Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 : இரண்டாவது சுற்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி  எதிர் ஸ்பெயின்

செக் குடியரசு எதிர் இங்கிலாந்து

 

இத்தாலி  எதிர் இங்கிலாந்து😁

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

உங்கள் கணிப்பிற்கு 

பெல்ஜியம் எதிர் இத்தாலி 
சுவிற்சர்லாந்து எதிர் ஸ்பெயின் 
டென்மார்க் எதிர் செக் குடியரசு 
இங்கிலாந்து எதிர் உக்ரைன் 

 

பெல்ஜியம் எதிர்  ஸ்பெயின் 
 செக் குடியரசு  எதிர்   இங்கிலாந்து

பெல்ஜியம்  எதிர்   இங்கிலாந்து

 

பெல்ஜியம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த போட்டியில் பெல்ஜியத்தை  தோற்கடித்து இத்தாலியும், சுவிசை தோற்கடித்து ஸ்பெயினும் அரையிறுதிக்கு முன்னேறுகின்றனர். இத்தாலியும் ஸ்பெயினும் செய்வாய்க் கிழமை மோதுகின்றனர்.
ஏனைய இரு காலிறுதி போட்டிகளான டென்மார்க் எதிர் செக் குடியரசு, உக்ரேன், இங்கிலாந்து நாளை மோதுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இத்தாலி  இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டார்கள்.
நீண்ட காலத்திற்கு பின் வருகின்றார்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் இத்தாலி  டென்மார்க் நாடுகளில் இதுவரை யூரோ இறுதிப் போட்டி ஆட்டத்திற்குள் நுழையாத நாடு இங்கிலாந்து தானாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இண்டைக்கு இங்கிலாந்துக்கும் டென்மார்க்குக்கும் கூத்து இருக்கு.
என்ரை சப்போர்ட் இங்கிலாந்துக்கு தான். ஏனெண்டால் எங்களை ஆண்டபரம்பரை எல்லே 😎

547.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்திற்கு வாழ்த்துக்கள்.

Sancho muss bei England wieder auf die Bank

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2020 யூரோ ; டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடந்த 2020 யூரோ கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

E5ukAo5XMAMCnKj.jpg

இங்கிலாந்து வீரர் ஹாரி கேனின் எக்ஸ்ட்ரா டைம்  கோல் மூலம் டென்மார்க்கை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

இங்கிலாந்து 1966 ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு பிறகு முதல் முறையாக பெரிய தொடர் ஒன்றில் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது, மேலும் யூரோ கால்பந்து தொடரில் முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.

ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் அபாய வீரர் மிக்கெல் டாம்ஸ்கார்ட் திகைப்பூட்டும் ஃப்ரீகிக்கில் 25 அடியிலிருந்து நேராக கோலுக்குள் திணிக்க டென்மார்க் முதலில் 1-0 என்று முன்னிலை பெற்றது. 

ஆனால் 39 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியில் டென்மார்க் வீரர் சிமன் கியா தன் கோலுக்குள்ளேயே சேம்சைடு கோல் அடிக்க இங்கிலாந்து அதிர்ஷ்டத்தில் சமன் செய்தது.

பிறகு ஆட்டம் 1-1 என்ற நிலையில் கூடுதல் 30 நிமிடம் ஒதுக்கப்பட்டதில் 104 ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் தடுக்க திரும்பி வந்த பந்தை ஹாரி கேன் கோலாக மாற்ற 2-1 என்று இங்கிலாந்து வென்று 55 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய கால்பந்து தொடரின் இறுதிக்குள் கால்வைத்துள்ளது.

E5ulYsoXIAIu54s.jpg

ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதும்.

 

https://www.virakesari.lk/article/109002

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓவராய் பில்டப்  கொடுக்கப்படாது பிரிட்டிஷ் அன்ட் கொலனிஸ் 😎

சொந்த மண்ணில் தோல்வி என்பது கவலைக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை பனால்டியில்   தோற்றிருந்தால்கூட  உண்மையான வெற்றியாளர் இத்தாலிதான். அப்படியொரு வெறித்தனமான ஆட்டம்.

முதல் அடிச்ச ஒரு கோலுக்கு பிறகு இங்கிலாந்து ஆடினதெல்லாம் தற்காப்பு ஆட்டம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text that says '.ldCup Selvaratnam Thiruku mar Aoministration Ivaratnan ukumar Great Britain என்று எழுதுடா Love Collage என் வென்று... visi'

  • கருத்துக்கள உறவுகள்

யூரோ கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

 

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி பட்டத்தை வென்றது

விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. பெனால்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. பெனால்டியின்போது அடுத்தடுத்து மூன்று வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது.

1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தாலி அணி முதல் முறையாக யூரோ சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியும் யூரோ கோப்பையை வெல்வதற்காக கடந்த 55 ஆண்டுகளாகக் காத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/live/global-57800918

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி

யூரோ  கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இத்தாலி.

Image

இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 6 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.

Image

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலி அணி இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் எவரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

Image

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67 ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

Image

இதையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்று யூரோ கிண்ணத்தை கைப்பற்றியது.

Image

 

https://www.virakesari.lk/article/109214

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன. பெனால்டியை வெளியில் அடித்த கறுப்பு இன வீரர்களால் தானாம்  பிரித்தானியா தோற்றதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இனவாத கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன. பெனால்டியை வெளியில் அடித்த கறுப்பு இன வீரர்களால் தானாம்  பிரித்தானியா தோற்றதாம்.

