Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஞ்சை பாருங்கோ எங்கடை சாறம். 💪😎

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம்.
சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.

The Bollywood way to deal with summer

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம்.
சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.

"சாரம்"  எனது, அபிமான உடை.
அதன்... வசதியை, பற்றி  1000 காரணங்கள் உள்ளது.

#  நாள் முழுக்க..... "ஜீன்ஸ்"  கால் சட்டையை,  போட்டுக் கொண்டு  அலைந்து..
வீட்டிற்கு, வந்தவுடன்...   முன்பு,  அம்மா  அனுப்பிய சாரத்தை, கட்டுவது  பேரானந்தம். ❤️

#  எனது பிள்ளைகள்.... சிறு வயதாக இருக்கும் போது...
அவர்களின், நண்பர்கள் வீட்டிற்கு விளையாட வருவார்கள்.
அப்போ... நான், கட்டிய சாரத்தை... பார்த்து விட்டு,
இன்னாரின்... அப்பா, வடிவான...  உடுப்பு (frock) போட்டிருக்குகிறார் என்று,
அவர்களது வீட்டிலும், பள்ளிக்  கூடங்களிலும்   சொல்லி உள்ளார்கள். 

#  நான்... வீட்டில் நிற்கும் நாட்களில்,  
தபால் காரன் மணி அடித்து, பார்சல் தரும் போது... 
என்னுடைய... சாரத்தை, அதிசயமாக பார்ப்பான்.

#  என்னால்... மறக்க, முடியாத... சோக  சம்பவம் இது. 
(பாஞ்ச்  அண்ணைக்கும், நன்கு தெரியும்)
நான், ஜேர்மனியில்... (Benno) என்ற ஜேர்மன் மனிதர் வீட்டில்,
பத்து வருடமாக  வசித்த போதும்... 
சாரம் கட்டி வாழ்ந்தேன்.

#  அவருக்கும்...  எனது, (கலாச்) சாரம், பிடித்துக் கொண்டதால்...
ஸ்ரீலங்காவில் இருந்து, அவருக்கு... பல நிறங்களில்,
"பற்றிக்" சாரங்களை... எடுத்து கொடுத்தேன்.   

#  அவருக்கு... அவ்வப் போது, வயோதிபத்தின் காரணமாக...
சில நாட்கள், மருத்துவ மனையில்  தங்க வேண்டி வந்த போதும்,
"அம்புலன்ஸ்" வந்தாலும், ஆட்டுக் குட்டி... வந்தாலும்,
சாரம் கட்டிக் கொண்டு தான்... போவார்.

#  டாக்குத்தர் மற்றும்  பணியாளர்கள் கேட்கும், கேள்விகளுக்கு...
சாரத்தின் மகிமையைப்  பற்றி .... தலை வெடிக்கும் அளவிற்கு விளக்கம் கொடுப்பார்.

#  இறக்கும்... போதும், அந்த  ஜேர்மனியர்.. சாரம்,  கட்டிய படியே... இறந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முக்கியமான விசயத்தை விட்டுப்போட்டு.....

நல்ல காத்தோட்டமா இருக்கும் எல்லோ...

அதுதான் ஜேர்மன் காரருக்கும் பிடிச்சுப்போட்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

முக்கியமான விசயத்தை விட்டுப்போட்டு.....

நல்ல காத்தோட்டமா இருக்கும் எல்லோ...

அதுதான் ஜேர்மன் காரருக்கும் பிடிச்சுப்போட்டுது. 

சஸ்பென்ரர், ஜட்டி, கோவணம்... போன்ற, சாமானுகளுக்கு... 
எதிரி தான்.... 
சாரம், லுங்கி, யங்கி... எல்லாம், அப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

முக்கியமான விசயத்தை விட்டுப்போட்டு.....

நல்ல காத்தோட்டமா இருக்கும் எல்லோ...

அதுதான் ஜேர்மன் காரருக்கும் பிடிச்சுப்போட்டுது. 

