Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை யார் ஆதரித்தாலும் என் சொந்தத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்வேன்: அமைச்சர் மேர்வின் சில்வா.

Featured Replies

புலிகளை யார் ஆதரித்தாலும் என் சொந்தத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்வேன்: அமைச்சர் மேர்வின் சில்வா.

தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் என்னுடைய சொந்தத் துப்பாக்கியாலேயே சுட்டுக்கொலை செய்வேன் என்று சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக மேர்வின் சில்வா தனது இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த நேசன்" வார ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

1989 ஆம் ஆண்டு ஜே.வி.பி. நடத்திய கலகத்தின் போது எனது குடும்பத்தினர் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். கடற்படையில் இருந்த என் இளைய சகோதரர், கர்ப்பிணி சகோதரி, அவரது கணவர் ஆகியோரை ஜே.வி.பி.தான் படுகொலை செய்தது. அவர்களின் இரண்டு பிள்ளைகளும் அநாதைகளாக்கப்பட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் தெகிவளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது என் மகன் கல்லூரி விடுதியில் இருந்தான். இல்லையெனில் அவனும் தலையை இழந்திருப்பான்.

அப்படியான ஜே.வி.பி.தான் என்னிடம் எத்தனை வாகனங்கள் இருக்கிறது? என்ன வாடகை நான் செலுத்துகிறேன் என்று கேள்வி எழுப்புகிறது. யாரை அவர்கள் இலக்கு வைக்கிறார்கள்? மகிந்தவையா? பசிலையா? கோத்தபாயவையா? நான் கிராமத்திலிருந்து வந்தவன். எனது கிராமத்தில் என் தந்தை ஒரு வர்த்தகர். ஜே.வி.பி.க்கு நான் முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனால் என் குடும்பத்துக்கு நான் முக்கியமானவன். ஆகையால் என் வாகனங்களை விற்பனை செய்தது தொடர்பாக எதுவித தகவலும் தெரிவிக்கமுடியாது.

அதே நேரத்தில் நான் மேலதிகமாக 39 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தியிருப்பதாக ஒருவராவது நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வேன்.

அமைச்சரவை தகுதியுள்ள அமைச்சர்கள் அதிகமாக இருப்பதாகவும் கூடுதல் செலவாகிறது என்றும் ஜே.வி.பி. கூறுகிறது. எனது வாகனம் பற்றி பேசுகிற ஜே.வி.பி.யினர் குறைந்த விலைக்கு டாடா வாகனத்தை வாங்காமல் மெர்சிடிஸ் வாங்குவது ஏன்? காந்தியும் தர்மபாலவும் எளிமையாகத்தானே வாழ்ந்தார். ஆனால் ஜேவிபி போதிப்பது ஒன்று செயற்படுவது ஒன்று.

தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் தனிப்பட்ட முறையில் நானே சுட்டுக்கொல்வேன் என்று சொன்னது உண்மைதான்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேர்கர் மக்களுக்கானது இந்த நாடு. யாரும் ஆயுதம் தூக்க முடியாது. எவரேனும் ஆயுதத்தைத் தூக்கினால் நாம் அதனை எதிர்ப்போம்.

விடுதலைப் புலிகளை நேரிடையாக ஆதரிக்கும் தமிழர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அதே நேரத்தில் சிங்களவர்களுடன் இணைந்திருக்கும் தமிழர்களும் உள்ளனர்.

ஆனால் எவரேனும்

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தால்-

அமைதியை சீர்குலைத்தால்

நான் காவல்துறையிடம் சென்று முறைப்பாடு எல்லாம் செய்யமாட்டேன்.

நானே எனது சொந்தத் துப்பாக்கியாலே அவர்களை சுட்டுக்கொலை செய்துவிடுவேன்.

(if anybody supported the LTTE or, attempts to destroy peace, I won’t go to the police to lodge an entry. Instead, I will kill them with my own pistol.)

இந்த சமூகத்துக்கு நன்மை செய்வதற்காக எதுவித அனுமதிப் பத்திரமும் பெறத்தேவையில்லை. நல்லதைச் செய்ய அச்சம் தேவையில்லை.

