Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் போராட்டம் முன்னெடுக்கும் தமிழருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்களப் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி பிரான்ஸிலுள்ள நகரசபைக்கு முன்னால் நேற்று முன்தினம் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுடன் சிங்களப் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ள காணொளி வெளியாகியுள்ளது.

இதன்போது அந்த பெண், “யுத்தத்தில் இராணுவத்தினரும் உயிரிழந்ததாகவும், அப்படியென்றால் தாங்களும் நீதி கோருவதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,

https://tamilwin.com/article/sinhala-woman-involved-in-argument-with-tamil-man-1619599786

நேரம் 7.56 ல் பாதரை  கேட்க்கினம் அந்த சிங்கள பெண்ணுக்கு அது பற்றி தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்துக்கு விசுவாசமாய் அந்தப் பெண்மணி இருக்கிறா.. அம்புட்டுதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

தன் இனத்துக்கு விசுவாசமாய் அந்தப் பெண்மணி இருக்கிறா.. அம்புட்டுதே.

கவனியுங்கள் பல விளக்கம் இன்றி அந்த பெண்மணி தடுமாறுகிறா ....

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

கவனியுங்கள் பல விளக்கம் இன்றி அந்த பெண்மணி தடுமாறுகிறா ....

உணர்வுதான் நோக்கப்படும். 👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கவனியுங்கள் பல விளக்கம் இன்றி அந்த பெண்மணி தடுமாறுகிறா ....

 எங்கடையாள் சிங்களத்தில் பிச்சி உதறுறார் ,புல்லரிச்சுப்போட்டுது 
சிங்களம் பே....பே என்று மட்டும்தான் கதைக்கத்தெரியும் என்றால் சிங்களவருக்கு அவர்களின் மொழியில் விளக்கம் கொடுக்க போகக்கூடாது.  

மேடம் கப்பிடிப்போல கியாவ எக்கெனாவ தன்னவாத ....?
கௌத எயாவ ...?
(பதில் சொல்ல விடவேண்டும்) 
பிரிட்டிஷ் ஆண்டுவ கிவ்வெ எயா தர்ஸத்தவாதி கியாலா ...
தமுசெ ஏக பிலிகன்னவாத ...?  
ஒவ் கிவ்வொத் அபி பிலிகன்னம் கொட்டி தர்ஸதவாதி கியாலா  
நஹா கிவ்வொத் ஓகுல்லு வகே சிங்களயட்ட கெப்பித்திபொல நிதகஸ் சடன்காமியா வகே 
அப்பிட கொட்டி நிதஹஸ் சடங்கருவன் 

இந்த பந்திக்கே மேடம் பின்னங்கால் பிடரியிலடிபட ஒடியிருப்பார் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த பந்திக்கே மேடம் பின்னங்கால் பிடரியிலடிபட ஒடியிருப்பார் 

அவர் ஓடியிருக்க மாட்டார்....! அட ஒரு தமிழன் என்னாமா என் சிங்களத்தைப் பேசுகிறான் என்ற உணர்வின் ஆனந்தத்தில் முன் கனிகள் மார்பில் அழுந்தக் கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்திருப்பார்.!!😋

On 29/4/2021 at 08:59, Paanch said:

ஒரு சிங்கள ஆண் தமிழில் பேசினால் ஒரு தமிழ் பெண்ணும்  இதே போல உணர்வில் நீங்கள் கூறியது போல் கட்டிப்பிடித்து   அவருக்கு முத்தமிடுவாரா?😂 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2021 at 12:29, Paanch said:

அவர் ஓடியிருக்க மாட்டார்....! அட ஒரு தமிழன் என்னாமா என் சிங்களத்தைப் பேசுகிறான் என்ற உணர்வின் ஆனந்தத்தில் முன் கனிகள் மார்பில் அழுந்தக் கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்திருப்பார்.!!😋

நான் ஈழத்தமிழர் களத்தில் நின்றதில்லை. ஆகையால் இவ்விடயத்தில் கருத்துச் சொல்ல எனக்குப் பெரியளவில் தகுதியில்லைதான். இருப்பினும் ஏதோ சொல்லத் தோன்றுகிறது. தமிழர்க்கு அத்துணைக் கொடுமைகள் அரங்கேறிய பிறகும் அவை பற்றி அப்பெண் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவள் பாதிக்கப்பட்வர்களிடமே அக்கொடுமைகளை நியாயப்படுத்துவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

