Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

image_ef134f18b6.jpg

அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் குறித்து டொக்டர் ஐ. பிரபாத் விளக்குகிறார்

பெரிய கற்களைவிட, சிறு கற்கள் அதிக வலியைக் கொடுக்கும்.  வலி, ஊமை வலிபோல இருக்கலாம். அல்லது, திடீரென்று உருவாகி பொறுக்க முடியாத எல்லையைத் தொடலாம். உட்காரும் விதத்தாலும், வாகனங்களில் போகும்போதும் ஏற்படும் அசைவுகளாலும்  வலி ஏற்படலாம். வலி ஒரு சில மணி நேரங்களுக்குத் தொடரும்; அதன் பின் வலி நின்று விடலாம்.

சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் முதலில் அதிகமாகவும் பின்பு குறைவாகவுமே வலியைத் தோன்றச் செய்யும். எங்கு கல் உருவாகி நிற்கிறதோ அந்தப் பக்கமே அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இடுப்பைச் சுற்றியும் அந்த வலி இருக்கும்.

சிறுநீர்ப் பையிலிருக்கும் கல் அடிவயிற்றில் வலியைக் கொடுக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படும். பெரும்பாலும் இது ஆண்குறியின் நுனியில் ஏற்படும். திடீரென்று மிக அசாதாரண அடி வயிற்று வலியை அனுபவிப்பார்கள் என்று கூறுகிறார்  மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றும் டொக்டர் ஐ. பிரபாத் பத்திரன MBBS, MD, MRCS. சிறுநீரகக் கல் தொடர்பான இவருடனான உரையாலை கேள்வி-பதில் வடிவத்தில் கீழே தருகின்றோம்.

கேள்வி -  சிறுநீரகக் கற்கள் உண்டாகும் சந்தர்ப்பங்கள் எவை?

பதில்: சிறுநீரகக் கற்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீர் அருந்தாத தன்மையால் உடலில் ஏற்படுகின்ற வறட்சியின் காரணமாக கல் உருவாகின்றது. நாம் அருந்தும் தண்ணீரைப் பொறுத்தும் கற்கள் உருவாகக் காரணமாக அமைகின்றது. அதாவது, அந்தத் தண்ணீரில் கல்சியம் கூடுதலாக இருப்பதால் கற்கள் உருவாகின்றன. வெப்பம் அதிகமான பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்தக் கற்கள் உருவாகக் காரணமாகிறது.

சிறுநீர் கழித்த பின்னர் சிறுநீர்ப் பையில் தேங்கி நிற்கின்ற சிறுநீராலும்  கற்கள் உருவாகின்றன. சிறுநீர் வருகின்ற பாதையில் ஏற்படுகின்ற தடையால் கற்கள் உருவாகின்றன. சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற நீண்டகால கிருமித் தொற்றுக்களாலும் கற்கள் உருவாகக்கூடிய தன்மையுள்ளது. விசேடமாக பரம்பரையாக இருப்பவர்களுக்கும் வம்சாவழியாக இது வரலாம்.

மேலும் உணவு, மாமிசத்தில் புரோட்டின் அதிகமாக இருந்தாலோ, சோடியம், ஓக்ஸலேட் அதிகமாக இருந்தாலோ, நார்ச்சத்து மிகக் குறைவாக இருந்தாலோ, பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களை உண்ணாமல் இருந்தாலோ கற்கள் உருவாகும். ஆண்களுக்கு பொதுவாக 20 வயதிலிருந்து 70 வயது வரையிலும், பருமனாக இருப்பவர்களுக்கும் மிகவும் எளிதாகக் கற்கள் உருவாகலாம். நீண்ட நாள்களுக்கு நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தாலும் கற்கள் உருவாகலாம்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ஒட்டக இறைச்சி, மான் இறைச்சி, மரை இறைச்சி, பன்றி இறைச்சி போன்ற பல இறைச்சி வகைகளை மிக அதிகமாக உண்ணுவதன் மூலம் யூரிக் அசிட்  என்ற கற்கள்  உருவாகின்றன. மேலும், தக்காளிப்பழம் அதிகமாக சாப்பிடுகின்றவர்களுக்கு (ஓக்ஸலேட்) என்ற கற்கள் உருவாகக் காரணமாக அமைந்து விடுகின்றது.

கேள்வி - சிறுநீரகக் கற்கள் எங்கே உருவாகின்றன?

பதில்: கற்களின் உருவம், அளவு, வளரும் இடம் போன்றவற்றைப் பொறுத்தே அதன் அறிகுறிகளும், வலிகளும் காணப்படும். அதாவது, சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள், சிறுநீர்க் குழாயில் உண்டாகும் கற்கள், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கற்கள், சிறுநீர்ப் பாதையில் உண்டாகும் கற்கள் என நான்கு இடங்களில் இந்தக் கற்கள் உருவாகின்றன.

