Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

ஏனப்பா ஒரு ஆஸுபத்திரிக்கா இவ்வளவு சண்டை.

அண்ணைக்கு ஒரு ஆஸ்பத்திரி மண்டைதீவிலை

மிச்ச ஆட்களுக்கு யாழ் நகர் மத்தியிலே,

வேற ஆட்களுக்கு எங்கை வேணுமோ கட்டுங்க.

🤣🤣🤣

அப்படியே மண்டைதீவில கட்டிற ஆஸ்பத்திரிக்கு என்ன பெயர் அங்கே போக என்ன பஸ் எடுக்கணும் என்றும் சொல்லிவிட்டு போனீர்கள் என்றால் கனக்க பிரச்சினைகள் முடிவுக்கு வரும் சகோ.😜

  • Replies 145
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை, மாலைதீவில் உலகப்புகழ் மிக்க, கடலடி கோட்டல்கள், அற்புதமான கடல் நடுவேயான ஏழு நட்சத்திர விடுதிகள், தேனிலவு விடுதிகள் அமைந்தது, மிக அண்மையில்.

கடலில் மூழ்கும், கத்தரிக்காய் என்ற நாளைய பிரச்சணை அவர்களது இன்றைய வாழ்வை ஏழ்மையில் இருக்க கூடாது என்பதில் தீர்கமாக இருக்கிறார்கள்.

பிரச்சணைகள் வரும் போது எதிர்கொள்ளவேண்டுமே அன்றி, வரப்போகுது என்று , முகட்டைப் பார்த்து முழுசிக் கொண்டு இருக்கலாகாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

7 minutes ago, விசுகு said:

அப்படியே மண்டைதீவில கட்டிற ஆஸ்பத்திரிக்கு என்ன பெயர் அங்கே போக என்ன பஸ் எடுக்கணும் என்றும் சொல்லிவிட்டு போனீர்கள் என்றால் கனக்க பிரச்சினைகள் முடிவுக்கு வரும் சகோ.😜

முதல்வன் நிணைவார்த்த பெரியாஸ்பத்திரி. (முப்பது வருசத்துக்கு பிறகு தானே) 😂

பஸ நம்பர்;   இங்க எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பேரில பஸ் கம்பனி பேர் வைக்கலாம்.....  ஆனா.... கோவிச்சுக்குவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முதல்வன் said:

ஏனப்பா ஒரு ஆஸுபத்திரிக்கா இவ்வளவு சண்டை.

அண்ணைக்கு ஒரு ஆஸ்பத்திரி மண்டைதீவிலை

மிச்ச ஆட்களுக்கு யாழ் நகர் மத்தியிலே,

வேற ஆட்களுக்கு எங்கை வேணுமோ கட்டுங்க.

🤣🤣🤣

🤣🤣🤣

எனக்கு மேல் தட்டில air ambulance இறக்கிறமாரி வசதியோட பிளீஸ்🤣

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சு பக்கத்த கடந்திருக்கு பொறுத்திருந்து பார்க்கிறோம் என்ன நடக்கிறது என 

  • கருத்துக்கள உறவுகள்+

54 minutes ago, goshan_che said:

லண்டனில் ரெஜி வந்த புதிதில், ஒரு கூட்டத்தில் ஒரு நகல் காட்டினார். இப்போ பதிவு இருக்குமா? @நன்னிச் சோழன் தேடிப்பார்க்கவும். 

அதில் ஒரு குறிப்பிட்ட திட்டம் முறிகண்டியை மையமாவைத்து - அற்புதமான திட்டம். கட்டாயம் உங்களையும் அணுகி இருப்பார்கள் என நினகிறேன்.

அந்த பச்சை மட்டை கட்டுப் புத்தகமோ? அதான் நான் வைத்திருக்கிறேன்!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

சரி இண்டயான் வேலை முடிஞ்சார்.... பம்பல் தானே.

பொது விடயமா விவாதித்த அணைவருக்கும் நன்றி. நான் கிளம்பத்தான்.... 🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அப்படியே மண்டைதீவில கட்டிற ஆஸ்பத்திரிக்கு என்ன பெயர் அங்கே போக என்ன பஸ் எடுக்கணும்

பேராசிரியர் துரைராஜா போன்ற உலக பிரசித்தமான யாழ் மைந்தர்களான கட்டுமான வல்லுனர்களின் பெயரைத்தான் முதலில் யோசித்தேன். 

