Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாள் வெட்டில் உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு பெருமெடுப்பில் இறுதிச் சடங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாள் வெட்டில் உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு பெருமெடுப்பில் இறுதிச் சடங்கு

August 30, 2021

spacer.png

யாழ்.குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு உறவினர்கள் , நண்பர்கள் இறுதி கிரிகைகளை மேற்கொண்டனர்.  குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஜெரன் (வயது 24) எனும் இளைஞன் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து தகனம் செய்ய முற்படட வேளை , அதற்கு பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை அடுத்து காவல்துறையினர் இது தொடர்பில் யாழ்.நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து , நீதவான் சடலத்திற்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு , அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

அதனை அடுத்து இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதும் , தொற்று உறுதியானதை அடுத்து , சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்தனர். அதன் பின்னர் இளைஞனின் அஸ்தியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அதனை அடுத்து , பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் ஒன்றிணைந்து இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரிகைகள் செய்தனர். பாடை கட்டி , வெடி கொளுத்தி , நில பாவாடை விரித்து ,  மேளங்களுடன் இளைஞனின் அஸ்தியை வீட்டிலிருந்து கொட்டடி மயானத்திற்கு கொண்டு சென்றனர். பெருமெடுப்பில் நடைபெற்ற இவ் இறுதி நிகழ்வில் இளைஞனின் பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

1-8.jpg?resize=646%2C1024  
 

 

 

spacer.png

https://globaltamilnews.net/2021/165213

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

அதனை அடுத்து இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதும் , தொற்று உறுதியானதை அடுத்து , சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்தனர். அதன் பின்னர் இளைஞனின் அஸ்தியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அதனை அடுத்து , பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் ஒன்றிணைந்து இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரிகைகள் செய்தனர். பாடை கட்டி , வெடி கொளுத்தி , நில பாவாடை விரித்து ,  மேளங்களுடன் இளைஞனின் அஸ்தியை வீட்டிலிருந்து கொட்டடி மயானத்திற்கு கொண்டு சென்றனர். பெருமெடுப்பில் நடைபெற்ற இவ் இறுதி நிகழ்வில் இளைஞனின் பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.  

இவ்வளவு மக்கள்... அஸ்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார்களா?
நிலைமையை புரிந்து... அமைதியான முறையில் நடந்திருக்கலாம்.
சொல்வழி கேட்காத, மக்கள் போலுள்ளது. 

வாளால் வெட்டியவரும்... விரைவில் குறி வைக்கப்படலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

வாளால் வெட்டியவரும்... விரைவில் குறி வைக்கப்படலாம்.


 

குருநகர் இளைஞன் படுகொலை – பிரதான சந்தேகநபர்கள் தலைமறைவு

August 30, 2021

குருநகர் இளைஞன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் நீதிமன்ற உத்தரவில் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஜெரன் (வயது 24) எனும் இளைஞன் படுகொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் குறித்த இளைஞன் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த  போது , மோட்டார் சைக்கிளில் வந்த மற்றோரு இளைஞர் குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர்.

குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்தார். 
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய போது ஐந்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

 அதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கும் தாக்குதல் நடத்திய இளைஞர் குழுவிற்கும் இடையில் கடந்த 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும் , அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் , தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் , அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் , காவல்துறை தகவல்கள் தெரிவித்தன.
 

https://globaltamilnews.net/2021/165218

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் வேறை நேரம்காலம் தெரியாமல்  கொரனோ  நேரத்திலும் இவ்வளவு பேர் கூடியிருக்கினம் அங்குள்ள பாதர் மார் என்ன செய்துகொண்டு இருக்கினம் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இவங்கள் வேறை நேரம்காலம் தெரியாமல்  கொரனோ  நேரத்திலும் இவ்வளவு பேர் கூடியிருக்கினம் அங்குள்ள பாதர் மார் என்ன செய்துகொண்டு இருக்கினம் ?

