Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிந்தவர் பயங்கரவாதச்சட்டத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஏர்போர்ட்டில இறங்கி, நம்ம பெயரை சொல்லுங்கோ.... கடிதமே தேவையில்லை. பறந்தடிச்சுக்கொண்டு அலுவல் பார்த்து அனுப்பி வைப்பினம். 😁

நானே உங்கட கடிதம் வாங்கி, டக்லஸ் அங்கிள் இடம் ஒரு அலுவல் பார்க்க வேணும் எண்டு இருக்கிறன். உதவாமலே போவியள்.... 🤔
 
ஓம்…அங்கிளை எனக்கு தெரியும்.

ஆனால் அங்கிளுக்கு என்ன தெரியாது🤣.

கடிதம் தரலாம். அங்கிளுக்கு என்ன, பைடனுக்கு தரவும் நான் ரெடி🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களுக்கு என்னைவிட அங்குள்ள நிலை புரிகிறது. ஆனால்

தனியாக

அடக்கமாக

ஒருத்தருக்கும் தெரியாமல் 

.........

........

......

என்று சொல்கிறீர்கள்.

அது விழுங்கி விடும் என்று நான் சொல்வதை ஏற்காத தாங்கள் இப்படி நடந்தால் தப்பலாம் என்கிறீர்கள்.

என்னால் மேலே எழுதிய எதையும் தவிர்க்க முடியாத போது உங்கள் பதில்???

என் மண்ணுக்காக போராடியவரை நான் சந்திக்க முடியாது விட்டால்?

என் மண்ணுக்காக உயிர் கொடுத்தோரை என்னால் வணங்க முடியாது விட்டால்??

அந்த மண்ணில் நடக்கும் அவலங்களை என்னால் பேச முடியாது விட்டால்??

இவ்வளவையும் தவிர்த்து நான் அந்த நாட்டுக்கு எதற்காக போகவேண்டும்???

அண்ணை,

நீங்கள், @குமாரசாமி அண்ணை, @பெருமாள் போன்றோர் ஊருக்கு போகாமல் இருப்பதற்கு நீங்கள் மேலே கூறிய காரணங்கள் உண்மையில் உன்னதமானவையும் போற்ற கூடியனவையும் கூட.

2009 இன் பின் கொழும்புக்கு போய் கைலாகு கொடுத்து, இணக்க அரசியலின் பிரான்ஸ் பிரதிநிதியாக நீங்கள் வந்திருக்கலாம். ஆனால் உங்கள் கொள்கை பற்று உங்களை செய்யவிடவில்லை.

ஆகவே உங்கள் கொள்கை உறுதிக்கு ஒரு சபாஷ்.

ஆனால் உங்களை போல ஈடுபாடு கொண்ட பலரும் நியாயத்தை கதைப்போம் சொன்ன மாரி போய் வந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான். அதைதான் அவர் சொல்ல வந்தார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

உண்மை தான் சகோ. அவர் மீதும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 

ஆனால் நான் ஒரு தேசத்தை கனவு கண்டேன். அதற்காக பாடுபட்டேன். 

அந்த தேசத்தை 2003இல் தரிசித்தேன்.

ஆனால் அந்த தேசம் இன்று இல்லை என்பதும் இனி வரப்போவதில்லை என்றும் தெரிந்தாலும்???

இப்போ உதாரணமாக

முகங்கள் பழுதான அல்லது உருமாறிய இறந்த உறவுகளின் இறுதிக்கிரியைகளின் போது சில உறவுகள் அவரது முகத்தை பார்க்க மாட்டோம் என்று கடைசி வரை பார்க்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்கள் கண்ட முழுமையான அவர்களது உண்மை முகமே கடைசிவரை தம் மனக்கண் முன் இருக்கட்டும் என்பதாகும். அப்படியே எனது கனவு தேசமும் என்னுடன் இருந்து விட்டு போகட்டுமே?? (இறந்த உறவுகள் என்பது ஒரு உதாரணம் மட்டுமே. என் தேசம் இறந்து விட்டதாக நான் என்றும் நினைக்கவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

நான் quote பண்ணிய கருத்திற்கு பச்சை இட்ட கற்பகம் அவர்களுக்கும் சேர்த்தே எனது கேள்விகள்.

கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா, கீதையின்  நாயகனே கிருஷ்ணா, கிருஷ்ணா என்றமாதிரி கேட்டிருக்கிறீர்கள். ஆகவே இதோ பதில்கள்😀:

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

தனிமனித உளவியலுக்கும் சமூக (கூட்டுமனித)  உளவியலுக்கும் உள்ள வேறுபாடுகளில் கூட்டுமுயற்சி பயத்தை குறைப்பதும் ஒன்றாகும். இதனாலேயே, தனியொருவராக போகப்பயப்படும் இருண்ட இடத்துக்கு, கூட ஒருவர் வந்தால் போக முடிகிறது. தனி ஒருவராக இருக்கும் போது நல்லபிள்ளையாகவும் தலைசிறந்த மாணவனாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுடன் சேர்நது பயமேதும் இன்றி வாள்வெட்டு சண்டியனாகவும் முடிகிறது. இதுதான் நீங்கள் தேடும் மனப்பயத்தை போக்கும் மருத்துவ காரணம்.

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

உங்கள் மேல்  கோபம் கொண்டவர்கள், பொறாமையுள்ளவர்கள், மற்றும் உங்களால் அல்லது நீங்கள் ஆதரித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் உருவாக்கி, உங்களை பாதிக்கக்கூடியவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற காரணத்துக்காக.

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

சிறீலங்கா குடியுரிமையுள்ளவர்கள் பயணத்தின்போது பாதிக்கப்பட்டால் சிறிலங்காவே உதவவேண்டும். வெளிநாட்டு குடியுரிமையுள்ளவர்களுக்கு அந்த அந்த நாடுகள் முடிந்தவரை உதவ முயற்சிக்கும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு படத்தை முடக்க நினைக்கும் இலங்கை அரசு - ஈழத்தமிழர்கள் பகீர் புகார்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

ஐயா கற்பகம், இப்படி சுற்றி மூக்கை தொடாமல், உங்களுக்கு சிறீலங்கா வந்தால் / போனால் பிரச்சனை வரலாம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்.

அதைவிடுத்து சிறீரங்கா அரசிற்கு வெள்ளையடிக்க ஆரம்பித்து மூக்குடைந்து போய் நிற்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம், இப்படி சுற்றி மூக்கை தொடாமல், உங்களுக்கு சிறீலங்கா வந்தால் / போனால் பிரச்சனை வரலாம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்.

அதைவிடுத்து சிறீரங்கா அரசிற்கு வெள்ளையடிக்க ஆரம்பித்து மூக்குடைந்து போய் நிற்கிறீர்கள்.

 மருத்துவ விளக்கம் கேட்டீர்கள், தந்தேன், அதற்கும் வெள்ளைக்கும் என்ன சம்பந்தம்? வெள்ளைக்கும் மூக்குக்கும் என்ன தொடர்பு?  ஓ… மூக்குச்சளி வெள்ளை என்கிறீர்களா? 😇 சிறிலங்கா உங்களை கடுமையாக பாதித்திருப்பது தெரிகிறது. அடுத்தமுறை இந்தியாவில் கும்பமேளாவிற்கு போய்வாருங்கள் - தெளிவு வரும்🙏

_118387049_hi066759958.jpg

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம், இப்படி சுற்றி மூக்கை தொடாமல், உங்களுக்கு சிறீலங்கா வந்தால் / போனால் பிரச்சனை வரலாம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்.

அதைவிடுத்து சிறீரங்கா அரசிற்கு வெள்ளையடிக்க ஆரம்பித்து மூக்குடைந்து போய் நிற்கிறீர்கள்.

எல்லோரும் இப்படி தான் பதில் தருகிறார்கள்.

அங்குள்ள மக்கள் அப்படி வாழ பழகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

உண்மையில் அங்குள்ள மக்கள் பழகி விட்டார்களா? 

அல்லது இவர்கள் எமக்கு சொல்லும் அறிவுரையை ஏற்று நடிக்கிறார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உண்மையில் அங்குள்ள மக்கள் பழகி விட்டார்களா? 

அல்லது இவர்கள் எமக்கு சொல்லும் அறிவுரையை ஏற்று நடிக்கிறார்களா??

