Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்!

spacer.png

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தேசிய மொழியான இந்தியை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை சுட்டிக் காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல... நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்று தான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.

ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தனியார் உணவு வினியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘‘ இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

தமிழகத்தில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை.

தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழக அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும்.

ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணி இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தனிச் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாட்டை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தால்,‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

அதை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். அதேபோல், 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை தவிர்த்த பிற பணிகள் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் இடை நிலைப் பணிகளில் 50% இடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் மொழி சார்ந்து அவமதிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும்.

எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப் படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
 
https://minnambalam.com/politics/2021/10/20/17/pmk-ramadoss-says-job-should-be-allocate-to-only-tamil-people

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியனுக்கு என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

1 hour ago, கிருபன் said:

கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏனைய மாநிலங்கள் கன்னடிகா, தெலுங்கு, குஜராத், மராட்டிய இன மக்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கி உள்ளனவா?

அல்லது உள்ளூர் மக்களுக்கு இடம் ஒதுக்கி உள்ளனவா?

மற்றைய மாநிலங்கள் போல தமிழ்நாடும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.

ஆனால் ராமதாஸ் இங்கே வார்த்தைகளை வைத்து ஜில்மால் பண்ணுவதாக தெரிகிறது.

  • 2 weeks later...

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

15 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டில்  உள்ளூர் மக்களை புறக்கணித்து அயல் மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வந்து வேலை நியமனம் வழங்குவது என்றால் அது மிக மிக தவறான செயல்.  அதை பற்றி மட்டும் ராம்தாஸ் கூறி இருந்தால் அவரது கருத்து நியாயமானது தான். வரவேற்க்கப்படவேண்டியது.  

ஆனால் தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழும் மக்களை தமிழரில்லை என்று வேலையில் பாரபட்சம் காட்டுவது  தவறானது. அது சரி என்று யாராவது இங்கு வாதாடினால் இலங்கையில் சிங்களவரிடன் இனவாத பாரபட்சமும் சரி என்றாகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

துல்பன், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர குடிமக்களாகி, பள்ளிகளில் தமிழை படித்திருந்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தால், தமிழ்நாடு அரசுப் பணிகளில் இதுவரை சேருவதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் தமிழே தெரியாமல், நேரடியாக தமிழ்நாடு அரசுப்பணிகளில் அனுமதிப்பது தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:

ராமதாஸ் சொல்லியிருப்பது உண்மைதான்.

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றுவரை அரசுப்பணிகளில் தமிழர் அல்லாதோர் பணியில் சேர முடியும். பிற மாநிலங்களில் உள்ள அரசுப்பணிகளில் விண்ணப்பிக்க, அம்மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்றிதழை இணைக்க வேண்டும்.

நான் அரசுப் பணியில் இருந்தபோது மல்லுகள், கொல்டிகள், அல்லி பாலா போன்ற பிற மாநிலத்தவர்களும் தமிழக அரசுப் பணியில் இருந்தனர்.

சமீபத்தில் திருச்சி ரயில்வே பணிமனை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள வேலைகளில் 90% சதவீததிற்கும் மேலானவர்கள் அயல் மாநில மக்களே பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்வளவு ஏன், இங்கே அமீரகத்தில் ஓரளவு படித்திருந்தால் போதும், அவர்தான் அந்த பிரிவிற்கு முதிர் (மேலாளர்).

எனது அலுவலகத்தில் உள்ள இயக்குநர் உள்ளூர் பெண்ணிற்கு வயது 26 அல்லது 27 தான் இருக்கும். அவரின் கீழ்தான் அனைத்து நாட்டவரும் பணி புரிய வேண்டும்.

மண்ணின் மைந்தர்களுக்கு கொடுப்பதில் ஒரு தவறும் இல்லை வன்னியன்சார்.

ஆனால் அதை குறித்த மொழி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் அமல்படுத்துவதே நியாயமாக இருக்கும்.

”உள்ளூர்” வாசி என்பதற்கும் “இந்த இன உரிமையுள்ளவர்” என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

சில நன்கு தெரிந்த உதாரணங்களை தருகிறேன்.

