Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணையின் பின்னர் இன்று (09) முன்னிரவ 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகின்றார்.

யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக தண்டப் பணத்தை அறவிடும் செயற்பாட்டுக்காக யாழ். நகரக் காவல் படை என்னும் குழு யாழ்ப்பாணம் மாநகர சபையால் உருவாக்கப்பட்டது.

மாநகர சபை ஊழியர்கள் ஐவரைக் கொண்ட இந்தக் குழு பொது இடங்களில் குப்பை கொண்டுவோர், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வோரிடம் தண்டம் அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடும் என்று முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்திருந்தார்.

அந்தக் குழுவுக்குப் பயன்படுத்திய சீருடை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதையடுத்து அந்தக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். அந்தச் சீருடைகளைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாக்குமூலமும், சீருடையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விசாரணைக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 6 மணி நேர விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • Replies 59
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்பு முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

 

யாழ்நகரசபை  பாதுகாப்புபடை மட்டுமல்ல, அமெரிக்கா ஐரோப்பா உட்பட்ட உலகின் பல நாடுகளில்  காவல்துறை மற்றும் நகர பராமரிப்பு இந்த நிறத்தில்தான் சீருடைகளை பாவிக்கிறார்கள்.

இறைமைமிக்க நாடான இலங்கையை மிரட்டும் விதத்தில் புலிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அவர்களின் காவல்துறை சீருடை நிறத்தில் இவர்களும் பாவிப்பது புலி பயங்கரவாதத்தை தூண்டி இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலாகும்.

அந்த நாடுகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் பிச்சைகளுக்கு உடனடியாக தடை விதித்து இலங்கை ஒரு சிங்கள பெளத்தநாடு என்பதில் உறுதியாய் நிற்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழி,உடை,நடை,பாவனை எல்லாவற்றிலும் வேற்றுமை வேறுபாடு குறைபாடு பார்க்கும் ஒரு  இனவாத அரசோடு இன்னும் தமிழினம் சேர்ந்து வாழமுடியுமா?

எல்லாவற்றையும் கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்த யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் TID யால் கைது

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு, தமிழன் குந்திக்கொண்டு இருந்து அவர்களை அண்ணாந்து பார்த்து அவர்கள் போடும் பிச்சைக்கு கும்பிடு போட்டுவிட்டு படுத்துவிடவேண்டும். இருக்கிறதையெல்லாம் அவர்கள் அள்ளிக்கொண்டு எல்லாம் நன்றாகவே நடக்கிறது தமிழர் பிரச்சனையில்லாமல்  நாட்டில் அமைதியாக வாழ்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்ய வேணும். இது என்னுடையது ஏன் எடுக்கிறாய்? என்று எதிர்த்து கேள்வி  கேட்டால் அது பயங்கரவாதம். உடனே கூவி கூவி கூட்டுக்கழைத்து அழித்துவிடவேண்டும். இதுவும் சரியென்று வாதாட நம்மிலும் பலர் பட்டம் பெற்று அலைகிறோம். இனிமேல் நாம் கோமணம் கட்ட வேண்டுமா? அம்மணமாய் திரிய வேண்டுமா என்பதையும் இவர்களே தீர்மானிப்பர். அது சரி, இல்லை பிழை என்று பாடம் நடத்த ஜெனிவா யாத்திரை. தமிழன் ஒற்றுமை இல்லாமையினால் இவ்வளவும் அரங்கேறுது. 

மணிவண்ணனிடம் பேரம் பேசப்படும், மசிந்தால் ஒன்றுமில்லை. இல்லையேல் புலிகளை மீள உருவாக்கினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு செயற்பாடெல்லாம் கிடப்பில் போடப்படும். 

