Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு

புதுடெல்லி,
 
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை தெரிவித்து இருந்தது.  இதனால், தொடர்ந்து 9வது நாளாக 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்தது.
 
இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சம் எண்ணிக்கையை இன்று கடந்து அதிர்ச்சி அளித்து உள்ளது.
 
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்து உள்ளது.
 
நாட்டில் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 
இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதுவரை மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா: `4 லட்சத்தைத் தாண்டிய ஒரு நாள் பாதிப்பு!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

கொரோனா

கொரோனா

01-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

Today at 12 PM

இந்தியாவில் கொரோனா நிலவரம்..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,91,64,969 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா பரிசோதனை
 
கொரோனா பரிசோதனை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,523. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,11,853-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 32,68,710 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,99,988 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 15,49,89,635 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

Today at 10 AM

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து..! 

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஓய்வின்றி இயங்கும் மருத்துவமனைகளில் தற்போது விபத்துகளும் அதிகரித்துள்ளன. மகாராஷ்டிராவில், ஆக்ஸிஜன் கசிவால் கொரோனா நோயாளிகள் பலியானதும், ஏ.சி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு நோயாளிகள் பலர் பலியானதும் அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது குஜராத் மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து
 
தீ விபத்து

குஜராத் மாநிலம், பாரூச் நகரில் படேல் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்தச் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முன்னர் பல கொரோனா நோயாளிகள் உடல் கருகியும் கடும் புகையினால் பாதிக்கப்பட்டும் பலியானார்கள். அதிகாலை நிலவரப்படி தீ விபத்தில் 12 பேர் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் மற்ற நோயாளிகள் வேறு பிரிவுக்கும், நகரின் மற்ற மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். பலியான 16 நபர்களில் 14 பேர் கொரோனா நோயாளிகள் எனவும், 2 பேர் செவிலியர்கள் எனவும் தெரியவந்திருக்கிறது.

https://www.vikatan.com/news/general-news/01-05-2021-just-in-live-updates

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்குத்தான் பாதிப்பும் இழப்பும் இந்த கொர்னோவ்  மூலம் பல வங்குரோத்து அரசுகளை  காப்பற்றி உள்ளது பேபி பூமர்ஸ் சுனாமியை இலகுவாக எதிர்கொண்டு விட்டார்கள் அந்த வருத்தம் இந்தவருத்தம் என்று அதிக சிலவுள்ள மருத்துவ வசதி வேண்டுவோர் காலம் குறுக்கப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆனந்த விகடனே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

நன்றி ஆனந்த விகடனே. 😂

சாதாரண மக்களின் அவலங்களை ரசிக்கும் குரூர மனம்😡

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

சாதாரண மக்களின் அவலங்களை ரசிக்கும் குரூர மனம்😡

இன்னொரு திரியில் நேத்து நைட்டு இத சொன்னதுக்குதா இவரும் இவருக்கு லைக் போட்டவரும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டித்தனம் செய்தவை...

இன்னும் சற்று நேரத்தில் இருவரும் இங்கு வந்து உங்கள ஏர்லயே பறந்து போய் மிதிக்க போரானுவ..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இன்னொரு திரியில் நேத்து நைட்டு இத சொன்னதுக்குதா இவரும் இவருக்கு லைக் போட்டவரும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டித்தனம் செய்தவை...

இந்தியாவை நம்பித்தான் புலிகள் போரிட்டார்கள். நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்பதால் அதற்குக் காரணமானவர்கள் அழியவேண்டும் என்று சாபம் போட்டிருப்பார்கள். அதுதான் கொரோனா மூலம் மக்கள் அழிய சந்தோஷம் அடைகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இந்தியாவை நம்பித்தான் புலிகள் போரிட்டார்கள். நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்பதால் அதற்குக் காரணமானவர்கள் அழியவேண்டும் என்று சாபம் போட்டிருப்பார்கள். அதுதான் கொரோனா மூலம் மக்கள் அழிய சந்தோஷம் அடைகின்றார்கள்.

