Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி

Featured Replies

15 minutes ago, MullaiNilavan said:

உண்மை. இவர்கள் தங்களது ஆங்கிலப்புலமைனால்,  தாங்கள் மேல்தட்டு கலாச்சார  முழுமை தாங்கிய கொண்டிருந்தவர்கள். சிலர் அறிந்தும்  பலர் அறியாமலும் உருவாகும் தங்களது செயற்பாட்டின் வீரியத் தன்மையை எல்லோருக்கும் கோடிட்டு காட்டினார்கள்.  விளைவு கொழும்பிலும், அமெரிக்கா, கனடாவிலும் கைதுகள்.

டி பி எஸ் ஜெயராஜ் வங்கி கணக்கு செழித்து விளங்கியது உதாரணத்துக்காக குறிப்பிடுகின்றேன்.

இன்னும் அவர்கள் ஓயவில்லை நீங்கள் குறிப்பிட்டது போலவே தொடர்ந்து தங்களது  பொறிகளை தோழிகளை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பலன், தங்களது உறவினர்கள், நண்பர்களின் உள்நாட்டில் வேலை, வெளிநாடுகளில் கல்வியைத் தொடர வசதி / உதவி, தூதரக மட்டத்தில் விருந்தோம்பல்.

நீங்கள் இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே.  நீண்ட கால அரசியல் ஆலோசகரான திரு அன்ரன் பாலசிங்கம் தனது பட்டறிவின் அடிப்படையில் எடுத்த முடிவை ஏற்று கொள்ளாமல் யுத்ததிற்கு திரும்பியதற்கும் நீங்கள் கூறியதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

உருத்திர குமார் தவறாக வழிகாட்டியதாக இந்த சேரமான் கூறியதும் நம்ப தகுந்தது அல்ல. 

  • Replies 78
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நீங்கள் இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே. 

🤣😂😂😂😂😂😂😂🤣

""நீண்ட கால அரசியல் ஆலோசகரான திரு அன்ரன் பாலசிங்கம் தனது பட்டறிவின் அடிப்படையில் எடுத்த முடிவை ஏற்று கொள்ளாமல் யுத்ததிற்கு திரும்பியதற்கும் நீங்கள் கூறியதற்கும் எந்த தொடர்பும் இல்லை.""
 
அத்தனை உறுதியாக கூறுகிறீர்களே, என்ன காரணம். நீங்கள் இதனுடன் தொடர்புபட்டிருந்தீர்களோ...😂

உருத்திர குமார் தவறாக வழிகாட்டியதாக இந்த சேரமான் கூறியதும் நம்ப தகுந்தது அல்ல. 

தற்போது உருத்திரகுமாரன் இயங்காமலிருப்பதற்கான காரணத்திற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருக்கிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎10‎-‎2021 at 02:32, கற்பகதரு said:

ரதிக்கும் எனக்கும் பங்குகள் கிடைத்திருந்தால் எப்போதோ நாங்கள் இருவரும் யாழ் களவாசிகளை நிம்மதியாக வாழவிட்டிருப்போமே? கெடுத்துட்னானுகளே? 😒

****

இந்த பாவப்பட்ட மக்களது பணம் எனக்கும் ,உங்களுக்கும் தேவையில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2021 at 18:32, கற்பகதரு said:

ரதிக்கும் எனக்கும் பங்குகள் கிடைத்திருந்தால் எப்போதோ நாங்கள் இருவரும் யாழ் களவாசிகளை நிம்மதியாக வாழவிட்டிருப்போமே? கெடுத்துட்னானுகளே? 😒

****

11 minutes ago, ரதி said:

இந்த பாவப்பட்ட மக்களது பணம் எனக்கும் ,உங்களுக்கும் தேவையில்லை 

நன்றி ரதி. இதை நான் நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் இதில் நகைச்சுவை எதுவும்இல்லை. இவர்கள் மக்களின் துன்பத்தில் இலாபம் காண்பவர்கள், எங்களுக்கு அது என்றைக்கும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2021 at 03:03, Kapithan said:

கட்டுரையில் வந்த மிகப் பெரும்பாலானவை தொடர்பாக எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. 

ஆனால் உருத்திரகுமாரன் விடயத்தில் அவருக்கு பின்னால் நின்று செயற்படுபவர்களைப் பார்த்ததில், அறிந்ததில், அனுபவப்பட்டதில், நாகத அரசு உண்மையில் தமிழர்களை செயற்பட விடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இலவம் காய். மக்கள் அதைப் பார்த்து, பார்த்து, பார்த்து,........ ஏமாந்து போவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பொம்மை. இதனைக் கட்டுப்படுத்துவது கேபி ஊடாக இலங்கை அரசு. கேபியின் முகவர்கள் இருப்பது கனடா. 

