Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

15 hours ago, ரஞ்சித் said:

சம்பந்தனின் அரசியல் எதுவித பிரயோசனமும் அற்றது. அவரது அரசியல் சாணக்கியம் இதுவரையில் தமிழருக்கு எதனையும் தரவில்லை. அதனால்த்தான் அப்படி எழுதினேன். 

புலிகளுக்கு 30 வருடம் கொடுத்தீர்கள், எங்களுக்கு 12 வருடம் தானே தந்திருக்கிறீர்கள், இன்னும் 18 வருடம் வேண்டும் என்று கேட்பது தமிழரின் தலையில் இனியும் மாவரைக்கத்தான் என்பது தெளிவு. புலிகளின் 30 வருட காலப் போராட்டத்திற்கு முன்னரே தமிழரசுக் கட்சி அரசியல் ஆரம்பித்து விட்டது. 1949 இலிருந்து அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள். புலிகள் காலத்திலும் அவர்கள் தமக்கான அரசியலை நடத்தினார்கள். ஆக, 72 வருடங்களாக அரசியல் நடத்தி, தமிழினத்தை நடுத்தெருவில் கொண்டுவந்துவிட்டு இப்போதும் அரசியல் பேசுகிறார்கள். இன்றும் அதே வெற்று வார்த்தைகள், வாய்ச்சவடால்கள். 

புலிகளுக்கு இவர்களின் அரசியலை விட்டு வெளியேறி, ஆயுதமுறையில் விடுதலையினை வென்றெடுக்கலாம் என்கிற உறுதி இருந்தது. அதை அவர்கள் குறிப்பிடத் தக்களவு செய்தும் காட்டினார்கள். தமிழ் மக்களின் அரசியலின் பொற்காலம் புலிகளின் காலம்தான். தமிழ் மக்களின் அரசியலின் ஒரே இயங்குசக்தியாக அவர்கள் இருந்தார்கள். அவர்களே எங்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தார்கள். இன்றுவரை புலிகள் போல தமிழ் மக்களின் வாழ்வில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாக்கம் செலுத்தியவர்கள் வேறு எவரும் இலர்.  இதை புலிகளுக்கு எதிராக எழுதுவதே தமது கடமை என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாய்வீச்சில் ஈடுபடுபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது விளங்கிக்கொள்ளக் கூடியதுதான். ஒருவேளை புலிகளின் அரசியல் வென்று, தமிழர்களுக்கான வாழ்வு மலர்ந்திருந்தால் அன்றும் கூட புலிகளின் அரசியலை இவர்கள் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால், இவர்களைப்பொறுத்தவரை தமிழ் மக்களின் அவலங்கள் என்று பேசுவதுகூட புலிகளை விமர்சிக்கக் கிடைத்த ஒரு காரணியாக மட்டும்தான், ஆனால் உண்மையான தேவை புலிகளை விமர்சிப்பது, அவர்கள் வென்றால் என்ன, தோற்றால் என்ன, இவர்களைப் பொறுத்தவரையில் வேறுபாடு இல்லை. 

இன்றும் சம்பந்தனின் அரசியல் கையாலாகத்தனத்திற்கும், அவரது அரசியலின் படுதோல்விக்குப் பின்னரும் தமிழ் மக்கள் அவரைத் தெரிவு செய்வதற்குக் காரணம் அவரின் கட்சிப் பெயரில் இருக்கும் "தமிழ்த் தேசியம்" எனும் சொல்லும் அக்கட்சியினரை விட்டால் ஏனையவர்கள் எல்லாம் அரசின் பினாமிகள் என்கிற காரணமும் மட்டும்தான். இன்னும் சொல்லப்போனால், சம்பந்தனே கூறியதுபோல, "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு" எனும் கட்சியில் ஒரு விளக்குமாறை நிறுத்தினாலும் வெல்லும் என்பதுபோல, சம்பந்தன் என்கிற ............. இன்றுவரை வென்றுவருகிறது.
 
