Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெயர் பலகையில் சிங்களத்தை நீக்கியது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, கற்பகதரு said:

எந்த ஒரு நாட்டிலும் தூதரகத்தின் நிலம் உள்ள பகுதி அந்த தூதரகத்தின் நாட்டு பிரதேசமாக சட்டரீதியாக கருதப்படுகிறது. அதனாலேயே தூதரகத்தில் அடைக்கலம் தேடியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்ய முடிவதில்லை. யாழ். இந்திய தூதரக பிரதேசம் இந்திய சட்டத்தால் ஆளப்படுகிறது. சிங்களம் இந்திய சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிருவாக மொழியல்ல. இலங்கை சட்டம் இந்திய தூதரகத்துள் செல்லுபடியற்றது.

ஓம்.....ஒரு காலத்திலை ஜேர்மனியிலை இருக்கிற சிலோன் எம்பசிக்கு பயந்து பயந்து தான் போறனாங்கள். அவையளும் ஆமியள் மாதிரித்தான் எங்களை நடத்துவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கற்பகதரு said:

எந்த ஒரு நாட்டிலும் தூதரகத்தின் நிலம் உள்ள பகுதி அந்த தூதரகத்தின் நாட்டு பிரதேசமாக சட்டரீதியாக கருதப்படுகிறது. அதனாலேயே தூதரகத்தில் அடைக்கலம் தேடியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்ய முடிவதில்லை. யாழ். இந்திய தூதரக பிரதேசம் இந்திய சட்டத்தால் ஆளப்படுகிறது. சிங்களம் இந்திய சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிருவாக மொழியல்ல. இலங்கை சட்டம் இந்திய தூதரகத்துள் செல்லுபடியற்றது.

இது சரிதான் யூட். ஜூலியன் அசாஞ் போக்கு காட்டியதும் இதனால்தான்.

ஆனால்,

பொதுவாக ஒரு நாட்டின் சட்டங்களை மீறாமலே தூதரங்கள் நடக்கும். (எல்லா சட்டங்களையும் அல்ல).

உதாரணத்துக்கு கொழும்பு யூகே ஹைகொமிசனில் வேலை பார்ப்போர்க்கு, யூகே விடுமுறை நாட்களும், இலங்கை விடுமுறை நாட்களும் சேர்த்து அதிக விடுமுறை கொடுக்கப்படும். தனியே யூகே நட்களுக்கு மட்டும் அல்ல.

ஆகவே சட்டபடி ஏதும் குறையில்லை ஆயினும் இப்படி போடுவது ஒரு அளுத்தமான செய்தியாய் இருக்கும், அண்மைய நிகழ்வுகளை வைத்து பார்த்தால் என்றே நினைத்தேன்.

அப்படியும் இல்லையாம், கன நாளாக இப்படித்தானாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Maharashtra: Village Panchayat Passes Resolution To 'Banish' Gang-Rape  Survivor

ஞாயிற்றுக் கிழமை, மினைக்கெட்டு  பஞ்சாயத்தை கூட்டினது பிழைச்சு போச்சு. 🤣
உடையாரை... யாராவது, கண்டீர்களா? :grin:

அந்த இணைய தளத்தின் பெயர் இலக்கு -ilakku,

அதாவது சும்மா புரளிய கிளப்பிவிட்டு அதுக்கு எங்களை கருத்து சொல்ல வைச்சு கடைசியில அவமான படுத்துறதுதான் அதனோட இலக்கு போல கிடக்கு.

இலக்கு அண்ணை உங்களால எங்களுக்கு பெருத்த அவமானம் அண்ணே.

ஏற்கனவே ஒரு செய்தி நம்ம இலக்கு இணையதளம் அடிச்சு விட்டிருக்கு ஆனா யாரும் கண்டு கொள்ளல, தடுத்த போலீசாருக்கு இடமாற்றம் எண்டு தலைப்பு, ஆனால் நடந்தது வேற எண்டு உள்ளே இருக்கு.

எங்கேயோ வீட்டுக்குள் இருந்து தட்டி விடும் இணையதளம் நடத்துகிறவர்களிடம் உடையார் சிக்குபட்டிட்டார் எண்டு நினைக்கிறன், அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.😂

நம்ம இலக்கை பார்க்கும்போது , சிறி என்று முடியும் இணையதளம் ஒன்றின் தற்போதைய போக்குதான் நினைவுக்கு வருது.. எதுக்கெடுத்தாலும்..பாட்டி வடை சுட்டதபற்றி ஒரு செய்தி போடுறதெண்டாலும்...

