Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“புதிய அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தல்”

(ஆர்.ராம்)

இலங்கைத்தீவில் சரித்திர ரீதியாக வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரித்தைக் கொண்டவர்களாக உள்ள நிலையில் ஒருமித்த நாட்டினுள் அவர்களுக்கான உள்ளக சுயநிர்ணத்தை மறுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

sampanthan.jpg

அத்துடன், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதோடு, ஐ.நா.தீர்மானங்களுக்கு அமைவாகவும், சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாகவும் உள்நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக, அரசாங்கம் பொறுப்புக் கூறலைச் செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

போர் நிறைவுக்கு வந்து 12ஆண்டுகளாகின்ற நிலையிலும், ராஜபக்ஷ அரசாங்கம் போர் வெற்றி வாதத்தினை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றதோடு, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்விதமான சமிக்ஞைகளையும் காண்பிக்காது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிராகரித்துள்ள நிலையில் தமிழ் மக்களின் விவகாரங்களை அடுத்தகட்டத்திற்கு எவ்விதமாக நகர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது. 1949ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாது தற்போது வரையில் தாமதிக்கப்பட்டு வருகின்றது. 

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான மக்கள். சரித்திர ரீதியாக குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றவர்கள். ஆகவே தமிழ் மக்கள் சுயநிர்ண உரிமைக்கு உரித்துடையவர்கள். அவர்களுக்கான உள்ளக சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அதனை தவிர்க்க முடியாது. 

பிரதமர்களான, டி.எஸ்.சேனாநாயக்க, ட்டலி சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதிகளான, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ஆகிய அனைத்து தலைவர்களும்; தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவும், அவருடைய சகேதாரரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறியுள்ளார்கள். 

புதிய அரசியலமைப்புக்கான வரைபினை தயார் செய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவானது, எம்மைத் தொடர்பு கொண்டு, எமது அபிப்பிராயங்களை கோரியது. நாங்கள் எழுத்து மூலமாகவும் வாய்மொழிமூலமாகவும் எமது நீண்டகாலக் கோரிக்கையை தெளிவுபடுத்திக் கூறியுள்ளோம். 

ஆகவே அந்த நிபுணர்குழுவினால் வரையப்படும் புதிய அரசியலமைப்புக்கான வரைவு நியாயமான முறையில் தாமதமின்றி அமுலாக்கப்பட வேண்டும். 

இந்த விடயத்தில் தொடர்ச்சியாக தாமதங்கள் நிலவுமாக இருந்தால், அக்கருமத்தினை செயற்படுத்த முடியாது கைவிடும் நிலையே ஏற்படும். ஆகவே அவ்விதமான ஒரு நிலைமைக்குச் செல்வதற்கு நாட்டின் தலைவர்கள் இடமளித்துவிடக்கூடாது. 

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அடுத்த பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பினை உருவாக்கி செயற்படுத்தவுள்ளதாக கூறியிருக்கின்றர். 

அவருடைய கூற்றின் பிரகாரம் ஒரு நியாயமான புதிய அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தக் கருமம் தாமதமாகின்றபோது அது ஈற்றில் கைவிடப்படும் சூழலை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். 

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படாத நிலைமைகள் காணப்படாதுவிட்டால் பிரிக்கமுடியாத, பிளவடையாத ஒருமித்த நாட்டினுள் அவர்களின் உள்ளக சுயநிர்ணயத்தினை அங்கீகரிப்பதற்கு சம்மதமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாக அமையும். 

அவ்விதமான உள்ளக சுயநிர்ணயத்தினை மறுதலிக்கும் வெளிப்பாடானது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.

இதனைவிடவும், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சர்வதேசத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். அவற்றை அவர்கள் நிராகரிப்பதாக தற்போது கூறினாரும் அது இயலாதகாரியமாகும். 

உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறுவதற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அதிலிருந்து அரசாங்கத்தினால் விலகி நிற்க முடியாது. 

மேலும், நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது கொரோனா பரவல் என்பதற்கு அப்பால் நாட்டில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளமையை தரவுகள் தெளிவாக காண்பிக்கின்றன. 

இதற்கு முப்பது வருடங்களாக நடைபெற்ற போர் காரணமாக இருக்கின்றது. அதேநேரம், போர் நிறைவு பெற்றதன் பின்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வினைக் கண்டு முன்னோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

உள்நாட்டில் நிரந்தரமான சமாதானம், சமத்துவம், இனங்களுக்கான கௌரவமான வாழ்வு என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே உலகநாடுகளின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். பொருளாதார ரீதியாக முன்னோக்கி பயணிக்க முடியும். 