குறிப்பு : நான்காவது பந்தியில் புள்ளிகளால் குறிப்பிடப்படும் சொல் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளது. அச்சொல்லால் குறிப்பிடப்படும் கருவி ஊரில் முற்றம் பெருக்கப் பயன்பட்டு வருகிறது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அரசியல் கையாலாகத்தனம் என்பது  சம்பந்தர் என்ற தனி மனிதருக்கு மட்டும் அல்ல. இதுவரை தலைமைவகித்த ஒட்டுமொத்த எல்லா தமிழ் தலைமைகளுக்கும் பொருந்தும். அது தான் இனிவரும் எந்த சந்தததியும் இதுவரை தலைமை வகித்த எந்த தலைமையையும் முன்னுதாரணமாக கொண்டு மீண்டும் அரசியல் தற்கொலை செய்யக் கூடாது.  

  • Replies 196
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அரசியல் கையாலாகத்தனம் என்பது  சம்பந்தர் என்ற தனி மனிதருக்கு மட்டும் அல்ல. இதுவரை தலைமைவகித்த ஒட்டுமொத்த எல்லா தமிழ் தலைமைகளுக்கும் பொருந்தும். அது தான் இனிவரும் எந்த சந்தததியும் இதுவரை தலைமை வகித்த எந்த தலைமையையும் முன்னுதாரணமாக கொண்டு மீண்டும் அரசியல் தற்கொலை செய்யக் கூடாது.  

ஆனால் புலிகளின்  காலம்  தமிழ்ஈழ அரசியலில் பொற்காலம்  புலிகள் இலங்கையரசிடம்  தமிழருக்கு எந்தத்தீர்வுமில்லை. என்பதை  ஐயத்துக்கிடமின்றி அறிந்து வைத்திருத்தனார்  அது தான் அவர்களின் ராஐதந்திரம்  மேலும் தோற்றுப்போகும் எந்த ஓப்பத்தையும் அவர்கள் இலங்கையரசுடன் செய்யவில்லை அவர்கள் விருமபியிருந்தால்.  செலவநாயகத்தைப்போல். பல ஓப்பந்தங்களை செய்திருக்க முடியும்..பிறகு எமாற்றிவிட்டார்களென்று. மேடை...மேடையாக..பேசித்திரியவிரும்பவில்லை ..எமாற்றும் ஓப்பந்தகளை செய்யமால் விட்டது அவர்களின் மிகப்பெரிய ராஐதந்திரம்..

35 minutes ago, Kandiah57 said:

 பொற்காலமோ பித்தளைக்காலமோ எனக்கு தெரியாது ஆனால் நான் அங்கு சென்றிருந்த போது,  அந்த காலம் இனி என்றுமே வேண்டாம் என்று, அங்கு நான் சந்தித்த மக்கள் தெரிவித்தார்கள்.  சில வேளை வெளி நாட்டில் வாழ்ந்த எங்களுக்கு தினமும் யுத்த செய்திகளை கேட்டு எத்தனை இராணுவம் இறந்தது என்று கிரிக்கெட்  ஸகோர் பார்தது மகிழ்வாக இருந்ததால் பொற்காலமாக தெரிந்ததோ என்னவோ. 

நான் அங்கு மக்கள் தெரிவித்ததையே தெரிவித்தேன். எனது சொந்த கருத்து அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

உங்கள் கருத்தா அல்லது மக்கள் கருத்தா என்று  பிரித்து அறியும் ஆற்றல் என்னிடமில்லை ..இங்கே எழுதும் கருத்து எழுதுபவரின் கருத்தாகவே பார்க்கிறேன்..அவ்வண்ணம் நான் எழுதுவது என் கருத்தேயாகும் .எதிர் கருத்து வைப்போரை உங்கள்போன்ற ஒரு மனிதனாகக் நேசிக்கப்பழகவும்..அங்குள்ள மக்கள் புலிகள் மீது அளப்பெரிய நம்பிக்கை  வைத்திருத்ததையும். ..இப்போ அவர்களில்லையென்று. கவலைப்படுவதும். நான். நனகு அறிவேன்.இராணுவம் இறப்பது எனக்கு மகிழ்ச்சியான. செய்தியில்லை. தமிழ்மக்களுக்கான தீர்வைக்கொடுத்து இந்தபபோரை தவிர்த்து  ...இறப்பைத்தவிர்த்துயிருக்கலாமெனக் கவலைப்பட்டிருக்கிறேன்.. நன்றி வணக்கம்..

