Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூயஸ் கால்வாயில் டிராபிக் ஜாம்.. 400 மீட்டர் ராட்சத கப்பல் தரைதட்டியது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்

அப்பாடா.... இந்தக்கிழமை, கறிக்கு கருவேப்பிலை வந்துடும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அப்பாடா.... இந்தக்கிழமை, கறிக்கு கருவேப்பிலை வந்துடும். 🤣

தமிழ் சிறியணணை இனி அடிக்கடி  கப்பல் தரை தட்டும் .எனவே  கருவேப்பிலையை மொத்தமாக வேண்டி பெடி செய்து வையுங்கள்(இப்படி தரை தடடினால் தான் தமிழ்கடைகள் சாமன் விலையை உயர்நத முடியும் அலலது விலை அப்படியேயிருக்க நிறையைக் குறைக்கலாம்.)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அப்பாடா.... இந்தக்கிழமை, கறிக்கு கருவேப்பிலை வந்துடும். 🤣

இப்போ கொரோனாமட்டும் இல்லையென்றால்...உடையாரின் இந்தச் செய்தியைச் சில மணித்துளிகளில் அறியத்தந்த தமிழ் சிறியின் குடும்பத்தையே, கைவசம் இருக்கும் கருவேப்பிலை மணம் கமகமக்கும் கறிகளுடன், அண்ணி விருந்துக்கே அழைத்திருப்பார்.😋

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

தமிழ் சிறியணணை இனி அடிக்கடி  கப்பல் தரை தட்டும் .எனவே  கருவேப்பிலையை மொத்தமாக வேண்டி பெடி செய்து வையுங்கள்(இப்படி தரை தடடினால் தான் தமிழ்கடைகள் சாமன் விலையை உயர்நத முடியும் அலலது விலை அப்படியேயிருக்க நிறையைக் குறைக்கலாம்.)

கந்தையா அண்ணை.... பல வருடங்களுக்கு முன்பு,

இங்கு ஒரு தமிழ்க் கடையில்... மேலே உள்ள திகதியையும் கூட்டி, பில் போட்டு... காசு வாங்கி விடுவார். 😂

2 hours ago, Paanch said:

இப்போ கொரோனாமட்டும் இல்லையென்றால்...உடையாரின் இந்தச் செய்தியைச் சில மணித்துளிகளில் அறியத்தந்த தமிழ் சிறியின் குடும்பத்தையே, கைவசம் இருக்கும் கருவேப்பிலை மணம் கமகமக்கும் கறிகளுடன், அண்ணி விருந்துக்கே அழைத்திருப்பார்.😋

பாஞ்ச் அண்ணை, கப்பல் இப்ப தானே...  எகிப்தில் இருந்து கிழம்பியிருக்கு.

”ஹம்பேர்க்” துறைமுகத்துக்கு வந்தவுடன், கருவேப்பிலை போட்டு விருந்து வைக்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அப்பாடா.... இந்தக்கிழமை, கறிக்கு கருவேப்பிலை வந்துடும். 🤣

அண்ணெய்  கறிவேப்பிலை பிளைட்டில் வரும் பொருள். கப்பலில் என்றால் 28 நாட்களின் பின்புதான் வந்து சேரும் . ஊர் கறிவேப்பிலை இங்குள்ள ஒரேஞ் பழ மரமும் அண்ணன்  தம்பி  உறவு முறையாம் ஒரே குடும்பத்து ஆட்களுக்கு சில விசேஷ வியாதி பச்சையம் என்ற இலை  சுருட்டி நோய் இந்த கறிவேப்பிலையில் இன்னும் நமது ஆசிய பகுதிகளில் இருக்குது அந்த நோய்  தம்பிக்கு இலகுவாக ஐரோவில்  பரவி முன்பு ஒரேஞ் தோட்டங்கள்  அழிந்தது  வரலாறு பில்லியன்கணக்கில் அழிவு நடந்தது அதுக்காகத்தான்  ஐரோவில் தடை பண்ணி இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

தரைதட்டிய கப்பலை மீட்கும் பணி

இந்த படம் எனக்கு சீமானை நினைவுக்கு கொண்டுவருகிறது 
"எத்தனை ஜி வந்தாலும் சோறு விவசாஜி தான் ராசா போடணும்"

என்ன தான் தொழிநுட்பம் வளர்ந்தாலும் 
பட்டம் படிப்பு என்று சிலர்  தலைக்கனம் கொண்டு ஆடும்போது உலகின் 
அடிமட்ட இயங்கு நிலை பலருக்கு புரிவதில்லை 

இன்று இந்த உலகின் முக்கிய ஏற்றுமதி இறக்குமதி 
இந்த மண்ணை கிண்டும் தொழிலாளியின் கையில் சிக்குண்டு இருக்கிறது 
இவருடைய வேலை திறனின் பலனை எதிர்பார்த்து பல பில்லியன் டாலர் 
ஏற்றுமதி இருக்குமதி சந்தை சரிவு/ வீழ்ச்சி கண்டிருக்கிறது. 