மிகக் கூடுதலாக சிறுநீரகத்தில்தான் கற்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் கற்கள் சிறுநீர்க் குழாயில், சிறுநீர்ப் பையில், சிறுநீர்ப் பாதையில் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.

சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் பெரியளவிலான வலியை ஏற்படுத்துவதில்லை. இந்த வலி கூர்மையான வலி இல்லாமல், ஒரு மழுக்கமான வலியாகக் காணப்படும். இந்த வலி மிக நீண்டகாலமாக இருக்கும். இதை தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றபடியால் அதனை அவர்கள் கணக்கில் எடுக்காமல் உதாசீனப்படுத்தியவர்களாக தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வார்கள்.

இவ்வாறு உதாசீனப்படுத்திச் செல்லச் செல்ல சிறுநீரகத்தில் இருக்கின்ற கல் வளர்ந்துகொண்டே செல்லும். இதனால் கிருமித் தொற்று ஏற்படத் தொடங்கி, அது சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்துவிடும்.

இது இரண்டு பக்கமும் உள்ள சிறுநீரகத்தை கல் அடைக்குமாக இருந்தால் இரு சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்துவிடுவது. அது மாத்திரமல்லாமல் நீண்டகால சிறுநீரகப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். (சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ளாவிட்டால்) சிறுநீரகக் குழாயில் உண்டாகும் கற்கள் தங்களால் தாங்க முடியாதளவு வலியை ஏற்படுத்திவிடும். இதைத் தாங்க முடியாதவர்கள்தான் வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தருகின்றார்கள்.

இந்த வலியை யாரும் தாங்க மாட்டார்கள். இந்த வயிற்று வலி ஆணுறுப்பை அல்லது பெண்ணுறுப்பை நோக்கி பரவி வருவதுபோல் காணப்படும். அது மாத்திரமல்லாமல் வாந்தி வருவதுபோல் இருக்கும், சலத்துடன் இரத்தம் வெளியேறும், காய்ச்சல் வரும், காய்ச்சல் வருகின்ற சந்தர்ப்பமாக இருக்குமாக இருந்தால், இது சிறுநீரகத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துவிடும்.

image_aeb21a2bf3.jpg

சிறுநீர்ப் பையில் உண்டாகும் கற்களால் சிறுநீர் தடைப்பட்டு சிறுநீர் வெளியேற்றுவதைத் தடுக்கும். இதனால் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறும். எமது சிறுநீர்ப் பையின் கீழாக ப்ரெஸ்றேட் என்ற சுரப்பி ஆண்களுக்கு காணப்படும். இது வயது செல்லச் செல்ல விரிவடையத் தொடங்கிவிடும். அதனால் சிறுநீர் வெளியேறும் பாதையை தடைசெய்துவிடுகின்றபோது சிறுநீர் சொட்டுச் சொட்டாகத்தான் வெளியேறும். மீதமானவை தேங்கி நிற்கின்றது. இதனாலும் கற்கள் உருவாகின்றன. இதற்குக் காரணம் ப்ரெஸ்றேட் வீங்குவதேயாகும். இது வயதானவர்களுக்கு மட்டும்தான் உருவாகும்.

ப்ரெஸ்றேட் வீக்கமானவர்கள் வைத்தியர்களை நாடிச் செல்வார்கள் அவர்களின் முறைப்பாடு எவ்வாறு இருக்கும் என்றால், சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுகின்றது, ஒரு எரிவுத்தன்மையும் உருவாகின்றது, இடையிடையே அடைப்பும் ஏற்படுகின்றது என்று கூறுவார்கள்.     

சிறுநீர்ப் பாதையில் உண்டாகும் கற்கள் ஆணுறுப்பின் பாதையிலும், பெண்ணுறுப்பின் பாதையிலும் அடைத்துவிடும். அவ்வாறு அடைத்துவிட்டால் சிறுநீரை வெளியேற்ற முடியாது. யுரீத்ராவில் கற்கள் தடையாக உருவாகி விட்டாலோ அல்லது சிறுநீர் போய்க் கொண்டிருக்கும்பொழுது திடீரென்று நின்று விட்டாலோ சிறுநீர்ப் பையில் கற்கள் இருப்பதற்கான அடையாளங்களாகும்.

இவ்வாறு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வழக்கமாக உடலைப் பரிசோதிக்கும்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது வேறு ஏதோ காரணத்திற்காக உடலை பரிசோதிக்கும்போதும் கண்டுபிடிக்கப்படலாம்.