அடுத்தமுறை ஜெனீவாவுக்கு மாகாணசபைத் தேர்தலை வெற்றிகரமாய் நடாத்திவிடடோம் என்று ஆரவாரத்துடன் தினேஷ் குணவர்த்தன வரும்போது, இந்த லட்ஷணத்தை விளக்க சொல்லி  கேட்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அதே வர்ண சீருடை கொழும்பு மாநகரசபையாலும்  பயன்படுத்தப்படுவதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

அதே வர்ண சீருடை கொழும்பு மாநகரசபையாலும்  பயன்படுத்தப்படுவதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழன் என்ற காரணத்தினால்... யாழ். மாநகர முதல்வரையே நள்ளிரவில்  கைது செய்து வவுனியா மாவட்டதுக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

இது சீருடை விடயமான கைது என்றால்... கொழும்பு மாநகர முதல்வரிடம் இது வரை விசாரணை நடத்தப் படாதது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

170354990_3823649247711058_2668718461764 170497196_3823649454377704_5025786067617

170535376_3823649614377688_3853513365400

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாகாணசபைக்கான சீருடையையே தெரிவு செய்ய வக்கற்ற நிலையில் தமிழர்களை 
பத்துவருடமாக கூத்தாடி கூத்தாடி ஆக்கிவிட்டு   இன்னும் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும்  சோப்பு போட்டு கொண்டு தீர்வை வாங்கித்தரப்போகினம், இருப்பதையாவது தக்கவைப்போம் என்று மாற்றுத்தெரிவை நோக்கி நகர்ப்பவர்களுக்கும் துரோகி பட்டம், பாவம் மணி பதவி கிடைத்ததும் ஒரு நாள் முதல்வர் அர்ஜுன் மாதிரி நினைத்துவிட்டார் போல,  
நந்தசேன மாத்தையாவிற்கு உள்நாட்டிலேயே அதிகரித்துவரும் எதிர்ப்பை எப்படி சிறுபாண்மை இனங்கள் மீது சொறிந்து மடைமாற்றம் செய்யலாம் என்று கை பரபரத்துகொண்டிருக்க தேடிப்போய் சொறியுங்கள் என்று முதுகை தூக்கி கொடுத்திருக்கிறார் மணி அண்ணாச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்படும் அளவுக்கு பயங்கரவாதமாய் சீருடையிலோ அல்லது இலச்சனையிலோ எதும் இல்லை. 

மேயருக்கு பூச்சாண்டி காட்டவேண்டிய ஒரு தேவை அரசுக்கு உள்ளது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பாக தம்முடன் கலந்துரையாடப்படாமையே இந்தப் புறக்கணிப்பிற்குக் காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்குச் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்றே சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமது கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாகத் தம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீகக் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாநகர காவல்படை உருவாக்கம் குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என்பதில் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாகவே இன்றைய அமர்வுகளைப் புறக்கணித்துள்ளதாக யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1208635

###############   ###############   ###########

சிங்களவனை விட... இவர்கள் மோசமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ். மாநகர காவல் படையின் சீருடை குறித்து பரப்பப்படும் சர்ச்சை- மணிவண்ணன் விளக்கம்

யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின் முன்னுதாரணமான செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாட்டுக்காக மாநகர காவல் படை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவின் சீருடை வடிவம் என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள மணிவண்ணன், அவ்வாறான எந்தவொரு முன்னிலைப்படுத்தலோ அல்லது உள்நோக்கமோ கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய காவல் படையானது, ஏற்கனவே மாநகர சபையில் பணிபரியும் ஐந்து ஊழியர்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர்கள் வடக்கில் உள்ள ஒரேயொரு மாநகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்காக, குப்பைகளைக் கண்டபடி போடுபவர்கள் மற்றும் நகரை அசுத்தமாக்கும் பிற செயற்பாடுகளைச் செய்பவர்களைக் கண்டறிந்து அந்தச் செயற்பாடுகளைத் தடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தச் செயற்பாடு கொழும்பு மாநகர சபையின் செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பரப்பப்பட்டுவரும் செய்திகளுக்கு மாநகரசபை பொறுப்பேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1208565

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எனவே, மாநகர காவல்படை உருவாக்கம் குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என்பதில் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாகவே இன்றைய அமர்வுகளைப் புறக்கணித்துள்ளதாக யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

தவளையும் தன் வாயால் கெடும்.

