Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வரலாறு காணாத வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வரலாறு காணாத வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலி

 
கனடா

பட மூலாதாரம், Getty Images

கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காவல்துறையினர், அந்த மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள்.

அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லைட்டனில் அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவானது. அதற்கு முந்தைய வாரம்வரை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியை கடக்கவில்லை.

வான்கூவர் புறநகர் பகுதி போலீஸ் கேப்டன் மைக் கலன்ஞ், "உங்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வயோதிகர்கள் இருந்தால், அவர்களின் நிலைமையை கவனியுங்கள். இந்த வெப்பநிலை நமது சமூகத்துக்கு மிக மோசமானதாக உள்ளது. அதுவும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்னை," என்று தெரிவித்துள்ளார்.

கனடா

பட மூலாதாரம், Getty Images

காவல்துறையைப் பொருத்தவரை, வான்கூவர் புறநகர் பகுதிகளான பர்னபீ, சர்ரீ ஆகிய பகுதிகளில் மட்டும் வெப்ப தாக்கம் காரணமாக 69 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் பலரும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த வயோதிகர்கள்.

 

சிறிய கிராமமான லைட்டனில் வாழும் குடியிருப்புவாசி மேகன் ஃபேண்டரிச் குளோபல் அண்ட் மெயில் நாளிதழிடம் பேசும்போது, "வசிப்பிடங்களை விட்டு வெளியே செல்வதே இயலாத ஒன்றாகி விட்டது," என்று கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த வெப்பநிலையை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்த மேகன், தமது மகளை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு வெளியே உள்ள வெப்பநிலை குறைவாக பதிவாகும் இடத்துக்கு அனுப்பி விட்டதாக கூறினார்.

"இயன்றவரை நாங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறோம். அதிக வெப்பநிலையும் வறண்ட வானிலையும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால், 47 டிகிரிக்கு உள்பட்ட வெப்பநிலையில் வாழ்வதற்கும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலையின் தாக்கத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

கனடா

பட மூலாதாரம், Getty Images

கனடா வானிலை துறை, பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

"உலக அளவில் மிகவும் குளுமையான மற்றும் பனி அதிகம் பொழியும் இரண்டாவது நாடு எங்களுடையது. அடிக்கடி காணப்படும் பனி மழை, பனிக்காற்று பற்றி நாம் அதிகம் பேசியிருப்போம். ஆனால், இப்படியொரு வெப்பநிலை பதிவாகும் என்பது பற்றி இதுவரை நாம் பேசியது கிடையாது. இப்போதுள்ள நிலையுடன் துபையை ஒப்பிட்டால் அங்கு இதை விட குளுமையான நிலை இருக்கும் என்பது போல உள்ளது," என்று கனடா வானிலை துறையின் மூத்த ஆய்வாளர் டேவிட் ஃபிலிப்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவை வெப்பச்சலனம் எப்படி பாதிக்கும்?

கனடா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நகரங்களான போர்ட்லாந்து, சியாட்டில் ஆகியவை மட்டுமே 1940களுக்கு பிறகு மிக அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளன.

ஓரிகனில் உள்ள போர்ட்லாந்தில் அதிகபட்சமாக 46.1 டிகிரியும் சியாட்டிலில் 42.2 டிகிரியும் பதிவானதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது. ஒரு கனமான கேபிளை உருக்குவதற்கு இந்த அளவு வெப்பமே போதுமானது. இதன் காரணமாக தமது ரோப்கார் சேவையை போர்லாந்து நகர நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

கனடா

பட மூலாதாரம், Reuters

வாஷிங்டனின் ஸ்போகேன் பகுதியில் வெப்பம் காரணமாக அதிக அளவில் ஏசி சாதனங்களை பயன்படுத்தி வருவதால் மின்சார தேவை அதிகமாகியுள்ளது.

சியாட்டில் நகரில் உள்ள ஒரு குடியிருப்புவாசி, ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசும்போது, "வாஷிங்டன் மாகாணம் முழுவதும் பாலைவனம் போல வெப்பநிலை நிலவுகிறது," என்று கூறினார்.

கனடா

பட மூலாதாரம், Getty Images

"வழக்கமாக வெப்பநிலை கடுமையாக இருக்கும்போது நகரவாசிகள் டீசர்டுகள், அரைக்கால் பேன்டுகளை அணிவார்கள். ஆனால், இப்போதுள்ள வெப்பநிலை அப்படியெல்லாம் ஆடை அணிய முடியாத அளவுக்கு ஆக்கியிருக்கிறது," என்று அந்த குடியிருப்புவாசி தெரிவித்தார்.