ஆக ஒன்று மட்டும் உண்மை. அதாவது, புலிகளின் கையில் அதிகாரம் போகக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது தமிழர் தரப்பில் ஒரு படித்த கூட்டம். 

போராட்டம் அழிந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகாரம் மட்டும் புலிகளின் கைகளிற்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். 

இவர்களது ஆலோசனையை  நம்பியதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கும் போராட்டத்தின் அழிவுக்கும் காரணம் . தற்போதைய சூழலை அப்படியே பேணுவதுதான் இலங்கை அரசின் தேவை. இப்படியே  இன்னும் 10 வருடங்கள் போனால் அதற்கப்பால் தமிழருக்கு எதுவுமே இல்லை. 

☹️😔

சுப்பர்! எல்லாத்தையும் படிச்சவன் தலையில கட்டினால் போதும்🤣.

மேலே சேரமான் போட்ட லிஸ்டில் உருத்திரகுமார் தவிர வேறு யார் படித்தவர்கள்?

என்னை பொறுத்தவரை கதிர்காமர், நீலன், ஹூல் போன்றவர்கள் வெளிப்படையாக அரசுடன் சேர்ந்து இயங்கினார்கள்.

இவர்களால் ஏற்பட்ட விளைவுகள் வெளிப்படையாக தெரிந்தன.

ஆனால் புலிகளின் வெளிநாட்டு தளகர்த்தாக்கள் நாம், கஸ்ரோவுக்கு நாம் நெருங்கியவர்கள், புலிகளின் செய்திகள் எம்மைதான் அடைகிறன, கடைசியா காசு தாங்கோ, இதுதான் இறுதியுத்தம் இப்படியாக வால் பிடித்து திரிந்த “புலம்பெயர் நாட்டு புலி வால்கள்” செய்த நரித்தனங்கள் மிக அதிகம். 100 கதிர்காமருக்கு சமன்.

இவர்களைதான் மேலே கட்டுரை தோலுரிக்கிறது.

இன்றைக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள், இயக்க, பிரதேச, சமய, குழு வேறுபாடின்றி இணைய முடியாது இருக்கிறது, எமது மக்களுக்கு ஒரு கெளரவமான தீர்வை கொடுக்குமாறு அழுத்த கூடிய புலம்பெயர் சக்தி விழலுக்கு இறைத்த நீராகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இப்படியான கிருமிகளே.  

இந்த கிருமிகளில் பலரும் படிக்காதவர் என்ற வரையறைகுள்ளேயே வருவர். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஐயா கோசான்,

இங்கே நான் படித்தவர்கள் என்று கூறியது நீங்கள் கூறும் இந்தக் கூட்டத்தை அல்ல. இவர்கள் புலிகளின் பெயரால் உயிர் வாழ்பவர்கள். புலிகளின் இருப்புத்தான் இவர்களுக்கு சோறு போடும். இவர்கள் ஒருபோதுமே புலிகள் அழிய வேண்டும் என விரும்பியதில்லை. ஆயுதப் போராட்டம் தொடர வேண்டிய கட்டாயம் நீங்கள் கூறிய ஆட்களுக்கு இருந்தது. அதுதான் அவர்களுக்கு சோறு போட்டது. 

ஆனால் நான் கூறும் ஆட்கள் வெளிநாடுகளில்உயர் பதவிகளில் இருந்து கொண்டு மறைமுகமாக(semi), புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக காட்டிக்கொண்டவர்கள். வெளிநாடுகளில் புலிகளின் வழிகாட்டிகளாக, ஆலோசகர்களாக, நலன் விரும்பிகளாக காட்டிக்கொண்டவர்கள். ஆனால் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் கையாட்களாகச் (handlers) செயற்பட்டவர்கள். 

இவர்களது ஒரே நோக்கம் புலிகளிடம் அதிகாரம் போகக் கூடாது. போராட்டம் அழிந்தாலும் பிரச்சனை இல்லை. புலிகளின் கைகளில் அதிகாரம் போய்ச் சேரக்கூடாது. 

அந்த விடயத்தில் இவர்கள் மிகத் தெளிவாக இருந்தார்கள். தற்போது இதனை நாளாந்தம் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். 

கதிர்காமர் கூல் ஆட்கள் வெளிப்படையானவர்கள். அவர்களிடம் தங்கள் நம்பிக்கை சார்ந்த நேர்மை இருந்தது. அவர்கள் சார்ந்த செயல்களும் சேதங்கக்ளும் வெளிப்படையானவை. 