நான்... ஊரில், இருக்கும் காலங்களில்,
சாரத்துடன்... வீட்டிற்கு, வெளியே... வந்ததே இல்லை.
அவ்வளவிற்கு... அப்பாவின், கழுகுப் பார்வையும்.. கண்டிப்பும் இருந்தது,

எனக்கும்...  சாரத்தை, மடித்துக் கட்டிக் கொண்டு,
கந்தர்மட  சந்தியில்.. நின்று, சண்டித்தனம்  செய்ய.... ஆசை, இருந்தாலும்...
நல்லூர்... கந்தன்,  ஜேர்மனிக்கு,  போ...... என்று அனுப்பி விட்டான். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

கந்தர்மடத்திலை, வீட்டுக்கு வெளியாலை சாரம் கட்ட ஏலாது.

உங்கை ஜெர்மனியில், தபால்காரன் கொண்டு கிழவன் வரை சாரத்தின் மகிமையை பரப்பி இருக்கிறியள்.

நான் சாரம் படுக்கைக்கு மட்டுமே.... படுக்கை அறையை விட்டு சாரத்துடன் வெளியே வருவது இல்லை. கிழே தொலை காட்சி பார்ப்பதனால், ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டு தான் இறங்குவது. 

வீட்டில் மேசையில் இருந்து படிக்கும் அல்லது வேலை செய்யும் போது கூட சாரம் அணிவது இல்லை. 

காரணம், சாரம் சோர்வின் அல்லது, ஓய்வு எடுப்பதன் அடையாளம். அதனால் அதை போட்டுக்கொண்டால், சோம்பல் மன நிலையும் வந்துவிடும். இது எனது அப்பாவின் அறிவுரை. அதையே தான் உங்கள் அப்பாவும் சொல்லி வளர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உண்மையில், யாரையும் பகல் வேளைகளில் சாரத்துடன் பார்த்தால், சோம்பல் பிடித்தவர்கள் போலும் என்று எரிச்சல் வரும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நாதமுனி ... அண்ணே,
உங்கட கருத்தை, வாசித்து... தெளிவு பெற்றேன் ஐயா. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

நான்... ஊரில், இருக்கும் காலங்களில்,
சாரத்துடன்... வீட்டிற்கு, வெளியே... வந்ததே இல்லை.
அவ்வளவிற்கு... அப்பாவின், கழுகுப் பார்வையும்.. கண்டிப்பும் இருந்தது,

எனக்கும்...  சாரத்தை, மடித்துக் கட்டிக் கொண்டு,
கந்தர்மட  சந்தியில்.. நின்று, சண்டித்தனம்  செய்ய.... ஆசை, இருந்தாலும்...
நல்லூர்... கந்தன்,  ஜேர்மனிக்கு,  போ...... என்று அனுப்பி விட்டான். 

சிறித்தம்பி சாறத்தோடை ஊர் சுத்தி திரியுற சொகம் இருக்கே சொல்லி வேலையில்லை. அதுவும் சைக்கிளிலை காத்தோட்டமாய் ஆகா என்ன சுகம் என்ன சுகம்.....😁 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Nathamuni said:

கந்தர்மடத்திலை, வீட்டுக்கு வெளியாலை சாரம் கட்ட ஏலாது.

உங்கை ஜெர்மனியில், தபால்காரன் கொண்டு கிழவன் வரை சாரத்தின் மகிமையை பரப்பி இருக்கிறியள்.

நான் சாரம் படுக்கைக்கு மட்டுமே.... படுக்கை அறையை விட்டு சாரத்துடன் வெளியே வருவது இல்லை. கிழே தொலை காட்சி பார்ப்பதனால், ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டு தான் இறங்குவது. 

வீட்டில் மேசையில் இருந்து படிக்கும் அல்லது வேலை செய்யும் போது கூட சாரம் அணிவது இல்லை. 

காரணம், சாரம் சோர்வின் அல்லது, ஓய்வு எடுப்பதன் அடையாளம். அதனால் அதை போட்டுக்கொண்டால், சோம்பல் மன நிலையும் வந்துவிடும். இது எனது அப்பாவின் அறிவுரை. அதையே தான் உங்கள் அப்பாவும் சொல்லி வளர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உண்மையில், யாரையும் பகல் வேளைகளில் சாரத்துடன் பார்த்தால், சோம்பல் பிடித்தவர்கள் போலும் என்று எரிச்சல் வரும்.