சியாட்டில் நகரில் உள்ள அமேசான் நிறுவனம், அதன் தலைமையத்தில் வெளிப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பாதுகாப்பான மற்றும் குளுமையான பகுதிகளில் தங்கியிருக்க வசதிகளை செய்துள்ளது. போர்ட்லாந்து நகரில் உள்ள குடியிருப்புவாசிகளும் குளுமை மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். வாஷிங்டனில் பெரும்பாலான மக்கள் நீர்வீழ்ச்சி ,செயற்கை நீரூற்று இடங்கள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

தீவிர பருவநிலை நிகழ்வுகள், வரும் காலங்களில் பருவநிலை மாற்றத்தை கடுமையாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், தற்போதைய வெப்பநிலை பதிவை உலகளாவிய வெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்று அவர்கள் கருதுகின்றனர்.https://www.bbc.com/tamil/global-57651200

  • கருத்துக்கள உறவுகள்

அங்கெல்லாம் சமர் கொண்டாட இங்கு இங்கிலாந்தில் விண்டர் மப்பு கொண்டாடுது கூடவே Tornado எனும் சூழல் புயல் ஈஸ்ட்காம் பார்க்கிங் பக்கம் @nedukkalapoovan  @ரதிஅந்தப்பக்கம் இருப்பவர்கள் பிரச்சினையில்லாமல் இருக்கினமோ தெரியலை !!!!! @ரதிஅக்காவை  Tornado  தூக்கி இருக்காது ஏனென்றால் அவாவே ஒரு Tornado தானே 😃

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

அங்கெல்லாம் சமர் கொண்டாட இங்கு இங்கிலாந்தில் விண்டர் மப்பு கொண்டாடுது கூடவே Tornado எனும் சூழல் புயல் ஈஸ்ட்காம் பார்க்கிங் பக்கம் @nedukkalapoovan  @ரதிஅந்தப்பக்கம் இருப்பவர்கள் பிரச்சினையில்லாமல் இருக்கினமோ தெரியலை !!!!! @ரதிஅக்காவை  Tornado  தூக்கி இருக்காது ஏனென்றால் அவாவே ஒரு Tornado தானே 😃

 

இரண்டு Tornado சேர்ந்தாலும், ஒரேயடியாய்… தூக்கி அடிக்குமாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அங்கெல்லாம் சமர் கொண்டாட இங்கு இங்கிலாந்தில் விண்டர் மப்பு கொண்டாடுது கூடவே Tornado எனும் சூழல் புயல் ஈஸ்ட்காம் பார்க்கிங் பக்கம் @nedukkalapoovan  @ரதிஅந்தப்பக்கம் இருப்பவர்கள் பிரச்சினையில்லாமல் இருக்கினமோ தெரியலை !!!!! @ரதிஅக்காவை  Tornado  தூக்கி இருக்காது ஏனென்றால் அவாவே ஒரு Tornado தானே 😃

 

நானும் ரதியை எப்போதூம் தேடுறன்..ஒழுச்சு நின்று பார்த்தாலும் ஒரு வணக்கம் வையுங்கள்.👋😄

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, யாயினி said:

நானும் ரதியை எப்போதூம் தேடுறன்..ஒழுச்சு நின்று பார்த்தாலும் ஒரு வணக்கம் வையுங்கள்.👋😄

வர்ரா  போறா இங்கு போகும் தொடர் ஒன்றை பார்த்து பயந்து போய்  இருக்கிறாவாம் 😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, பெருமாள் said:

வர்ரா  போறா இங்கு போகும் தொடர் ஒன்றை பார்த்து பயந்து போய்  இருக்கிறாவாம் 😆

தொடரை பாத்தும் பாக்காத மாதிரி  வந்து போகச்சொல்லுங்கோ..😁

Pin on sowmi

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

வர்ரா  போறா இங்கு போகும் தொடர் ஒன்றை பார்த்து பயந்து போய்  இருக்கிறாவாம் 😆

பயம் என்றால் வேப்பிலை தான் எடுக்கனும்...😀🤭

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உறவுகள் பாதுகாப்பாய் இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வெப்ப அலை: உருகும் சாலைகள், உயிரிழந்த 200 பேர்; காலநிலை மாற்றம்தான் காரணமா?

A man stands under a water feature trying to beat the heat

A man stands under a water feature trying to beat the heat ( Jeff McIntosh/The Canadian Press via AP )

வெப்பத்திலிருந்து தங்கள் நாட்டு மக்களைக் காக்க, பொது இடங்களில் செயற்கை நீரூற்று அமைத்தும், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தற்காலிக குளிர்ச்சியான மையங்கள் அமைத்தும் கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் உதவி வருகின்றன.

newsletter_image.png?format=webp&w=576&dpr=1.0

விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...!

எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!