இது சைவ சமயஞ் சார்ந்தவர்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதியில் கொட்டடி பாஷையூர் குருநகர் காலம் காலமாக வெட்டுகொத்து சண்டைகளுக்குபெயர்போன ஊர்கள். ஆமி பொலிசுக்கும், ஏன் கிட்டர் காலத்தில் இயக்கத்துக்கூட அடித்தவர்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

இது சைவ சமயஞ் சார்ந்தவர்கள் போலுள்ளது.

பெற்றோல் பவுசருடன்தான் திரியிரியல் ஆக்கும் 🤣

5 minutes ago, valavan said:

வட பகுதியில் கொட்டடி பாஷையூர் குருநகர் காலம் காலமாக வெட்டுகொத்து சண்டைகளுக்குபெயர்போன ஊர்கள். ஆமி பொலிசுக்கும், ஏன் கிட்டர் காலத்தில் இயக்கத்துக்கூட அடித்தவர்கள் இருக்கிறார்கள்.

முரட்டு சுபாவம் உள்ள, ஆனால் பழகினால் நட்புக்காக அன்புக்காக உயிரையே கொடுக்க நினைப்பவர்கள் இவர்கள். கடலும் உப்பு நீரை அள்ளி இறைக்கும் காற்றும், மீனவத் தொழிலும் என்று கடுமையான சூழலில் வாழ்பவர்கள் என்பதால் எவரும் அவர்களிடம் அதிகாரம் செய்ய முடியாது. புலிகளே இலேசில் இவர்களின் பிரச்சனைகளில் தலையிட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

பெற்றோல் பவுசருடன்தான் திரியிரியல் ஆக்கும் 🤣

அஸ்தியை பற்றி எழுதி இருந்ததால் குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

அஸ்தியை பற்றி எழுதி இருந்ததால் குறிப்பிட்டேன்.

கொரனோ வந்து செத்தால் அஸ்திதான் கிடைக்கும் முகம் கூட பார்க்க முடியாதபடி சுத்தி கட்டித்தான் எறிகிறார்களாம் .

 

8 hours ago, கிருபன் said:

யாழ்.போதனா வைத்திய சாலையில் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து தகனம் செய்ய முற்படட வேளை , அதற்கு பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

கொரனோ வந்து செத்தால் அஸ்திதான் கிடைக்கும் முகம் கூட பார்க்க முடியாதபடி சுத்தி கட்டித்தான் எறிகிறார்களாம் .

 

 

 

8 hours ago, கிருபன் said:

அதனை அடுத்து , பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் ஒன்றிணைந்து இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரிகைகள் செய்தனர். பாடை கட்டி , வெடி கொளுத்தி , நில பாவாடை விரித்து ,  மேளங்களுடன் இளைஞனின் அஸ்தியை வீட்டிலிருந்து கொட்டடி மயானத்திற்கு கொண்டு சென்றனர். பெருமெடுப்பில் நடைபெற்ற இவ் இறுதி நிகழ்வில் இளைஞனின் பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

சைவ முறையில் கிரியை என்றும் குறிப்பிட்டிருக்கண்ணை.

Edited by ஏராளன்
added

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

வட பகுதியில் கொட்டடி பாஷையூர் குருநகர் காலம் காலமாக வெட்டுகொத்து சண்டைகளுக்குபெயர்போன ஊர்கள். ஆமி பொலிசுக்கும், ஏன் கிட்டர் காலத்தில் இயக்கத்துக்கூட அடித்தவர்கள் இருக்கிறார்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் எல்லோரும் சண்டியர்கள் என்கிறீர்களா அல்லது இங்கு வாழும் கிறீத்துவர்கள் வெட்டுக் கொத்துக்காறர் என்கிறீர்களா அல்லது சாதி அடிப்படையில் அவர்களைக் கூறுகிறீர்களா ? 

