Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உ.பி., பீகார் போலவே ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, மருத்துவக் கட்டமைப்பில் இன்று தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்?

கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்து, 24 மணி நேரமும் இடுகாட்டில் சடங்கள் எரிகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் ஒரு படுக்கையில் இரண்டு மூன்று நோயாளிகள் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு பரிதாபமாகப் படுத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் கொரோனா நோயாளிகளுடன் சாலையோரம் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் தினந்தோறும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 13,000 என்ற நிலையிலும், இங்கு மரணம் குறைவாக இருக்கிறது. பாதிக்கப்படுவோருக்கு தரமான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அந்தளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் வலுவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

மருத்துவமனை
 
மருத்துவமனை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் கல்வி, மருத்துவம், தொழில்துறை போன்றவற்றில் ஒரே பாதையில், சுமாரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், மற்ற மாநிலங்கள் சென்றுகொண்டிருக்கும் பாதையிலிருந்து சற்று விலகி ஒரு மாநிலம் செல்ல ஆரம்பித்தது. அது, வளர்ச்சியிலும் விரைந்து செல்லத் தொடங்கியது. அதுதான், தமிழ்நாடு. உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில்துறை, கல்வி, மருத்துவம் என பல துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்தது. எனவேதான், தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது

உலக அளவில் மருத்துவச் சுற்றுலாவுக்கு மிகச்சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது. பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மருத்துவச் சிகிச்சைகளுக்காக லட்சக்கணக்கில் இங்கு வந்துசெல்கிறார்கள். சகல வசதிகளையும் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் ஏராளம். அதேபோல, நடுத்தர வகுப்பினரும் ஏழை எளிய மக்களும் சிகிச்சை பெறுவதற்கு நவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வந்துசெல்கிறார்கள். ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். வட மாநிலங்களிலிருந்தும் இங்கு வருகிறார்கள். பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய மிகப்பெரிய அறுவைச் சிகிச்சைகளை, இங்கு வந்து முற்றிலும் இலவசமாக செய்துகொண்டு போகிறார்கள். மொத்தத்தில், வசதிபடைத்தவர்கள் மற்றும் ஏழைகள் என அனைத்துப் பகுதியினருக்குமான மருத்துவம், சகல வசதிகளுடன் தமிழகத்தில் கிடைக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி
 
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் என்கிற ஓர் அமைப்பு தமிழக அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஓர் அமைப்பு வேறு மாநிலங்களில் இல்லை. இதன் சிறப்பு என்னவென்றால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளும் உபகரணங்களும் பொதுச்சந்தையில் மிகக்குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தின் மூலம் வாங்கப்படுகின்றன. அதனால், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்பவர்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்க முடிகிறது. இதன் மூலம், இந்தியாவிலேயே மிகக்குறைந்த செலவில் மருத்துவம் அளிக்க முடிகிறது. இது மிகப்பெரிய முன்னேற்றம்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அரசு மருத்துவமனைகள் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிவருகின்றன. குறிப்பாக, கொரோனா முதல் அலையின்போதும், தற்போதைய இரண்டாம் அலையின்போதும் பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காப்பாற்றுவதில் அரசு மருத்துவமனைகள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது. மருத்துவத்துறையில் இத்தகைய அளப்பரிய வளர்ச்சியை தமிழகம் எட்டியது எப்படி என்ற கேள்வியை சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவரான பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் முன்வைத்தோம்.

“தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற சுகாதாரக் கட்டமைப்பு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டைப் போல கேரளாவும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில், கேரளாவைவிட பல இன்டிகேட்டர்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஓரிரு நாளில் தமிழ்நாடு எட்டிவிடவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இதற்கான விதை போடப்பட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதிக் கட்சி ஆட்சியிலேயே இது தொடங்கிவிட்டது.

ஜோதி சிவஞானம்
 
ஜோதி சிவஞானம்

காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் பலனாக கிராமப்புற குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வர ஆரம்பித்தார்கள். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் வருவதற்கான வாசல்களை சத்துணவுத் திட்டம்தான் திறந்துவைத்தது. அண்ணா முதல்வராகி, அவரது மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக வந்தவுடன், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, பட்ஜெட்டில் அதிகமான தொகை அவற்றுக்கு ஒதுக்கப்பட்டது.