               ஒரு எதிரி இனப்பெண் வன்முறையில் இறங்கினால் அவளை நாம் தாக்குவதையோ, தேவையானால் கொல்வதையோ என்னால் நியாயப்படுத்த முடிகிறது. ஆனால் அவளது பெண்மையை சொல்லிலோ செயலிலோ மலிவு படுத்துவது நமக்கு உகந்ததல்ல என்பது என் கருத்து. தலைவர் பிரபாகரன் பெண்மை மலிவுபடுத்தப்படுவதை அனுமதிப்பதில்லை என்று கேள்வியுற்றிருக்கிறேன். சில சமயங்களில் எதையாவது முறைதவறிக் கிண்டல் செய்துவிட்டு நான் வருந்தியிருக்கிறேன். எனவே எனது இக்கருத்தை ஏதோ நான் இடித்துரைப்பதாக தோழர் Paanch எடுத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தில் நம் எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

அவள் பாதிக்கப்பட்வர்களிடமே அக்கொடுமைகளை நியாயப்படுத்துவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பெண்மையை சொல்லிலோ செயலிலோ மலிவு படுத்துவது நமக்கு உகந்ததல்ல என்பது என் கருத்து

எனது இக்கருத்தை ஏதோ நான் இடித்துரைப்பதாக தோழர் Paanch எடுத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தில் நம் எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.

சுப.சோமசுந்தரம் அவர்களே! உங்களின் இந்தக் கருத்தை மனதார வரவேற்கிறேன். இதனை நீங்கள் இடித்துரைத்தாலும், அடித்துரைத்தாலும் அதனை நான் எனக்கான அறிவுரையாகவே எடுத்துக் கொள்ள விளைகிறேன். வரும் காலத்தில் இத்தகய தவறுகள் ஏற்படாதிருக்க என்னுள் இருப்பவனையும் வேண்டிக் கொள்கிறேன். தவறை உறவென்ற உரிமையோடும் உள்ளம் புண்படாமலும் எடுத்துக்காட்டியமைக்கு நன்றி:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2021 at 02:59, Paanch said:

முன் கனிகள் மார்பில் அழுந்தக் கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்திருப்பார்.

உண்மையில் இதை நான் கவிதை நயமாகத்தான் பார்த்தேன்.   

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2021 at 21:48, Paanch said:

சுப.சோமசுந்தரம் அவர்களே! உங்களின் இந்தக் கருத்தை மனதார வரவேற்கிறேன். இதனை நீங்கள் இடித்துரைத்தாலும், அடித்துரைத்தாலும் அதனை நான் எனக்கான அறிவுரையாகவே எடுத்துக் கொள்ள விளைகிறேன். வரும் காலத்தில் இத்தகய தவறுகள் ஏற்படாதிருக்க என்னுள் இருப்பவனையும் வேண்டிக் கொள்கிறேன். தவறை உறவென்ற உரிமையோடும் உள்ளம் புண்படாமலும் எடுத்துக்காட்டியமைக்கு நன்றி:100_pray:

உங்கள் எழுத்து பண்பாட்டின் வெளிப்பாடு. சிறந்த மொழிநடைக்கு எடுத்துக்காட்டு.  நான் எழுதியதற்கு உங்கள் எழுத்து மெருகூட்டியது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

உண்மையில் இதை நான் கவிதை நயமாகத்தான் பார்த்தேன்.   

பதிவு ஒரு விடயத்தில் ஆரம்பித்து வேறு விடயத்திற்குச் செல்லக் காரணியாகிறேனோ என்று முதலில் தயக்கம். பரவாயில்லை, உறவுகளுடன் பேசத்தானே பதிவு என்று தொடர்கிறேன்.

நானும் உண்மையைச் சொல்வதானால், முதலில் என்னுள் உறையும் இலக்கிய ரசிகனே வெளிப்பட்டான். பொதுவாக இலக்கியங்களில் ரசிக்கும் போதும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போதும், பெண்ணின் உடல் காட்சிப்படுத்தப் படுகிறதே என்று என்னை ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. தவறென்றால் எல்லாப் பழியும் வள்ளுவனுக்கும் ஏனையோருக்கும் என்று என் மனதுக்கு நான் சொல்லிக் கொள்வேன். நீங்கள் குறித்துள்ள வரியைத் தோழரின் பதிவில்  வாசித்ததும் எனக்கு நினைவில் வந்தது சீவக சிந்தாமணியில் எனக்குத் தெரிந்த வரி, "இலைகொள் பூந்தார் உழுத இன்ப வருத்தம் நீங்க" என்பதுவே.