உங்களுக்கு யாழ் நகரின் தெற்குப் பகுதியின் குடிப்பரம்பல் பற்றி எதுவுமே தெரியாது போல ...? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் எல்லோரும் சண்டியர்கள் என்கிறீர்களா அல்லது இங்கு வாழும் கிறீத்துவர்கள் வெட்டுக் கொத்துக்காறர் என்கிறீர்களா அல்லது சாதி அடிப்படையில் அவர்களைக் கூறுகிறீர்களா ? 

உங்களுக்கு யாழ் நகரின் தெற்குப் பகுதியின் குடிப்பரம்பல் பற்றி எதுவுமே தெரியாது போல ...? 

😏

கபிதன் ஏன் சாமி இந்த கொலவெறி,

மனச தொட்டு சொல்லுங்க நீங்க சொல்றமாதிரி எல்லாம் நினைச்சுக்கொண்டா இந்த கருத்தை எழுதியிருப்பேன்? மேலே நிழலி சொன்னத பாருங்க அதுதான் விசயம். கண்டதும் கேட்டதுமே ஆதாரம். மற்றும்படி கண்டபடி நினைச்சுக்கொண்டு எதுவும் எழுதல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப யாழ்ப்பாண பக்கத்திலை ஒருவர் செத்தால் பக்கெண்டு தூக்கிக்கொண்டுபோய் எரிச்சுப்போட்டு கொரோனாவாலை செத்தவர் எண்டு சொல்லி அறாவடியாய் காசு பறிக்கிறதுக்கும் ஒரு கூட்டம் திரியுதாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, valavan said:

வட பகுதியில் கொட்டடி பாஷையூர் குருநகர் காலம் காலமாக வெட்டுகொத்து சண்டைகளுக்குபெயர்போன ஊர்கள். ஆமி பொலிசுக்கும், ஏன் கிட்டர் காலத்தில் இயக்கத்துக்கூட அடித்தவர்கள் இருக்கிறார்கள்.

உவையளின்ரை சண்டித்தனம் வெளிநாடுகள் வந்தும் இருக்கு...
இஞ்சை ஜேர்மனியிலை முந்தி என்ரை சினேகித கூட்டுகளிலை இரண்டு குருநகர் சிங்கம்.

இவையளை நம்பி எங்கையும் பயமில்லாமல் கூட்டு வைச்சு திரியலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உவையளின்ரை சண்டித்தனம் வெளிநாடுகள் வந்தும் இருக்கு...
இஞ்சை ஜேர்மனியிலை முந்தி என்ரை சினேகித கூட்டுகளிலை இரண்டு குருநகர் சிங்கம்.

இவையளை நம்பி எங்கையும் பயமில்லாமல் கூட்டு வைச்சு திரியலாம்.😁

ஒரு குருநகர் நபர் மரண வீட்டுக்கு, நண்பர்களுடன், செல்லவேண்டிய வந்தது. யாழ் இந்துவில் சேர்ந்து படித்த மாணவனின் மச்சான்.

அவரது தந்தைக்காக காத்திருந்தார்கள். நிறை மப்பில் வந்தார்.

வந்தவர், பெட்டியை ஓங்கி தட்டினார், 'எனக்கு தெரியுமாடா நீ சாவாய் என்று' என்று சொல்லி மீண்டும் தட்டினார்.

பின்னர் தேம்பி, தேம்பி அழத்தொடங்கி விட்டார். எப்படி அவருக்கு தெரிந்தது என்பதை விட, போன எனது நண்பர்கள் குலாமுக்கு சிரிப்பும், சிரிக்க முடியாத நிலைமையும்.

குருநகர் எனும்போது இதுவே நினைவுக்கு வரும். 🤗

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

கபிதன் ஏன் சாமி இந்த கொலவெறி,

மனச தொட்டு சொல்லுங்க நீங்க சொல்றமாதிரி எல்லாம் நினைச்சுக்கொண்டா இந்த கருத்தை எழுதியிருப்பேன்? மேலே நிழலி சொன்னத பாருங்க அதுதான் விசயம். கண்டதும் கேட்டதுமே ஆதாரம். மற்றும்படி கண்டபடி நினைச்சுக்கொண்டு எதுவும் எழுதல்ல.

