Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியநீலாவணையில் இராணுவத்தினரின் வீடமைப்புத்திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியநீலாவணையில் இராணுவத்தினரின் வீடமைப்புத்திட்டம்!

r-8.png

இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் 241 ஆவது படையணியின் பிரிகேடியர் விமல்ஜனக விமலரத்ன வழிகாட்டலில் பல்வேறு திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணைக் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான கைலாயப்பிள்ளை நாகராசா என்பவரின் குடும்பத்திற்கு எட்டு (08) இலட்சம் ரூபாய் பெறுமதில் வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்க்கு இராணுவத்தினர் முன்வந்துள்ளதுடன் இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிழ்வில் கல்முனை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் விஜயக்கோன், அக்கரைப்பற்று இராணுவமுகாம் பொறுப்பதிகாரி கேணல் புஸ்பஸ்ரீ, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உட்பட இராணுவத்தினர், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த வீடானது மூன்றுமாத காலத்திற்குள் கட்டிமுடிக்கப்டவுள்ளதாக கல்முனை பிரதேச இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

rrr-2-1024x584.png

rr-6.png
 
  • கருத்துக்கள உறவுகள்

வறுமையில் வாடும் தமிழருக்கு வீடு அமைத்து கொடுக்கும் இராணுவத்தினருக்கு  பாராட்டுக்கள்👏

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி. அடிக்கிற கைதான் அணைக்கும் எண்டு சொல்லாமல் இருந்தால் சரி.

இருந்தாலும்...சண்டை முடிஞ்சா பொறகு, இவையளுக்கு வேலை வெட்டி இல்லை.

கொரோனா தடுப்பு அலுவல்கள், விவசாயம், ரோட்டு போடுறது, வீடு கட்டுறது எண்டு நிலைமை போகுது. சவேந்திர சில்வா, டாக்குதர் மாருக்கெல்லாம் கொரோனா தடுப்பு மருத்துவம் படிப்பிக்கிற அழகிலை, அவையள் கொலை வெறியிலை திரியினம்.  🤭

கடைசீல, அரசு காசில்லாமல், யானையை கட்டி தீனி போட ஏலாது எண்டு, உந்த பெரிய பாதுகாப்பு படையை குறைக்க வேண்டி வரும். 🤗

உதுக்குள்ள, தமிழர்களை இணைக்கினமாம்.... 😬

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

வறுமையில் வாடும் தமிழருக்கு வீடு அமைத்து கொடுக்கும் இராணுவத்தினருக்கு  பாராட்டுக்கள்👏

சொல்வதற்கு ஒன்றும் இல்லை 
யார் குற்றினாலும் அரிசி ஆனால் சரி தற்போதய நிலையில் சுனாமில் அழிந்தவர்களுக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை ஆனால் அரசு கொடுத்த வீடுகள் அதில் பாதிக்கப்படாத அரச ஊழியர்களின் குடும்பங்களுக்கு கிடைத்தது , நிறுவங்களில் பணி புரிந்த ஊழியர்களின் உறவினர்களுக்கும் கிடைத்தது 

எத்தனை பேர் என்னை கும்மப்போகிறார்களோ தெரியல பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை பெற்றவருக்கு மட்டும் வாழ்த்துக்கள்,

வீட்டை கட்டி கொடுப்பவர்களுக்கு எந்தவித பாராட்டுக்களும் கிடையாது.

பல ஆயிரம் வீடுகளை மனிதர்களுடன் சேர்த்தே இடித்தவர்கள் ஒரு வீட்டை கட்டி கொடுக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

வீட்டை பெற்றவரைதவிர வேறு எவரும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாய்   இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்.. ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம்.. இப்படி வெளியார் அழுத்தங்கள் வரும் போது.. இப்படி சில காட்சிகள் அரங்கேறும். நம்ம சனத்துக்கு நாலு சாத்து சாத்தி போட்டு.. ஒரு சோத்துப் பார்சல் வாங்கிக் கொடுத்தாலே.. நல்லவன்டா என்று சான்றிதழ் கொடுக்குங்கள். நம்ம வடிவேலு ஒரு காமடியில சொன்னது போல. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 சுனாமில் அழிந்தவர்களுக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை ஆனால் அரசு கொடுத்த வீடுகள் அதில் பாதிக்கப்படாத அரச ஊழியர்களின் குடும்பங்களுக்கு கிடைத்தது , நிறுவங்களில் பணி புரிந்த ஊழியர்களின் உறவினர்களுக்கும் கிடைத்தது 

