Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு வெற்றி? -ஜூனியர் விகடன் மெகா தேர்தல் கருத்துக்கணிப்பின் முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூனியர் விகடன் தேர்தல் மெகா சர்வே முடிவுகள்:

ஜூனியர் விகடன் சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படும் விதிகளின் அடிப்படையில் செய்த கருத்துக்கணிப்பின் சாராம்சம் இது. இந்த மெகா கருத்துக்கணிப்பில் நிகழ்ந்த சுவாரசியமான விடயங்களுக்கும் ஒவ்வொரு தொகுதிவாரியான கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் ஜூனியர் விகடனை பார்க்கவும்.

---------

ஊர் கூடித் தேர் இழுத்திருக் கிறோம். நமக்குக் கிடைத்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வாசகர்கள் முன்பாக சமர்ப்பிக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில், பணம் ஒரு பிரதான பங்கு வகிக்கும். சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘எந்த அடிப்படையில் வாக்களிப்பீர்கள்’ என்ற கேள்விக்கு ‘பணம்’ என்ற பதிலை 10 சதவிகிதம் பேர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இல்லத்தரசிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், திருநங்கைகள் எனப் பல்வேறு தரப்பிலும் சுமார் 50,000 வாக்காளர்களிடம் இந்த மெகா கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?

 

 
மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?
 
மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?
 
 
 

தேர்தலுக்குப் பத்து நாள்கள் முன்பாக முடிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இது. கடைசி நேரப் பண விநியோகம், சர்ச்சைப் பேச்சுகள், அவதூறுகள் போன்றவை கள நிலவரத்தை இறுதி நேரத்தில் சில தொகுதிகளில் மாற்றலாம். ஆனாலும், மாற்றம் வேண்டுமென்பது மட்டும் ‘கணீர்’ குரலாக தமிழகம் முழுவதும் ஒலிப்பதில் மாற்றம் இருக்காது என்பதை இந்த ஜூ.வி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெளிவாக உணர்த்துகின்றன.

Junior Vikatan - 04 April 2021 - மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி? | mega survey result Tamil Nadu assembly election 2021 - Vikatan

Junior Vikatan - 04 April 2021 - சென்னை - திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு | 2021 - Tamil Nadu Assembly Election survey Chennai thiruvallur districts - Vikatan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் கணிப்பு மூலம் கருத்துத் திணிப்பு: தொண்டர்களுக்கு மடல் எழுதும் இபிஎஸ், ஓபிஎஸ்

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடக்கும் பொய்ப்பிரசாரங்களால் மக்கள் தங்களின் கழக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தொண்டர்களுக்கு திறந்த மடல் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ள மூன்று பக்க கடிதத்தை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.

அதில், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தேர்தல் களத்தில் கண்ட தேர்தல் தொடர் வெற்றியைப் போல அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர் வெற்றிகளைப் பெற தொண்டர்கள் காட்டும் உழைப்பையும் விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து திகைத்துப் போயிருப்பதாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூறியுள்ளனர்.

எடப்பாடி அரசு ஒரு நாள் தாங்குமா? ஒரு வாரம் ஓடுமா? இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்து விடும், இரண்டு மாதத்தில் கவிழ்ந்து விடும், ஆறு மாதத்தில் கவிழும், தீபாவளிக்குள் போய்விடும் என ஆருடம் கூறியவர்களின் மனக்கோட்டைகளைத் தகர்த்தெறிந்து, அவற்றை எல்லாம் தாண்டி மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் சிறந்த ஆட்சியை கொடுத்து தலை நிமிர்ந்து வாக்கு கேட்கிறோம்.

மூன்று புயல்கள், ஒரு பெருமழை, வெள்ளப்பெருக்கு, பருவம் தவறிப்பெய்த பேய் மழை, கடுமையான வறட்சிக்காலம் என்ற இயற்கைக்பேரிடர்கள் அனைத்தையும் சமாளித்தோம். கொடிய கொரோனா பெருந்தொற்றை சமாளித்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

நம்முடைய தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பத்திரிகைகளும், ஊடகங்களும் பரபரப்புக்காகவும் தங்கள் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. இத்தகைய கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளா? கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் 

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள் மக்களின் தேர்தல் தீர்ப்புகளின் முன், முனை மழுங்கிப்போயின என்பதை தமிழ்நாடு நன்கு அறியும். இப்போது கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடக்கும் பொய்ப் பிரசாரங்களால் மக்கள் யாரும் தங்களின் கழக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் படித்த நம்மை இந்த பொய்ப் பிரசாரங்கள் என்ன செய்யும்?

தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினர் அனைவரும் கூட்டணி கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி தொடர் வெற்றிக்கு உழைப்போம் என்று கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திடீர் மடல் ஏன்?

