித்து விரட்ட வேண்டியது, பின்பு மியூஸியத்தில் வைத்து பெருமை கொண்டாட வேண்டியது.....!   🤔

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் Closing the Gap நடவடிக்கைகள் இன்னமும் நீண்ட துராம் பயணிக்கவேண்டியதைதான் காட்டுகிறது.

உண்மை தான் பிரபா.

எனினும் நாகரீக வளர்ச்சியில் இரு துருவங்களாக இருக்கும் பழங்குடிகளும், குடியேற்றவாசிகளும் ஒரு புள்ளியில் சந்திப்பது என்பது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. பழங்குடிகளின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சுதந்திரம் போன்றவை நவீனமும், உலகமயமானதுமான குடியேற்றக்காரரின் சட்டதிட்டங்களால் சவாலுக்குள்ளாகியிருக்கும் நிலை. இரு தரப்பிலும் உறுதியான, நேர்மையான தலைமைத்துவம் இந்த விடயத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட அமெரிக்க கண்டத்தையும் ஆப்பிரிக்காவையும் அவுஸ்ரேலியாவையும் பலத்தை வைத்து ஆக்கிரமித்தவர்கள் இன்று இறங்கி வருகின்றார்கள்.

காலங்கள் மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வட அமெரிக்க கண்டத்தையும் ஆப்பிரிக்காவையும் அவுஸ்ரேலியாவையும் பலத்தை வைத்து ஆக்கிரமித்தவர்கள் இன்று இறங்கி வருகின்றார்கள்.

காலங்கள் மாறும்.

அவங்கள் திருந்துகிறார்கள் சொறிலங்காவில் தமிழ் தேசிய கீதம் படும் பாடு ...........

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

2008 ஆண்டில் முன்னாள் பிரதமர் Kevin Rudd அவுஸ்ரேலிய பூர்வீக்குடிகளிடம் மன்னிப்புக்கேட்டார்.. 12 ஆண்டுகளின் பின் தேசியகீதத்தில் அவர்களை(First Nations People) அங்கீகரித்திருக்கிறார்கள்.. ஆனால் Closing the Gap நடவடிக்கைகள் இன்னமும் நீண்ட துராம் பயணிக்கவேண்டியதைதான் காட்டுகிறது.

இன்னமும் அவர்களின் வாழ்க்கைத்தரம், கல்வியறிவு முன்னேறவில்லை. வன்முறைகள் குறையவில்லை..

இன்னமும் மிகமிக பின்தங்கிய இடங்களில்(முக்கியமாக Nothern Territory) அவர்களின் அடிப்படை வசதிகளில்லாமல் இருக்கிறார்கள். 

இன்னும் சிலர் 26th January அவுஸ்ரேலிய தினம் இல்லை அது பூர்வீக குடிகளின் வரலாற்றில் துக்கதினம், என கூறத்தொடங்கிவிட்டார்கள்

https://www.google.com.au/amp/s/www.aljazeera.com/amp/news/2021/1/1/we-are-one-and-free-australia-amends-national-anthem

நீங்கள் சொல்வது சரிதான். 

பழங்குடியினருக்கெதிராக புரியப்பட்ட இனக்கொலையும் திட்டமிட்ட அக்கிரமங்களும் இன்றுவரை அம்மக்களின் மனங்களை விட்டகலவில்லை என்பதே உண்மை.

தாம் அம்மக்களுக்கெதிராகச் செய்தவை மிகப்பெரும் தவறென்பதை பெரும்பான்மையான அவுஸ்த்திரேலியர்கள் ஒத்துக்கொண்டாலும் கூட, அதற்கான பிராயச்சித்தங்களை செய்யும் மனநிலைக்கு அவர்கள் இன்னும் வரவில்லையென்பதே உண்மை. “அவர்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை கொடுக்கிறோம், இது போதாதா?” என்பதுடன் அவர்களின் இம்மக்கள் தொடர்பான பிரக்ஞை முடிந்துவிடுகிறது.

தொழில் கட்சி அரசின் பிரதமர் சில வருடங்களுக்கு முன்னர் வெளிப்படையாக இம்மக்களிடம் பகிரங்க மன்னிப்பொன்றைக் கோரினார். மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நிகழ்த்தப்பட்ட இம்மன்னிப்பின் பின்னர் பழங்குடிகளுக்கான புதிய அத்தியாயம் ஒன்று உருவாவதாக பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பழமைவாதக் கட்சி இம்மக்கள் தொடர்பான தனது பழைய கொள்கைகளை மீளக் கொண்டுவந்ததுடன், அவர்களின் சமூக வாழ்க்கையில் தலையீடுகளையும் மேற்கொண்டது.