அதிர்ச்சியில்  ரசிகர்கள்..

தீயாய் பரவும் காணொளி..

இன்ப அதிர்ச்சி

.இந்த பிரபலத்திற்கு இத்தனை அழகான மனைவியா? இவ்வளவு அழகான மகளா? அதிர்ச்சியில் உறைந்த   ரசிகர்கள்...

(அவருக்கு அழகான மனைவி மகள் இருந்தா ரசிகர்கள் ஏன் உறையபோறாங்க என்று ஒருக்கா அந்த இணையதளம் நடத்துறவருக்கு மெயில் பண்ணி கேக்கவேணும் என்பது பலநாள் ஆசை)

ஷாக்கான ரசிகர்கள்...

அப்படியெண்டு வெடிக்குமேல் வெடியா போடுவினம் அவை ஞாபகம்தான் வந்திச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, valavan said:

அந்த இணைய தளத்தின் பெயர் இலக்கு -ilakku,

அதாவது சும்மா புரளிய கிளப்பிவிட்டு அதுக்கு எங்களை கருத்து சொல்ல வைச்சு கடைசியில அவமான படுத்துறதுதான் அதனோட இலக்கு போல கிடக்கு.

இலக்கு அண்ணை உங்களால எங்களுக்கு பெருத்த அவமானம் அண்ணே.

ஏற்கனவே ஒரு செய்தி நம்ம இலக்கு இணையதளம் அடிச்சு விட்டிருக்கு ஆனா யாரும் கண்டு கொள்ளல, தடுத்த போலீசாருக்கு இடமாற்றம் எண்டு தலைப்பு, ஆனால் நடந்தது வேற எண்டு உள்ளே இருக்கு.

எங்கேயோ வீட்டுக்குள் இருந்து தட்டி விடும் இணையதளம் நடத்துகிறவர்களிடம் உடையார் சிக்குபட்டிட்டார் எண்டு நினைக்கிறன், அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.😂

நம்ம இலக்கை பார்க்கும்போது , சிறி என்று முடியும் இணையதளம் ஒன்றின் தற்போதைய போக்குதான் நினைவுக்கு வருது.. எதுக்கெடுத்தாலும்..பாட்டி வடை சுட்டதபற்றி ஒரு செய்தி போடுறதெண்டாலும்...

அதிர்ச்சியில்  ரசிகர்கள்..

தீயாய் பரவும் காணொளி..

இன்ப அதிர்ச்சி

.

15 hours ago, valavan said:

இந்த பிரபலத்திற்கு இத்தனை அழகான மனைவியா? இவ்வளவு அழகான மகளா? அதிர்ச்சியில் உறைந்த   ரசிகர்கள்...

(அவருக்கு அழகான மனைவி மகள் இருந்தா ரசிகர்கள் ஏன் உறையபோறாங்க என்று ஒருக்கா அந்த இணையதளம் நடத்துறவருக்கு மெயில் பண்ணி கேக்கவேணும் என்பது பலநாள் ஆசை)

ஷாக்கான ரசிகர்கள்...

அப்படியெண்டு வெடிக்குமேல் வெடியா போடுவினம் அவை ஞாபகம்தான் வந்திச்சு.

வர வர தமிழ் செய்தி இணயம்கள் என்று குடிசை கைத்தொழில் போல் ஆள் ஆளுக்கு மழைக்கு  முளைத்த காளான் இணையம் களால் தலையிடிதான் மின்சும்  தமிழ்நாட்டு பக்கம் போனால் ஒவ்வொரு கட்சியும் தமக்கு என்று கூவ செய்தி இணையம்களை வளைத்து போட்டு உள்ளது.

உலக அரசியலையும் எமக்கான அரசியலையும் சொல்பவர்கள் 7 நிமிடத்தில் வாசித்து போவதை 20 நிமிடத்துக்கு யூடியூபில் நீட்டி முழக்குகிறார்கள் பயங்கர நேர விடயம் . சிறிது காலம் போனபின் சம்பந்தப்பட்டவர்கள் எழுத்தில் அவர்கள் சொல்லியதை போட்டால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் அவர்கள்தான் முடிவெடுக்கனும் அது பற்றி .