ஆனால் என்னால் கூறப்படும் ஆட்களைத்தான் நாங்கள் எல்லோரும்  தற்போதும் பெரிதும் நம்பியிருக்கிறோம். 

திரும்பவும் கூறுகிறேன், உருத்திரகுமாரன் சுயமாக முடிவுகள் எடுப்பவரல்ல. அவரை இயக்குபவர்கள் வேறு நபர்கள். அவர்களுக்கான ஆணை/ஆலோசனை கேபியிடம் இருந்து வருகிறது. 

கேபி யாரிடமிருந்து உத்தரவுகளை பெறுகிறார் என்று நான் சொல்லவா வேண்டும்.. 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

திரும்பவும் கூறுகிறேன், உருத்திரகுமாரன் சுயமாக முடிவுகள் எடுப்பவரல்ல. அவரை இயக்குபவர்கள் வேறு நபர்கள். அவர்களுக்கான ஆணை/ஆலோசனை கேபியிடம் இருந்து வருகிறது. 

கேபி யாரிடமிருந்து உத்தரவுகளை பெறுகிறார் என்று நான் சொல்லவா வேண்டும்.. 😀

உருத்திரகுமாரன் அவர்கள் செயற்படாமல் எது தடுக்கிறது என்பதை விட, புலிகள் அமைப்பை முதன் முதலாக தடை செய்த (இன்றும் தடையை வைத்திருக்கும்) ஒரு நாட்டில் இருந்து கொண்டு உருத்திரகுமாரன் செய்யக் கூடியது என்ன இருக்கிறது என யோசிக்க வேண்டும்.

அமெரிக்க அரசின் மூன்றாம் மட்ட அதிகாரிகளோடு பேசுவதைத் தவிர வேறெதுவும் நா.க.த அரசின் உறுப்பினர்களால் செய்ய முடியாது. நான் நினைக்கிறேன் நீங்கள் நா.க.த விடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதால் அவர் செயலற்றிருக்கிறார் எனப் பார்க்கிறீர்கள்.

இதை விட இங்கே நீங்கள் சொல்ல முடியாத ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால் அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

1) உருத்திரகுமாரன் அவர்கள் செயற்படாமல் எது தடுக்கிறது என்பதை விட, புலிகள் அமைப்பை முதன் முதலாக தடை செய்த (இன்றும் தடையை வைத்திருக்கும்) ஒரு நாட்டில் இருந்து கொண்டு உருத்திரகுமாரன் செய்யக் கூடியது என்ன இருக்கிறது என யோசிக்க வேண்டும்.

2) அமெரிக்க அரசின் மூன்றாம் மட்ட அதிகாரிகளோடு பேசுவதைத் தவிர வேறெதுவும் நா.க.த அரசின் உறுப்பினர்களால் செய்ய முடியாது. நான் நினைக்கிறேன் நீங்கள் நா.க.த விடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதால் அவர் செயலற்றிருக்கிறார் எனப் பார்க்கிறீர்கள்.

3) இதை விட இங்கே நீங்கள் சொல்ல முடியாத ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால் அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. 

1) உருத்திரகுமாரன் வன்முறையைத் தூண்டுவதைத் தவிர மிகுதி எல்லாவற்றையும் செய்யலாம். அவருக்குள்ள எல்லை தொடர்பாக இங்கு எவருக்குமே சந்தேகம் இல்லை

2) செயற்பட முடியாத அமைப்பை எதற்காக வைத்திருக்க வேண்டும்? ஆகக் குறைந்தது தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்த முடியாத நிலையிலா உருத்திரகுமாரன் இருக்கிறார்.. 

3) நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். இதைக் கதைப்பதால் எதனையும் உன்னால் மாற்ற முடியாது என்றா..😀

ஆகக் குறைந்தது, இதை வாசிப்போர்க்கு சிறிதாக ஏதேனும் புரிந்தால் நன்மைதானே 😀

நான் தெரிந்துகொண்ட உண்மைகளை மற்றவர்களும் அறிந்துக்கொள்ளட்டும்.