பொத்தாம் பொதுவாக குறிப்பிட்ட ஊரின் பெயர்களைச் சொல்லுவது பண்பான செயல் அல்ல.  ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சண்டியர் இருப்பது வழமை. அதற்காக ஊரை குறிப்பிட்டுக் கூறுவது ஏற்புடைமை அல்ல. 

ஊர் என்று குறிப்பிடுவது உண்மையில் அவ்வூர் சார்ந்த சாதியினரையும் அவர் சார்ந்த சமயத்தையும் இழிவு படுத்துவதற்காகவே. 

இது எல்லோருக்குமே தெரிந்த விடயம். 

அண்மையில் யாழ் நகரின் முன்ணணிக் கல்லூரி ஒன்றின் மூத்த ஆசிரியை ஒருவரிடம் கதைக்கும்போது அவர் தான் St. John's, Chundikuli Girls Collegeற்கு அப்பால் போவதற்கு சரியான பயம் என்றார். ஏன் பயம் ? அந்தப் பக்கம் போயிருக்கிறீர்களா என்றபோது, இல்லை, தான் அந்தப்பக்கம் போனதேயில்லை  என்றார். அப்படியென்றால் ஏன் பயப்படுகிறீர்கள் என்றபோது பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறினார். 

உண்மையில் எம்மில் மிகப் பெரும்பாலானோர் கேள்விச் செவியர் மட்டுமே.

ஊரைக் கெடுத்துக்கொண்டேயிருக்கின்றனர். 

☹️

(வல்லவன், உங்களைக் குறிப்பிட்டு இதனை எழுதவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

2 வருட பழிக்குப்பழி மோதல் இரத்த சரித்திரம்: ஏமாற்றி அழைத்து வெட்டிக்கொலை; குருநகர் இளைஞன் கொலையின் பின்னணி!

யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞனை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தி, கொலை செய்த கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த கும்பலின் உறுப்பினர்கள் குடும்பங்களுடன் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

குருநகர் கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவை சுகவாழ்வு சிகிச்சை நிலையத்திற்கு அண்மையாக கடந்த 22ஆம் திகதி மாலை 4 மணியளவில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 5 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23ஆம் திகதி இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

குருநகரை சேர்ந்த எட்மன்ட் ஜெரன்ஸ் (24) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

கெமி ரௌடிக்குழுவின் கொடூரம்

இந்த வாள்வெட்டு தாக்குதல், உயிரிழந்த ஜெரன்ஸை குறிவைத்தே நடத்தப்பட்ட, திட்டமிட்ட தாக்குதல். அவர் ஏமாற்றி அழைக்கப்பட்டு, அங்கு தாக்கப்பட்டுள்ளார். அங்கு தாக்குதல் நடத்த வந்த கும்பலை சேர்ந்த அத்தனை ரௌடிகளும் அவரை வாளால் வெட்டியதாக தெரிய வருகிறது.

வெட்டுக்காயத்துடன் வீழ்ந்த அவரின், தலை முதல் பாதம் வரை வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன.

பாசையூரை சேர்ந்த கெமி என்ற ரௌடிக்குழுவே இந்த குற்றச்செயலில் தொடர்புபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பொலிசாரிற்கு கிடைத்த தகவல், சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக கெமி குழுவினர் தலைமறைவாகி விட்டனர்.

வாள்வெட்டுக் குழுக்களால் ஒரு மனிதக்கொலை… அதுவும் ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்டது, பொலிசாரையும், நாட்டின் சட்ட அமைப்பையும் சவால் செய்யும் நடவடிக்கையாகும். இதனால், பொலிசாருக்கும் இந்த சம்பவம் சவாலாக அமைந்துள்ளது. ரௌடிக்குழுவை தேடி பல குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

WhatsApp-Image-2021-08-24-at-17.33.01.jp உயிரிழந்த எட்மண்ட் ஜெரன்ஸ்

நடந்தது என்ன?