சிறுநீரகத்தில் சிறிய கற்கள் இருக்குமாக இருந்தால் மருந்துகள் மூலம் அதனை வெளியேற்றக் கூடியதாக இருக்கும். பெரிய கற்களை அகற்றுவதாக இருந்தால் அதற்கு பல வகையான முறைகள் இருக்கின்றன. அதனடிப்படையில் எங்களின் சிகிச்சைகளை முன்னெடுப்போம்.

மருத்துவ உலகுக்கு மிக மிக அண்மையில் அறிமுகமான திறன்மிக்க இன்னும் ஒருமுறை இருக்கின்றது. அதன் மூலம் வெட்டுவதுமில்லை, துளையிடுவதுமில்லை. அது எவ்வாறென்றால், ESWL (Extra Coporeal Shock Wave Lithotripsy) என்ற கருவி மூலமாக கதிர்களை உட்செலுத்தி அதிர்வலைகள் ஊடாக கற்களை உடைத்து சிறுநீருடன் வெளியேற்றச் செய்யும் முறையாகும். இதன் மூலம் மிகப்பெரிய கற்களையோ அல்லது மிகச் சிறிய கற்களையோ உடைக்க முடியாது. ஓரளவான 1.5 சென்றி மீற்றருக்கும் குறைவான அளவுள்ள கற்களை மட்டுமே அகற்றலாம்.

தொழிநுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் உடலை அறுத்து செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள் மிக மிகக் குறைந்து விட்டன. இப்போதெல்லாம் மிக அரிதாகவே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மிகவும் சிக்கலான தருணங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

கேள்வி - சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் வழி முறைகள் என்ன?

பதில்: ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது 3 லீற்றர் தண்ணீரை குடித்து வரவேண்டும், சிறுநீரை அடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும், உரிய நேரத்துக்கு சிறுநீரை கழித்துவிடவேண்டும். இதை முறையாக நாம் செய்து வருவோமாக இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் விளைவதை தடுத்துக்கொள்வதுடன் எமது சிறுநீரகத்தையும் பாதுகாத்து க்கொள்ளலாம்.  
 
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறுநீரகக்-கல்-அறிகுறிகளும்-தடுக்கும்-வழிகளும்/91-278752

  • Replies 84
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லி ஒரு பியராவது குடிச்சுக்கொண்டு வந்தால் உந்த கல்லு மண் எல்லாத்தையும் கிளீன் பண்ணுமெண்டு இவையள் ஜேர்மன்காரர் சொல்லுவினம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

டெய்லி ஒரு பியராவது குடிச்சுக்கொண்டு வந்தால் உந்த கல்லு மண் எல்லாத்தையும் கிளீன் பண்ணுமெண்டு இவையள் ஜேர்மன்காரர் சொல்லுவினம் 😎

எனது உறவினர் ஒருவர், ஊரில் தீராத முதுகு வலியால் அவதிப்படுவார். ஜேர்மன் வந்தார். முதுகு வலியுடன் ஜேர்மன் டாக்டரை பார்த்தார்.

டாக்குத்தர், எழும்பி நிக்கச்சொல்லி, ஒரு பொறுத்த இடத்தில் நாலு குத்து விட்டார்.... அதன் பிறகு வலியே இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியிறார். அவருக்கு முன்னர் இருந்த வலியும் அதாலை அவர் படுற பாடும் தெரியும் எண்ட படியால், இப்ப இல்லை எண்டு சொல்லுறதால நம்ப வேண்டி இருக்குது.

ஜேர்மன் டாக்குத்தர்மார் பெரும் விண்ணர்கள் போலை கிடக்குது.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Nathamuni said:

நானும் போய் இரண்டு முரட்டுக்குத்து வாங்கத்தான் இருக்கு....

விலாசம்....விலாசம்......😁

Goundamani sentil mass comedy version 2.O -All in All AlaguRaja - YouTube

  • கருத்துக்கள உறவுகள்

பியரெல்லாம் விலை கூட! இளநி சொல்லி வேலையில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

பியரெல்லாம் விலை கூட! இளநி சொல்லி வேலையில்ல.

தேசிக்காய் மிகவும் மலிவு 1 கிலோ 50 ரூபா இங்க இளநீருக்குள் பிளிந்து விட்டு கொஞ்சம் சீனி போட்டு கலக்கி  குடித்தால் வேறு சுவையொன்று  

3 hours ago, குமாரசாமி said:

நானும் போய் இரண்டு முரட்டுக்குத்து வாங்கத்தான் இருக்கு....

