Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 10:21, விசுகு said:

ஆனால் இங்க  வந்த  பின்னர்

இது  தானா  வேலை??

அதை  செய்யமாட்டன்

இதை செய்யமாட்டன்  என்று சொல்லக்கூடாது

இதை  முதலிலேயே  சொல்லியிருந்தால்  இங்கே வந்திருக்கவே  மாட்டேன்

(அப்படி  பலர்  சொன்ன  அனுபவத்தால்)

வரமுதலே  சொல்லிவிடுவேன்

இதனால் ஒரு  விதானையார்  வராமல் விட்டு  விட்டார்

நானும் விசுகு ஐயாவைப் போல எப்படியான வேலைகள் கிடைக்கும். சூரியனைப் பார்க்காமலேயே எப்படி எனது நாள்கள் ஆரம்பத்தில் கழிந்தன என்று உண்மைகளைச் சொல்லியிருந்தேன். ஆனாலும் வருவதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நல்லது என்றும் சொல்லியிருந்தேன். வெளிநாட்டுக் காசில் வாழாமல் சொந்த உழைப்பில் வாழ, உழைப்பின் அருமை தெரிய வெளிநாடு வருவதுதான் நல்லது.

On 12/3/2021 at 19:34, யாயினி said:

இங்கிருப்பவர்களும் எப்போ 60-65 வயது வரும் வங்கி கார்ட்டை மட்டும் கொண்டு போனால் அங்கு ஜாலியாக வாழலாம் என்று தான் இருக்கிறார்கள்

நானும் அப்படித்தான் கடந்த கொரோனாக் காலத்தில் இருந்து யோசிக்கின்றேன். பதின்ம வயதுகளில் இருந்த ஊர் அந்நியமாக மாறியிருந்தாலும், குளிர், தனிமை இல்லாமல் அமைதியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கு.😁

  • Replies 101
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பிள்ளைகளை அங்கு வந்து இருக்குமாறு சொல்லமாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நானும் விசுகு ஐயாவைப் போல எப்படியான வேலைகள் கிடைக்கும். சூரியனைப் பார்க்காமலேயே எப்படி எனது நாள்கள் ஆரம்பத்தில் கழிந்தன என்று உண்மைகளைச் சொல்லியிருந்தேன். ஆனாலும் வருவதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நல்லது என்றும் சொல்லியிருந்தேன். வெளிநாட்டுக் காசில் வாழாமல் சொந்த உழைப்பில் வாழ, உழைப்பின் அருமை தெரிய வெளிநாடு வருவதுதான் நல்லது.

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல???

9 minutes ago, கிருபன் said:

நானும் அப்படித்தான் கடந்த கொரோனாக் காலத்தில் இருந்து யோசிக்கின்றேன். பதின்ம வயதுகளில் இருந்த ஊர் அந்நியமாக மாறியிருந்தாலும், குளிர், தனிமை இல்லாமல் அமைதியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கு.😁

இவ்வாறு நடக்கும் போது எமது ஒவ்வொரு ஊரும் பொருளாதார அளவில் முன்னேற வாய்ப்புண்டு.

முன்னர் சிங்கப்பூர் பென்சன்மார் வந்தது போல 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு எனது ஊரில் திரும்பி வர தொடங்கி இருக்கிறார்கள் அதேநேரம் சில முறைகேடான விடயங்களையும் ஊக்குவிப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 20:15, விசுகு said:

புலம்பெயர் தமிழர்கள் தமது காணிகளை சிங்களவருக்கோ இசுலாமியர்களுக்கோ விற்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதன் அர்த்தம் தமிழருக்கு விற்பனை செய்யுங்கள் என்பது தானே?

அந்த தமிழரும் சிங்களவருக்கு விற்று விட்டு வெளியேற போகிறார் என்றால் இப்பொழுதே சிங்களவருக்கே விற்பனை செய்ய வேண்டியது தானே?

எங்கள் ஊரில் வீட்டை யாழ்ப்பாணத்தில் வந்து தங்கி வேலை செய்யும் சிங்களவர்களுக்கு வாடகைக்குக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு முஸ்லிமுக்கோ, ஏன் வசதி குறைந்த தமிழருக்கோ கொடுக்கமாட்டார்கள்.

காணியை கடைசிமட்டும் வேறு ஊரவர்கள் வாங்கவே விடமாட்டார்கள். பின்னர் கண்டவன் எல்லாம் நாட்டாமை செய்ய வெளிக்கிட்டுவிடுவார்கள் என்று கட்டுக்கட்டாக காசை வைத்திருப்பவர்கள் உடனேயே வாங்கிவிடுவார்கள்.! ஆனால் பல வீடுகள் வெறுமையாக உள்ளன.  பலர் வெளிநாடு போய்விட்டார்கள். முதியவர்களும் போய்ச் சேர்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடைசியில் அரசாங்கம் கையகப்படுத்தவும் வாய்ப்பு இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல???