அப்போதுதான், ‘தமிழ்நடு வளர்ச்சி மாடல்’ என்பது உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் என்பது ஒரு வித்தியாசமான மாடல். இதை, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி மாடல் என்றும் சொல்லலாம். மக்களுக்கு நேரடியாக எது தேவையோ, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தார்கள். கருணாநிதி உருவாக்கிய அந்தப் பாதையில் அடுத்து வந்த ஆட்சியாளர்களும் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எனவே, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூகநல நோக்கத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஒரு தொடர்ச்சி இருந்தது. இன்றைக்கு இந்தியாவிலேயே மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அதுதான் காரணம்” என்றார் ஜோதி சிவஞானம்.

தொடர்ந்து, ``அனைவருக்கும் தடுப்பூசித் திட்டம், ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்ப சுகாதார மையம், தாலுகா அளவிலும் மாவட்ட அளவிலும் மருத்துவமனைகள் என மருத்துவக் கட்டமைப்புகள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்தன. கட்டமைப்பு உறுதியாக உறுதியாக, தாய் சேய் இறப்பு விகிதம், சிசு மரணங்கள் விகிதம் ஆகியவை வெகுவாகக் குறைய ஆரம்பித்தன. மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்ப்பது என்பது தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் என்ற நிலையை அடைந்துவிட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், அங்கன்வாடி போன்ற திட்டங்கள் பொதுசுகாதாரத்துக்கு பேருதவி செய்யக்கூடியவை. தமிழ்நாட்டுக்கென்று உருவாகிவிட்ட அந்த மாடலிலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவராலும் மாற முடியவில்லை. அது கல்வியையும், மருத்துவத்தையும் மேலும் மேலும் வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றன” என்றார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி
 
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி

மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன. ஆரோக்கியமான இந்தப் போட்டிதான், தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிநடை போடுவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன என்கிற அளவுக்கு மருத்துவத் தறையில் தமிழ்நாடு சாதனை படைத்துவருகிறது.

இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

“அ.தி.மு.க., தி.மு.க என யார் ஆட்சிக்கு வந்தாலும் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என நிறைய மருத்துவக் கல்லூரிகள் இங்கு இருப்பதால், ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மருத்துவர்கள் வருகிறார்கள். மேலும், எல்லா வகையான மருத்துவ நிபுணர்களும் தமிழ்நாட்டில் நிரம்பியிருக்கிறார்கள். இதய நிபுணர், சிறுநீரக நிபுணர், குழந்தைகள் மருத்துவர், பெண்கள் நல மருத்துவர் என அனைத்து வகையான நிபுணர்களும் தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு இல்லை. மேலும், இடஒதுக்கீடு மூலமாக மருத்துவம் படித்து வருபவர்கள் என்பதால், மக்கள் நலனை உணர்ந்து செயல்படுபவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

சாந்தி ரவீந்திரநாத்
 
சாந்தி ரவீந்திரநாத்

தமிழக மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறது. அதை வைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் அதிகம் செலவாகக்கூடிய அறுவைச்சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை செய்துகொள்ள முடியும். இந்த மாதிரியான மருத்துவ வசதிகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என்றார் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்.

உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் மாநில அரசுகள் கடன்கள் வாங்கி பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. கடன் கொடுப்பவர்கள் பல நிபந்தனைகளை விதிப்பதும் வழக்கம். அவர்களின் நிபந்தனைகளுக்கு பல மாநில அரசுகள் பணிந்து போவது உண்டு. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, அதைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் கருணாநிதியாக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும், அவர்களின் ஆட்சிக் காலங்களில் உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன்கள் வாங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது, கடன் கொடுக்கும் அமைப்புகள் முன்வைக்கும் நிபந்தனைகள் அனைத்துக்கும் பணிந்துபோகவில்லை. மாறாக, தமிழகத்துக்கு எது தேவையோ அவற்றை தேர்ந்தெடுத்து செய்யக்கூடியவர்களாக தமிழக முதல்வர்கள் இருந்தனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
 
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

குறிப்பாக, சமூகநலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என்று அழுத்தங்கள் வந்தபோதும், தனியார்மயத்துக்கான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டபோதும், அவை எல்லாவற்றுக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இணங்கிப்போய்விடவில்லை. மருத்துவத் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள மிகப்பெரிய வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல் | how did tamilnadu develop in medical infrastructure? - Vikatan

  • Replies 130
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக தங்கள் மானிலத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக தங்கள் மானிலத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.