27 minutes ago, Kandiah57 said:

நம்பிக்கை பற்றி நான் கருத்து தெரிக்கவில்லை. அது பற்றி எனக்கும் தெரியும். நீங்கள் கூறிய பொற்காலம் என்ற கருத்துக்கு மட்டுமே பதில் சொன்னேன். உணைமை அவ்வாறு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்🤣.

தலைப்பு மட்டும்தான் வேற - உள்ளே ஒரே விசயம்தான் மீள்சுழற்சியாகும்.

எம் எஸ்வி, இளையராஜா, ரஹ்மான், ஜீ வி, அனிருத், சந்தோஸ் வரைக்கும் வந்தாச்சு…நீங்கள் இன்னும் கண்டசாலாவிலயே நில்லுங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்🤣.

தலைப்பு மட்டும்தான் வேற - உள்ளே ஒரே விசயம்தான் மீள்சுழற்சியாகும்.

எம் எஸ்வி, இளையராஜா, ரஹ்மான், ஜீ வி, அனிருத், சந்தோஸ் வரைக்கும் வந்தாச்சு…நீங்கள் இன்னும் கண்டசாலாவிலயே நில்லுங்கோ🤣

தல எலகிரி வாப்பா... நோன்பு சாப்பாடு இன்னும் பெளத்தில இருக்கு வா...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

தல எலகிரி வாப்பா... நோன்பு சாப்பாடு இன்னும் பெளத்தில இருக்கு வா...

செல்லி வேல இல்லவா….

வட்டிலாப்துல புளுந்த தொதோல் போல ஈக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

செல்லி வேல இல்லவா….

வட்டிலாப்துல புளுந்த தொதோல் போல ஈக்கு.

தலீவா...🙏

கண்டதில மிக்க சந்தோசம். 🙏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

தலீவா...🙏

கண்டதில மிக்க சந்தோசம். 🙏

சந்தோசம் கற்பிதன். எப்படிச் சுகங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்🤣.

மாற்றம் ஒன்றே நிலயானது என்பது தோல்வி அடைந்ததே வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களிடம்
உங்களை கண்டது மிகவும் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்🤣.

தலைப்பு மட்டும்தான் வேற - உள்ளே ஒரே விசயம்தான் மீள்சுழற்சியாகும்.

எம் எஸ்வி, இளையராஜா, ரஹ்மான், ஜீ வி, அனிருத், சந்தோஸ் வரைக்கும் வந்தாச்சு…நீங்கள் இன்னும் கண்டசாலாவிலயே நில்லுங்கோ🤣

வணக்கம் கோஷன்  கண்டதில் மகிழ்ச்சி  தடுப்புஊசி போட்டீரகளா?..என்ன செய்வது  உள்ளதை தானே எழுத முடியும்..😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

வணக்கம் கோஷன்  கண்டதில் மகிழ்ச்சி  தடுப்புஊசி போட்டீரகளா?..என்ன செய்வது  உள்ளதை தானே எழுத முடியும்..😂

உண்மைதான் கந்தையா அண்ணை. இரெண்டும் போட்டுட்டன். ஓக்ஸ்போர்ட் ரெண்டாவது கொஞ்சம் தலையிடி தந்தது. மற்றும்படி ஓகே. 

நீங்கள்?

31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மாற்றம் ஒன்றே நிலயானது என்பது தோல்வி அடைந்ததே வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களிடம்
உங்களை கண்டது மிகவும் மகிழ்ச்சி.

உங்களையும் கண்டது சந்தோசம். 

இன்னும் உங்களை துல்பென் எண்டுதான் சனம் ஏசுதோ🤣. அல்லது இப்ப விளங்கீட்டோ🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்🤣.

தலைப்பு மட்டும்தான் வேற - உள்ளே ஒரே விசயம்தான் மீள்சுழற்சியாகும்.

எம் எஸ்வி, இளையராஜா, ரஹ்மான், ஜீ வி, அனிருத், சந்தோஸ் வரைக்கும் வந்தாச்சு…நீங்கள் இன்னும் கண்டசாலாவிலயே நில்லுங்கோ🤣

 அன்று தொடக்கம் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வராவிட்டால்...... கண்டசாலாவுடன் மட்டுமே  நிற்க முடியும்.