ஆக உருத்திராவை இயக்குவது வேறு நபர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் போல  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

எனக்கு விளங்கிய வரையில் - இது உங்களை விடக் குறைந்த விளக்கமாக இருக்கலாம் - அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வின் தொடர் கண்காணிப்பில் உருத்திரகுமாரின் அமைப்பு இருக்கிறது. நீங்கள் செயல் படும் எல்லை பற்றிப் பேசுகிறீர்கள் , அந்த எல்லையை மாற்றும் சக்தி FBI இற்கு இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இருக்கிறீர்களா? ஒரு உதாரணமாக NOW-WOW என்கிற அமைப்பு ஒரு சிறிலங்கா நபருக்கு அனுப்பும் நூறு டொலர் உதவித் தொகையயே "பயங்கரவாதத்தை மீளுயிர்ப்பிக்க அனுப்பினார்" என்றோ wire fraud  என்றோ எல்லை மீறலாகக் காட்டும் சக்தி அமெரிக்க சட்ட அமலாக்கல் பிரிவிற்கு இருக்கும் போது , எல்லைகள் clear-cut என்கிறீர்களா?

இரண்டாவது பொயின்ற் - "செய்யக் கூடியதைச் செய்வோம், காலம் மாறும் போது இன்னும் செய்வோம்" என்ற காரணத்தால் கலைக்காமல் இருக்கலாம் - கப்ரன் நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை  என்பதற்காக அவர்கள் கலைந்து விட வேண்டுமென்பது சரியல்ல!🤣

மூன்றாவது: வெளிப்படையாக சொல்ல முடியாத, உங்களுக்கு மட்டுமே தெரிந்த விடயங்களை வைத்துக் கொண்டு இங்கே பேசுவது பயனில்லை என்றே சொன்னேன். பகிரங்கமாக பகிர முடியாத உங்களிடம் இருக்கும் உள்ளகத் தகவல் என்பது வெளியே இருப்போரைப் பொறுத்த வரை hearsay  மட்டுமே! எனவே உருத்திரகுமாரனை யார் இயக்குகிறார் என கப்ரன் சொல்வதும் hearsay என்று தான் சொல்கிறேன்!  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

நீங்கள் கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆனால் என்னுடைய தேவை , நாங்கள் எங்கே நிற்கிறோம், எங்கள் தெரிவுகள் என்ன, எங்கள் பலம் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். என்பதே. 

இதன் அடியாக மட்டும்தான் நாங்கள் சரியான முடிவுகளையும்,இலக்குகளையும் எட்ட முடியும் என்பது என் நம்பிக்கை. 

இதற்காகத்தான் நாகதஅ வினை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறேன்.

""தற்போது எங்களுக்கு தலைமை என்று  எதுவுமே இல்ல. நாங்கள் அனாதைகள்""

இதிலிருந்துதான் எதுவுமே ஆரம்பமாக வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

திரும்பவும் கூறுகிறேன், உருத்திரகுமாரன் சுயமாக முடிவுகள் எடுப்பவரல்ல. அவரை இயக்குபவர்கள் வேறு நபர்கள். அவர்களுக்கான ஆணை/ஆலோசனை கேபியிடம் இருந்து வருகிறது. 

உண்மைதான் கற்பிதன். எனக்கு உருத்திரகுமார் பற்றி எப்போதும் நல் அபிப்ராயம் இருந்ததில்லை. யாழில் முதலில் நட்டு கழண்ட அரசு என்று எழுதி ஏச்சு வாங்கி இருக்கிறேன்.

என்னை பொறுத்தவரை தனி நாட்டு கோரிக்கையை 2009 ற்கு பின் முன்வைப்பவர்கள், தெரிந்தோ தெரியாமலோ இலங்கையின் உற்ற நண்பர்கள்தான்.

இதில் நாடு கடந்த ஒரு பாராளுமன்றை, அரசை நிறுபவர்களை யாரும் சீண்ட போவதில்லை. இந்த தொடக்க புள்ளியில் இருந்து கிளம்பி இவர்களால் ஏதும் செய்ய முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் பிரதமர் 😁 உருத்திரகுமாரனும் தாங்களும் இருக்கிறோம் எனக்காட்ட வருஷத்திற்கு இரண்டொரு அறிக்கைவிடுவார்கள். மற்றும்படி வெறும் காத்துப்போன பலூன்கள். அவர்கள் பொழுதுபோக்காக ஒன்லைன் மீற்றிங்களில் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். கலாநிதி சேரமானின் ஆவியும் அவரின் இதர கணங்களும் தங்கள் தனிப்பட்ட பகை (கொள்கை அடிப்படை என்று இருக்காது) காரணமாக உருத்திரகுமாரனுக்கு வெளிச்சம் கொடுப்பதைத் தவிர வேறு யாரும் நா.க.த. ஐ சீந்துவதில்லை!

கலாநிதி சேரமானும் 2009 மே இல் இருந்து பல விடயங்களை தெரிந்திருந்தும் நேர்மையாக அவற்றை வெளிக்கொண்டுவராமல் மெளனமாக இருந்துவிட்டு கொடுக்கிற கூலிக்கு கூவுகிற ஊடக அடியாளாகத்தான் இருந்தார். தலைவரின் வீரச்சாவை வெளியே சொல்லாமல் ஒளித்தவர்களுக்கு உடந்தையாகத்தான் இருந்தார். 