ஆகவே  கொள்ளை அடிச்சாலும் 50/50 நாட்டை முன்னேற்றி இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஆகவே  கொள்ளை அடிச்சாலும் 50/50 நாட்டை முன்னேற்றி இருக்கிறார்கள்?

அது தமிழரின் பலம்

கடுமையான உழைப்பு

முயற்சி

கல்விக்கு முதல் இடம்

இவை தான் தமிழரின் பலம் 

அது தமிழ் நாட்டில் மட்டும் இல்லை உலகெங்கும்....

அப்ப தமிழ் நாட்டை மிக மோசமான நிலைக்கு திராவிடக் கட்சிகள் கொண்டு வந்துவிட்டனர், பச்சைத் தமிழனால் மட்டுமே அதை முன்னேற்ற முடியும் என்று சொல்வது எல்லாம் பிழையா?😀

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் நீண்ட நெடுங்காலம் கம்மினுயூஸ்ட் கட்சிகiளே ஆடசி செய்து வருகின்றன். இந்தியாவிலேயே கல்வியறிவில் சிறந்து விளங்கும் மாநிலமாக கேரளா  விளங்குகிறது. அங்கு பெரியாரிசத்துக்கோ திராவிடத்துக்கோ இடமில்லை.வரலாற்றின் படி பார்த்தால் மலையாளிகளும் தமிழர்களே. சேரநாடுதான் கேரளா. ஆக நிறமுர்த்தங்கள் (ஜீன) ஒரே வகையானவை தமிழ்நாடு கேரளாவிற்கு அடுத்தபடியாக ஆந்திராஈகர்நாடகா போன்ற தென்இந்திய மாநிலங்கள் குறிப்பாக முன்னேறிய மாநிலங்களாக இருக்கின்றன.சும்மா திராவிடப் பூச்சாண்டி காட்ட வேண்டாம்.வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் சாதியப் பாகுபாடும்  குறைவு. காமராஜர் தொலை நோக்காக கொண்டுபல ஆயிரம பள்ளிகளைத் திறந்ததும் சத்துணத் திட்டத்தைன் கொண்டு வந்து வறிய மாணவர்களையும் பாடசாலைக்கு வரத் தூண்டியதுமெ இதன் வெற்றிக்கான அடையாளங்கள். கருணாநிதியின்  இடத்தில் அண்ணாவோ அல்லது வேறு யாரோ இருநதிருந்தால் தமிழ்நாடு இன்னமும் முன்னேறி இருக்கும். கருணாநிதியின் ஊழல் ஆசை அந்த முன்னேற்தின் வேகத்திற்கு தடை போட்டது என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிழலி said:

அப்ப தமிழ் நாட்டை மிக மோசமான நிலைக்கு திராவிடக் கட்சிகள் கொண்டு வந்துவிட்டனர், பச்சைத் தமிழனால் மட்டுமே அதை முன்னேற்ற முடியும் என்று சொல்வது எல்லாம் பிழையா?😀

பச்சை தமிழன் ஆண்டிருந்தால்...  "டாஸ்மாக்கே" இருந்திராது. 
மதுப்பிரியர்களுக்கு... கள்ளு  குடிக்க அனுமதித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புலவர் said:

கேரளாவில் நீண்ட நெடுங்காலம் கம்மினுயூஸ்ட் கட்சிகiளே ஆடசி செய்து வருகின்றன். இந்தியாவிலேயே கல்வியறிவில் சிறந்து விளங்கும் மாநிலமாக கேரளா  விளங்குகிறது. அங்கு பெரியாரிசத்துக்கோ திராவிடத்துக்கோ இடமில்லை

ஆமாம். அங்கே ‘சனாதன தர்மத்தைத்’ திணிக்கும் அணிக்கும் அதன் ஏஜெண்டுகளுக்கும் இடம் இல்லை. அதனால்தான் கல்வியறிவில் சிறந்து சிந்திக்கும் திறனுள்ளவர்களாகவும், இந்திய கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விஜய் நம்பியார் ஐ.நா. செயலரின் பிரதம அதிகாரியாக இருந்து ராஜபக்‌ஷ அரசு தமிழரை அழிக்க உதவியும் இருந்தார்.