ஆனால் ரசனைக்கும் இடம், பொருள், ஏவல் உண்டே என்று எனக்கு மின்னலடித்தது. பதிவில் உள்ள சிங்களப் பெண் ஏதோ இலக்கியத்தின் கற்பனைப் படைப்பு அல்லவே. நம்முடன் விவாதம் செய்யும் நிஜம் அப்பெண். போர்க்களத்தில் நம்முடன் பொருது மரித்த ஒரு பெண்ணின் ஆடை விலகியிருப்பின் நம்மிடமுள்ள துணியையோ ஆடையையோ வைத்து மறைத்து விட்டுக் கடந்து செல்வதுதானே நமக்கான போர் அறம் !

ஒரு ஜுஜுபி மேட்டருக்கு இவ்வளவு build up தேவையா என்று எழுதி முடித்த பிறகுதானே தோன்றுகிறது ! சொல்ல வந்தது உங்களுக்குத் தோன்றிய கவிதை நயம் நல்ல கலை ரசனையுள்ள எவருக்கும் தோன்றுவதுதான் என்பதுவே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுப.சோமசுந்தரம் said:

சிறப்பான வரிகள் சுப.சோமசுந்தரம் ஐயா. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். பஞ்ச் , நீங்கள் இப்படி இன்னும் பல பண்பான யாழ்கள உறவுகளோடு கருத்தாடுவதே ஒரு தனி சுகம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2021 at 08:59, Paanch said:

அவர் ஓடியிருக்க மாட்டார்....! அட ஒரு தமிழன் என்னாமா என் சிங்களத்தைப் பேசுகிறான் என்ற உணர்வின் ஆனந்தத்தில் முன் கனிகள் மார்பில் அழுந்தக் கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்திருப்பார்.!!😋

On 3/5/2021 at 14:46, சுப.சோமசுந்தரம் said:

நான் ஈழத்தமிழர் களத்தில் நின்றதில்லை. ஆகையால் இவ்விடயத்தில் கருத்துச் சொல்ல எனக்குப் பெரியளவில் தகுதியில்லைதான். இருப்பினும் ஏதோ சொல்லத் தோன்றுகிறது. தமிழர்க்கு அத்துணைக் கொடுமைகள் அரங்கேறிய பிறகும் அவை பற்றி அப்பெண் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவள் பாதிக்கப்பட்வர்களிடமே அக்கொடுமைகளை நியாயப்படுத்துவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

               ஒரு எதிரி இனப்பெண் வன்முறையில் இறங்கினால் அவளை நாம் தாக்குவதையோ, தேவையானால் கொல்வதையோ என்னால் நியாயப்படுத்த முடிகிறது. ஆனால் அவளது பெண்மையை சொல்லிலோ செயலிலோ மலிவு படுத்துவது நமக்கு உகந்ததல்ல என்பது என் கருத்து. தலைவர் பிரபாகரன் பெண்மை மலிவுபடுத்தப்படுவதை அனுமதிப்பதில்லை என்று கேள்வியுற்றிருக்கிறேன். சில சமயங்களில் எதையாவது முறைதவறிக் கிண்டல் செய்துவிட்டு நான் வருந்தியிருக்கிறேன். எனவே எனது இக்கருத்தை ஏதோ நான் இடித்துரைப்பதாக தோழர் Paanch எடுத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தில் நம் எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.

On 5/5/2021 at 20:27, Sasi_varnam said:

உண்மையில் இதை நான் கவிதை நயமாகத்தான் பார்த்தேன்.   

On 6/5/2021 at 04:49, சுப.சோமசுந்தரம் said:

உங்கள் எழுத்து பண்பாட்டின் வெளிப்பாடு. சிறந்த மொழிநடைக்கு எடுத்துக்காட்டு.  நான் எழுதியதற்கு உங்கள் எழுத்து மெருகூட்டியது என்பதே உண்மை.

On 6/5/2021 at 05:59, சுப.சோமசுந்தரம் said:

பதிவு ஒரு விடயத்தில் ஆரம்பித்து வேறு விடயத்திற்குச் செல்லக் காரணியாகிறேனோ என்று முதலில் தயக்கம். பரவாயில்லை, உறவுகளுடன் பேசத்தானே பதிவு என்று தொடர்கிறேன்.