அவர் அதை சந்தோஷமாகச் செய்தால் சொல்ல எதுவுமில்லை. எல்லாமே தொழில்தானே. ஆனால் அவர் அதை எதிர்பார்க்காமல் வந்திருந்தால் ஒன்றில் அவரில் தவறு அல்லது அவரை கூப்பிட்டவர்களில் தவறு.

தலைக்கு மேல் கடன் இருந்தால் அவருக்கு வேறு வழியும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நான் கோபித்துக் கொண்டு போகின்றேன் என்று எங்கே சொல்லியிருக்கின்றேன்..? அப்படி கோபம் வரும் அளவுக்கு நீங்கள் பொதுவாக எழுதுவதும் இல்லை. நான் என் கருத்தை மீண்டும் மீண்டும் எழுதியிருப்பதால் திரும்பவும் எழுதும் அவசியம் இல்லை என்று தான் சொன்னான். கோபம் தாபம் எல்லாம் இல்லை

அது அகதிகள் குறித்த தவறான ஏளனமான விமர்சனம் என்பதால் அகற்றப்பட்டது. 

என் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறுவது ஒன்றுள்ளது. இன்று நாங்கள் இங்கு வந்து தமிழ் உணவு, இலங்கை மீன், தமிழ் வானொலி, மற்றும் தமிழ் கலைவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று அனுபவிக்க காரணமானவர்களின் கதைகள் மிகவும் ஆழமானது. வெறுங்கையுடன் வந்து தான் இன்று இந்தளவுக்கு முன்னேறி அதை நாங்களும் அனுபவிக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளனர். அகதிகளக வந்தவர்கள் போட்ட பாதையில் தான் இன்று நீங்கள் போய்க் கொண்டு இருக்கின்றீர்கள் என்று அடிக்கடி கூறுவது உண்டு.

இன்றும் எங்காவது படகு ஒன்றில் சிரிய அகதிகளோ அவுஸுக்கு போகும் அகதிகளோ கவிழ்ந்து இறக்கின்றனர் எனும் செய்திகள் வரும் போது பிள்ளைகளுக்கு மீண்டும் மீண்டுன் சொல்வதும் இதைத்தான்.

அகதியாக வருவது என்பது தரக்குறைவான ஒன்றல்ல. நான் ஸ்கில் மைக்கிறேசனில் வந்தவன் என்பதால் எந்தவிதத்திலும் அவர்களை விட ஒரு இஞ்ச் தானும் உயர்ந்தவனும் அல்ல.

நன்றி

யாழ்ப்பாணத்தில் நீதிவானாக இருந்தவர் ஜிம்மி ராஜரெத்தினம்.

இவர் பிள்ளைகள் அழைத்தார்கள் என்று கனடாவுக்கு குடி பெயர்ந்தார். ஆங்கிலம் நல்லா பேசுவியள், இங்க வந்தா, அந்த மாதிரி வேலை எடுக்கலாம் எண்டு சொல்ல, அவரும் வந்தார். 

கடைசி வரை வேலை எடுக்க முடியாமல், செய்த வேலை செக்யூரிட்டி. போவேர், வருவோர் எல்லாம், ஜட்ஜ் அய்யா எப்படி இருக்கிறியள், என்று கேட்க வெறுத்துப்போனார்.

ஆகவே, நிலைமை வேறு. கிருபனும், நிழலியும், IT யில் இருப்பதால், வேலை எடுப்பதை இலகுவானது என்று கருதக்கூடும்.

நானும், அதே துறையாயினும், அடிப்படையில் கணக்காளர் என்பதால், அடுத்தவர் அதுவும், பெரும் வியாபாரிகள் என்று கூறிக் கொண்டு திரிபவர் நிலையினை, எனது நண்பர்களான  அவர்களது கணக்காளர்களிடம் இருந்து, தெரிந்து கொள்வதால், நிலைமை என்ன என்று புரியும்.

இங்கே தமிழ் கடை காரர்கள் சொல்லிக் கொள்ளும் நிலைமையில் இல்லை. குறிப்பாக, கணக்கியல் என்பது, போஸ்ட்-மார்ட்டம் செய்வது போல. முதலே ஆலோசனைக்கு வர மாட்டார்கள். முடிந்த பின்னர், எங்கே பிழை என்று கிளறுவார்கள்.

நிழலி சொல்லும், விசா, மிகவும் கடினம். போட்டி கூடி விட்டது. சிங்களவரும் போட்டி போடுகின்றனர்.

அது மட்டுமல்ல. 28 வயதுக்கு உள் பட்டவர்களுக்கு காமன்வெல்த் working holiday visa என்று இரண்டு வருடங்களுக்கு கொடுப்பார்கள். அதனை, போட்டி (முண்டி அடித்தல்) காரணமாக இலங்கை, இந்தியாவுக்கு, பிரிட்டன் நிறுத்தி விட்டது. கனடா, அவுஸ்திரேலியா கொடுக்கக்கூடும். அதனை சொல்கிறாரோ தெரியவில்லை.

