Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் ; ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் ; ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

(சி.எல்.சிசில்)

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

douglas_video_360.jpg

 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் நேற்று(28.05.2021) தொலைபேசியில் உரையாடிய போதே கடற்றொழில் அமைச்சரால் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பிரதேசங்களுக்கு அவை சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற அனைத்து மதங்களின் குருமாருக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

குறித்த கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, பௌத்த சாசன மத விவகார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்களும் தடுப்பூசி வழங்கலின் போது பாதிப்புகள் அதிகமுள்ள பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து மதங்களினதும் குருமாருக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://thinakkural.lk/article/122817

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏது இருந்தாற்போல் மத குருமார்மேல பாசம் பொங்கிவழியுது? இது நல்லதுக்கில்லை. மதகுருமார் ஒரு அறிக்கை விடவேண்டும்; தங்களுக்கு ஒரு சலுகையும் தேவையில்லை, மக்களைப்போலவே தங்களையும் சமமாக நடத்தலாம் என. 

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரப்பட்டு உழைக்காம மணி ஆட்டிஓசிச்சோறு திங்றவங்களுக்கு எதுக்குயா முன்னுரிமை..?😡😡 நாளாந்தம் கஸ்ரப்பட்டு உழைக்குர கூலித்தொழிலாளிக்கு விவசாயிக்கு குடுக்கணும் முன்னுரிமை.. அவன் உழைக்கபோகாவிட்டால் அவன் குடும்பம் பசிபட்டினியில் செத்துவிடும்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜென்மத்துக்கு மக்கள் மண் பற்றி எப்பவும் அக்கறையில்லை.

தன் வாக்கு.. வசதி.. பதவி இதுதான் கோவில்களில் கொள்ளையடிக்கிற காலத்தில் இருந்து இன்று வரை குறி.

மதகுருமாரை கைக்குள்ள போட்டால் தானே அடுத்த தேர்த்தலிலும் இந்த சொந்த இனக்கொலைஞனுக்கு வாக்குப் போடுன்னு.. அறிக்கை கொடுப்பாங்கள். எப்பவும்.. வாக்கே குறி..! 

  • கருத்துக்கள உறவுகள்


இது தான் தடுப்பூசி அரசியல்.
மத குருமாருக்கு கிட்டவும் வருவதற்கு  கோவிட்-19 பயப்படுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, satan said:

அது ஏது இருந்தாற்போல் மத குருமார்மேல பாசம் பொங்கிவழியுது? இது நல்லதுக்கில்லை. மதகுருமார் ஒரு அறிக்கை விடவேண்டும்; தங்களுக்கு ஒரு சலுகையும் தேவையில்லை, மக்களைப்போலவே தங்களையும் சமமாக நடத்தலாம் என. 

அங்கை தான் நிக்கிறார் சிங்கர் ஆரை கையுக்கை போட்டால் நோகாமல் நொங்கு குடிக்கலாம் எண்டு தெரிஞ்சு வைச்சிருக்கிறார்...😁

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் வாக்கு வியாபாரத்துக்கு  முதல் இவர்கள். அடுத்து மதகுருமாருக்கு தடுப்பூசியால் பக்கவிளைவு வந்தால் கேட்பதற்கு யாரும் வரமாட்டார்கள் என நினைத்து பரிசோதனை எலியாய் பயன்படுத்தப்போகிறார்களோ? என்ர ஆண்டவரே! உமது சேவகரை காத்தருளும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

 

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் ; ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

 

மருத்துவ  அதிகாரிகள் , இந்த தற்குறியின் ஆலோசனை கருத்தில் எடுக்காது, அறிவியல் ரீதியாக முடிவுகளை எடுக்கவேண்டும். 
மருத்துவ ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், முன்னனி பணியாளர்கள்( Front line workers), விசேட நோயாளர்கள்( Under line health condition) , வயோதிபர் என்ற ரீதியில் முன்னுரிமை 
கொடுக்க வேண்டும். மத குருமாருக்கு கடைசியில் தான் வழங்க வேண்டும், ஏனேனில் அவர்களை காப்பாற்ற கடவுள் இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

மத குருமாருக்கு கடைசியில் தான் வழங்க வேண்டும்,

மிகச் சரியான கருத்து.

ஏனேனில் அவர்களை காப்பாற்ற கடவுள் இருக்கின்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அதிகாரிகள், பணியாளர்கள் செய்யவேண்டிய பணியை, வழங்கவேண்டிய ஆலோசனைகளை இராணுவமும், கடற்தொழில் அமைச்சரும் எடுக்கும்போதே ஒன்று தெரிகிறது. அவர்கள் பணி இன்னும்  முடியவில்லை தொடர்கிறது. நாடகத்தின் பெயர் மட்டும் மாற்றம். இனவழிப்பு  இப்போ கொரோனா என்று மாறியுள்ளது. எது வந்தாலும் அவர்கள் பணி தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் என்ற தமிழ் அமைச்சரின் அதே வேண்டுகோளை இப்போது இலங்கை எதிர்கட்சி தலைவரான சிங்களவரும் Sajith Premathasa கேட்டு கொண்டுள்ளாராம். இலங்கை அரசியல்வாதிகள்  இலங்கை மக்கள் எதை சொன்னால் குளிர்ந்து போவார்கள் என்பதை நன்றாக அறிந்தே வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மதகுருமாரை அவமதிக்கும் ஒரு கோரிக்கையாகும். இதனை முதற்கட்டமாக எல்லா மதகுருமாரும் ஒன்றுகூடி தங்களுக்கு இந்தத் தடுப்பூசி வேண்டாம் என்று மறுப்பறிக்கைவிடவேண்டும். மதகுருமார் துவா செய்தல், பிரித் ஓதுதல், பூசை செய்தல், ஜெபம் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டால் வைரஸ் அவர்களுக்கு கிட்ட வராது. 

பெருந்தொற்று வந்து ஒர் ஆண்டு கடந்துவிட்டபோதும் சகோதரர் பால் தினகரன் போன்றவர்கள் கொரானாவுக்கான கட்டணம் செலுத்தப்பட்ட ஸ்பெஷல் ஜெபங்களினை துவங்காதது வியப்பாக இருக்கின்றது. 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் மதத்திற்கு primacy கொடுப்பதால் வரும் விளைவு.

சிங்கள பௌத்த பீடம் மற்றும் அமைப்பை சேர்ந்த எல்லோருக்கும், யாப்பின் படி முன்னுரிமை உள்ளது. 

அதையொற்றியே, சிங்கள அரசியல்வாதிகள் அறிக்கைகள்.


டக்ளஸ், மற்ற மதகுருமாருக்கு கிடைக்காமல் போய்விடும் என்ற ஆதங்கமும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.