அனிருத்து மாதிரி சுமந்திரன் அடிச்சு முழங்கினாலும் கண்டசாலாவை மிஞ்சேலாமல் கிடக்கெல்லோ? 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்.

தலைப்பு மட்டும்தான் வேற - உள்ளே ஒரே விசயம்தான் மீள்சுழற்சியாகும்.

எம் எஸ்வி, இளையராஜா, ரஹ்மான், ஜீ வி, அனிருத், சந்தோஸ் வரைக்கும் வந்தாச்சு…நீங்கள் இன்னும் கண்டசாலாவிலயே நில்லுங்கோ🤣

நல்லா ஓடிய திரியை இப்படி மாத்திட்டேங்களே🤣

வணக்கம் கோஷன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 அன்று தொடக்கம் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வராவிட்டால்...... கண்டசாலாவுடன் மட்டுமே  நிற்க முடியும்.

அனிருத்து மாதிரி சுமந்திரன் அடிச்சு முழங்கினாலும் கண்டசாலாவை மிஞ்சேலாமல் கிடக்கெல்லோ? 😜

அந்தாள் அனிருத் மாரி பாடும் எண்டு பார்த்தால், ஆள் புல்லா பைலால இறங்கீட்டார்🤣

3 minutes ago, வாத்தியார் said:

நல்லா ஓடிய திரியை இப்படி மாத்திட்டேங்களே🤣

வணக்கம் கோஷன் 🙏

வணக்கம் அண்ணா.

3 hours ago, goshan_che said:

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்🤣.

தலைப்பு மட்டும்தான் வேற - உள்ளே ஒரே விசயம்தான் மீள்சுழற்சியாகும்.

எம் எஸ்வி, இளையராஜா, ரஹ்மான், ஜீ வி, அனிருத், சந்தோஸ் வரைக்கும் வந்தாச்சு…நீங்கள் இன்னும் கண்டசாலாவிலயே நில்லுங்கோ🤣

வணக்கம் கோஷான். நெடு நாட்கள் ஓய்வு. மீண்டும் கண்டதில் மகிழ்சசி. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

வணக்கம் கோஷான். நெடு நாட்கள் ஓய்வு. மீண்டும் கண்டதில் மகிழ்சசி. 

கண்டது சந்தோசம் துல்ப்ஸ். உங்களை மாரி என்னால் நீடித்து உழைக்க முடியாது😂. ஆனாலும் ஜேம்ஸ் பாண்ட் போல தனியா நிண்டே தண்ணி காட்டுறியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

 பொற்காலமோ பித்தளைக்காலமோ எனக்கு தெரியாது ஆனால் நான் அங்கு சென்றிருந்த போது,  அந்த காலம் இனி என்றுமே வேண்டாம் என்று, அங்கு நான் சந்தித்த மக்கள் தெரிவித்தார்கள்.  சில வேளை வெளி நாட்டில் வாழ்ந்த எங்களுக்கு தினமும் யுத்த செய்திகளை கேட்டு எத்தனை இராணுவம் இறந்தது என்று கிரிக்கெட்  ஸகோர் பார்தது மகிழ்வாக இருந்ததால் பொற்காலமாக தெரிந்ததோ என்னவோ. 

நான் அங்கு மக்கள் தெரிவித்ததையே தெரிவித்தேன். எனது சொந்த கருத்து அல்ல. 

நீங்கள் சந்தித்த மக்கள் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் சமனாகுமா சார்?

அந்த மக்கள் யாரவர்கள்? டக்ளஸ் அண்ணனின் மக்களா? அல்லது கருணா அங்கிளின் ஜனமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, goshan_che said:

கண்டது சந்தோசம் துல்ப்ஸ். உங்களை மாரி என்னால் நீடித்து உழைக்க முடியாது😂. ஆனாலும் ஜேம்ஸ் பாண்ட் போல தனியா நிண்டே தண்ணி காட்டுறியள்.

ஒன்றை குறை சொன்னால் அதை  சரிவர செய்து காட்ட வேண்டும். இல்லையேல் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்.

