Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியர் பொதுநலம் செறிந்த இன்னொரு திரியை ஆரம்பித்திருக்கிறார்👍.

அவர் முழுவதும் எழுதி முடிய இந்த சிறு நீரகக் கல் தடுப்பு பற்றி எழுதுகிறேன். 

  • Replies 84
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, goshan_che said:

அண்ணை நல்லா பயப்பிடுத்தி போட்டியள் என்னை. 

ஆம்பிளையா பிறந்ததால உந்த பிரசவலியில இருந்து எஸ்கேப் என நினைத்திருந்தேன். 

இது வராமல் தடுக்க வழியுண்டா?

எனக்கும் பிரசவவலி தெரியாது.....பிரசவ வலியோடு சிறுநீரக கல் வலியையும் ஒப்பிட்டு சொன்னது என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவர்.

எனவே கல்லு வராமல் பாத்துக்கொள்ளுவம்...😁

19 hours ago, ராசவன்னியன் said:

ஹலோ கு.சா அங்கிள்/தாத்தா/ப்ரோ, 🌹

இளவயதில் இந்த குடி, சிகரெட் போன்ற பழக்ககங்களால் எப்படி ஈர்க்கப்படுகிறார்கள்..? அல்லது இவற்றை நாட எவை தூண்டுகின்றன..? என அனுபவத்தில் அறிந்ததை சொன்னால், இளம் தலைமுறையினர் அவற்றை தவிர்க்க ஏதுவாக இருக்கும். பின்னாளில் உடல் வருத்தங்கள் இல்லாமல் வாழ வழி சமைக்கும்..

செய்வீர்களா...? செய்வீர்களா..?? 😋

நேரகாலம் உதவி செய்தால் நிச்சயம் அந்த அனுபவங்களையும் எழுதுவேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

பருப்பும் சோறும் தான் சிறிலங்கன் என்றதை காட்டிக் கொடுத்திருக்கு.

எங்க வெறும் கம்பி தான் தெரியுது.
சிவலிங்கத்தைக் காணேல.


ஒருவேளை இனி தேவையில்லை என்று வெட்டிப் போட்டாங்களோ?

ஜேர்மனியிலை பருப்பு சூப் எண்டால் விழுந்தடிச்சு குடிப்பாங்கள் 😁

Mamas vegane Linsensuppe von DoctorSong | Chefkoch

 

அந்த படத்திலை கம்பிதான் முக்கியம். தம்பி தேவையில்லை...🤣

அவன் வைரம் பாய்ஞ்ச கட்டை...😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, குமாரசாமி said:

விளக்கங்கள் முடிய மயக்க மருந்து ஏற்றும் டாக்குத்தர் வந்தார். அவரும் தன் பங்குக்கிற்கு பல விளக்கங்களை தந்தார்.. எல்லாம் முடிய மாலை ஆறு மணியளவில் எனது கிட்னியை நோக்கி DJ செலுத்தப்பட்டது.அது கிட்டத்தட்ட நான்கு கிழமைகள் உடலுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமாம். அது தரும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல.....இயற்கையாக இருப்பதை விட ஏதோ இனம்புரியாத இடைஞ்சல் இருந்து கொண்டேயிருக்கும்.தினசரி 3  வலி மாத்திரைகள் எடுத்தாலும் ஒரு வித உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருக்கும்.போனால் வாறமாதிரி இருக்கும் ஆனால் வராது.பெலிட்டை களட்டி ரவுசரை கீழை இறக்கினதுதான் மிச்சம்.    இதுக்கை வேறை ஒண்டுக்கு போகோணும் எண்டால் இருந்துதான் போகோணும் எண்ட அறிவுரை வேறை.....ஒவ்வொருக்காலும் யூறின் போகும் போது சகல கடவுள்களும் கண்முன்னே  வந்து செல்வார்கள்.சில நேரம் வலி சொல்ல முடியாத வலி.சுவரில் தலையை இடிக்க வேண்டும் போலிருக்கும்.

இது கிட்னி கல்லின் வேதனையை அனுபவித்த பெண் சொன்னது......கிட்னி கல்லின் வேதனை ஒரு பிரசவ வலியை விட மேலானதாம்.