விலாசம்....விலாசம்......😁

Goundamani sentil mass comedy version 2.O -All in All AlaguRaja - YouTube

வைத்தியர் ஆணா பெண்ணா என்பதை எங்களிடம் போகும் போது சொல்லவும் 

கேட் க சொன்னாங்கள் பின் வரிசையில் நிற்பவர்கள் 

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற கிழமை இருநாட்கள் வைத்தியசாலையில் இருந்து சிறுநீரக கற்களை அகற்றிவிட்டு வந்தேன். அதன் வலி பிள்ளை பிரசவத்தை போல் இருந்தது.அதன் அனுபவத்தை யாரும் விரும்பினால் இங்கே சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நலமாக இருங்கோ தாத்தா.👋✍️

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

சென்ற கிழமை இருநாட்கள் வைத்தியசாலையில் இருந்து சிறுநீரக கற்களை அகற்றிவிட்டு வந்தேன். அதன் வலி பிள்ளை பிரசவத்தை போல் இருந்தது.அதன் அனுபவத்தை யாரும் விரும்பினால் இங்கே சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சொல்லுங்கள் - ஏனையோருக்கு உதவும்! (தண்ணி - ஐ மீன் பச்சைத் தண்ணி😎- குடிக்கிறேல்லையோ?)

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/10/2021 at 02:31, Justin said:

சொல்லுங்கள் - ஏனையோருக்கு உதவும்! (தண்ணி - ஐ மீன் பச்சைத் தண்ணி😎- குடிக்கிறேல்லையோ?)

சொன்னால் நம்ப மாட்டியள் கடந்த 25 வருடங்களாக தினசரி நான் குடிக்கும் தண்ணீர் அளவு இரண்டரை லீட்டர் தண்ணீர். காரணம் நான் எடுக்கும் மாத்திரைகளும் செய்யும் தொழிலுமாகும்.

இருந்தும் சிறு நீரகத்தில் கல்லு!

எனது கதையை சொல்கிறேன் கேளுங்கள்...

ஒரு நாள் மதிய வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சோபாவில் சாய்ந்திருந்து யாழ்களைத்தை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது கண்கள் அயர்ந்து தூங்கி விட்டேன். தூங்கி சிறிது நேரத்தில் அடி வயிற்றுப்பக்கம் இனம்புரியாத வலி லேசாக இருந்தது. சாப்பிட்ட பருப்பும் சோறும் வேலையை காட்டுது என இருந்து விட்டேன். இருந்தாலும் பின்னேர வேலைக்கு போக வேண்டி இருப்பதால் வலியையும் பொருட்படுத்தாமல் வேலைக்கு போய் விட்டேன்.  ஒரு ஏழு மணியளவில் வலி அதிகமாகிக்கொண்டுவருவதை உணர்ந்தேன்.அந்த நேரத்தில் என்னை அறியாமல் ஒரு பதட்டமும் வந்து விட்டது. சாதாரணமாக நான் பதட்டப்படுபவன் இல்லை. ஆனால் அப்படியொரு  வித்தியாசமான தன்னையறியாத பதட்டம் வரும் போது இரத்த அழுத்தமும் கூடிவிட்டது. ஒரு முறடு தண்ணீர் குடித்து விட்டு என் முதலாளியிடம் சென்று எனக்கு ஒரு மாதிரி இருக்கின்றது என சொல்லிவிட்டு கதிரையில் இருக்க முயற்சித்த போது இருக்க முடியவில்லை. அதன் வேர்த்து விறு விறுக்கை தரையிலேயே சாய்ந்து விட்டேன். மூச்சு எடுக்க முடியாத அளவிற்கு வேதனை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
 
உடனே முதலாளி அவசரசேவைக்கு தொடர்பு கொள்ள.....ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார்கள்.வந்த வுடன் அவர்கள் விசாரித்தது எங்கே வலி? கடைசியாக என்ன சாப்பிட்டீர்கள் என. நான் பருப்பும் சோறும் என்றவுடன் நக்கல் கலந்த சத்த சிரிப்புடன்..... மேலதிக சிகிச்சையை ஆரம்பித்தார்கள். வாயுபிரச்சனை என நினைத்து விட்டார்கள் போலும்...நானும் முதலில் அதைத்தான் நினைத்தேன்....

வேறு எதுவுமே கேட்காமல் என்னை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி விட்டு கையில் ஊசி ஏற்றி அதன் மூலம் வலிக்கான மருந்தை ஏதோ இலக்கங்களை தங்களுக்குள் சொல்லி ஏற்றினார்கள்.அது சரி வராமல் போக அரை மயக்கத்திற்கு உங்களை கொண்டு செல்கிறோம்  என சொல்லி விட்டு வேறு ஒரு மருந்தை ஏற்றிய வண்ணம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள்.