பழங்குடியினருக்கும் குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான இடைவெளி எப்போதும்போல் இன்றும் அப்படியே, விசாலமாக இருக்கிறது. இன்று ஆக்கிரமிப்போ, இனக்கொலையோ நடக்கவில்லையென்றாலும் கூட, அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்வு இதுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லையென்பதே நிதர்சனமான உண்மை.

அதற்காக, அவர்கள் விரும்பும் வாழ்வு நாகரீகத்தில் செழுமைப்பட்டதா என்றால் இல்லையென்பதே உண்மை. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சமூக வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள், மது மற்றும் போதைவஸ்த்துப் பாவனை, மிகக் குறைவான ஆயுட்காலம், ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து வாழ ஒவ்வாமை, கல்விமீதான நாட்டமின்மை போன்ற பல பிற்போக்கான நடைமுறைகளுக்குட்பட்டு, நாட்டின் பல பின் தங்கிய பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் இம்மக்கள் இன்னும் குழுக்களாக பிரிந்து கிடப்பதும், பொதுவான தலைமைத்துவம் அற்றவர்களாக,  தம்மைப் பலமான ஒரு சமூகமாக, அரசியலில் மறுக்கப்பட முடியாத சக்தியாக மாற்றும் நிலைபற்றி இதுவரை சிந்திக்கவில்லையென்பதும் வேதனை.

பலர் நினைப்பதுபோல இலகுவில் தீர்க்கக்கூடிய சிக்கலல்ல என்பதே உண்மை.

உங்கள் கருத்திற்கு நன்றி, தொடர்ந்து எழுதுங்கள்!

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னெரெல்லாம் புங்கையூரன் என்ற அண்ணா இவர்கள் பற்றி இதர அவுஸ்ரெலிய சம்பந்தப்பட்ட அனைத்தையும் எழுதுவார் இப்போ அவரைக் காணக் கிடைக்கிறது இல்ல..🤔

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா சிதம்பரநாதன் ரஞ்சித்தினது அவுஸ்ரேலியா பற்றி நல்ல தகவல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மல்லிகை வாசம் said:

13 hours ago, ரஞ்சித் said:

இரு துருவங்களை இணைப்பது எவ்வளவு தூரம் சாத்தியமென்பது தெரியவில்லை. ஏனெனில் மூத்தகுடிகளின் மனதில் இருப்பது Invasion day massacre தொடங்கி 2019ல் பொலீஸ்காவலில் மரணமடைந்த 19 வயது Kumanjayi Walker நிகழ்வுகள்/வடுக்களே. 

ஆனால் இனக்கொலை என இனி நடைபெறாது/நடைபெறக்கூடாது, அதே நேரம்,  NT சிறைகள் இவர்களாலேயே நிரம்பியுள்ளது. அதே போல பல தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அவுஸ்ரேலியா அரசுடன் சேர்ந்து இவர்களது வாழ்க்கை, கல்வியறிவு, தொழில்வாய்ப்பு என்பவற்றை முன்னேற்றமுயல்கின்றன.

அதே நேரம் மூத்தகுடிகள், நீங்கள் கூறியபடி ஒற்றுமையுடன் செயற்படுவதாக தெரியவில்லை, அப்படி மூத்தகுடிகள் ஒன்றுபடுவதை மற்றவர்கள் எவ்வளவுதூரம் வரவேற்பார்கள் எனவும் தெரியாது..

எனக்கு அவர்கள் இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந்த முறைகள், spiritual முறைகளை பார்க்கும் பொழுது அவர்களது வாழ்க்கை , ஆயுட்காலம், கல்வியறிவு, முன்னேற்றி அவர்கள்பாட்டில் இருக்கவிட்டால், பல நூற்றாண்டு பழமைவாய்ந்த இனமும் கலாசாரமும், மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என நினைப்பதுண்டு.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு அவர்கள் இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந்த முறைகள், spiritual முறைகளை பார்க்கும் பொழுது அவர்களது வாழ்க்கை , ஆயுட்காலம், கல்வியறிவு, முன்னேற்றி அவர்கள்பாட்டில் இருக்கவிட்டால், பல நூற்றாண்டு பழமைவாய்ந்த இனமும் கலாசாரமும், மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என நினைப்பதுண்டு.

அருமை. இதுவே என் கருத்தும் கூட! 😊

  • கருத்துக்கள உறவுகள்

பல பயனுள்ள கருத்துக்களை இந்த திரியில் கண்டேன்.