இதற்கு யார் காரணம்,தமிழ் தேசிய ஆதரவாளர்களா? அல்லது புலம் பெயர்ந்த மக்களா? 
கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளால் வெற்றி பெற்ற பாராளுமன்ற அரசு சார்பு பிரதிநிதிகள் இருக்கறார்கள் அல்லவா.....இவர்களுக்கு மக்கள் வாககு போட்டமைக்கு முக்கிய காரணம் தங்களுக்கு ஒளி கிட்டும் என்று தானே? அரசுடன் சேர்ந்து இயங்கினால் சகலதும் கிடைக்கும்  என்ற நல்லெண்ணம் தானே?

ஒரு வீட்டை கட்டி கொடுத்து படம் காட்ட முடியும் இராணுவத்திற்கு என்றால் ஏன் அரசுசார் எம்பிக்கள்,அமைச்சர்கள் குறைந்தது 10 வீடுகளை கட்டி படம் காட்ட முடியாதா...?
இலங்கை இராணுவத்திற்கு நற்சான்றிதழ் வழங்கும் ஒரு முயற்சி இது என்பது சகலரும் அறிந்ததே. எது எப்படியோ  ஒரு குடும்பத்துக்கு வீடு கிடைக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சொல்வதற்கு ஒன்றும் இல்லை 
யார் குற்றினாலும் அரிசி ஆனால் சரி தற்போதய நிலையில் சுனாமில் அழிந்தவர்களுக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை ஆனால் அரசு கொடுத்த வீடுகள் அதில் பாதிக்கப்படாத அரச ஊழியர்களின் குடும்பங்களுக்கு கிடைத்தது , நிறுவங்களில் பணி புரிந்த ஊழியர்களின் உறவினர்களுக்கும் கிடைத்தது 

எத்தனை பேர் என்னை கும்மப்போகிறார்களோ தெரியல பார்ப்போம் 

எங்களுக்கு அபிவிருத்திதான் முக்கியம் எண்டு முதல்லை மைத்திரி பக்கம் பிறகு மகிந்த பக்கம் தாவி குதிச்ச வியாளேந்திரன் இப்ப என்ன செய்யிறார்?

சிலை அபிவிருத்தியும் முக்கியம் கண்டியளோ...எல்லைக் கிராமங்களிலை சனத்துக்கு அடி உதை விழுந்தாலும் பிரச்சனை இல்லை.

சிலை முக்கியம் கண்டியளோ:cool:

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

யாரின் சிலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, putthan said:

யாரின் சிலை

வாழைச்சேனை முற்சந்தியில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலை. 

இந்த சிலை கட்டின நேரம் அஞ்சாறு வீடு கட்டி குடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

வாழைச்சேனை முற்சந்தியில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலை. 

இந்த சிலை கட்டின நேரம் அஞ்சாறு வீடு கட்டி குடுத்திருக்கலாம்.

இதற்கு விளக்கம் கொடுப்பினம் வாழைச்சேனை மாற்று மதத்தினரிடம் பாறிபோகிறது அதை தடுக்க இதுதான் வழி.....

இந்த சிலை வெகு சீக்கிரம் ஆயுதபடி அல்லது மாற்று மததினரால் இடிக்கப்படும் இருந்து பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீடு கட்டிக்கொடுக்கப்படும் படம் போட்டாச்சு கண்டியளோ! இப்படி ஆலாபனை காட்டி கட்டின எத்தனையோ வீடுகள் வசிப்பதற்க்கு தகுதியற்று குடியிருப்பாளருக்கே ஆபத்தாய் வெடித்து வெருட்டிக்கொண்டு இருப்பதை அறியவில்லையோ? வீடு எப்போ இடிந்து விழுமோ என்கிற பயத்தில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகள் படத்தில் வருவதில்லை. அந்த மக்களின் வீடமைப்பு வசதியும் கிடைக்காமல், கிடைத்த வீட்டில் இருக்கவும் முடியாமல் தவிப்பவரின் கதை வெளியில் வருவதில்லை. யார் குத்தினாலும் அரிசியாகாது. குத்துவார் குத்தினாற்தான் அது பக்குவமாக பயன்படுத்த கூடிய பயனுள்ள அரிசியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, putthan said:

இதற்கு விளக்கம் கொடுப்பினம் வாழைச்சேனை மாற்று மதத்தினரிடம் பாறிபோகிறது அதை தடுக்க இதுதான் வழி.....

