Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

ஓர் பாலினக் கூட்டு என்றாலும் அதில் male part & female part என்று உள்ளது.

அதேவேளை இருவரும் மாற்றியும் கொள்ளலாம்

வெள்ளைச் சீலையுடன் உள்ளவர் male part என்றபடியால் (?) 

“வெள்ளைச் சீலை” என்று அபசகுனமாக சொல்லாதீர்கள்.

அது, பட்டு வேட்டியின்… நிறத்தில் உள்ள சீலை.

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.

1. நேரு - கஸ்மீரி பண்டிட்

2. குல்சரி லால் நந்தா - பஞ்சாபி இந்து

3. இந்திரா - நேருவின் மகள்

4. மொராஜி தேசாய் - குஜராத்தி

5. ரஜீவ் - இந்திராவின் மகன்

6.  நரசிம்ம ராவ் - ஆந்திரா 

7. தேவேகெளடா - கர்நாடகா

8. குஜ்ரால் - பஞ்சாபி இந்து

9. மன்மோகன் - பஞ்சாபி சீக்கியர்

10. மோடி - குஜராத்தி இந்து

10/14 நீங்கள் சொன்ன மாதிரி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன பீகாரும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசங்கள் எல்லாம் வறுமை மாநிலங்கள்

அதனால்தான் அரசும் மக்களும் திட்டமிட்டு சனத்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டு ரிக்‌ஷா காரனின் பிள்ளைகள் சிலிக்கன் வலியில் கலக்க, உத்தரபிரதேசத்து பிள்ளைகள் பானி பூரி விக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.

எங்கேயும் சனத்தொகையை கட்டுப்படுத்துங்கள் என நான் கூறவில்லை. மேலே ஓணாண்டி சொன்ன strength in numbers எனக்கும் புரிகிறது.

ஆனால் அதை பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். இல்லாதவர்கள் நம்பி பெற்றால் அந்த பிள்ளைகளை வளர்க்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிட்டு, அவர்களையும் பெற சொல்லலாம். 

https://en.m.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_union_territories_by_Human_Development_Index
 
இந்திய மாநிலங்களின் மனித அபிவிருத்தி சுட்டெண். எந்த மாநிலம் எங்கே உள்ளது. மேலே உள்ள மாநிலங்கள் குடும்ப திட்டமிடலை கையாண்ட முறை என்ன என்பதை ஆராய்து பாருங்கள்.

உத்தர பிரதேசத்தில் பத்து பிள்ளைகளை பெற்று நம்பரை கூட்டி, எம்பிகளை கூட்டினாலும், குறைந்த நம்பரில், வளங்களை சரியாக பயன்படுத்திய மாநிலங்களே முன்னேறுகிறன. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆம் அப்போ தனபாலின உந்துதல் இயற்கையானது இந்த திருமணச்சடங்கு தான் செயற்கையானது இரண்டுமே பெண்கள் ஏன் ஒருவரை மாப்பிள்ளை என்று அழைக்க வேண்டும் தோழனுக்குப் பதில் தோழியை நிறுத்தியிருக்கலாம். 

ஓரினசேர்க்கை இயற்கையானது, ஆனால் வழமையானது அல்ல. 

சிவில் திருமணம் - சிலநாடுகளில் சட்டபூர்வம், பலநாடுகளில் இல்லை. இதில் இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு இல்லை.

திருமண சடங்கு- அந்தந்த மதம் சார்ந்தது. சில மதங்களில் முடியவே முடியாது (இஸ்லாம்). சில கிறீஸ்தவ உட்பிரிவுகளில் முடியும். இந்துக்களுக்கு ஒரு ஒற்றை தலைமை இல்லை, ஆகவே ஒரு ஐயரை பிடித்தால் சரி.

யார் கணவன், யார் மனைவி - கீழே மீரா சொன்னது போல - அவரவர் விருப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

நீங்கள் சொல்வது இருபக்கமும் நியாயம் உள்ள கேள்வி.

எல்லாவற்றையும் தமக்குள் புதைத்து வைத்துகொண்டு, அம்மா, அப்பா தாங்கமாட்டினம் என்பதற்காக போலியாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.

இவர்கள் இரெட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது சுயத்தை தொலைத்து. வீட்டில் கல்யாணம் பேசி அலுத்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணுவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதால் - கல்யாணம் கட்டுவதில்லை. சிலர் அதையும் செய்து டிவோசில் நிற்பார்கள். சில பெற்றாருக்கும் அரசல்புரசலாக தெரியும் என நான் ஊகிக்கிறேன், ஆனால் அவர்களும் காட்டிகொள்வதில்லை.