நானும் உண்மையைச் சொல்வதானால், முதலில் என்னுள் உறையும் இலக்கிய ரசிகனே வெளிப்பட்டான். பொதுவாக இலக்கியங்களில் ரசிக்கும் போதும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போதும், பெண்ணின் உடல் காட்சிப்படுத்தப் படுகிறதே என்று என்னை ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. தவறென்றால் எல்லாப் பழியும் வள்ளுவனுக்கும் ஏனையோருக்கும் என்று என் மனதுக்கு நான் சொல்லிக் கொள்வேன். நீங்கள் குறித்துள்ள வரியைத் தோழரின் பதிவில்  வாசித்ததும் எனக்கு நினைவில் வந்தது சீவக சிந்தாமணியில் எனக்குத் தெரிந்த வரி, "இலைகொள் பூந்தார் உழுத இன்ப வருத்தம் நீங்க" என்பதுவே.

ஆனால் ரசனைக்கும் இடம், பொருள், ஏவல் உண்டே என்று எனக்கு மின்னலடித்தது. பதிவில் உள்ள சிங்களப் பெண் ஏதோ இலக்கியத்தின் கற்பனைப் படைப்பு அல்லவே. நம்முடன் விவாதம் செய்யும் நிஜம் அப்பெண். போர்க்களத்தில் நம்முடன் பொருது மரித்த ஒரு பெண்ணின் ஆடை விலகியிருப்பின் நம்மிடமுள்ள துணியையோ ஆடையையோ வைத்து மறைத்து விட்டுக் கடந்து செல்வதுதானே நமக்கான போர் அறம் !

ஒரு ஜுஜுபி மேட்டருக்கு இவ்வளவு build up தேவையா என்று எழுதி முடித்த பிறகுதானே தோன்றுகிறது ! சொல்ல வந்தது உங்களுக்குத் தோன்றிய கவிதை நயம் நல்ல கலை ரசனையுள்ள எவருக்கும் தோன்றுவதுதான் என்பதுவே.

பாஞ்ச்  அண்ணையின்  கருத்துக்கு... 
பேராசிரியர்  சுப. சோமசுந்தரம் ஐயா அவர்கள் எழுதிய கருத்தும், 
அதன் பின்... சசிவர்ணம் எழுதிய கருத்தும், மனதிற்கு இதமாக இருந்தது.

சசி வர்ணத்தின், பார்வையில் தான்... நானும்  அந்தக் கருத்தை வாசித்தேன்.

அதற்குப் பின்... நடந்த உங்களது கருத்து பரிமாற்றங்கள் நெகிழ வைத்தது மட்டுமன்றி,
நீங்கள் இருவரும்... பண்பட்ட மனிதர்கள் என்பதை எமக்கு காட்டியது.

மனிதர் எல்லோரும்... எல்லா நேரமும்,
ஒரே... மன நிலையில் இருக்க  மாட்டார்கள்.
காலையில் உற்சாகமாகவும், மாலையில் சோம்பலாகவும்... இருப்பார்கள்.
சிலர், அதற்கு எதிரான...  சிந்தனையில் இருப்பார்கள்.

சில நாட்களில்...  முதல் நாள், நான் பதிந்த கருத்துக்களை....
அடுத்த நாள்... நானே, வாசிக்கும் போது... 
எழுதிய எனக்கே... ஏன் அப்படி எழுதினேன் என்று,
ஒரு மாதிரி இருக்கும். இது மனித இயல்பு  என நினைக்கின்றேன்.  

உங்கள் இருவரின்.... கருத்துப் பரிமாற்றம், மிகவும் சிறப்பானது என்பதே உண்மை.

முக்கிய பிற் குறிப்பு: நாங்கள், முக்கனிகளில்... ஒன்றான, மாங்கனியை பற்றி... 
12 வருடத்துக்கு முன்பு,  2009´ம்  ஆண்டே... இதைப் பற்றி ஆராய்ந்து, 
கலைமாமணி (டாக்டர், முனைவர்,PhD) பட்டம்  பெறுகின்ற அளவிற்கு, ஆராய்ச்சி  செய்துள்ளோம் என்பதனை, தங்களுக்கு... தாழ்மையுடன், தெரிவித்துக் கொள்கின்றேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, மாங்கனி பாடலை , 
இளைய தலைமுறையும், பார்க்க வேண்டும் என்பதற்காக...
ஈஸ்ட்மென்ட் கலரிலும், ஆங்கில மொழி பெயர்ப்பிலும்..
மீண்டும்.. வெளியிடுகின்றோம்.  ஹா....ஹா...  ஹா...   :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசத்தை பல வருடங்களுக்கு முன்பே யாழ்களத்தில் கண்டித்த நெடுக்காலபோவான் அவர்களுக்கு பாராட்டுக்கள்.👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.