துட்டகைமுனு தனது சிங்காசனத்துக்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை- சிங்கள இனத்துக்காக- புத்த மதத்துக்காத்தான் செய்தார்.

நாங்கள் துட்டகைமுனு மன்னனின் படைத் தலைவர்களாக இருந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

எனக்கு முதுகெலும்பு உள்ளது. நான் அச்சப்படமாடேன். கொழும்பு கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட கஜநாயக்கவுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை. வெளிநபர்களுடன் என் தாயார் படுத்துறங்கியவர் அல்ல. என் இரத்த நாளங்களில் ஓடுவது என் பெற்றோரினதுதான். நான் என் தாயின் பாலை குடித்து வளர்ந்தவன். ஆனால் கெட்ட இரத்தம் ஓடுகிற நபர்கள்தான் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். நான் அப்படிப்பட்டவன் அல்ல.

"குடுலால்" என்பவர் மாநகர சபை உறுப்பினர். இங்கிலாந்திலிருந்த போது தேர்தல் வெற்றி, பெற்றவர். என் நண்பர்தான். "குடு" வர்த்தகம் செய்திருந்தால் காவல்துறை அவரை தண்டித்திருக்கும். அத்தகைய செயலை அவர் செய்தார் எனில் அவர் முகத்தில் காறி உமிழ்ந்து என் நட்புறவை அறுத்தெறிந்துவிடுவேன்.

என் மகனைப் பொறுத்த வரையில் உல்லாசமாக இருக்க விரும்புகிறான். வாரம் ஒருமுறை இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வான். அப்படியான ஒருநாளில்தான் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டுவிட்டது.

சிறிலங்கா அரசாங்கம் எனக்குக் கொடுத்த 3 வாகனங்களை நான் விற்பனை செய்துவிட்டேன். புதிய உயர் ரக வாகனங்களை வாங்கியிருக்கிறேன். வாகனம் மற்றும் நிலம் தொடர்பிலான வர்த்தகங்கள் மூலம் இவற்றை சம்பாதித்திருக்கிறேன். இன்னொருவருடன் உலங்குவானூர்தியும் வாங்குவேன். ஏன் ஜெட் வானூர்தியும் வாங்குவேன். என் வாகனம். என் பெற்றோல். யார் ஏன் கவலைப்பட வேண்டும்? என்னுடைய சொந்தப் பணத்தில் செலவு செய்கிறேன். நான் வரி செலுத்துகிறேன். வரி செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டினால் தண்டிக்கப்படுவேன். அப்படியான நிலையில் யாரைப் பற்றி ஏன் நான் கவலைப்பட வேண்டும்?

இன்னும் 3 அங்குலம் உயரமாக இருந்திருந்தால் விஜய குமாரதுங்கவை விட அழகான நபராக நான் இருந்திருப்பேன். என்னுடைய மனைவியின் தந்தை சொந்தமாக குதிரை வைத்திருந்தார். என்னுடைய மனைவி தேவாலயத்துக்கு சாரட் வண்டியில்தான் செல்வார். என்னுடைய தந்தையின் சகோதரர்தான் என் கிராமத்திலே முதன் முதலில் வானொலி வாங்கியவர். அதற்காக அந்த கிராம மக்கள் எங்கள் மீது எரிச்சலடையவில்லை.

களனி பிரதேசம் புத்தர் பார்வையிட்ட பகுதி. அப்பகுதியில் புத்தர் நீராடியிருக்கிறார். அங்கு மாட்டுக் கறி விற்பனை செய்வதை அனுமதிக்கவே முடியாது. அதற்காகத்தான் முஸ்லிம் வர்த்தகரை நான் எச்சரித்தேன்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எனது தொகுதியில் குடியேற நான் அனுமதி மறுக்கவில்லை. ஆனால் உரிய அடையாளங்கள் நிரூபிக்கப்பட்ட பின்னர்தான் அவர்கள் குடியேறிய முடியும். என்னுடைய தொகுதியில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் தங்களது அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டாலோ அல்லது பிரபாகரன் அதனை ஒப்புக்கொண்டாலோ இந்த அரசாங்கத்தை பிரபாகரனிடமே ஒப்படைத்து விடலாம்.