நான் யார் என்பதை வெளியில் காட்டிகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஆயுள்தண்டனை போன்றது என்பார்கள்

பலர் இப்படி வாழ்கிறார்கள். குறிப்பாக எமது சமூகத்தில். ஊரில் கூட பலர் தனிமரமாக இருப்பார்கள். சிலர் தற்கொலை கூட செய்வதுண்டு. இப்படியான பிரச்சனையாக இருக்கலாம்.

பெற்றாரின் மன உளைச்சலை தவிர்க்க, இப்படி தம்மைதாமே ஆயுள் சிறையில் தள்ளுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே, ஆனால் இந்த சிறையில் இனியும் இருக்க முடியாது என்று வெளியில் வருபவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

பல வீடுகள் வைத்து இருப்பவனுக்கு.   சமுதாயத்தில் மதிப்பு.....பல கார்கள் வைத்து இருப்பவனுக்கு  சமுதாயத்தில் மதிப்பு...பல தொழில் நிருவனங்கள் வைத்து இருப்பவனுக்கு சமுதாயத்தில் மதிப்பு....பயப்படுவேன்  இந்த உலகில் வாழ முடியாது பயம் வாழ்க்கைக்கு முதல் எதிரி.  மேலே நீங்கள் குறிப்பிட்டவர்களும் மதிக்கும் காலம்  கண்டிப்பாக வரும் 🤣படித்து பல பட்டங்கள் வைத்து இருப்பவனும் மதிக்கப்படுகிறான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியாணத்தில் தாலி கட்டியது சிவப்பு நிற சீலை அணிந்தவர்.

பட்டு வேட்டி நிற சீலை அணிந்தவர் ஏன் தாலியை கட்டிக் கொண்டார் …?🤔

எல்லாமே தலைகீழாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

🤣 மேலே சொன்ன சூரியஒளியும், நிறப்பிரிகையும்தான் காரணம். மனித பாலியல் தெரிவில் 0 தொடக்கம் 100 வரை உண்டு என வையுங்கள்.

0 - நம் போன்ற நூறுவீத எதிர்பாலின ஈர்ப்பு உடையோர். 100 முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பு உள்ளோர்.

50? அவர்கள்தான் இருபாலின ஈர்ப்பு உள்ளோர். என்னோடு கூட வேலை செய்த ஒரு பெண், 2 பிள்ளைகளின் தாய். 40 சொச்ச வயசில் டிவோஸ் எடுத்துவிட்டு, தன் புதிய தன்பாலின இணையுடன் சேர்ந்து வாழ்கிறார்.

தான் யார் என்பதை முழுமையாக உணர தனக்கு 40 சொச்ச வருசம் தேவைபட்டதாக சொல்லுவார். 

நான் நினைக்கிறேன் இந்த அளவிடயில் 0 இல் இருப்பவரும், 100 இல் இருப்பவரும் தமது பாலின தெரிவில் மாறமாட்டார்கள். ஆனால் 40-60 இடையில் இருப்போர் fluid ஆக இருப்பார்கள் என. எனது எண்ணம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

பொதுவாக யாழ் இணையத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்கையில் நிகழும் சம்பவங்கள்,வைபங்கள், சொந்த விடயங்கள் பற்றி இணைப்பதை தவிர்க்க சொல்வதுண்டு. தனிப்பட்டவர்களின் தனியுரிமையை அது மீறுகின்றது என்பதனால். ஆனால் இந்த பெண்களின் திருமண விடயம் புலம்பெயர் தமிழ் செய்தித் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்படுவதாலும், கட்டுண்ட சமூகம் ஒன்று கட்டுடைப்பை செய்ய எத்தனிப்பதை வெளிக்காட்டுவதாலும் பண்பான முறையில் தொடர்ந்து கருத்தாடுவது ஆரோக்கியமானது என நினைக்கின்றோம்.

நீங்கள் பண்பான முறையில் கருத்தாடுவது சிறந்தது எனக்கூறுகிறீர்கள், ஆனால் இங்கே அவர்களது தோற்றத்திலிருந்து அவர்கள் தனிப்பட்ட பாலியல்உறவு/திருப்தி வரை எழுதுகிறார்கள்..  ஆண் யார் பெண் யார்? இது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம்.. இப்பொழுது குருக்கள் வரை வந்துவிட்டது.. கவலைக்குரிய விடயம்

5 minutes ago, பெருமாள் said:

இடையில் எழுதிய கருத்துக்கள் நான் படிக்கவில்லை மனதில் பட்டதை  எழுதினேன் இங்கு  இரண்டுக்கு மேல் பெற்றால் பிந்திய வயது கல்யாணம் ஆபத்து  என்று வைத்திய ஆலோசனையால் பல நண்பர்கள் பிள்ளை பேறை  நிறுத்தி விட்டார்கள் எப்படி இனம் பெருகும் என்ற கவலை இந்த பயித்திய கலியானம்களை எதிர்க்க சொல்லுது .

