Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்’ – அசேல சம்பத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்’ – அசேல சம்பத்

131580043_1885235674991937_6763466485248
 54 Views

மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என   இலங்கை குற்றப் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டு   விடுதலை செய்யப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வாழ்க்கையில் முதல் முறையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன்.நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்.வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச்சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன. நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின் பிரஜை. அதிகாரிகள் சீருடையின்றி உரிய காரணம் கூறாமல்  இழுத்துச்சென்றனர்.

பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள், இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச் சென்றார்கள்.ரீசாத் பதியுதீன் எனக்கு   ரீசேர்ட்டை தந்தார். பொடி லசி எனக்கு குளிப்பதற்கான சவர்க்காரத்தை தந்தார். சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்” என்றார்.

201452175_1885235718325266_1129622561865677654_n.jpg?_nc_cat=106&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=ckjJ9HXGavYAX8Xmv1S&_nc_ht=scontent.fcmb4-1.fna&oh=7a63d068680a37297422b7e6ccd5d9b7&oe=60DDB068

இதேவேளை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

நன்றி – தினக்குரல்

https://www.ilakku.org/?p=53489

போலியான தகவல்களை பரப்பியதற்காகவே அசேல சம்பத் கைது செய்யப்பட்டார்- அஜித்ரோஹண

June 26, 2021
 
Share
1-84.jpg?resize=474%2C284&ssl=1
 38 Views

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான அசேல சம்பத் , அடையாளம் தெரியாத 20 நபர்களால் நேற்று இரவு 8.30 மணியளவில் வெள்ளை வானில்  (NE 0833) கடத்தப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அஸ்ட்ரா செனிகா தடுப்பு மருந்து தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை தொடர்பில் அசேல சம்பத் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு எடுத்துவரப்படும் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பு மருந்துகளுக்கு, வேறு பதார்த்தங்களை கலப்படம் செய்வதுடன் அந்த தரமற்ற தடுப்பு மருந்துகளையே மக்களுக்கு செலுத்தி வருவதாக குற்றம் சாட்டி வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளதாக,குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அசேல சம்பத் மீது முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்

https://www.ilakku.org/?p=53441

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவியுங்கடா 

  • கருத்துக்கள உறவுகள்

70 வருட வலி எங்களுடையது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

70 வருட வலி எங்களுடையது

5 hours ago, விசுகு said:

அனுபவியுங்கடா 

70 வருட வலி அவர்களுடையதும் தான். ஜே.வி.பி. அழிக்கப்பட்ட 90களில் தமிழரை போலவே சிங்களவரும் வகை தொகையின்றி சித்திரவதை செய்யப்பட்டு வீதியோரங்களில் எரிக்கப்பட்டார்கள். தமிழர்களை மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களையும் கூட அரசியல்வாதிகளும், இராணுவமும், பொலிசும் சக்திவாய்ந்தவர்களும் இரக்கமின்றி பாதிக்கிறார்கள். ஆனால் அந்த மக்களின் துயரங்கள் வெளியே வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

யார் சொன்னது அவர்களின் வலி வெளியே வரவில்லை என்று தற்பொழுது பிரதமராக இருக்கும் மகிந்தா மாத்தையா ஐ நா சபையின் வாசலில் நின்று கொண்டு சிறிலங்காவில் ஐ.தே ஆட்சியாலர்களால்  மனித உரிமைகள் மீறப்படுகின்றது என துண்டு பிரசுரம் வினியோகித்தவர்.....
அவர்களின் துயரங்களை அவர்கள் தான் சொல்ல வேண்டும் ,நாங்கள் அல்ல ....

76/77 களில் ஆயுதம் ஏந்தி போராட வெளிக்கிட்டபுரட்சிகர தமிழ் போராளிகள் அன்று தொடக்கம் இன்று வரை சிங்கள மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கினம் ஆனால் இதுவரை எங்களை போல தட்டச்சுடன் சரி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை.....
 சிங்களவர்களின் வலி தமிழன் தனி பிரதேசம்(தனி நாடு அல்ல) அமைத்து விடுவான் என்பது மட்டுமே ....அந்த வலியை எந்த சிங்கள அரசியல்வாதி துடைத்து ஏறிவேன் என வாக்குறுதி அளிக்கின்றானோ அவனே அவர்களின் தலைவன் .....
சிங்கள ஜனதாவின் வலியை துடைக்க போய் இறுதியில் எமக்கு வலியே இல்லை என்ற நிலைக்கு வருவதை விட எமது வலியை நாமே பார்த்துகொள்வது நல்லது...

