Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை.. மீள அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை... மீள அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில்  இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக  அவர் உறுதியளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து துணைவேந்தர், முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை  நிறைவுக்கு கொண்டு வந்தார்.

அதன்பின்னர் மாணவர்களுடன் இணைந்து, முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8ஆம் திகதி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதைய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும் சில மாணவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும் மாணவர்கள், தீர்வு கிடைக்கும் வகையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று அதிகாலை வரை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நிறைவுக்கு வந்தது: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க  அடிக்கல் நாட்டப்பட்டது - YouTube  போராட்டம் நிறைவுக்கு வந்தது: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க  அடிக்கல் நாட்டப்பட்டது. - YouTube

http://athavannews.com/போராட்டம்-நிறைவுக்கு-கொண/

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210111-111758.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சதியை வேகமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும் முறியடித்த மாணவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், இவற்றில் முன்னணியில் நின்ற யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணனுக்கும், உபவேந்தருக்கும், இலங்கை இராணுவத் தளபதிக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. 🙏

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

18.09.2013இல் வரைந்தது

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்


அடிக்கல் போட்டு மாணவர்களின் போராட்டத்தை முடித்தாயிற்று. ஆனால் “மேலிடம்” திரும்பவும் முள்ளிவாய்க்கால் தூபியை கட்ட உரிய அனுமதி வழங்கியதாக செய்தி உள்ளதா?🤔🤔🤔

உடைக்கப்பட்ட தூபி கற்குவியலாக நீண்டகாலம் இருக்கும் போலத்தான் தெரிகின்றது.
 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன ? - முழு விபரம்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால்  நினைவுக்கல் நாட்டப்பட்டது. 

spacer.png

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை (08.01.02021) இரவு இடித்தழிக்கப்பட்டது. 

போராட்டங்கள்

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை காலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர். 

தமிழகம் , வெளிநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வந்ததுடன் , புலம்பெயர் நாடுகளில் உள்ளோரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 

இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முஸ்லீம் தரப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர். 

அதிகாலையில் மாணவர்களை சந்தித்த துணைவேந்தர்.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் பல்கலை கழக துணைவேந்தர் நேரில் சந்தித்து,  மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். 

தடுத்து நிறுத்திய பொலிஸார்

அதன் பிரகாரம் காலை 07.00 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தடுத்து நிறுத்தினார்கள். 

spacer.png

அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று , பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். 

spacer.png

அதனை தொடர்ந்து நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்திற்கு மாணவர்களுடன் துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார். 

கட்டுமான பணிகளை முன்னெடுக்கவில்லை

அதன் போது , துணைவேந்தர் , நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் கல் நாட்டப்போறோம். என்னுடைய மாணவர்கள் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என கூறி இருந்தார். 

அதனை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்தார். 

தேவாரம் பாடி மலர் தூவி அஞ்சலி

நினைவிடத்திற்கு மாணவர்களுடன் சென்ற துணைவேந்தர் , தேவாரம் பாடி , மலர் தூவி நினைவு கல்லினை நாட்டினார். அதனை தொடர்ந்து மாணவர்களும் நினைவிடத்திற்கு மலர் தூவினார்கள். 

spacer.png

spacer.png

மாணவர்களின் விபரங்களை பெற முயற்சி

அவற்றை முடித்துக்கொண்டு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்து வெளியேற முற்பட்ட போது, பல்கலை கழகத்தினுள் இருந்த பொலிஸார் நினைவிடத்திற்கு சென்று வந்த மாணவர்களின் விபரங்களை பதிய முற்பட்டனர். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, தாம் கொரோனா நோய் தொற்று காரணமாக தான் பதிவுகளை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். 

தமது விபரங்களை பல்கலை வளாகத்தினுள் நின்று பொலிஸார் பதிவதனை மாணவர்கள் எதிர்த்தனர். அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த துணைவேந்தர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மாணவர்களை வெளியேற விடுமாறு பணித்தனர். அதனை அடுத்து மாணவர்களை வெளியற பொலிஸார் அனுமதித்தனர். 

முடிவுக்கு வந்தது உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத இடத்திற்கு வந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் கஞ்சி வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார். 

spacer.png

 

https://www.virakesari.lk/article/98269

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, இந்த அடிக்கல் நாட்டப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள போதிலும், அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கு மத்திய அரசாங்கமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பிலான உறுதியாக தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமளவிலானோர் அங்கு ஒன்று திரண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது

 

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு தூபி ஆகியவற்றை உடைக்க அன்று நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மாவீரர் நினைவுதூபி மற்றும் பொங்குத்தமிழ் நினைவுதூபி ஆகியன பாதுகாக்கப்பட்டன.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் வலுப் பெற்றது.

