Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

அப்போ எதுக்கு சைவ கடையில்  ஆட்டு பாயா, ஆட்டு கால் சூப் விளம்பரம்?

விளம்பரம் அல்ல. சைவகடையில் இருந்து கடலவடையும் பிளேண்டி யும் அடித்தபடி, ஆட்டு கால் பாயாவின் ரெசிப்பி பற்றியும், தயிர் வடையின் ரெசிப்பி பற்றியும் சிலாகிக்கலாம். கருத்து பரிமாறலாம்.

2 minutes ago, குமாரசாமி said:

நேசக்கரம் இங்கிருந்துதான் உருவாகியது.
யாழ்களத்தில் இன்றும் ஒரு செயல்களம் ஒரு மூலையில் உள்ளது.
இங்குள்ள பல திரிகளில் செயல்திட்டங்கள்/நன்கொடைகள் பற்றிய தரவுகளும் பரிமாறப்படுகின்றது.

நான் சொன்னது அரசியல் செயல்களத்தை. யாழில் ஒருக்கிணைக்கபடும் மனிதாபிமான உதவிகளை அல்ல. 

இரெண்டுக்குமான வித்தியாசம் பாரியது.

  • Replies 254
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

நான் சொன்னது அரசியல் செயல்களத்தை. யாழில் ஒருக்கிணைக்கபடும் மனிதாபிமான உதவிகளை அல்ல. 

இரெண்டுக்குமான வித்தியாசம் பாரியது.

நீங்கள் சொன்னால் சரியாத்தானிருக்கும் 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்னால் சரியாத்தானிருக்கும் 🙏🏽

புரிதலுக்கு நன்றி 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

ஒரு நிஜமான உதாரணம் கேளுங்கள்: போனவாரம் நகரத்தின் ஒரு பகுதியில் கரடியொன்றின் நடமாட்டம் இருந்ததாக பொலிஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. நகர மக்கள் "என்ன செய்ய வேண்டும், யார் செய்ய வேண்டும்?" என்று பொலிசைப் பிராண்டவில்லை: குப்பைகளை  உள்ளே வைத்தார்கள், குழந்தைகளை காட்டுக்கு அண்மையில் விளையாடாமல் காத்தார்கள், இப்படி தாங்களாகவே செயல்பட்டார்கள்.

ஜஸ்ரின் தனக்கு இயலுமானதைச் செய்வார், தமிழன் தனக்கு இயலுமானதைச் செய்வார். மேய்ப்பர் ஏன்? இருக்கிற nominal தமிழ் தலைமைகள் போதும்!🙏

புரிகிறது உங்கள் நிலை! நன்றி வணக்கம்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இரெண்டுக்குமான வித்தியாசம் பாரியது.

 இரண்டுக்கும் ஒளியாண்டு தூரம்!

மனிதாபிமானப் புலம்: காசைக் கொடுத்து விட்டால் பங்களிப்புப் பூரணம்.

அரசியல் புலம்: காசைக் கொடுத்து விட்டு "நான் பங்களித்து விட்டேன்" என்று சொல்லக் கூட முடியாது! - போராட்டத்திற்குக் காசைக் கொடுத்து விட்டு நான் பிஸ்தா என்று நினைத்ததாலேயே புலம்பெயர்ந்தவர்களால் , தாயக மக்களின் அரசியல் தெரிவுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை (மேலே ஒருவர் அழுவதா சிரிப்பத என்று தடுமாறுகிறார் பாருங்கள்!)

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

நேசக்கரம் இங்கிருந்துதான் உருவாகியது.
யாழ்களத்தில் இன்றும் ஒரு செயல்களம் ஒரு மூலையில் உள்ளது.
இங்குள்ள பல திரிகளில் செயல்திட்டங்கள்/நன்கொடைகள் பற்றிய தரவுகளும் பரிமாறப்படுகின்றது.

அப்ப நீங்கள். யாழ்களம். இலங்கையில். தமிழருக்கு. ஒரு உறுதியான. தீர்வை. கண்டடைவதற்கான. செயற்களமாக. இருக்க.  அல்லது மாற. விரும்புகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

நீங்கள் உரையாடல்களை ஏதோ "பிசினஸ்" சந்திப்பு போலப் பார்க்கிறீர்கள்: யார், எங்கே, எப்படி என்ற to do லிஸ்ற் உங்களுக்கே போட முடியாதா?