எமக்கு வலியை உண்டாக்குபவர்கள் சிங்கள அரசியல் வாதிகளும் சிங்கள ஜனதாவும்....என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

அவர்களின் துயரங்களை அவர்கள் தான் சொல்ல வேண்டும் ,நாங்கள் அல்ல ....

உங்கள் துயரங்களையும் நீங்கள் மட்டும்தான் சொல்ல வேண்டுமா? அல்லது மற்றவர்களும் உங்கள் துயரங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? மற்றவர்கள் துயரங்களை தமிழர்கள் கண்டும் காணாதவர்களாக இப்படி நீங்கள் சொல்வது போல இருந்த காரணத்தாலும், 2009 மே மாதம் மற்றவர்களும் ஈழத்தமிழர் துயரங்களை கண்டும் காணாமல் ஒதுங்கிக்கொண்டதை நீங்கள் அவதானிக்கவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

மற்றவர்கள் தங்களுக்கு தேவை என்றால், நன்மை  எதாவது கிடைக்கும் என்றால்  குரல் கொடுப்பார்கள் ...சுயநலத்துடன் குரல் கொடுப்பார்கள் ....எமது அனுபவத்தில் கண்டது,,,

2009  இல் அந்த நிகழ்வு நடை பெற வேண்டும் என சகலரும்(தமிழரை தவிர) விரும்பினார்கள் ,காரணம் ஈழம் சகலருக்கும் கசப்பாக இருந்தது ...அவர்கள் உருவாக்கிய உலக ஒழுங்கிலிருந்து இன்னுமோரு நாடு உருவாகுவதை அவர்கள் விரும்பவில்லை ....இனிமேலும் அவர்கள் 2009 போல ஓர்  நிகழ்வு தமிழர்களுக்கு நடந்தாலும் பார்த்து கொண்டு தான் இருப்பார்கள் ,

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

உங்களால் மற்றவர்கள் எவருக்கும் நன்மையெதுவும் இல்லை, ஆனால் சகலருக்கும் உங்களால் தீமை விளையும் என்று அவர்கள் கருதுகிறார்களா? அவ்வளவு தூரம் மானிடர் அனைவருக்கும் பாதகமானவர்களா நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மானிடம் மதிக்கப்படவில்லை......மானிடத்தின் சுயநல அரசியல் ஆட்டிப்படைக்கிறது மானிடத்தை.....யாரும் புனித பூமியில் வாழவில்லை .....
 
27 minutes ago, கற்பகதரு said:

உங்களால் மற்றவர்கள் எவருக்கும் நன்மையெதுவும் இல்லை, ஆனால் சகலருக்கும் உங்களால் தீமை விளையும் என்று அவர்கள் கருதுகிறார்களா? அவ்வளவு தூரம் மானிடர் அனைவருக்கும் பாதகமானவர்களா நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கற்பகதரு said:

உங்களால் மற்றவர்கள் எவருக்கும் நன்மையெதுவும் இல்லை, ஆனால் சகலருக்கும் உங்களால் தீமை விளையும் என்று அவர்கள் கருதுகிறார்களா? அவ்வளவு தூரம் மானிடர் அனைவருக்கும் பாதகமானவர்களா நீங்கள்?

இவர்கள் தமிழர்களா ?அமெரிக்கா இந்த மக்கள் மீது குண்டு மழை பொழிவதற்கு ....உங்கள் கருத்துக்கள் யாவும் தமிழர்கள் மடடும் தான் பாவப்பட்ட ஜன்மங்கள் என்ற வகையில் இருக்கிறது....உலகில் பல இனங்கள் 2009 போன்ற  துயர சம்பவங்களை அனுபவிக்கிறார்கள் ...,ஆனால் எமது சற்று உலக கவனத்தை பெற்றது காரணம் புலம்பெயர் தமிழ் சமுகத்தின் செயலபாடுகள் என சொல்லலாம்.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இங்கு மானிடம் மதிக்கப்படவில்லை......மானிடத்தின் சுயநல அரசியல் ஆட்டிப்படைக்கிறது மானிடத்தை.....யாரும் புனித பூமியில் வாழவில்லை .....

என்ன  செய்வது புத்தா?