துப்பரவு தொழிலாளி இல்லை என்றால் 
நீங்கள் வாழும் நகரை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள் 
எமது வாழ்க்கைக்காக பலரும் இரவும் பகலும் உழைத்து கொண்டிருக்கிறார்கள் 
என்பதையும் எமது அன்றாட வாழ்க்கையே அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதையும் 
மறப்பவன் மனித அறிவுடையவனாக இருக்க சாத்தியம் இல்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

அண்ணெய்  கறிவேப்பிலை பிளைட்டில் வரும் பொருள். கப்பலில் என்றால் 28 நாட்களின் பின்புதான் வந்து சேரும் . ஊர் கறிவேப்பிலை இங்குள்ள ஒரேஞ் பழ மரமும் அண்ணன்  தம்பி  உறவு முறையாம் ஒரே குடும்பத்து ஆட்களுக்கு சில விசேஷ வியாதி பச்சையம் என்ற இலை  சுருட்டி நோய் இந்த கறிவேப்பிலையில் இன்னும் நமது ஆசிய பகுதிகளில் இருக்குது அந்த நோய்  தம்பிக்கு இலகுவாக ஐரோவில்  பரவி முன்பு ஒரேஞ் தோட்டங்கள்  அழிந்தது  வரலாறு பில்லியன்கணக்கில் அழிவு நடந்தது அதுக்காகத்தான்  ஐரோவில் தடை பண்ணி இருக்கினம் 

உந்த கருவேப்பிலையை முக்கியமான சாமான் எண்டு ஆர்தான் புலம்பெயர்மக்களுக்கு போதிச்சினமோ தெரியேல்லை? 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த கருவேப்பிலையை முக்கியமான சாமான் எண்டு ஆர்தான் புலம்பெயர்மக்களுக்கு போதிச்சினமோ தெரியேல்லை? 🤣
 
ஊரில் இருக்கும்மட்டும் வீட்டில் அடுப்படி எந்த  திசைபக்கம் இருக்கெண்டு தெரியாத கூட்டம்   இங்குவந்து சமையல் பழகியதால் வந்த வினையாய் இருக்கும்  .😁 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

இன்று கடலோடும் நாள் முழு பவுர்ணமி பலரும் எதிர்பார்க்கிறார்கள் இன்று தவறினால் அரோகரா 

ஸ்பெயினில் சோதனை வளர்ப்பு கறிவேப்பிலை  வெற்றியடைந்து உள்ளது ஏற்கனவே வட்டக் கத்தரிக்காய் போன்றவை அங்கிருந்து வரதொடங்கி விட்டது இனி தம்புள்ள  இரசாயன வட்டக் கத்தரிக்காய் தேவைப்படாது சிங்களவர்களே சாப்பிட்டு மோட்ஷம் அடையட்டும் .

தம்புள்ள மரக்கறி வேண்டாம் சரி.ஆனால் எமது தாயக மக்க் தமது உ;ப்பத்தியை சந்தைப்படுத்த மடியாமால் சிரமப் படுகிறாரகள.
அவர்களுக்கு ஒரு வளியை ஏற்ப்படுத்தலாமே.ஆனால் என்ன எல்லா மரக்கறிகளும் இராசாயன மருந்தில் முக்கி எடுக்கப்பட்டவை.😯

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

தம்புள்ள மரக்கறி வேண்டாம் சரி.ஆனால் எமது தாயக மக்க் தமது உ;ப்பத்தியை சந்தைப்படுத்த மடியாமால் சிரமப் படுகிறாரகள.
அவர்களுக்கு ஒரு வளியை ஏற்ப்படுத்தலாமே.ஆனால் என்ன எல்லா மரக்கறிகளும் இராசாயன மருந்தில் முக்கி எடுக்கப்பட்டவை.