தமிழ்நாட்டை காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் விட்டிருந்தால் இப்போதும் பிராமணர்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். ஏன் பிஜேபிகூட ஆண்டிருக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பச்சை தமிழன் ஆண்டிருந்தால்...  "டாஸ்மாக்கே"  இருந்திராது. 
மதுப்பிரியர்களுக்கு... கள்ளு  குடிக்க அனுமதித்திருக்கலாம்.

 "டாஸ்மாக்கே" இல்லாது விட்டால் கருணாநிதி குடும்பமும் உலக பணக்காரர்கள் வரிசையில் வரமுடியாமல் போயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டை காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் விட்டிருந்தால் இப்போதும் பிராமணர்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். ஏன் பிஜேபிகூட ஆண்டிருக்கும்! 

தற்போது நீங்கள் எதிர்பார்க்கும் திமுக காங்கிரஸ் வந்தால் ?????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்நாட்டை காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் விட்டிருந்தால் இப்போதும் பிராமணர்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். ஏன் பிஜேபிகூட ஆண்டிருக்கும்! 

காமராஜர் என்றொருவர் முதலமைச்சராக இருந்தாரே ஞாபகமில்லையா!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்நாட்டை காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் விட்டிருந்தால் இப்போதும் பிராமணர்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். ஏன் பிஜேபிகூட ஆண்டிருக்கும்! 

திமுக ஆட்சியில் தலைமைச் செயலர் முதல் அமைச்சு செயலர்கள் வரை பெரும்பான்மை பார்ப்பனர்களாமே! நான் சொல்லவில்லை, மதிமாறன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

தற்போது நீங்கள் எதிர்பார்க்கும் திமுக காங்கிரஸ் வந்தால் ?????

பிராமண ஆட்சி 1967 இல் அண்ணா பதவிக்கு வந்ததில் இருந்து இல்லை. அதனால்தான் தமிழ்நாடு முன்னேறி இருக்கின்றது. காங்கிரஸ் எப்போதும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கூட்டில் சேர்ந்துதான் சட்டசபைக்கே தெரிவாகின்றார்கள். அவர்களுக்கு இருக்கும் குறுகிய வாக்குவங்கியின் அடிப்படையில்தான் “சீட்”டுக்கள் இந்த தேர்தலில் திமுகவால் ஒதுக்கப்பட்டன. 

எனவே, திமுக-காங்கிரஸ் வந்தால் மதச்சார்பின்மை தொடரும். அதிமுக-பிஜேபி வந்தால் மதச்சார்பின்மை நலிந்து சனாதனக் கட்சிகளின் ஆதிக்கம் வளரும்.சனாதனக் கட்சியாகிய பிஜேபி சாதிப்பிரிவினையை வளர்க்கும். மதப்பிரிவினையை நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்துத்துவம் ஊடாக ஊதிப்பெருப்பித்து வட இந்திய மாநிலங்கள் போல மாற்றும். இந்து-முஸ்லிம் கலவரங்களையும் தூண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

காமராஜர் என்றொருவர் முதலமைச்சராக இருந்தாரே ஞாபகமில்லையா!

தெரியும். பெருந்தலைவர் காமராஜர் தூய்மையான அரசியல் செயற்பாட்டில் இருந்தவர். ஆனால் அவர் ஒரு புறநடை. அவரைப் போல அரசியல்வாதிகள் இந்தியாவில் அரிது.

காமராஜர் வாரிசு அரசியலை எதிர்த்ததால் காங்கிரஸ் இரண்டாகி இந்திரா காங்கிரஸ் தோற்றம் பெற்றது. அவரின் மறைவுக்குப் பின்னால் மூப்பனார், நெடுமாறன் போன்றோர் மீண்டும் பிளவுபட்ட காங்கிரஸை ஒன்றாக்கினர். ஆனால் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம் என்று சொல்பவர் ஒருவர் கூட அவரைப் போல 60 ரூபாயும், கதர்வேட்டியும் சொத்தாக வைத்திருக்கப்போவதில்லை. இப்போது எல்லாமே “கார்ப்பரேட்” ஆட்சிதான்.