இனப்பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம்தான் தீர்வு காண முடியும். தமிழர்களோடு யுத்தம் நடத்த நாம் விருபவில்லை. சிங்கள- தமிழ் தலைவர்களால்தான் சுதந்திரம் பெறப்பட்டது. எமது நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பேச்சுக்களை நடத்தலாம். சுயநிர்வாகம் என்பது நல்லதுதான். எங்களுடன் இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டால் பிரபாகரனுக்கு முதலமைச்சர் பதவியும் தரத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

-Puthinam-

தமது சிங்கள அரசாங்கத்தையும் அதன் உயர் விழுமிய அரசியல் பற்றியும் பெருமை பேசும் சிங்களவரையெல்லாம் வாயடைக்கச் செய்ய பயன்படும் துருப்புச் சீட்டு இந்த மேர்வின் சில்வா. அத்தனை தகுதிகள் அவருக்கு. அந்த வகையில் அவர் தொடர்ந்து தன் சரவெடி அரசியலை திறம்பட நடத்த வாழ்த்துகள்!

அப்பே நவ துட்டுகெமுனு ரஜத்துமாட்ட ஜெயவேவா!

Edited by சாணக்கியன்

புலிகளை யார் ஆதரித்தாலும் என் சொந்தத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்வேன்: அமைச்சர் மேர்வின் சில்வா....

???

சிறீ லங்கா அரசு ஒரு பயங்கரவாத அரசு என்பதற்கு இது ஒன்றே போதுமான ஆதாரம். மனித உரிமைகள் அமைப்புக்கள், உலக நாட்டு தூதுவராலயங்களிற்கு இந்த லூசனின் பிதற்றலை பிரதியெடுத்து கடிதங்களாக அனுப்பி வைக்கவேண்டும்.

எந்த ஒரு கொம்பனுக்கும் இவ்வாறு ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் நாட்டில் இப்படி பேசுவதற்கு எதுவித உரிமையும் இல்லை.

நாம் இங்கே இவ்வாறு வாழும் நாடாக இருந்தால், இவ்வாறு பேசிய அமைச்சரை சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து சிறைக்கு கூட அனுப்பி வைக்கமுடியும்.

ஒரு ஜனநாயக நாட்டில் யாராவது குற்றவாளியாக தென்பட்டால் அதை விசாரித்து தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மாத்திரமே உண்டு. கண்டவனும், தனது சொந்தப் பாவனைக்கு வைத்துள்ள கைத்துப்பாக்கியால் ஒருவரை அவர் குற்றவாளியாக இருந்தால் கூட சுட்டுக்கொல்ல முடியாது.

இவ்வாறான இந்த லூசனின் பேச்சு, தமிழர்கள் உத்தியோகபூர்வமாக சிங்களவர்களினால் கொல்லப்படுவதை ஊக்குவிக்கின்றது. இனி நாளை தமிழர்களை கண்டவனும் தனது கைத்துப்பாக்கியாலும், கை அரிவாளாலும் கொன்றுவிடப்போகின்றான்.

கொழும்பில் இருந்து சிறீ லங்கா அரசின் *** கழுவுகின்ற கூலிக்குழுக்கள், மற்றும் ஜனநாயக வாதிகள் என்று தம்மை கூறுகின்ற தமிழ் புல்லுருவிகள் இதற்கு உடனடியாக ஒரு நடவடிக்கை எடுப்பார்களா?

இறால் கும்பக்கசாமி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டாளா?

ஜே.வி.பீ அல்லது ஹெல உறுமயவாக இருந்தால் இந்நேரம் தமது இனத்திற்கு எதிராக இப்படி ஏதாவது பேசப்பட்ட்டிருந்தால், உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து குறிப்பிட்ட அமைச்சர் ஆசனத்தில் அமர்ந்துள்ள மூளை கழன்ற ஆசாமியை பதவியால் இறக்கி இருப்பாங்கள்.

எங்கள் தமிழ் ஜனநாயகவாதிகள் மூக்கு முட்ட திண்டு விட்டு, செய்திகளை வாசித்துவிட்டு வெறும் கொட்டாவியை மட்டும் விட்டுக்கொண்டு இருக்கட்டும்! :angry:

இப்பிடியே பேசிகொண்டு இருக்க.. சிங்களவன் சொறி யேறி, மேர்வினே செய்வார் எண்டால் தான் என்ன குறையோ எண்டு தமிழனை சொறியட்டும்... தமிழ்பெடியள் கடுப்பேறி துவக்கை அவங்கள் தூக்கி மேர்வினை போட்டட்டும் பளியை புலிகள் மேல போடட்டும்...!