உடலுக்குள் அந்த DJ செலுத்திய பின் ஒரு இரவு ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து விட்டு மருந்து மாத்திரைகளுடன் வீடு வந்து விட்டேன். (அனுப்பி விட்டார்கள்) கிட்டத்தட்ட நான்கு கிழமைகள் அதன் உபாதைகளுடன் அந்த DJயையும் கல்லையும் எடுக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன். இரவு படுத்திருக்கும் போது சில வேளைகளில் வயிற்றின் அடிப்பகுதியில் மீன் முள்ளு தொண்டைக்குள் சிக்கிய உணர்வு போல் வரும். அதோடை இண்டையான் நித்திரை துலைஞ்சுது என எனக்கு நானே திட்டிக்கொண்டு யாழ்களத்துக்கு வருவேன்.....வந்தால் அந்த வலியை விட...........😂 😁 🤣🤪

ஆஸ்பத்திரியால் வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாளே வேலைக்கு சென்றுவிட்டேன். லேலைக்கு போகலாமோ என டாக்டரிடம் விசாரித்த போது வேலை என்ன உதைபந்தாட்டமே விளையாடலாம் என சிம்பிளாக சொல்லிவிட்டார்.இருந்தாலும் நின்று கொண்டு வேலை செய்யும் போது உள்ளே செலுத்திய DJ கீழே இறங்கி வருவது போன்ற உணர்வு வரும். அப்போதெல்லாம் ஒரு கதிரையில் சிறிது நேரம் இருந்து விடுவேன். கொஞ்சம் சுகமாக இருக்கும். அப்போதுதான் விளங்கியது ஏன் டாக்டர் சிறுநீர் கழிக்கும் போது ஏன் இருந்து அந்த கடமையை செய்ய சொன்னார் என்று....🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு கிழமை செல்ல உள்ளுக்கை விட்ட DJ கீழை இறங்கி வாற பீலிங் அடிக்கடி வந்து கொண்டேயிருந்தது......சில நேரங்களில் சிறுநீருடன் இரத்தமும் கலந்து வந்து கொண்டேயிருந்தது. மெல்லிதாக  இரத்தமும் வருமென பெரிய டாக்டர்கள் முன்னரே எனக்கு எச்சரித்து இருந்தார்கள். இருந்தாலும் மனப்பயம் கூடக்கூட எனது குடும்ப வைத்தியரிடம் சென்றேன்..நோர்மலாக அவர் என்னைக்கண்டதும் வில்லங்கம் வருது என்ற பாணியில் கொடுப்புக்குள் சிரிப்பார்..அன்றும் அஃதே.

நான் DJ இறக்கம் பற்றி சொன்னதும் உடனை ஸ்கேன் எடுத்து பாத்தார். எல்லாம் இருக்க வேண்டிய இடத்திலை இருக்கு....ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம்.இதெல்லாம் நோர்மல் எண்ட ரேஞ்சிலை சொல்லிப்போட்டு அப்பிடி ஏதும் பெரிய வித்தியாசம் எண்டால் DJ வைச்ச இடத்துக்கே ஓடுங்கோ எண்டார்.அப்பப்ப இரத்தம் வாறதும் முள்ளு குத்துற பீலிங் வாறதும் நானும் வேலையளை பாக்க தொடங்கீட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியே நாலு கிழமை உருண்டோட...... அந்த பொன்னான நாளுக்கு முதல் நாள் நோர்மல் செக் அப். இரத்தம் எடுத்து கொரோனா அது இதெண்டு எல்லா பரிசோதனையும் எடுத்தாச்சு. இனி திருப்பியும் மயக்க மருந்து டாக்குத்தர்.அங்கை போனால் தமிழ் தெரிஞ்ச குஜாரத்து லேடி டாக்டர்.என்ரை பெயரை பாத்திட்டு நீங்கள் சிறிலங்காதானே எண்டு தொடங்கி........எங்கடை மிளகாய்த்தூள் தொடக்கம் கலியாணங்கள் கல்ச்சர் வரைக்கும் ஆராய்ஞ்சு போட்டு....ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம் இதெல்லாம் நோர்மல்...இப்ப எல்லாம் புது ரெக்னிக் எண்டு சொல்லி போட்டு வாங்கோ எண்டு தமிழிலையே சொல்லி அனுப்பி வைச்சார்.🥰