சேரமான் கூவின பதிவு, சங்கதி எல்லாம் யாழ் களத்தில் தடைசெய்யப்பட்டதால் அவரின் உள்வீட்டு “புலனாய்வு”ப் புசத்தல்களை யாழில் எவரும் கண்டுகொள்ளவில்லை.  

19 hours ago, Kapithan said:

இங்கே நான் படித்தவர்கள் என்று கூறியது நீங்கள் கூறும் இந்தக் கூட்டத்தை அல்ல. இவர்கள் புலிகளின் பெயரால் உயிர் வாழ்பவர்கள். புலிகளின் இருப்புத்தான் இவர்களுக்கு சோறு போடும். இவர்கள் ஒருபோதுமே புலிகள் அழிய வேண்டும் என விரும்பியதில்லை. ஆயுதப் போராட்டம் தொடர வேண்டிய கட்டாயம் நீங்கள் கூறிய ஆட்களுக்கு இருந்தது. அதுதான் அவர்களுக்கு சோறு போட்டது. 

ஆனால் நான் கூறும் ஆட்கள் வெளிநாடுகளில்உயர் பதவிகளில் இருந்து கொண்டு மறைமுகமாக(semi), புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக காட்டிக்கொண்டவர்கள். வெளிநாடுகளில் புலிகளின் வழிகாட்டிகளாக, ஆலோசகர்களாக, நலன் விரும்பிகளாக காட்டிக்கொண்டவர்கள். ஆனால் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் கையாட்களாகச் (handlers) செயற்பட்டவர்கள்

கபிதன், 2002 ம் ஆண்டின் பின்னர் ஆயுதப்போராட்டம் தொடரவேண்டும் என்று நினைத்து, அதற்கு தூபம் போட்டவர்கள் யாரும் நல்லவர்களாக இருக்க முடியாது. சேரமானின் பழைய கட்டுரைகளை பார்க்கும் போது, சேரமான் போன்றவர்கள் கூட அப்படியான தீவிர ஆயுதபோராட்ட விரும்பிகளாகவே இருந்ததை அவதானிக்க முடியும்.  யுத்தத்தின் வலிகளையும், அதனால் மக்கள் பட்ட கஷ்ரங்களையும் உணர்ந்தவர்கள் யுத்தம் தொடர்வதை விரும்பவில்லை என்பதே உண்மை. இடைக்கால தீர்வு ஒன்றை பெற்று அதை பலப்படுத்துவதே உகந்தத்து என்பது தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் கருத்தாக இருந்தது.  அன்ரன் பாலசிங்கம் போன்ற அனுபவர் மிக்கவர்களும் அதை உணர்ந்திருந்தனர். 

மக்களின் அழிவை பற்றியோ, எதிர்க்கால தலைமுறை பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் யுத்தம் தொடரவேண்டும் என்று விரும்பியவர்கள் இயக்கத்திற்குள் இருந்த தீவிர ஆயுத விரும்பிகள் மட்டுமே. அதற்குள் இந்த சேரமான் போன்றவர்களும் மேலும் பல குறூப்களாக இருப்பவர்களும் அடங்குவர். தமது தவறுகளை மறைக்கவே அமெரிக்காமீதும், எரிக் சோல்கைம்மீதும் முழுப்பழியையும் சுமத்தினார்கள்.

உலக அரசியல் மேதைகளாக இல்லாமல் சாதாரண பத்திரிகை வாசிப்பு மூலம் உலக அரசியலை தெரிந்த சாமான்ய மக்களுக்கே தெரியும் இனி யுத்தம் தொடங்கினால் மக்களின் அழிவு மிக மோசமாக இருக்கும் என்று.   இறுதியில் அதுவே நடந்தது.  மக்களின் அழிவின் பின்னரும் யுத்தக்குற்றங்களை சாட்டி நாடு பிடிக்கலாம் என்று கனவில் வாழ்ந்தவர்களும் இவர்களில் உள்ள அனைத்து குறூப்பகளிலும் உள்ள தேசியம் பேசி ஏமாற்றிய வீணர்களே. 