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காது பொருளாதார ரீதியாக முன்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியமாகும். ஆகவே பொருளாதாரம் உள்ளிட்ட நாட்டின் எதிர்காலத்திற்காக தமிழ் மக்களின் அபிலாஷைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் சாசன ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். 

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன் | Virakesari.lk

  • Replies 196
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு... மூன்று மாதம் பாராளுமன்றத்தில் லீவு கொடுத்தாப் பிறகு... வீட்டில் இருந்து “சவுண்டு” கொடுக்கிறார். 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ..!  இந்த எச்சரிப்பையும், நச்சரிப்பையும் கேளாமல் மூன்று மாதம் எப்படி கழியப்போகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிதரால் தனிழினம் அடைந்த ஒரு நண்மையையாவது எவராலும் கூறமுடியுமா? உண்மையாகத்தான் கேட்கிறேன். 

சிலர் பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று இப்போது அடிக்கடி எண்ணத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

16 minutes ago, vanangaamudi said:

சிலர் பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று இப்போது அடிக்கடி எண்ணத் தோன்றுகிறது.

ஆக....  இவர்,  பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று இப்போது அடிக்கடி எண்ணத் தோன்றுகிறது. 🤣

நாட்டை விட்டு ஓடிப்போன சில்லறைகள் சம்பந்தருக்கு  துரோகி பட்டம் கொடுத்து  திட்டிக்கொண்டே இருந்த போதிலும்  தாயகத்தில் திருகோணமலை தொகுதி மக்கள் 39000 வாக்குகள் வழங்கி அவரை கடந்த தேர்தலிலும்  தேர்தெடுத்து சிலருக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறால்கள். 😂😂😂😂😂😂😂😂 

அதற்காக சம்மந்தர் என்ற அரசியல்வாதியின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றில்லை. அவ்வாறு கேள்வி கேட்காமல் ஏக பிரதிநிதிகள் என்று கூறி சிலர்  செய்தது   அனைத்தையும் வாய்பொத்தி வேடிக்கை பார்தத பலனையே இப்போது அனுபவிக்கிறோம். அரசியலில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை துரோகி என்று திட்டும் கலாசாரத்தை உருவாக்கியது சம்பந்தர் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிதான். தமிழரசு கட்சியின் வழித்தோன்றல்கள் பதினாறு அடி பாய்ந்து அரசியல் கருத்து வேறுபாடுகளை துப்பாக்கிகளால் கொலை செய்து  தீர்தது கொண்டார்கள். இன்று அது முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்,  மீண்டும் பழைய தமிழரசு பாணியில் துரோகி என் திட்டி தீர்ககும் சுற்றுவட்டம். இதுவே தமிழரின் வீழ்சசிக்கான நச்சு வட்டம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

நாட்டை விட்டு ஓடிப்போன சில்லறைகள் சம்பந்தருக்கு  துரோகி பட்டம் கொடுத்து  திட்டிக்கொண்டே இருந்த போதிலும்  தாயகத்தில் திருகோணமலை தொகுதி மக்கள் 39000 வாக்குகள் வழங்கி அவரை கடந்த தேர்தலிலும்  தேர்தெடுத்து சிலருக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறால்கள். 😂😂😂😂😂😂😂😂 

"ஆலை,  இல்லாத ஊரில்.... இலுப்பம்  பூ, சக்கரை" என்ற பழமொழியை...  
நீங்கள் இதுவரை கேள்விப்  பட்டது இல்லை என நினைக்கின்றேன். :grin:

சம்பந்தர் ஐயாவுக்கு... விழுந்த வாக்குகள், அந்த ரகம்.
அதனை வைத்து, நீங்கள் பெருமிதம் கொள்வது... "வேஸ்ட்டு" 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

"ஆலை,  இல்லாத ஊரில்.... இலுப்பம்  பூ, சக்கரை" என்ற பழமொழியை...  
நீங்கள் இதுவரை கேள்விப்  பட்டது இல்லை என நினைக்கின்றேன். :grin:

சம்பந்தர் ஐயாவுக்கு... விழுந்த வாக்குகள், அந்த ரகம்.
அதனை வைத்து, நீங்கள் பெருமிதம் கொள்வது... "வேஸ்ட்டு" 🤣 