இதே போல் ஒரு நிலையில் தான் பூர்வீக அமெரிக்கர்களும் வாழ்கிறார்கள்.

இது மிகவும் சிக்கலான விடயம்.

அவர்களை அப்படியே இருக்க விடுவது அவர்கள் பல்லாண்டு கால கலாச்சாரத்தை பாதுகாக்கும் என்றாலும், இயற்கையான மாற்றங்களுக்கு அந்த சமூகத்தை முகம் கொடுக்க விடாமல் ஒரு இயங்கியல் dynamic சமூகமாக அன்றி தேங்கும் static சமூகமாக அவர்களை தொடர்ந்தும் ஒரு கண்ணாடி புட்டியில் அடைத்து வைப்பது போல வைப்பதும் சரியா? தெரியவில்லை.

அந்தமான் தீவுகளிலாவது அவர்களை அப்படியே விட்டு விட்டார்கள். இவர்கள் விடயத்தில் அரசே தனிமைபடுத்த, வேலி அடைக்க வேண்டி வரும். 

இவர்களின் பிள்ளைகளை எடுத்து போனது போன்ற முந்தைய கசப்பான நிகழ்வுகளும் மனதிலாடுகிறன.

அடிப்படை வசதிகளை கொடுத்து, பொலீஸ் வன்முறையை தவிர்த்து அப்படியே விடுவதும், எமது வாழ்க்கை முறைக்கு வர விரும்புவோரை மட்டும் கைதூக்கி விடுவதுமே நல்லம் என்பது என் நிலைப்பாடு.

பிகு 1

இவர்கள் ஆபிரிகாவில் இருந்து வெளியேறிய 1ம் அலையை சேர்ந்தோர் என்றும் இவர்கள் தமிழ் நாட்டின் கோடி வழியே பயணித்தார்கள் என்றும், டிஎன் ஏ ஒற்றுமைகள் இவர்களுக்கும் தமிழ்நாட்டில் மதுரையில் ஒரு கிராமத்தில் உள்ளவர்கும் உள்ளது எனவும் ஒரு ஆய்வு சொல்கிறது.

பிகு 2

அவுஸ்ரேலிய சமூகம் பற்றி நான் அண்மையில் வாசித்த பதிவை கீழே தருகிறேன். எதிர்மறை கட்டுரைதான், ஆனால் இங்கே கருத்து பகிந்த்த Aussie உறவுகளை சிந்திக்க வைக்கும் பதிவாக இருக்கும் என நம்புகிறேன்.

https://www.theguardian.com/lifeandstyle/2021/jan/02/a-spoilt-brat-country-the-australians-overseas-who-decided-not-to-come-home 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது கட்டுரையில் எனக்கு பிடித்த ஒரு வரி “ Australia is not perfect, but Europe is not the oasis I imagined it to be either.”

ஆனாலும் கட்டுரை கூறும் விடயங்களை மறுக்கவுமில்லை. சில துறைகளில் அதிக வேலைவாய்ப்பு இல்லை. சில துறைகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை. Centralink பணத்தில் இருப்போரும் சில வேலைகளுக்கு போகமாட்டார்கள். 

பல்லின மக்கள் என கூறிக்கொண்டு அகிலன் Beadleலோ இல்லை Gurinder Sandhuவோ இல்லை உஸ்மான் குவாஜவோ போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. Sydney Thunders உடன் நிற்கிறது. இவையெல்லாம் பொதுவாக எல்லோரும் கூறும் விடயம்

இப்படி கூறிக்கொண்டே போகலாம், எங்களவர்களின் நிலையையோ அல்லது பழக்கவழக்கங்களையோ நான் கூறவிரும்பவில்லை, நீங்களே நிறைய அறிந்திருப்பீர்கள்.. 

பிகு: நான் Sweden மற்றும் Londonற்கு ஒரு முறை வந்திருந்தேன், Londonனிலும் பார்க்க Sweden அதிகம் பிடித்திருந்தது.

20 hours ago, goshan_che said:

Mapping Justice எனும் ஒரு மூத்தகுடிகளின் பிரச்சனைகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் ஒரு ஆக்கம் யாழ் திரைகடலோடியில் இணைத்திருக்கிறேன்.. நேரம் இருந்தால் வாசியுங்கள். மூத்தகுடிகளின் வலி அதிகமானது

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் Sweden மற்றும் Londonற்கு ஒரு முறை வந்திருந்தேன், Londonனிலும் பார்க்க Sweden அதிகம் பிடித்திருந்தது.