9ம் தேதி முதல் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டம் நேற்றைய தினம் வலுப் பெற்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்வாறான போராட்டங்களுக்கு மத்தியிலேயே, இன்று மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கான அடிக்கலை நாட்டுவதற்கு பல்கலைக்கழக உப வேந்தர் அனுமதி வழங்கியுள்ளார். 

நினைவுதூபி

தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பின்னணியில், உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும், தாம் திட்டமிட்ட வகையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் அரசியல்வாதிகள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.

நினைவுதூபி எதற்காக அமைக்கப்பட்டது?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு: ராணுவத்துக்கு தொடர்பா? - தொடரும் போராட்டம்
 
படக்குறிப்பு, , (கோப்புப்படம்)

அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.

அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேபோல அங்கு போரில் உயிரிழந்த தமிழ் போராளிகள், மாணவர்களின் நினைவாக மாவீரர் நினைவு தூபியும் அமைக்கப்பட்டது.

இலங்கை போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபிகள் விளங்கி வந்த நிலையில், அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-55614333

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இந்திய சதியை வேகமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும் முறியடித்த மாணவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், இவற்றில் முன்னணியில் நின்ற யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணனுக்கும், உபவேந்தருக்கும், இலங்கை இராணுவத் தளபதிக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. 🙏

தோழர் டக்ளஸ் அவர்களை விட்டு விட்டிர்களே 😄

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவின் நெற்றியில் இருந்த பட்டையும்  களண்டதோ.... ?  அடிக்கல் நாட்டியதோடு பதவி விலகலாம், விலக்கப்படலாம். யார் தூபியை கட்டி முடிப்பது? செய்வது கஸ்ரம், இடிப்பது  சுலபம் ஓர் இரவில். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி! முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி! –  குறியீடு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க, நல்லூார் பிரதேச சபை இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்று காலை வரை உணவு தவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல்லையும்   மாணவர்களுடன் இணைந்து யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நாட்டினார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு விஜயம் சென்று பார்வையிட்ட யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், அங்கு வந்திருந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது தொடர்பில் நல்லூார் பிரதேச சபையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தூபியினை நிர்மாணிப்பதற்கான முழுமையா நிதியையும் திருகோணமலையை சேர்ந்த ஒருவர் வழங்குவதாக  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார்” எனவும் அவர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-30/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்று காலை வரை உணவு தவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

என்னத்துக்கோ நூல் விட்டு பாத்திருக்கினம். அது சரி வரேல்லை. எண்டாலும் எங்கையோ ஒரு பெரிய ஆப்பு வைச்சிருப்பாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

இந்திய சதியை வேகமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும் முறியடித்த மாணவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், இவற்றில் முன்னணியில் நின்ற யாழ்ப்பாண நகரபிதா மணிவண்ணனுக்கும், உபவேந்தருக்கும், இலங்கை இராணுவத் தளபதிக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. 🙏

சரியான   கருத்து ...இந்தியாவின் சதிக்கு தெரிந்தோ  தெரியாமலோ கூட்டமைப்பும் துணை போனது ...தூபி திரும்பவும் அதே இடத்தில் வருமோ அல்லது பேய் காட்டலோ தெரியாது ...அதே இடத்தில் திரும்பவும் கட்டப்பட்டால் அது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி 
 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

என்னத்துக்கோ நூல் விட்டு பாத்திருக்கினம். அது சரி வரேல்லை. எண்டாலும் எங்கையோ ஒரு பெரிய ஆப்பு வைச்சிருப்பாங்கள்.

கண்டிப்பாக. இடி இங்கே இடித்திருக்கிறது, அடைமழை எங்கே என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிய வரும். இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று  எதிர்பார்த்திருக்க மாட் டார்கள்.  துணைவேந்தர் மண்குதிரையை நம்பி இடிக்க  வெளிக்கிட்டு  தன் மதிப்பை இழந்ததுதான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சமாதான தூபி அமைக்கப்படும்- துணைவேந்தர் பிபிசிக்கு தகவல்

Digital News Team 2021-01-12T07:21:53

அழிக்கப்பட்ட நினைவுத்தூபியிருந்த இடத்தில் புதிய சமாதான தூபி அமைக்கப்படும் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு தன்னை குற்றமசாட்டுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாலேயே அது அழிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்
இது தொடர்பில் பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது.