1. அன்புமணி இராமதாஸ் (வன்னியர் சாதி - தமிழ் வம்சாவழி)

2. துரை வையாபுரி ( தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக வாழும் - நாயக்கர் தெலுங்கு வம்சாவவழி)

3. ரங்கராஜ் பாண்டே (ஒரு தலைமுறைக்குள் தமிழ் நாட்டுக்கு வந்த, ஆனால் தமிழ் புலமையுள்ள வெளி மாநிலத்தவர்) 

4. பியூஸ் மனூஸ் - அதிகம் தமிழ் மொழி ஆற்றல் அற்ற வெளி மாநிலத்தவர், ஆனால் தமிழ்நாட்டில் வசிக்கிறார். சுற்று சூழல் ஆர்வலர்.

5. தமிழ் நாட்டில் வசிக்காத வெளிநாட்டவர்.

இதில், 5ம்  வகையினரை, 4 ம் வகையினரை பின் தள்ளுவதில் அதிக நியாய கேடு இருக்காது.

ஆனால் 2ம் வகையினரை பிந்தள்ளுபது சரிவருமா?

அதே போல் மொழி தேர்ச்சி அடிப்படையில் தேரும் போது 3 ம் வகையினரை தவிர்க்க முடியாது.

அரபு தேசங்களில் பெண்ணடிமைதனம், கையை வெட்டல் என பல மிலேச்சங்கள் உள்ளன, அதில் ஒரு அங்கம்தான் இதுவும். 

3 minutes ago, ராசவன்னியன் said:

துல்பன், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர குடிமக்களாகி, பள்ளிகளில் தமிழை படித்திருந்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தால், தமிழ்நாடு அரசுப் பணிகளில் இதுவரை சேருவதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் தமிழே தெரியாமல், நேரடியாக தமிழ்நாடு அரசுப்பணிகளில் அனுமதிப்பது தவறுதான்.

இது மிக நியாயமான கோரிக்கை.

ஆனால் தமிழ் நாட்டில் இதையும் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களையும் ஒன்றாக போட்டு குழப்பி ஒரு சிலர் விஷமம் பண்ணுவதால் - இந்த நியாயமான கோரிக்கையும் அடிபட்டு போகிறது 🙁.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

ஆனால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலே செல்வது கடினம் இல்லையா ?

2 minutes ago, Kapithan said:

 சுவிஸ்  சமஸ்டி அரசின் சுகாதார அமைச்சில் கூட தமிழ் பெண் வேலை செய்கிறார். இவ்வாறாக சட்டம் போடுவது சுவிஸ் அரசியல் அமைப்பை மீறுவதாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிந்தனை ஒன்றும் உலகத்திற்குப் புதிதல்ல. காலம் முழுவதும் உலகெங்கும் இந்தச் சிந்தனை உயிர் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை பேணவே விரும்புகின்றனர். 

தனக்கு மிஞ்சினால் தானம் என்பதில் தவறு இல்லை. 

நீங்கள் கூறும் விடயத்திற்கு ராஜவன்னினுடனானான உரையாடலில் அவரும் தெளிவாக பதிலளித்துள்ளார். கோசானும் அதை தெளிவாக விளக்கி உள்ளார்.  உள்ளூரில் வாழும் மக்களுக்கு முதன்மை அளிக்கப்படல் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

நல்ல காலம் சுவிற்சர்லாந்து இப்படி எல்லாம் கிறுக்கு தனமாக யோசிக்கவில்லை.  இப்படி சட்டம் இங்கு கொண்டுவந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது. இங்கு பல தமிழ் இளைய தலைமுறையினர் அரசு பணிகளில்  வேலை செய்கின்றனர்.  