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் பார்த்தேன்......ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறியள்.....மிகவும் கவனமாக இருக்கவும்.......! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த நாள் அதிகாலை ஏழி மோணிங் ஏழு மணிக்கு நிக்கச்சொன்ன இடத்திலை போய் நிண்டன்.இரண்டு லேடி வந்திச்சினம்.உடுப்பு மாத்தச்சொல்லிச்சினம். பிறகு இன்னொரு பொம்புளை டாக்குத்தர் வந்தாவு அவதான்  அலுவல் பாக்கப்போறா எண்டதை ஊகிச்சிட்டன். என்ரை ரிப்போட்டை பிரட்டி பிரட்டி பாத்தாவு....எந்தப்பக்கம் எந்த இடத்திலை நோ/குத்து,எந்தப்பக்கம் DJ வைச்சது எண்டதை திருப்பி திருப்பி கேட்டு விட்டு நான் சொன்ன இடத்தில் ஒரு  பெரிய புள்ளடியை போட்டு விட்டார். சில நிமிடங்களில் வேறு இரு தாதிகள் காலை வணக்கத்துடன் கட்டிலை தள்ளிக்கொண்டு ஒரு அறையில் விட்டனர். அங்கு சிறிய மேடை போல் ஒரு கட்டில் இருந்தது.அதில் என்னை ஏறி படுக்கச்சொன்னார்கள். ஒரு சின்ன கல்லுக்கு எவ்வளவு அலப்பறை என எனக்குள் நானே நினைத்தபடி  அவர்கள் தந்த தலையணை உறை போன்ற உடையுடன் எனது பொன்னான அங்கங்களை எவ்வளவு இழுத்து மறைக்க முடியுமோ அவ்வளவிற்கு இழுத்து மூடிய வண்ணம் ஏறி படுத்தேன்.அவ்வளவுதான் தடல்புடலாக கட்டிலுக்கு அருகில் இன்னும் பல உபகரணங்களை பொருத்தினார்கள். அந்த இடைவெளியில் மயக்க மருந்து குஜாரத்தி வந்து என் இடக்கையை பிடித்து பயப்பிடுகின்றீர்களா என கேட்டார்.நான் இல்லை என்று விட்டு ஒரு கணம் என் மனைவி பிள்ளைகளை நினைத்துக்கொண்டேன்.....அந்த வேளையில் நன்றாக மூச்செடுங்கள் என்றபடியே ஒரு மாஸ்க்கை மூக்கின் மீது வைக்க வேறொரு உலகிக்கு நான் சென்று விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அந்த படத்திலை கம்பிதான் முக்கியம். தம்பி தேவையில்லை...🤣

அவன் வைரம் பாய்ஞ்ச கட்டை...😂

அவரும் அமெரிக்கா கூப்பிட்டும் போகாமல் ஜேர்மனிக்கு விசுவாசம் காட்டுற ஆளோ?

2 hours ago, குமாரசாமி said:

நேரகாலம் உதவி செய்தால் நிச்சயம் அந்த அனுபவங்களையும் எழுதுவேன். :)

ஜேர்மன் வந்த அனுபவத்தை எழுதுவதாக எனக்கும் முன்னர் சொல்லி இருந்தீர்கள். அதோட இதையும் சேர்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கண் முழித்து பார்த்த போது மதியம் 12 மணி. வலி தாங்க முடியவில்லை. ஒரு தாதி வந்து பேசும் திறனையும் கண்பார்வையையும் சரி பார்த்துக்கொண்டார். கோப்பி குடிக்க விருப்பமா என கேட்டார்  நான் என்னால் வலி தாங்க முடியவில்லை  எனும் போது மீண்டும் வலி நிவாரண மருந்துகளை ஏற்றிக்கொண்டேயிருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேரம் முடிய என்னை நோர்மல் வார்ட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கே போன போது என்னை விட இரு பெரிய பூதங்கள் இருந்தன. அவர்களை பார்த்தவுடன்  எனது வருத்தமெல்லாம் சிறிய தூசியென மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.அவர்கள் என்னைகண்டதும் வரவேற்ற விதமும் அவர்கள் தந்த ஆலோசனைகளும் அளப்பெரியது.அனுபவப்பட்டவர்கள் சொல்லும் ஆலோசனைகள் மருந்து போன்றது. அவர்கள் சொன்னதை அப்படியே உள் வாங்கிக்கொண்டேன்.