அங்கை கன ஊர்களிலை சாறத்தோடை மட்டுமே ஆண் சிங்கங்களை காணலாம். அதிலையும் சாறத்தை மடிச்சு கட்டி(சண்டிக்கட்டு) கட்டிக்கொண்டு மீசையையும் ஒரு முறுக்கு முறுக்கி கொண்டு போவினம் எண்டால் அழகோ அழகு. சில ஊர்களிலை சாரம் கட்டினால் பட்டிக்காட்டான்,தோட்டக்காரர் எண்டு நக்கலாய் பாப்பினம்.ஆனால் இஞ்சை வெள்ளைக்காரன் ஒரு சின்னத்துண்டு துணியை சுத்தி கட்டிக்கொண்டு திரிஞ்சாலும் நாகரீகமாகத்தான் பாப்பினம்.

என்ன நான் சொல்லுறது சரியோ  பிழையோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சாரத்தை மடிச்சு கட்டினால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீளமாக கால் பாதம் வரை தொங்கினால், சோம்பல் காரர், வேலைக்கள்ளர் என்று அர்த்தம்.

என்ன சொல்லுறியள்?  😜

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பெரும்பாலும் சறம்தான் கட்டுவது.இலந்தைப்பழம் பொறுக்கினாலும் சரி இலுப்பை கொட்டை பொறுக்கினாலும் சரி எல்லாம் சண்டிக்கட்டுக்குள்தான்........ இங்கு வீட்டுக்குள் சறம்தான்......அதை விட கொடுமை யாரும் பரிசளிக்கிறதாய் இருந்தாலும் எனக்கு  சறம்தான் வாங்கி வருவினம்.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சாரத்தை மடிச்சு கட்டினால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீளமாக கால் பாதம் வரை தொங்கினால், சோம்பல் காரர், வேலைக்கள்ளர் என்று அர்த்தம்.

என்ன சொல்லுறியள்?  😜

முனியர்,
இது என்னைநக்கல் அடிக்கிற மாதிரி.நான் வீட்டைநிண்டு வேலை செய்யிறன் சாறத்தோடை தான்.நான் என்னுடைய வேலையை சொன்னநாளைக்கு அதிகப்படியாக ஒருநாளைக்கு முதல் எண்டாலும் முடிக்கிற ஆளாக்கும். ஆகவே உங்களுடைய எடுகோள் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

நாளடைவில் சாரம் கட்டுவது கூட வசதிக் குறைவாக  போக எங்கள் நண்பர்குழு நாலு முளம் வேஷ்டி கட்ட ஆரம்பித்த பின்   உச்சகட்ட வசதிகளுடன் புது வாழ்க்கை தொடங்கியது நினைவுக்கு வருகிறது. தெருவில் கூடுவது, கோவில், சினிமா இப்படி அனைத்துக்கும் நாலு முழம் வேஷ்டிதான். அது ஒரு தனி சுகம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

முனியர்,
இது என்னைநக்கல் அடிக்கிற மாதிரி.நான் வீட்டைநிண்டு வேலை செய்யிறன் சாறத்தோடை தான்.நான் என்னுடைய வேலையை சொன்னநாளைக்கு அதிகப்படியாக ஒருநாளைக்கு முதல் எண்டாலும் முடிக்கிற ஆளாக்கும். ஆகவே உங்களுடைய எடுகோள் பிழை.

காற் சட்டை (சோட்ஸ்) போட்டு கொண்டு வேலை செய்து பாருங்கள். மூன்று நாளுக்கு முன்னமே முடிப்பீர்கள்.... 😜

பியாமா போடுற வெள்ளைகள்... பிள்ளைகள் பெறுவது குறைவு கண்டியளே. 🤗

சாரம்... காத்தோட்டம்.... சும்மா இரவிடாது.... 👌

அந்தக்காலத்தில்.... பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக்கி 10க்கு குறையாமல் பெத்து தள்ளினார்கள். :grin:

சாரத்துக்கும், பியாமாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குது போலை கிடக்குது. 🤠

எதுக்கும் நிழலியானந்த சுவாமிகளிடம் அருள் வாக்கு கேட்ப்போம். 🙏

ஆ... அந்த சாரம் கட்டிய படியே செத்துப்போன ஜேர்மன் கிழவருக்கு, பிள்ளைகள் எத்தனை எண்டு, கேக்க மறந்து போனன். தமிழ் சிறியர், தவறணையாலா வாற நேரம் ஒருக்கா கேட்டு பாருங்கோ... நான் ஒருக்கா விதானையாரிட்ட போட்டு வரோணும்.     🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அங்கு பெரும்பாலும் சறம்தான் கட்டுவது.இலந்தைப்பழம் பொறுக்கினாலும் சரி இலுப்பை கொட்டை பொறுக்கினாலும் சரி எல்லாம் சண்டிக்கட்டுக்குள்தான்........ இங்கு வீட்டுக்குள் சறம்தான்......அதை விட கொடுமை யாரும் பரிசளிக்கிறதாய் இருந்தாலும் எனக்கு  சறம்தான் வாங்கி வருவினம்.......!   😁