UK யில் கூட, ஓரளவுக்கு விசயம் தெரிந்தவர்கள், படிக்கும் மாணவர்களுக்கு சொல்லும் விடயம், வேலை தரக்கூடிய படிப்புகளை படியுங்கள் என்பதே. முக்கியமாக health (NHS) வேலைகள் உள்ளன.

இப்போது தாதிகளையும், டொக்டர்களையும் அழைக்கப் போகின்றனர். இது போன்ற துறையில் உள்ளவர்கள் வருவது சிறப்பு. வேலைகள் உண்டு.

சும்மா, ஏஜென்சி மூலம் வந்து, சூப்பர் மார்க்கெட்டில் filling செய்யவும், tim ஹார்ட்டனில் கோப்பித்தண்ணி விக்கவும் எண்டால், அந்த காசில், ஊரிலை ஒரு கடை போட்டு முதலாளியாக இருக்கலாம்.

2018ல் ஊருக்கு போன போது, யாழ்ப்பாணம் US ஹோட்டல், இடியப்பம், சொதி கொண்டு வந்து வைத்தவர், 30 லட்சம் கட்டி விட்டு, பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார். விக்கித்துப் போய் இருந்தேன்.

எப்படி உழைப்பீர்கள் என்று கேட்டேன், அண்ணர் கட்டினவர், லண்டனிலை அவரின் தமிழ் கடையில் வேலை செய்து உழைக்கலாம் என்றார். கேஸ் முடியும் வரை, வேலை செய்ய முடியாதே, என்று சொல்ல, ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார்.

அதனால் தான் சொல்கிறேன், உண்மையினை சொல்லுங்கள், இங்கே ஏதோ சொர்க்கபுரி என்று சொல்லாதீர்கள்.

பிரிட்டனில் வீதியால் நடந்து போன பெண்ணை, ஒரு போலீஸ் கராரே கடத்தி சென்று, பெண்ணின் உடல் தான் எடுத்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில், ஒரு கறுப்பரை, போலீஸ்காரர், கொலை செய்ததை உலகமே பார்த்தது.

ஆகவே, இலங்கையில், சிங்களவனிடம் இருந்து ஓடித்தப்புங்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

இக்கரைக்கு அக்கரை பச்சை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அவர் அதை சந்தோஷமாகச் செய்தால் சொல்ல எதுவுமில்லை. எல்லாமே தொழில்தானே. ஆனால் அவர் அதை எதிர்பார்க்காமல் வந்திருந்தால் ஒன்றில் அவரில் தவறு அல்லது அவரை கூப்பிட்டவர்களில் தவறு.

தலைக்கு மேல் கடன் இருந்தால் அவருக்கு வேறு வழியும் இருக்காது.

நான் வேலையின் தரத்தை குறிப்பிடவில்லை 

பட்டப்படிப்பை சொன்னேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கிருபனும், நிழலியும், IT யில் இருப்பதால், வேலை எடுப்பதை இலகுவானது என்று கருதக்கூடும்.

எனது கதை வேறு..

வந்து இறங்கியவுடனே “சம்மறி” காசு கட்ட உழைக்கவேணும் அல்லது பிறர் தயவில் வாழவேண்டும் என்ற நிலை. எனவே மூன்றாம் நாளே பேக்கரியில் பெட்டி செய்யவும், பாண் பொறுக்கவும், பின்னர் ஒவன் வெக்கையில் 12 மணித்தியாலம் (வாரத்தில் ஆறு நாட்கள்) இரண்டுபேர் செய்கிற வேலையை தனியச் செய்யவும் பழகியிருந்தேன். ஆனால் இதுவரை செய்த வேலைகளில் சந்தோசமான வேலை அதுதான்.

பின்னர் படிப்படியாக பேணி அடுக்குவது, பிக்கடில்லியில் கோப்பை கழுவுவது, சமைப்பது எல்லாம் செய்திருந்தேன். ஆனால் ஒரு போதும் காசு புழங்கும் இடத்தில் வேலை செய்ய சம்மதிக்கவில்லை. ஏனெனில் வரும்போது கொண்டுவந்த $50 டொலரே, ஏஜென்சிக்குக் கள்ளக்கணக்குக் காட்டி சேர்த்த காசு😆😎 

எந்த நிலையையும் சவாலாக எடுக்கவேண்டும், மனம் தளராமல் கடைசிமட்டும் போராடவேண்டும் என்பதை பெருமைமிக்க ஒருவர் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் நிலைப்பாட்டோடு எனக்கு முரண்பாடில்லை. ஆனால் உங்கள் கருத்தோடு தான் முரண்பாடு.

நீங்கள் எங்களுக்கு பல சகாப்தங்களுக்கு முன் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

ஆனால் நான் சந்தித்த அவ்வாறானவர்கள் தமது முன்னோர்கள் தவறிழைத்து விட்டதாகவே சொல்கிறார்கள்.