ஐம்பது வருடங்களாக விளக்கம் கொடுக்கின்றார்கள் :grin:

19 minutes ago, putthan said:

இந்த சிலை வெகு சீக்கிரம் ஆயுதபடி அல்லது மாற்று மததினரால் இடிக்கப்படும் இருந்து பாருங்கள்

அப்போதும் தமிழ் மக்களிடையே தமது பேச்சாற்றலால் அனுதாப வாக்கை பெற்று இராஜாங்க அமைச்சகத்தில் குடிபுகுந்து விடுவர்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

வாழைச்சேனை முற்சந்தியில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலை. 

இந்த சிலை கட்டின நேரம் அஞ்சாறு வீடு கட்டி குடுத்திருக்கலாம்.

எனக்கு இவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு 
ஏன் நான் இப்படி சிந்திக்கிறேன் என்றால் ... இன்று வளர்ந்த 
அமெரிக்காவில் கூட உணவு பஞ்சம் உண்டு.
முதலில் இது பின்பு அது என்றால் .. அவை நடக்க சாத்தியமே இல்லை.
இதெல்லாம் ஒரு சமாந்தரமாக சம காலத்தில் நடக்க வேண்டியவைதான். 

இப்போ உலகில் இருக்கும் வரலாற்று தலங்கள் கட்டிடங்கள் எல்லாம் 
இப்போதை விட மக்கள் அதிக அளவு பஞ்சத்தில் இருந்தபோது கட்டியவைதான் 

பின்பு கட்டலாம் என்று இருந்து இருப்பின் ... ஒன்றுமே இருக்க வாய்ப்பில்லை 
காரணம் பஞ்சம் இப்போதும் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 02:18, putthan said:

இதற்கு யார் காரணம்,தமிழ் தேசிய ஆதரவாளர்களா? அல்லது புலம் பெயர்ந்த மக்களா? 
கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளால் வெற்றி பெற்ற பாராளுமன்ற அரசு சார்பு பிரதிநிதிகள் இருக்கறார்கள் அல்லவா.....இவர்களுக்கு மக்கள் வாககு போட்டமைக்கு முக்கிய காரணம் தங்களுக்கு ஒளி கிட்டும் என்று தானே? அரசுடன் சேர்ந்து இயங்கினால் சகலதும் கிடைக்கும்  என்ற நல்லெண்ணம் தானே?

ஒரு வீட்டை கட்டி கொடுத்து படம் காட்ட முடியும் இராணுவத்திற்கு என்றால் ஏன் அரசுசார் எம்பிக்கள்,அமைச்சர்கள் குறைந்தது 10 வீடுகளை கட்டி படம் காட்ட முடியாதா...?
இலங்கை இராணுவத்திற்கு நற்சான்றிதழ் வழங்கும் ஒரு முயற்சி இது என்பது சகலரும் அறிந்ததே. எது எப்படியோ  ஒரு குடும்பத்துக்கு வீடு கிடைக்கிறது

May be an image of 1 person and outdoors

May be an image of text that says 'SUIL OPPO F19 Pro ©Samy'

இது வடக்கு மாகாணத்தில் ஒரு தாய் ஒருவர் வசிக்கும் வீடு.மக்களின் குறைகளை தீர்ப்போம் என்று கூறி வெற்றி பெற்ற நீங்கள் சொகுசு வாகனத்தில் கொழும்புக்கும் செல்வதற்குமுன் முடிந்தால் இவர்கள் வசிக்கும் வீட்டை கடந்து செல்லுங்கள். நீங்கள் உண்மையான மக்களின் பிரதிநிதியாக இருந்தால்.