சமீப வாரங்களாக தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக பல்வேறு தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் ஆய்வு நிறுவனங்கள் என அழைத்துக் கொள்ளும் அமைப்புகளும் பல்வேறு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம் என்றும் அதிமுக அணிக்கு குறைவான இடங்கள் கிடைக்கலாம் என்றும் தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

இத்தகைய சூழலில் அவை வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்துடனேயே இந்த திறந்த மடலை அதிமுகவினருக்காக என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

கருத்துக் கணிப்பு மூலம் கருத்துத் திணிப்பு: தொண்டர்களுக்கு மடல் எழுதும் இபிஎஸ், ஓபிஎஸ் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பிழம்பு said:

மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?

 
மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?

எங்கட தலைக்கு முட்டையா?. இது பக்க சார்பான கருத்து கணிப்பு.🤣

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

எங்கட தலைக்கு முட்டையா?. இது பக்க சார்பான கருத்து கணிப்பு.🤣

கிணத்து தவளைமாதிரி ஒரே இடத்திலை நிண்டு கத்தாமல்......கடல்லையும் நீந்த வேணும் கண்டியளோ......அப்பதான் தமிழ்நாட்டு முழு அரசியலும் தெரிய வரும்.😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கிணத்து தவளைமாதிரி ஒரே இடத்திலை நிண்டு கத்தாமல்......கடல்லையும் நீந்த வேணும் கண்டியளோ......அப்பதான் தமிழ்நாட்டு முழு அரசியலும் தெரிய வரும்.😂

உள்ளதை சொல்வேன்... சொன்னதை சொல்வேன்,   சொன்னதை செய்வேன், வேறொன்றும் தெரியாது. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கிணத்து தவளைமாதிரி ஒரே இடத்திலை நிண்டு கத்தாமல்......கடல்லையும் நீந்த வேணும் கண்டியளோ......அப்பதான் தமிழ்நாட்டு முழு அரசியலும் தெரிய வரும்.😂

 

2 hours ago, Nathamuni said:

உள்ளதை சொல்வேன்... சொன்னதை சொல்வேன்,   சொன்னதை செய்வேன், வேறொன்றும் தெரியாது. :grin:

 

கனக்க சொல்ல விருப்பம், ஆனால் சொன்னவுடன் திரியே காணாமல் போகுது. திரியை திறந்தவங்கள் நாற்சந்தியில் நின்று என்னை திட்டுக்கின்றார்கள்.  பேசாமல் கதை எழுதலாம் என்று யோசிச்சு இருக்கின்றேன். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

கனக்க சொல்ல விருப்பம், ஆனால் சொன்னவுடன் திரியே காணாமல் போகுது. திரியை திறந்தவங்கள் நாற்சந்தியில் நின்று என்னை திட்டுக்கின்றார்கள்.  பேசாமல் கதை எழுதலாம் என்று யோசிச்சு இருக்கின்றேன். 🤔

அவனவன் மினக்கெட்டு திரியை திறந்து பதிந்தால், நீங்கள், ஒரு வரியோடை மூடுவிழா நடத்தினால்... பிழை தானே.🤗

நான், கை நோக, நோக எழுதி சொன்ன புத்திமதிகள்.... கணக்கிலை எடுக்காவிட்டால், இதுதான் நிலைமை.

உந்த அரசியலை விட்டு போட்டு, கதையை எழுதுங்கோ. ஆனால் பெண்களும் வாசிப்பார்கள் என்று உணர்வு இருந்தால் சரி.

😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

300 கோடி வேலை செய்யுது😁

செத்த பாம்பு காங்கிரஸிற்கு 16😎

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing and text that says 'ஒத்தைக்கு ஒத்த வரியா DMK AIADMK AMMK INC PMK CPI MNM DMDK BJP NTK IK CPI(M) SDPI TMC VCK AISMK AIMIM PTMK TMJK GMK TMMK IUML JD(S) MSS mmK KMDK VTPK AIMMK MMK MAK PBK AIFB PDK TVK MVK ATP'

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people, people standing and text that says 'ஒத்தைக்கு ஒத்த வரியா DMK AIADMK AMMK INC PMK CPI MNM DMDK BJP NTK IK CPI(M) SDPI TMC VCK AISMK AIMIM PTMK TMJK GMK TMMK IUML JD(S) MSS mmK KMDK VTPK AIMMK MMK MAK PBK AIFB PDK TVK MVK ATP'

May be an image of one or more people and text that says "DMK AIADMK INC ஒத்தைக்கு ஒத்த வரியா AMMK PMK CPI MNM DMDK BJP NTK IJK SDPI TMC AIS MK AIMIM PTMK TMJK GMK TMMK IUML JD(S) MSS MMK KMDK VTPK AIMMK MMK MAK PBK পল AIFB PDK TVK MVK aTp"
 