15 minutes ago, ஏராளன் said:

திமுக ஆட்சியில் தலைமைச் செயலர் முதல் அமைச்சு செயலர்கள் வரை பெரும்பான்மை பார்ப்பனர்களாமே! நான் சொல்லவில்லை, மதிமாறன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

திறமையுள்ளவர்களை வைத்து அரசை நடாத்துபவர்கள்தான் நாட்டை முன்னேற்றமுடியும். இதுகூட திராவிடக் கட்சிகள் பார்பனியத்துக்குத்தான் எதிர், பார்ப்பனர்களுக்கு எதிரானதல்ல என்று காட்டுகின்றது. ஆனால் வந்தேறிகளை விரட்டும் ஆட்சி வந்தால் கூண்டோடு கலைத்து எல்லா பதவிகளிலும் தூய தமிழர்கள் வருவார்கள். பிராமணர்கள், தெலுங்கர்கள் எல்லாம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு வடக்கே போகவேண்டியதுதான்!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிராமண ஆட்சி 1967 இல் அண்ணா பதவிக்கு வந்ததில் இருந்து இல்லை. அதனால்தான் தமிழ்நாடு முன்னேறி இருக்கின்றது. காங்கிரஸ் எப்போதும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கூட்டில் சேர்ந்துதான் சட்டசபைக்கே தெரிவாகின்றார்கள். அவர்களுக்கு இருக்கும் குறுகிய வாக்குவங்கியின் அடிப்படையில்தான் “சீட்”டுக்கள் இந்த தேர்தலில் திமுகவால் ஒதுக்கப்பட்டன. 

எனவே, திமுக-காங்கிரஸ் வந்தால் மதச்சார்பின்மை தொடரும். அதிமுக-பிஜேபி வந்தால் மதச்சார்பின்மை நலிந்து சனாதனக் கட்சிகளின் ஆதிக்கம் வளரும்.சனாதனக் கட்சியாகிய பிஜேபி சாதிப்பிரிவினையை வளர்க்கும். மதப்பிரிவினையை நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்துத்துவம் ஊடாக ஊதிப்பெருப்பித்து வட இந்திய மாநிலங்கள் போல மாற்றும். இந்து-முஸ்லிம் கலவரங்களையும் தூண்டும்.

பாவம் நீங்கள்

பாஜ கட்சியை தமிழகத்தில் முதன் முதலில் கூட்டு வைத்து கொண்டு வந்தவர்கள் திமுக தான் என்ற வரலாற்றை மறந்து இன்றும் பாஜக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தால் இவர்களது மத சார்பற்ற என்ற கோசம் தூக்கி எறியப்பட்டு விடும் என்பதும் தெரிந்தும் சும்மா எழுதி சுகமடைகிறீர்கள் 

நான் ஏன் அதை கெடுப்பான்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

நான் பாவமாக இருக்கிறேன். நீங்கள் புண்ணியவானாகவே இருங்கள் விசுகு ஐயா☺️

நான் தீம்கா ஆதரவாளர் இல்லை. ஆனால் வரலாற்றை அறியவேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன். 

1999 இல் திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது. ஆனால் அதற்கு முந்தைய வருடத்தில் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுக மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டில் இருந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் மத்தியில் கூட்டில் இருந்த பிஜேபிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததால், அதிலிருந்து தப்பிக்க, அதிமுக மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியபோது திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது.

இது இந்தியப் ஆக்கிரமிப்புக் காலத்தில் புலிகள் பிரேமதாசவுடன் வைத்த இராஜதந்திர உறவு போல. எப்படிப் புலிகள் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் பிரேமதாசவிடம் இருந்து ஆயுதம் வாங்கினார்களோ, அப்படி திமுகவும் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட்டுக்கொடுக்காமல் பிஜேபியுடன் கூட்டை வைத்துக்கொண்டது. இந்தியாவில் கட்சிகள் தேர்தலில் கூட்டு வைக்கும்போது தத்தமது கொள்கைகளில் விட்டுக்கொடுப்பு செய்வதில்லை. First pass post system ஆக இருப்பதால் தேர்தலில் வெல்ல வைக்கும் கூட்டுக்கள் மட்டுமே.

