Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!!

சென்னை கே.கே.நகரில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36), அவருடைய மனைவி தவமணி (30) இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு தனம்(12) என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகே தவமணியின் பெற்றோர்களும் தங்கியிருந்தனர்.

தவமணிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் நேற்று தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந் நேரத்தில் வீட்டிலிருந்து தவமணியின் மூக்குத்தியை மாரிமுத்து அடகு வைத்து, அந்தப் பணத்தில் குடித்து விட்டு வந்துள்ளார்

மாரிமுத்துவின் இந்த செயலால் கோபமடைந்த தவமணி சண்டையிட்டார். நன்றாக குடித்திருந்த மாரிமுத்து தவமணியை அடித்து உதைத்தார். பின்னர் கழுத்தை நெரித்தார். தவமணி சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, கழுத்தை வெறியோடு கடித்துள்ளார். இதனால் தவமணி துடிதுடித்து இறந்தார்.

பின்னர் சுய நினைவுக்கு வந்த மாரிமுத்து கொலையை மறைக்கும் முயற்சியில் இறங்கினார். பிணத்தை எங்காவது புதைத்துவிட திட்டமிட்டு, அம்பத்தூரிலுள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்தார்.

அவர்களும் 10 பேருடன் ஒரு வேனில் வந்து பிணத்தை வெளியே எடுத்து சென்றனர். இதைப் பார்த்த தவமணியின் பெற்றோரும் மற்றவர்களும் பிணத்தை எடுத்து செல்ல விடாமல் தடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வருவதை அறிந்து மாரிமுத்துவின் உறவினர்கள் வேனில் தப்பிவிட்டனர்.

துணை கமிஷ்னர் மௌரியா தலைமையில் அங்கு வந்த போலீஸார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

- தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் குடி செய்யிற வேலை பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு சுண்டலின்ட செய்தி எல்லாத்தையும் தாங்கள் எடுத்து போடுகிற மாதிரி தெரியுது,உது சுண்டலின்ட செய்தி பிரிவு.

:P

இதே ஒரு பெண் அவர் கணவனை கடித்திருந்தால் இந்த பக்கம் 10 பக்கங்களாவது போயிருக்கும்...

இதே ஒரு பெண் அவர் கணவனை கடித்திருந்தால் இந்த பக்கம் 10 பக்கங்களாவது போயிருக்கும்...

இப்ப இந்தை 10 பக்கம் கொண்டு போக வேண்டும் அது தானே............இதற்கு போய் இப்படி எல்லாம் சொல்லி கொண்டு சரி நான் கொண்டு போகிறேன்............ :P :huh: :P

இந்தப்பெண்களும்.. குடிகாரன் குடித்திருக்கும் வேலையில் அவன் புத்தி சுவாதீனம் பலமற்று இருக்கும்.. அவன் மிருகத்தனமாக இருப்பான் என்றெல்லாம் தெரிந்தும்..

குடித்திருக்கும் போதுதான் சண்டைக்கு.. மல்லுக்கு நிற்பார்கள்...

ஏதோ என் பாட்டுக்கு எழுதிவிட்டேன்..ஜம்மு..ஜமாய்..

தூயாவுக்குஎந்த ஆணாலாப்பா இந்த எரிச்சலும் நமைச்சலும். :huh:

என்ன கொடுமையப்பா மனைவிக்கு மருந்துக்கு தந்தையிடம் பணம் வேண்ட வேண்டிய நிலை ஆனா அவருக்கு மனைவியின் மூக்குத்தியை விற்று குடிக்க வேண்டிய நிலை எந்த பெண்ணுக்குத்தான் கோபம் வராது. குடிகார ஆண்களை எந்த பெண்களுமே கல்யாணம் கட்டக்கூடாது அப்பத்தான் சரி :huh::lol:

ஏதோ என் பாட்டுக்கு எழுதிவிட்டேன்..ஜம்மு..ஜமாய்..

மாமோய் உது காணும் எனக்கு............ஆமாம் ஒரு மனிசன் சுய நினைவு இல்லாத நேரத்தில தனை அறியாம குற்றம் செய்தா...............செக்சன் 6521(உது சும்மா போட்டது) சொல்லுது அவன் நிரபாராதி என்று ஆகவே...........இந்த நபர் குற்றமற்றவர் என்பது என் வாதம்............ :P :huh: :P

வரட்டா......... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே ஒரு பெண் அவர் கணவனை கடித்திருந்தால் இந்த பக்கம் 10 பக்கங்களாவது போயிருக்கும்...