137558340_218785653214217_77547490182379

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தி;ல் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறுவதற்கான நினைவத்தூபி அதனை அழித்தமைக்கு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் மீண்டும் கட்டப்படவுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களிற்கான நினைவுத்தூபி கடந்த வாரம் யாழ்பல்கலைகழக நிர்வாகத்தால் அழிக்கப்பட்டது.
நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் சீற்றமடைந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களி;ல் ஈடுபட்டதுடன் அது தொடர்பில் உண்ணாவிரதப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நினைவுத்தூபி ஏன் அழிக்கப்பட்டது
அரசபடையினருக்கும் தமிழ் கிளர்ச்சியாளர்களிற்கும் இடையிலான 26 வருட உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் சார்பாகவே இந்த நினைவுத்தூபி கட்டப்பட்டது.
2009 ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தனர்.ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக மதிப்பீடுகள் உள்ளன.
வெள்ளிக்கிழமை இந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது. பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க அந்த நினைவுத்தூபி சிங்களவர்களை பெரும்பான்மையினத்தவர்களாக கொண்ட இலங்கையின் தேசிய ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலானது என தெரிவித்தார்.

mullivaikal-jaffna-uni-1-300x200.jpg
உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார்.
நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் பல்கலைகழக வாயிலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் நினைவுத்தூபியை மீண்டும் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து சிலர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கை பல்கலைகழக மாணவர்களிற்கு எதிரான அவமரியாதை மாத்திரமல்ல முழு தமிழ் இனத்திற்கும் எதிரான நடவடிக்கை என யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.
நினைவுகூறுவதற்கு மக்களிற்குள்ள உரிமையை மறுக்கும் செயல் இதுஎனவும் அவர்கள் தெரிவித்தனர்.
யுத்தத்தில் உயிரிழந்த எங்;கள் நேசத்;திற்குரியவர்களை நினைவு கூறுவதற்கு எங்களிற்கு உரிமையுள்ளது என மாணவர் சங்க தலைவர் பாக்கியநாதன் உயந்தன் தெரிவித்தார்.இந்த மக்கள் எங்கள் தமிழ் சமூகத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர் என குறிப்பிட்ட அவர்நினைவுத்தூபி அழிக்கப்பட்டமையால் நாங்கள் கடும் கவலையடைந்துள்ளோம்என தெரிவித்தார்.

116425363_mediaitem116425362-300x169.jpg
இந்தியாவில் நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு எழுந்தது.குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உருவானது. கனடாவில் நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிராக கார்பேரணியொன்று இடம்பெற்றது.
இந்த நினைவுத்தூபி தற்போது மீள அதே இடத்திலேயே அமைக்கப்படவுள்ளது.
நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்த துணைவேந்தர் எஸ் சிறீசற்குணராஜா கஞ்சிவழங்கி அவர்களின் போராட்டத்தினை முடித்துவைத்தார்.
அதே இடத்தில் புதிய சமாதான தூபி அமைக்கப்படும் என துணைவேந்தர் பிபிசிக்கு தெரிவித்தார்.
நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு தன்னை குற்றமசாட்டுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாலேயே அது அழிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்

 

Thinakkural.lk 

 

  • கருத்துக்கள உறவுகள்

இருந்ததை இடிச்சுப் போட்டு அடிக்கல் நாட்டிட்டினமாம்.

பிறகு.. சமாதான தூபி எழும்புமாம்.

நீங்கள் சாமாதான தூபியை எங்கேயாவது எழுப்புங்கள்.. எழுப்பி இருந்த முள்ளிவாய்க்கால் தூபி அதே அமைப்பில் அப்படியே மீள அமைக்கப்பட வேண்டும். வலி சுமந்தவனுக்குத்தான் தெரியும் அந்த தூபியின் வடிவமைப்பும்.. தார்ப்பரியமும். 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் உள்ள துயர் பகிரும் நினைவுத் தூபிகளை இடிப்பதால் சமாதானம், ஐக்கியம் கட்டி எழுப்பப்பட மாட்டாது. மாறாக வெறுப்பும் துவேஷமுமே வளரும். வெற்றி விழழா கொண்டாடுவதையும், கொடுமை செய்த இராணுவத்தினருக்கு தூபி எழுப்புவதையும், பதவி வழங்குவதையும் நிறுத்தி, இழப்போடும், வலியோடும் நடமாடும் மக்களின் உணர்வுகளை புரிந்து,  மன்னிப்புக்கேட்டு,  மதிப்பளித்தாலே சமாதானமும், ஐக்கியமும் ஏற்படும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிக்கொண்டு சமாதானம் மலரவேண்டும் என நினைப்பது சர்வாதிகார முட்டாள்களின் கற்பனை மட்டுமே.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.