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, zuma said:
May be an image of one or more people and text that says "DMK AIADMK INC ஒத்தைக்கு ஒத்த வரியா AMMK PMK CPI MNM DMDK BJP NTK IJK SDPI TMC AIS MK AIMIM PTMK TMJK GMK TMMK IUML JD(S) MSS MMK KMDK VTPK AIMMK MMK MAK PBK পল AIFB PDK TVK MVK aTp"
 

இதென்ன.... நீங்கள் நினைத்தபடி, கோடு கீறி விளையாடி இருக்கிறியள். 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

இதென்ன.... நீங்கள் நினைத்தபடி, கோடு கீறி விளையாடி இருக்கிறியள். 

 

இளமை பருவம்  நினைவில் வந்தது, ஒத்த உருவங்களை இணைத்து விளையாடி உள்ளேன்.😜

Btw, தினகரன் திமுக கூட்டணியின் டம்மி(பினாமி) என்பதும் சீமான் அதிமுக கூட்டணியின் டம்மி என்பதும் உலகறிந்த பரம ரகசியம்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, zuma said:

சீமான் அதிமுக கூட்டணியின் டம்மி என்பதும் உலகறிந்த பரம ரகசியம்.

 சபாஷ் ஆதாரம் இல்லாமல் திட்டனும் உங்களுக்கு தெரிந்த கெட்ட  வார்த்தைகளாலும் திட்டுங்க சீமானை நாங்க கண்ணுமூடிக்கொண்டு இருப்பம் நாங்கதான் நடுநிலைவாதிகள் ஆச்சே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதென்ன.... நீங்கள் நினைத்தபடி, கோடு கீறி விளையாடி இருக்கிறியள். 

17 minutes ago, பெருமாள் said:

 சபாஷ் ஆதாரம் இல்லாமல் திட்டனும் உங்களுக்கு தெரிந்த கெட்ட  வார்த்தைகளாலும் திட்டுங்க சீமானை நாங்க கண்ணுமூடிக்கொண்டு இருப்பம் நாங்கதான் நடுநிலைவாதிகள் ஆச்சே. 

ஊரிலையும் சரி வெளிநாடுகளிலையும் சரி ஒரு சில சனத்தின்ரை கையிலை மைக் கிடைச்சால் அவ்வளவுதான்..... சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அல்லோலகல்லோடப்படுவினம்.
அதுதான் இஞ்சையும் நடக்குது.

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

 சபாஷ் ஆதாரம் இல்லாமல் திட்டனும் உங்களுக்கு தெரிந்த கெட்ட  வார்த்தைகளாலும் திட்டுங்க சீமானை நாங்க கண்ணுமூடிக்கொண்டு இருப்பம் நாங்கதான் நடுநிலைவாதிகள் ஆச்சே. 

 

மூலம் : தந்தி டிவி 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 15:04, zuma said:

எங்கட தலைக்கு முட்டையா?.

எது வந்தாலும், ஏன் சீமான் தோற்க வேண்டும் என்று குறி வைத்து விரும்புகிறீர்கள்? 

சீமானால், அல்லது நாம் தமிழர் கட்சியால் ஏதாவது முக்கியமானதை நீங்கள்   இழந்தது, அடையவில்லை?

இங்கு நான் அவதானித்ததில், சீமான் வெல்ல வேண்டும் என்று எதிபர்வர்கள் கூட சீமானை குறிவைத்து வெல்ல வேண்டும் என்று கருதவில்லை.  

நீங்கள் சொல்லும் தலைவரை விற்பது என்பது உண்மையாக இருந்தாலும், வெளிப்படையாகத்தானே  விற்கிறார். 

கணிசமான கூட்டம் வாங்குகிறது, அதனால், வாங்குகிறவர்களும் ஒன்றும் தெரியாதவர்களா?   

எந்தவொரு கருத்தையோ, பொருளையோ, அல்லது தலைவரையோ விற்பது என்பது விற்பவரின் முயற்சி, அவரின் முயதர்சிக்குத்  தானே பலன் இருப்பதும் இல்லாமல் இருப்பதும். 

உதாரணமாக, நீங்கள் தலைவரை விற்க  முடியுமா? அதை யாரவது திரும்பியும் பார்ப்பார்களா?  

சீமான்  தலைவரை விற்பது (உங்கள் பார்வையில்), அவரை  சேர்ந்த மக்களுக்கு.

அதனால், தலைவரை விற்று, உண்மையாயின்,  சீமானுக்கு பலன் வந்தால்  என்ன வராவிட்டால் உங்களுக்கு என்ன?

       
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.