தமது பூர்வீக மண் மொழி கலாச்சாரத்தை விட்டு ஓடியதால் தாம் இன்று அவை அனைத்தையும் முற்றாக இழந்து எந்த அடையாளமும் அற்று வாழ வேண்டி இருப்பதாக சொல்கிறார்கள் 

சில சகாப்தங்களின் பின்னர் தவறாக இருக்கப் போகும் ஒரு பெரும் துயரை அவ்வாறு தான் எனது பரம்பரையை நான் நட்டாற்றில் விட்டுள்ளேன் என நானே உணரும் ஒரு துயரை எப்படி என் இனத்துக்கு என்னால் பரிந்துரைக்க முடியும்??

தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற முக்கியகாரணம்  இலங்கையரசு ,தமிழர் பகுதிகள் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயேயிருக்கின்றன. விரும்பாவிடினும்  தமிழர்கள்  இலங்கையரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பாடவேண்டும்.  

கல்வி...வேலைவாய்பபு..பாதுகாப்பு...மருத்துவம்...வீடடுவசதி....நீதி....எனபன  கிடைத்தால். ஏன  தமிழர்கள். நாட்டைவிடடு  வெளியேறுகிறார்கள்.. இலஙகையரசு  தமிழர்கள  வெளியேறும்படி  நடந்து வருகிறது...இந்த நிலையை தமிழர்களால்  மாற்றமுடியாது...மேலும் ஒர  தமிழ் குடும்பம்பெறும் பிள்ளைகள் ஒனறு அல்லது இரண்டு தான். பாரளுமன்றுறுப்பினர் எண்ணிக்கையும் பத்துக்குள் வரும்போல் தெரிகிறது .

இலங்கைத்தமிழர்கள் மூனறு ....நான்கு எனப்பிளளைப்பெறவேண்டும்....மலையகத்தமிழருடன் இணைந்து அரசியல்செய்து முப்பதுக்குமேல் பாரளுமனற உறுபபினர்கள் கிடைத்தல். தமிழர் நினைத்தபடி செய்யலாம். இப்படி தமிழர் பலமாகயிருத்தால். முஸ்லிமும் வந்து சேரலாம்.

உங்கள் விருப்பத்தை நான் நன்கு அறிவேன்.ஆனால் நடைமுறைப்படுத்த ஒர் அரசு|அரசியல்பலம் தேவை. உங்கள் கருத்தை வாசிக்கும்போது  நினைவுக்கு வந்த பழைய செய்தி.......பல ஆண்டுகளுக்கு முன் உகாண்டா  என்ற ஆப்பிரிக்கா நாட்டில்  வாழ்ந்த  இந்தியாரை 24|48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாணடாயரசு கூறியது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் 87|88 இல் மாட்டுப் பண்ணையில் வேலை செய்தேன் .முதலாளியின் மனைவி Docter. பின்னேரம் சேர்த்து சாப்பிடப்போவார்கள் .லீவு நாள்களில் அவளும் வேலை செய்வாள். இங்கே திருமணம் என்பது  ஆளைப்பார்த்து|குணத்தைப்பார்த்து செய்வார்கள். வேலையைப்பார்த்தில்லை.

2 hours ago, விசுகு said:

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற முக்கியகாரணம்  இலங்கையரசு ,தமிழர் பகுதிகள் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயேயிருக்கின்றன. விரும்பாவிடினும்  தமிழர்கள்  இலங்கையரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பாடவேண்டும்.  

கல்வி...வேலைவாய்பபு..பாதுகாப்பு...மருத்துவம்...வீடடுவசதி....நீதி....எனபன  கிடைத்தால். ஏன  தமிழர்கள். நாட்டைவிடடு  வெளியேறுகிறார்கள்.. இலஙகையரசு  தமிழர்கள  வெளியேறும்படி  நடந்து வருகிறது...இந்த நிலையை தமிழர்களால்  மாற்றமுடியாது...மேலும் ஒர  தமிழ் குடும்பம்பெறும் பிள்ளைகள் ஒனறு அல்லது இரண்டு தான். பாரளுமன்றுறுப்பினர் எண்ணிக்கையும் பத்துக்குள் வரும்போல் தெரிகிறது .

இலங்கைத்தமிழர்கள் மூனறு ....நான்கு எனப்பிளளைப்பெறவேண்டும்....மலையகத்தமிழருடன் இணைந்து அரசியல்செய்து முப்பதுக்குமேல் பாரளுமனற உறுபபினர்கள் கிடைத்தல். தமிழர் நினைத்தபடி செய்யலாம். இப்படி தமிழர் பலமாகயிருத்தால். முஸ்லிமும் வந்து சேரலாம்.

உங்கள் விருப்பத்தை நான் நன்கு அறிவேன்.ஆனால் நடைமுறைப்படுத்த ஒர் அரசு|அரசியல்பலம் தேவை. உங்கள் கருத்தை வாசிக்கும்போது  நினைவுக்கு வந்த பழைய செய்தி.......பல ஆண்டுகளுக்கு முன் உகாண்டா  என்ற ஆப்பிரிக்கா நாட்டில்  வாழ்ந்த  இந்தியாரை 24|48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாணடாயரசு கூறியது. 

இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்றால் எமது மக்கள் தாயகத்தில் கால் ஊன்ற வேண்டும். வெளிநாடுகளில் அல்ல.

