Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு!

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பில் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் முற்றுமுழுதாக ஒரு கொலை.

இது தொடர்பில் உரியவாறு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம்.

ஏனென்றால் மெயப்பாதுகாவலராக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பது தான் வழக்கம். MSD என்று சொல்லப்படுகின்ற Ministry Security Division என்பது உண்மையிலே அனுபவம் வாய்ந்த சிறந்த அதிகாரிகளை நியமிப்பது தான் அரசாங்கத்தின் கடமை.

ஆகவே அதனை மீறி அனுபவமற்ற ஒரு இளைஞன் அதுவும் ஒரு தமிழ் இளைஞன் இவ்வாறு தனது துப்பாக்கியால் கொலை செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிட்டு அந்த பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயன்று வருகிறார்.

ஏனென்றால் மூன்று மாதமாக தனது வீட்டு சிசிடிவி கமெரா வேலை செய்யவில்லை என்பதும், பக்கத்து வீட்டு கமெரா கூட வேலை செய்யவில்லை என்பதும், கண்மூடித்தனமான சிறுபிள்ளை தனமான செயற்பாடு.

இதனை துப்பறியும் ஆய்வகத்திற்கு அனுப்புகின்ற போது அவர்களால் எதனையும் மறைக்க முடியாது. இந்த கொலையை மறைக்க முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது இதனை அவர் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எடுத்தவுடனேயே அவர் துப்பாக்கியால் சுட்டிருப்பது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே காணப்படுகிறது.

வருகின்ற தகவல்களின் படி அந்த சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்த நபர் அவர்களுடன் முரண்பட்டுள்ளார். என்னை பொறுத்தவரை வியாழேந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயம். இது தொடர்பில் வியாழேந்திரன் முன்னுக்கு முரணான தகவல்களை வெளிப்படுத்துவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இதனை சட்ட ரீதியாக பார்க்கின்ற போது அமைச்சர் கூறுகிறார் நான் அங்கு இருக்கவில்லை என்று. ஆனால் அவர் 12 மணி வரை வீட்டில் இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1224777

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுதென்று அழுகுது ஓநாயொன்று.

7 hours ago, தமிழ் சிறி said:

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கடத்தி பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்வது, வானிற்குள் வைத்தே பேராசிரியர்களை அடித்தே கொல்வது, தனக்கான புதைகுழிகளை வெட்டச் சொல்லி அதற்குள் தள்ளி சுட்டுக் கொல்வது, தமிழர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்று இல்லாமல் போவதற்காக சிங்களவர் பக்கம் நின்று பாடுபடுவது போன்றவற்றை தமிழர்களே தமிழர்களுக்கு செய்யலாமா கருணா பிரதர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நிழலி said:

கருணா…. எப்போ இருந்து, உங்களுக்கு “பிரதர்” 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கருணா…. எப்போ இருந்து, உங்களுக்கு “பிரதர்” 🤣

அது நிழலி கடும்  கோபத்தில் எழுதியது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கடத்தி பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்வது, வானிற்குள் வைத்தே பேராசிரியர்களை அடித்தே கொல்வது, தனக்கான புதைகுழிகளை வெட்டச் சொல்லி அதற்குள் தள்ளி சுட்டுக் கொல்வது, தமிழர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்று இல்லாமல் போவதற்காக சிங்களவர் பக்கம் நின்று பாடுபடுவது போன்றவற்றை தமிழர்களே தமிழர்களுக்கு செய்யலாமா கருணா பிரதர்?

எனக்கு என்னவோ கருணாவிலை தான் சந்தேகம். தான் உள்ளே வருவதற்காக உள்ளடி வேலை செய்த மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் தமிழர் ஒருவரை ஒரு தமிழர் கொன்றது பாரதூரமான குற்றம். அதை நூற்றுக்கணக்கில் தமிழர்களை கொன்றவர் சொல்லும்போது கேட்டுத்தான் ஆகவேண்டும். 