அங்கே போனதும் பிரசர் பார்த்தார்கள் நோர்மலாக இருந்தது.வலியும் குறைந்து விட்டது அல்லது தெரியவில்லை. சிறிது நேரத்தில் கங்காணி ஒருத்தர் வந்து வயித்திலை அங்கை இஞ்சை அமத்தி பார்த்தார்.அவருக்கும் விசயம் விளங்கேல்லை.மெயின் டாக்குத்தர் வெரி பிசி எண்ட படியாலை வாறவை போறவை எல்லாரும் அடிவயித்தை அமத்தி நோகுதோ...நோகுதோ எண்டு ஒரே அலுப்பு. முக்கியமாக கவனிக்கவும் ஒரு சிஸ்டர் கூட என்ரை அடி வயித்தை அமத்தி பாக்கேல்லை.....எல்லாம் முரட்டு சிங்கங்கள்...😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நேரத்தாலை மெயின் டாக்குத்தர் வந்தார் வயித்தை அமத்தி அமத்தி பாத்தார் ஒரு உடமும் நோவும் இல்லை குத்து வலியும் இல்லை...ultrasonic. மூலம் பார்த்தார்கள் ஒரு அறிகுறியும் அவர்களுக்கு தெரியவில்லை....அதன் பின் என்னை நோர்மல் வார்ட்டுக்கு அனுப்பி விட்டு இன்னும் பெரிய டாக்குத்தரிடம் பாரத்தை போட்டு விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சொன்னால் நம்ப மாட்டியள் கடந்த 25 வருடங்களாக தினசரி நான் குடிக்கும் தண்ணீர் அளவு இரண்டரை லீட்டர் தண்ணீர். காரணம் நான் எடுக்கும் மாத்திரைகளும் செய்யும் தொழிலுமாகும்.

இருந்தும் சிறு நீரகத்தில் கல்லு!

எனது கதையை சொல்கிறேன் கேளுங்கள்...

ஒரு நாள் மதிய வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சோபாவில் சாய்ந்திருந்து யாழ்களைத்தை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது கண்கள் அயர்ந்து தூங்கி விட்டேன். தூங்கி சிறிது நேரத்தில் அடி வயிற்றுப்பக்கம் இனம்புரியாத வலி லேசாக இருந்தது. சாப்பிட்ட பருப்பும் சோறும் வேலையை காட்டுது என இருந்து விட்டேன். இருந்தாலும் பின்னேர வேலைக்கு போக வேண்டி இருப்பதால் வலியையும் பொருட்படுத்தாமல் வேலைக்கு போய் விட்டேன்.  ஒரு ஏழு மணியளவில் வலி அதிகமாகிக்கொண்டுவருவதை உணர்ந்தேன்.அந்த நேரத்தில் என்னை அறியாமல் ஒரு பதட்டமும் வந்து விட்டது. சாதாரணமாக நான் பதட்டப்படுபவன் இல்லை. ஆனால் அப்படியொரு  வித்தியாசமான தன்னையறியாத பதட்டம் வரும் போது இரத்த அழுத்தமும் கூடிவிட்டது. ஒரு முறடு தண்ணீர் குடித்து விட்டு என் முதலாளியிடம் சென்று எனக்கு ஒரு மாதிரி இருக்கின்றது என சொல்லிவிட்டு கதிரையில் இருக்க முயற்சித்த போது இருக்க முடியவில்லை. அதன் வேர்த்து விறு விறுக்கை தரையிலேயே சாய்ந்து விட்டேன். மூச்சு எடுக்க முடியாத அளவிற்கு வேதனை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
 
உடனே முதலாளி அவசரசேவைக்கு தொடர்பு கொள்ள.....ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார்கள்.வந்த வுடன் அவர்கள் விசாரித்தது எங்கே வலி? கடைசியாக என்ன சாப்பிட்டீர்கள் என. நான் பருப்பும் சோறும் என்றவுடன் நக்கல் கலந்த சத்த சிரிப்புடன்..... மேலதிக சிகிச்சையை ஆரம்பித்தார்கள். வாயுபிரச்சனை என நினைத்து விட்டார்கள் போலும்...நானும் முதலில் அதைத்தான் நினைத்தேன்....

வேறு எதுவுமே கேட்காமல் என்னை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி விட்டு கையில் ஊசி ஏற்றி அதன் மூலம் வலிக்கான மருந்தை ஏதோ இலக்கங்களை தங்களுக்குள் சொல்லி ஏற்றினார்கள்.அது சரி வராமல் போக அரை மயக்கத்திற்கு உங்களை கொண்டு செல்கிறோம்  என சொல்லி விட்டு வேறு ஒரு மருந்தை ஏற்றிய வண்ணம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள்.