எனக்கும் இப்படிக் கன சாரம் சேர்ந்து போச்சுது..! இப்ப திறந்து பார்த்தால்....சிலது தைக்காமலே புதுசா இருக்குது!

இங்கு ஒரு நண்பனிருந்தார்! ஒரு நாள் அவரது கார் இடையில நிண்டு போச்சு...உடன ஓடி வாங்கோ எண்டு போன் அடிச்சார்!

நானும் ஓடிப் போக....எங்கடா காரைக் காணோம் எண்டு தேடினால்....நண்பர் ஒரு சிவப்புச் சாரத்தோட ....பிரதான வீதியொன்றின் ஓரத்தில்....போனட்டைத் திறந்த படி நிற்க....அவர் நின்ற கோணத்தில்...சூரியனும், அவரைக் கூர்ந்து பார்க்க....சனம் எல்லாம் கோர்ண் அடித்த படி ...அந்தக் காட்சியைக் காணக் கோடிக் கண் வேண்டும்!

நான் சாரம் அதிகம் கட்டுவதில்லை!  காற் சட்டை வசதி கூடின மாதிரி எனக்குத் தெரியுது..!

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புங்கையூரன் said:

நான் சாரம் அதிகம் கட்டுவதில்லை!  காற் சட்டை வசதி கூடின மாதிரி எனக்குத் தெரியுது..!

ஓவொருத்தரா வருகினம்... :grin:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, suvy said:

அங்கு பெரும்பாலும் சறம்தான் கட்டுவது.இலந்தைப்பழம் பொறுக்கினாலும் சரி இலுப்பை கொட்டை பொறுக்கினாலும் சரி எல்லாம் சண்டிக்கட்டுக்குள்தான்........ இங்கு வீட்டுக்குள் சறம்தான்......அதை விட கொடுமை யாரும் பரிசளிக்கிறதாய் இருந்தாலும் எனக்கு  சறம்தான் வாங்கி வருவினம்.......!   😁

நான்  சிலோன்லையிருந்து கொண்டுவந்த சாறங்களைத்தான் இப்பவும் வைச்சு கட்டுறன்.😎
சறத்தை இழுத்து போர்த்து மூடிக்கொண்டு படுக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கெல்லோ 😄

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

நான்  சிலோன்லையிருந்து கொண்டுவந்த சாறங்களைத்தான் இப்பவும் வைச்சு கட்டுறன்.😎
சறத்தை இழுத்து போர்த்து மூடிக்கொண்டு படுக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கெல்லோ 😄

சாரம் இடுப்புக்கு மேலை போகப்படாது. இழுத்து மூடிக்கொண்டு படுத்தால், மூடப்படவேண்டிய ஏரியாக்கள் நிலைமை என்ன எண்டு யோசிக்க வேணும் கண்டியளே...

பிறகு பூச்சி, பூரான் கடிச்சு போட்டுது எண்டு, பரியாரியரிடம் திரியவேணும் எல்லோ...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

காற் சட்டை (சோட்ஸ்) போட்டு கொண்டு வேலை செய்து பாருங்கள். மூன்று நாளுக்கு முன்னமே முடிப்பீர்கள்.... 😜

பியாமா போடுற வெள்ளைகள்... பிள்ளைகள் பெறுவது குறைவு கண்டியளே. 🤗

சாரம்... காத்தோட்டம்.... சும்மா இரவிடாது.... 👌

அந்தக்காலத்தில்.... பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக்கி 10க்கு குறையாமல் பெத்து தள்ளினார்கள். :grin:

சாரத்துக்கும், பியாமாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குது போலை கிடக்குது. 🤠