B) B) B) B) B) B) B)

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஒரு பெண் அவர் கணவனை கடித்திருந்தால் இந்த பக்கம் 10 பக்கங்களாவது போயிருக்கும்...

அதெல்லாம் அந்த மேட்டர் புதிசா இருந்த காலத்தில தான் அப்பிடி. இப்ப கணவனைப் பல காரணங்களுக்காக போட்டுத்தள்ளுவது சர்வ சாதாரணமான விஷயமாப் போச்சுப் பாருங்கோ! சிலது நியூஸிலயே வாறதில்லை!

அதெல்லாம் அந்த மேட்டர் புதிசா இருந்த காலத்தில தான் அப்பிடி. இப்ப கணவனைப் பல காரணங்களுக்காக போட்டுத்தள்ளுவது சர்வ சாதாரணமான விஷயமாப் போச்சுப் பாருங்கோ! சிலது நியூஸிலயே வாறதில்லை!

உண்மையாவோ..........கவனம் நீங்கல் என்னதிற்கும்............ :P :) :P

தூயா சொல்லுறது உண்மைதான்

பெண்பட்ட துன்பம் ஓர் ஆணுக்கு நடந்திருந்தால் ...மூக்கில வேர்கிறவர் முந்திக்கொண்டு வந்திருப்பார்

அப்ப நான் வரட்டா? (எல்லாம் ஜம்முவட தோஷம்தான்)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் கழுத்தைக் கடிக்கிற அளவுக்கு மனரீதியா இருக்கான் என்றால் அதற்கு.. அந்தப் பெண் அவனுக்கு எந்தளவு உபத்திரவங்களை கொடுத்திருப்பாள்.. என்பதையும் சிந்திக்கனும்..!

வெறுமனவே குடி வெறியை குடும்பப் பிரச்சனைகளை சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. பெண்களால் ஆண்கள் படும் அவஸ்தையும் கூட அவர்களை மனிதாபிமானம் அற்றவர்களாக்குகிறது.. இரக்கமற்றவர்களாக்குகிறது..!

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை இலகுவாக எடுக்கக் கூடாது உற்று நோக்க வேண்டியது அவசியம்..!

இப்ப எல்லாம் பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கிறதையே சுமை என்று நினைக்கிற காலம்.. அப்படி இருக்கேக்க கட்டின மனுசன் மாரை கப்பியா நடத்தினம் என்றதுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது..!

அப்படி இருக்கேக்க மனநிலை விரக்தியடையும் ஆண்கள் மனிதத் தன்மை இழப்பது ஆச்சரியமாத் தெரியல்ல.! அதுதான் இப்படிச் சம்பவங்கள் குறையாமல் பெருகிட்டு வருகுது. அன்பைப் பரிமாற வேண்டிய ஆணும் பெண்ணும் ஆளுக்கு ஆள் மல்லுக்கட்டுறன் என்று நின்றால்.. குடும்பம் என்ன மனித குலமே அவலத்தத்தைத்தான் சந்திக்கும்..! அதைத்தான் தரிசிக்கிறம்..!

இங்கிலாந்து எதிர்க்கட்சி கூட திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துபவர்கள் தான் குடும்பப் பிரிவினைகளின் மூலமாக உள்ளனர் என்று.. இப்ப திருமணம் செய்பவர்களுக்கு வரிச்சலுகை அளிக்க பிரேரித்திருக்கிறார். பணத்தைக் காட்டி ஆணையும் பெண்ணையும் ஒட்ட வைக்க முயல்கின்றனர்.. திருமணம் ஆகுதோ இல்லையோ அந்த மனங்கள் இணையாத மணங்கள் அர்த்தமற்றவை..!

மன இணைவு என்பது பிள்ளை குட்டி பெத்துக்கிறது என்றிருக்கிற அவசரம்.. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரியனும்.. அக்கறை செலுத்தனும் என்ற நிலையில் இல்லை. இன்று உலகம் ஒருத்தன் இல்லாட்டி இன்னொருத்தன் என்ற நிலைக்கு தறிகெட்டுப் போயிட்டு இருக்கு. பெண்கள் இப்ப சின்னச்சின்னப் பிரச்சனைகளுக்கே ஆளை மாத்திறாங்க..!