ஒரு நிஜமான உதாரணம் கேளுங்கள்: போனவாரம் நகரத்தின் ஒரு பகுதியில் கரடியொன்றின் நடமாட்டம் இருந்ததாக பொலிஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. நகர மக்கள் "என்ன செய்ய வேண்டும், யார் செய்ய வேண்டும்?" என்று பொலிசைப் பிராண்டவில்லை: குப்பைகளை  உள்ளே வைத்தார்கள், குழந்தைகளை காட்டுக்கு அண்மையில் விளையாடாமல் காத்தார்கள், இப்படி தாங்களாகவே செயல்பட்டார்கள்.

ஜஸ்ரின் தனக்கு இயலுமானதைச் செய்வார், தமிழன் தனக்கு இயலுமானதைச் செய்வார். மேய்ப்பர் ஏன்? இருக்கிற nominal தமிழ் தலைமைகள் போதும்!🙏

யஸ்ரின்,
ஏன் இங்கே எல்லா இடத்திலையும் ஆபத்தான இடங்களில் அறிவுறுத்தல் பலகையில் என்னென்ன செய்யவேண்டும் என்று உதவிக்குறிப்புகள் போட்டிருக்கினம்?. அதுவும் தாங்களாவே தெரியட்டும் என்று விடலாமே. ஏன் கோவிட்டுக்கு உதவிக் குறிப்புகள் இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

 இரண்டுக்கும் ஒளியாண்டு தூரம்!

மனிதாபிமானப் புலம்: காசைக் கொடுத்து விட்டால் பங்களிப்புப் பூரணம்.

அரசியல் புலம்: காசைக் கொடுத்து விட்டு "நான் பங்களித்து விட்டேன்" என்று சொல்லக் கூட முடியாது! - போராட்டத்திற்குக் காசைக் கொடுத்து விட்டு நான் பிஸ்தா என்று நினைத்ததாலேயே புலம்பெயர்ந்தவர்களால் , தாயக மக்களின் அரசியல் தெரிவுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை (மேலே ஒருவர் அழுவதா சிரிப்பத என்று தடுமாறுகிறார் பாருங்கள்!)

தாயகத்தில் சுமந்திரன் போன்றவர்களின் வருகை

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை !🤣

இன்னொருவருடைய கருத்தை மேற்கோல்காட்டி கருத்திடுவதற்கு மன்னிக்கவும் 
அவர் சொன்ன அழுவதா சிரிப்பதா உங்களின் "தாயகத்தில் சுமந்திரன் போன்றவர்களின் வருகை"
தொடர்பானது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பதியப்பட்ட கட்டுரைக்கு மட்டும் கருத்த வையுங்கள்  என்று  என்னை 5 பக்கம் துரத்தி துரத்தி குட்டார்கள்

கருத்து  வைத்தவைக்க  என்ன  நடக்குது என்று  பார்க்கும்போது 

நான் கொங்சமென்றாலும் நேரத்தை  மீதப்படுத்தி இருக்கின்றேன் என்று  தான் தெளிவாகிறது

தவறு என்னிடமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2021 at 23:30, goshan_che said:

சரி பஸ் 5 பக்கம் ஓடி முறிகண்டிக்கு வந்திட்டு.

எல்லாரும் இறங்கி ஒரு தேத்தண்ணிய குடியுங்கோ. லற்க்கு போறவையும் போகலாம்.

தேத்தண்ணி கடை எபெக்டில இந்த சிச்சுவேசன் சோங்கையும் கேளுங்கோ.

விதி செய்த சதியோ அத்தான்

அண்ணை முறிகண்டி தாண்டினால் கொக்காவில் ரோட்டு கொஞ்சம் ஏற்ற இறக்கம்தானே அதுதான் இடையில கொஞ்சம் சுணங்கினது.

