Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்கான சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்க திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்தால் ரூ.8200 அபராதம்! | Denmark the latest  European country to bans burqa and niqab

புர்கா அணிய தடை: இலங்கை அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை | parliamentary  committee recommended sri lankan government to ban to wear burga

புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்கான சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்க திட்டம்

புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என  அவர் தெரிவித்துள்ளார்.

முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும் என்றும் இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம் என்பதுடன், ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதுபோன்ற காரணங்களுக்காகவே முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/புர்கா-உட்பட-முகத்தை-முழ/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழிற்சாலையில் தொழில் பார்க்கும் பெண்களுக்கான பாதுகாப்புப் பற்றிப் பெரிதாக அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.

நீளமான ஆடை அணிந்து வந்திருந்தால், இயங்கும் இயந்திரங்களுக்கு அருகே செல்லவேண்டாம்.

குட்டையான ஆடை அணிந்து வந்திருந்தால், இயந்திர இயக்குனர்களுக்கு அருகே செல்லவேண்டாம்.🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்குத் தடை

1-2-1.jpg
 40 Views

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர்  நாள் அன்று, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

தேசிய தௌஹித் ஜமாஆத் என்னும் அமைப்பே, இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து தற்காலிகமாக   இலங்கையில் புர்கா ஆடை, மதரசா பாடசாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மிக வேகமாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, புர்கா ஆடைக்கான தடை விதிக்கும் அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்கு இனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும். விரைவில் இந்த ஆணை அமலுக்கு வரும்  என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கையில் இயங்கும் மதரசா பாடசாலைகளையும் விரைவில் தடை செய்யவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=44566

 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

ஒரு தொழிற்சாலையில் தொழில் பார்க்கும் பெண்களுக்கான பாதுகாப்புப் பற்றிப் பெரிதாக அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.

நீளமான ஆடை அணிந்து வந்திருந்தால், இயங்கும் இயந்திரங்களுக்கு அருகே செல்லவேண்டாம்.

குட்டையான ஆடை அணிந்து வந்திருந்தால், இயந்திர இயக்குனர்களுக்கு அருகே செல்லவேண்டாம்.🤣

 

அடேங்கப்பா....! இதை எழுதியது நம்ம பாஞ்ச் ஐயாவா? 😁

  • கருத்துக்கள உறவுகள்

https://sptnkne.ws/FBvX

Sri Lanka Moves to Ban Burqas, Shut Down Over 1,000 Islamic Schools

ASIA & PACIFIC

13:24 GMT 14.03.2021https://sptnkne.ws/FBvX

by Andrei Dergalin

3216

Subscribe

Commenting on the impending burqa ban, Sri Lanka’s Minister of Public Security Sarath Weerasekara argued that the garment “has a direct impact on national security”.

Authorities in Sri Lanka have announced their intent to ban the wearing of burqas in the country.

According to AP, Sri Lanka’s Minister of Public Security Sarath Weerasekara said that he has signed a paper seeking the approval of the Cabinet of Ministers to ban burqas, insisting that the garment in question "has a direct impact on national security".

"In our early days, we had a lot of Muslim friends, but Muslim women and girls never wore the burqa," Weerasekara said. "It is a sign of religious extremism that came about recently. We will definitely ban it."

The minister also said that the government is going to ban over 1,000 Islamic schools, known as madrassas, arguing that they are not registered with the authorities and do not follow the national education policy.

© PHOTO : PIXABAY

Will Switzerland Forbid Face Veils in Public? All You Need to Know About 'Burqa Ban' Referendum

In 2019, the wearing of burqas in Sri Lanka was temporarily banned following the deadly terrorist bombings in churches and hotels that claimed the lives of over 260 people on Easter Sunday that year.

As the media outlet points out, Muslims comprise approximately 9 percent of Sri Lanka’s 22 million population, with Buddhists accounting for over 70 percent and ethnic minority Tamils, "who are mainly Hindus", comprising about 15 percent.

 

Edited by Kapithan

தனிப்பட்ட ரீதியில் முழுக்க மூடும் ஆடை என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று நம்பினாலும்  இந்த சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆள் அடையாளங்களை காண்பிக்க வேண்டிய இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இவர்கள் இவ்வாறு ஆடை அணிவதை தடுப்பது என்பதும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான ஒரு சட்டமே. கவர்ச்சிகரமான ஆடைகள் அணிய விரும்புகின்றவர்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம், உரிமை முழுக்க மூடி ஆடை அணிவதற்கும் இருக்க வேண்டும்.

புர்கா அணிந்தவர்களை விட மிக மோசமான இனவாதிகளாக பிக்குகளே உள்ளனர். அவர்களின் காவி உடைதான் இலங்கையில் மிக மோசமான ஆடை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

புர்கா அணிந்தவர்களை விட மிக மோசமான இனவாதிகளாக பிக்குகளே உள்ளனர். அவர்களின் காவி உடைதான் இலங்கையில் மிக மோசமான ஆடை.