பாவம் அந்த மக்கள்.. தமிழ் நாட்டு சோதரங்கள் இவனுங்க கக்குர வெசத்த வாசிச்சா நம்ம அரசியல் வாதிங்க அடிக்கும் போது நம்ப தொப்புள் கொடியும் ரெண்டு ஊம  குத்தா குத்தறானே..வலிக்கலயேனு சொல்லிக்குவாங்க...😥😥

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

சாதாரண மக்களின் அவலங்களை ரசிக்கும் குரூர மனம்😡

நான் குரூரமானவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.  நேர்மையாக, வெளிப்படையாக, முக்கியமாக நேருக்கு நேராக எவனையும் எதிர்கொள்ளும் ஒழுக்கமும் தைரியமும் எனக்கு இருக்கிறது. 

உங்களால் உங்களுக்கே உண்மையாக இருக்க முடியுமா..? இல்லையே.. 

என்னால் முடியாதது ஒன்றுதான்...அது

முகத்துதிக்காக போலியாக நடிக்க முடியாது. ஆனால் அது உங்களுக்கு கைவந்த கலையாச்சே..

எடுத்து விடுங்கள் அடுத்த புஸ்ஸ்ஸ்ஸ்வாணத்தை.. 😏

24 minutes ago, கிருபன் said:

இந்தியாவை நம்பித்தான் புலிகள் போரிட்டார்கள். நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்பதால் அதற்குக் காரணமானவர்கள் அழியவேண்டும் என்று சாபம் போட்டிருப்பார்கள். அதுதான் கொரோனா மூலம் மக்கள் அழிய சந்தோஷம் அடைகின்றார்கள்.

"அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்" என்பது சான்றோர் வாக்கு. 

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்" என்பதும் இன்னொன்று 

நான் சாதாரண மனிதன். இவற்றை நம்புபவன். 

புத்தகப் பூச்சியான உங்களுக்கு இந்த வாக்குகள் தெரியாமல் போனது ஏனோ ..

அதுசரி,

வாசிப்பதுடன் சரி, அதிலுள்ளவற்றை கிரகிப்பதில்லையே..

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாவம் அந்த மக்கள்.. தமிழ் நாட்டு சோதரங்கள் இவனுங்க கக்குர வெசத்த வாசிச்சா நம்ம அரசியல் வாதிங்க அடிக்கும் போது நம்ப தொப்புள் கொடியும் ரெண்டு ஊம  குத்தா குத்தறானே..வலிக்கலயேனு சொல்லிக்குவாங்க...😥😥

மன்னிக்கவும் ஓணாண்டி,

உங்கள் நடிப்பிற்கு expiration date முடிந்துவிட்டது. 

😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

மன்னிக்கவும் ஓணாண்டி,

உங்கள் நடிப்பிற்கு expiration date முடிந்துவிட்டது. 

😂

என்ன தல நொன்ட்ர கால்லயே போர்ராங்க போல...😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

நான் குரூரமானவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.  நேர்மையாக, வெளிப்படையாக, முக்கியமாக நேருக்கு நேராக எவனையும் எதிர்கொள்ளும் ஒழுக்கமும் தைரியமும் எனக்கு இருக்கிறது. 

உங்களால் உங்களுக்கே உண்மையாக இருக்க முடியுமா..? இல்லையே.. 

என்னால் முடியாதது ஒன்றுதான்...அது

முகத்துதிக்காக போலியாக நடிக்க முடியாது. ஆனால் அது உங்களுக்கு கைவந்த கலையாச்சே..

எடுத்து விடுங்கள் அடுத்த புஸ்ஸ்ஸ்ஸ்வாணத்தை.. 

கேள்வியை கேட்டு நீங்களே பதிலளிக்கும் அறிவுத்திறன் கொண்டவர் என்பதால் எனக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.😎

சாதாரண மக்களின் மரணங்களில் சந்தோஷம் கொள்ளும் குரூரமனம் கொண்டவர்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்களுடன் தினமும் பழகுபவர்கள்தான் அவதானமாக இருக்கவேண்டும்!

16 minutes ago, Kapithan said:

புத்தகப் பூச்சியான உங்களுக்கு இந்த வாக்குகள் தெரியாமல் போனது ஏனோ ..

அதுசரி,

வாசிப்பதுடன் சரி, அதிலுள்ளவற்றை கிரகிப்பதில்லையே..

ஆம். குப்பைகளை கிரகிப்பதில்லை.😄

24 minutes ago, Kapithan said:

நான் குரூரமானவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.  நேர்மையாக, வெளிப்படையாக, முக்கியமாக நேருக்கு நேராக எவனையும் எதிர்கொள்ளும் ஒழுக்கமும் தைரியமும் எனக்கு இருக்கிறது. 