எங்கடை வடக்கு கிழக்கு விவாசாய உற்பத்தி மட்டுப்படுத்தப்ட்ட அளவிலே இருக்கு இந்தியாவில் இருந்து வெங்காய ஏற்றுமதி தடையை கொண்டுவந்தது இந்த மோடி அரசு .ஊரில் இருந்து கிழமைக்கு 400 கிலோ சிறிய வெங்காயம் எடுக்க முடியவில்லை என்று கவலைப்பட்டார் இங்கு இறக்குமதி செய்யும் நண்பர் அதனால் கெனியாவில் இருந்துவரும் பிடிவெங்காயம் வந்து இறங்கியது தற்போது அந்த வெங்காயம் பாவித்து பழகியவர்கள் மற்றையதுக்கு  மாற தயக்கம் காட்டுகிறார்களாம் காரம் கூடியது முக்கிய காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

ஏறக்குறைய எகிப்தின் சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

ever.jpg

சுமார் ஒரு வாரமாக ஒரு கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியிருந்தது. 

எனினும் 400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொண்ட எவர் கிவன் என்ற குறித்த கப்பல் திங்களன்று அகழ்வாராய்ச்சி மற்றும் இழுபறி படகுகளின் உதவியுடன் சிக்கலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையினால் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்து மீண்டும் ஆரம்பாகியுள்ளது.

பனமேனியக் கொடியிடப்பட்ட சரக்குக் கப்பலான எவர் கிவன் கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்தின் சூயஸ் கால்வாய் எதிர்பாராத விதமாகத் சிக்குண்டது.

200,000 டொன் எடையுள்ள கப்பலை விடுவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் முன்னர் தோல்வியடைந்தன.

இதனால் மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைக்கும் கால்வாய் வழியாகச் செல்ல நூற்றுக்கணக்கான (369) கப்பல்கள் காத்திருந்தன.

இந் நிலையில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 04:40 மணிக்கு மீட்புக் குழுக்களால் கப்பல் சிக்கலிலிருந்து விடுவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

அதன் பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட நீர்வழி பாதை மாலை 6 மணிக்கு மீண்டும் தொடங்குவதாக சூயஸ் கால்வாய் ஆணையம் அறிவித்தது. 

உள்ளூர் நேரம், வர்த்தக வழியை மறுதொடக்கம் செய்வது பாரிய கப்பல் மற்றும் வர்த்தக தாமதங்களைத் தூண்டியது.

சூயஸ் கால்வாய் உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றாகும்.

224,000 டொன், 400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொள்கலன் கப்பலா எவர் கிவன், சீனாவிலிருந்து நெதர்லாந்திற்கு செல்லும் வழியில் பலத்த காற்று மற்றும் மணல் புயல்களினால் பாதிக்கப்பட்டு கால்வாயில் சிக்குண்டது.

உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம், சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் சுமார் 8 சதவீத திரவ இயற்கை எரிவாயு ஒவ்வொரு நாளும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன.

கால்வாயின் வருவாய் ஒவ்வொரு நாளும் 14- 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொடுக்கிறது. தொற்றுநோய்க்கு முன்னர், சூயஸ் கால்வாய் வழியாக வர்த்தகம் எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத பங்களிப்பினை வழங்கியதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி சனிக்கிழமை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

udaya1.jpg

https://www.virakesari.lk/article/102977

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சையும் அதுதான் குறுக்காலை நிக்கிது....😂

Bild

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையும் அதுதான் குறுக்காலை நிக்கிது....😂

Bild

கம்பெனியை... உலக அளவில், இலவசமாக விளம்பரப் படுத்த... இப்படி குறுக்கே நிற்பாட்டி இருப்பார்களோ... 😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கம்பெனியை... உலக அளவில், இலவசமாக விளம்பரப் படுத்த... இப்படி குறுக்கே நிற்பாட்டி இருப்பார்களோ... 😂

அண்ணெய்  எவர் கிரீன்  கொண்டயினர்  அதை சுமந்த கப்பலின் பெயர் எவர் இவன் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  எவர் கிரீன்  கொண்டயினர்  அதை சுமந்த கப்பலின் பெயர் எவர் இவன் .

பெருமாள்.... Ever Given  கப்பலில், 
அதிகமாக,  பச்சை நிறத்தில்... Ever Green  கொண்டயினர் உள்ளதை கவனித்தீர்களா.  
இவர்கள் வேணுமென்றே செய்துள்ளார்கள் போலுள்ளது. 🤣

டிஸ்கி: சும்மா... பீதியை, கிளப்பி விடுவம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

இந்த மூன்றையும்... ஓடிக் கொண்டு போனது, ஒரே ஆளாம்.  😂 🤣 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த மூன்றையும்... ஓடிக் கொண்டு போனது, ஒரே ஆளாம்.  😂 🤣 😜

கப்பலில் வேலை செய்தவர்கள் தொடக்கம் கப்டன் வரைக்கும் கிந்தியர்களாம்.😎

சொட்டா...சொட்டா பட்  படா ஜிந்தா பாத் 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.