தமிழரது விதியா?  அல்லது மூளையின் குளறுபடியா என்று  தெரியவில்லை?

ஒரு  நாலு  தமிழர்கள் எமக்கு நடந்த அவலங்களை கொடுமைகளை 

எமக்குள் சொல்ல  அழக்கூட முடியவில்லை

வந்து  விடுவார்கள்  வகுப்பெடுக்க???

அவனுக்காக  அழுதாயா?

இவனுக்காக  அழுதாயா??

யாருக்காக 

யாருடன் எல்லாம் அழுதோம் என்று அறியாதோர்??

செயலில்  செய்யாதோர்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தாராளமாக அழலாம் விசுகு. அதையாவது வெற்றிகரமாக, நிறைவாக, மற்றவர்களுக்குமாக, என்றென்றைக்கும் நிலையாக செய்யுங்கள். ஆரம்பம் முதல் இந்த அழுவதை மட்டுமே நீங்கள் செய்திருந்தால் மற்றவர்கள் பலர் இன்று அழவேண்டி வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

தாராளமாக அழலாம் விசுகு. அதையாவது வெற்றிகரமாக, நிறைவாக, மற்றவர்களுக்குமாக, என்றென்றைக்கும் நிலையாக செய்யுங்கள். ஆரம்பம் முதல் இந்த அழுவதை மட்டுமே நீங்கள் செய்திருந்தால் மற்றவர்கள் பலர் இன்று அழவேண்டி வந்திருக்காது.

இப்ப கூட பாருங்கள்

நான் இந்த  நிலையில் அழுவதற்கு கூட

ஐனநாயகம்

வெற்றி

நிறைவாக

நிலையாக

நீங்கள் அறிவுரையும் அனுமதியும் தரவேண்டி இருக்கு?😪

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இப்ப கூட பாருங்கள்

நான் இந்த  நிலையில் அழுவதற்கு கூட

ஐனநாயகம்

வெற்றி

நிறைவாக

நிலையாக

நீங்கள் அறிவுரையும் அனுமதியும் தரவேண்டி இருக்கு?😪

அதற்கு காரணம் நீங்கள் மற்றவர்களை அழ வைத்ததுதான், இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கற்பகதரு said:

அதற்கு காரணம் நீங்கள் மற்றவர்களை அழ வைத்ததுதான், இல்லையா?

நான் உங்கள் போன்றவர்கள் போல் இல்லை. நன்மையான அல்லது சரியான விடயங்களில் மட்டுமே எனக்கு பங்குண்டு கெட்டவற்றில் அல்லது பிழையானவற்றில் எனக்கு பங்கில்லை என்று வேசம் போட. அன்று எடுத்த முடிவுகள் அனைத்திலும் உடன்பாடு உண்டு. இன்றும் அதில் எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில் அன்றிருந்ததை விட அதே தேவையும் முடிவுகளும் இன்னும் அதிகமாகி உள்ளனவே தவிர குறையவில்லை.

23 minutes ago, விசுகு said:

விசுகு, பிரான்ஸ் சென்று விடுவது என்று நீங்கள் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை அது கெட்டதும் இல்லை. அது சரியான முடிவே. அகவே அது குறித்து வருத்த வேண்டிய தேவை உங்களுக்கு  இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 12:51, கற்பகதரு said:

70 வருட வலி அவர்களுடையதும் தான். ஜே.வி.பி. அழிக்கப்பட்ட 90களில் தமிழரை போலவே சிங்களவரும் வகை தொகையின்றி சித்திரவதை செய்யப்பட்டு வீதியோரங்களில் எரிக்கப்பட்டார்கள். தமிழர்களை மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களையும் கூட அரசியல்வாதிகளும், இராணுவமும், பொலிசும் சக்திவாய்ந்தவர்களும் இரக்கமின்றி பாதிக்கிறார்கள். ஆனால் அந்த மக்களின் துயரங்கள் வெளியே வருவதில்லை.

  வீதிகளில் எரிக்கப்பட்டபோது , தலையை வெட்டி களனி ஆற்றில் வீசியபோது,  ரயரை கழுத்தில் கொழுவி உயிருடன் தீமூட்டப்பட்டபோது  எரித்தபோது, அரசியல்வாதிகள் ராணுவம் பொலிசினால் ஜேவிபி என்ற பெயரில் சிங்களவர்கள் அழிக்கப்பட்டபோது அந்த படுபாதகத்தை சரியென்று தமிழர்கள் யாரும் சொல்லவில்லை அதனால்தான் அவர்களுக்கு நடந்த கொடுமையை இன்றுவரை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்  ..நீங்கள் உட்பட.