  ஆங்.... அது!  தமிழ்த்தேசியத்தை மக்கள் இன்னும் நேசிக்கிறார்கள், உரிமை பெறவேண்டும் என்னும் ஆசை அவர்களுக்கு  இன்னும் உண்டு. இவர்கள் அந்தப்பெயரையும், இவர்களின் பேச்சையும் நம்பி இவர்களின் மானங் காக்கிறார்கள். வேறொருவர் வந்து தம் ஆசையை கலைத்து விடக்கூடாது என கவனமாக இருக்கிறார்கள். அதில் இவர்கள் குளிர் காய்கிறார்கள். 

11 minutes ago, தமிழ் சிறி said:

"ஆலை,  இல்லாத ஊரில்.... இலுப்பம்  பூ, சக்கரை" என்ற பழமொழியை...  
நீங்கள் இதுவரை கேள்விப்  பட்டது இல்லை என நினைக்கின்றேன். :grin:

சம்பந்தர் ஐயாவுக்கு... விழுந்த வாக்குகள், அந்த ரகம்.
அதனை வைத்து, நீங்கள் பெருமிதம் கொள்வது... "வேஸ்ட்டு" 🤣 

தமிழ் சிறி, நாம்  பெருமிதம் கொள்வதற்கு தமிழ் தலைமைகளின் கடந்த 70 வருட அரசியலில் எதுவுமே இல்லை. எமக்கு பின் வரும் அடுத்த தலைமுறையாவது பெருமிதம் கொள்ளும் செயல்களை செய்து பெருமையுடன் வாழட்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

  ஆங்.... அது!  தமிழ்த்தேசியத்தை மக்கள் இன்னும் நேசிக்கிறார்கள், உரிமை பெறவேண்டும் என்னும் ஆசை அவர்களுக்கு  இன்னும் உண்டு. இவர்கள் அந்தப்பெயரையும், இவர்களின் பேச்சையும் நம்பி இவர்களின் மானங் காக்கிறார்கள். வேறொருவர் வந்து தம் ஆசையை கலைத்து விடக்கூடாது என கவனமாக இருக்கிறார்கள். அதில் இவர்கள் குளிர் காய்கிறார்கள். 

சரியான கருத்து... சாத்தான்.
இவர்கள்... தேர்தல் நெருங்கும் நேரம், ஒரு பேச்சும்...
வென்ற பின்.... சிங்களவனுக்கு முட்டுக் கொடுப்பதிலும், வல்லவர்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிழம்பு said:

உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறுவதற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அதிலிருந்து அரசாங்கத்தினால் விலகி நிற்க முடியாது. 

பல ஓப்பத்தங்களைக் கிழித்து எறித்து...நடைமுறைப்படுத்தாமால் விட்டவனைப்பார்த்து இப்படிக் கூறுகிறார் கொஞ்சம் கூட அறிவற்ற மனிதன் இன்றும் இவர் அரசியலில் இருப்பதே பிரச்சனை தீராதாதிற்க்கு முதல் காரணி  அரசியலமைப்பில்  தமிழருக்கு  ஆதரவாயிருந்த  பல சரத்துக்களை நீக்கிவிட்டார்கள்..அப்படி திட்டமிட்டு நீக்கியவனை  நோக்கி புதிய அரசியலமைப்பை தமிழருக்கு வரை என்றார். எப்படி எதிரியை திணற வைப்பது என்ற கலை தெரியாதவர் தமிழரில் சிறத்ததலைவர் உருவாவதற்க்கு இடைச்சலாகலிருப்பவர் இவரே தமிழர் தீர்வுக்கு தடையாகவுமிருக்காறார் இவரது அறிக்கைகள்...பேச்சுக்கள். செயல்கள். அனைத்துமே. கருத்துயற்றவை. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, tulpen said:

நாட்டை விட்டு ஓடிப்போன சில்லறைகள் சம்பந்தருக்கு  துரோகி பட்டம் கொடுத்து  திட்டிக்கொண்டே இருந்த போதிலும்  தாயகத்தில் திருகோணமலை தொகுதி மக்கள் 39000 வாக்குகள் வழங்கி அவரை கடந்த தேர்தலிலும்  தேர்தெடுத்து சிலருக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறால்கள். 😂😂😂😂😂😂😂😂 