அதற்கு கவர்சியாக எக்ஸ் பாய் பிரண்ட்.. என்று போட்டுக்கிறாங்க..! இதெல்லாம் மனிதப் புரிந்துணர்வின்மைகளின் அடையாளங்கள்.. என்பதை உலகம் இன்று உணரத் தொடங்கியுள்ளது.

ஒரு கணவனின் மனநிலையைப் புரிஞ்சு கொண்டு அவனுக்கு துணையாக அல்லது அவனின் மனதுக்கு பக்க பலமாக துணைவி அன்பாலும் அருகிலும் இருக்கின்ற போது.. அவன் ஏன் கழுத்தைக் கடிக்கப் போறான்..!

என்னதான் நாய்க்கு ஊட்டி வளர்த்தாலும்.. அதின்ர வாலை மிதிச்சால் கடிக்கத்தான் செய்யும்..! அப்படித்தான் மனிதனை சில பெண்கள் மிருகமாக்கிக் கொள்கிறார்கள். அது போல சில ஆண்களும் பெண்களுக்க இயல்பா உள்ள மிருகத்தை வளர்த்து விடுறாங்க..! :):)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஒரு பெண் அவர் கணவனை கடித்திருந்தால் இந்த பக்கம் 10 பக்கங்களாவது போயிருக்கும்...

அப்போ நீங்கள் (யமுனா) பஞ்சியை பாராமல் ஒரு பத்து பக்கத்தில் எழுதுங்கோ.!!!

அப்போ நீங்கள் (யமுனா) பஞ்சியை பாராமல் ஒரு பத்து பக்கத்தில் எழுதுங்கோ.!!!

ஜம்மு 10 பக்கம் இல்லை 20 பக்கமும் கொண்டு போக ரெடி அண்ணா ஆனா கம்பெனிக்கு நீங்க ரெடியா

:P :) :P

கூடிய விலைக்கு கல்வியையும், தொழில் வாய்ப்பையும், குறைந்த விலைக்கு மதுவையும் வழங்கும் அரசாங்கம்தான் இந்த நிலைமைக்கு பொறுப்பாகும்!

நெடுக்ஸ் நல்லாக தான் சொல்லி இருக்கிறீங்க. பேஷ் பேஷ்

என்னதான் நாய்க்கு ஊட்டி வளர்த்தாலும்.. அதின்ர வாலை மிதிச்சால் கடிக்கத்தான் செய்யும்..! அப்படித்தான் மனிதனை சில பெண்கள் மிருகமாக்கிக் கொள்கிறார்கள். அது போல சில ஆண்களும் பெண்களுக்க இயல்பா உள்ள மிருகத்தை வளர்த்து விடுறாங்க..!

நெடுக்ஸ் நல்லாக தான் சொல்லி இருக்கிறீங்க. பேஷ் பேஷ்

நிலா அக்கா உங்கள் பார்வையில இந்த கணவண் செய்தது சரியா அலல்து பிழையா??? :P :lol:

நிலா அக்கா உங்கள் பார்வையில இந்த கணவண் செய்தது சரியா அலல்து பிழையா??? :P :lol:

அந்த பேட்டி எடுக்கிற பழக்கம் கண்ட கண்ட இடமெல்லாம் எடுக்க வைக்குது போல. ஹீஹீ அதுக்கு நான் தான் கிடைச்சேனா? ஜம்மு அப்படி ஒரு நிகழ்வு என் கண் முன் நிகழுமாயின் விகடகவி சொல்வது போல குடிகாரன் கூட என்ன பேச்சு னு விட்டிருப்பேன். இல்லை நான் அக்குடும்பத்தின் மகளாக இருக்கும் பட்சத்தில் தாயைக் கொன்ற தந்தையை கொலை செய்திருப்பேனே. ஹீஹீ

பின்னே பேட்டி என்றா சும்மாவா.................உங்க பதில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது...........உங்களுக்கு வரபோறவர் ரொம்ப கொடுத்து வைச்சிருக்க வேண்டும்............... :P :lol:

பின்னே பேட்டி என்றா சும்மாவா.................உங்க பதில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது...........உங்களுக்கு வரபோறவர் ரொம்ப கொடுத்து வைச்சிருக்க வேண்டும்............... :P :lol:
ஆமா நாலைஞ்சு பேர்கிட்ட கொடுத்துவைச்சாத்தான்..