அங்கே போனதும் பிரசர் பார்த்தார்கள் நோர்மலாக இருந்தது.வலியும் குறைந்து விட்டது அல்லது தெரியவில்லை. சிறிது நேரத்தில் கங்காணி ஒருத்தர் வந்து வயித்திலை அங்கை இஞ்சை அமத்தி பார்த்தார்.அவருக்கும் விசயம் விளங்கேல்லை.மெயின் டாக்குத்தர் வெரி பிசி எண்ட படியாலை வாறவை போறவை எல்லாரும் அடிவயித்தை அமத்தி நோகுதோ...நோகுதோ எண்டு ஒரே அலுப்பு. முக்கியமாக கவனிக்கவும் ஒரு சிஸ்டர் கூட என்ரை அடி வயித்தை அமத்தி பாக்கேல்லை.....எல்லாம் முரட்டு சிங்கங்கள்...😡

நோ (யை) எழுதுவதிலும் இவ்வளவு நகைச்சுவை கலந்து எழுதுவது 👌.

ஆஸ்பத்திரி போய் வந்தாலும் உந்த பிரச்சனை தொடரும் என நினைக்கிறேன். கவனமாக இருங்கள். தொடர்ந்து எழுதவும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த நாள் காலமை சாப்பாடும் இல்லை தண்ணியும் இல்லை.வழமையா எடுக்கிற மருந்து மாத்திரையும் இல்லை பிரசரும் இல்லை...ஒரு ஒன்பது மணி போல பெரிய டாக்குத்தர் தன்ரை படை பரிவாரங்கள் சகிதம் என்னட்டை வந்தார்.எங்கை நோகுது வலிக்குது எண்டு கேட்டுட்டு சிறிலங்கா நிலவரம் விசாரிச்சார். எனக்கு ஒரே ஆச்சரியம் என்னெண்டு பக்கண நான் சிறிலங்கன் எண்டு கண்டு பிடிச்சார் எண்டு........கன கதையளுக்கு பிறகு சொன்னார் தன்னோடை படிச்ச இரண்டு பேர் தமிழ் ஆக்களாம்......👍
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நாங்கள் எதுக்கும்  MRT எடுத்து பாப்பம் அதுக்கு பிறகு மிச்சத்தை யோசிப்பம் எண்ட மீனிங்கிலை சொல்லிப்போட்டு அவரும் போயிட்டார்.... நேரம் பதினொரு மணியாச்சு இவன் குமாரசாமிக்கு சாப்பாடுமில்லை தண்ணியுமில்லை.....ரெலிபோனிலை சார்ச்சும் மட்டு மட்டு...:(

இதுக்குள்ளை  நான் இருந்த செக்சனிலை ஒரு தமிழ் சிஸ்டரின்ரை எடுப்பு சொல்லி வேலையில்லை. அவவின்ரை புருசனும் நானும் ஒரே அசூல் காம்பிலை கியூவிலை நிண்ட ஆக்களெண்டது அவவின்ரை கதையிலை பக்கெண்டு பிடிச்சிட்டன்...நீங்கள் இன்னார்ரை மனிசிதானே எண்டவுடனை ஆள் கப்சிப்..😀

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12 மணி போலை ஒரு பிரதர் வந்து என்னை கட்டிலோடை தள்ளிக்கொண்டு போய் வேறை ஒரு அறையிலை விட்டார். அங்கை MRT  எடுத்தினம். ஒரு கொஞ்ச நேரத்தாலை ஏதோ சீரியஸ் எண்டமாதிரி கிட்னியிலையும் கிட்னி குழாயிலையும் கல்லு புடிச்சிருக்கு உடனடியாய் வேறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறம்....இப்பிடியே விட்டால் கிட்னியை பழுதாக்கி போடும் உடனை ஏதாவது செய்யவேணும்.எனவே வேறை ஸ்பெசல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறம் எண்டு முடிவெடுத்தாச்சு.....கவனிக்கவும் மணி இரண்டாச்சு சோறுமில்லை தண்ணியுமில்லை...வாயெல்லாம் வரண்டு போச்சு😶

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியே அம்புலன்ஸ்லை ஏத்தி பெரியாஸ்பத்திரிக்கு போக மணி 4 ஆச்சுது.....அதுக்கு பிறகு சட்டப்படி பேர் ஊர் விலாசம் எல்லாம் பதிஞ்சு முடிய  பெரிய டாக்குத்தர் வந்தார். இப்பவும் வலி ஏதும் இருக்கோ எண்டார்.....இருக்காது எண்டது அவர்ரை மன நிலைய நான் புரிஞ்சு கொண்டன். ஏனெண்டால் எனக்கு ஏத்தின மருந்தின்ரை பவர் அப்படி....சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு 16வயது பீலிங்.....உடம்பு காத்து மாதிரி இருந்துது.

சரி விசயத்துக்கு வருவம்....