ஆனால்,

இந்த மண்டைதீவு ஐடியா ஆரின் மண்டையில் உதித்ததோ அவரின் பெயரை வைப்பதுதான் அந்த முன்னோடிக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

வேலணையில் இருந்து எண்டால் பஸ் எடுக்க தேவையில்லை. உங்கட பிரதேச செயலக வாசலில் அந்த மாடு படுக்கிற இடம் இருக்கெல்லோ…அவடத்த இருந்து ஒரு நிலக்கீழ் ரயில் ஓடும். 

புங்குடுதீவு-வேலணை வாறதுக்கு, குறிகட்டுவான்-வேலணை-நாரந்தனை-ஊர்காவற்றுறை மொனோ ரயில் (நீல லைன்) எடுக்கோணும். 

காரில் போனால், மண்டைதீவு முடக்கில, அந்த நேவி போஸ்ட்டோட ஒரு வைரவ சூலம் இருக்கெல்லோ, அதில ஒரு 30 மாடி park and ride வசதி உண்டு. காரை விட்டுட்டு, ac shuttle எடுத்தால் நேரே ஆஸ்பத்திரி.

6 minutes ago, நன்னிச் சோழன் said:

அந்த பச்சை மட்டை கட்டுப் புத்தகமோ? அதான் நான் வைத்திருக்கிறேன்!

அப்படித்தான் நியாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, goshan_che said:

அப்படித்தான் நியாபகம். 

May be an image of book and text that says "தமிழீழ உட்கட்டுமானம் STRUCTURES OF TAMIL EELAM தமிழ்ழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் TAMIL CELAM ECONOMIC DEVELOPMENT ORGANISATION"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அஞ்சு பக்கத்த கடந்திருக்கு பொறுத்திருந்து பார்க்கிறோம் என்ன நடக்கிறது என 

🥳

ஒரு பதில் கருத்தும் வராது என்று நினைத்திருந்தேன்😂

அதுசரி, ஐந்திறன் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

 சென்ற கிழமையில் 127 பில்லியன் ரூபாய்கள், டாலர் விலையேற்றத்தை ஈடு செய்வதற்கு மத்திய வங்கியால்   அச்சடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை வரலாறு காணாத பங்கு  சந்தை ஏற்றம் என்ற திரியில் சொல்லி இருந்தேன். இதுவே, முக்கிய காரணம்,பங்கு  சந்தை எகிறியதற்கு.

எதுக்கும் கோத்த, தன்னுடைய பேரப்பிள்ளைள்ளையுடன் கொஞ்சி குலாவுவதற்கு அமெரிக்கா செல்ல முதல், கேளுங்கள் இன்னொரு 127 பில்லியன் ஐ printy, printy செய்யும்படி, நாங்கள் ஆசுபத்திரி என்ன வடக்கை  தூக்கி  கிழக்கிலும், கிழக்கை தூக்கி வடக்கிலும் வைப்போம்.

வேண்டுமானால், கொழும்பை  தூக்கி மன்னாரிலும் ...

ஆ, மன்னிக்கவும் மனித மனக் குரங்கு, தீவு தாண்டி, மாவட்டம் தானி,   மாகாணம் தாண்டி, நல்ல  காலம் சமுத்திரத்துக்குள்  விழவில்லை.      

3 hours ago, valavan said:

அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

https://www.macrotrends.net/countries/LKA/sri-lanka/life-expectancy

1950 காலப்பகுதியில் இலங்கையினரின் சராசரி ஆயுட்காலம் 50-60 வயதுகள் என இந்த தரவு சொல்கின்றது.

நீங்கள் சொல்வதுபோல 85 வயதுவரை வாழ வரம் பெற்றவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக இருந்திருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, manimaran said:

https://www.macrotrends.net/countries/LKA/sri-lanka/life-expectancy

1950 காலப்பகுதியில் இலங்கையினரின் சராசரி ஆயுட்காலம் 50-60 வயதுகள் என இந்த தரவு சொல்கின்றது.

நீங்கள் சொல்வதுபோல 85 வயதுவரை வாழ வரம் பெற்றவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக இருந்திருக்கலாம்.....