எப்படியும் விடியறதுக்கு முதல் 10 பக்கம் இழுத்துடுவம் கவலை படதேங்கோ🤣

9 minutes ago, விசுகு said:

இங்கே பதியப்பட்ட கட்டுரைக்கு மட்டும் கருத்த வையுங்கள்  என்று  என்னை 5 பக்கம் துரத்தி துரத்தி குட்டார்கள்

கருத்து  வைத்தவைக்க  என்ன  நடக்குது என்று  பார்க்கும்போது 

நான் கொங்சமென்றாலும் நேரத்தை  மீதப்படுத்தி இருக்கின்றேன் என்று  தான் தெளிவாகிறது

தவறு என்னிடமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

 இரண்டுக்கும் ஒளியாண்டு தூரம்!

மனிதாபிமானப் புலம்: காசைக் கொடுத்து விட்டால் பங்களிப்புப் பூரணம்.

அரசியல் புலம்: காசைக் கொடுத்து விட்டு "நான் பங்களித்து விட்டேன்" என்று சொல்லக் கூட முடியாது! - போராட்டத்திற்குக் காசைக் கொடுத்து விட்டு நான் பிஸ்தா என்று நினைத்ததாலேயே புலம்பெயர்ந்தவர்களால் , தாயக மக்களின் அரசியல் தெரிவுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை (மேலே ஒருவர் அழுவதா சிரிப்பத என்று தடுமாறுகிறார் பாருங்கள்!)

தர்க ரீதியாக இந்த உரையாடலை பார்த்தால் 
"யாழ் ஒரு கருத்து களம். செயல்களம் அல்ல" என்பதற்கும் "யாழ் ஒரு கருத்துக்களம். "அரசியல்" செயல்களம் அல்ல" என்ற சொல்லாடலுக்கும் ஒளியாண்டு தூரம் உண்டு.
கோஷன் அரசியலை பற்றித்தான் குறிப்பிட்டார் என்பதையும் அறிவேன். அதே நேரம் கு.சா. யாழ்களத்தின் செயல்களமாக விளங்கும் சில  விடயங்களை குறிப்பிட்டதும் தவறல்ல. 

எங்கள் மனிதாபிமான உதவிகள் பாரிய அரசியல் செயல்பாடாக அங்கே உருவாகும் சாத்தியம் இல்லை.
என்பதும் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

அப்பன்

ஊரில  ஒரு பழமொழியுண்டு

உழுகிற மாடு

எங்கும்  உழும்....

எனக்கு  யாழ் களமும் அப்படித்தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய்ச்சிக்கட்டுரை என்ன வென்று கண்ணுக்கு காட்டாமலே 10 பக்கம் கருத்து ஓட்டம் நடக்குது.
இது கிட்டத்தட்ட தமிழ் டால்க்கீஸ் புளூ சட்டை மாறன் திரை விமர்சனத்தை கேட்டு பக்கம் பக்கமா கருத்து தெரிவிப்பதற்கு சமன். ப்ளீஸ் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் மோகன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

அப்பன்

ஊரில  ஒரு பழமொழியுண்டு

உழுகிற மாடு

எங்கும்  உழும்....

எனக்கு  யாழ் களமும் அப்படித்தான்

உந்தப் பழமொழி எங்களுக்கும். தெரியும்.  ...ஊரிலிருந்து.  கொழும்பு.  போவோரை...அல்லது வெளிநாடு போவோரைப். பார்த்துச் சொல்வார்கள்..நீங்கள்  சொல்வதை  விபரமாகச் சொல்லுங்கள்  பார்க்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாதவூரான் said:

யஸ்ரின்,
ஏன் இங்கே எல்லா இடத்திலையும் ஆபத்தான இடங்களில் அறிவுறுத்தல் பலகையில் என்னென்ன செய்யவேண்டும் என்று உதவிக்குறிப்புகள் போட்டிருக்கினம்?. அதுவும் தாங்களாவே தெரியட்டும் என்று விடலாமே. ஏன் கோவிட்டுக்கு உதவிக் குறிப்புகள் இருக்கு?

உதவிக் குறிப்புகள் கரடியை முன் பின் காணாதவர்களுக்குத் தேவை தானே? கோவிட் புதிய வைரஸ் - விஞ்ஞானிகளுக்கே புதியது, எனவே அறிவுறுத்தல் தேவை தானே?

