Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் பிரான்ஸ் வர தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

  • ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • மாடர்னா -இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • அஸ்ட்ராஜெனெகா மற்றும் கோவ்ஷீல்ட் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • ஜான்சன் அண்ட ஜான்சன் - முதல் அளவு செலுத்திக்கொண்ட 4 வாரங்களுக்குப் பின்னர் பிரான்சிற்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.      
  • https://tamilwin.com/article/sri-lankans-barred-from-coming-to-france-1628637188
  • கருத்துக்கள உறவுகள்

நான் வேற சைனாக்காரன்ற ஊசிய போட்டுட்டன்  பிரான்ஸ் பக்கம் வர ஏலாதோ😎

  • கருத்துக்கள உறவுகள்

யாழில உள்ள சில ஆக்களுக்கு புடிச்சு சினோபாமை போடனும். ஐயோ அம்மான்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவினம். 

பை த பாய்.. யாழில் உள்ள ஒரு சில சிகாமணிகளின் கருத்தின் பிரகாரன் பிரான்ஸ் காரனுக்கு சிங்களவன்ற புத்திசாலித்தனம் பிடிக்கல்ல. பொறாமை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

"Do not travel to France due to COVID-19. Exercise increased caution in France due to terrorism and civil unrest"

https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/france-travel-advisory.html 😂

தனி, ஒன்றும் குடிமுழுகி விடாது! அமெரிக்க வெளிநாட்டமைச்சு பிரான்சுக்கு பயணம் செய்ய வேண்டாமென்று இரண்டு நாட்கள் முன்பு தான் அறிவித்திருக்கிறது. எனவே சினோபாம் போட்டதும் சிறி லங்காவில் இருப்பதும் உங்களுக்கு இப்போது பாதுகாப்பு!

மற்றபடி: ஐரோப்பிய யூனியனின் 8 நாடுகள் இரண்டு சீன தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்கின்றன! எனவே ஸ்வீடனுக்கு சுற்றுலா போய் வரலாம் நீங்கள்!😎

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வேற சைனாக்காரன்ற ஊசிய போட்டுட்டன்  பிரான்ஸ் பக்கம் வர ஏலாதோ😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழில உள்ள சில ஆக்களுக்கு புடிச்சு சினோபாமை போடனும். ஐயோ அம்மான்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவினம். 

பை த பாய்.. யாழில் உள்ள ஒரு சில சிகாமணிகளின் கருத்தின் பிரகாரன் பிரான்ஸ் காரனுக்கு சிங்களவன்ற புத்திசாலித்தனம் பிடிக்கல்ல. பொறாமை. 🤣

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Justin said:

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

 உங்கள் கருத்துக்கள் விடயத்தில் எட்டத்தில் இருக்க நினைக்கின்றேன். இந்த பாமரனை இழுக்கின்றீர்கள்.இருந்தாலும் எனக்கு எட்டியவரை ஒரு பதில் கருத்து.

நான் இங்கே எங்கேயும் ஜேர்மனியில் சினோபாம் தடுப்பூசி போடப்படுவதாக கூறவில்லை.
ஜேர்மனியில் எனது சிநேகித குழாம் கொஞ்சம் பெரியது. அதில் பல நாட்டவர்கள் உள்ளனர்.அவர்கள் கேம்பிறிட்ச் அளவிற்கு அறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்கு தேவையான தாராள பொதறிவு உள்ளவர்கள் என்பதில் எனக்கு திருப்தி.பல உலக விடயங்களை பகிர்ந்து கொள்வதிலும் எமக்குள் ஆர்வம் உண்டு. படித்து பட்டம் பெற்றவர்கள் அரைப்பதை விட அனுபவஸ்தர்கள் அரைப்பது என்றும் நம்பிக்கைக்குரியதும் பாதுகாப்பானதும் கூட.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ளவர்கள் இந்த அவசர நிலையின்போது நிச்சயமாக புலத்திலுள்ளவர்கள் கருத்தையறிந்து அதன்படி செயலாற்ற போவதில்லை.

அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எது வசதிபடுகிறதோ எது சரியென்று படுகிறதோ அதைதான் செய்யபோகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மாற்றுவழிகள் எதுவுமேயில்லை,சிங்களவன் கொடுப்பதை போடுவதை தவிர வேறு எந்த சக்தியும் தமது தனிப்பட்ட செல்வாக்கினால் அந்த மக்களுக்கு சிறந்ததை கொண்டுபோய் சேர்க்க எந்த வாய்ப்புகளுமேயில்லை.

நம்மால் செயல்வடிவம் பெறமுடியாத ஒன்றிற்காக பக்கம் பக்கமாக விவாதம் செய்வது உறவுகளுக்குள் பகையை ஏற்படுத்துவதைவிட உருப்படியாக எதுவுமே பலன் தராது..

இது சம்பந்தமாக நாம் முரண்படுவதெல்லாம் மாங்கு மாங்கு எண்டு குத்தி கீ போர்ட்டை பழுதாக்க மட்டுமே பயன்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பெருமாள் said:

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சவங்களே தலையை பிச்சுக்கொண்டு திரியிறாங்களாம்.அடுத்த கட்டம் என்னவெண்டு தெரியாமலே அரசாங்கங்கள் தடுமாறுது.

இதுக்குள்ள எங்கடை அறிவாளிகள் நோபல் பரிசு வாங்கிற அளவுக்கு  எடுத்து விடுகினம்..

அறிவியலும் விஞ்ஞானமும் எவ்வளவுதான் வளர்ந்தாலும் மனித குலத்திற்கு சீரான வாழ்க்கையை காட்டத்தெரியவில்லை. இன்றைய உலகில் எங்கும் அழிவும் அவலங்களுமே  அகோரமாக வளர்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் அங்கீகரிக்கப்படாமையால் அந்த தடுப்பூசியினைப்பெற்றவர்கள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள், அவுஸ்திரேலியாவில் விலை குறைவான அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசியே பெருமளவில் போடப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

6 hours ago, Justin said:

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

6 hours ago, பெருமாள் said:

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

ஜேர்மனி... சீனாவுக்கு,  "நீளமான  கயிறு"  குடுத்திருக்குது. :grin:

ஆலோசனையில்  உள்ளது என்று சொல்லியுள்ளதை... 
நாம்... ஊசி வந்து இறங்குது, அதை சனத்துக்கு ஏத்தப் போற கோணத்தில் ஆராயக் கூடாது. 🧐

மேலுள்ள செய்தியை...
சம்பந்தன் ஐயா... "தீபாவளிக்கு... தீர்வு வருகின்றது" என்பது போலவும், 😂
இந்தியா.... "இலங்கை நிலைமைகளை, மிக உன்னிப்பாக அவதானித்திக் கொண்டிருக்கிறோம்"  என்பது போலவும் 😂 வாசித்து விட்டு.... கொடுப்புக்குள்  சிரித்து விட்டு போக வேண்டும். 🤣

இப்பிடித்தான்... துருக்கியை, 
ஐரோப்பா ஒன்றியத்தில் சேர்க்க ஆலோசிக்கின்றோம் என்று ஜேர்மனி,
30 வருசத்துக்கு முன்பு, துருக்கிக்காரனுக்கும் "கயிறு" கொடுத்தது.
அதைக் கேட்ட... துருக்கிக்காரங்களுக்கு பயங்கர சந்தோசம். :grin:

அதனைப்போல... சீனாவை, இப்ப ஜேர்மனி  சந்தோசப் படுத்தியிருக்கு.    😜

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

"Do not travel to France due to COVID-19. Exercise increased caution in France due to terrorism and civil unrest"

https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/france-travel-advisory.html 😂

தனி, ஒன்றும் குடிமுழுகி விடாது! அமெரிக்க வெளிநாட்டமைச்சு பிரான்சுக்கு பயணம் செய்ய வேண்டாமென்று இரண்டு நாட்கள் முன்பு தான் அறிவித்திருக்கிறது. எனவே சினோபாம் போட்டதும் சிறி லங்காவில் இருப்பதும் உங்களுக்கு இப்போது பாதுகாப்பு!