இந்த நாடுகளில் அவர்களது மக்களை நாம் கல்வி பொருளாதாரத்தில் முந்தும் போது கிட்லர்கள் ஆட்சிக்கு வருவார்கள்

அமெரிக்காவில் கனடாவில் ஏன் பிரான்சில் ....

அடுத்த வரிசையில் அவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

தமிழர்களுககு ஒர் உறுதியான தீர்வு கிடைக்கபபெறுமானால். தமிழர்கள்  வெளியேறுவது. தானாகவே  நின்றுவிடும். வெளிநாடுகளில் வாழும் தமிழரும் குறிப்பிட்டளவில். நாடு திருமபலாம் .

மன்னிக்கவும் Kandiah57 நான் இரசித்த நகைச்சுவை இது.

1 hour ago, Kandiah57 said:

பல ஆண்டுகளுக்கு முன் உகாண்டா  என்ற ஆப்பிரிக்கா நாட்டில்  வாழ்ந்த  இந்தியாரை 24|48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாணடாயரசு கூறியது. 

உகாண்டாவில் வாழ்ந்த இந்தியாரை 24-48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாண்டா அரசு  சொன்ன சம்பவத்திற்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இலங்கை தமிழர்களுக்கும் என்ன தொடர்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு கருத்து எழுதுபவர்கள் இலங்கையில் இருக்க நினைப்பவர்கள் 1 வருடமாவது வாழ்ந்து பார்த்தால் ஏன் இங்குள்ள மக்கள் புலம்பெயர நினைக்கிறார்கள் என புரியும் அதாவது ஒரு வருடம் இலங்கையிலே நீங்கள் உழைத்தும் அதைசெலவு செய்ய வேண்டும் .
வந்து வாழ்ந்துவிட்டு கருத்து சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி இலங்கையில் வாழப்போகிறேன் என்று வந்தவர்கள் சிலர் மீண்டும் சென்றுவிட்டார்கள் , சட்டம் ஒரு தலைபட்சம்  , சமூகம்  வேறுபட்டது ( சூழல் நம்மவர்கள்)  கொடுக்கும் இடைஞ்சல்கள் இன்னும் சொல்லலாம்  

ராசன்! உங்கடை கதைய பாத்தால் ஏதோ நாங்கள் வேற்று கிரகத்திலை இருக்கிற மாதிரி கதை சொல்லுறியள்.😎 கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் நிமிடத்துக்கு நிமிடம் தங்கள் நாட்டு செய்திகளை கவனித்த வண்ணமே இருப்பவர்கள். பலர் தினசரி சொந்தங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். சில நேரம் செய்திகள் நீங்கள் அறிய முன்னர் புலம்பெயர் தேசங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். அதுவும் இப்போதெல்லாம் யூரியூப் வீடியோக்கள் மூலம் ஊர்மனைகள், வீதி நிலவரங்கள், மக்கள் நிலவரங்கள் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கின்றார்கள். தொழில் நிலவரங்களை சொல்கின்றார்கள். அபிவிருத்தி செய்த இடங்களை/ அபிவிருத்தி செய்யாத இடங்களை காண்பிக்கின்றார்கள். சிங்கள இடங்களையும் காட்டுகின்றார்கள்.👍🏽
நிற்க....✋🏽

என்னைப்போன்றவர்கள் உவ்விடம் இருக்கும் மட்டும் சொகுசாக வாழ்ந்தவர்கள் இல்லை. காணி பூமி இருந்தாலும் அதை பராமரிப்பதற்கு கஸ்ரப்பட்டவர்கள். எனது பார்வையில் நான் இங்கு பட்ட கஸ்ரம் ஊரில் படவில்லை.முதலாவது இந்த நாட்டுக்காரரே அஞ்சும் காலநிலை. மற்றது இதுவொரு அவசர உலகம். அன்பு பாசம் நட்பு எதுவுமே உண்மையானது இல்லை. பெற்ற தாயை தவிர மற்ற எல்லாவற்றையும் விலைக்கு வாங்கக்கூடிய கலாச்சாரம். பார்க்க வடிவான அழகான கலாச்சாரம். ஆனால் எதுவுமே உண்மையில்லை. இருண்ட வாழ்க்கை.நிம்மதியில்லாத வாழ்க்கை. உங்கே எனது ஊரில் இருப்பவர்களை எனக்கு தெரியும். என்னையும் அவர்களுக்கு தெரியும். ஆனால் இங்கு முன் வீட்டுகாரரையே எமக்கு தெரியாது. பழக்கங்களும் இருக்காது.தானுண்டு தனது வேலையுண்டு.

தொடரவோ? தொந்தரவோ? 😁
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

அண்மையில் லா சப்பல் தமிழ் உணவகத்தில் அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த எஞ்சினியர் ஒருவர் கோப்பை கழுவும் வேலை செய்வதை கண்டேன். என்னத்தை சொல்ல???

விசுகர்! ஒரு கொசுறு தகவல்.