நான் நினைச்சன் இவையள் இப்பவே ஒப்பிரேசன் செய்யப்போயினம் எண்டு....அதுதான் இல்லை . இப்ப என்ன செய்யப்போறம் எண்டதை சொல்ல இன்னொரு டாக்குத்தர் வந்தார். ஒரு சிறிய கணணி திரையில் படங்கள் மூலம் அனைத்தையும் விளக்கப்படுத்தினார்....

அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் கிட்னி கல் எடுப்பற்கான அனைத்து செயல்களும் எம் பெருமான் சிவலிங்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்போகின்றார்கள்....அதன் ஆரம்ப கட்டமாக DJ எனப்படும் பொருளை உள்ளே செலுத்தி....

இதுதான் உள்ளுக்குள் செலுத்தப்பட்ட DJ

X-ray (AP view) showing the DJ stent marked as S and the stone is shown...  | Download Scientific Diagram

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கங்கள் முடிய மயக்க மருந்து ஏற்றும் டாக்குத்தர் வந்தார். அவரும் தன் பங்குக்கிற்கு பல விளக்கங்களை தந்தார்.. எல்லாம் முடிய மாலை ஆறு மணியளவில் எனது கிட்னியை நோக்கி DJ செலுத்தப்பட்டது.அது கிட்டத்தட்ட நான்கு கிழமைகள் உடலுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமாம். அது தரும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல.....இயற்கையாக இருப்பதை விட ஏதோ இனம்புரியாத இடைஞ்சல் இருந்து கொண்டேயிருக்கும்.தினசரி 3  வலி மாத்திரைகள் எடுத்தாலும் ஒரு வித உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருக்கும்.போனால் வாறமாதிரி இருக்கும் ஆனால் வராது.பெலிட்டை களட்டி ரவுசரை கீழை இறக்கினதுதான் மிச்சம்.    இதுக்கை வேறை ஒண்டுக்கு போகோணும் எண்டால் இருந்துதான் போகோணும் எண்ட அறிவுரை வேறை.....ஒவ்வொருக்காலும் யூறின் போகும் போது சகல கடவுள்களும் கண்முன்னே  வந்து செல்வார்கள்.சில நேரம் வலி சொல்ல முடியாத வலி.சுவரில் தலையை இடிக்க வேண்டும் போலிருக்கும்.

இது கிட்னி கல்லின் வேதனையை அனுபவித்த பெண் சொன்னது......கிட்னி கல்லின் வேதனை ஒரு பிரசவ வலியை விட மேலானதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பியர் ரின் காலியானதால் மிகுதி இன்னொருநாள் தொடரும். :cool:

 அப்போது சிறுநீரக கல்லுக்கும் இன்னொரு வலிக்குமான தொடர்பை சொல்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது.. ஒரே குடிகார திரியா இருக்கு..? 🤣

அதிகாலையில எழுந்தவுடன் பார்த்த திரியே இப்படியென்றால்..

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதையும் படித்தவுடன் கவலையா போச்சுது..

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

விளக்கங்கள் முடிய மயக்க மருந்து ஏற்றும் டாக்குத்தர் வந்தார். அவரும் தன் பங்குக்கிற்கு பல விளக்கங்களை தந்தார்.. எல்லாம் முடிய மாலை ஆறு மணியளவில் எனது கிட்னியை நோக்கி DJ செலுத்தப்பட்டது.அது கிட்டத்தட்ட நான்கு கிழமைகள் உடலுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமாம். அது தரும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல.....இயற்கையாக இருப்பதை விட ஏதோ இனம்புரியாத இடைஞ்சல் இருந்து கொண்டேயிருக்கும்.தினசரி 3  வலி மாத்திரைகள் எடுத்தாலும் ஒரு வித உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருக்கும்.போனால் வாறமாதிரி இருக்கும் ஆனால் வராது.பெலிட்டை களட்டி ரவுசரை கீழை இறக்கினதுதான் மிச்சம்.    இதுக்கை வேறை ஒண்டுக்கு போகோணும் எண்டால் இருந்துதான் போகோணும் எண்ட அறிவுரை வேறை.....ஒவ்வொருக்காலும் யூறின் போகும் போது சகல கடவுள்களும் கண்முன்னே  வந்து செல்வார்கள்.சில நேரம் வலி சொல்ல முடியாத வலி.சுவரில் தலையை இடிக்க வேண்டும் போலிருக்கும்.

இது கிட்னி கல்லின் வேதனையை அனுபவித்த பெண் சொன்னது......கிட்னி கல்லின் வேதனை ஒரு பிரசவ வலியை விட மேலானதாம்.

அண்ணை நல்லா பயப்பிடுத்தி போட்டியள் என்னை. 

ஆம்பிளையா பிறந்ததால உந்த பிரசவலியில இருந்து எஸ்கேப் என நினைத்திருந்தேன். 

