Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் காணொளி! - அமைச்சர் தினேஸ் கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் காணொளிக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அலுவலக டுவிட்டர் கணக்கில் இலங்கை போர்க்கால காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது வழமையை மீறி செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த கால வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த காணொளியில் போர் கால சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் எனக் கூறப்படுகிறது.

https://www.tamilwin.com/politics/01/267780?ref=imp-news

  • Replies 66
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொஞ்சம் இருடி, இதுக்கே இப்பிடியெண்டால் இன்னும் எவ்வளவோ இருக்கு. நீங்கள்  தரையிலும், கடலிலும், வானத்திலும் இருந்து அப்பாவி மக்கள் மீது பொழிந்த மழையை பார்க்க வேண்டாமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கொஞ்சம் இருடி, இதுக்கே இப்பிடியெண்டால் இன்னும் எவ்வளவோ இருக்கு. நீங்கள்  தரையிலும், கடலிலும், வானத்திலும் இருந்து அப்பாவி மக்கள் மீது பொழிந்த மழையை பார்க்க வேண்டாமோ? 

தப்பி சுவிசுக்கு ஓடின இன்ஸ்பெக்டர் சில்வா, வேற குண்டுகளை எறியப்போகுது.

சட்டரீதியா விசாரணை செய்த அதிகாரி, விசாரணை பைலுகளுடன், சுவிஸ் நாட்டுக்கு அகதியாய், ஜெனீவாவிலை கொண்டு போய் சேர்த்தது, தலையிடி கொடுக்கப்போகிற பெரிய விசயம். 

லசந்த விகிராம்சிங்க,  தாஜூடீன் கொலை, பிரகதீப் ஏக்நாலிகொடை போன்ற கோத்தாவின் சிங்கள பகுதி கொலைகள் இவர் தான் விசாரிச்சவர். 😳

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றவாளிகளை.... விரைவில், கதற விட வேண்டும்.
காலம் கடந்து என்றாலும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

இவர்கள் தம்மை புனிதர்களாக காட்ட குழுக்கள் அமைக்க, அங்கே பூதங்கள் காத்திருக்கு இவைகளை விழுங்க. இதெல்லாம் இவர்கள் வலிய விலை குடுத்து வேண்டிக்கொண்டவை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

போர்க் குற்றவாளிகளை.... விரைவில், கதற விட வேண்டும்.
காலம் கடந்து என்றாலும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இப்ப இல்லாவிடினும் ஏதோ  ஒரு காலத்தில் தண்டனை கிடைக்கும் அதுக்கு முதல் கிந்தியர்களின் வானரம் வடகிழக்கில் ஆடிய  கூத்துக்கு ஒரு கேஸ் பைல் பண்ணனும் .

21 hours ago, Nathamuni said:

தப்பி சுவிசுக்கு ஓடின இன்ஸ்பெக்டர் சில்வா, வேற குண்டுகளை எறியப்போகுது.

இம்முறை சிங்களம் அதிகம் பயப்பிடுவது இவரை பார்த்துதான் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இப்ப இல்லாவிடினும் ஏதோ  ஒரு காலத்தில் தண்டனை கிடைக்கும் அதுக்கு முதல் கிந்தியர்களின் வானரம் வடகிழக்கில் ஆடிய  கூத்துக்கு ஒரு கேஸ் பைல் பண்ணனும் .

இம்முறை சிங்களம் அதிகம் பயப்பிடுவது இவரை பார்த்துதான் .

இவரை அந்த எல்லைக்கு  விரட்டியதே சிங்களந்தான். வேலிக்கு வைச்ச முள் இப்போ அவர்கள்  காலைக் குத்தப்போகுது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தமிழ் சிறி said:

போர்க் குற்றவாளிகளை.... விரைவில், கதற விட வேண்டும்.
காலம் கடந்து என்றாலும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இல்லை சிறித்தம்பி அது நடக்காது.

சிங்களத்திடம் எந்தவொரு வலிமையும் இல்லை.
ஆனால்....

இலங்கை அமைந்திருக்கும் பூகோளம் மிக மிக வலிமையானது. அதிலும் ஆரிய பாசம் இன்னும் வலிமை. அதை விட சீனாவின் பண பட்டுப்பாதை இன்னும்  இன்னும்  வலிமை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இலங்கை அமைந்திருக்கும் பூகோளம் மிக மிக வலிமையானது. அதிலும் ஆரிய பாசம் இன்னும் வலிமை. அதை விட சீனாவின் பண பட்டுப்பாதை இன்னும்  இன்னும்  வலிமை.