இது முகநூலில் ஒருவர் பதிந்தது இதே நிலைதான்  வடகிழக்கில் தற்போது வந்தவர்களாகட்டும் அதற்கு முதலில் இருந்தவர்களாகட்டும் ஒன்றையும் உருப்படியாக கிழிக்கவில்லை (வடக்கில் , கிழக்கில்)  இவர்கள் சென்றது வந்தது பேசினது எல்லாம்  காற்றில் பறந்து கனநாள் ஆகிவிட்டது  புத்தன் .

இராணூவத்தில் நலத்திட்டங்களில் பல வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது அதை நான் எழுதினாலும் குற்றம் 

On 16/6/2021 at 03:19, குமாரசாமி said:

எங்களுக்கு அபிவிருத்திதான் முக்கியம் எண்டு முதல்லை மைத்திரி பக்கம் பிறகு மகிந்த பக்கம் தாவி குதிச்ச வியாளேந்திரன் இப்ப என்ன செய்யிறார்?

சிலை அபிவிருத்தியும் முக்கியம் கண்டியளோ...எல்லைக் கிராமங்களிலை சனத்துக்கு அடி உதை விழுந்தாலும் பிரச்சனை இல்லை.

சிலை முக்கியம் கண்டியளோ:cool:

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

வாழைச்சேனையில் பிறக்கும் பிள்ளைகளுக்கு ஓட்டமாவடியில் பிறந்ததாக பிறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது அது பற்றி உங்கள் கருத்து என்ன?  அப்படி சிலை வைப்பதை குற்றம் காணும் நீங்கள் வட மாகாணத்தில் , கிழக்கு மாகாணத்தில் கோவில்களில் கோடிக்கணக்கில் ஏன்  அலங்கரிக்கப்பட்டு தேர் திருவிழா நேர்த்திக்கடன் என பல தொகைகள் கொடுக்க வேண்டும் அதை வைத்தும் சனத்துக்கு 40 வீடு கட்டிக்கொடுக்கலாமே?? 

இவர் இந்த சிலைக்காரர் நம்ம ஊர்க்காரர்தான் எங்கள் ஊரில் சிலை இருக்கிறது  எனக்கும் சிலை வைப்பதில் பாதி உடன்பாடு உண்டு /இல்லை. ஆனால் ஒரு பஸ்தரிப்பு நிலையம் கட்ட அனுமதி கொடுத்தும் அதை தடுத்து நிறுத்தினார்கள் வாழைச்சேனை முஸ்லீம்கள் தற்போதுள்ள முஸ்லீம்கள் . மதத்தீவிரவாதிகளாக இருக்கும் போது  முத்தமிழ் வித்தகர் சிலை இலங்கை  முழுவதும் அமைவது சந்தோசமே .

மட்டக்களப்பில் , காந்தி சிலை , வடக்கில் பல சிலைகளும் உண்டு அதற்கு உங்கள் பதில் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இவர் இந்த சிலைக்காரர் நம்ம ஊர்க்காரர்தான்

இப்ப விளங்குது தனி, தனியா நிண்டு ஆடும் கெத்து எங்க இருந்து வருகிறது என்று😎.

35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மதத்தீவிரவாதிகளாக இருக்கும் போது

மஞ்சந்தொடுவாய், ஆரையம்பதி பக்கம் சிலைகள் மூலம் எல்லை பாதுகாப்பு செய்யலாம் என்பதை முதலில் கையில் எடுத்தவர் பிரசாந்தன் என நினைகிறேன்.

இந்த சிலையாரின் முயற்சி? சந்திரகாந்தனா? வியாழேந்திரனா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இப்ப விளங்குது தனி, தனியா நிண்டு ஆடும் கெத்து எங்க இருந்து வருகிறது என்று😎.

மஞ்சந்தொடுவாய், ஆரையம்பதி பக்கம் சிலைகள் மூலம் எல்லை பாதுகாப்பு செய்யலாம் என்பதை முதலில் கையில் எடுத்தவர் பிரசாந்தன் என நினைகிறேன்.

இந்த சிலையாரின் முயற்சி? சந்திரகாந்தனா? வியாழேந்திரனா?