இருந்தாலும் ......

என் வலிகள் குறையவேயில்லை..சிவலிங்கம் ஊடாக ஒரு குழாய் அதில் இரு பிரிவுகள்.சிறு நீர் கழிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தது.அத்துடன் இரு பைகள் வேறு பொருத்தியிருந்தார்கள்.அதை பாக்க தலை சுத்துதடி பரிமளம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என் வலிகள் குறையவேயில்லை..சிவலிங்கம் ஊடாக ஒரு குழாய் அதில் இரு பிரிவுகள்.சிறு நீர் கழிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தது.அத்துடன் இரு பைகள் வேறு பொருத்தியிருந்தார்கள்.அதை பாக்க தலை சுத்துதடி பரிமளம் 😂

பரிமளஅக்காவின் குமுறலை இன்னும் எழுதல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழுவிக்கிடக்கிற குழாயளோடை எழும்பியும் நடக்கேலாது.இரண்டுக்கும் போக பெரிய கஸ்டம்.ஒரு பக்கத்தாலை தண்ணி ஊசி மூலம் ஏறிக்கொண்டு இருக்குது. இன்னொரு பக்கம் வலிக்கு ஏத்திக்கொண்டே இருக்கினம்.....கட்டில் கீழப்பக்கம் ஒரே இரத்த கறையள்....இதெல்லாம்  அங்கை நோர்மல்

இரண்டு நாள் முடிய வலிகளும் குறைய கொழுவின குழாய்களை புடுங்கும்  நாள்.  ஒரு நேர்ஸ் வந்து இப்ப குழாய் எல்லாத்தையும் இழுக்கப்போறன் பெரிசாய் முச்சை இழுத்து விடு இழுத்து விடு இழுத்து விடு எண்டு சொல்லிய படியே இழுத்து விட்டார் என்ரை ஐயோ சிவலிங்கம் அறுந்து போன பீலிங்....😟

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடுத்த கல்லை பெரிய டாக்குத்தர் கொண்டு வந்து காட்டினார். கிட்டத்தட்ட மொட்டைக்கறுப்பன் புழுங்கள் அரசியை விட கொஞ்சம் பெரிசு.....இவ்வளவு சேட்டை பண்ணியிருக்கு....

இந்த கல்லை  நீங்கள் வைத்திருக்க விரும்புகின்றீர்களா என என்னிடம் கேட்டார். நான் ஓம் என்றதும் என்னிடம் தந்துவிட்டார். தாதி ஒருவரிடம் டாக்டர் ஏன் அப்படி கேட்டார் என கேட்ட போது அந்த கல் எதனால் வந்தது திரும்பவும் வருமா அல்லது எந்த உணவுகளால் வரக்கூடும் என ஆய்வு செய்வார்களாம்.ஆகையால் அந்த கல்லை திருப்பியே கொடுத்து விட்டேன்.

அதை வைச்சு வீட்டுக்கு அத்திவாரமே போடேலும்? 🤪

அதை படம் எடுக்க வேண்டும் என நினைத்து விட்டு ஏதோ ரென்சனில் அதை மறந்து விட்டேன்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சுபமே முடிய  வீட்டுக்கு செல்ல முதல் எனது கேள்வி நேரமும் ஆலோசனை அறிவுறுத்தல் நேரமும் வர பெரிய டாக்டரிடம் சென்றேன்.

அவரது முதல் ஆலோசனை சிறுநீரக கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க  வேண்டும். நானோ தினசரி  3லீட்டர் வரை தண்ணீர் அருந்துபவன்....அப்போ பிரச்சனை எங்கே? 
பால்,சீஸ் போன்றவை தவிர்க்க வேண்டும் என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாவிக்கும் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் மற்றும் கொலஸ்ரோல் மாத்திரைகளால் சிறுநீரக கற்கள் உருவாகுமா என எனது  கேள்வியாக இருந்தது. அதற்கு அதிரடியாக இல்லையென மறுப்பை தெரிவித்திருந்தார்.சிறு நீரகத்தில் கல் படிய சாத்தியமுள்ள மருந்து மாத்திரைகள் உள்ளன. ஆனால் உங்கள் வருத்தத்திற்கான மாத்திரைகள் சிறு நீரக கற்கள் உருவாவதற்கு உடந்தையாக இருக்காது என சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி விட்டார்.