எங்களால் முடியுமென புலிகள் சகலதையும் முன்னுதாரணமாக செய்து காட்டினார்கள். நடைமுறையிலும் வைத்திருந்தார்கள்.  சிங்கள மக்களின் எந்த உரிமையிலும் நிலத்திலும் கை வைய்க்கவேயில்லை. நீங்கள் உங்கள் பாடு. நாங்கள் எங்கள் பாடு எனும் போக்கை முன்னிலைப்படுத்தினார்கள்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களின் வாயையும் கையையும் கட்டி வைத்து விட்டு அழித்தே விட்டார்கள்.

இருந்தும் புலிகள் மீது  பிழை சொல்பவர்கள் கடந்த பதினொரு வருடங்களில் ஏதாவது ஒன்றை செய்து காட்டினார்களா?

விட்ட பிழைகளை சொல்லிக்காட்டியே காலத்தை கடத்துபவர்களை "தண்ணி காட்டுபவர்" என பட்டம் வழங்கவும் ஒரு தைரியம் வேண்டும்.😎

எல்லாத்தையும் விட ஜேம்ஸ்சு பாண்டு பட்டம் வேறை....கோசான் சத்தியமாய் நீங்கள் வேறை லெவல்..😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சந்தோசம் கற்பிதன். எப்படிச் சுகங்கள்?

தப்பிப் பிழைத்துள்ளேன். 😂😂😂

தாங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஒன்றை குறை சொன்னால் அதை  சரிவர செய்து காட்ட வேண்டும். இல்லையேல் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்.

எங்களால் முடியுமென புலிகள் சகலதையும் முன்னுதாரணமாக செய்து காட்டினார்கள். நடைமுறையிலும் வைத்திருந்தார்கள்.  சிங்கள மக்களின் எந்த உரிமையிலும் நிலத்திலும் கை வைய்க்கவேயில்லை. நீங்கள் உங்கள் பாடு. நாங்கள் எங்கள் பாடு எனும் போக்கை முன்னிலைப்படுத்தினார்கள்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களின் வாயையும் கையையும் கட்டி வைத்து விட்டு அழித்தே விட்டார்கள்.

இருந்தும் புலிகள் மீது  பிழை சொல்பவர்கள் கடந்த பதினொரு வருடங்களில் ஏதாவது ஒன்றை செய்து காட்டினார்களா?

விட்ட பிழைகளை சொல்லிக்காட்டியே காலத்தை கடத்துபவர்களை "தண்ணி காட்டுபவர்" என பட்டம் வழங்கவும் ஒரு தைரியம் வேண்டும்.😎

எல்லாத்தையும் விட ஜேம்ஸ்சு பாண்டு பட்டம் வேறை....கோசான் சத்தியமாய் நீங்கள் வேறை லெவல்..😂

அண்ணை,

நீங்கள் மேலே எழுதியதில் எனக்கோ, ஏன் துல்பெனுக்கோ கூட மாற்று கருத்து இல்லை. 

ஆனால் நான் போல்ட் செய்த விடயத்தை ஆராயும் போதுதான் நமக்குள் விரிசல் ஏற்படுகிறது. 

எனது இப்போதைய நிலை - இதை ஆராய்ந்தும் ஒன்றும் ஆக போவதில்லை. ஆகவே அப்படியே விட்டு விடலாம். விட்டு விட்டேன்.

துல்பென் - இல்லை இதை ஆராய்ந்து, பிழை திருத்தி அடுத்த சந்ததி அதே பிழையை விடாது பேண வேண்டும் என்கிறார். என்ன செய்வது அவர் விதி அப்படி இருக்கிறது🤣. அவருக்கு நான் முன்பே பலதடவை கூறிவிட்டேன். அதிகம் அலட்டி கொள்ளாதீர்கள் என்று.

ஆனாலும் தன் கருத்தில் உறுதியாக நின்று உழைக்கிறார். அதில் உடன்பட்டாலும், படாவிட்டாலும் அந்த உழைப்பு போற்றுதலுக்குரியது.

அவரை புளொட்காரன் (அவர் உண்மையில் புளொட்டா தெரியாது), துரோகி இப்படி பட்ட வர்ண கண்ணாடிகளினூடு பார்க்காதபடியால் அந்த உழைப்பை என்னால் பாராட்ட முடிகிறது.