மற்றபடி: ஐரோப்பிய யூனியனின் 8 நாடுகள் இரண்டு சீன தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்கின்றன! எனவே ஸ்வீடனுக்கு சுற்றுலா போய் வரலாம் நீங்கள்!😎

இங்கே இடத்துக்கு இடம் ஊசி கிடைக்கப்பொறுவதை பொறுத்து போடுகிறார்கள் மன்னார் பக்கம் அமெரிக்க ஊசி, மலையகத்தில் வேற கிழக்கில் சைனா, வடக்கில் சைனா,  என்னவோ ஊசி போட்டால்தான் வேலைக்கு வாங்க என்று சொல்லி இருக்கிறார்கள் காட்டையும் அனுப்ப சொல்லி இருக்கிறார்கள் . அரசு சுழற்சி முறையில் வேலைக்கு வாங்கோ என்றால் அப்படி செய்ய முடியாது கடமைக்கு வாங்கோ என நம்ம அரச உயரதிகாரிகள்  சொல்கிறார்கள் ஒரு கிழமை போனேன் தொன்டை மெதுவாக இறுக்கமானது போல உணர்ந்தேன் தற்போது வேலை போனாலும் பரவாயில்லை என வீட்டில்  இருக்கிறன் ஜஸ்டின் அண்ண ஒரு ஊசி போட்டாச்சு 

சுவீடனுக்கு நானு சுற்றுலா ம்கும் கனவிலதான் போய் வரணூம் 

12 hours ago, valavan said:

தாயகத்தில் உள்ளவர்கள் இந்த அவசர நிலையின்போது நிச்சயமாக புலத்திலுள்ளவர்கள் கருத்தையறிந்து அதன்படி செயலாற்ற போவதில்லை.

அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எது வசதிபடுகிறதோ எது சரியென்று படுகிறதோ அதைதான் செய்யபோகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மாற்றுவழிகள் எதுவுமேயில்லை,சிங்களவன் கொடுப்பதை போடுவதை தவிர வேறு எந்த சக்தியும் தமது தனிப்பட்ட செல்வாக்கினால் அந்த மக்களுக்கு சிறந்ததை கொண்டுபோய் சேர்க்க எந்த வாய்ப்புகளுமேயில்லை.

நம்மால் செயல்வடிவம் பெறமுடியாத ஒன்றிற்காக பக்கம் பக்கமாக விவாதம் செய்வது உறவுகளுக்குள் பகையை ஏற்படுத்துவதைவிட உருப்படியாக எதுவுமே பலன் தராது..

இது சம்பந்தமாக நாம் முரண்படுவதெல்லாம் மாங்கு மாங்கு எண்டு குத்தி கீ போர்ட்டை பழுதாக்க மட்டுமே பயன்படும்.

ஊசி குத்தியே ஆகணும் என வீட்டைத்தட்டுகிறார்கள் எந்த ஊசியாக இருந்தாலும் பராவாயில்லை என மக்களும் உயிர் பயத்தில் குத்திக்கொள்கிறார்கள் ஆனால் இலங்கையை பொறுத்த வரைக்கும் தனிநபர் சுகாதாரம் என்பது ஒரு துளியும் இல்லை பாரிய ஆபத்து எல்லா பக்கமும் சனம் கூடிய பகுதிகளில்  மக்கள் இறப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது ஓட்டமாவடி நிறம்பியுள்ளது தற்போது அம்பாறை இறக்காமம் பகுதி புதைப்பதற்கு தெரிவாகியுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இடத்துக்கு இடம் ஊசி கிடைக்கப்பொறுவதை பொறுத்து போடுகிறார்கள் மன்னார் பக்கம் அமெரிக்க ஊசி

சவுதி அரேபியாவின் நிதிப் பங்களிப்போடு.. முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க ஊசிதான் போடினம். அதனடிப்படையில் தான் மன்னாரில் சில பிரதேசங்களுக்கு அந்தக் கொடுப்பனவு. 