உங்களால் உங்களுக்கே உண்மையாக இருக்க முடியுமா..? இல்லையே.. 

என்னால் முடியாதது ஒன்றுதான்...அது

முகத்துதிக்காக போலியாக நடிக்க முடியாது. ஆனால் அது உங்களுக்கு கைவந்த கலையாச்சே..

எடுத்து விடுங்கள் அடுத்த புஸ்ஸ்ஸ்ஸ்வாணத்தை.. 😏

"அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்" என்பது சான்றோர் வாக்கு. 

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்" என்பதும் இன்னொன்று 

நான் சாதாரண மனிதன். இவற்றை நம்புபவன். 

புத்தகப் பூச்சியான உங்களுக்கு இந்த வாக்குகள் தெரியாமல் போனது ஏனோ ..

அதுசரி,

வாசிப்பதுடன் சரி, அதிலுள்ளவற்றை கிரகிப்பதில்லையே..

🤦🏼‍♂️

உங்கள் கூற்றுப்படி, நம்பிக்கைப்படி  தெய்வம் நின்ற‍றுத்த‍து என்பது உண்மையானால்,  2009 ல் முள்ளிவாய்க்ககாலில் தெய்வம் நின்ற‍றுத்து அழிவை உண்டாக்கிய‍து ஏன்? அதுவும் முன்பு  செய்த ஏதோ வினைக்காக தெய்வம்  நின்ற‍றுத்த‍து என்று கூறுவீர்களா? அப்படியானால் தெய்வத்தின் வேலை இப்படி ஒருவரை வைத்து அடுத்தவரை போட்டு தள்ளுவதும் பின்பு அவரை வேறொருவரை வைத்து போட்டு தள்ளுவதுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கேள்வியை கேட்டு நீங்களே பதிலளிக்கும் அறிவுத்திறன் கொண்டவர் என்பதால் எனக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.😎

சாதாரண மக்களின் மரணங்களில் சந்தோஷம் கொள்ளும் குரூரமனம் கொண்டவர்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்களுடன் தினமும் பழகுபவர்கள்தான் அவதானமாக இருக்கவேண்டும்!

ஆம். குப்பைகளை கிரகிப்பதில்லை.😄

அப்போ ..

குப்பைகளை வாசிப்பிர்கள்..அப்படித்தானே

இதுவரை நல்ல புத்தகங்களை தொடவேயில்லையோ.😂

Just now, tulpen said:

உங்கள் கூற்றுப்படி, நம்பிக்கைப்படி  தெய்வம் நின்ற‍றுத்த‍து என்பது உண்மையானால்,  2009 ல் முள்ளிவாய்க்ககாலில் தெய்வம் நின்ற‍றுத்து அழிவை உண்டாக்கிய‍து ஏன்? அதுவும் முன்பு  செய்த ஏதோ வினைக்காக தெய்வம்  நின்ற‍றுத்த‍து என்று கூறுவீர்களா? அப்படியானால் தெய்வத்தின் வேலை இப்படி ஒருவரை வைத்து அடுத்தவரை போட்டு தள்ளுவதும் பின்பு அவரை வேறொருவரை வைத்து போட்டு தள்ளுவதுமா? 

உதைத்தானே உங்கள் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்..😂

துல்பனுக்கு நம் முன்னோர்களில் நம்பிக்கையில்லை போல.. 🤣

நீங்கள் எப்போது நாகரீகமடைந்தீர்கள்..😂

17 minutes ago, Kapithan said:

அப்போ ..

குப்பைகளை வாசிப்பிர்கள்..அப்படித்தானே

இதுவரை நல்ல புத்தகங்களை தொடவேயில்லையோ.😂

உதைத்தானே உங்கள் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்..😂

துல்பனுக்கு நம் முன்னோர்களில் நம்பிக்கையில்லை போல.. 🤣

நீங்கள் எப்போது நாகரீகமடைந்தீர்கள்..😂

நல்ல புத்தகங்கள் என்றால்  Mein Kampf ஐ சொல்லுகின்றீர்களா?