சிங்களப் பயங்கரவாதப் படை மாநகர முதல்வரைக் கைதுசெய்வதற்கு யார் மூலகாரணம் என்பதைத் தெளிவாகவே தெரிவித்துவிட்டார் ஈசுவரி. 🧐  

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுக்கிற கூட்டத்தோட கூட்டு வைச்சால்.. இப்படித்தான் கைவிட்டிட்டுப் போகுங்கள். 

எனி மாநகர முறையையே இல்லாமல் செய்யனுன்னு.. நந்தசேனவுக்கு அறிவுரை வழங்க வீரசேகரக்களும்.. மாநாயக்கர்களும்.. கூட்டம் கூடி விடுவார்கள்.

நாடே கடன் வாங்கி சீனாவின் கொலனியாவது தெரியாமல்.. இருக்க இவங்கள் ஆடுற ஆட்டம் இருக்கே.

பங்களாதேஷ் இவங்களுக்கு வகுப்பெடுக்கும்.. கேவலம் தெரியவில்லை.. புரியவில்லைப் போலும். 

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு

April 9, 2021

 

விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு யாழ்ப்பாண காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்ட முதல்வரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கடுமையான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் முதல்வரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முதல்வரை அதிகாலையே வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்றைய தினம் காலை வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சென்ற சட்டத்தரணிகள் , முதல்வரை சந்திக்க கோரிய போது , அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
அந்நிலையில் சட்டத்தரணிகள் எழுத்து மூல அனுமதி கோரி முதல்வரை சந்திப்பதற்காக காத்திருக்கிறனர்.

 

https://globaltamilnews.net/2021/159105/

 

  • கருத்துக்கள உறவுகள்

”மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்”: கஜேந்திரகுமார்

யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள அவர், யாழ். மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றது என்று கூறியுள்ளார்.

இதேவேளை இந்த அரசாங்கத்தில் இன மற்றும் அரசியல் ரீதியிலான பாதுகாப்பு இன்மை உயர்வடைந்துள்ளதுடன், அரசாங்கம் பாசிசத்தை நோக்கி நகர்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் புதிய காவல் படை தொடர்பாக மணிவண்ணன் இன்று அதிகாலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)

http://www.samakalam.com/மணிவண்ணன்-உடனடியாக-விடு/

 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் மணிவண்ணன் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி செல்வம் எம்.பி. அறிக்கை

(சி.எல்.சிசில்)

கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது;

குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

selvam-adaikalanathan-720-300x170.png

தமிழர்களின் நிர்வாகத் திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதே நேரம் யாழ். மாநகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கிய காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அரசினால் ஒரு மாநகர சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டை செய்ய முடியவில்லை.
அதனை ஒரு தமிழன் செய்து விட்டான் என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்தக் கைது நாடகம் அரங்கேறியுள்ளது.

சீருடை காரணமாக யாழ். மாநகர காவல் படையை தடைசெய்து முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைக் கைது செய்துள்ளமை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

யாழ். மாநகர காவல் படையினரின் இதே வகையிலான சீருடை கொழும்பு மாநகர சபையிலும் உள்ளதாக மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அவ்வாறு விளக்கமளித்தும் மணிவண்ணனைக் கைது செய்திருப்பது இந்த அரசு தமிழர்கள் எந்த வகையிலும் முன்னேறி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

சாதாரண சீருடையைப் பார்த்து அரசாங்கம் அச்சம் கொள்வது எதற்காக என்று எமக்குத் தெரியவில்லை. எனவே கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்வதோடு யாழ். நகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன்.
 

https://thinakkural.lk/article/117757

 

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன்  கைது  செய்யப் பட்டதை கண்டித்து..அனைத்து தமிழ் கட்சிகளும், 
அரசியல் பேதம் பார்க்காமல் எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்.
இன்று... மணிவண்ணனுக்கு நடப்பது, நாளை உங்களுக்கு நடக்கலாம்.