நான் ஜேர்மனிக்கு வந்த புதிதில் வேலை செய்ய உரிமை இல்லை. தொழில் சம்பந்தமாக படிக்க உரிமை இல்லை. அவர்கள் தரும் 220 மார்க்கை வைத்து வாழ்க்கை ஓட்ட வேண்டும். ஆனால் கட்டாய வேலை என்று ஒரு வேலை இருந்தது. அது தான் சோசல் வேலை. மணித்தியாலம் 1 மார்க். அது கட்டாய வேலை.காலை 6மணிக்கு போக வேண்டும்.  8மணித்தியாலம் வேலை செய்யவேண்டும். வேலை என்று பார்த்தால் ரோட்டு கூட்டுதல்,விளையாட்டு மைதானம் துப்பரவாக்குதல்,புல்லு வெட்டுதல் இப்படி பல..... இதில் என்னுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இருவர் இலங்கை தமிழர் அதில் ஒருவர் கைதடி ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர் மற்றவர் யாழ் கச்சேரியில் நல்ல பதவியில் இருந்தவர். இருவரும் பழகுவதற்கு ஜாலியானவர்கள்.குடும்பஸ்தர்கள். பிள்ளைகளும் இருந்தனர்.வேலை செய்யும் போது விடாத லேடீஸ் லொள்ளுகளே இல்லை....செய்யும் வேலை கூட்டல் பெருக்கல் என்றாலும் உசாராக செய்தோம்.நான் சில வேளைகளில் இந்த வேலை உங்களுக்கு கஸ்டமில்லையா என கேட்பேன்.அவர்கள் சொல்லும் பதில் வெளிநாடுதானே எல்லாம் ஓகே தான் என்பார்கள்.

இதே மனோத்துவம் ஊரில் இருக்குமாயின் எவ்வளவு நல்லாயிருக்கும் என நான் ஆதங்கப்பட்டதுண்டு.

அவர்கள் அப்போதே ஜேர்மனியிலிருந்து ஆங்கில நாடுகளுக்கு   புலம்பெயந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மன்னிக்கவும் Kandiah57 நான் இரசித்த நகைச்சுவை இது.

உகாண்டாவில் வாழ்ந்த இந்தியாரை 24-48  மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு  உகாண்டா அரசு  சொன்ன சம்பவத்திற்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இலங்கை தமிழர்களுக்கும் என்ன தொடர்பு

தொடர்பா....அரச கட்டளைக்கு கிழ்படிதல். ...இலங்கையிலும்  ..தனி நபர்கள...குழுக்கள்  இலங்கையரசை  எதிர்து செயல்பட அனுமதியில்லை. .

உங்களுக்கு  விளக்கியுள்ளது. எனவே.  நகைச்சுவை யாகவுள்ளது. சிரித்து மகிழ்ச்சியாயருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்றால் எமது மக்கள் தாயகத்தில் கால் ஊன்ற வேண்டும். வெளிநாடுகளில் அல்ல.

இந்த நாடுகளில் அவர்களது மக்களை நாம் கல்வி பொருளாதாரத்தில் முந்தும் போது கிட்லர்கள் ஆட்சிக்கு வருவார்கள்

அமெரிக்காவில் கனடாவில் ஏன் பிரான்சில் ....

அடுத்த வரிசையில் அவர்கள் தான்.

எங்கள் பேரப்பிள்ளைகள் கல்வியில் ஒருபோதும் முந்த மாட்டார்கள்.  ஆனால் கிட்லர்கள் வரலாம். அது அனைத்து மக்களுக்கும் பாதிப்பை எற்ப்படுத்தும் . மக்கள் தாயகத்தில் கால்  ஊன்ற வேண்டுமானால்...ஒரு. யூரோ. பல  ருபாக்களாயிருக்கக்கூடாது.. ஒரு  ருபா.  பல யூரோக்களாயிருக்கவேண்டும். அப்போ  குமாரசாமியண்ணை. குறிப்பிட்ட  வேலையையும் அவர்கள் செய்வர்கள்.

குறிப்பு=நான் எனது மனதில் பட்டதை எழுகிறேன்  இங்கே.  நட்பு....சொந்தம்.   படித்தவர்....பணக்காரன்....என்று  பார்த்து  கருத்து எழுத முடியாது.வேறுபட்ட கருத்து உடையவர்களுக்குத்தான் கருத்துகளம் தேவை  அப்போ தான் சிந்தனை வளர்ச்சியும் எற்ப்படும் புதிய கருத்தும் உற்ப்பத்தியாகும். கருத்து ஒரு கணித வாய்ப்பாடு இல்லை  எனவே அனைவருக்கும்  ஒன்றாயிருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, Kandiah57 said:

நாங்கள் அப்ப ஒரு மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு வேலை செய்யேக்கை....
ஒரு ஜேர்மன் மார்க் சிலோன் காசுக்கு 8.50 போனது.எனக்கு அது நல்ல ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 21:58, நிழலி said:

எனக்கு மட்டும் ஊரில் இருக்கும் எல்லா இளவயது ஆட்களையும் கனடாவுக்கு அழைத்து வரக்கூடிய வசதி இருக்குமாயின், அனைவரையும் அழைத்துவரவே விரும்புவேன். 