இவ்வாறு ஏமாற்றிய கள்வர்கள் எல்லா குறூப்களிலும் இருக்க அனைத்து தவறுகளையும் உருத்திரகுமாரன் மீது போட்டு தப்பிக்க நினைக்கும் இந்த தேசியர்களின் வழமையான உத்தியே இந்த கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் இவர்களது எழுத்துலகமும்:

1. வன்னிக்கு இரண்டு தரம் போனை போட்டவருக்கு, வணங்காமண் எந்த துறை முகத்துக்கு வருகிறது என்று போனை போட்டு கேட்க முடியவில்லை.

2. வெம்ளி, ஈலிங் றோட் ஈழபதீஸ்வர ஆலய பொறுப்பாளர் ஜெயதேவன், குறித்த ஒரு செய்தி ஐபிசி வெளியிட்டிருந்தது. பிரித்தானிய சட்டப்படி அவரிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும், அல்லது, அவர் கருத்து சொல்ல முன் வரவில்லை என்றாவது சொல்லி இருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல், இந்த செய்தி ஆசிரியர்கள், ஐபிசி முதலாளி, சத்தி அண்ணரை நீதிமன்றில் ஒரு மில்லியன் பவுன் இழக்க வைத்தார்கள்.

3. இதனால் அவர் துண்டைக்காணம், துணியை காணம் என்று ஓட, lebera வின் பாஸ்கரன் அதனை வாங்கி, யாழ்ப்பாணத்தில் ஸ்டூடியோ அமைத்து, இன்று ஐபிசி, இலங்கை அரசுக்கு எதிராக இயங்க முடியா நிலை.

4. கலங்கிய சேத்து நீரில், வயிறு நிறைய அடித்து விட்டு, முதலைகள் அடியில் பதுங்கி விட்டன. அடித்த காசை, பங்கு சந்தையிலும், வியாபாரத்திலும் விட்டு விட்டு.....அவ்வப்போது, வெளியே வந்து தமிழ் தேசியம் பேசும். இவர்.... வெளியே இருந்து கத்தும் தவளை போலவே உள்ளது. யாருக்கோ எச்சரிக்கை விடுகிறார் போல தெரிகிறது.

5. KP முதல், இங்கே சொன்ன இன்னொருவர் வரை, மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்படவில்லை, தாமாகவே போய், சுருட்டிய பணத்தில் பங்கு கொடுத்து, தமது விடுதலையினை வாங்கியவர்கள். அதுமட்டுமல்ல, பங்கைப் பிரி என்று அலுப்பு தருபவர்களுக்கு அல்வாவும் கொடுத்ததாகிறது.

6. நாகத அரசின், அரசியல் செயல்பாடுகள், எப்படி இருந்தாலும், அது அடிப்படையில் மக்களால் ஜனநாயக முறையில் தெரிவானது என்பது மறுக்கமுடியாது.

Edited by Nathamuni

சேரமான் நேர்மையானவராக மாற இருந்தால் நேர்மையாக எழுதியிருக்க வேண்டும். இங்கேயும் தனது கள்ளக் குணத்தினையே எழுத்தில் காட்டியுள்ளார். இது தனது பேரம் பேசும் வலுவை அதிகரிக்கவே இந்த வெளியீடே தவிர நேர்மையின் வெளிப்பாடு அல்ல. இவர் இவ்வளவு காலமும் எழுதியதால் போரட்டம் முடிவுக்கு வந்தாலும் பொய்களாக எழுதி பலரை ஏமாற்றியதற்கு என்ன சொல்லப்போகின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

சேரமானின் கமல் கதைக்கு ஈழம் ரஞ்சனிடமே ஆதாரம் இல்லை .தேவையற்ற குழப்பம் புதிதாய் வந்த ஒருதரால் நடக்குது . 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாவீரர் தினம் வரும்போதும் இப்படி பல கதைகள் வரும் அதனால் இங்கு, முகநூலில்  எதிர் கருத்து வைப்பவர்களில் ஒருத்தரும் மண்டபத்துக்கு வருவதில்லை வழமை போல் தேசிய வீரர்களின் நினைவேந்தல் நடந்துதான் ஆகும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2021 at 15:56, கிருபன் said:

இரண்டு வருட சேவைக்கா மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்டார்?

கலாநிதி சேரமான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையும் இருக்கு

https://www.e-ir.info/2014/10/16/beyond-the-military-front/

இவர் எந்த துறையில் கலாநிதி பட்டம் எடுத்தார்? எந்த பல்கலைகழகத்தில்?

19 hours ago, பெருமாள் said:

ஒவ்வொரு மாவீரர் தினம் வரும்போதும் இப்படி பல கதைகள் வரும் அதனால் இங்கு, முகநூலில்  எதிர் கருத்து வைப்பவர்களில் ஒருத்தரும் மண்டபத்துக்கு வருவதில்லை வழமை போல் தேசிய வீரர்களின் நினைவேந்தல் நடந்துதான் ஆகும் .