முகநூல் பக்கம் போனால் புலிகளால் தடைசெய்யப்பட்ட முன்னாள் இயக்ககாரர் (அப்படி இயக்கம் என்று  சொல்லுவதே தவறானது போல் கொள்ளை கொலை வன்புணர்வு  தங்கள் முழு வண்டவாளத்தையும் ஏற்றுகிறார்கள் அநேகமா எல்லாமே கொட்டி விட்டார்கள் )  இதில் பகிடி என்னவென்றால் 2009 மே 18 க்கு பின் இல்லாத புலிகளையும் புலித்தலைவரையும் 12 வருடத்துக்கு பின்னும் யாரை எதிர்த்து போராட போனார்களோ அவர்களை விட மோசமாக எதிர்த்து பதிவுகளை இடுகிறார்கள் .

நடைப்பயிற்சிக்காக வீதிக்கு வந்த அதிகாரியி என்ற தலைப்பில் நாதமுனியர் நான்கோ ஐந்து நாளுக்கு முன் சுய ஆக்கம் ஒன்று பதிந்தவர் தேடுனா வருதில்லை  வெட்டு ஆக்கும் அதை  கொப்பி  பண்ணி இலக்கு போட்டுருக்கினம் முடிவில் சிறு மாற்றம்களுடன் .

  • கருத்துக்கள உறவுகள்

Gallery

 சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான China State Construction Engineering Corporation சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவலகப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/chinese-language-aggression-by-excluding-tamil-and-1622556759

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான China State Construction Engineering Corporation சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அப்ப சாவகச்சேரியும் சரியே......

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

_

 சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான China State Construction Engineering Corporation சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

5 hours ago, குமாரசாமி said:

அப்ப சாவகச்சேரியும் சரியே......

இப்போது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக உள்ள ஜாவாவில் இருந்து வந்தவர்கள் குடியேறிய இடம்தான் ஜாவகர் சேரி, பின்னர் சாவகச்சேரியானது. மலையாளிகள் குடியேறிய பாணனின் நிலம் யாழ்ப்பாணம். இன்றைய ஆங்கிலம் போல அந்த நாட்களில் தமிழ் தென்னாசிய வணிக மொழியானதால், மண்ணின் மைந்தர்களான நாகர்களும், இயக்கர்களும், சிங்களவரும், வந்தேறிகளான மலையாளிகளும், ஜாவகரும் எல்லோருமே சோழரின் தமிழில் வாழ்க்கையை நடாத்தினார்கள். இவர்கள் எல்லாரும் தம்மை தமிழர் என்பது, ஆங்கிலம் பேசும் இந்தியரும் ஆபிரிக்கரும் தம்மை ஆங்கிலேயர் என்பது போன்றதாகும், அப்படிப்பார்த்தால் எங்கள் குமாரசாமி தாத்தா ஜேர்மனியராக கருதப்பட வேண்டியவர். வீட்டில் தெலுங்கு பேசும் வை. கோ. தமிழர் எனும் போது ... மற்றதெல்லாம் பொருட்டல்ல.  😀

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கற்பகதரு said:

கற்பகதரு...உங்கள் அனுமானம் சரியாக இருக்க வேண்டுமானால், சாவகச்சேரி வாசிகளிடம் கொஞ்சமாவது நிறம் மிஞ்சியிருக்குமே?

அவர்களைப் பார்த்தால்...அப்படித் தெரியவில்லையே?

கனக்க ஆராய வெளிக்கிட்டால், கொடிகாமம்  கம என்ற சிங்களக் கிராமப் பெயரைக் குறிக்கின்றது! எனவே சிங்களவர் தான் பூர்வீகக் குடிகள்!

கொக்குவில்லில் உள்ள வில் என்பது சிங்களத்தில் சிறு குளங்களைக் குறிக்கின்றது! எனவே சிங்களவர்கள் தான் பூர்வீக குடிகள் என்று நிறுவலாம்!

கடைசியில் எங்கள் சொந்தச் செலவிலேயே சூனியம் வைத்த கதையாகி விடும்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

Gallery

 சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான China State Construction Engineering Corporation சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவலகப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/chinese-language-aggression-by-excluding-tamil-and-1622556759

7 hours ago, குமாரசாமி said:

அப்ப சாவகச்சேரியும் சரியே......

சாவகச்சேரி... இன்றிலிருந்து,  "சங்காய்ச்சேரி"  என மாற்றப் படுகின்றது.  :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் உண்மைதான். இன்று சிங்களம் உள்ளதாக போர்டினை மாத்தி அமைத்து விட்டது இந்திய துணை தூதரகம்.

http://www.dailymirror.lk/breaking_news/Name-board-without-Sinhalese-at-Indian-consulate-replaced/108-213499

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.