கேட்க நாதியில்லாததால் நடப்பதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். அதற்காக ஏற்றுக்கொண்டுள்ளார் என்றில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உண்மையில் அங்குள்ள மக்கள் பழகி விட்டார்களா? 

அல்லது இவர்கள் எமக்கு சொல்லும் அறிவுரையை ஏற்று நடிக்கிறார்களா??

இந்த நிலையை நீங்கள் அறிய ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் அப்பதான் வாழபழகிகொண்டார்களா?? அல்லது நடிக்கிரார்களா? என உண்மை உங்களுக்கு விளங்கும்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த நிலையை நீங்கள் அறிய ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் அப்பதான் வாழபழகிகொண்டார்களா?? அல்லது நடிக்கிரார்களா? என உண்மை உங்களுக்கு விளங்கும்

வந்து  பார்க்கத்தேவையில்லை தம்பி

என் மக்களை  எனக்குத்தெரியும்

எனது  மக்களின்  பல  வரலாற்று முடிவுகளை  பார்த்து வளர்ந்தவன்

அதிசயத்தவன்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

20192019 Sri Lankan presidential election - Wikipedia

2015

எங்கள் நிலத்தில் நாம் தான் பெரும்பான்மை, இதுதான் சிங்கள அரசுக்கு தமிழ் மக்களின் பதில். 

இதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த அரசு எமது தேசிய இனத்தின் அரசு அல்ல. ஒரு நாடு இரு தேசிய இனங்கள். (One country two nations)

கடும் அடக்குமுறைகளின் நடுவிலும் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்களை சைக்கிள் டைனமோவில் கேட்டவர்கள் எம் மக்கள்.

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, கற்பகதரு said:

கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா, கீதையின்  நாயகனே கிருஷ்ணா, கிருஷ்ணா என்றமாதிரி கேட்டிருக்கிறீர்கள். ஆகவே இதோ பதில்கள்😀:

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

தனிமனித உளவியலுக்கும் சமூக (கூட்டுமனித)  உளவியலுக்கும் உள்ள வேறுபாடுகளில் கூட்டுமுயற்சி பயத்தை குறைப்பதும் ஒன்றாகும். இதனாலேயே, தனியொருவராக போகப்பயப்படும் இருண்ட இடத்துக்கு, கூட ஒருவர் வந்தால் போக முடிகிறது. தனி ஒருவராக இருக்கும் போது நல்லபிள்ளையாகவும் தலைசிறந்த மாணவனாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுடன் சேர்நது பயமேதும் இன்றி வாள்வெட்டு சண்டியனாகவும் முடிகிறது. இதுதான் நீங்கள் தேடும் மனப்பயத்தை போக்கும் மருத்துவ காரணம்.

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

உங்கள் மேல்  கோபம் கொண்டவர்கள், பொறாமையுள்ளவர்கள், மற்றும் உங்களால் அல்லது நீங்கள் ஆதரித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் உருவாக்கி, உங்களை பாதிக்கக்கூடியவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற காரணத்துக்காக.

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

சிறீலங்கா குடியுரிமையுள்ளவர்கள் பயணத்தின்போது பாதிக்கப்பட்டால் சிறிலங்காவே உதவவேண்டும். வெளிநாட்டு குடியுரிமையுள்ளவர்களுக்கு அந்த அந்த நாடுகள் முடிந்தவரை உதவ முயற்சிக்கும்.

சிறிலங்கா அரசுக்கு மடியில் கனம் இல்லாவிட்டால் உங்கள் அந்த பொன்னான மூன்று கருத்துக்களும் தேவையில்லை என நினைக்கின்றேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

வந்து  பார்க்கத்தேவையில்லை தம்பி

என் மக்களை  எனக்குத்தெரியும்

எனது  மக்களின்  பல  வரலாற்று முடிவுகளை  பார்த்து வளர்ந்தவன்

அதிசயத்தவன்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் தீர விசாரிப்பதே மெய் என்பார்கள் ஆனால்  நீங்கள் கண்ணால் கண்டேன் காதால் கேட்டேன் என்ற நிலையிலே நிற்கிறீர்கள் அண்ண இதற்கு மேல் நான் என்ன சொல்ல அது உங்கள் விருப்பம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.