Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…!

கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்!

மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..!

வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? 

விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை!

நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்!

அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை!

சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்!

தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்!

கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்!

அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்!

என்ன பிடிக்கிறாய் அந்தோனி

எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே

பொத்திப் பொத்திப் புடி அந்தோனி

பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே

அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!!

ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்!

சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது!

கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்!  நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்!

இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது!

அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப்  போல நீ வலசை போக வேண்டும்?

அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு!  அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! 

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த  தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு!

தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே?

அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது!

சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! 

தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்!

எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை!  மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில்  வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி  வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை  நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது  இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்!

சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்!

இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது!

அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு!

அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு!

எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்!

கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்!

காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்!

இன்னும் வரும்....!

  • கருத்துக்கள உறவுகள்

மண்வாசணை அந்த மாதிரி துக்குது.தொடருங்கள் நின்ட இடைவெளி இல்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்

 நிறைய அறிய முடியாத விடையங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் அறிய கூடியதாக இருக்கிறது..  ஒவ்வொன்றுக்கும் குடுக்கும் வர்ணணை திரும்ப, திரும்ப வாசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.🙂🤭👋

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும்  வாசிக்க ஆவலாக உள்ளேன் 

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரைக் காற்று முகத்தில் அறையுது அது சுகமாக இருக்குது.........தொடருங்கள் புங்கை.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

   தொடருங்கள்   படிக்க . காத்திருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரையும் காதல்கதையும் மிக அழகான வர்ணனைகளும் மிக அருமை தொடருங்கள் புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்!

கருவாட்டுக்கு உண்மையான காவலன் பூனை.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2021 at 10:12, புங்கையூரன் said:

அருமை தொடருங்கள்.. அழகான அந்த ஊரை கற்பனையும் உண்மையும் கலந்து வர்ணனையாக கடலில் மிதந்து தாலாட்டுகிறது  உங்கள் படைப்பு.(பழய காற்றுப்போல் 

இல்லாமல்) வாழ்த்துக்கள்.தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2021 at 20:12, புங்கையூரன் said:

இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது  இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்!

அருமை வாசிக்க வாசிக்க கடற்கரை காட்சி கண் முன்னே வந்து காதாபாத்திரங்கள்  மனகண்ணில் காட்சி தருகின்றன 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2021 at 21:54, சுவைப்பிரியன் said:

மண்வாசணை அந்த மாதிரி துக்குது.தொடருங்கள் நின்ட இடைவெளி இல்லாமல்.

நன்றி....சுவைப்பிரியன்!

On 15/3/2021 at 02:30, யாயினி said:

 நிறைய அறிய முடியாத விடையங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் அறிய கூடியதாக இருக்கிறது..  ஒவ்வொன்றுக்கும் குடுக்கும் வர்ணணை திரும்ப, திரும்ப வாசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.🙂🤭👋

வணக்கம், யாயினி!

உங்கள் ஊக்கமும், ஆக்கமும் என்றும் குறைந்ததேயில்லை!

மிக்க நன்றி....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.