அதற்காக சம்மந்தர் என்ற அரசியல்வாதியின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றில்லை. அவ்வாறு கேள்வி கேட்காமல் ஏக பிரதிநிதிகள் என்று கூறி சிலர்  செய்தது   அனைத்தையும் வாய்பொத்தி வேடிக்கை பார்தத பலனையே இப்போது அனுபவிக்கிறோம். அரசியலில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை துரோகி என்று திட்டும் கலாசாரத்தை உருவாக்கியது சம்பந்தர் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிதான். தமிழரசு கட்சியின் வழித்தோன்றல்கள் பதினாறு அடி பாய்ந்து அரசியல் கருத்து வேறுபாடுகளை துப்பாக்கிகளால் கொலை செய்து  தீர்தது கொண்டார்கள். இன்று அது முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்,  மீண்டும் பழைய தமிழரசு பாணியில் துரோகி என் திட்டி தீர்ககும் சுற்றுவட்டம். இதுவே தமிழரின் வீழ்சசிக்கான நச்சு வட்டம். 

அதே சில்லறை ஒன்றுதான் உயிரையே தியாகம் செய்து களத்தில் நின்று மக்களின் அபிலாஷைகளுக்காக நின்றவர்களை வசை பாடுது. இந்த நஞ்சு வட்டம் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதே சில்லறை ஒன்றுதான் உயிரையே தியாகம் செய்து களத்தில் நின்று மக்களின் அபிலாஷைகளுக்காக நின்றவர்களை வசை பாடுது. இந்த நஞ்சு வட்டம் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம்

ஒன்றா...? ஐயோ கடவுளே! தப்பித்தோம். 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, tulpen said:

தமிழ் சிறி, நாம்  பெருமிதம் கொள்வதற்கு தமிழ் தலைமைகளின் கடந்த 70 வருட அரசியலில் எதுவுமே இல்லை. எமக்கு பின் வரும் அடுத்த தலைமுறையாவது பெருமிதம் கொள்ளும் செயல்களை செய்து பெருமையுடன் வாழட்டும்.  

தமிழீழத் தேசியக்கொடி - தமிழ் விக்கிப்பீடியா  வேலுப்பிள்ளை பிரபாகரன் - தமிழ் விக்கிப்பீடியா 

ருல்ப்பன்... அந்த 70 வருடத்தில், புலிகளின் முக்கிய 35 வருட  அரசியல் தலைமையை...
உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக, வசதியாக.. மறைத்து விட்டீர்கள். :)

புலிகள் மூலம், 70 வீதம் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த, ஈழப் போராட்டத்தை..
காட்டிக் கொடுக்காமல், எல்லோரும் ஒற்றுமையாக... முன் எடுத்து இருந்திருந்தால்,
"தமிழ் ஈழம்" என்றொரு நாடு, பிறந்து இருக்கும். ❤️

ஹ்ம்ம்... தமிழனுக்கு, அந்தக் கொடுப்பினை...  இல்லாமல் போய் விட்டது. 😢

Edited by தமிழ் சிறி

16 minutes ago, விசுகு said:

அதே சில்லறை ஒன்றுதான் உயிரையே தியாகம் செய்து களத்தில் நின்று மக்களின் அபிலாஷைகளுக்காக நின்றவர்களை வசை பாடுது. இந்த நஞ்சு வட்டம் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம்

அரசியலில் கருத்து ரீதியாக பதில் சொல்ல முடியாத போது இறந்த மாவீரர்களை துணைக்கு அழைப்பது உங்களைப் போன்றோரின் வழமையான உத்தி.  அரசியல் விவாதத்தில் மாவீரரகளை கேடயமாக பயன் படுத்துவது பாசாங்கு தமிழ் தேசியத்தின் உத்திகளில் ஒன்று. மாவீரர்களை கேடயமாக பயன் படுத்தாது அவர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள். அரசியல் தீர்மானங்கள் பற்றிய விவாததமில் அரசியல் கருத்துக்கள் மூலம் அதை எதிர்கொள்வதே சரியானதாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய அரசு நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம் – இரா.சம்பந்தன்

sambandhan-1561952052.jpg
 28 Views

இலங்கையில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உச்சமடைவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்று குற்றம் சுமத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த அரசு  மக்களைப் பேரவலத்துக்குள் தள்ளி நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது வரையில் கொரோனாவால் 158,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சம்பந்தன்,

 “அரசு கூறும் புத்தாண்டு கொரோனா கொத்தணிக்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல. அரசுதான் முழுப்பொறுப்பு.

தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் நாட்டைக் குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது அரசு முழுமையாக முடக்கியிருந்தால் இந்த பேராபத்தை மக்கள் சந்திக்க வேண்டி வந்திருக்க மாட்டாது.

கொரோனா தொற்று அசுர வேகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தபோது அது தொடர்பில் துளியளவும் கவனம் செலுத்தாத அரசு, கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்குடனே செயற்பட்டது. அதில் தற்போது அரசு வெற்றியும் கண்டுள்ளது. ஆனால், நாடோ பேராபத்தில் சிக்கியுள்ளது” – என்றார்.

https://www.ilakku.org/?p=50390

31 minutes ago, தமிழ் சிறி said:

தமிழீழத் தேசியக்கொடி - தமிழ் விக்கிப்பீடியா  வேலுப்பிள்ளை பிரபாகரன் - தமிழ் விக்கிப்பீடியா 

ருல்ப்பன்... அந்த 70 வருடத்தில், புலிகளின் முக்கிய 35 வருட  அரசியல் தலைமையை...
உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக, வசதியாக.. மறைத்து விட்டீர்கள். :)

புலிகள் மூலம், 70 வீதம் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த, ஈழப் போராட்டத்தை..
காட்டிக் கொடுக்காமல், எல்லோரும் ஒற்றுமையாக... முன் எடுத்து இருந்திருந்தால்,
"தமிழ் ஈழம்" என்றொரு நாடு, பிறந்து இருக்கும். ❤️

ஹ்ம்ம்... தமிழனுக்கு, அந்தக் கொடுப்பினை...  இல்லாமல் போய் விட்டது. 😢

தமிழ் ஈழம் என்ற எண்ணக்கரு அது உருவான காலம் தொட்டே வீழ்சசி போக்கிலேயே தொடர்ந்து சென்றது என்பது வெளிப்படையான உண்மை. புலிகள் இராணுவ வெற்றிகளை அடைந்து உச்சக்கட்ட இராணுவ பலத்தில் இருந்த 2001 காலப் பகுதியில் கூட தமிழீழம் என்ற எண்ணக்கரு உலகில் படுதோல்வி நிலையிலேயே இருந்தது. கிளிநொச்சி சென்ற அத்தனை மேற்குலக ராஜதந்திரிகளும் தமிழ்ஈழத்தை கைவிட்டு ஜதார்தத தீர்வுக்கு போகுமாறே புலிகளை வலியுறுத்தினர்.

அந்த ஜதார்ததத்தை புரியாத   அரசியல் தீர்மானங்கள் இன்று தமிழ் ஈழம் என்ற வார்ததையை காமடியாக மாற்றிவிட்டது.  அகவே தமிழ் ஈழம் 70 வீதம் வெற்றி பெற்றது என்ற உங்கள் காமடிக் கருத்தை primary படிக்கும் பிள்ளைகள் அது படித்து முடித்து Oberstufe போக முதல் கூறுங்கள். ஏனென்றால் Oberstufe போனபின் அதை கேட்டு சிரிக்கக்கூடும். 😂 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு... மூன்று மாதம் பாராளுமன்றத்தில் லீவு கொடுத்தாப் பிறகு... வீட்டில் இருந்து “சவுண்டு” கொடுக்கிறார். 😁

எண்ணெய் இல்லாமல் மங்கி எரியும் திரி இறுதியில் பெருஞ்சுடர் விட்டு எரிந்து அணைந்துவிடும். ?கண்டதில்லையோ? லீவுல போகப்போறார் பாருங்கோ! சத்தம் அதிகமாய் வருது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

எண்ணெய் இல்லாமல் மங்கி எரியும் திரி இறுதியில் பெருஞ்சுடர் விட்டு எரிந்து அணைந்துவிடும். ?கண்டதில்லையோ? லீவுல போகப்போறார் பாருங்கோ! சத்தம் அதிகமாய் வருது. 