இதைப் பற்றி பல தடவைகள் சிலருடன் புள்ளிவிபரமும் கொடுத்து உரையாடினாலும், இன்னும் இந்த முன்னோர் பல்லாண்டு காலம் வாழ்ந்தனர் என்ற  "மூட நம்பிக்கை" பொதுவாக இருக்கிறது!

முன்னோருக்கு இதய நோய் இருக்கவில்லை, நீரிழிவு இருக்கவில்லை, புற்று நோய் இருக்கவில்லை? எப்படி?

அந்த நோய்கள் இருக்கிறதா என்று யாரும் சோதித்துப் பார்க்கவில்லை - சோதித்துப் பார்க்க முதலே முன்னோர் காலி!

சனத்தொகைக் கணக்கெடுப்பே சரியாக எடுக்கப் படாத ஒரு ஆபிரிக்க நாட்டின் அதிபர், தன் நாட்டில் தன்னினச் சேர்க்கையாளர்களே இல்லை என்று சொன்ன பகிடி போலத் தான் இந்த நம்பிக்கையும்! 

உண்மையான தரவு: உலகம் பூராவும் ஆயுட்காலம் அதிவேகமாக வளர்ந்திருக்கிறது! :103_point_down:

A graph showing the increasing number of centenarians from 1950 to 2020

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நன்னிச் சோழன் said:

May be an image of book and text that says "தமிழீழ உட்கட்டுமானம் STRUCTURES OF TAMIL EELAM தமிழ்ழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் TAMIL CELAM ECONOMIC DEVELOPMENT ORGANISATION"

இதுதான்.

லிங்க் இங்கே. 

https://padippakam.com/padippakam/document/ltte/Book/book00001.pdf

பலாலி, திருகோணமலையில்தானாம் சர்வதேச விமானநிலையம்.

மண்டைதீவில் ஒரு இலகு விமானதளம் மற்றும் மீன் தூள் தொழிற்சாலை.

தொழிற்பேட்டைகள் எதுவும் தீவு பகுதியில் இல்லை.

வடக்கின் பெரும் நகர் மாங்குளம். ஆனால் காடழிப்பால் முறிகண்டி இரெண்டாம் தெரிவு. 

நான் எனது மனதில் பட்டதைதான் எழுதினேன். 

ஆனால் யாழ்பாணத்தை இரு மாநிலங்களான பிரித்து வளங்களை decentralize பண்ணுகிறது இந்த வரைவு.

நல்லூர் மாநிலத்தின் புள்ளி யாழ்பாணம்.

வரணி மாநிலத்தின் புள்ளி கொடிகாமம்.

சொல்ல முடியாது, தலைவருக்கு படை நடத்துவதிலேயே பாடம் எடுத்தவர்கள், இதையும் தவறென்று சொல்ல கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kadancha said:

நாங்கள் ஆசுபத்திரி என்ன வடக்கை  தூக்கி  கிழக்கிலும், கிழக்கை தூக்கி வடக்கிலும் வைப்போம்.

வேண்டுமானால், கொழும்பை  தூக்கி மன்னாரிலும் ..

நெடுத்தீவில இராவணன் பாதம் எண்டு ஒரு கல்லு இருக்கு தெரியுமா? அதில இருந்து பழைய வெளிச்ச கோபுரம் நோக்கி போகும் வழியில் எனக்கு ஒரு பெரிய உப்புகாடு இருக்கு. கோவேறு கழுதையள் எல்லாம் கோடைகாலம் தண்ணி இல்லாமல் செத்து விழும்.

அதை ஒருக்கா அப்படியே அலேக்கா தூக்கி கொழும்பு 7 இல வைக்க எவ்வளவு செலவாகும்🤣

32 minutes ago, கிருபன் said:

அதுசரி, ஐந்திறன் என்றால் என்ன?

ஒரு மட்டமான பகற்கனவை பற்றி கதைத்து ஐந்து பக்கத்தை வீணடிக்கும் கூட்டுத்திறமை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

நெடுத்தீவில இராவணன் பாதம் எண்டு ஒரு கல்லு இருக்கு தெரியுமா? அதில இருந்து பழைய வெளிச்ச கோபுரம் நோக்கி போகும் வழியில் எனக்கு ஒரு பெரிய உப்புகாடு இருக்கு. கோவேறு கழுதையள் எல்லாம் கோடைகாலம் தண்ணி இல்லாமல் செத்து விழும்.

https://www.google.co.uk/maps/place/Delft,+Sri+Lanka/@9.5083291,79.6912442,5582m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3afe39033993c9a1:0x5e49924e676d2759!8m2!3d9.5173265!4d79.7004236!5m2!1e2!1e4

நான் ஒரு போதும் நினைக்கவில்லை நெடுந்தீவு இவ்வளவு barren ( 80% மிகை இல்லை ன்று நினைக்கிறேன்) ஆக இருக்கும் என்று.