நாகரீகம் அடைவது என்பதை சிரிப்பு குறியுடன் பார்க்குமளவுக்கு உள்ளது. முன்னோர் சொன்னதை விடுங்கள் அதை நீங்கள் நம்பினால் நான் கூறியதையும் நம்ப தான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

1) கேள்வியை கேட்டு நீங்களே பதிலளிக்கும் அறிவுத்திறன் கொண்டவர் என்பதால் எனக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.😎

2) சாதாரண மக்களின் மரணங்களில் சந்தோஷம் கொள்ளும் குரூரமனம் கொண்டவர்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்களுடன் தினமும் பழகுபவர்கள்தான் அவதானமாக இருக்கவேண்டும்!

1) இதனை தெரிந்துகொண்ட புத்திசாலி கிருபன் எதற்காக எனது கருத்திற்குப் பதில் கருத்து எழுதுகிறீர்கள். 

உங்கள் கூற்று முன்னுக்குப் பின் முரணாகவல்லவா இருக்கிறது..?

("அட கிருபனே ஒரு முரண்நகை"என உள்ளூர நீங்கள் கூறுவது கேட்கிறது😀)

2) அப்போ .. சாதாரண மக்கள் அல்லாதோரின் மரணத்தில் மகிழ்வடையலாமா கிருபன்..? ஐயோ ஐயோ..

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

நல்ல புத்தகங்கள் என்றால்  Mein Kampf ஐ சொல்லுகின்றீர்களா?

நாகரீகம் அடைவது என்பதை சிரிப்பு குறியுடன் பார்க்குமளவுக்கு உள்ளது. முன்னோர் சொன்னதை விடுங்கள் அதை நீங்கள் நம்பினால் நான் கூறியதையும் நம்ப தான் வேண்டும். 

நான் எழுதுவதை வாசிக்கும் மிகச் சில இந்தியர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்பதைக் கூட விளங்கிக் கொள்ளாது எழுதுகிறேன் என்றா நினைக்கிறீர்கள் துல்பன்..?

சாதாரண மக்கள் தங்கள் உணர்வுகளை வெளியே கூற யோசிப்பார்கள். நான் பகிரங்கமாகக் கூறுகிறேன். 

இந்தியாவை மட்டுமே நம்பியிருந்த எங்களை இந்தியாவுக்கு மட்டுமே எதிரானவர்களாக மாற்றியது எது என்பதை இந்தியா சுய பரிசோதனை செய்ய வேண்டும் துல்பன்.  

மற்றயபடி, யதார்த்தம் விளங்காதவனல்ல நான். 

👍

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

1) இதனை தெரிந்துகொண்ட புத்திசாலி கிருபன் எதற்காக எனது கருத்திற்குப் பதில் கருத்து எழுதுகிறீர்கள். 

உங்கள் கூற்று முன்னுக்குப் பின் முரணாகவல்லவா இருக்கிறது..?

("அட கிருபனே ஒரு முரண்நகை"என உள்ளூர நீங்கள் கூறுவது கேட்கிறது😀)

2) அப்போ .. சாதாரண மக்கள் அல்லாதோரின் மரணத்தில் மகிழ்வடையலாமா கிருபன்..? ஐயோ ஐயோ..

🤦🏼‍♂️

நான் கருத்து எழுதினால் பொதுவாக வாசிப்பவர்களுக்குதான் எழுதுவது. 

நீங்களே உங்கள் கேள்விகளுக்கு பிடித்தமான பதில்களை போட்டுக்கொள்ளுங்கள்..😂spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

நான் கருத்து எழுதினால் பொதுவாக வாசிப்பவர்களுக்குதான் எழுதுவது. 

நீங்களே உங்கள் கேள்விகளுக்கு பிடித்தமான பதில்களை போட்டுக்கொள்ளுங்கள்..😂spacer.png

இதிலும் முரண்... 🤦🏼‍♂️

11 minutes ago, Kapithan said:

நான் எழுதுவதை வாசிக்கும் மிகச் சில இந்தியர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்பதைக் கூட விளங்கிக் கொள்ளாது எழுதுகிறேன் என்றா நினைக்கிறீர்கள் துல்பன்..?

சாதாரண மக்கள் தங்கள் உணர்வுகளை வெளியே கூற யோசிப்பார்கள். நான் பகிரங்கமாகக் கூறுகிறேன். 

இந்தியாவை மட்டுமே நம்பியிருந்த எங்களை இந்தியாவுக்கு மட்டுமே எதிரானவர்களாக மாற்றியது எது என்பதை இந்தியா சுய பரிசோதனை செய்ய வேண்டும் துல்பன்.  