இப்பிடி பேசி பேசித்தான் சிங்களவனை உசுப்பேத்துறாங்கள், வெறியேத்துறாங்கள்... தமிழ் பெடியளை வெறுப்பேத்துறாங்கள், புலிகளுக்கு ஆள் சேர்க்க புலிகள் பிரச்சாரம் செய்ய வேண்டியத்தில்லை.... மேர்வின் சில்வா போல ஆக்கள் போதும்...!

அப்பே நவ துட்டுகெமுனு ரஜத்துமாட்ட ஜெயவேவா!

புலிகளை யார் ஆதரித்தாலும் என் சொந்தத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்வேன்:

அமைச்சர் மேர்வின் சில்வா....

சில்வா என்ற போர்த்துக்கேயரின் குடும்ப பெயரை வைத்து கொண்டிருக்கும் மேர்வின் எப்படி துட்ட கைமுனுவின் பரம்பரை ஆவார்? பரம்பரை பற்றி பேச வெளிக்கிட்டால் இந்த சில்வாக்களும் பொன்சேகாக்களும் போர்த்துக்கலுக்கும் ஸ்பெயினுக்கும் கப்பல் ஏறவேண்டியது தான். :)

வவுனியாவை கடந்து வந்தால் புலிகளை ஆதரிக்கும் மனிதர்களை மட்டும் அல்ல மரம் செடி கொடிகளை கூட காணலாம். மேர்வின் வரத்தாயாரா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

குடுலால் கொடுத்த எதையோ உறிஞ்சிவிட்டுப் பேட்டி கொடுத்திருக்குது இந்தப் பெருச்சாளி.. இப்படியானவர்கள் தொடர்ந்தும் ஆளும் அரசில் நிலைக்கவேண்டும்..

ஒரு அமைச்சர் தனது கருத்தினை வன்முறைத்தனமாக வெளிப்படுத்தியுள்ளார். இவனெல்லாம் அமைச்சராகவிருந்தால் வன்முறை சாதாரண சிங்கள மக்களிடம் மிக இலகுவாக ஊட்டுவிக்கப்பட்டுவிடும். அதைவிட இவனுக்குப் பரம்பரை வேறு.

இவர் அடுத்த ஒரு கோமாளி

இவன் ஒருவனெண்டு இவன்ர மகன் night club ல் பிரச்சினை செய்தபோது கோட்டில night club இளையசமுதாயம் செல்லவேண்டும் அப்பதான் கலாச்சரத்தை பற்றி அறியலாம் எண்டு சொன்ன புரட்சிகர அப்பா இவர். அது மட்டுமல்ல சிரச தொலைக்கட்சிக்கு இதைவிட மிக நல்ல வர்த்தைகலால் கோட்டுக்கு முன்னால திட்டிய அமைச்சர்.

Edited by ஈழவன்85

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தற்போதைய அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் வெளிப்படையாக கூறுகின்றார், அந்த வகையில் அன்னாரின்அறிக்கை விடும் பணி தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 3 அங்குலம் உயரமாக இருந்திருந்தால் விஜய குமாரதுங்கவை விட அழகான நபராக நான் இருந்திருப்பேன்.

:):lol:

அண்ணருக்குச் சினிமாவில் நடிக்கின்ற ப்ளான் ஏதும் இருக்குதோ? அல்லது விஜயகுமாரதுங்கா போல உயரமாக இருந்திருந்தால் சந்திரிக்காவைத் திருமணம் செய்திருப்பேன் என்று சொல்ல வருகின்றாரோ?

மூளை குழம்பினதுகளும், போதையில இருக்கிறதுகளும் தான் சிங்கள அரசியல் வாதிகள் அப்ப இப்படித்தான் அறிக்கை விட முடியும் :angry: :angry:

அண்ணாச்சி களத்தில் தன் கோமாளி கூத்துடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பேய்கள் ஆட்சி செய்தால்"!! என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது!! உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுபவர்கள் எல்லாம் இருக்க வேண்டியது கூத்து மேடையில் (அரசியலில் அல்ல)..