கொரோனாவால் இறந்த.... முஸ்லீமை  எரிக்கக் கூடாது என பாய்ந்தடித்து குரல் கொடுத்தவர்களும், 
ரணிலுக்கு பிரச்சினை என்றவுடன்... கறுப்பு கோட்டை   மாட்டிக் கொண்டு,  
நீதிமன்றத்தின் படி ஏறியவர்களும்... 
சக தமிழனுக்கு, சிங்களத்தால்...  அச்சுறுத்தல்  வரும் போது, 
கண்ணை மூடிக் கொண்டு இருப்பது,  என்ன மாதிரியான போக்கு என்று எனக்கு விளங்கவில்லை. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மணிவண்ணன்  கைது  செய்யப் பட்டதை கண்டித்து..அனைத்து தமிழ் கட்சிகளும், 
அரசியல் பேதம் பார்க்காமல் எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்.
இன்று... மணிவண்ணனுக்கு நடப்பது, நாளை உங்களுக்கு நடக்கலாம்.

கொரோனாவால் இறந்த.... முஸ்லீமை  எரிக்கக் கூடாது என பாய்ந்தடித்து குரல் கொடுத்தவர்களும், 
ரணிலுக்கு பிரச்சினை என்றவுடன்... கறுப்பு கோட்டை   மாட்டிக் கொண்டு,  
நீதிமன்றத்தின் படி ஏறியவர்களும்... 
சக தமிழனுக்கு, சிங்களத்தால்...  அச்சுறுத்தல்  வரும் போது, 
கண்ணை மூடிக் கொண்டு இருப்பது,  என்ன மாதிரியான போக்கு என்று எனக்கு விளங்கவில்லை. 

அதாவது எல்லா தமிழ் தலைவர்களும் அறிவிலும், ஆற்றலிலும் சுட்ட மண்போல் தங்களைத் தாங்களே சுட்டு உரமேற்றிக்கொண்டு வாழ்பவர்கள்.

சுட்ட மண் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

ஆனாலும் ஒரு சிலர் விதிவிலக்ககாக தன்னின மக்களோடு இணைந்து அந்த மக்களுக்காகவே வாழ்வதையும் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Paanch said:

அதாவது எல்லா தமிழ் தலைவர்களும் அறிவிலும், ஆற்றலிலும் சுட்ட மண்போல் தங்களைத் தாங்களே சுட்டு உரமேற்றிக்கொண்டு வாழ்பவர்கள்.

சுட்ட மண் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

ஆனாலும் ஒரு சிலர் விதிவிலக்ககாக தன்னின மக்களோடு இணைந்து அந்த மக்களுக்காகவே வாழ்வதையும் காணலாம்.

பாஞ்ச்  அண்ணே..... 
எங்கள், அரசியல் தலைவர்களின்  தலைக்குள்  இருப்பது, அவ்வளவும்.. களி மண்.
ஒண்டுக்கும்... உதவாத, மண்ணாங்கட்டி கூட்டங்கள். 

எதிர்க் கட்சி தலைவர் போன்ற,  கிடைத்த அரிய  சந்தர்ப்பங்களை... 
தவற விட்டு, அணில் ஏற விட்ட  🦮  Hund 🐕 மாதிரி... அண்ணாந்து பார்க்கத் தான் தெரியும்.

போரால் பாதிக்கப் பட்ட இனத்திற்கு... எந்த நேரத்தில்,
என்ன நடவடிக்கை எடுத்தால்... சிங்களத்தின் பிடரியை உலுப்பும் என்ற,
புத்திசாலித்தனம்  அறவே அற்ற, கூழ்  முட்டைகள்.   