எதுக்கும் நிழலியானந்த சுவாமிகளிடம் அருள் வாக்கு கேட்ப்போம். 🙏

ஆ... அந்த சாரம் கட்டிய படியே செத்துப்போன ஜேர்மன் கிழவருக்கு, பிள்ளைகள் எத்தனை எண்டு, கேக்க மறந்து போனன். தமிழ் சிறியர், தவறணையாலா வாற நேரம் ஒருக்கா கேட்டு பாருங்கோ... நான் ஒருக்கா விதானையாரிட்ட போட்டு வரோணும்.     🤗

யோவ் முனியர், கடுப்பேத்தாமல் எனக்கு ஒரு பிள்ளை தான் கண்டியளோ மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஒண்டுக்கு சந்தர்ப்பம் இருக்கு.நான் சொன்னது ஜீன்ஸ் அல்லது அரைக்காற்சட்டை போட்டால் பிந்தீடும் வேலை முடிக்க

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

சாரம் இடுப்புக்கு மேலை போகப்படாது. இழுத்து மூடிக்கொண்டு படுத்தால், மூடப்படவேண்டிய ஏரியாக்கள் நிலைமை என்ன எண்டு யோசிக்க வேணும் கண்டியளே...

பிறகு பூச்சி, பூரான் கடிச்சு போட்டுது எண்டு, பரியாரியரிடம் திரியவேணும் எல்லோ...

பூரான் கடிச்சு பூச்சி புழு உண்டாகட்டும் என்றுதான் மூஞ்சி வரைக்கும் இழுத்து மூடிக்கொண்டு படுகிறது......!  😎

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாரம் கட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வீடியோ/டெக் இருந்த காலத்தில் மாதவி/ஸ்ரிதேவி/சில்க் ஸ்மிதா போன்றவர்கள்  நடித்த படங்களை இரவு பார்த்துவிட்டு சில தடவைகள் சாரம் கட்டி தூங்க முயற்சி செய்தேன் காலையில் கண்விழித்து பார்த்தால் சாரம் எல்லாம் நனைந்து இருக்கும் எனோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

நான் சாரம் கட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வீடியோ/டெக் இருந்த காலத்தில் மாதவி/ஸ்ரிதேவி/சில்க் ஸ்மிதா போன்றவர்கள்  நடித்த படங்களை இரவு பார்த்துவிட்டு சில தடவைகள் சாரம் கட்டி தூங்க முயற்சி செய்தேன் காலையில் கண்விழித்து பார்த்தால் சாரம் எல்லாம் நனைந்து இருக்கும் எனோ தெரியவில்லை.

விடிய எழும்ப பிந்தியிருக்கும், தண்ணி ஊத்தி எழுப்பியிருப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாறம் கட்டுறதாலை  வெய்யில் வெக்கைக்கும் பிரயோசனப்படும் எண்டதை இந்த இடத்திலை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.😎

sa.png

sa1.png

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நான்  சிலோன்லையிருந்து கொண்டுவந்த சாறங்களைத்தான் இப்பவும் வைச்சு கட்டுறன்.😎
சறத்தை இழுத்து போர்த்து மூடிக்கொண்டு படுக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கெல்லோ 😄

அதே ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

நான் சாரம் கட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வீடியோ/டெக் இருந்த காலத்தில் மாதவி/ஸ்ரிதேவி/சில்க் ஸ்மிதா போன்றவர்கள்  நடித்த படங்களை இரவு பார்த்துவிட்டு சில தடவைகள் சாரம் கட்டி தூங்க முயற்சி செய்தேன் காலையில் கண்விழித்து பார்த்தால் சாரம் எல்லாம் நனைந்து இருக்கும் எனோ தெரியவில்லை.

இரண்டு விசயம் பாருங்கோ...

சின்ன வயசில இருந்து சொல்லி வளர்ப்பினம், நித்தா கொள்ள போக முன்னம், சுச்சா போகவேணும் எண்டு.... 5 இல வளையாதது, 50ல கஸ்டம்.... சாரத்தை நனைக்கிறியள் எண்டால்.... இன்னும் சுச்சா போகாமல் தான் படுக்க போகிறீங்கோ போலை.... சீ... கூடாத பழக்கம்.

இரண்டாவது, கண்ணாடி போட்டுக்கொண்டு படுக்க வேண்டும். படுத்திருந்தால், அவையண்ட மேக்கப் தெளிவா இருந்திருக்கும். தெளிவாய் இல்லாததால், பே... பிசாசு எண்டு பயந்தும் சுச்சா போயிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.