ஓ!! இலங்கையின் அரசு ...கூத்துமேடைதானோ?!. :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால்

வீரகேசரி நாளேடு

புலிகளை யார் ஆதரித்தாலும் சுட்டுக் கொல்வேன் என்கிறார் மேர்வின் தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் என்னுடைய சொந்த துப்பாக்கியாலேயே சுட்டுக் கொலை செய்வேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார். அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டாலோ அல்லது பிரபாகரன் அதனை ஒப்புக் கொண்டாலோ இந்த அரசை பிரபாகரனிடமே ஒப்படைத்து விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில வார இதழான "த நேசனுக்கு' அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு, 1989 ஆம் ஆண்டு ஜே.வி.பி. நடத்திய கலகத்தின்போது எனது குடும்பத்தினர் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். கடற்படையில் இருந்த என் இளைய சகோதரர், கர்ப்பிணி சகோதரி, அவரது கணவர் ஆகியோரை ஜே.வி.பி. தான் படுகொலை செய்தது. அவர்களின் இரண்டு பிள்ளைகளும் அநாதைகளாக்கப்பட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் தெஹிவளை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார். என்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது என் மகன் கல்லூரி விடுதியில் இருந்தான். இல்லையெனில் அவனும் தலையை இழந்திருப்பான். அப்படியான ஜே.வி.பி. தான் என்னிடம் எத்தனை வாகனங்கள் இருக்கிறது? என்ன வாடகை நான் செலுத்துகிறேன் என்று கேள்வி எழுப்புகிறது. யாரை அவர்கள் இலக்கு வைக்கிறார்கள்? மஹிந்தவையா? பசிலையா? கோத்தபாயவையா? நான் கிராமத்திலிருந்து வந்தவன். எனது கிராமத்தில் என் தந்தை ஒரு வர்த்தகர். ஜே.வி.பி. க்கு நான் முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனால் என் குடும்பத்துக்கு நான் முக்கியமானவன்.

ஆகையால் என் வாகனங்களை விற்பனை செய்தது தொடர்பாக எதுவித தகவலும் தெரிவிக்க முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேர்கர் மக்களுக்கானது இந்த நாடு. யாரும் ஆயுதம் தூக்க முடியாது. எவரேனும் ஆயுதத்தைத் தூக்கினால் நாம் அதனை எதிர்ப்போம். விடுதலைப் புலிகளை நேரிடையாக ஆதரிக்கும் தமிழர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அதே நேரத்தில் சிங்களவர்களுடன் இணைந்திருக்கும் தமிழர்களும் உள்ளனர். ஆனால் எவரேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தால் அமைதியை சீர்குலைத்தால் நான் காவல் துறையிடம் சென்று முறைப்பாடு எல்லாம் செய்யமாட்டேன். நானே எனது சொந்தத் துப்பாக்கியாலே அவர்களை சுட்டுக் கொலை செய்துவிடுவேன்.

இந்த சமூகத்துக்கு நன்மை செய்வதற்காக எதுவித அனுமதிப்பத்திரமும் பெறத் தேவையில்லை. நல்லதைச் செய்ய அச்சம் தேவையில்லை. துட்டகெமுனு தனது சிங்காசனத்துக்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சிங்கள இனத்துக்காக புத்த மதத்துக்காகத்தான் செய்தார்.

நாங்கள் துட்டகெமுனு மன்னனின் படைத் தலைவர்களாக இருந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள். எனக்கு முதுகெலும்பு உள்ளது. நான் அச்சப்படமாட்டேன். கொழும்பு கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட கஜநாயக்கவுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை.