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர மேயர் கைது -கனடா – ரொரண்டோ நகர மேயர் கண்டனம்

 
1-66-696x383.jpg
 120 Views

இலங்கை அரசின் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு  காவல்துறையினரால் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கனடா – ரொரண்டோ(Toronto) நகர மேயர் ஜோன் டோரி  மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோர் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக தொடரும் இவ்வாறான அநியாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதற்கு அனைவரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் சமூகத்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=46922

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் கைது இனவாதம், பாசிசம் அடிப்படையிலானது- க.வி.விக்னேஸ்வரன்

 
1-70.jpg
 34 Views

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான  க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது குறித்து க.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

“யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை மோசமான இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது. மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகர காவல் படை என்ற பெயரில் மணிவண்ணன் அமைத்த சுகாதார கண்காணிப்பு குழுவின் சீருடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் ஆடையை ஒத்திருப்பதாகக் கூறியே மணிவண்ணனை அதிகாலை வேளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்திருக்கின்றது.

தூய்மை பேணுவதை குறிக்கும் வகையில் வெளிநாடுகள் பலவற்றில் இள நீல ஆடைகளை காவல் கடமைகளில் ஈடுபடும் குழுக்கள் பயன்படுத்துவது வழமை. கொழும்பு மாநகர சபையும் இள நீல நிற சீருடையுடன் பணியாளர்களை அமர்த்தியுள்ளது.   ஆனால், யாழ் மாநகரசபை முதல்வருக்கு மட்டும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் அணிந்த ஆடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் இள நீல நிற ஆடையை  ஒத்ததாகக் காணப்படுகின்றது என்று கூறுவது நகைப்புக்கு இடமானது, அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆவிகள் அரசாங்கத் தலைவர்களை நிதானம் இழக்க வைத்து விட்டனவோ நான் அறியேன்.

ஒரு சிறிய மாநகரத்தை நிர்வகிப்பதற்கும் தமது பிரதேசங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதற்குங்  கூட தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கும் இந்த அரசாங்கத்தின் மனநிலையையும், செயற்பாடுகளையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளின் சீருடைச் சீலையைப் போன்ற எந்த ஒரு சீலையையும் எவரும் பாவித்தலாகாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதோ நான் அறியேன். 12 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன புலிகள் மீது அரசாங்கத்திற்கு அவ்வளவு பயமா என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

இந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் எந்தளவு மோசமான ஒரு நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையில், மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதற்கும், முரண்பாடுகள் ஏற்படுவதற்குமான சூழ்நிலை காணப்படுகின்றது என்று ஐ. நா மனித உரிமைகள் சபை ஆணையாளர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமையை இந்த சந்தர்ப்பதில் நான் நினைவுபடுத்த விரும்புவதுடன், ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையையும் தமிழ் மக்கள் அதைக் கண்டித்து இருந்தமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆகவே, இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டுவரும்நிலையில், தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது.

மணிவண்ணன் கைது தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபை உட்பட இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் உடனடியாக தலையீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுவதுடன், மணிவண்ணனை உடனே விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் வேண்டிக்கொள்கின்றேன்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=46962

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் தீவிர விசாரணை தொடர்கிறது !

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் :  சட்டத்தரணி மணிவண்ணன் | Virakesari.lk

 

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 

பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை அவரை சந்திப்பதற்காக வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மணிவண்ணனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவரது கணனி உட்பட சிலபொருட்களும் விசாரணை பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்தும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் வருகைதந்து விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் தீவிர விசாரணை தொடர்கிறது ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

 
170751820_146140197437951_63223097702881
 61 Views

யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு. வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புபிரிவின்  அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டிவீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=46956

 

 

https://www.ilakku.org/?p=46956

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, உடையார் said:

யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

 
170751820_146140197437951_63223097702881
 61 Views

யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு. வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புபிரிவின்  அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டிவீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=46956

 

 

https://www.ilakku.org/?p=46956

 

உருப்பட விடமாட்டார்கள். 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.