அதாவது பா.ஜ.க.வின் கொள்கையில் சமரசமாகி திமுக அந்த நேரத்தில் கூட்டுச்சேரவில்லை. கடந்தகால தமிழக வரலாறும் அப்படியான சமரசங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லவில்லை.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

திமுக ஆட்சியில் தலைமைச் செயலர் முதல் அமைச்சு செயலர்கள் வரை பெரும்பான்மை பார்ப்பனர்களாமே! நான் சொல்லவில்லை, மதிமாறன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கருநாநிதி குடும்ப பெண்மணிகள் கோயில் கோயிலாக ஏறி இறங்குபவர்கள். அரசியல் வருமானத்திற்காக திராவிட கொள்கை பேசும் கூட்டம் அது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

காமராஜர் என்றொருவர் முதலமைச்சராக இருந்தாரே ஞாபகமில்லையா!

அந்த அருமையான மனிதரை இதே கருணாநிதி மேடைக்கு மேடை அண்டம்காக்கை என்று திட்டுவது உண்டு காரணம் மண்ணின் மைந்தன் நிறம் தமிழ்நாட்டு வந்தேறிக்கு பிடிப்பதில்லை இப்பவும் .

41 minutes ago, கிருபன் said:

நான் பாவமாக இருக்கிறேன். நீங்கள் புண்ணியவானாகவே இருங்கள் விசுகு ஐயா☺️

நான் தீம்கா ஆதரவாளர் இல்லை. ஆனால் வரலாற்றை அறியவேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன். 

1999 இல் திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது. ஆனால் அதற்கு முந்தைய வருடத்தில் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுக மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டில் இருந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் மத்தியில் கூட்டில் இருந்த பிஜேபிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததால், அதிலிருந்து தப்பிக்க, அதிமுக மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியபோது திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது.

இது இந்தியப் ஆக்கிரமிப்புக் காலத்தில் புலிகள் பிரேமதாசவுடன் வைத்த இராஜதந்திர உறவு போல. எப்படிப் புலிகள் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் பிரேமதாசவிடம் இருந்து ஆயுதம் வாங்கினார்களோ, அப்படி திமுகவும் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட்டுக்கொடுக்காமல் பிஜேபியுடன் கூட்டை வைத்துக்கொண்டது. இந்தியாவில் கட்சிகள் தேர்தலில் கூட்டு வைக்கும்போது தத்தமது கொள்கைகளில் விட்டுக்கொடுப்பு செய்வதில்லை. First pass post system ஆக இருப்பதால் தேர்தலில் வெல்ல வைக்கும் கூட்டுக்கள் மட்டுமே.

அதாவது பா.ஜ.க.வின் கொள்கையில் சமரசமாகி திமுக அந்த நேரத்தில் கூட்டுச்சேரவில்லை. கடந்தகால தமிழக வரலாறும் அப்படியான சமரசங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லவில்லை.
 
கிருபன் நீங்கள் புத்தகங்களில் வரலாறு படிப்பதால்  whats up, you tube ல் வரலாறு அறிபவர்களை விட துல்லியமாக பல விடயங்களை  தெரிந்து வைத்துள்ளீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and people standing

இவர்கள்தான் கறுப்பை  குறைவெண்டும்  வெள்ளையை உயர்ந்தது என்று நிறுவியவர்கள் .

22 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக தங்கள் மானிலத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

கிருபன் நீங்கள் புத்தகங்களில் வரலாறு படிப்பதால்  whats up, you tube ல் வரலாறு அறிபவர்களை விட துல்லியமாக பல விடயங்களை  தெரிந்து வைத்துள்ளீர்கள். 

நான் 2000 ஆண்டுவரை தவறாமல் இந்தியா ருடே (தமிழ்) வாங்கிப்படிப்பதுண்டு. காசு கொடுத்து வாங்கியதால் எல்லா எழுத்துக்களையும் வாசிப்பேன். ஆனால் 2000 க்குப் பின்னர் தமிழக அரசியலில் ஈடுபாடு குறைந்துவிட்டது. இப்போது முக்கிய தலைவர்களைத் தவிர மற்றவர்களின் பெயரே தெரியாது. தெரியவேண்டிய தேவையும் இல்லை!