16 minutes ago, உடையார் said:

கோட்டாபய அரசு நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம் – இரா.சம்பந்தன்

sambandhan-1561952052.jpg

ஐயா.. அடிக்கடி,  சவுண்டு  விட்டே... மூச்சு முட்டப்  போகுது.
"நிரந்தர லீவிலை"... போகப் போறாரோ... என்று  பயமாக இருக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, tulpen said:

அரசியலில் கருத்து ரீதியாக பதில் சொல்ல முடியாத போது இறந்த மாவீரர்களை துணைக்கு அழைப்பது உங்களைப் போன்றோரின் வழமையான உத்தி.  அரசியல் விவாதத்தில் மாவீரரகளை கேடயமாக பயன் படுத்துவது பாசாங்கு தமிழ் தேசியத்தின் உத்திகளில் ஒன்று. மாவீரர்களை கேடயமாக பயன் படுத்தாது அவர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள். அரசியல் தீர்மானங்கள் பற்றிய விவாததமில் அரசியல் கருத்துக்கள் மூலம் அதை எதிர்கொள்வதே சரியானதாக இருக்கும். 

முதலில் நான் எங்கே மாவீரர்கள் பற்றி எழுதினேன்??

ஏக பிரதிநிதிகள் என்று சிலர் செய்தது என்று நீங்கள் யாரை மறைமுகமாக குத்தினீர்களோ அவர்கள் பற்றி மட்டுமே நான் பதில் எழுதினேன். போய் கொஞ்சம் அனுபவம் செயல் மற்றும் வரலாற்றோடு வாருங்கள் நான் இங்கே தான் இருப்பேன்

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

1 hour ago, விசுகு said:

அதே சில்லறை ஒன்றுதான் உயிரையே தியாகம் செய்து களத்தில் நின்று மக்களின் அபிலாஷைகளுக்காக நின்றவர்களை வசை பாடுது. இந்த நஞ்சு வட்டம் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம்

யாரும் மாவீரர்களை வசைபாடவில்லை. நீங்கள் தான் அரசியல் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல்  மாவீரர்களை  இங்கு உங்களு துணைக்காக அழைக்கின்றீர்கள். தயவு செய்து அரசியல் விவாதங்களில் அரசியல் கருத்துக்களை மட்டும் பேசவும். 

14 minutes ago, விசுகு said:

முதலில் நான் எங்கே மாவீரர்கள் பற்றி எழுதினேன்??

ஏக பிரதிநிதிகள் என்று சிலர் செய்தது என்று நீங்கள் யாரை மறைமுகமாக குத்தினீர்களோ அவர்கள் பற்றி மட்டுமே நான் பதில் எழுதினேன். போய் கொஞ்சம் அனுபவம் செயல் மற்றும் வரலாற்றோடு வாருங்கள் நான் இங்கே தான் இருப்பேன்

நான் எங்கு மாவீரர களை பற்றி பேசினேன்? ஏக பிரதிநிதிகள் என்று தமிழரின் அரசியல் தீர்மானங்களை எடுத்த அனைத்து தலைமை மீதும் விமர்சனம் வைக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. அது மாவீரர்களை வசை பாடுவதாகாது என்பது உங்களுக்கு தெரிந்தாலும் கருத்தை எதிர்கொள்ள முடியாத போது அமைதியாக உறங்கும் மாவீரர களை உங்கள் அரசியலுக்காக கேடயமாக பயன்படுத்துகின்றீர்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

தமிழ் ஈழம் என்ற எண்ணக்கரு அது உருவான காலம் தொட்டே வீழ்சசி போக்கிலேயே தொடர்ந்து சென்றது என்பது வெளிப்படையான உண்மை. புலிகள் இராணுவ வெற்றிகளை அடைந்து உச்சக்கட்ட இராணுவ பலத்தில் இருந்த 2001 காலப் பகுதியில் கூட தமிழீழம் என்ற எண்ணக்கரு உலகில் படுதோல்வி நிலையிலேயே இருந்தது. கிளிநொச்சி சென்ற அத்தனை மேற்குலக ராஜதந்திரிகளும் தமிழ்ஈழத்தை கைவிட்டு ஜதார்தத தீர்வுக்கு போகுமாறே புலிகளை வலியுறுத்தினர்.

அந்த ஜதார்ததத்தை புரியாத   அரசியல் தீர்மானங்கள் இன்று தமிழ் ஈழம் என்ற வார்ததையை காமடியாக மாற்றிவிட்டது.  அகவே தமிழ் ஈழம் 70 வீதம் வெற்றி பெற்றது என்ற உங்கள் காமடிக் கருத்தை primary படிக்கும் பிள்ளைகள் அது படித்து முடித்து Oberstufe போக முதல் கூறுங்கள். ஏனென்றால் Oberstufe போனபின் அதை கேட்டு சிரிக்கக்கூடும். 😂 

தமிழ்ஈழம் விடுதலையடுயாமைக்கு பல காரணங்களுண்டு  அவை...