ஆனால் அதே ராணுவம், பொலிஸ்,அரசியல்வாதிகள்,சிங்களவர்கள் ஜேவிபி உட்பட்ட எவருமே தமிழர்கள் இதே பாணியில் கொன்றொழிக்கப்பட்டபோது அதை தவறென்று சொன்னதுண்டா?

ஜேவிபி என்ற பெயரில் சிங்களவர்கள் அழிக்கப்பட்டபோது துயரப்பட்டபோது நாங்கள் யாரும் வெடிகொளுத்தி பால் சோறு கொடுத்து மகிழ்ந்திருக்கிறோமா?

அழிக்கப்பட்டவர்களும் அழித்தவர்களும் தமிழரை கொல்லும் விசயத்தில் தமிழர்கள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்ற கொள்கையில் தங்கள் முரண்பாடுகளை மறந்து ஒன்றாகவே நின்றார்கள்.

தமிழர்கள் என்று வரும்போது தங்களோட இனம் தங்களுக்கு இழைத்த துயரத்தைகூட தூக்கி ஒரு ஓரமாய் வைத்துவிட்டு வரிந்து கட்டுக்கொண்டு ஓரணியில் நின்று எமக்கெதிராய் போர் தொடுத்தார்கள் 

அவர்கள் எங்களைபோல அல்ல இன மானஸ்தர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கற்பகதரு said:

தாராளமாக அழலாம் விசுகு. அதையாவது வெற்றிகரமாக, நிறைவாக, மற்றவர்களுக்குமாக, என்றென்றைக்கும் நிலையாக செய்யுங்கள். ஆரம்பம் முதல் இந்த அழுவதை மட்டுமே நீங்கள் செய்திருந்தால் மற்றவர்கள் பலர் இன்று அழவேண்டி வந்திருக்காது.

விடுதலைப்போராட்டங்கள் என்றுமே தாம்பாள தட்டில் பழவகை பூக்களுடன் பெறப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்போராட்டங்கள் என்றுமே தாம்பாள தட்டில் பழவகை பூக்களுடன் பெறப்படுவதில்லை.

அவர் சொல்றதுக்கு உங்களுக்கு உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறன் 
அவர் சொல்லுறார் விசுகு அண்ணா அழுது இருந்தால் மற்றவர்கள் அழுது இருக்க மாட்டார்களாம் 

"ஆரம்பம் முதல் இந்த அழுவதை மட்டுமே நீங்கள் செய்திருந்தால் மற்றவர்கள் பலர் இன்று அழவேண்டி வந்திருக்காது."

ஆதாவது பலர் விசுகு அண்ணா செய்வதுக்கு எதிர்மாறாக தாம் செய்வதுக்கு  என்றே பிறப்பெடுத்து 
வந்திருக்கிறார்களாம். அப்போ கவுண்டமணி செந்தில் காலத்தில் விசுகு அண்ணா சிரித்து இருக்கிறார் 
என்று எண்ணுகிறேன் .... அப்போ அவர்கள் அழுது இருக்கிறார்கள்.  

அப்போது வீடியோ வசதி இன்டர்நெட் இல்லாத காலம் 
இவர் கவுண்டமணி- செந்தில் படம்பார்த்து சிரிக்கிறார் என்பதை எவ்வாறு 
அறிந்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

உலகத்தில் அவனவனுக்கு அவன் அவன் பிரச்சனை 
ஒரு கூட்டம் விசுகு அண்ணாவுக்கு எப்ப வயித்துக்குத்து வரும் தடிமன் காய்ச்சல் வரும் 
அடுத்தவன் எப்போ கருத்து எழுதுவான்? என்று ஒரு கூட்டம் 

9 hours ago, கற்பகதரு said:

தாராளமாக அழலாம் விசுகு. அதையாவது வெற்றிகரமாக, நிறைவாக, மற்றவர்களுக்குமாக, என்றென்றைக்கும் நிலையாக செய்யுங்கள். ஆரம்பம் முதல் இந்த அழுவதை மட்டுமே நீங்கள் செய்திருந்தால் மற்றவர்கள் பலர் இன்று அழவேண்டி வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

  அழிக்கப்பட்டவர்களும் அழித்தவர்களும் தமிழரை கொல்லும் விசயத்தில் தமிழர்கள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்ற கொள்கையில் தங்கள் முரண்பாடுகளை மறந்து ஒன்றாகவே நின்றார்கள்.