முதலில் ஒரு தமிழர் கொல்லப்பட்டது பாரதூரமான விசயம்தான் அதில் வேறு கருத்தில்லை, 

அதேபோல் படுகொலை என்று வரும்போது இனம் மதம் முக்கியமில்லை உயிர்கள் என்பதுதான் கணக்கு. 

அந்த வகையில்  கருணாவினால் பண்ணப்பட்ட சரணடைந்த அப்பாவி இலங்கை காவல்துறையை சேர்ந்த 600 பேர் படுகொலை,

தர்மத்தையும் ஒழுக்கத்தையும் போதித்து புல்லைகூட மிதிக்காம மென்மையாக வாழும் புத்த பிக்குகள் படுகொலை போன்றன ஏற்றுக்கொள்ள்ள முடியாதவை  . அந்த மொட்டை மண்டைகளை கருணா சுட்டு கொல்லும்போது ஐயோ அம்மா என்று அவர்கள் சிங்களத்தில் அலறிய சத்தம் மொழி மாற்றலாகி இன்றும் எம் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது.

உலகம் எல்லாம் அமைதியையும் சமாதானத்தையும் தவிர வேற எதையும் போதிக்காத குண்டுகளை கண்ணாலையே கண்டறியாத  அப்பாவி முஸ்லீம்கள் குனிஞ்சு கும்பிடும்போது பின்னாலபோய் போட்டு தள்ளியது என்று புலிகளின் பெயரை பாவித்து  கருணா பண்ணிய படுகொலை பட்டியல் ஏராளம்

பண்ணுவதையும் பண்ணிவிட்டு இலங்கை அரசில்வேறு அங்கம் வகிப்பது சிங்கள மக்களின் மனசை காயபடுத்தும் செயல். அனைத்து சிங்கள இஸ்லாமிய மக்களூம் இந்த பாதக செயலை செய்த கருணாவிற்கெதிராக அணி திரள வேண்டும் அதுக்கு இந்த தமிழனின் ஆதவு இருக்கும்.

41 minutes ago, தமிழ் சிறி said:

கருணா…. எப்போ இருந்து, உங்களுக்கு “பிரதர்” 🤣

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அது நிழலி கடும்  கோபத்தில் எழுதியது

3 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

விசுகு, நான் அதனை ஊகித்து இருந்தாலும்,
நிழலியின்... சுய வாக்குமூலம் எப்படி இருக்குது என்று...
சும்மா... "நூல்" விட்டு பார்த்தேன். :grin:

ஆள்... ஆப்கானிஸ்தான் என்று,
"கழுவுற மீனிலை, நழுவி" விட்டார்.

கனடாவிலை... ஆப்கானிஸ்தான் காரங்கள் இருக்கிறாங்களா என்று எனக்கு தெரியாது.
சிலவேளை... "தொலை பேசியில்" அவங்களுடன்,  கதைச்சிருப்பார் போலுள்ளது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

பொலிஸ் என்றால் சுட தான் செய்வார்கள் இதில் தமிழ் பொலிஸ் ,சிங்கள பொலிஸ் என்று இல்லை.....என மத்திய அரசின் ஆசையை மறைமுகமாக சொல்லுகிறார்....பொலிஸின் இந்த செயலை கண்டிக்கிறோம் என அறிக்கை விடாமல் தமிழ் பொலிஸ் தமிழரை கொலை செய்தது என அறிக்கை விடுகிறார்...

இனி வரும் காலங்களில் தமிழ் இராணுவ வீரர் ,தமிழ் பொலிஸ் தமிழரை சுட்டுதள்ளுவார்கள் ......அரச ஆதரவு அரசியல் வாதிகள் அறிக்கை விடுவார்கள் தமிழரே தமிழரை சுட்டுத்தள்ளுகிரார்கள் என்று.....
சிங்கள ஆயுதபடைகள் இனவழிப்பு செய்யவில்லை தமிழ் பொலிஸ், இராணுவமும் தங்கள் இனத்தை அழிக்கின்றனர் என ..
சகோதர படு கொலை என 30 வருசமா கட்டுரை எழுதி குளிர் காயும் முன்னாள் புரட்சிவாதிகளிடம் கற்று கொண்ட பாடத்தை இவர் இப்ப கையில் எடுத்துள்ளார் 