இராவணன் பாதம் எண்டு ஒரு கல்லு இருக்கு - queens tower இல் இருந்து எந்த திசையில்?

உங்களின் உப்புகாடு காணி, queens tower இல் இருந்து எந்த திசையில்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பஸ நம்பர்;   இங்க எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பேரில பஸ் கம்பனி பேர் வைக்கலாம்.....  ஆனா.... கோவிச்சுக்குவார்.

பெயரை வைக்காமல் விட்டால் மட்டும் தேனும் பாலும் ஓடுதாக்கும்???😂

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

இதைப் பற்றி பல தடவைகள் சிலருடன் புள்ளிவிபரமும் கொடுத்து உரையாடினாலும், இன்னும் இந்த முன்னோர் பல்லாண்டு காலம் வாழ்ந்தனர் என்ற  "மூட நம்பிக்கை" பொதுவாக இருக்கிறது!

முன்னோருக்கு இதய நோய் இருக்கவில்லை, நீரிழிவு இருக்கவில்லை, புற்று நோய் இருக்கவில்லை? எப்படி?

அந்த நோய்கள் இருக்கிறதா என்று யாரும் சோதித்துப் பார்க்கவில்லை - சோதித்துப் பார்க்க முதலே முன்னோர் காலி!

சனத்தொகைக் கணக்கெடுப்பே சரியாக எடுக்கப் படாத ஒரு ஆபிரிக்க நாட்டின் அதிபர், தன் நாட்டில் தன்னினச் சேர்க்கையாளர்களே இல்லை என்று சொன்ன பகிடி போலத் தான் இந்த நம்பிக்கையும்! 

உண்மையான தரவு: உலகம் பூராவும் ஆயுட்காலம் அதிவேகமாக வளர்ந்திருக்கிறது! :103_point_down:

A graph showing the increasing number of centenarians from 1950 to 2020

நான் ஊருக்கு போயிருந்த போது என் பால்ய நண்பர்கள் சிலரைக்கண்டேன்.

ஊரில் இருந்தவர் தலைமுடி இழந்து தோல்கள் காய்வடைந்து பற்கள் இல்லாமல் கொஞ்சம் கூனி காணப்பட்டார்.

கொழும்பில் இருந்தவர்களில் பெரிதாக மாற்றம் தெரியவில்லை. 

அங்கேயே வித்தியாசம் இருப்பது தெரிந்தது

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

பெயரை வைக்காமல் விட்டால் மட்டும் தேனும் பாலும் ஓடுதாக்கும்???😂

அண்ணை உதைவிடுங்கோ. மேல கொடுத்த வரைவு சொல்றது பிழையில்லைதானே? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அண்ணை உதைவிடுங்கோ. மேல கொடுத்த வரைவு சொல்றது பிழையில்லைதானே? 

இல்லை

இருக்காது

ஏனெனில் அது மண்ணை நேசிப்பவர்களின் பல கால முயற்சியில் வந்தவை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

நான் ஊருக்கு போயிருந்த போது என் பால்ய நண்பர்கள் சிலரைக்கண்டேன்.

ஊரில் இருந்தவர் தலைமுடி இழந்து தோல்கள் காய்வடைந்து பற்கள் இல்லாமல் கொஞ்சம் கூனி காணப்பட்டார்.

கொழும்பில் இருந்தவர்களில் பெரிதாக மாற்றம் தெரியவில்லை. 

அங்கேயே வித்தியாசம் இருப்பது தெரிந்தது

நிச்சயமாக:  யுத்தம் முடிந்த பின்னர் 2011-13  கணக்கெடுப்பின் படி, எதிர்வு கூறப்படும் வாழ்வு காலம் (ஆண்களில்):

கொழும்பில் 73 வயது. யாழில் ~70 வயது, முல்லைத்தீவில் வெறும் ~ 60 வயது.