தமிழர்கள் என்று வரும்போது தங்களோட இனம் தங்களுக்கு இழைத்த துயரத்தைகூட தூக்கி ஒரு ஓரமாய் வைத்துவிட்டு வரிந்து கட்டுக்கொண்டு ஓரணியில் நின்று எமக்கெதிராய் போர் தொடுத்தார்கள் 

சிங்களவர்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராகவே இந்த போரை கருதுகிறார்கள். தமிழர்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் துரோகிகள் என்பதே சிங்களவரின் அவதானிப்பு.

இந்திய படையை ஈழத்தமிழர் அடித்து விரட்டிய காலத்தில் சிங்களவரும் தமிழரும் நண்பர்கள். பிரேமதாசா ஆயுதங்களும் பல்வேறு உதவிகளும் தாராளமாக செய்து வடக்கு கிழக்கை சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் விடுதலைப்புலிகளிடம் விட்டிருந்தார். ஜே.வி.பி. யின் பெயரால் சிங்களவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட அந்த நாட்களில் தமிழர்கள் சிங்கள பகுதிகளில் தைரியமாக நடமாட முடிந்தது. 

மீண்டும் தமிழர்கள் இந்தியரை அணுக ஆரம்பித்தவுடன் சிங்களவர் எதிரிகளானார்கள்.

2 hours ago, Maruthankerny said:

உலகத்தில் அவனவனுக்கு அவன் அவன் பிரச்சனை 

  1. ஒரு கூட்டம் விசுகு அண்ணாவுக்கு எப்ப வயித்துக்குத்து வரும் தடிமன் காய்ச்சல் வரும் 
  2. அடுத்தவன் எப்போ கருத்து எழுதுவான்? என்று ஒரு கூட்டம் 

நீங்கள் முதலாவது கூட்டமா அல்லது இரெண்டாவதா? 😄

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கற்பகதரு said:

சிங்களவர்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராகவே இந்த போரை கருதுகிறார்கள். தமிழர்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் துரோகிகள் என்பதே சிங்களவரின் அவதானிப்பு.

அண்ணா, 2009 இல் இந்தியா நடந்துகொண்டதைப் பார்த்தபிறகுமா நீங்கள் இப்படி எழுதுகிறீர்கள்? தமிழரின் போராட்டத்தை அழிக்க உதவியமைக்காக சிங்களம் வெளிப்படையாகவே தனது பாராளுமன்றத்தில் இந்தியாவுக்கு நன்றி கூறியதன் பின்னருமா இந்தியா ஈழத்தமிழனுக்கு உதவப்போகிறது என்று சிங்களவர்கள் இன்னும் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

On 28/6/2021 at 02:51, கற்பகதரு said:

70 வருட வலி அவர்களுடையதும் தான். ஜே.வி.பி. அழிக்கப்பட்ட 90களில் தமிழரை போலவே சிங்களவரும் வகை தொகையின்றி சித்திரவதை செய்யப்பட்டு வீதியோரங்களில் எரிக்கப்பட்டார்கள். தமிழர்களை மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களையும் கூட அரசியல்வாதிகளும், இராணுவமும், பொலிசும் சக்திவாய்ந்தவர்களும் இரக்கமின்றி பாதிக்கிறார்கள். ஆனால் அந்த மக்களின் துயரங்கள் வெளியே வருவதில்லை.

இல்லையண்ணை,

அதும் வெளியே  வந்தது. சந்திரிக்காவின் ஆட்சி வந்தவுடன் இவ்வாறான பல படுகொலைகளை அவர் விச்சரித்தார். சூரியகந்தை உட்பட பிரேமதாசா காலத்தில் இடம்பெற்ற ஜே வீ பி கிளர்ச்சியடக்கும் படுகொலைகள் பற்றிப் பலராலும் வெளிப்படையாகப் பேசவும், எழுதவும், விசாரிக்கவும் முடிந்தது. குறைந்தது ஆட்சிமாற்றங்களின் போதாவது வெளியெ கொண்டுவர முடிந்தது. 