குருநகர்- பாசையூரை சேர்ந்த சில இளைஞர்கள், மனநலம் பிறழ்ந்தவர்களை போல கடந்த சில வருடங்களாகவே செயற்பட்டு மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என செயற்பட்டு, சமூக விரோத குழு கலாச்சாரத்திற்கு அங்கு தொடர்ந்து நீரூற்றப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சிதான் இந்த சம்பவமும்.

22ஆம் திகதி நாடு முழுவதும் முடங்கியிருக்க கெமி ரௌடிக்குழு மட்டும் அன்று காலையிலிருந்து, தாக்குதல் நடந்த பகுதிகளையண்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அன்று மாலை, குருநகரிலிருந்த இளைஞன் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், உயிரிழந்த ஜெரன்ஸின் நெருங்கிய நண்பர். இருவரின் நட்பும், கெமி ரௌடிகளிற்கும் தெரியும்.

அந்த இளைஞனை பிடித்து தாக்கி, அவரது கையடக்க தொலைபேசியில் இருந்து ஜெரன்ஸிற்கு தகவல் வழங்கியுள்ளனர். தன்னை தாக்கிவிட்டு குழுவொன்று சென்றுள்ளதாகவும், தன்னை வந்து மீட்டு செல்லுமாறும் ஜெரன்ஸிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தனது நண்பர் தாக்கப்பட்டு, வீதியில் இருப்பதாக தகவல் கிடைத்தபோது, இரண்டு நண்பர்களுடன் இருந்த ஜெரன்ஸ், உடனே புறப்பட்டுள்ளார். தனது நண்பர் வீதியோரம் இருப்பதாக நினைத்து, ஜெரன்ஸூம் நண்பர்களும் சென்றனர். மோதல் ஒன்று நடக்குமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதற்கு தயாராகவும் செல்லவில்லை.

நண்பர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு சிறிது தூரம் முன்னதாகவே- குருநகர் திருச்சிலுவை சுகநக நிலையத்தின் அருகில்- ஜெரன்ஸ் மற்றும் நண்பர்கள் மீது கெமி குழு ரௌடிகள் எதிர்பாராத விதமாக வாள்வெட்டு நடத்தியுள்ளனர்.

இந்த குற்றச்செயலிற்காக சுமார் 20 பேர் வரையான கெமி குழு ரௌடிகள் வந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் பலர் ஜெரன்ஸை வெட்டினர். குறிப்பாக அவரது கால்களில் வெட்டு விழுந்தது.

ஏன் ஜெரன்ஸ் குறி வைக்கப்பட்டார்?

இதற்கு 2,3 வருடங்கள் முற்பட்ட பிளாஷ்பேக் கதையொன்றுள்ளது.

2 அல்லது 3 வருடங்களின் முன் நத்தார் பண்டிகை சமயத்தில் யாழ்  மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையாக இரண்டு தரப்பிற்கிடையில் அடிதடி மோதல் நடந்தது.

கெமி குழுவினர் அட்டகாசம் செய்தபோது, ஜெரன்ஸனும் சிலரம் அவர்களை தாக்கியுள்ளனர். முக்கியமாக அந்த குழுவின் தலைவனான கெமியை, ஜெரன்ஸ் தாக்கியுள்ளார். இதுதான், இந்த கொலைச்சம்வத்தின் மூலக்கதை.

அன்று தொடக்கம் ஜெரன்ஸை பழிவாங்கும் இரத்த வெறி. கெமி குழுவிடம் இருந்துள்ளது. ஆனால், அதை சாதாரணமாக நிறைவேற்ற முடியவில்லை.