அதுதான் இலங்கைக்கு ஆபத்தை தேடிக்கொடுக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

சீனாவின் பண பட்டுப்பாதை இன்னும்  இன்னும்  வலிமை

அது இன்னும் 15 வருடம் கணக்க  2028 ல் மீண்டும் அணுப்பிணைவு சூரியனை இயக்கப்போகிறார்கள் என்று அறிவித்துள்ளது பீஜிங் .அதன் பின் முத்துமாலை அவர்களின் வட ஆபிரிக்க விளைபொருள் க்கே முக்கியத்துவம் அளிக்கும் .

இந்த அணுப்பிணைவு முயற்சியில் மூன்று நாடுகள் ரேஸ்  ஓடுகின்றன USA . சைனா ,பிரிட்டன் யார் முந்துகிறார்களோ அவர்களின் கையில் கடிவாளம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பெருமாள்... 
அணுப்பிணைவு சூரியனைப் பற்றிய  மேலதிக தகவல்களை, 
உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன். 
இதனால்... இயற்கை சமநிலைக்கு, ஆபத்து ஏற்படாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, satan said:

அதுதான் இலங்கைக்கு ஆபத்தை தேடிக்கொடுக்குது.

சிங்களன் அதை உணர்வதாக தெரியவில்லையே......🙃

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் புலிகள் மக்களை கூட்டி சென்றபடியால்தானே 
இராணுவத்தினர் குண்டு அடிக்கவேண்டி வந்தது?

1950இல் இப்படி இராணுவத்தினர் குண்டு அடிக்கவில்லைதானே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்... 
அணுப்பிணைவு சூரியனைப் பற்றிய  மேலதிக தகவல்களை, 
உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன். 
இதனால்... இயற்கை சமநிலைக்கு, ஆபத்து ஏற்படாதா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சிங்களன் அதை உணர்வதாக தெரியவில்லையே......🙃

சீனாக்காரன் குடுக்கிற தைரியம்.

மியன்மீர் விசயம் குறித்து, விவாதிக்கும் போதே, வீட்டோ பாவித்து விட்டார்கள், சீனாகார்கள். பொருளாதாரத்தடை தீர்மானத்துக்கு என்றாலும் பரவாயில்லை. இது விவாத நிலையில்....

இந்த சீனத்து தைரியத்தை தான் சிங்களம் மலை போல நம்புது.

தீவுப்பகுதிக்கு சீனன் வரப்போறன். இந்திய துணைத்தூதர், இப்பதான் பாயாலை வாரிச்சுருட்டிக்கொண்டு, எழும்பி, 13a எண்ட  இத்துப்போன பழைய பைலை  தூக்கி வைத்துக் கொண்டு நிக்கிறார்.

ராஜபக்சேக்கள், கொடுப்புக்கிளை சிரிப்பினம்.  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

தமிழர்கள் சீனாவுடன் இணைவதும் ஆதரவது தருவதும்தான் எதிரகால இருப்புக்கு 
வலி சமைக்கும்... இனி இந்தியா தந்தை நாடு தாய்நாடு  என்ற பல்லவிகளை மறந்துவிட்டு 
சீனனுக்கு தேவையான உதவிகளை செய்து சீனாவுக்கு ஆதரவாக இருப்பதே நன்று. 

மோடியின் இந்து பயங்கவாதம் இந்தியாவுக்குள்ளேயே இப்போ பல 
சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் எங்கள் பிரச்சனைகளை 
அவர்களுக்கு வெறும் ஊறுகாய்தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Nathamuni said:

தீவுப்பகுதிக்கு சீனன் வரப்போறன்.

சீனனுக்கு தீவுப்பகுதி கிடைச்சால் அதை விட சந்தோசம் அவனுக்கு  வேறை  இருக்காது. கிட்டத்தட்ட உலகத்திலை இரண்டாவது புளொரிடா(Florida) கிடைச்ச சந்தாசம் அவனுக்குத்தான்.

1740 OVERSEAS HIGHWAY, #4, MARATHON, FL https://www.sothebysrealty.com/eng/sales/detail/180-l-737-2hpzwp/1740-overseas-highway-4-marathon-fl-33050#mediaplayermodule © Andre Van Rensburg for Ocean Sotheby’s International Realty