லண்டனை பார்க்க ஆவலுடன் சென்ற எனக்கு தெரிந்தவர்களும் ஏமாற்றத்தை தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களது கட்டுரையில் எனக்கு பிடித்த ஒரு வரி “ Australia is not perfect, but Europe is not the oasis I imagined it to be either.”

ஆனாலும் கட்டுரை கூறும் விடயங்களை மறுக்கவுமில்லை. சில துறைகளில் அதிக வேலைவாய்ப்பு இல்லை. சில துறைகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை. Centralink பணத்தில் இருப்போரும் சில வேலைகளுக்கு போகமாட்டார்கள். 

பல்லின மக்கள் என கூறிக்கொண்டு அகிலன் Beadleலோ இல்லை Gurinder Sandhuவோ இல்லை உஸ்மான் குவாஜவோ போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. Sydney Thunders உடன் நிற்கிறது. இவையெல்லாம் பொதுவாக எல்லோரும் கூறும் விடயம்

இப்படி கூறிக்கொண்டே போகலாம், எங்களவர்களின் நிலையையோ அல்லது பழக்கவழக்கங்களையோ நான் கூறவிரும்பவில்லை, நீங்களே நிறைய அறிந்திருப்பீர்கள்.. 

பிகு: நான் Sweden மற்றும் Londonற்கு ஒரு முறை வந்திருந்தேன், Londonனிலும் பார்க்க Sweden அதிகம் பிடித்திருந்தது.

Mapping Justice எனும் ஒரு மூத்தகுடிகளின் பிரச்சனைகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் ஒரு ஆக்கம் யாழ் திரைகடலோடியில் இணைத்திருக்கிறேன்.. நேரம் இருந்தால் வாசியுங்கள். மூத்தகுடிகளின் வலி அதிகமானது

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

லண்டனை பார்க்க ஆவலுடன் சென்ற எனக்கு தெரிந்தவர்களும் ஏமாற்றத்தை தெரிவித்தனர்.

அட போங்கப்பா, கதை புத்தகத்தில் படித்து விட்டு, பழை நிழற்படங்களையும் பார்த்து விட்டு எதிர்பார்ப்போடு வந்த எனக்கே லண்டன் “சப்” என்றுதான் இருந்தது🤣.

ஆனால் பழக பழக பாலும் புளித்து, இப்போ புளித்த பால் மட்டுமே பிடிக்கிறது🤣.

ரம்மியமான இங்கிலாந்தை லேக் டிஸ்டிரிக், பீக் டிஸ்டிரிக், கொட்ஸ்வால்ட் இவற்றில் காணலாம். பெருநகரங்களில், பாரம்பரிய கட்டிடங்களை, வரலாற்றை தவிர ரம்மியம் இல்லை.

எனக்கு இங்கே உண்மையில் பிடித்த விடயம் இங்கே இருக்கும் social mobilityக்கான வாய்புக்கள்தான்.

மற்றது ஐரோப்பா எங்கினும் casual racism இப்போ வலுவாக குறைந்து விட்டது. உள்ளா இருக்கும் deep seated racism அப்படியே இருந்தாலும் வெளியில் பேசும் போது, ஜோக் அடிக்கும் போது இது குறைவு. அப்படி நடந்தாலும், அதை challenge பண்ணும் நிலையில் நாம் இருக்கிறோம்.

ஆனால் என் அனுபவத்தில் அவுஸ்ரேலியாவில் இது இன்னும் ஏற்று கொள்ள பட்ட நிலையில் இருப்பதாகவே நினக்கிறேன். என் தனிப்பட்ட கருத்து மட்டும்.

நிச்சயம் உங்கள் பதிவை வாசிக்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நச்சுச் சக்கரம் என நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் நிகழ்ந்த அக்கிரமங்கள் காரணமாக பழங்குடிகள் குடியேறிகளை இன்றும் நம்புவதில் பின்னிற்கிறார்கள். இதனால் குடியேறிகளின் வாழ்க்கை முறையை நிராகரித்து தங்கள் கலாச்சாரத்தையே தனி நாடுகள், பிரதேசங்கள் மூலம் பேண முயல்கிறார்கள். இதில் வெற்றி பெற்ற பழங்குடியினரை மேற்குலகில் காண முடியவில்லை!