இலங்கையின் 5வது பணக்காரர்.. மிஸ்டர் கருணா கும்மானால்.. ஏன் போட முடியவில்லை.. கிழக்கு மக்களுக்கு ஏன் போட முடியவில்லை..?! இதையிட்டு ஏன் கேள்வி கேக்கிறீங்களில்லை. புலம்பெயர் மக்களை பார்த்து கேட்கவும் திட்டவும் முடிவதை.. ஏன் அங்கு செய்கிறீர்கள் இல்லை..??!

வடக்கில் இருந்து பல தடவை அமைச்சரான தாடியர் பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ளவரால்.. ஏன் வடக்கிற்கு போட முடியவில்லை..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vasee said:

அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் அங்கீகரிக்கப்படாமையால் அந்த தடுப்பூசியினைப்பெற்றவர்கள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள், அவுஸ்திரேலியாவில் விலை குறைவான அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசியே பெருமளவில் போடப்படுகிறது.

அஸ்ட்ரா செனிக்காவை அரசு அங்கிகரித்துவிட்டது WHO அங்கிகரித்து விட்டது ஆனால் எம்மவர்கள்  அங்கிகரித்துவிட்டனரா?
அப்படியிருக்க சினோபார்ம்முக்கு சான்சே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

சவுதி அரேபியாவின் நிதிப் பங்களிப்போடு.. முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க ஊசிதான் போடினம். அதனடிப்படையில் தான் மன்னாரில் சில பிரதேசங்களுக்கு அந்தக் கொடுப்பனவு. 

இலங்கையின் 5வது பணக்காரர்.. மிஸ்டர் கருணா கும்மானால்.. ஏன் போட முடியவில்லை.. கிழக்கு மக்களுக்கு ஏன் போட முடியவில்லை..?! இதையிட்டு ஏன் கேள்வி கேக்கிறீங்களில்லை. புலம்பெயர் மக்களை பார்த்து கேட்கவும் திட்டவும் முடிவதை.. ஏன் அங்கு செய்கிறீர்கள் இல்லை..??!

வடக்கில் இருந்து பல தடவை அமைச்சரான தாடியர் பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ளவரால்.. ஏன் வடக்கிற்கு போட முடியவில்லை..???!

அப்ப மன்னாரில் மட்டும்தான் முஸ்லீம்கள் இருக்கிறார்களா  வடகிழக்கில் இல்லையா அரசாங்கம் கிடைக்கும் ஊசிகளை போடப்படாத இடங்களுக்கு அனுப்புகிறது அதிகமாக கிடைக்கும் ஊசி சைனாவினது .

 கருணா அம்மான் டக்ளஸ் ஐயாவிடம்  சொத்து இருக்கலாம் காசும் இருக்கலாம் ஏன் நீங்கள் கூட்டமைக்காரரை இங்கு சேர்க்கவில்லை அவர்களிடமும் பணம் இருக்குதானே ஏன் நீங்களும் இலங்கையில் பிறந்தவர்தானே கேள்விகளை கேட் கலாம் தானே .

புலம்பெயர்ந்தவர்களுக்கு யார் திட்டினார்கள் புலம்பெயர்ந்தவர்கள் நினைப்பதும் இங்கு நடக்க வேண்டும் என நினைக்கும் போது கருத்து முரண்பாடுகள் வருகிறது இது வரைக்கும் அக்கறையுள்ள நீங்கள் ஏன் மக்களுக்கு யாழில் திட்டத்தைக்கொண்டு ஊசிகள் வாங்கி தமிழ் மக்களூக்கு  வைத்திசாலையூடாக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது  கேள்விகளை  அனைவராலும் கேட் கவே முடியும்  5 ரூபா ஊசியாக இருந்தாலும் சரி அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்குகிறது அது எல்லா மக்களையும் சேர்த்தே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.