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. 

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

அவர்களாக நாம் இருக்காதவரை இது நமக்கு புரியாது என்று நினைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Edited 6 minutes ago by பிரபா சிதம்பரநாதன்

13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

நீங்கள் முதல் எழுதிய கருத்துக்கு மேலே பதில் உள்ளது அதன்பின் எடிட் பண்ணி சிந்திக்க சொல்கிறீர்கள் அதற்கு வேறு திரி துறந்து போவது நல்லது ஏற்கனவே சில திரிகளின் தலையங்கத்துக்கும் வாலுக்கும் சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் ஓடுது இங்கு வேண்டாமே மேடம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

15 minutes ago, விசுகு said:

ஒரு விழாவுக்கு தலைமை தாங்குபவர் பற்றி விமர்சனம் வருவது தவிர்க்க முடியாது தானே??

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

இன்றைய உலகம் விளம்பர,வியாபார உலகம்.
விளம்பரத்திற்காக மணமக்கள் செய்கின்றார்கள்.
பணத்திற்காக குருக்கள் வந்து நிற்கின்றார் அவ்வளவுதான்.😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

அப்படியா நல்ல விடயம்.. பிரான்சில் நீங்கள் முக்கிய பிரமுகராக இருப்பது நல்லதொரு விடயம்.. மிக்க மகிழ்ச்சி.. அவ்வளவுதான் என்னால் கூறமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

இப்ப நீங்கள் எழுதியதை வாசித்து தலையைச் சுற்றுகிறது 🤣😂என்றாலும்  நினைத்ததை  எழுதுங்கள் நாங்கள்  ஒன்றும் செய்யமாட்டோம்  சில நேரம் அவை நல்ல கருத்துகள் ஆக இருக்கலாம் 😃😍

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய திரிகளிலும் இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம்: பத்துப் பிள்ளை பெறலாம், ஆனால் அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த விலையில் முக்கியமானது பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் (சில சமயங்களில் உடல் நலம்!) என்பன. 

உதாரணமாக, இன்று இலங்கையில் உயர்கல்வி நிலையங்களில் கற்போர் அரைவாசிக்கு சற்று மேல் பங்கு பெண்கள் (ஆண்கள் இயற்கையிலேயே படிப்பை விரும்பாதோர் தானே?:grin:). ஒரு ஐந்து பிள்ளையைப் பெற இருபதில் கட்டிக் கொடுத்து விட்டால் படிப்பும் போய், புருசன் காலமான பிறகு தொழில் தேடும் தகைமையும் போய் விடும்! இத்தகைய பெண்கள் பத்துப் பெற்றுப் படிக்காமல் விட்டால் "கோயில் வாசல்களில் கச்சான் விற்றுப் பிழைக்கலாம் தானே?" என்று சிலர் இங்கே சொன்னாலும் எனக்கு ஆச்சரியம் வராது - ஏனெனில் அப்படியான கருத்துகளை முன்னர் இங்கே பெண்கள் குறித்து எழுதியோர் தான் இந்த பத்துப் பெற்றால் என்ன குறைந்து விடும் என்று கேட்கிறார்கள். 

எனவே, இருக்கும் இளையோரை சக்தி மிக்கவர்களாக மாற்றுது தான் பொருத்தமான வழி. பத்துப் பெற்று தெருவில் விட்டு விட்டால்- அவர்களில் ஒரு பகுதியினராவது சமூக ஒட்டுண்ணிகளாக மாறி விட்டால்-இன்று ஐரோப்பாவில் றோமா மக்களுக்கு ஏற்பட்ட நிலையே தமிழர்களுக்கும் ஏற்படும்! 

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் இருவருமே ஆண் பெண் வேறுபாட்டுடன் தோழன் தோழி என கலியாணம் செய்திருக்கிறார்கள். 

அவர்கள் தாங்கள் ஒத்த பாலினம் என்றால் இருவருமே பெண்களாகவோ அல்லது ஆண்களாகவோ வெளிப்பட்டிருக்கலாம். அவர்களே தங்கள் இருவருக்குமான வேறுபாட்டை காட்டி உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.