என் மகனைப் பொறுத்தவரையில் உல்லாசமாக இருக்க விரும்புகிறான். வாரம் ஒரு முறை இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வான். அப்படியான ஒரு நாளில்தான் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டுவிட்டது. அரசாங்கம் எனக்குக் கொடுத்த 3 வாகனங்களை நான் விற்பனை செய்துவிட்டேன். புதிய உயர் ரக வாகனங்களை வாங்கியிருக்கிறேன். வாகனம் மற்றும் நிலம் தொடர்பிலான வர்த்தகங்கள் மூலம் இவற்றை சம்பாதித்திருக்கிறேன். இன்னொருவருடன் உலங்கு வானூர்தியும் வாங்குவேன். களனி பிரதேசம் புத்தர் பார்வையிட்ட பகுதி. அப்பகுதியில் புத்தர் நீராடியிருக்கிறார். அங்கு மாட்டுக் கறி விற்பனை செய்வதை அனுமதிக்கவே முடியாது. அதற்காகத்தான் முஸ்லிம் வர்த்தகரை நான் எச்சரித்தேன். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எனது தொகுதியில் குடியேற நான் அனுமதி மறுக்கவில்லை. ஆனால் உரிய அடையாளங்கள் நிரூபிக்கப்பட்ட பின்னர்தான் அவர்கள் குடியேற முடியும். என்னுடைய தொகுதியில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் தங்களது அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம்தான் தீர்வு காண முடியும். தமிழர்களோடு யுத்தம் நடத்த நாம் விரும்பவில்லை. சிங்கள தமிழ் தலைவர்களால்தான் சுதந்திரம் பெறப்பட்டது.

எமது நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பேச்சுக்களை நடத்தலாம். சுய நிர்வாகம் என்பது நல்லது தான். எங்களுடன் இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டால் பிரபாகரனுக்கு முதலமைச்சர் பதவியும் தரத் தயாராக உள்ளோம்.

இந்த கோமாளியால். இலங்கை ஒரே நாடு என்று சொல்லும் கோமாளிகளோடு ஓமந்தையைத்தாண்டி காலடி எடுத்து வைக்க முடியுமா? ஊடகத்துறையையே நாய் என்று கேவலமாக திட்டும் இந்த மேர்வின் கருத்தையெல்லாம் ஒரு நாய்கூட மதிக்கமாட்டாது என்பதே நிஜம்

ivarai thoppikalaikku anuppi viduvom ivarin thuppakiyai pavithu thoppkalyai pidithuviduvar.

ivarai thoppikalaikku anuppi viduvom ivarin thuppakiyai pavithu thoppkalyai pidithuviduvar.

மகிந்தா, தமிழில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

http://www.indi.ca/2005/08/mervyn-silva-is-an-ass/

http://www.lankanewspapers.com/news/2006/11/9791.html

'Minister's mob' attack peace rally (BBC)

--------------------------------------------------------------------------------

An anti-war rally in the Sri Lankan capital, Colombo, was sabotaged by a mob led by a government minister.

A peace rally organised by the United Peoples Movement (UPM), a political group which represented a wide range of political parties and organisations was abandoned after an attack led by a junior minister of the government.

The rally organised to be held in Nugegoda junction to launch a common movement against "The seperatist war, repression and hunger".

It was to be addressed by prominent Sinhala, Tamil and Muslim politicians.

A journalist who suffered severe beating from the attackers said Minister Mervyn Silva was leading the attack.

Gahapalla!

"When I was walking near the stage, someone pointed me out to Mervyn Silva. The junior minister shouted, Beat him up! beat them all!! (gahapalla okkotama!), then the mob started attacking me," said Ravaya journalist Ajith Senaviratne.

The rally was to be addressed by fomer ministers S. B. Dissanayake, Presidential candiadte of the United Socialist Party Siritunge Jayasuriya, TNA MP Suresh Premachandran, Sri Lanka Muslim Congress leader Rauf Hakeem, leader of Western Peoples Front Mano Ganeshan, General Secretary of the NSSP Wickramabahu Karunaratne, S. Sathasivam, women activist Nimalka Fernando, lawyer Shiral Lakthilaka and leading film star Ranjan Ramanayake.

Journalists say the police did not arrive to prevent the attacks been carried out by about 'one hundred thugs'.

Talking to journalist from the stage, immediately after the attack, minister Silva denied his involvement in sabotaging the meeting.

Minister Silva is well known for his outspoken views. He had been accused of leding similar attacks in the past when he was a minister in Chandrika Kumaratunge government.

Earlier there were calls for a protest against the peace rally by the National Movement Against Terrorism

.

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.