மற்றயபடி, யதார்த்தம் விளங்காதவனல்ல நான். 

👍

1985 ம் ஆண்டே திம்பு பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் ஈழக்கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்பதை இந்தியா தெளிவாக  கூறிவிட்டது. அதன் பின்னர் 1987 ல் மீண்டும்  ஆணித்தரமாக கூறியதுஅதன் பின்னர் 1991 ன் பின்னர்  முழுமையாகவே கைகழுவி விட்டது மட்டுமல்ல முழுமையாக  எமக்கு எதிராகவே செயற்பட்டது. இது போராடிய புலிகளுக்கும் தெரியும். அவர்கள் இந்தியாவையோ வேறு எவரையுமோ நம்பி போராடவில்லை.   சாதாரண அரசியல் அறிவு கொண்ட,  போராட்டகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகள்  வாசித்த, தமிழ் மக்களும் தமிழீழ போராட்டத்திற்கு இந்தியா உதவி செய்யும் என்று 1987 ன் பின்னர் நம்பவில்லை.

 ஆனால் நீங்களும் இங்கு கருத்து எழுதும் சிலரும் மட்டும் இந்தியாவை  2009 வரை நம்பி இருக்கின்றீர்கள் என்பது எனக்கு உண்மையில் மிகபெரிய ஆச்சரியமே?  முடிந்தால்  1985 இல் இருந்து 2009 வரை வெளிவந்த பத்திரிகைகள் கிடைத்தால் வாசித்து பாருங்கள் எப்போது உதவுவதாக இந்தியா நம்பிக்கை கொடுத்த‍து என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

ஆனால் நீங்களும் இங்கு கருத்து எழுதும் சிலரும் மட்டும் இந்தியாவை  2009 வரை நம்பி இருக்கின்றீர்கள் என்பது எனக்கு உண்மையில் மிகபெரிய ஆச்சரியமே?

நானும்தான் பிரித்தானிய பாராளுமன்றம் முன்னர் போய் 2009 ஏப்ரல், மேயில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டேன். ஆனால் இந்தியாவே தீர்வு தா, சண்டையை நிப்பாட்டு என்று சுலோகங்களைப் பார்க்கவில்லை. இந்தியன் எம்பஸிக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. வீ வோன்ற் தமிழீழம், அவர் லீடர் பிரபாகரன் என்றுதான் கத்தினனாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

அப்ப, உங்களுக்கு ஒரு 5 அல்லது 6 வயது இருக்குமோ? ப்ரொபைல் படத்தில இப்பதானே 16 போலை கிடக்குது.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

1985 ம் ஆண்டே திம்பு பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் ஈழக்கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்பதை இந்தியா தெளிவாக  கூறிவிட்டது. அதன் பின்னர் 1987 ல் மீண்டும்  ஆணித்தரமாக கூறியதுஅதன் பின்னர் 1991 ன் பின்னர்  முழுமையாகவே கைகழுவி விட்டது மட்டுமல்ல முழுமையாக  எமக்கு எதிராகவே செயற்பட்டது. இது போராடிய புலிகளுக்கும் தெரியும். அவர்கள் இந்தியாவையோ வேறு எவரையுமோ நம்பி போராடவில்லை.   சாதாரண அரசியல் அறிவு கொண்ட,  போராட்டகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகள்  வாசித்த, தமிழ் மக்களும் தமிழீழ போராட்டத்திற்கு இந்தியா உதவி செய்யும் என்று 1987 ன் பின்னர் நம்பவில்லை.

 ஆனால் நீங்களும் இங்கு கருத்து எழுதும் சிலரும் மட்டும் இந்தியாவை  2009 வரை நம்பி இருக்கின்றீர்கள் என்பது எனக்கு உண்மையில் மிகபெரிய ஆச்சரியமே?  முடிந்தால்  1985 இல் இருந்து 2009 வரை வெளிவந்த பத்திரிகைகள் கிடைத்தால் வாசித்து பாருங்கள் எப்போது உதவுவதாக இந்தியா நம்பிக்கை கொடுத்த‍து என்று. 

ஆயுதப் போராட்டத்தில் ஏற்படக் கூடிய வெற்றி தோல்விகளை என்னால் விளங்கிக்கொள்ள முடியும். 