ஆனால், அறிவுறுத்தல் ஒன்றுமே இல்லாத நாடுகளில் அனேக மக்கள் தலை வெட்டின கோழி மாதிரி ஓடித் திரிகிறார்களா என்றால் பதில் இல்லையென்பது தான்! ஏன்? மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க விளைகிறார்கள். இந்தப் பொறுப்பையே தமிழனுக்கு நான் சுட்டிக் காட்டினேன்!
 
எங்கள் பிரச்சினை பழையது (தெரியாத கரடியோ, புதிய வைரசோ அல்ல) எங்களுக்குத் தெரிய வேண்டியது அவசியம் - இது optional அல்ல! அதற்காகத் தான் இத்தகைய உள்நோக்கிய ஆய்வுகள் தேவை!

இப்படியான ஆய்வுகளையே "வகுப்பெடுக்கிறார்கள்" என்ற இறுமாப்போடு பார்த்தால், அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்வது?🤔

57 minutes ago, விசுகு said:

இங்கே பதியப்பட்ட கட்டுரைக்கு மட்டும் கருத்த வையுங்கள்  என்று  என்னை 5 பக்கம் துரத்தி துரத்தி குட்டார்கள்

கருத்து  வைத்தவைக்க  என்ன  நடக்குது என்று  பார்க்கும்போது 

நான் கொங்சமென்றாலும் நேரத்தை  மீதப்படுத்தி இருக்கின்றேன் என்று  தான் தெளிவாகிறது

தவறு என்னிடமில்லை

என்ன நடந்து விட்டது கருத்து வைத்தவர்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sasi_varnam said:

தர்க ரீதியாக இந்த உரையாடலை பார்த்தால் 
"யாழ் ஒரு கருத்து களம். செயல்களம் அல்ல" என்பதற்கும் "யாழ் ஒரு கருத்துக்களம். "அரசியல்" செயல்களம் அல்ல" என்ற சொல்லாடலுக்கும் ஒளியாண்டு தூரம் உண்டு.
கோஷன் அரசியலை பற்றித்தான் குறிப்பிட்டார் என்பதையும் அறிவேன். அதே நேரம் கு.சா. யாழ்களத்தின் செயல்களமாக விளங்கும் சில  விடயங்களை குறிப்பிட்டதும் தவறல்ல. 

எங்கள் மனிதாபிமான உதவிகள் பாரிய அரசியல் செயல்பாடாக அங்கே உருவாகும் சாத்தியம் இல்லை.
என்பதும் உண்மை. 

சசி,

ஆங்கிலத்தில் context என்பார்கள். தமிழில் விடயதானம்/பரப்பு எனலாம் என நினைக்கிறேன்.

இங்கே நான் யாழ் ஒரு செயல்களம் அல்ல என்று சொன்னதன் context -யாழ் ஒரு அரசியல் செயல்களம் அல்ல என்பதுதான்.

ஏனென்றால் இந்த திரி நெடுகிலும் அரசியல் செயல்பாடு முன் நகர்வு, நகர்வின்மை பற்றித்தான் அலசப்பட்டது.

மனிதாபிமான உதவிகள் பற்றி அல்ல.

யாழில் ஒன்றிணைக்கபடும் மனிதாபிமான உதவிகள் எமது அரசியல் இருப்பு சம்பந்த பட்டவையா? இல்லை. அவை ஒரு உடனடித்தேவை பற்றியவை. 

அதே போல் யாழ் கள ஒன்றுகூடல்களும் செயல்தான். ஆனால் அவையும் அரசியல் செயல்கள் அல்ல.

நான் சொன்னது யாழ் ஒரு “அரசியல்” செயல்களம் இல்லை என்பதையே என்பதையும் இங்கே “அரசியல்” என்பது தொக்கி நிற்பதை நீங்கள் கண்டு கொண்டதாயும் நீங்களே கூறி விட்டீர்கள்.

பிறகு ஏன் தேவையில்லாமல் முட்டையில் உரோம களைவு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

தாயகத்தில் சுமந்திரன் போன்றவர்களின் வருகை

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை !🤣

இன்னொருவருடைய கருத்தை மேற்கோல்காட்டி கருத்திடுவதற்கு மன்னிக்கவும் 
அவர் சொன்ன அழுவதா சிரிப்பதா உங்களின் "தாயகத்தில் சுமந்திரன் போன்றவர்களின் வருகை"
தொடர்பானது மட்டுமே.