பிரசாந்தன் முக்கியமானவர் ஆரையம்பதி அவர் ஊர் அதனால் சிலைகளை வைத்தாலும்  நில ஆக்கிரம்பினால்  காசுக்கு நிலத்தை விற்பதாலும்  காத்தான் குடியாக மாறுகிறது 

வியாழேந்திரனின்  பிள்ளையானுக்கும் இவருக்கும் நடக்கும் அரசியல் போட்டியால் பல நடத்திட்டங்கள் நடந்து வருகிறது ஆனால் ஓட்டமாவடியில் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தினை வாழைச்சேனைக்கென தனிப்பிரிவை ஆரம்பித்த பிள்ளையானின் வாழைச்சேனை பிரதேச சபைமுஸ்லீம் களை தூண்டி விட்டு குளிர்காய்கிறது கூட்டமைப்பு தற்போது அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள் ,  அப்படி கொடுக்க முடியாது என இதே போலவே கல்முனை பிரதேச செயலக பிரச்சினையும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயார் இல்லை

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாழைச்சேனையில் பிறக்கும் பிள்ளைகளுக்கு ஓட்டமாவடியில் பிறந்ததாக பிறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது அது பற்றி உங்கள் கருத்து என்ன?  

அது சரியல்ல. இருந்தாலும் இலங்கையில் பலம் வாய்ந்த/செல்வாக்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் கிழக்கில் தான் இருக்கின்றார்கள். அவர்களே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க  வேண்டியவர்கள்.

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி சிலை வைப்பதை குற்றம் காணும் நீங்கள் வட மாகாணத்தில் , கிழக்கு மாகாணத்தில் கோவில்களில் கோடிக்கணக்கில் ஏன்  அலங்கரிக்கப்பட்டு தேர் திருவிழா நேர்த்திக்கடன் என பல தொகைகள் கொடுக்க வேண்டும் அதை வைத்தும் சனத்துக்கு 40 வீடு கட்டிக்கொடுக்கலாமே?? 

இருப்பதை பராமரிக்க வேண்டும். அவசியமும் கூட... ஆனால் புதிதாக அமைக்க வேண்டிய கட்டாயம் இன்றைய காலகட்டத்தில் அவசியமில்லை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் , காந்தி சிலை , வடக்கில் பல சிலைகளும் உண்டு அதற்கு உங்கள் பதில் 

காந்தி சிலைக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என எனக்கு இன்றுவரை விளங்கவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

May be an image of 1 person and outdoors

May be an image of text that says 'SUIL OPPO F19 Pro ©Samy'

இது வடக்கு மாகாணத்தில் ஒரு தாய் ஒருவர் வசிக்கும் வீடு.மக்களின் குறைகளை தீர்ப்போம் என்று கூறி வெற்றி பெற்ற நீங்கள் சொகுசு வாகனத்தில் கொழும்புக்கும் செல்வதற்குமுன் முடிந்தால் இவர்கள் வசிக்கும் வீட்டை கடந்து செல்லுங்கள். நீங்கள் உண்மையான மக்களின் பிரதிநிதியாக இருந்தால்.

இது முகநூலில் ஒருவர் பதிந்தது இதே நிலைதான்  வடகிழக்கில் தற்போது வந்தவர்களாகட்டும் அதற்கு முதலில் இருந்தவர்களாகட்டும் ஒன்றையும் உருப்படியாக கிழிக்கவில்லை (வடக்கில் , கிழக்கில்)  இவர்கள் சென்றது வந்தது பேசினது எல்லாம்  காற்றில் பறந்து கனநாள் ஆகிவிட்டது  புத்தன் .