இலங்கையில் இனி தமிழர்களுக்கு சுயமரியாதையுடன், சமமான உரிமைகளுடன் வாழ வாய்ப்புகள் இல்லை. முஸ்லிம்கள் போன்று சிங்கள மக்களுடன் அருகருகே வாழ்ந்து கூடிக் குலாவி வாழ விரும்பினாலும் கூட சிங்கள அரசுகள் அதற்கும் விடப்போவதில்லை. நீர்கொழும்பு சிலாபம் போன்ற பகுதிகளில் எப்படி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து இன அடையாளங்களை தொலைத்து வாழ்கின்றார்களோ அவ்வாறே வடக்கு கிழக்கு தமிழர்களை மாற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களுடன் செயற்பாடுகளில் சிங்கள அரசு ஆழமாக வேரூன்றி உள்ளது.

கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற கனவையும் கலைந்து போகச் செய்யும் வண்ணம்தான் அண்மைய அரச பணிகளுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்களம் செய்த அடாத்து வேலைகள் காட்டுகின்றன. தமிழ் அரசியல்வாதிகளின் சிங்களத்தின் திட்டங்களை பற்றிய புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசியல்வாதிகளை விட மோசமாக இயங்குகின்றனர்.

மலையக தமிழர்கள் சிங்கள மக்களுடன் மெதுவாக இரண்டறக் கலக்கத் தொடங்கி விட்டனர். கொழும்பு வாழ் தமிழர்களின் பிள்ளைகள் சிங்கள / ஆங்கில மொழி கல்வி பயின்று ஒன்றில் சிங்கள மக்களுடனோ அல்லது வெளினாடு வந்தோ பிழைத்து விடுவர். புலம்பெயர் மக்களின் அடுத்த தலைமுறைக்கு தாயக மக்களின் அவலங்கள் பற்றிய உணர்வு ரீதியான தொடர்பும் அற்றுப் போக வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் தனித்து விடப்படுவர். 

பலகோடிகள் சொத்து இருந்தாலும் அத்தனையையும் ஆக்கிரமிக்கின்ற, இல்லாமல் செய்கின்ற அதிகாரபலம் சிங்கள அரசுகளுக்கு மேலும் மேலும் அவர்களின் அரசியலமைப்பும் அரச இயந்திரமும்  சிங்கள பெரும்பான்மையினரி வாக்குப்பலமும் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சனனாயக ரீதியில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களால் எந்தளவுக்கு ஊரில் இருப்பவர்ளை வெளிநாடுகளுக்கு அழைக்க முடியுமோ அந்தளவுக்கு அழைக்க முயலுங்கள். 
 
உங்கள் கருத்துதான் என் கருத்தும் அங்கு இனி நிம்மதியற்ற வாழ்கையே, ஆன அவர்களை வெளியில் எடுப்பது சாத்தியமற்றது, அந்தளவுக்கு எமக்கு வசதியில்லை. எம்மால் சாத்தியமான ஒன்று அவர்களை படிப்பில் முன்னேற்றிவிடுவது, பல்கலை இல்லாவிட்டாலும் காசு கட்டி அங்கு படிக்கலாம், அதைவைத்து அவர்கள் இலங்கையா வெளிநாடா என விரும்பியபடி தெரிவு செய்து வாழ முடியும்.

போன வருடம் ஒரு பிள்ளையை எடுத்தேன், இந்த முறை இன்னொரு பிள்ளையை அதே மகளிர் இல்லத்தில் தத்தெடுத்து படிப்பிக்க போகின்றேன், ஒவ்வொரு வருடமும் ஒரு பிள்ளையை எடுக்கும் திட்டம் பார்ப்போம் இறைவன் விட்ட வழி,

படிப்பு அவர்களுக்கு நிலையான சொத்து, சமூகமும் முன்னேறும்,

வெளியில் அவர்களை எடுப்பதைவிட  அவர்களுக்கு தேவையான அடிப்படை  உணவும் படிப்பையும் கொடுத்தால் நன்று

அதை புலம் பெயர்ந்தவர்கள் நினைத்தால் தாராளமாக செய்யலாம், எமது சமூகத்தை படித்த சமூகமாக மாற்றலாம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

புதுசு புதுசா தண்ணீர் போட வெளிக்கிட்ட வையால் தென்னை,பனை எல்லாம் சோடை பத்தீட்டு என்று நினைக்கிறேன் தனி..