இவர் கூறுவதை பார்த்தால் 2008இன் பின்னர் இணையத்தில் வெளிவிடப்படும் அனாமதேய மாவீரர் தின உரைகளை இவர் தான் எழுதினாரோ தெரியாது. 

On 24/10/2021 at 13:00, ஆ.சாமி said:

சேரமான் நேர்மையானவராக மாற இருந்தால் நேர்மையாக எழுதியிருக்க வேண்டும். இங்கேயும் தனது கள்ளக் குணத்தினையே எழுத்தில் காட்டியுள்ளார். இது தனது பேரம் பேசும் வலுவை அதிகரிக்கவே இந்த வெளியீடே தவிர நேர்மையின் வெளிப்பாடு அல்ல. இவர் இவ்வளவு காலமும் எழுதியதால் போரட்டம் முடிவுக்கு வந்தாலும் பொய்களாக எழுதி பலரை ஏமாற்றியதற்கு என்ன சொல்லப்போகின்றார்?

இரண்டு விடயங்களை தெளிவுற கூறலாம்.

1- இவர் இதை எழுதியதன் உள்நோக்கம்.

2- தமிழ் ஊடகங்கள் நம்ப தகுந்தவை இல்லை.

மக்களை சொந்த புத்தி அற்ற, சுயமாக சிந்திக்க தெரியாத மந்தைகள் என நினைக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இவர் எந்த துறையில் கலாநிதி பட்டம் எடுத்தார்? எந்த பல்கலைகழகத்தில்?

அந்த லிங்கில் பார்த்தால் தெரிந்திருக்குமே.

Politics/International Relations இல்  Brunel university இல் ஆராய்ச்சி செய்தார்.

இன்னும் அறிய: https://www.routledge.com/authors/i16578-arsriskanda-rajah

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் அவன்-இவன் கூறித்தான் எழுதினேன் என்கின்றார். அப்படியானால் இவ்வளவு படிப்பு படித்தும் சொந்தப் புத்தி இல்லாமல்தானே இருந்து இருக்கின்றார்.

முன்னர் எழுதியபோது எல்லாம் பிறர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி எழுதியுள்ளார். அப்படியானால் இவரால் அவதூறாக குற்றம் சாட்டப்பட்ட பல குடும்பங்களின் மன உளைச்சல்களுக்கு இவர் எத்தகைய பதிலை வழங்குவார்?

'புதினம்' இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார். அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தினை நாம்  நகர்த்த வேண்டும் என்று வழுதி எழுதிய போது- அந்த இணையத்தளம் மீதும் அதனை எழுதியவர் மீதும் இல்லாத - பொல்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்களே அதற்கு என்ன பதிலை வழங்க போகின்றார்?

சிங்கள அரசினாலோ அல்லது இந்திய அரசினாலோ அச்சறுத்தலுக்குள்ளாகாத அந்த இணையத்தளத்தினை மூட வைத்த பெருமைக்குரியவர்களாக புலத்தில் உள்ள விடுதலைப் புலிகளுக்காக பணி புரிந்தவர்கள் என்பதுதான் இங்கே சோகமான விடயம். 

காலம் ஒருநாள் யாவற்றுக்கும் பதில் கூறும் என்பார்கள். அதில் ஒன்று சேரமான் என்கின்ற பாம்பு புற்றுக்குள்ளில் இருந்து வெளிவந்து விட்டது. மிக விரைவில் யாவும் வெளிவந்தே தீரும். காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. 

கவலை என்னவெனில், இவர்களின் பணத்தாசைக்கு பாவம் அப்பாவி முன்னாள் போராளிகள்தான் இன்று நடுத்தெருவில் வாழ்ந்து வருகின்றனர். 

இனியாவது அனைவரும் விடுதலைப் புலிகளுக்காக  புலத்தில் பணியாற்றுவதாக கூறுபவர்களின் கதைகளை நம்பாது தெளிவோடு செயற்பட்டால் சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் மண்ணையும் மக்களையும் காப்பாற்றலாம்.  

