Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விஜயம் மிகவும் பயனுள்ளதானது - சீன பாதுகாப்பு அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்  ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சிறப்பு விமானத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்து சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது  சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக கருத்தில் கொள்ளப்பட்டிருந்த நிலையில் இருதரப்பு உறவுகள் தனது விஜயத்தின் மூலம் பலமடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி கோத்தாபயவுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்  மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரை வரவேற்றிருந்தனர்.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தனது வருகையை நினைவுகூரும் வகையில் விசேட விருந்தினருக்கான நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் , சீன மக்கள் இராணுவத்தின் ஒன்றிணைந்த பணிக்குழாம் திணைக்களத்தின் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஷாஓ யென்மின்ங்  மற்றும் மேஜர் ஜெனரல் சீ கோவை உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகளஇந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடிய சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்   தலைமையிலான குழு இரு தரப்பு ஒத்துழைப்புகள் குறித்து மிக விரிவாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

179356903_10157568347966467_670029579866

இதேவேளை, இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்று ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று கொழும்பு சங்கரில்லா கோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை விஜயம் மிகவும் பயனுள்ளதானது  - சீன பாதுகாப்பு அமைச்சர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எலி சும்மா ஓடாமல்  கோமணத்தோடு ஓடுது .

  • கருத்துக்கள உறவுகள்

சீனர்: இப்ப நான், பிளேன் ஏறின கையோடை, மகிந்தர் அய்யா, உங்கை டெல்லிலை இருந்தது போனை போடுவினம்.

கொரோனரோ, சரியான கடுமையாமே, நான் வேணுமெண்டா, சீனா மருந்து கேட்டு வாங்கி அனுப்பவே எண்டு கேட்டு ஆட்களை மடக்கி விடுங்கோ.

மகிந்தா: அதென்ன பிரச்சனையே.... நான் பராததே.... அதெல்லாம் வெட்டி ஆடுறன்.... நீங்கள், சொன்னபடி  அந்த கடன் காசை நேரத்துக்கு அனுப்பி வையுங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

மகிந்தா: அதென்ன பிரச்சனையே.... நான் பராததே.... அதெல்லாம் வெட்டி ஆடுறன்.... நீங்கள், சொன்னபடி  அந்த கடன் காசை நேரத்துக்கு அனுப்பி வையுங்கோ

அது பிரச்சனை இல்லை.
நான் சொன்ன இடத்தை எப்ப எழுதுவீர்கள் என்பதை கெதியாய் முடிவெடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நீகலக்கு சித்தப்பு!இந்தியாவுக்கு கொரோனாவைக் குடுத்திட்டு  இந்தியாவின் கொல்லைக்குள் தேனிலவு!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் கழுகு கண்ணுக்கு குளிர்ச்சியான படம். :cool:

179356903_10157568347966467_670029579866

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவு மேலும் வளர்ச்சியடையனும்.   அப்ப தான். தமிழ்ஈழத்தின் அவசியத்தை இந்தியா உணரும் நாங்கள் இரததம் சிந்தமால் தமிழ்ஈழம் பெறமுடியும். 😎😎😎

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

இந்த உறவு மேலும் வளர்ச்சியடையனும்.   அப்ப தான். தமிழ்ஈழத்தின் அவசியத்தை இந்தியா உணரும் நாங்கள் இரததம் சிந்தமால் தமிழ்ஈழம் பெறமுடியும். 😎😎😎

கொஞ்சம் பொறுங்க இந்த கொர்நோவோடை  உலக அரசியல் நிச்சயம்  மாறும் வல்லரசுகள் என்ன முடிவு எடுக்கினம் என்று பொறுத்து நம் அரசியலை கொண்டு போகலாம். பொறுமை அவசியம் . 

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக அடுத்த ஓரிரு தினங்களில்  எரிக் சுல்கெய்ம் தனது திருவாய் மலர்ந்து எதையாவது உதிர்ப்பார் என எதிர்பார்க்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்தியாவின் தலையிடி விட்டது என்று இரண்டு பேரும் குதூகலிப்பது போலுள்ளது.  புலிகளை அழிக்கிறதுக்கு சபதம் எடுத்து சன்னதம் ஆடாமல்  இந்தியா இருந்திருந்தால்; இன்று அமைதியாக தேனிலவு கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். இந்தியா தன் சொந்தச் செலவில் தனக்கு சூனியம் வைத்துக்கொண்டது. ஒருபக்கம் சீனா, மறுபக்கம் கொரோனா இரண்டுக்கும் நடுவில் இந்தியா தத்தளிக்குது. என் மக்களை கதறக், கதறக் கொலை செய்துகொண்டு விருந்து கொண்டாடும்போது இந்தியா நினைத்திருக்காது இது ஒருநாள் என்பக்கம் திரும்பும் என்று. ராஜீவ் கொலையாளிகள் என்று அந்த இளம் பிள்ளைகளின் இளமை, எதிர்காலக்கனவு, சுகம் எல்லாவற்றையும் அழித்து அரசியல் செய்யும்போது யாரும் குரல் கொடுக்க முன்வரவில்லை. இப்போ விதி நிஞாயம் கற்பிக்குது.  

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

சீனர்: இப்ப நான், பிளேன் ஏறின கையோடை, மகிந்தர் அய்யா, உங்கை டெல்லிலை இருந்தது போனை போடுவினம்.

அது நேற்று ........................................................இன்று 👇

 

No photo description available.

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.