நடுத்த??ருவில விடும்போது உபயோகமாகும்.. :) வெண்ணிலா கோச்சுக்காதீங்கோ என்ன..சும்மா..

Edited by vikadakavi

பின்னே பேட்டி என்றா சும்மாவா.................உங்க பதில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது...........உங்களுக்கு வரபோறவர் ரொம்ப கொடுத்து வைச்சிருக்க வேண்டும்............... :P :lol:

வாறாவர் குடிப்பவராக இருந்தால் றிஜக்ட்.

வந்த பின் குடிப்பவராக இருப்பின் டிவோர்ஸ்.

ஹீஹீ இதெப்படி இருக்கு? :P ஆனால் நம்ம காதலன் குடிப்பவரில்லை.. கணவன் ஆவார் ஆனபின்னும் குடிக்க மாட்டார். ஹீஹீ

ஆமா நாலைஞ்சு பேர்கிட்ட கொடுத்துவைச்சாத்தான்..நடுத்த??ருவில விடும்போது உபயோகமாகும்.. :) வெண்ணிலா கோச்சுக்காதீங்கோ என்ன..சும்மா..

;) சரிசரி கோவிக்கவில்லை. நான் பேட்டி கொடுத்தது தவமணி என்ற இறந்த பெண்ணின் நிலைமையில் நானாக இருப்பின் என்று தான். ஆனால் இந்த ஜம்மு தான் வாறவர் கொடுத்து வைக்கணும் னு என்னமோ குழப்பி அடிக்குது. ஜம்மூஊஊஊஊஉ ஹீஹீ

Edited by வெண்ணிலா

வாறாவர் குடிப்பவராக இருந்தால் றிஜக்ட். வந்த பின் குடிப்பவராக இருப்பின் டிவோர்ஸ். ஹீஹீ இதெப்படி இருக்கு? :P ஆனால் நம்ம காதலன் குடிப்பவரில்லை.. கணவன் ஆவார் ஆனபின்னும் குடிக்க மாட்டார். ஹீஹீ

நல்ல கொள்கை கீப் இட் அப்.......நிலா அக்காவின் காதலனே நீங்க ரொம்ப ரொம்ப பாவம்.............திருமணதிற்கு பின் குடித்த டிவோர்ஸ்.................எனக்கு ஒரு டவுட் நிலா அக்கா நீங்க குடிக்கலாமோ............... :P :lol: :P

;) சரிசரி கோவிக்கவில்லை. நான் பேட்டி கொடுத்தது தவமணி என்ற இறந்த பெண்ணின் நிலைமையில் நானாக இருப்பின் என்று தான். ஆனால் இந்த ஜம்மு தான் வாறவர் கொடுத்து வைக்கணும் னு என்னமோ குழப்பி அடிக்குது. ஜம்மூஊஊஊஊஉ ஹீஹீ

ஆமாம் அது எனக்கும் அக்காவிற்கு மட்டு தான் விளங்கும் விகடகவி மாமா..............

அப்ப நான் வரட்டா................. :P

Edited by Jamuna

நல்ல கொள்கை கீப் இட் அப்.......நிலா அக்காவின் காதலனே நீங்க ரொம்ப ரொம்ப பாவம்.............திருமணதிற்கு பின் குடித்த டிவோர்ஸ்.................எனக்கு ஒரு டவுட் நிலா அக்கா நீங்க குடிக்கலாமோ............... :P :lol: :P

அட பாவி. இங்கை பாருங்க. கொண்டை போட விட்டால் தலையிலை அமுக்கிறீங்களே. ஜம்மு இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆமா. களத்தை பார்வை இடுவதில் அவர் கூடிய அக்கறை கொண்டவர் பாருங்க. இதை பார்த்தால் அவ்வளவுதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தது. ( வை வோன்ட் வீ அவோய்ட் த லிக்கர்) என்று. நாம் எதற்காக குடிப்பதை தவிர்க்க வேண்டும்என. அதில் ஒரு குடிகாரன் தவறிலைக்கும்போது அவனுக்கு தன்டனை தருவதில் சட்டம்கூட மயங்குகிறது என்பார். உண்மையும் அதுதானே! ஒருவர் தவறு செய்தால் அதற்குத் தன்டனையென வரும்போது அதை ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும். :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.