(1)=கிளிநொச்சிக்கு சென்ற மேற்குலகத்தவர் ராஐதந்திரிகளில்லை . அவர்கள் உளவாளிகள் இலங்கை..இந்தியா...போன்ற நாடுகளுகக்கு புலிகளைப்பற்றி  ..களநிலைமைபற்றி  தகவரல்களை வழங்கியவர்கள்...உண்மையில் ராஐதந்திரிகளாயிருந்தால்..2009...இருந்து_2021வரை என்ன செய்திருக்கிறார்கள் ?அவர்கள் சாத்தியம் என்ற தீர்வு எங்கே?இவர்களை ராஐதந்திரிகளென்று கிளிநொச்சிக்குள் அனுமதித்ததே முதல் தோல்வி

(2)=தமிழ்நாட்டுத்தமிழர் அரை சமஷ்டியட்சியில் வாழ்வதும்..முழுச்சமஷ்க்கு போராடாமாலிருப்பதும்..இந்தியா. அரைச்சமஷ்டிக்குமேல் இலங்கைத்தமிழருக்கு தீர்வு கிடைக்கப்படாது என்பதில் உடும்புப்பிடியாக நின்றதும்..இலங்கைப்பிரச்சனை உள்நாட்டுப்பிரச்சனை எனக்கூறிக்கொண்டு அடிக்கடி தேவையில்லமால் பக்கச்சார்பாக தலையிட்டது பல இயங்கங்களுக்கு ஒரே நேரத்தில் ஆயுதப்பயிற்ச்சியை வழங்கியது. பல இயங்க்கள் இந்தியா சொல்படி நடத்து அப்படி நடப்பது  விடுதலையைப் பாதிக்குமெனத்தெரித்தும். 

(3)=பல ஆயதக்கப்பல்கள் இந்தியாவின் உதவியுடன் அழிக்கப்பட்டது....ஆயுதமில்லாமால் எப்படி போராடமுடியும்?இலங்கையரசு ஆயுதமில்லாமால் போராடியிருக்குமா? புலிகளுக்கு ஆயுதம் கிடைக்கமால் செய்தும்...இலங்கைக்கு இலவசமாக ஆயுதத்தை வழங்கியும்  தமிழ்ஈழத்தை சாத்தியமில்லமால் செய்தது இந்தியா  தமிழ்ஈழம் சாத்தியமில்லையென்பது அடிப்படையற்ற வாதம்

(4)=தமிழ்ஈழம் இருக்குமிடம்...அதனைச்சூழவுள்ள நாடுகள்...அந்தநாடுகளைஆளும் தலைவர்கள் ..பாராளுமன்ற உறுப்பினராக..சட்டமன்ற உறுப்பினராக...பிரதமாராக...அமைச்சாராக...சுடலைக்கு செல்லும் விருப்பம்.  அந்தமக்களின் அரசியல் .பொருளாதர முன்னேற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளது..

(4)=ஒர் தலைவனுக்கு தேவையான தகுதிகள் அனைத்தும்  புலிகளின் தலைவருக்கு இருத்தது அது ஒன்றே  தமிழ்ஈழம் அமையப்போதுமானாதாகும்  தமிழ்ஈழம் மலராதாதிற்க்கு  அகக்காரணிகளைவிடப்  பிறக்காணிகளே அதிகம்

20 minutes ago, Kandiah57 said:

ஒரு நாட்டை ஸ்தாபிப்பதற்கான எமது ஆசைக்கு புற காரணிகள் மிக மிக அவசியம் என்றி ஜதார்ததத்தை புரிந்து கொள்வது அவசியம். உலக நாகள் அங்கீகரிக்காவிட்டால் எம்மால் எதுவுமே செய்ய முடியாது. ஆகவே முக்கியமாக அங்கீகரிக்கும் நாடுகளை உதாசீனம் செய்து இராணுவ வெற்றியை சாதிக்கலாம் என்று புறப்பட்டது என்ன விளைவை கொடுத்தது என்று அனைவருக்கும் தெரியும். வந்தவர்கள் ராஜதந்திரிகளோ உளவாளிகளோ என்பது எங்கள் பிரச்சனை அல்ல. அவர்களை எதிர்கொண்டு சிறப்பாக கையாண்டு அரசியல் தீர்மானங்களை எடுத்து கொண்டு நடத்துவது  போராடியவர்களின் முழுப்பொறுப்பே தவிர மக்களின் பொறுப்பு  அல்ல. 