இதே போல் புலிகள் மீதும், போராட்டத்தின் நியாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள பற்றுறுதிதையும் நான் பாரட்டத்தவறியதில்லைதானே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

எத்தனை மாசம் இல்லை வருசம் கழிச்சு வந்தாலும் யாழில் சில விவாதங்கள் ஒரே மாதிரித்தான் போய் கொண்டிருக்கும்🤣.

தலைப்பு மட்டும்தான் வேற - உள்ளே ஒரே விசயம்தான் மீள்சுழற்சியாகும்.

எம் எஸ்வி, இளையராஜா, ரஹ்மான், ஜீ வி, அனிருத், சந்தோஸ் வரைக்கும் வந்தாச்சு…நீங்கள் இன்னும் கண்டசாலாவிலயே நில்லுங்கோ🤣

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி, இந்த முறை எத்தனை நாட்களுக்கு யாழில் திக் விஐயம்?

 இருக்கின்ற சரக்கு அவ்வளவுதான், புலிகளை சாடுவது, புதிய வழிமுறைகளை எடுத்துரைக்க சரக்கில்லை, அதனால் விட்ட பிழைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கின்றோம் என்ற சப்பை கட்டு கட்டுவது😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி, இந்த முறை எத்தனை நாட்களுக்கு யாழில் திக் விஐயம்?

 இருக்கின்ற சரக்கு அவ்வளவுதான், புலிகளை சாடுவது, புதிய வழிமுறைகளை எடுத்துரைக்க சரக்கில்லை, அதனால் விட்ட பிழைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கின்றோம் என்ற சப்பை கட்டு கட்டுவது😂

உங்களை கண்டதும் சந்தோசம்.

அது குமாரசாமி அண்ணர் எப்ப எனக்கு வீபூதி அடிக்கிறார் எண்டதை பொறுத்து🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

அண்ணை,

நீங்கள் மேலே எழுதியதில் எனக்கோ, ஏன் துல்பெனுக்கோ கூட மாற்று கருத்து இல்லை. 

ஆனால் நான் போல்ட் செய்த விடயத்தை ஆராயும் போதுதான் நமக்குள் விரிசல் ஏற்படுகிறது. 

எனது இப்போதைய நிலை - இதை ஆராய்ந்தும் ஒன்றும் ஆக போவதில்லை. ஆகவே அப்படியே விட்டு விடலாம். விட்டு விட்டேன்.

துல்பென் - இல்லை இதை ஆராய்ந்து, பிழை திருத்தி அடுத்த சந்ததி அதே பிழையை விடாது பேண வேண்டும் என்கிறார். என்ன செய்வது அவர் விதி அப்படி இருக்கிறது🤣. அவருக்கு நான் முன்பே பலதடவை கூறிவிட்டேன். அதிகம் அலட்டி கொள்ளாதீர்கள் என்று.

ஆனாலும் தன் கருத்தில் உறுதியாக நின்று உழைக்கிறார். அதில் உடன்பட்டாலும், படாவிட்டாலும் அந்த உழைப்பு போற்றுதலுக்குரியது.

அவரை புளொட்காரன் (அவர் உண்மையில் புளொட்டா தெரியாது), துரோகி இப்படி பட்ட வர்ண கண்ணாடிகளினூடு பார்க்காதபடியால் அந்த உழைப்பை என்னால் பாராட்ட முடிகிறது.

இதே போல் புலிகள் மீதும், போராட்டத்தின் நியாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள பற்றுறுதிதையும் நான் பாரட்டத்தவறியதில்லைதானே.

எல்லாம் முடிந்து விட்டது. செய்யுங்கள் என்கிறோம். இல்லை  விடுதலைப்புலிகள் செய்தது தவறு என்கிறார்கள். சரி செய்து காட்டுங்கள் என்கிறோம். வட்டுக்கோட்டையில் போய் நிற்கின்றார்கள்.
புலிகளுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்கிறார்கள். செய்து காட்டுங்கள் என்கிறோம். இல்லை புலிகள் செய்தது பிழை என்கிறார்கள். ஆயுத போராட்டத்தில் ஓய்வு பெற்று அரசியல் நீரோட்டத்தில் நீந்தும் கட்சிகளும் ஏதாவது விமோசனம் செய்தனவா?

மெல்லிய நீலச்சட்டைக்கே பிரச்சனை எண்டால் பாருங்கோவன் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.