அது எனக்கு விளங்கவில்லையென்று உங்களுக்கு எப்படி விளங்கியது?😎

விளங்கின படியால் தான் அது தாயக மக்களின் தெரிவு - கடந்த இரண்டு தேர்தல்களில் - என்று பதில் சொல்லியிருக்கிறேன்.

 நாங்கள் சிரிக்கலாம், அழலாம்- ஆனால், எனக்கு விளங்கிய வரை சுமந்திரன் வகை தலைவர்களும், அங்கஜன் வகைகளும் தான் இனி தாயக மக்களின் தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன். எங்களுக்குக் கசக்கும் தான் - ஏனெனில் தேசிய அனல் பறக்கும் மேடைப் பேச்சுகள் இருக்காதே?😇

5 minutes ago, goshan_che said:

பிறகு ஏன் தேவையில்லாமல் முட்டையில் உரோம களைவு?

இது அடுத்த திசை திருப்பல், மறைத்தல் நுட்பம்:
 
"பூதக்கண்ணாடி, உரோமக் களைவு" அணுகுமுறை : "கரடிக்கு போர்ட் வைச்சதை நான் பார்த்தேனே?"
 
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

அப்பன்

ஊரில  ஒரு பழமொழியுண்டு

உழுகிற மாடு

எங்கும்  உழும்....

எனக்கு  யாழ் களமும் அப்படித்தான்

அண்ணா,

நீங்கள் தனிப்பட்டும், கூட்டாக யாழில் இணைந்தும் பலதை செய்தமையை யாரும் மறுக்கவில்லை. ஆகவே மனிதாபிமான உதவி எனும் வயலில் நீங்களும், யாழும் நன்றாகவே உழுகிறீர்கள்.

ஆனால் யாழில் நடந்த ஒரு அரசியல் செயல்திட்டத்தை யாராவது காட்ட முடியுமா? இல்லை. 

ஒரு அரசியல் செயல் திட்டம் எப்படி இருக்கும்? கூட்டங்கள் நடக்கும், விவாதங்கள் இடம்பெறும். இலக்குக்கள் அடையாளம் காணப்படும். அவை எப்படி அடையப்படும் என்ற வழிமுறைகள் அடையாளப்படுத்த படும். இதில் இருந்து ஒரு project plan, கால நிர்ணயத்தோடு உருவாகும்.

பின்னர் இந்த செயல்திட்டம் - செயலாக்கப்படும். 

யாழில் யாரும் இதை செய்யவில்லை. நாம் எல்லோரும் இந்த வயலில் உழுதது பூச்சியம்தான்.

ஏனென்றால் இதை செய்யும் இடம் இல்லை யாழ்.

இதை யாழில் செய்யமுடியும் என்று எதிர்பார்பதுதான் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

அது எனக்கு விளங்கவில்லையென்று உங்களுக்கு எப்படி விளங்கியது?😎

விளங்கின படியால் தான் அது தாயக மக்களின் தெரிவு - கடந்த இரண்டு தேர்தல்களில் - என்று பதில் சொல்லியிருக்கிறேன்.

 நாங்கள் சிரிக்கலாம், அழலாம்- ஆனால், எனக்கு விளங்கிய வரை சுமந்திரன் வகை தலைவர்களும், அங்கஜன் வகைகளும் தான் இனி தாயக மக்களின் தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன். எங்களுக்குக் கசக்கும் தான் - ஏனெனில் தேசிய அனல் பறக்கும் மேடைப் பேச்சுகள் இருக்காதே?😇

இது அடுத்த திசை திருப்பல், மறைத்தல் நுட்பம்:
 
"பூதக்கண்ணாடி, உரோமக் களைவு" அணுகுமுறை : "கரடிக்கு போர்ட் வைச்சதை நான் பார்த்தேனே?"
 