அப்படியாயின் எனக்கு எப்படி சிறுநீரக கல் வந்ததது?

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

அப்படியாயின் எனக்கு எப்படி சிறுநீரக கல் வந்ததது?

ஊரில் உங்கள் கிணற்றுத் தண்ணீரையும், உங்கள் சிறு நீரகக் கல்லையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விடை கிடைக்கலாம்..!

லண்டனில் அப்பெண்டிக்ஸ் செய்த நண்பரிடம், கடுக்காய் நண்டுக் கோதும், பித்தளை இரண்டு சதக் குத்தியொன்றும் கொடுக்கப் பட்டன!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் செவ்வாய் வெள்ளிகளில் கட்டாயம் பருப்புடன் வாழைத்தார் சிறு சிறு துன்டுகளாக வெட்டி சமைத்து வைத்து இருப்பார்கள் அதை ஒதுக்கும்பொழுது கல்லு வராது சாப்பிட்டு பழகு என்று பேச்சு விழும் இங்கு குமாரசாமிக்கு நடந்த கதையை படித்தபின் வாழைத்தார் தேடிவாங்கி பருப்பு கூட்டு வைக்கணும் போல் உள்ளது .

1 hour ago, புங்கையூரன் said:

லண்டனில் அப்பெண்டிக்ஸ் செய்த நண்பரிடம், கடுக்காய் நண்டுக் கோதும், பித்தளை இரண்டு சதக் குத்தியொன்றும் கொடுக்கப் பட்டன!

வோசிங் மிசினுக்குள்ளால் எடுத்தது போல் இலகுவாக சொல்கிறீர்கள் .😄

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஊரில் செவ்வாய் வெள்ளிகளில் கட்டாயம் பருப்புடன் வாழைத்தார் சிறு சிறு துன்டுகளாக வெட்டி சமைத்து வைத்து இருப்பார்கள் அதை ஒதுக்கும்பொழுது கல்லு வராது சாப்பிட்டு பழகு என்று பேச்சு விழும் இங்கு குமாரசாமிக்கு நடந்த கதையை படித்தபின் வாழைத்தார் தேடிவாங்கி பருப்பு கூட்டு வைக்கணும் போல் உள்ளது .

வோசிங் மிசினுக்குள்ளால் எடுத்தது போல் இலகுவாக சொல்கிறீர்கள் .😄

வாழைத்தாருக்கு நான் எங்கே போவேன்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

வாழைத்தாருக்கு நான் எங்கே போவேன்?

இங்க தமிழ் ஆக்களின்ர வேலி பாய்ஞ்சா கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

வாழைத்தாருக்கு நான் எங்கே போவேன்?

தமிழ்க்கடைகளில் இல்லாத பொருளா ?

அப்படியும் இல்லையென்றால் முதலாளி நிக்கும் நேரமாய் பார்த்து இருக்கிற பொருளையெல்லாம் வாங்கி 50 பவுன் வருமாப்போல் வாங்கி விட்டு வாழைத்தார் 300கிராம் என்று கேளுங்க இல்லையென்பார்கள் உடனே வாங்கிய பாக்கை திருப்பி கொடுத்துவிட்டு தூர  உள்ள கடைக்கு  போகணும் அங்கு கட்டாயம் இருக்கும் என்ன மற்ற சாமானை வாங்காவிட்டால் குறை நினைப்பினம் இங்கு வாழைத்தார் வந்தால் அறிவியுங்கோ என்று போன் நம்பரை கொடுத்துவிட்டு வாங்கோ அன்று இரவு முதலாளிக்கு சிவராத்திரி  அடுத்தநாள் கட்டாயம் வாழைத்தார் வந்துவிட்டது என்று போன் வரும் 😜

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நான் பாவிக்கும் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் மற்றும் கொலஸ்ரோல் மாத்திரைகளால் சிறுநீரக கற்கள் உருவாகுமா என எனது  கேள்வியாக இருந்தது. அதற்கு அதிரடியாக இல்லையென மறுப்பை தெரிவித்திருந்தார்.சிறு நீரகத்தில் கல் படிய சாத்தியமுள்ள மருந்து மாத்திரைகள் உள்ளன. ஆனால் உங்கள் வருத்தத்திற்கான மாத்திரைகள் சிறு நீரக கற்கள் உருவாவதற்கு உடந்தையாக இருக்காது என சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி விட்டார்.