மாகாணசபை க்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்தால் இதே நிலை தான் தமிழர்களுக்கு என மத்திய சொல்லாமல் சொல்லுகிறது ..கிழக்கு மாகாணத்தில் இரண்டு கிழமையில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் ....இருவரும்  பொலிஸாரினால் தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தமிழ் சிறி said:

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அன்று தொடக்கம் இன்று வரை சிங்களம் தனித்து நின்று தமிழர்களுக்கெதிராக எதையுமே செய்ததில்லை.
குதிரை வண்டில் புகழ்  சேர் பொன் தொடக்கம் 2009  பிஸ்டல் அடையாளம் காட்டும் வரைக்கும் ஒரு தமிழர் ஈழத்தமிழின அழிவிற்கு துணையாகவே இருந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 2009  பிஸ்டல் அடையாளம் காட்டும் வரைக்கும் ஒரு தமிழர் ஈழத்தமிழின அழிவிற்கு துணையாகவே இருந்துள்ளார்கள்.

2009 இதை கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா

9 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

ஏன் அவர்கள் மாற்று மதத்தினரை அப்படி அழைக்கிறார்கள் என்றால் ....மாற்று மதத்தினர் தங்களது மதக்கடவுள்களின் பெயரை வைத்திருப்பார்கள்(சிவா,முருகன்,விக்கி ,ஜெசு,அந்தோனி)...மாற்று மதக் கடவுள்களின் நாமங்களை உச்சரிக்க கூடாது என்ற காரணத்தால் பெயர் தெரிந்தாலும் பிரதர் என்று அழைப்பதை நீங்கள் காணலாம்....நான் சவுதிய்ல் இருக்கும் பொழுது அறிந்த விடயம்....(அதி தீவிர இஸ்லாமியர்கள் )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரை சிங்களம் தனித்து நின்று தமிழர்களுக்கெதிராக எதையுமே செய்ததில்லை.
குதிரை வண்டில் புகழ்  சேர் பொன் தொடக்கம் 2009  பிஸ்டல் அடையாளம் காட்டும் வரைக்கும் ஒரு தமிழர் ஈழத்தமிழின அழிவிற்கு துணையாகவே இருந்துள்ளார்கள்.

ஏன்... 2019´ம் ஆண்டு வரை,
சம்பந்தன், எதிர்க் கட்சி தலைவராகவும்,

சுமந்திரன்.... யாழ்ப்பாணத்துக்கு வாறதெண்டால்,
அப்போது அமைச்சராக  இருந்த, விஜயகலா மகேஸ்வரனுடன்....  
உலங்கு வானுர்தியில்...   வந்து, இறங்கக் கூடியவர் சுத்து மாத்து.

ஒன்றையும்... நாம், மறக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, putthan said:

2009 இதை கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா

col_karuna20may

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

நிழலி, இஸ்லாமியரின் நட்சத்திர அடையாளத்தில் உள்ள நட்சத்திரத்தில் ஐந்து முனைகள் இருக்கும்! அதில் ஒன்று இந்த பிறதர்ஹூட் என்பதாகும்! அதாவது உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும்....அவர்கள் அனைவரும் பிறதேர்ஸ் தான்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

col_karuna20may

ஆயுத ஒப்படைப்பா... அல்லது , ஆயுத கையளிப்பா...?
பக்கத்தில்.. நெருக்கமாக நிற்கும், இராணுவத்தின் முகங்களில் தெரியும்,
உடல் மொழியை.... முதலாம் வகுப்பு மாணவனும் புரிந்து கொள்வான்.

கருணா.... வெள்ளை சேர்ட் போட்டுக் கொண்டு, எங்களுக்கு ...
வெள்ளை, அடிக்க வேண்டாம். 
அவங்கடை... உடுப்பை, போட்டு... அவங்களாகவே மாறிவிடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.