யுத்தத்தின் வடுக்கள், பொருளாதார விளைவுகள் இன்னும் ஒரு 10 வருடம் வரை எங்களோடிருக்கும் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

https://www.google.co.uk/maps/place/Delft,+Sri+Lanka/@9.5083291,79.6912442,5582m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3afe39033993c9a1:0x5e49924e676d2759!8m2!3d9.5173265!4d79.7004236!5m2!1e2!1e4

நான் ஒரு போதும் நினைக்கவில்லை நெடுந்தீவு இவ்வளவு barren ( 80% மிகை இல்லை ன்று நினைக்கிறேன்) ஆக இருக்கும் என்று.

இராவணன் பாதம் எண்டு ஒரு கல்லு இருக்கு - queens tower இல் இருந்து எந்த திசையில்?

உங்களின் உப்புகாடு காணி, queens tower இல் இருந்து எந்த திசையில்?

கேள்வி கேட்பதை பார்த்தால் உண்மையிலே காணியை தூக்குவியள் போல🤣.

5 தலைமுறைக்கு முன் எனக்கு அங்கே, ஒரு வழியில் அடி இருக்கிறது, ஆனால் எனக்கு நெடுந்தீவில் காணி இல்லை. சொந்தங்களும் இல்லை.

ஆனால் இரெண்டு தடவை போயுள்ளேன். ஒரு கல்லில் பெரிய இராட்சத பாத அடையாளம் ஒன்று உண்டு. அதை இராவணின் பாத அடையாளம் என்பார்கள்.

மேப்பில் இரெண்டு குளங்கள் போல காட்டுமே - அதில் ஒன்றுக்கு அருகில், நன்னீர் குடி நீர் திட்டம் ஒன்று உள்ளது - அதில் இருந்து ராணி கோபுரம் போகும் வழியில் இந்த பாறை உள்ளது. (நீங்கள் காட்டிய இடம் அல்ல).

நீங்கள் சொல்வது போல் barren landscape தான். கிழக்கு, மேற்கு குடிமனைகள் உள்ள இடங்கள் பரவாயில்லை.

ஆனால் அதிலும் ஒரு அழகு உள்ளது. எனக்கு இலங்கையில் பிடித்த இடங்களில் ஒன்று. தாமே வளரும் முருகைபாறை சுவர்கள், கட்டாகாலி கழுதைகள், குதிரைகள், கோவேறு கழுதைகள். 

வீதி என்பது ஒரு பெயருக்குதான். அதுவும் கொஞ்சம்தான், சன அடர்த்தி உள்ள இடத்தில். தீவின் மத்தியில் வெறும் வழித்தடங்கள்தான். ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு போனால் கெளபாய் போல இந்த விலங்கினங்களை துரத்தலாம்.

சிதிலமைடந்த கோட்டைகள், ஒரு தீவுபகுதிக்குரிய சிக்கன வாழ்வு, என பார்க்க பல விடயங்கள் உண்டு. 

போகும் போது கமெராவோ, போனோ இல்லை. வெறும் நினைவுகள் மட்டும்தான். 

9 minutes ago, Kadancha said:

  • கருத்துக்கள உறவுகள்

https://www.disabled-world.com/calculators-charts/life-expectancy-statistics.php

இங்கே நாடுகள் வாரியாக மக்களின் ஆயுட்காலம் தந்திருக்கிறார்கள், இலங்கையும் உள்ளது  ஆனால் அதிலுள்ளபடியன்றி சராசரி ஆயுட்காலத்தை நெருங்கும் முன்னரே இறந்து போகிறவர்கள்தான் அதிகம்.

1800 களில் பிறந்தவர்களின்  மனிதர்களின் ஆயுட்காலத்திற்கு உறுதியான தரவுகள் இல்லை என்கிறார்கள் , பெரும்பாலும் மூதாதையரின் செவிவழி கதைகளையே கேட்டறிந்துள்ளோம். அதையே நானும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

மேலே மணிமாறனும் ஜஸ்டினும் பதிவு செய்த தகவல்கள் தவறென்று மறுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, 

அதேநேரம் தரவுகளினடிப்படையில் மனிதனின் ஆயுள்காலத்தை உறுதியாக கூற முடியாதென்றும் நினைக்கிறேன்.