The Florida Keys - Florida Keys Experience

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முந்திய தேர்தல் காலத்தில் நான் இங்கு நல்லாட்ச்சி அரசு என்பது வெறும் 
ஏமாற்று வேலை தமிழர்கள் மகிந்தவுக்கு ஆதரவு கொடுத்து தேவையானதை சாதிக்கவேண்டும் 
என்று எழுதினேன். வெள்ளைவான் வருவதுதான் இவர்களுக்கு சந்தோசம் என்று நான் எதோ வெள்ளைவானில் 
முதலீடு செய்திருப்பதாக எழுதினார்கள். அப்படி அன்று எழுதியவர்கள் இப்போ கோத்தா புனரமைக்கிறார் புல்லு புடுங்கிறார் என்று எழுதுகிறார்கள். இப்படியான லூசு கோஸ்ட்டிகளிடம் உலகில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது அல்லது தொலைதூர அரசியல் பார்வை என்பது அறவே கிடையாது. தங்களை மேதாவிகளாக இங்கு யாழ் களத்தில் காட்டிக்கொள்ளும் ஒரு வக்கிர புத்தி மட்டுமே உண்டு. இந்த நல்ஆட்சி கத்தரிக்காய் காலத்தை விழுங்கியதே மிச்சம்.... இப்போ ஐ நா வில் விசாரணை வேறு விதமாக நடக்கிறது உள்நாட்டில் புனரமைப்பு நடக்கிறது காலத்தை எமக்கு சாதமாக்கி பயணிக்காது அவர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஏமாளிகளாக இருப்பதில் என்ன பயன்? 

6 minutes ago, குமாரசாமி said:

சீனனுக்கு தீவுப்பகுதி கிடைச்சால் அதை விட சந்தோசம் அவனுக்கு  வேறை  இருக்காது. கிட்டத்தட்ட உலகத்திலை இரண்டாவது புளொரிடா(Florida) கிடைச்ச சந்தாசம் அவனுக்குத்தான்.

1740 OVERSEAS HIGHWAY, #4, MARATHON, FL https://www.sothebysrealty.com/eng/sales/detail/180-l-737-2hpzwp/1740-overseas-highway-4-marathon-fl-33050#mediaplayermodule © Andre Van Rensburg for Ocean Sotheby’s International Realty

The Florida Keys - Florida Keys Experience

தீவுக்கு சீனன் வந்ததும் விசுகு அண்ணாவின்  வீட்டு காணியை ராடார் பூட்ட கொடுக்கிறம் 
புங்கையூரான் வீட்டு காணிக்குள் பாம்பு தவளை கரப்பான் பூச்சி வளர்க்கிறோம். வியாபாரம் முக்கியம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Maruthankerny said:

முதலீடு செய்திருப்பதாக எழுதினார்கள். அப்படி அன்று எழுதியவர்கள் இப்போ கோத்தா புனரமைக்கிறார் புல்லு புடுங்கிறார் என்று எழுதுகிறார்கள்.

காவோலை வேலிக்கும் தார்பீப்பா தகர வேலிக்கும் நீல பெயின்ற் அடிச்சால் புனரமைப்பு எண்டு நினைக்கினமாக்கும்.😎

12 minutes ago, Maruthankerny said:

தமிழர்கள் சீனாவுடன் இணைவதும் ஆதரவது தருவதும்தான் எதிரகால இருப்புக்கு 
வலி சமைக்கும்... இனி இந்தியா தந்தை நாடு தாய்நாடு  என்ற பல்லவிகளை மறந்துவிட்டு 
சீனனுக்கு தேவையான உதவிகளை செய்து சீனாவுக்கு ஆதரவாக இருப்பதே நன்று. 

மோடியின் இந்து பயங்கவாதம் இந்தியாவுக்குள்ளேயே இப்போ பல 
சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் எங்கள் பிரச்சனைகளை 
அவர்களுக்கு வெறும் ஊறுகாய்தான் 

 சீனா  சிங்களத்தை மீறி தமிழர்களுக்கு உரிமைகள் சம்பந்தமாக ஏதும் செய்யுமா?

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் சொல்வது என்னவென்று எனக்கு விளங்கவில்லை: கோத்தாவை ஆதரித்து ஏதாவது பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்றால் 2005 இல் மகிந்தவை மறைமுகமாக வெல்ல வைத்துப் பெற்றுக் கொண்ட மாதிரி ஏதாவதா?

எலிக்குக் கூட ஒரு மின்சார அதிர்ச்சி கொடுத்தால் அடுத்த முறை தொடக் கூடாது என்ற கற்றுக் கொள்ளும் திறன் இருக்கிறது! (அட, நாம் சிறுத்தைகளல்லவா? மறந்து விட்டது! மன்னிக்கவும்)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 சீனா  சிங்களத்தை மீறி தமிழர்களுக்கு உரிமைகள் சம்பந்தமாக ஏதும் செய்யுமா?

இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இந்த கேள்வியே இல்லாமல் ஒரு கூட்டம் உலக அரசியல் என்று புலிவாந்தி எடுத்துக்கொண்டு திரிகிறது. 
இன்னும் 50 வருடங்களில் இலங்கை டுபாய் போல இருக்கும். இவ்வளவு காலமும் எந்த வெளிநாட்டிவருக்கும் 
பிரஜாவுரிமை கொடுக்காத டுபாய் உயர்கல்வி தரா தரத்தில் உயர்வான ஊதியம் பெறுபவர்களுக்கு பிரஜாவுரிமை கொடுக்கப்போவதாக சென்ற கிழமை அறிவித்து இருந்தது இதற்கே வருடம் ஒரு மில்லியன் டாலர்கள் வரை உழைக்கும் சில இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் ஏன் சில அமெரிக்கர்கள் கூட துள்ளி குதிக்கிறார்கள். 