9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை -ஞானசார தேரர் அதிரடியாகக்  கருத்து – குறியீடு

ஆமா... ஆமா.... கமக்கட்டு மயிரை, காட்டுவது உலகெங்கும் அருவருப்பாக பார்க்கப் படுகிறது.
பிக்குகள், அதனை சர்வ சாதாரணமாக.... 
யாருக்கு நிறைய உள்ளது என்று  பெருமையாக காட்டுவார்கள்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

தனிப்பட்ட ரீதியில் முழுக்க மூடும் ஆடை என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று நம்பினாலும்  இந்த சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆள் அடையாளங்களை காண்பிக்க வேண்டிய இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இவர்கள் இவ்வாறு ஆடை அணிவதை தடுப்பது என்பதும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான ஒரு சட்டமே. கவர்ச்சிகரமான ஆடைகள் அணிய விரும்புகின்றவர்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம், உரிமை முழுக்க மூடி ஆடை அணிவதற்கும் இருக்க வேண்டும்.

புர்கா அணிந்தவர்களை விட மிக மோசமான இனவாதிகளாக பிக்குகளே உள்ளனர். அவர்களின் காவி உடைதான் இலங்கையில் மிக மோசமான ஆடை.

காவியும் , கறுப்பும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல தற்போதுள்ள காலங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

காவியும் , கறுப்பும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல தற்போதுள்ள காலங்களில் 

அல்லேலூயா is missing here 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அல்லேலூயா is missing here 😂

அவர்கள் வேற லிஸ்டில 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அடேங்கப்பா....! இதை எழுதியது நம்ம பாஞ்ச் ஐயாவா? 😁

ஏன் சாமி! ஐயாக்களுக்குத்தான் அனுபவம் கூட. ஐம்பதுக்கு மேலேயும் ஆசை வருமாம். பாட்டுக் கேக்கலையோ! அதுவும் வாரத்திலை இரண்டுதரம் ஆசைப் பட்டால் மாரடைப்பு ஐம்பது வீதம் வராதாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

"In our early days, we had a lot of Muslim friends, but Muslim women and girls never wore the burqa," Weerasekara said. "It is a sign of religious extremism that came about recently. We will definitely ban it."

அப்போதைய முஸ்லீம்கள்  புர்கா அணிவதில்லையா ?

45 minutes ago, பெருமாள் said:

அப்போதைய முஸ்லீம்கள்  புர்கா அணிவதில்லையா ?

இல்லை 

தலையை மட்டும் கலர் துணிகளாலான முக்காடு அணிந்து மூடியிருப்பர். கறுப்பு நிறத்தால் முழுக்க மூடும் பழக்கம் 90 களின் பின் அரேபிய கலாச்சார தாக்காத்தாலும் தம்மை தனி ஒரு இனமாக காட்ட வேண்டிய தேவையினாலும் உருவானது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அப்போதைய முஸ்லீம்கள்  புர்கா அணிவதில்லையா ?

எனக்கு ஒரு லெபனான் முஸ்லிம் குடும்பத்தை ஒரு கிரீஸ்சை சேர்ந்த ஆனால் துருக்கி இன முஸ்லிம் குடும்பம் தெரியும் அவர்கள் தலையை மூடுவதில்லை.சாதாரண ஆட்கள் மாதிரி.👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இல்லை 

தலையை மட்டும் கலர் துணிகளாலான முக்காடு அணிந்து மூடியிருப்பர். கறுப்பு நிறத்தால் முழுக்க மூடும் பழக்கம் 90 களின் பின் அரேபிய கலாச்சார தாக்காத்தாலும் தம்மை தனி ஒரு இனமாக காட்ட வேண்டிய தேவையினாலும் உருவானது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நவீன எழுச்சியின் பின்னர் இது நடக்கிறது. குறிப்பாக 9/11 இற்குப் பின்னர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிலகாலம் கம்பகாவில் வாழ்ந்திருக்கிறேன் இஸ்லாமிய பாடசாலை என்பதால் வயதுக்கு வந்த மாணவிகள் மட்டும் தலையை மூடிக்கொண்டு செல்வார்கள்... பின்பு சனி ஞாயிறு நாட்களில் எங்களை போல சாதாரணமாகவே திரிவார்கள். இந்த கருப்பு சட்டையை நான் இலங்கையில் இருந்த பொது எங்கும் கண்டது இல்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியை நோக்கி பயணிக்கின்றது- முஜிபுர் ரஹ்மான் ! -  YouTube

புர்காவை தடை செய்வதால் மேலும் பிரச்சினைகள் தீவிரமடையும்- முஜிபுர் ரகுமான்

புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை ஒருபோதும் தணியப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புர்கா விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முஜிபுர் ரகுமான் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும்.

அரசாங்கத்தின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை.

அதேவேளை புர்கா என்பது மதரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் அதுகுறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்க முடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது.

அத்துடன் அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணியவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மத ரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப் போக்குடைய சிந்தனையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/புர்காவை-தடை-செய்வதால்-ம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.