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2021 at 17:30, நிழலி said:

மிகத் திறமையான கணணிப் பிரிவையும், தொழில்நுட்ப அறிவையும் பேணியவர்களாக புலிகள் இருந்தனர். வன்னியேலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளை வைத்து இருந்தனர். அப்படி இருந்தவர்கள், ஆட்கள் இல்லாமல் முக முக்கியமானவரது மின்னஞ்சலை வெளிநாட்டில் இருப்பவர் மூலம் திறந்து கடவுச்சொல்லையும் அவ்வளவு காலம் மாற்றாமல் இருந்தனர் என்பதெல்லாம் ஆவி கள்ள ஓய்வுக்கு போகும் முன் உள் நோக்கத்துடன் செய்த உளறலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இங்கு இப்படி எழுதிய நீங்கள்,

பகலவன் தனது ஆக்கம் ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்த பயிற்றப்பட்ட போராளிகளை கடைசி நேரத்தில் தொடர்பு கொள்ளாமல் போனமைக்கு காரணம் இராணுவம் தொடர்பாடல் வசதியை செயல்இழக்க செய்தமையே என்று பதிந்திருந்தார். அந்த திரியில் நீங்கள் ஒன்றும் கூறவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பகலவன் சொல்வதும் சரியில்லையே..... கடைசி நேரத்தில், சூசை, நடேசன், தமிழகத்தில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். ஜநா, இறந்த ரைம்ஸ் பத்திரிகையாளர், எரிக், மற்றும் கொழு்புடன் கூட தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

இந்த ஆவியர்...... அவிச்சு இறக்கியிருக்கிறார்.... 🤗

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

யாழ்ப்பாணத்தில் இருந்த பயிற்றப்பட்ட போராளிகளை கடைசி நேரத்தில் தொடர்பு கொள்ளாமல் போனமைக்கு காரணம் இராணுவம் தொடர்பாடல் வசதியை செயல்இழக்க செய்தமையே என்று பதிந்திருந்தார்.

தொடர்பாடலுக்கு வயர்லெஸ் செற் பாவிக்கும் நிலையில் யாழில் இருந்த போராளிகள் இருந்திருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அப்போது மொபைல் ஃபோன் பாவனையில் இருந்தது என்று நினைக்கின்றேன். சண்டை ஆரம்பிக்க மொபைல் நெற்வேர்க்கை நிறுத்தியதால் தொடர்பாடல் இல்லாமல் போயிருக்கும்.

52 minutes ago, Nathamuni said:

கடைசி நேரத்தில், சூசை, நடேசன், தமிழகத்தில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். ஜநா, இறந்த ரைம்ஸ் பத்திரிகையாளர், எரிக், மற்றும் கொழு்புடன் கூட தொடர்பில் இருந்திருக்கிறார்கள்

சற்றலைற் ஃபோன் கேள்விப்பட்டதில்லையா? அதிலும் துரையா என்று ஒரு வகை பாவனையில் இருந்தது. இதை சண்டைகளில் போராளிகள் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள்.

54 minutes ago, Nathamuni said:

இந்த ஆவியர்...... அவிச்சு இறக்கியிருக்கிறார்

அவர் பல வருடங்களாக அதைத்தான் செய்தவர். இப்ப அவிக்க சரக்கில்லாமல் மெளனமாகிவிட்டார். அதோடு சன்மானமும் குறைந்திருக்கும்.

ஆனால் ஆவியர் உருத்திராவுடன் மட்டும் கள்ளமொளிச்சு விளையாடுவாரம்😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

தொடர்பாடலுக்கு வயர்லெஸ் செற் பாவிக்கும் நிலையில் யாழில் இருந்த போராளிகள் இருந்திருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அப்போது மொபைல் ஃபோன் பாவனையில் இருந்தது என்று நினைக்கின்றேன். சண்டை ஆரம்பிக்க மொபைல் நெற்வேர்க்கை நிறுத்தியதால் தொடர்பாடல் இல்லாமல் போயிருக்கும்.

சற்றலைற் ஃபோன் கேள்விப்பட்டதில்லையா? அதிலும் துரையா என்று ஒரு வகை பாவனையில் இருந்தது. இதை சண்டைகளில் போராளிகள் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள்.

அவர் பல வருடங்களாக அதைத்தான் செய்தவர். இப்ப அவிக்க சரக்கில்லாமல் மெளனமாகிவிட்டார். அதோடு சன்மானமும் குறைந்திருக்கும்.

ஆனால் ஆவியர் உருத்திராவுடன் மட்டும் கள்ளமொளிச்சு விளையாடுவாரம்😂

நான் அறிந்த வகையில், வன்னிப்பகுதியில், மொபைல் தடை முதலே இருந்தது. Walkie, Talkie பயன்படுத்தினார்கள் என்றும், தென் இந்திய மொபைல் நெட் ஒர்க்கினை சிறிய, கோபுரம் வைத்து, பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. தவறாகவும் இருக்கலாம்.

இன்றும் கூட, நெடுந்தீவில், இந்திய மொபைலும், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் இலங்கை மொபைலும் வேலை செய்கிறது. 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.