எம்மிடம் பிராஜாஉரிமையுடன் பெரிய நிலப்பரப்பு காணியும் கைவசம் இருக்கிறது இதை எவ்வாறு 
இன்னமும் 50 வருடங்களுக்கு பாதுக்காக்க போகிறோம் என்பதிலேயே எமது பலம் இருக்கிறது. இன்னமும் 50 வருடங்களுக்கு ஈழத்தமிழர்கள் இப்போது கைவசம் இருக்கும் காணிகளை கட்டி காத்து வைத்திருந்தாலே உலகில் முழு சுதந்திரத்துடனும் வாழலாம். புலம்பெயர் தமிழர்களின் காணி கொள்வனவு ஈழ பகுதியை தாண்டி இருப்பது பெருத்த முதலீடாக அமையும்.  

பணபலம் இருந்தால் மிகுதியை விலைபேசி கொள்ளலாம் 

அது ஈழ தமிழரிடம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது அதை பயன்படுத்தும் புத்திதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Maruthankerny said:

இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இந்த கேள்வியே இல்லாமல் ஒரு கூட்டம் உலக அரசியல் என்று புலிவாந்தி எடுத்துக்கொண்டு திரிகிறது.

தலைவர் பிரபாகரனின் தனது மாவீரர் உரைகளில் நாசுக்காக ஆசிய பொருளாதார அரசியல் பற்றி சொல்லிவிட்டார். புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் பின்னடைவு அல்ல பின் வாங்கல்கள். மாறாக முரண்டு பிடித்திருந்தால்  வடபகுதி முழுவதையும் முள்ளிவாய்க்கால் போல் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இது எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வீட்டோ பாவித்து விட்டார்கள்,

இது இருக்கும்வரை ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையால் எதையும் மாற்ற முடியாது. நோய்க்கு மருந்தைக்கொடுத்து, மருந்து வேலை செய்யாமல் தடுப்பு மருந்து கொடுக்கிறமாதிரி. இதற்கு மருந்து எடுக்க அலையாமல், நோயோடே இருக்கலாம்.   இந்த அதிகாரம் இருக்கும்வரை நாடுகளில் அக்கிரமமும், ஆணவமும்,  அடிமைத்தனமும் மாற்ற முடியாதவை.   

25 minutes ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனின் தனது மாவீரர் உரைகளில் நாசுக்காக ஆசிய பொருளாதார அரசியல் பற்றி சொல்லிவிட்டார். புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் பின்னடைவு அல்ல பின் வாங்கல்கள். மாறாக முரண்டு பிடித்திருந்தால்  வடபகுதி முழுவதையும் முள்ளிவாய்க்கால் போல் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இது எனது தனிப்பட்ட கருத்து.

நல்ல நகைச்சுவை குமாரசாமி.

இதுக்கு மேலை முரண்டு பிடிக்க அங்கே என்ன இருந்தது. வாழ்ககை முழுக்க முரண்டு பிடிச்சு பிடிச்சே காலத்தை போக்கி  கடைசிலை முரண்டு பிடிக்கவே எதிரி அனுமதிக்காத அளவு நிலைமை இருந்தது. போராடவே போராளிகள் இல்லாமல் பிள்ளை பிடிக்க வேண்டி வந்த  சோகம்.  நடந்ததை நீங்க பகடி விட்டு மழுப்புறீங்க. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, tulpen said:

நல்ல நகைச்சுவை குமாரசாமி.

இதுக்கு மேலை முரண்டு பிடிக்க அங்கே என்ன இருந்தது. வாழ்ககை முழுக்க முரண்டு பிடிச்சு பிடிச்சே காலத்தை போக்கி  கடைசிலை முரண்டு பிடிக்கவே எதிரி அனுமதிக்காத அளவு நிலைமை இருந்தது. போராடவே போராளிகள் இல்லாமல் பிள்ளை பிடிக்க வேண்டி வந்த  சோகம்.  நடந்ததை நீங்க பகடி விட்டு மழுப்புறீங்க. 

சம்பந்தனும் சுமந்திரனும் தான் உங்களைப்போல ஆக்களுக்கு சரி.சத்தமும் கேளாது இரத்தமும் வராது வெளியிலையும் தெரியாது. ஆனால் தமிழ் சனம் கொஞ்சம் கொஞ்சமாய் குளோஸ். உங்களைப்போலை ஆக்களின்ரை விருப்பமும் அதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.