முக்கிய சொல்லாடல்களை தவிர்த்தது ஜாம்பவான்களாக காட்டிக்கொள்ளலாம்... 
"தார்கரரீதியாக" என்ற சொல்லாடலை தவிர்த்தால்  "முட்டையில் உரோமக்களைவாய்தான் தெரியும் " 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அண்ணா,

நீங்கள் தனிப்பட்டும், கூட்டாக யாழில் இணைந்தும் பலதை செய்தமையை யாரும் மறுக்கவில்லை. ஆகவே மனிதாபிமான உதவி எனும் வயலில் நீங்களும், யாழும் நன்றாகவே உழுகிறீர்கள்.

ஆனால் யாழில் நடந்த ஒரு அரசியல் செயல்திட்டத்தை யாராவது காட்ட முடியுமா? இல்லை. 

ஒரு அரசியல் செயல் திட்டம் எப்படி இருக்கும்? கூட்டங்கள் நடக்கும், விவாதங்கள் இடம்பெறும். இலக்குக்கள் அடையாளம் காணப்படும். அவை எப்படி அடையப்படும் என்ற வழிமுறைகள் அடையாளப்படுத்த படும். இதில் இருந்து ஒரு project plan, கால நிர்ணயத்தோடு உருவாகும்.

பின்னர் இந்த செயல்திட்டம் - செயலாக்கப்படும். 

யாழில் யாரும் இதை செய்யவில்லை. நாம் எல்லோரும் இந்த வயலில் உழுதது பூச்சியம்தான்.

ஏனென்றால் இதை செய்யும் இடம் இல்லை யாழ்.

இதை யாழில் செய்யமுடியும் என்று எதிர்பார்பதுதான் பிழை.

நன்றி சகோ

இப்போ நானும் நீங்களும் பேசலாம் என்று  விளைகின்றோம்

எதற்கு??

எம்மை அதற்கு தள்ளும் சக்தி  என்ன??

ஒற்றுமையாக  இருந்தால் நாலு விடயங்களை  சாதிக்கலாம் என்கின்றோம் அது  எவை??

எதை  நோக்கி???

அதைத்தான் சொன்னேன்

எங்கும் உழலாம்  என்று. (நிச்சயமாக மனிதாபிமான  உதவிகளை  சொல்லவில்லை.  அவை  வேறு)

இங்கே பெரும் பலமும் பெரும் வல்லுநர்களும் உலகம்  பூரகவும் இணையும் களமாகவும் யாழ்  களம் இருக்கிறது

அதை  பயன்படுத்தணும் என்பதே ஆசை வேண்டுகோள் எல்லாமே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Sasi_varnam said:

ஆராய்ச்சிக்கட்டுரை என்ன வென்று கண்ணுக்கு காட்டாமலே 10 பக்கம் கருத்து ஓட்டம் நடக்குது.
இது கிட்டத்தட்ட தமிழ் டால்க்கீஸ் புளூ சட்டை மாறன் திரை விமர்சனத்தை கேட்டு பக்கம் பக்கமா கருத்து தெரிவிப்பதற்கு சமன். ப்ளீஸ் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் மோகன் அண்ணா

பத்தி ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களின் சிந்தனைமுறையைப் பற்றியது. ஆராய்ச்சிக் கட்டுரை ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதை (கிடைத்தால்) தமிழ் மொழியில் தரச்சொல்லிக் கேட்டாலும் கேட்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Sasi_varnam said:

முக்கிய சொல்லாடல்களை தவிர்த்தது ஜாம்பவான்களாக காட்டிக்கொள்ளலாம்... 
"தார்கரரீதியாக" என்ற சொல்லாடலை தவிர்த்தால்  "முட்டையில் உரோமக்களைவாய்தான் தெரியும் " 🤣

நீங்க "ஜாம்பவான்" பட்டமெடுக்கவா இங்க கருத்தாடுகிறீர்கள்?😎 எனக்கு அந்த "உயரிய" நோக்கமெல்லாம் இல்லை!

தாயக மக்களின் தெரிவை - அது சுமந்திரனோ, வேறெவரோ- பார்த்து குழப்பம் அல்லது கோபம் வந்தால் "அது தாயக மக்களைப் புரிந்து கொள்ளாமை" என்று தான் எனக்கு விளங்கியது! அதையே சொன்னேன்!