Get Our Newsletter

கனடா மற்றும் அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடா நாட்டின் வான்கூவர் மாகாணத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக 49 டிகிரி செல்சியஸ்க்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலையானது ஒட்டுமொத்த வடமேற்கு பசிபிக் பகுதியையும் வாட்டிவருகிறது. இதன் காரணமாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

People try to beat the heat at a beach
 
People try to beat the heat at a beach Jeff McIntosh/The Canadian Press via AP

கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவர் மற்றும் அமெரிக்காவின் சியாட்டல் எனப் பல பகுதிகள் வெயில் அலையினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.. `இது வெறும் ஆரம்பம்தான். வெயிலின் உச்சம் ஜூலை மாதத்தில்தான் அதிகமாக இருக்கும்' என அந்நாடுகளின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கு, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் `வெப்ப குவிமாடம்' (Heat Dome) எனும் நிகழ்வே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பசிபிக் பகுதியின் வளிமண்டலத்தில் உயர் அழுத்தநிலை ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலிலிருந்து வரும் காற்றை, இந்த உயர் அழுத்தநிலை உறிஞ்சிக்கொள்ளும். இதனால்தான் வெப்பநிலை உயர்கிறது என்று கூறுகின்றனர்.

வெப்பத்திலிருந்து தங்கள் நாட்டு மக்களைக் காக்க, பொது இடங்களில் செயற்கை நீரூற்று அமைத்தும், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தற்காலிக குளிர்ச்சியான மையங்கள் அமைத்தும் கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் உதவி வருகின்றன. மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் கொரோனா தடுப்பூசி மையங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

A young boy runs through a fountain
 
A young boy runs through a fountain Jeff McIntosh/The Canadian Press via AP

காலநிலை மாற்றம்தான் இந்த உயர் வெப்பநிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த அரை நூற்றாண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவாக, இப்பகுதியில் 1.7 டிகிரி செல்சியஸ் அளவு வரை வெப்பம் அதிகரித்துள்ளது என்று `பெர்க்லி எர்த்' (Berkeley Earth) என்ற அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இதன் காரணமாகத்தான் சாலைகளும் உருகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 29-ம் தேதி இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை (43 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் வெயில் காலத்தில் இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் உணரப்பட்ட முதல் நாள் என்று இந்தியா வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அதிகரிக்கும் வெப்பம் -719 பேர் பலி

 

802f9b86-dbc4-11eb-a7cf-83829a746d04_162

கனடாவில் வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக  வெப்பம் அதிரித்துள்ளது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.

அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் லிட்டன் கிராமத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்  மட்டும் 719 பேர்   வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும்  கூறப்படுகிறது.

 

 

https://www.ilakku.org/719-dead-and-counting-canada-struggles-to-cope-with-unprecedented-heatwave/

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2021 at 10:54, பெருமாள் said:

அங்கெல்லாம் சமர் கொண்டாட இங்கு இங்கிலாந்தில் விண்டர் மப்பு கொண்டாடுது கூடவே Tornado எனும் சூழல் புயல் ஈஸ்ட்காம் பார்க்கிங் பக்கம் @nedukkalapoovan  @ரதிஅந்தப்பக்கம் இருப்பவர்கள் பிரச்சினையில்லாமல் இருக்கினமோ தெரியலை !!!!! @ரதிஅக்காவை  Tornado  தூக்கி இருக்காது ஏனென்றால் அவாவே ஒரு Tornado தானே 😃

 

 

On ‎30‎-‎06‎-‎2021 at 13:51, குமாரசாமி said:

தொடரை பாத்தும் பாக்காத மாதிரி  வந்து போகச்சொல்லுங்கோ..😁

Pin on sowmi

அவர் எழுதிறதை அவற்ற  மனிசி கூட வாசிப்பாவோ தெரியாது இதில் நான் வேற வாசிக்கோணுமாக்கும்...அவற்ற எழுத்துக்களை நாட்டை  விட்டு ஓடி வந்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் உள்ளவர்கள் , எப்பவுமே பழியை தூக்கி அடுத்தவர் மேல் போட்டுட்டு தாங்கள் சுத்த தங்கங்கள் என்று நினைப்பவர்கள் வாசித்திட்டு சுய இன்பம் அடைய வேண்டியது  தான் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

 

அவர் எழுதிறதை அவற்ற  மனிசி கூட வாசிப்பாவோ தெரியாது இதில் நான் வேற வாசிக்கோணுமாக்கும்...அவற்ற எழுத்துக்களை நாட்டை  விட்டு ஓடி வந்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் உள்ளவர்கள் , எப்பவுமே பழியை தூக்கி அடுத்தவர் மேல் போட்டுட்டு தாங்கள் சுத்த தங்கங்கள் என்று நினைப்பவர்கள் வாசித்திட்டு சுய இன்பம் அடைய வேண்டியது  தான் 

இவ  வந்திட்டா இனி நெருப்புத்தான் .

எங்கேயோ எழுதவேண்டியதை இங்கு பதிந்து போட்டா  போல் உள்ளது.

சூடா இருந்தால் நாளைக்கு நாகபூசணி அம்மன் தேர் அம்பாளை தரிசித்தால்  மனம் அமைதியடையுமாம் .

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.