அப்படியாயின் எனக்கு எப்படி சிறுநீரக கல் வந்ததது?

சரி, உங்களுக்கு மருந்துகளால் தான் கல் வந்தது என்ற சந்தேகம் தலை தூக்கி விட்டது என நினைக்கிறேன்.

மருத்துவர் சொன்னது போல, அப்படி கல் உருவாக்கும் சில மருந்துகள் உண்டு, ஆனால் இரத்த அழுத்த மாத்திரை, கொழுப்புக் குறைக்கும்/நீரிழிவு மருந்துகளில் அந்தப் பக்க விளைவு இல்லை, அவர் சொன்னது சரியானதே! 

பின் வரும் நான்கு வகையான கற்களில் எந்த வகை என்று உங்கள் அறிக்கையில் இருக்கிறதா என்று ஒரு தடவை பார்த்துச் சொல்ல முடியுமா? (கல் வகையை வைத்து என்ன நடந்திருக்கிறது என ஓரளவு புரிந்து கொள்ளலாம்):

1. ஒக்சலேற் -oxalate (மிக அதிகமானோருக்கு வருவது)
2. யூறேற் -Urate (இரண்டாவது மிக அதிகமாக வரும் கல்)
3. ஸ்ருவைற்-Struvite  (மிக அரிது)
4. சிஸ்ரின் - Cystine (மிக அரிது)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி அண்ணை மற்றும் ஜஸ்ரின்.. வாசிச்சுக்கொண்டு போக எனக்கு உடம்பெல்லாம் கூசுது.. போனவருசம்தான் இடதுபக்க கழுத்து பின்புறத்தில லிப்போமா(தோலின் கீழ் கொழுப்பு திசுக்களால் உருவாகும் பாதிப்பில்லாத(பெனைன்) கட்டி) வுக்கு அறுவைச்சிகிச்சை செய்திருந்தேன்.. புல்மயக்கமருந்துதான்.. மயக்கத்தால் எழுந்தபோது மரணம் எப்படி இருக்கும் என்ற உண்மை புரிந்தது.. ஜயோ அந்த நாட்களை கடந்த ஞாபகம் இருப்பதால் குமாரசாமி அண்ணையின் எழுத்துக்களை வாசிச்சபோது உடம்பெல்லாம் கூசுது.. வாழ்நாளில இன்னுமொருமுறை இப்படி ஆஸ்பத்திரியில படுக்ககூடாது எண்டு எப்பவும் நினைப்பன்.. படுக்கையிலயே செத்துபோகிறவங்கள் எவ்ளா குடுத்துவச்சவங்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்தவற்றை வாசிக்க யாருக்குமே இப்படி வரக் கூடாது என மனது எண்ணுகிறது.

சுகமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வந்து திக்கொண்டும் திசையொண்டுமாய் இருக்குற எங்களுக்கு நாலுவிசயத்த மனம்விட்டு கலந்து பேசி எழுதவும் அடிபடவும் அனுபவங்களை பகிரவும் யாழ் எவ்வளவு பெரிய ஆறுதல் தாற ஆலமரம் பாத்தியளே.. இதுக்கு மோகன் அண்ணைக்கு என்ன செய்யப்போறம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெளிநாடு வந்து திக்கொண்டும் திசையொண்டுமாய் இருக்குற எங்களுக்கு நாலுவிசயத்த மனம்விட்டு கலந்து பேசி எழுதவும் அடிபடவும் அனுபவங்களை பகிரவும் யாழ் எவ்வளவு பெரிய ஆறுதல் தாற ஆலமரம் பாத்தியளே.. இதுக்கு மோகன் அண்ணைக்கு என்ன செய்யப்போறம்..

பச்சை முடிஞ்சி போச்சு புலவரே.

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கு மோகன் அண்ணைக்கு என்ன செய்யப்போறம்..

என்னால ஏலுமானது ஒரு மூண்டு திரிய பத்த வச்சு நூக்கிறது. நீங்கள் எப்படி🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.