ஆனால் 2009 பேரழிவை..

இதனை இந்தியா நிச்சயம் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்காது என நம்புகிறேன். 

மற்றையது,

ஈழத் தமிழர்களின் இந்திய ஆதரவு என்பது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்து வந்தது. அந்த ஆதரவுத் தளத்தை இந்தியா தன்னிச்சையாக தானே அழித்துக் கொண்டது. 

ஆனால் எம்மக்களுக்குச் செய்த துரோகத்திற்கு இந்தியா பலனை அனுபவித்தேயாக வேண்டும். இதில் மாற்றுக் கருத்தில்லை. 

பாக்கு நீரிணை மிக விரைவில் சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டில் வரும். 

அப்போது இந்தியாவுக்குப்  புரியும் நம்பிக்கைத் துரோகத்தின் பலனை.

(ஆயுதப் போராட்டத்தில் வெற்றி தோல்வி என்பனவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளும் திறன் என்னிடம் இருக்கிறது. ஆனால் மக்களின் அழிவுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமான காரணம் என்பது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.)

14 minutes ago, கிருபன் said:

நானும்தான் பிரித்தானிய பாராளுமன்றம் முன்னர் போய் 2009 ஏப்ரல், மேயில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டேன். ஆனால் இந்தியாவே தீர்வு தா, சண்டையை நிப்பாட்டு என்று சுலோகங்களைப் பார்க்கவில்லை. இந்தியன் எம்பஸிக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. வீ வோன்ற் தமிழீழம், அவர் லீடர் பிரபாகரன் என்றுதான் கத்தினனாங்கள்.

இப்ப புத்தி தெளிந்துவிட்டதாக்கும்.. 🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

1985 ம் ஆண்டே திம்பு பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் ஈழக்கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்பதை இந்தியா தெளிவாக  கூறிவிட்டது. அதன் பின்னர் 1987 ல் மீண்டும்  ஆணித்தரமாக கூறியதுஅதன் பின்னர் 1991 ன் பின்னர்  முழுமையாகவே கைகழுவி விட்டது மட்டுமல்ல முழுமையாக  எமக்கு எதிராகவே செயற்பட்டது. இது போராடிய புலிகளுக்கும் தெரியும். அவர்கள் இந்தியாவையோ வேறு எவரையுமோ நம்பி போராடவில்லை.   சாதாரண அரசியல் அறிவு கொண்ட,  போராட்டகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகள்  வாசித்த, தமிழ் மக்களும் தமிழீழ போராட்டத்திற்கு இந்தியா உதவி செய்யும் என்று 1987 ன் பின்னர் நம்பவில்லை.

 ஆனால் நீங்களும் இங்கு கருத்து எழுதும் சிலரும் மட்டும் இந்தியாவை  2009 வரை நம்பி இருக்கின்றீர்கள் என்பது எனக்கு உண்மையில் மிகபெரிய ஆச்சரியமே?  முடிந்தால்  1985 இல் இருந்து 2009 வரை வெளிவந்த பத்திரிகைகள் கிடைத்தால் வாசித்து பாருங்கள் எப்போது உதவுவதாக இந்தியா நம்பிக்கை கொடுத்த‍து என்று. 

வரலாற்றின் சில பக்கங்களை அதுவும் உங்களுக்கு ஏற்காத பக்கங்களை தொலைத்த அல்லது தொலைத்தது போல் நடிக்கும் உங்கள் போன்றவர்களுக்கு விளக்கப் படத்துவது வீண் நேர விரயம் 

ராஜீவ் காந்தியின் தலைமையின் பின்பே ஈழத்தமிழர்களுக்கான இந்திய துரோகம் ஆரம்பித்தது. 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நன்றி ஆனந்த விகடனே. 😂

இந்தியாவில் இவ்வளவு பாதிப்பிற்கும் பிரதான காரணம் பி.1.167 என்ற புதிய கொரனா விகாரி! இந்த விகாரி வைரஸ் ஏற்கனவே ஐரொப்பாவிற்கும் வந்து விட்டது, கனடா வர அதிக நாட்கள் எடுக்காது! 

கப்ரன் வாழும் நகரத்தில் கப்ரன் இருப்பதால் "தெய்வம்" எல்லோருக்கும் "கவர்" கொடுக்கும் என நினைக்கிறேன்! 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.