3 minutes ago, பெருமாள் said:

May be an image of one or more people and people standing

இவர்கள்தான் கறுப்பை  குறைவெண்டும்  வெள்ளையை உயர்ந்தது என்று நிறுவியவர்கள் .

எங்கே நிறுவியிருந்தார்கள்? யார் peer review செய்தது?🤥

  • கருத்துக்கள உறவுகள்

கவனியுங்கள் 150 ரூபா தான் இன்று திராவிட கட்சிகளின்  சொத்து மதிப்பு  உங்களால் சொல்ல முடியாது அவ்வளவும் தமிழ்நாட்டில் சுரண்டியது .

Just now, கிருபன் said:

எங்கே நிறுவியிருந்தார்கள்? யார் peer review செய்தது?🤥

ஒரு பச்சை தமிழனை அண்டம் காக்கை என்று சொல்லி .

  • கருத்துக்கள உறவுகள்

ஆ . பழனியப்பனின் திராவிட துதிபாடல் அதை 60 வீத பங்குகளை வைத்துள்ள  திமுகவின் ஆனந்த விகடன் பிரசுரித்து உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

3 minutes ago, பெருமாள் said:

ஆ . பழனியப்பனின் திராவிட துதிபாடல் அதை 60 வீத பங்குகளை வைத்துள்ள  திமுகவின் ஆனந்த விகடன் பிரசுரித்து உள்ளது .

சரி. அடுத்த ஐந்து வருடத்திற்கு தினமும் கரித்துக்கொட்டிக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியாவது ஒரு முன்னேற்றம் வந்தால் நல்லது😁

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் பாவமாக இருக்கிறேன். நீங்கள் புண்ணியவானாகவே இருங்கள் விசுகு ஐயா☺️

நான் தீம்கா ஆதரவாளர் இல்லை. ஆனால் வரலாற்றை அறியவேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன். 

1999 இல் திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது. ஆனால் அதற்கு முந்தைய வருடத்தில் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுக மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டில் இருந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் மத்தியில் கூட்டில் இருந்த பிஜேபிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததால், அதிலிருந்து தப்பிக்க, அதிமுக மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியபோது திமுக பிஜேபியோடு கூட்டுவைத்தது.

இது இந்தியப் ஆக்கிரமிப்புக் காலத்தில் புலிகள் பிரேமதாசவுடன் வைத்த இராஜதந்திர உறவு போல. எப்படிப் புலிகள் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் பிரேமதாசவிடம் இருந்து ஆயுதம் வாங்கினார்களோ, அப்படி திமுகவும் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட்டுக்கொடுக்காமல் பிஜேபியுடன் கூட்டை வைத்துக்கொண்டது. இந்தியாவில் கட்சிகள் தேர்தலில் கூட்டு வைக்கும்போது தத்தமது கொள்கைகளில் விட்டுக்கொடுப்பு செய்வதில்லை. First pass post system ஆக இருப்பதால் தேர்தலில் வெல்ல வைக்கும் கூட்டுக்கள் மட்டுமே.

அதாவது பா.ஜ.க.வின் கொள்கையில் சமரசமாகி திமுக அந்த நேரத்தில் கூட்டுச்சேரவில்லை. கடந்தகால தமிழக வரலாறும் அப்படியான சமரசங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லவில்லை.
 
புத்தகங்களில் இருந்து வரலாற்றை தொகுப்பவர் என்ற சேர்ட்டிபிக்கற் வாங்கி இருப்பதால் இனிமேல் எந்த காலத்திலும் மத சார்புடைய கட்சிகளுடன் சாதி சார்புடைய கட்சிகளுடன் திமுக கூட்டணி வைக்காது என்பதை உறுதிப்படுத்த முடியுமா உங்களால்??

35 minutes ago, tulpen said:

கிருபன் நீங்கள் புத்தகங்களில் வரலாறு படிப்பதால்  whats up, you tube ல் வரலாறு அறிபவர்களை விட துல்லியமாக பல விடயங்களை  தெரிந்து வைத்துள்ளீர்கள். 

ஆமாம்

அவை நீங்கள் ஆதாரங்களை பொறுக்கும் லங்கா புவத்தை விட நம்பகத்தன்மை அற்றவை என்பது எனது தாழ்மையான கருத்து

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.