அதற்கு முக்கிய காரணம் ஜெரன்ஸின் எச்சரிக்கை. பேருந்து நிலைய சம்பவத்தின் பின், ஜெரன்ஸ் மீது வாள்வெட்டு தாக்குதலை- சுமார் 4 தடவைகள் வரை- கெமி குழு மேற்கொண்டுள்ளது. ஆனால் ஜெரன்ஸ் வில்லங்கமாக சிக்கவில்லை. அவர் வேகமாக தப்பிச் செல்லக்ககூடியவர்

ஜெரன்ஸிற்கு, கெமி குழு பல பொறிகளை வைத்தது. எனினும் ஜெரன்ஸ் சிக்கவில்லை. இரண்டு, மூன்று வருட  வன்மம் கெமி குழுவின் மனதில் இருந்துள்ளது.

இதனால்தான், 22ஆம் திகதி பொறி வைத்து ஜெரன்ஸை பிடித்தபோது, அவரது கால்களை குறிவைத்து வெட்டி வீழ்த்திள்ளனர்.

WhatsApp-Image-2021-08-24-at-17.33.02.jp உயிரிழந்த எட்மண்ட் ஜெரன்ஸ்

ஜெரன்ஸ் மீது ஏராளமானவர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்று வாள்வெட்டுக்கு சென்றவர்கள் அனைவரும் ஜெரன்ஸை வெட்டியுள்ளனர்.

தலைமறைவு

அன்றைய குற்றச்சம்பவத்தை கெமி குழுவே நடத்தியதாக நம்பப்படுகிறது.

தற்போது கெமி குழு தலைமறைவாகி விட்டது. சம்பவத்தை தொடர்ந்து ரௌடிகளின் வீடுகளிற்கு பொலிசார் சென்றபோது, ஈ காக்காய் கூட வீட்டிலிருக்கவில்லை. அனைவரும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். சிலரது வயோதிப பெற்றோர் மாத்திரம் வீடுகளில் உள்ளனர்.

இது மிகப்பாரதூரமான குற்றச்சம்பவம். பொலிசார் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் மனைவிமார் தங்கியிருந்தால், அவர்களை பொலிசார் கடுமையாக விசாரணைக்குட்படுத்துவார்கள், சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதற்காகவே மனைவி, பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ரௌடிகள் தலைமறைவாகிள்ளனர் என விசாரணையுடன் தொடர்புடைய ஒரு பொலிஸ் அதிகாரி தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த போது நாடு முழுவதும் முடக்கத்தில் இருந்தது. அதற்குள் வாள்வெட்டு குற்றச்செயலில் ஈடுபட்டு, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ரௌடிகள் எங்கே தப்பிச்சென்றிருக்க முடியும் என்ற கேள்வி உங்களிற்கு எழலாம்.

தொடர்ந்த இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் கடல்வழியாகவே தப்பிச் சென்று வருகிறார்கள். குருநகரிற்கும், பூநகரிக்கும் இடையிலான குறுகிய குடாக்கடலை படகில் கடந்து, பரந்த வன்னிப் பகுதிக்குள் ரௌடிகள் குடும்பங்களுடன் தலைமறைவாகி விட்டனர் என கருதப்படுகிறது.

தேடப்படும் ரௌடிகளில் பலர் சட்டவிரோதமான பணமீட்டும் வர்த்தக நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பாதுகாப்பான பின்தளமாக வன்னிப்பகுதியில் மறைவிடங்களை ஏற்படுத்தி வைத்திருக்கலாம் என்றும், அந்த இடங்களிலேயே தற்போது குடும்பங்களுடன் பதுங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

பொலிசாருக்கு மேலதிகமாக புலனாய்வு அமைப்புக்களும் களமிறக்கப்பட்டுள்ளதால் ரௌடிகள் விரைவில் சிக்குவார்கள் என்பது நிச்சயம். அவர்கள் சிக்கும் பட்சத்தில், சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைக்கு பின்தளமாக இருந்த இடங்களும் அம்பலமாகும்.