புரியலையே யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

உங்கள் பதிலேயே எல்லோரதும் அனுபவங்களும் பதிலும் இருக்கிறது 

நீங்கள் பணத்தை தேடுகிறீர்கள்

எங்களுக்கு கிடைக்காத பலதும் உங்கள் காலடியில் கிடக்கிறது என்கிறோம் நாம் 

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று 

தற்போது பலர் வெளிநாட்டை தேடுவது பணமாக இருந்தாலும் அவர்களும் அவர்களின் எதிர்கால சந்ததியினர் மதிப்புடனும் திறமைக்கேற்ப,கல்விதகமைக்கேற்ப வாழவும் நினைக்கலாம் அல்லவா. இலங்கையில் கல்வியில் பட்டம் முடித்தவர்கள் பலர் ஓரங்கட்டப்படுவதாலேயே பலர் வெளிநாட்டை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அப்படியானவர்கள் கல்வியை காரணம் காட்டி வெளியேறுகிறார்கள் .கல்வி அறிவு குறைந்தவர்கள் காசைக் கட்டியாவது வெளியேற நினைக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நாங்கள் அப்ப ஒரு மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு வேலை செய்யேக்கை....
ஒரு ஜேர்மன் மார்க் சிலோன் காசுக்கு 8.50 போனது.எனக்கு அது நல்ல ஞாபகம்.

அப்படியென்றால் குமாரசாமி ஐயா, இது ஜெர்மன் சுவர் விழ முதல், ஜெர்மன் ஈஸ்ட் / வேஸ்ட் ஒபென் விசா காலம். இது இலங்கையில் முதல் வெடி சத்தம் கேட்க முதலல்வா?     

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நாங்கள் அப்ப ஒரு மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு வேலை செய்யேக்கை....
ஒரு ஜேர்மன் மார்க் சிலோன் காசுக்கு 8.50 போனது.எனக்கு அது நல்ல ஞாபகம்.

ஓம்..நீங்கள் சொல்வது சரி 

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது பலர் வெளிநாட்டை தேடுவது பணமாக இருந்தாலும் அவர்களும் அவர்களின் எதிர்கால சந்ததியினர் மதிப்புடனும் திறமைக்கேற்ப,கல்விதகமைக்கேற்ப வாழவும் நினைக்கலாம் அல்லவா. இலங்கையில் கல்வியில் பட்டம் முடித்தவர்கள் பலர் ஓரங்கட்டப்படுவதாலேயே பலர் வெளிநாட்டை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அப்படியானவர்கள் கல்வியை காரணம் காட்டி வெளியேறுகிறார்கள் .கல்வி அறிவு குறைந்தவர்கள் காசைக் கட்டியாவது வெளியேற நினைக்கிறார்கள் .

சரியோ...பிழையோ.  ...ஒவ்வொரு மனிதனும்  முயற்ச்சியுடனிருக்கவேண்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, colomban said:

அப்படியென்றால் குமாரசாமி ஐயா, இது ஜெர்மன் சுவர் விழ முதல், ஜெர்மன் ஈஸ்ட் / வேஸ்ட் ஒபென் விசா காலம். இது இலங்கையில் முதல் வெடி சத்தம் கேட்க முதலல்வா?     

ஓம்......வெடிச்சத்தம் கேக்க முதல். DDR மதில் உடைய முதல் 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2021 at 03:17, குமாரசாமி said:

ராசன்! உங்கடை கதைய பாத்தால் ஏதோ நாங்கள் வேற்று கிரகத்திலை இருக்கிற மாதிரி கதை சொல்லுறியள்.😎 கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் நிமிடத்துக்கு நிமிடம் தங்கள் நாட்டு செய்திகளை கவனித்த வண்ணமே இருப்பவர்கள். பலர் தினசரி சொந்தங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். சில நேரம் செய்திகள் நீங்கள் அறிய முன்னர் புலம்பெயர் தேசங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். அதுவும் இப்போதெல்லாம் யூரியூப் வீடியோக்கள் மூலம் ஊர்மனைகள், வீதி நிலவரங்கள், மக்கள் நிலவரங்கள் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கின்றார்கள். தொழில் நிலவரங்களை சொல்கின்றார்கள். அபிவிருத்தி செய்த இடங்களை/ அபிவிருத்தி செய்யாத இடங்களை காண்பிக்கின்றார்கள். சிங்கள இடங்களையும் காட்டுகின்றார்கள்.👍🏽
நிற்க....✋🏽

அப்படியானால் இந்த 3 காலப் பகுதிக்குள் வேலை இல்லாத திண்டாட்டத்தினால் பிரதேச ரீதியாக இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் எண்ணிக்கையை சொல்லுங்கள் பார்க்கலாம். நாளை அவர்கள் பயிற்சிகள் முடித்து வெளியேறும் பொழுது நீங்கள் மாறி தூற்றுவீர்கள் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு தெரிவு முடிந்து விட்டது மின்னேரியா பயிற்சி முகாமுக்கு செல்ல கடிதத்திற்காக காத்திருக்கிறார்கள்.

நாளை அவர்கள் மாற்று கல்யாணம் ஒன்றை கட்டலாம் எதிர்வு கூறலே ஏனென்றால் பிறப்பு அத்தாட்சி பத்திரம் பரிசோதனை நான் செய்யும் போது அப்பா சிங்களம் அம்மா தமிழராக இருக்கும் சந்தர்ப்பத்தை அதிக தடவை பார்த்து இருக்கிறேன் இவர்கள் சேவைக்காக வடகிழக்கிற்கு வந்தவர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.