நீங்க இனி இலத்திரன் நுணுக்குக் காட்டியோட வந்து அடுத்த லெவல் உரோமத்தைத் தேடலாம்!👍

12 minutes ago, கிருபன் said:

பத்தி ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களின் சிந்தனைமுறையைப் பற்றியது. ஆராய்ச்சிக் கட்டுரை ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதை (கிடைத்தால்) தமிழ் மொழியில் தரச்சொல்லிக் கேட்டாலும் கேட்பார்கள்!

அதுவும் இது இளமானி செயல்திட்டம் - பகிரங்கமாகக் கிடைக்காது. பரீட்சகருக்குத் தான் நேரே போகும், அனேகமாக.  அதைப் பார்த்துத் தான் கருத்துச் சொல்லலாம் என்பது சும்மா சாட்டு. இங்கே மீநி யின் அவதானிப்பைப் பற்றித் தான் பேச முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

பத்தி ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களின் சிந்தனைமுறையைப் பற்றியது. ஆராய்ச்சிக் கட்டுரை ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதை (கிடைத்தால்) தமிழ் மொழியில் தரச்சொல்லிக் கேட்டாலும் கேட்பார்கள்!

கேட்டதும் கொடுப்பவனே  கிருபா கிருபா..
பத்தியின் நாயகனே கிருபா கிருபா 
நீ ஏற்றிய தீபத்தில் கிருபா கிருபா 
யாழ்களம் எரிகிறதே கிருபா கிருபா... 😉

Just kidding Bro...

I still have questions, what would have been the total participants of that Zoom meeting? Out of; how many were considered the Old school Nationalist thinkers? Now; does this write's observation and his remarks good enough to represent me and others like? "The ones who left the country during 80's /90's!!"

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

நீங்க "ஜாம்பவான்" பட்டமெடுக்கவா இங்க கருத்தாடுகிறீர்கள்?😎 எனக்கு அந்த "உயரிய" நோக்கமெல்லாம் இல்லை!

தாயக மக்களின் தெரிவை - அது சுமந்திரனோ, வேறெவரோ- பார்த்து குழப்பம் அல்லது கோபம் வந்தால் "அது தாயக மக்களைப் புரிந்து கொள்ளாமை" என்று தான் எனக்கு விளங்கியது! அதையே சொன்னேன்!

நீங்க இனி இலத்திரன் நுணுக்குக் காட்டியோட வந்து அடுத்த லெவல் உரோமத்தைத் தேடலாம்!👍

அதுவும் இது இளமானி செயல்திட்டம் - பகிரங்கமாகக் கிடைக்காது. பரீட்சகருக்குத் தான் நேரே போகும், அனேகமாக.  அதைப் பார்த்துத் தான் கருத்துச் சொல்லலாம் என்பது சும்மா சாட்டு. இங்கே மீநி யின் அவதானிப்பைப் பற்றித் தான் பேச முடியும்!

என்னுடைய கேள்வி எல்லாம்  அவர் அவதானிப்பும், அவர் எழுத்தும் பற்றியது தான். 
மி .நீ  = புலூசைட்டை மாறன். 
சரி அவர் தான் உங்கள் தோஸ்து என்று சொன்னீர்களே, அவரிடமே சொல்லுங்கள் "அதுவும் இது இளமானி செயல்திட்டம் - பகிரங்கமாகக் கிடைக்காது. பரீட்சகருக்குத் தான் நேரே போகும்"   தவிர வந்தவர்களை வைத்து எல்லா 80/90   புலம்பெயர் மனிதர்களையும் முட்டாள் பட்டம் கட்டும் அவர் மேதாவி தனத்தையும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

ஆனால் யாழில் நடந்த ஒரு அரசியல் செயல்திட்டத்தை யாராவது காட்ட முடியுமா?

2009 இல் பல பதாகைகள் தயாரிக்கப்பட்டன. அவை புலம்பெயர் நாடுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பாவிக்கப்பட்டன.

2009 ஆரம்பத்தில் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றுகூட எழுதப்பட்டது! அதன் பின்னர் பல மாதங்கள் நான் யாழில் எழுதவில்லை (சண்டை உக்கிரமான காலம் என்பதால் withdrawal syndrome) வந்திருந்தது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.