குருநகரிற்கும் பூநகரிக்கும் இடைப்பட்ட சிறிய நிலப்பகுதியான மண்ணித்தலை பகுதியை, யாழில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாக இருக்க பயன்படுத்துவதாக தகவலுண்டு. கெமி குழுவினரும் அங்கு தலைமறைவானார்களா என பொலிசார் ஆய்வு செய்தனர். எனினும், யாரும் சிக்கவில்லை. பொலிசார் வருவதை அறிந்து முன்னரே தப்பிச் சென்றனரா என்பது இதுவரை தெரியவரவில்லை.

kkemi.png தேடப்படும் கெமி குழுவினர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கோப்பு படம்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட யாரும் நீண்டகாலமாக தப்பி வாழ முடியாது என்பது, குற்றவியல் வழக்கு வரலாறு. நவீன தொழில்நுட்பங்கள், தலைமறைவாக செல்லும் ஒவ்வொருவரின் காலடித் தடங்களையும் அறிந்தே வைத்திருக்கும். இந்த யதார்த்தத்தன்அடிப்படையிலும், பொலிஸ் குழுக்கள் பல களமிறக்கப்பட்டுள்ளமையின் அடிப்படையிலும், குற்றவாளிகள் சில நாட்களில் சிக்குவார்கள் என நம்பலாம்.

இந்த வன்முறை, வாள்வெட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மக்களின் அமைதியான அன்றாட வாழ்விற்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளனர். இந்த குழுக்களே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. எனினும், இந்த குழுக்கள் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை. தீவிரவாதம், மத தீவிரவாதம் தொடர்பான புதிய ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் இணைக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடையவர்கள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படுவதை போல, இந்த குழுக்களும் முழுமையாக கைது செய்யப்பட்டு, புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டு, அவர்களையும் நல்வழிப்படுத்தி, சமூகத்தின் அமைதியான வாழ்விற்கும் பொறுப்பான தரப்பினர் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

https://pagetamil.com/2021/08/25/2-வருட-பழிக்குப்பழி-மோதல்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

இதற்கு 2,3 வருடங்கள் முற்பட்ட பிளாஷ்பேக் கதையொன்றுள்ளது.

திரைப்பட கதை மாதிரியே இருக்கின்றது.....ஆனாலும் இயக்கங்கள் வர முதல் இது சர்வ சாதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

Page Tamil… 🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் அண்ணை மன்னிச்சு, இப்பத்தையான் செய்திகளை நம்பி கருத்து எழுத முடியாது போல.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட குருநகர் இளைஞனை புறுாஸ்லீ போல் சித்தரித்து நடந்த மரணச்சடங்கு!! பெருமளவானோர் கலந்த காட்சிகள்!! (Video)

யாழ்ப்பாணம், குருநகரில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பெருமளவானவர்கள் ஊர்வலமாக சென்று இறுதிக்கிரியைகள் நடந்தன. பாடை கட்டி, நிலப்பாவாடை விரிக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. உயிரிழந்த இளைஞனை தற்காப்பு கலை மன்னன் புரூஸ்லியாக சித்தரிக்கும் சுவரொட்டிகள் குருநகரின் அனேக பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

 

குருநகர் திருச்சிலுவை சுகநல நிலையத்திற்கு அண்மையில் கடந்த 22ஆம் திகதி நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் எட்மண்ட் ஜெரன்ஸ் (24) என்ற இளைஞன் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் 24ஆம் திகதி உயிரிழந்தார்.

குருநகர்- பாஷையூர் குழுக்களிற்கிடையிலான “வரலாற்று சிறப்பு“ வாய்ந்த நீண்டகால மோதலின் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்தது. பாசையூரை சேர்ந்த கெமி குழு என்ற குற்றக்கும்பலினால் திட்டமிட்டு இந்த கொலை நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பிசிஆர் பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நேற்று முன்தினம் சடலம் தகனம் செய்யப்பட்டது.

இளைஞனின் அஸ்தி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரிகைகள் செய்யப்பட்டது.

 

https://vampan.net/32278/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.