இது வராமல் தடுக்க வழியுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ கு.சா அங்கிள்/தாத்தா/ப்ரோ, 🌹

இளவயதில் இந்த குடி, சிகரெட் போன்ற பழக்ககங்களால் எப்படி ஈர்க்கப்படுகிறார்கள்..? அல்லது இவற்றை நாட எவை தூண்டுகின்றன..? என அனுபவத்தில் அறிந்ததை சொன்னால், இளம் தலைமுறையினர் அவற்றை தவிர்க்க ஏதுவாக இருக்கும். பின்னாளில் உடல் வருத்தங்கள் இல்லாமல் வாழ வழி சமைக்கும்..

செய்வீர்களா...? செய்வீர்களா..?? 😋

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அடுத்த நாள் காலமை சாப்பாடும் இல்லை தண்ணியும் இல்லை.வழமையா எடுக்கிற மருந்து மாத்திரையும் இல்லை பிரசரும் இல்லை...ஒரு ஒன்பது மணி போல பெரிய டாக்குத்தர் தன்ரை படை பரிவாரங்கள் சகிதம் என்னட்டை வந்தார்.எங்கை நோகுது வலிக்குது எண்டு கேட்டுட்டு சிறிலங்கா நிலவரம் விசாரிச்சார். எனக்கு ஒரே ஆச்சரியம் என்னெண்டு பக்கண நான் சிறிலங்கன் எண்டு கண்டு பிடிச்சார் எண்டு........கன கதையளுக்கு பிறகு சொன்னார் தன்னோடை படிச்ச இரண்டு பேர் தமிழ் ஆக்களாம்......👍
 
பருப்பும் சோறும் தான் சிறிலங்கன் என்றதை காட்டிக் கொடுத்திருக்கு.

2 hours ago, குமாரசாமி said:

அப்பிடியே அம்புலன்ஸ்லை ஏத்தி பெரியாஸ்பத்திரிக்கு போக மணி 4 ஆச்சுது.....அதுக்கு பிறகு சட்டப்படி பேர் ஊர் விலாசம் எல்லாம் பதிஞ்சு முடிய  பெரிய டாக்குத்தர் வந்தார். இப்பவும் வலி ஏதும் இருக்கோ எண்டார்.....இருக்காது எண்டது அவர்ரை மன நிலைய நான் புரிஞ்சு கொண்டன். ஏனெண்டால் எனக்கு ஏத்தின மருந்தின்ரை பவர் அப்படி....சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு 16வயது பீலிங்.....உடம்பு காத்து மாதிரி இருந்துது.

சரி விசயத்துக்கு வருவம்....

நான் நினைச்சன் இவையள் இப்பவே ஒப்பிரேசன் செய்யப்போயினம் எண்டு....அதுதான் இல்லை . இப்ப என்ன செய்யப்போறம் எண்டதை சொல்ல இன்னொரு டாக்குத்தர் வந்தார். ஒரு சிறிய கணணி திரையில் படங்கள் மூலம் அனைத்தையும் விளக்கப்படுத்தினார்....

அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் கிட்னி கல் எடுப்பற்கான அனைத்து செயல்களும் எம் பெருமான் சிவலிங்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்போகின்றார்கள்....அதன் ஆரம்ப கட்டமாக DJ எனப்படும் பொருளை உள்ளே செலுத்தி....

இதுதான் உள்ளுக்குள் செலுத்தப்பட்ட DJ

X-ray (AP view) showing the DJ stent marked as S and the stone is shown...  | Download Scientific Diagram

எங்க வெறும் கம்பி தான் தெரியுது.
சிவலிங்கத்தைக் காணேல.
ஒருவேளை இனி தேவையில்லை என்று வெட்டிப் போட்டாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பருப்பும் சோறும் தான் சிறிலங்கன் என்றதை காட்டிக் கொடுத்திருக்கு.

எங்க வெறும் கம்பி தான் தெரியுது.
சிவலிங்கத்தைக் காணேல.
ஒருவேளை இனி தேவையில்லை என்று வெட்டிப் போட்டாங்களோ?

சிவலிங்கம் பத்திரமா மூலஸ்தானத்தில இருக்குது…!

கல்லு எங்க உருவாகி….எந்தப் பாதை வழியாகப் பயணித்திருக்கிறது எஅண்டு கோடு காட்டுது….!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

சிவலிங்கம் பத்திரமா மூலஸ்தானத்தில இருக்குது…!

கல்லு எங்க உருவாகி….எந்தப் பாதை வழியாகப் பயணித்திருக்கிறது எஅண்டு கோடு காட்டுது….!

ஓ சரி சரி

நான் நினைச்சன் இனி தேவையில்லை என்று எடுத்துட்டாங்கள் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.