கிறீன்லாந்து சிறந்த உதாரணம். டென்மார்க்கின் ஆட்சியின் கீழ் இருந்தாலும் சுயாட்சி கிறீன்லாந்து  பழங்குடியினரிடம் இருக்கிறது. ஆனால், கல்வி, பொருளாதாரம், வதிவோரின் சராசரி ஆயுட்காலம் என்பன கிறீன்லாந்தில் வளர்ந்து வரும் சில நாடுகளை விடக் கீழாக இருக்கின்றன. உலகில் தற்கொலை வீதம் அதிகமான இடமாகவும் கிறீன்லாந்து இருக்கிறது (கிறீன்லாந்து மட்டுமல்ல, கனடாவின் சுதேச குடிகள் அதிகம் வாழும்  நுனாவற் (Nunavut) மாகாணம், உலகிலேயே அதிக தற்கொலைகள் நிகழும் ஒரு நிலப்பரப்பாக இருக்கிறது). 

இந்த இளம் வயதினர் தற்கொலை செயவதற்கு காரணமாக "செய்வதற்கு ஒன்றுமில்லாத வெறுமை (emptiness)" என்று ஒரு என்.பீ.ஆர் நிகழ்ச்சியில் நிபுணர் ஒருவர் சொல்லக் கேட்டேன். இந்த வெறுமை கல்வியும் தொழிலும் இல்லாத பழங்குடி இளையோரிடையே பிரதானமான ஒன்றாக இருக்கிறது.

என் அபிப்பிராயம் இந்த நச்சுச் சக்கரத்தை உடைக்க சில நவீன நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு, சில கலாச்சாரச் சிறப்புகளைக் காத்து நகர வேண்டும். இதை பழங்குடியினரின் தலைமைகள் தான் சொல்லவும் செய்யவும் வேண்டும். வெளியார் சொன்னால் வரவேற்பிருக்காது!

2 hours ago, goshan_che said:

மற்றது ஐரோப்பா எங்கினும் casual racism இப்போ வலுவாக குறைந்து விட்டது. உள்ளா இருக்கும் deep seated racism அப்படியே இருந்தாலும் வெளியில் பேசும் போது, ஜோக் அடிக்கும் போது இது குறைவு. அப்படி நடந்தாலும், அதை challenge பண்ணும் நிலையில் நாம் இருக்கிறோம்.

ஆனால் என் அனுபவத்தில் அவுஸ்ரேலியாவில் இது இன்னும் ஏற்று கொள்ள பட்ட நிலையில் இருப்பதாகவே நினக்கிறேன். என் தனிப்பட்ட கருத்து மட்டும்.

எம்மவர்களின் தொகை அதிகமாக வாழும் நகரங்களில் இது குறைவென நான் நினைக்கிறேன். இங்கு அவுஸில் எம்மவர்கள் ஓரளவுக்கேனும் கணிசமாக வாழும் சிட்ணி போன்ற நகரங்களில் இப்படியான racism குறைவாகவும், ஏனைய பிரதான நகரங்களில், மாநிலங்களில் ஒப்பீட்டளவில் அதிகமாயும் இருக்கலாம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மல்லிகை வாசம் said:

எம்மவர்களின் தொகை அதிகமாக வாழும் நகரங்களில் இது குறைவென நான் நினைக்கிறேன். இங்கு அவுஸில் எம்மவர்கள் ஓரளவுக்கேனும் கணிசமாக வாழும் சிட்ணி போன்ற நகரங்களில் இப்படியான racism குறைவாகவும், ஏனைய பிரதான நகரங்களில், மாநிலங்களில் ஒப்பீட்டளவில் அதிகமாயும் இருக்கலாம் என நினைக்கிறேன். 

இப்படி இருக்கும் என்றே நானும் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

டென்மார்க்கின் ஆட்சியின் கீழ் இருந்தாலும் சுயாட்சி கிறீன்லாந்து  பழங்குடியினரிடம் இருக்கிறது. ஆனால், கல்வி, பொருளாதாரம், வதிவோரின் சராசரி ஆயுட்காலம் என்பன கிறீன்லாந்தில் வளர்ந்து வரும் சில நாடுகளை விடக் கீழாக இருக்கின்றன. உலகில் தற்கொலை வீதம் அதிகமான இடமாகவும் கிறீன்லாந்து இருக்கிறது (கிறீன்லாந்து மட்டுமல்ல, கனடாவின் சுதேச குடிகள் அதிகம் வாழும்  நுனாவற் (Nunavut) மாகாணம், உலகிலேயே அதிக தற்கொலைகள் நிகழும் ஒரு நிலப்பரப்பாக இருக்கிறது). 

கற்பகதரு அழகாக சொல்வார் தக்கன பிழைத்து கொள்ளும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.