ஆனால், தமிழரின் மீதான படுகொலைகலை எந்த ஆட்சி மாற்றமும் வெளிக்கொனரவில்லையண்ணை, தம்பங்கிற்கு மறைத்துத்தான் வந்திருக்கிறார்கள். அல்லது இன்னுமொருபடி அதிகமாக எம்மை அழித்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2021 at 11:50, கற்பகதரு said:

உங்கள் துயரங்களையும் நீங்கள் மட்டும்தான் சொல்ல வேண்டுமா? அல்லது மற்றவர்களும் உங்கள் துயரங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? மற்றவர்கள் துயரங்களை தமிழர்கள் கண்டும் காணாதவர்களாக இப்படி நீங்கள் சொல்வது போல இருந்த காரணத்தாலும், 2009 மே மாதம் மற்றவர்களும் ஈழத்தமிழர் துயரங்களை கண்டும் காணாமல் ஒதுங்கிக்கொண்டதை நீங்கள் அவதானிக்கவில்லையா? 

இல்லையண்ணை,

ஒரு இன மக்களின் துயரத்தை இன்னொருவர் பேசுவதால் மட்டுமே தீர்த்துவிட முடியாது. பாலஸ்த்தீன மக்களின் துயரம் இந்த உலகம் அறியாததா? அவர்களின் அவலம் பற்றி பேசாதோர் இருக்கிறார்களா? ஆனால் அவர்களின் அவலங்களையோ அல்லது அவர்கள் மீதான அடக்குமுறையினையோ இதுவரையில் எவராலும் அகற்ற முடிந்ததா? அப்படியானால், இவர்களுக்காக கொடுத்த குரல்கள் எல்லாம் என்னவாயிற்று? 

அவர்களுக்கான போராட்டத்தினையும் குரலினையும் அவர்களே செய்யவும் கொடுக்கவும் வேண்டும் என்பது நியதியாகிவிட்டது. வேறு எவர் கொடுத்தாலும் அது எடுபடப்போவதில்லை, ஏனென்றால் இந்தக் குரல்களால் எதனையும் சாதித்து விடமுடியாது. உலக நியதி தர்மத்தின்பாலும் மனிதநேயத்தின்பாலும் நடப்பதில்லை.

ஆகவே, எமக்காக எவரும் குரல் கொடுக்கவில்லையென்பதால்த்தான் நாம் அழிக்கப்பட்டோம் என்பது சரியாகப்படவில்லையண்ணை. 

18 hours ago, கற்பகதரு said:

உங்களால் மற்றவர்கள் எவருக்கும் நன்மையெதுவும் இல்லை, ஆனால் சகலருக்கும் உங்களால் தீமை விளையும் என்று அவர்கள் கருதுகிறார்களா? அவ்வளவு தூரம் மானிடர் அனைவருக்கும் பாதகமானவர்களா நீங்கள்?

அண்ணை, 

எம்மீது நடத்தப்பட்ட இனக்கொலைக்கும் மானிட நேயத்திற்கும் என்ன சம்பந்தம்? மானிடநேயத்தின்பால் இந்த உலகு நடக்குமானால் இப்படியான இனக்கொலையொன்று நடந்திருக்குமா? 

எமது போராட்டம் அழிக்கப்படுவதன்மூலம் தமது பிராந்திய  சர்வதேச நலன்களும், வர்த்தக வழிகளும் பாதுகாக்கப்படலாம் என்பவை மட்டுமே காரணமாக இருந்தன. அதனால் அழித்தார்கள். அழித்தவர்கள் இன்று அதனை கசப்புடன் இரைமீட்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

ஆரம்பம் முதல் இந்த அழுவதை மட்டுமே நீங்கள் செய்திருந்தால் மற்றவர்கள் பலர் இன்று அழவேண்டி வந்திருக்காது.

விசுகரின் அழுகை, 2009 இன் பின்னர் உங்களின் மாற்றம் இதுவெல்லாமே எமது போராட்டம் தோற்றதன் காரணத்தினால் ஏற்பட்டதுதானே அண்ணை? பிறகு ஏன் விசுகரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? 