நாம் அனைவரும் எமது தனிப்பட வாழ்வில்  எமது தவறால்  சிறிய இழப்பு வந்தாலும் அடுத்தமுறை அதே வேலையை செய்யும் போது அதே தவறை உணர்ந்து அந்த தவறை திருத்த என்ன செய்ய வேண்டுமோ அதை செய்மு அடுத்த முறை அதே இழப்பு எமக்கு வராமல் இருக்கவே முயலுவோம் அதுவே அரசியலுக்கும் பொருந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

தமிழ்ஈழம் விடுதலையடுயாமைக்கு பல காரணங்களுண்டு  அவை...

(1)=கிளிநொச்சிக்கு சென்ற மேற்குலகத்தவர் ராஐதந்திரிகளில்லை . அவர்கள் உளவாளிகள் இலங்கை..இந்தியா...போன்ற நாடுகளுகக்கு புலிகளைப்பற்றி  ..களநிலைமைபற்றி  தகவரல்களை வழங்கியவர்கள்...உண்மையில் ராஐதந்திரிகளாயிருந்தால்..2009...இருந்து_2021வரை என்ன செய்திருக்கிறார்கள் ?அவர்கள் சாத்தியம் என்ற தீர்வு எங்கே?இவர்களை ராஐதந்திரிகளென்று கிளிநொச்சிக்குள் அனுமதித்ததே முதல் தோல்வி

(2)=தமிழ்நாட்டுத்தமிழர் அரை சமஷ்டியட்சியில் வாழ்வதும்..முழுச்சமஷ்க்கு போராடாமாலிருப்பதும்..இந்தியா. அரைச்சமஷ்டிக்குமேல் இலங்கைத்தமிழருக்கு தீர்வு கிடைக்கப்படாது என்பதில் உடும்புப்பிடியாக நின்றதும்..இலங்கைப்பிரச்சனை உள்நாட்டுப்பிரச்சனை எனக்கூறிக்கொண்டு அடிக்கடி தேவையில்லமால் பக்கச்சார்பாக தலையிட்டது பல இயங்கங்களுக்கு ஒரே நேரத்தில் ஆயுதப்பயிற்ச்சியை வழங்கியது. பல இயங்க்கள் இந்தியா சொல்படி நடத்து அப்படி நடப்பது  விடுதலையைப் பாதிக்குமெனத்தெரித்தும். 

(3)=பல ஆயதக்கப்பல்கள் இந்தியாவின் உதவியுடன் அழிக்கப்பட்டது....ஆயுதமில்லாமால் எப்படி போராடமுடியும்?இலங்கையரசு ஆயுதமில்லாமால் போராடியிருக்குமா? புலிகளுக்கு ஆயுதம் கிடைக்கமால் செய்தும்...இலங்கைக்கு இலவசமாக ஆயுதத்தை வழங்கியும்  தமிழ்ஈழத்தை சாத்தியமில்லமால் செய்தது இந்தியா  தமிழ்ஈழம் சாத்தியமில்லையென்பது அடிப்படையற்ற வாதம்

(4)=தமிழ்ஈழம் இருக்குமிடம்...அதனைச்சூழவுள்ள நாடுகள்...அந்தநாடுகளைஆளும் தலைவர்கள் ..பாராளுமன்ற உறுப்பினராக..சட்டமன்ற உறுப்பினராக...பிரதமாராக...அமைச்சாராக...சுடலைக்கு செல்லும் விருப்பம்.  அந்தமக்களின் அரசியல் .பொருளாதர முன்னேற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளது..

(4)=ஒர் தலைவனுக்கு தேவையான தகுதிகள் அனைத்தும்  புலிகளின் தலைவருக்கு இருத்தது அது ஒன்றே  தமிழ்ஈழம் அமையப்போதுமானாதாகும்  தமிழ்ஈழம் மலராதாதிற்க்கு  அகக்காரணிகளைவிடப்  பிறக்காணிகளே அதிகம்

கந்தையா அண்ணை...  நல்ல, ஒரு பார்வையில்,  இந்தக் கருத்தை எழுதி உள்ளீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.