அந்த இளம் வீரர்கள்தான் அடுத்த தலைமுறை நட்ஷத்திரங்கள் ஆக வருவார்கள்.
சொந்த நாட்டில் விளையாடியதால் மட்டுமே இங்கிலாந்து இறுதி வரை வந்தது. அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தானே

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ரசிகர்களே நிறைய பாஸ்தா சாப்பிடுங்கள்; இத்தாலிய வீரர் கிண்டல்

இங்கிலாந்து ரசிகர்களே நிறைய பாஸ்தா சாப்பிடுங்கள்; இத்தாலிய வீரர் கிண்டல்

 

லண்டன், 

16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றை எட்டிய இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. அதில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் கோல் 1 நிமிடம் 57 வது வினாடியில் அடிக்கப்பட்டது. இது யூரோ சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் அடித்த வேகமான கோல் ஆகும்.

இதனைத்தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. 

இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன் அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது. களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகுடம் சூடியுள்ள இத்தாலி அணிக்கு ரூ.89 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. போட்டி கட்டணம், லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று வெற்றிகள் எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ.300 கோடியை இத்தாலி அணி பரிசாக அள்ளியது.

போட்டியின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் போனுக்சி அடித்த கோல் ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்து வெற்றியை நிர்ணயித்தது.  யூரோ இறுதி போட்டியில் மிக வயது முதிர்ந்த (34 வயது) கோல் அடித்தவரான போனுக்சி, யூரோ இறுதி போட்டி வரலாற்றில் அதிகளவில் (18 முறை) பங்கேற்றவர் என்ற பெருமை கொண்டவர்.

அவர் போட்டியின் நடுவில் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி நிறைய பாஸ்தா சாப்பிட வேண்டும்.  நிறைய பாஸ்தா சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என கிண்டலாக கூறினார்.  அதன்பின்னர், கேமிரா ஒன்றின் முன்னால் வந்து, கோப்பை ரோம் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறி இங்கிலாந்து ரசிகர்களை கடுப்பேற்றினார்.

யூரோ கோப்பையை ஜெர்மனி (3 முறை), ஸ்பெயின் (3 முறை) மற்றும் பிரான்ஸ் (2 முறை) ஆகியவற்றுக்கு அடுத்து அதிக முறை வென்ற பட்டியலில் இத்தாலி 4வது இடம் பிடித்து உள்ளது.  53 ஆண்டு இடைவெளிக்கு பின் இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/Sports/Football/2021/07/12124214/UK-fans-eat-a-lot-of-pasta-Italian-player-tease.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, வாத்தியார் said:

அந்த இளம் வீரர்கள்தான் அடுத்த தலைமுறை நட்ஷத்திரங்கள் ஆக வருவார்கள்.
சொந்த நாட்டில் விளையாடியதால் மட்டுமே இங்கிலாந்து இறுதி வரை வந்தது. அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தானே

அவர்கள் இப்போதே பெரிய நட்சத்திரங்கள்தான்! ஆனால் பெனால்டி அடிக்க அனுபவம் போதாது.

இங்குள்ள லீக் மட்சுகளில் “சமநிலை” முடிவு ஒழிக்கப்படவேண்டும். 90 நிமிடங்களில் வெற்றி-தோல்வி முடிவு வராவிட்டால் மேலதிக நேரம் கொடுக்காமல் உடனேயே பெனால்டி உதைகள் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கவேண்டும். இதுதான் வீரர்களுக்கு பயிற்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவரும். யார் சிறந்த பெனால்டி உதைகாரர்கள் என்று அறியவும் முடியும்! 💡

இங்கிலாந்து முதலாவது கோல் அடிக்காமல் இருந்திருந்தால் மட்ச் வேளைக்கே முடிந்திருக்கும்😃 நானும் நித்திரை தூங்காமல் இருந்திருக்கலாம்😉

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டிங்  செண்டர்களை இப்படியான போட்டிகள் நடைபெறும் நேரம் உலகம் முழுக்க தடைபண்ணனும் பில்லியன்கணக்கான பவுண்ஸ் போக்குவரத்தை நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் ஆட்டையை போடும் வித்தை  அங்குதான் அரங்கேருது .

 

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=3EiE7eLWI_M

 

இங்கிலாந்தின் தன்போதைய பயிற்சியாளர் Southgate பெனால்டி உதையை  காப்பாளரிடம் கொடுத்து ஜேர்மனியிடம் தோற்ற ஆண்டு 1996. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, nunavilan said:

 

https://www.youtube.com/watch?v=3EiE7eLWI_M

 

இங்கிலாந்தின் தன்போதைய பயிற்சியாளர் Southgate பெனால்டி உதையை  காப்பாளரிடம் கொடுத்து ஜேர்மனியிடம் தோற்ற ஆண்டு 1996. 

இதுவும் நேற்று இன்றைய தினங்களில் ஊடக பேசு பொருள்.

10 hours ago, கிருபன் said:

இங்கிலாந்து முதலாவது கோல் அடிக்காமல் இருந்திருந்தால் மட்ச் வேளைக்கே முடிந்திருக்கும்😃 நானும் நித்திரை தூங்காமல் இருந்திருக்கலாம்😉

தோல்வியை கூட இவ்வளவு நாகரீகமாக எழுத எல்லாராலையும் ஏலாது 😁

  • கருத்துக்கள உறவுகள்

மார்கஸ் ரஷ்பேட்டால் தான் தோத்து  விட்டோம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் துவேசம் துளிர்க்கிறது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.