ஆனால், இந்த "மற்றையவர்" யாரென்றுதான் புரியவில்லை. கொல்லப்பட்ட சிங்களவருக்காக வருத்தப்படுகிறீர்களோ அண்ணை? நல்லதுதான், விசுகர் எங்களுக்காக அழட்டும், நீங்கள் சிங்களவருக்காக அழுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

அண்ணா, 2009 இல் இந்தியா நடந்துகொண்டதைப் பார்த்தபிறகுமா நீங்கள் இப்படி எழுதுகிறீர்கள்? தமிழரின் போராட்டத்தை அழிக்க உதவியமைக்காக சிங்களம் வெளிப்படையாகவே தனது பாராளுமன்றத்தில் இந்தியாவுக்கு நன்றி கூறியதன் பின்னருமா இந்தியா ஈழத்தமிழனுக்கு உதவப்போகிறது என்று சிங்களவர்கள் இன்னும் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

நான் சொன்னது மறுவளமானது.  சிங்களவர்கள் “இந்தியா ஈழத்தமிழனுக்கு உதவப்போகிறது” என்று பயப்படவில்லை. ஈழத்தமிழர் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் துரோகிகள் என்றே சிங்களவர் பயப்படுகிறார்கள். இந்தியா தங்களின் அடிவருடிகளான ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மூலம் ஏமாற்றி 2009ல் சிங்களவர் வெற்றிகொள்ள வைத்ததை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் நன்றி தெரிவித்தார்கள். போக்கிடம் இல்லாத இந்திய அடிவருடியான ஈழத்தமிழனோ மேலும் கீழாக இறங்கி இந்தியாவிடம் பூரணமாக இன்று சரணடைந்து இருப்பதையும் இந்திய ஆதிக்கவாதிகளுக்காக ஈழத்தமிழன் மீண்டும் எந்த துரோகத்தையும் செய்ய தயாராக இருப்பதையும் சிங்கள ஆட்சியாளர் நன்கு அறிவார்கள். அதனால்தான் இன்றும் பெரும் செலவானாலும் இலங்கை இராணுவம் வடகிழக்கில் எதற்கும் தயாராக இருக்கிறது.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கற்பகதரு said:

போக்கிடம் இல்லாத இந்திய அடிவருடியான ஈழத்தமிழனோ மேலும் கீழாக இறங்கி இந்தியாவிடம் பூரணமாக இன்று சரணடைந்து இருப்பதையும் இந்திய ஆதிக்கவாதிகளுக்காக ஈழத்தமிழன் மீண்டும் எந்த துரோகத்தையும் செய்ய தயாராக இருப்பதையும் சிங்கள ஆட்சியாளர் நன்கு அறிவார்கள். அதனால்தான் இன்றும் பெரும் செலவானாலும் இலங்கை இராணுவம் வடகிழக்கில் எதற்கும் தயாராக இருக்கிறது.

கூட்டமைப்பு இந்தியாவிடம் போய் நிற்பதால் முழு ஈழத்தமிழினமுமே இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்குத்  துணைபோகும் என்று அவர்கள் கருதுகிறார்களா? 

அடுத்தது, ஈழத்தமிழன் செய்வதாக நீங்கள் கூறும் துரோகம் என்ன? அதை யாருக்கு எதிராகச் செய்கிறான் என்று நினைக்கிறீர்கள்? ஈழத்தமிழன் தனக்கே உரிய தாயகத்தையும் தனக்கே உரிய உரிமைகளையும் கேட்பது யாருக்கெதிரான துரோகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

ஈழத்தமிழனின் ஒரே பலமான விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஆயுதப் பலத்தையும் தானே முன்னின்று அழித்த இந்தியா மீண்டும் இன்னொரு ஆயுதப் போராட்டத்தை ஈழத்தமிழனூடாக ஈழத்தில் அரங்கேற்றும் என்றும் அதனாலேயே இலங்கை ராணுவம் தமிழர் தாயகத்தில் இன்னும் ஆக்கிரமித்து நிற்கிறதென்பதையும் நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களோ அண்ணை? 

இலங்கையில் தனது ஆக்கிரமிப்பினைச் செய்வதையே இந்தியா விரும்புகிறதென்றால், புலிகளை அழிக்கவேண்டிய தேவையென்ன? புலிகளுடன் சமரசம் செய்து தனது ஆதிக்கத்தினை அது நிலைநாட்டியிருக்கலாமே? இதற்கு ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று, தமிழரின் நிரந்தர எதிரியாக தன்னை வெளிக்காடி, சிங்களவருடன் கொஞ்சிக் குலாவி, சீனனையும் இழுத்து உட்பாவாடைக்குள் விட்டிருக்கத் தேவையில்லையே?

Edited by ரஞ்சித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.