சுத்தமான குடிநீர்,மருத்துவம்,ஆரோக்கியமான உணவு தொற்றுநோய்கள் அரச நிர்வாகம் உள்நாட்டு கலவரங்கள், போர், பஞ்சம் என்பன ஒவ்வொரு காலபகுதியிலும் சராசரி மனிதனின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

நான் ஊருக்கு போயிருந்த போது என் பால்ய நண்பர்கள் சிலரைக்கண்டேன்.

ஊரில் இருந்தவர் தலைமுடி இழந்து தோல்கள் காய்வடைந்து பற்கள் இல்லாமல் கொஞ்சம் கூனி காணப்பட்டார்.

கொழும்பில் இருந்தவர்களில் பெரிதாக மாற்றம் தெரியவில்லை. 

அங்கேயே வித்தியாசம் இருப்பது தெரிந்தது

இது சரிதான். எனது லண்டன் தோழர்கள் எல்லாம் பொடியன் பார்ட் இப்பவும் (வருத்தங்கள் வர தொடங்கி விட்டாலும்).  ஊரில் இருப்பவர்கள் “அங்கிள்” ஆகி விட்டார்கள்🙁. கொழும்பில் கூட.

18 minutes ago, Justin said:

நிச்சயமாக:  யுத்தம் முடிந்த பின்னர் 2011-13  கணக்கெடுப்பின் படி, எதிர்வு கூறப்படும் வாழ்வு காலம் (ஆண்களில்):

கொழும்பில் 73 வயது. யாழில் ~70 வயது, முல்லைத்தீவில் வெறும் ~ 60 வயது.

யுத்தத்தின் வடுக்கள், பொருளாதார விளைவுகள் இன்னும் ஒரு 10 வருடம் வரை எங்களோடிருக்கும் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, valavan said:

https://www.disabled-world.com/calculators-charts/life-expectancy-statistics.php

இங்கே நாடுகள் வாரியாக மக்களின் ஆயுட்காலம் தந்திருக்கிறார்கள், இலங்கையும் உள்ளது  ஆனால் அதிலுள்ளபடியன்றி சராசரி ஆயுட்காலத்தை நெருங்கும் முன்னரே இறந்து போகிறவர்கள்தான் அதிகம்.

1800 களில் பிறந்தவர்களின்  மனிதர்களின் ஆயுட்காலத்திற்கு உறுதியான தரவுகள் இல்லை என்கிறார்கள் , பெரும்பாலும் மூதாதையரின் செவிவழி கதைகளையே கேட்டறிந்துள்ளோம். அதையே நானும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

மேலே மணிமாறனும் ஜஸ்டினும் பதிவு செய்த தகவல்கள் தவறென்று மறுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, 

அதேநேரம் தரவுகளினடிப்படையில் மனிதனின் ஆயுள்காலத்தை உறுதியாக கூற முடியாதென்றும் நினைக்கிறேன்.

சுத்தமான குடிநீர்,மருத்துவம்,ஆரோக்கியமான உணவு தொற்றுநோய்கள் அரச நிர்வாகம் உள்நாட்டு கலவரங்கள், போர், பஞ்சம் என்பன ஒவ்வொரு காலபகுதியிலும் சராசரி மனிதனின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன்.

ஜஸ்டீன் அண்ணா, மணிமாறன் சொல்வதோடு முரண்பட முடியாது. சராசரி ஆயுள் இப்போ கூட என்பது மறுக்க முடியாது.

நான் இப்படி நினைகிறேன். ஊகம்தான்.

முன்பு நோய்வாய்பட்டவர்கள் இறக்க, இருப்பவர்கள் சுகதேகிகளாக நீண்டகாலம் இருந்தார்கள்.

இப்போ பரவலாக பலரும் நீண்ட காலம் வாழ்கிறார்கள் ஆனால் எல்லாருக்கும் வருத்தம்?

எனது பூட்டி (96), அம்மப்பா (86), அம்மம்மா (93), அப்பம்மா (85) - அவர்களின் கடைசி 3/4 வருடம் வரை எழுந்து நடமாடி அவரவர் காரியங்களை பார்த்தார்கள். 

ஆனால் அவர்களின் பிள்ளைகள் கனபேர் 75 தாண்டவில்லை. இருப்பவர்களும் அதிகம் நோய்வாய்பட்ட நிலையே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.