இராணூவத்தில் நலத்திட்டங்களில் பல வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது அதை நான் எழுதினாலும் குற்றம் 

நான் கூறும் கருத்து கிழக்கு மட்டும் அல்ல வட க்கும் சேர்த்துதான்....
தமிழ் தேசியவாதிகள் தமிழ்தேசியம் பேசி அபிவிருத்தி செய்ய தவறிவிட்டார்கள் என குற்றம் சாட்டி அரசுடன் இணைந்து கொண்ட வடக்கு,கிழக்கு(இரு பகுதியும் சேர்த்து....)பிரதிநிதிகள் அதிகம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு .....இராணுவம் வீடு கட்டி கொடுப்பது நல்ல விடயம் அது இராணுவத்தின் சொந்த பணத்திலா? அரசு பணம்..... ஏன் அரச பணத்தில் இராணுவம் கட்டி கொடுக்க வேண்டும்? அரசு கட்டிகொடுக்கலாமே? 
எம்மக்கள் காசுகளை விளையாடிவிடுவார்கள் என சொல்லுவீர்கள் ....இன்றைய ஆட்சியாளருக்கு இராணுவம் தான் பாதுகாப்பு மக்களோ சிவில் நிர்வாகமோ அல்ல அதுதான் 
இராணுவத்தை மக்களுக்கு நண்பனாக்க முயல்கின்றனர்....சீனா பெரியண்ணாவின் ஆலோசனைப்படி

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

காந்தி சிலைக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என எனக்கு இன்றுவரை விளங்கவேயில்லை.

அண்ணை உடான்ஸ் சாமியாரிட்ட கேட்டுச் சொல்லடே?🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

சீனா பெரியண்ணாவின் ஆலோசனைப்படி

எல்லாவற்றையும் இலங்கை அரசின் மூலம் நடத்திவிட்டு, சீனா இலகுவாக ஆட்சி நடத்தும் இலங்கையில் என்கிறீர்கள். நான் இறப்பதற்கு முன் அது நிறைவேற வேண்டும். சிங்களம் சீனாவிடம் அடிமைப்பட்டு முழிப்பதை நான் கண்ணாரக் கண்டு  ரசிக்க வேண்டும். பிக்குகளும், இனவாதிகளும் எழுப்பும் கூக்குரலை காதாரக் கேட்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

எல்லாவற்றையும் இலங்கை அரசின் மூலம் நடத்திவிட்டு, சீனா இலகுவாக ஆட்சி நடத்தும் இலங்கையில் என்கிறீர்கள். நான் இறப்பதற்கு முன் அது நிறைவேற வேண்டும். சிங்களம் சீனாவிடம் அடிமைப்பட்டு முழிப்பதை நான் கண்ணாரக் கண்டு  ரசிக்க வேண்டும். பிக்குகளும், இனவாதிகளும் எழுப்பும் கூக்குரலை காதாரக் கேட்கவேண்டும். 

எமக்கு நல்லதே நடக்கும்...

சீனா பெரியண்ணனின் சிந்தாந்தவாதிகள் வந்து திட்ட போயினம் சோசலிச சமதர்ம சிந்தனையற்ற சாதிவெறிபிடித்த தலித் மனபான்மையுடைய தமிழன் என்று .....நான் எஸ்கேப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

அண்ணை உடான்ஸ் சாமியாரிட்ட கேட்டுச் சொல்லடே?🤣

கேட்டு பாருங்கோ.. ஆனால் என்ரை பெயரை சொல்லி கேட்க வேண்டாம் 😎(😂)
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, satan said:

எல்லாவற்றையும் இலங்கை அரசின் மூலம் நடத்திவிட்டு, சீனா இலகுவாக ஆட்சி நடத்தும் இலங்கையில் என்கிறீர்கள். நான் இறப்பதற்கு முன் அது நிறைவேற வேண்டும். சிங்களம் சீனாவிடம் அடிமைப்பட்டு முழிப்பதை நான் கண்ணாரக் கண்டு  ரசிக்க வேண்டும். பிக்குகளும், இனவாதிகளும் எழுப்பும் கூக்குரலை காதாரக் கேட்கவேண்டும். 

 இனவாதிகளும் பிக்குகளும் அடங்கி பெட்டிப் பாம்பாவார்கள்.

சிங்கள இனவாதிகளின் வீரம் முழுவதும் கையொடிந்த ஈழத்தமிழரிடம் மட்டுமே.

 சும்மா ஒரு சத்த வெடிக்கும் "அம்மே கொட்டியா" என தலை தெறிக்க ஓடியவர்கள் தான் இந்த இனவாதிகளும் பிக்குகளும் என்பதை நாம் எக்காலமும் மறக்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.