மாற்றம் ஒன்றே மாறாதது.அதை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பது  நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

23 minutes ago, குமாரசாமி said:

மிக தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அந்த மாநிலத்தில் பல தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டுவது என்பது தவறானது என்பதை  ராஐவன்னியர் கோசான் ஆகிய இருவரும் மிக தெளிவாக விளக்கிய பிறகும் இந்த சின்ன விடயம் புரியாமல் இருப்பது ஏனோ? 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, tulpen said:

மிக தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. அந்த மாநிலத்தில் பல தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டுவது என்பது தவறானது என்பதை  ராஐவன்னியர் கோசான் ஆகிய இருவரும் மிக தெளிவாக விளக்கிய பிறகும் இந்த சின்ன விடயம் புரியாமல் இருப்பது ஏனோ? 😂😂

எந்த சந்தேகமுமில்லை  எல்லாம் வாசித்த பின் தான்  எனது கருத்தை எழுதினேன்.

 எனது கேள்வி சுவீஸ் நாட்டைப்போல் எல்லா விடயத்திற்கும் சர்வசன வாக்கெடுப்பு இலங்கை இந்தியாவில் சாத்தியமா?

3 minutes ago, குமாரசாமி said:

எந்த சந்தேகமுமில்லை  எல்லாம் வாசித்த பின் தான்  எனது கருத்தை எழுதினேன்.

 எனது கேள்வி சுவீஸ் நாட்டைப்போல் எல்லா விடயத்திற்கும் சர்வசன வாக்கெடுப்பு இலங்கை இந்தியாவில் சாத்தியமா?

நீங்கள் கூறிய வியத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்த மாநில தண்ணீர்ப்பிரச்சனைக்காக அந்த மாநிலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டவேண்டும் என்று நீங்கள் கூட கூறமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

 சுவிஸ்  சமஸ்டி அரசின் சுகாதார அமைச்சில் கூட தமிழ் பெண் வேலை செய்கிறார். இவ்வாறாக சட்டம் போடுவது சுவிஸ் அரசியல் அமைப்பை மீறுவதாகும். 

ஆனால் theory &  practice இரண்டுமே வேறு வேறானவைதானே. 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சட்டங்களும் தீர்ப்புகளும் சீரழிந்த நாடுகள் சிறிலங்காவும் இந்தியாவும்......அந்த நாடுகளில் நடப்பவற்றை சுவீஸ் நாட்டு  சட்டங்களோடும் நீதி நியாயங்களோடும் ஒப்பிட்டு சிந்திப்பது எவ்வளவு மூடத்தனம்?

சுவிற்சலாந்தில் ஒரு சிறிய சட்ட நிறைவேற்றலுக்கும் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவார்கள்ள். மக்களின் தீர்ப்பு அங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இலங்கை அல்லது இந்தியாவில்......??????

தமிழ்நாட்டுக்கு தண்ணி குடுக்காத அயல் மாநிலங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் சகலருக்கும் சம உரிமை எந்தளவில் நியாயம்?

வாய்க்கால் தண்ணீரை பக்கத்து வயலுக்கு  பாத்தி கட்ட  மனம் ஒப்பாது ஆனால் ஆவனுடைய பிள்ளைகளுக்கு என்னுடைய வயல் அறுவடை  வேண்டும். 

நல்ல நீதி நல்ல நியாயம். 😉

  • கருத்துக்கள உறவுகள்

சனதொகை குறைந்த சுவிஸுடன் மக்கள் தொகையில் கூடிய தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு முக்கிய சந்தில் நின்று வெளி மாவட்ட மக்களுக்கும் வேலை வேணும் என்று போட்  பிடித்தால் அடுத்தநிமிடம் அங்குள்ள சனம்  பின்னி பெடலெடுத்து விடும் அளவில் தமிழ் நாட்டு வேலையில்லா திண்டாட்டம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, tulpen said:

நீங்கள் கூறிய வியத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்த மாநில தண்ணீர்ப்பிரச்சனைக்காக அந்த மாநிலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு பாரபட்சம் காட்டவேண்டும் என்று நீங்கள் கூட கூறமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். 

 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன மாநிலத்தில் வாழும் தமிழர்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளை நீங்கள் காணாவிட்டால் நீங்கள் ஒரு கிணற்று தவளை.

பல சான்று காணொளிகள் இருக்கின்றன. அதை உங்களுக்காக இணைத்து பயனில்லை. எருமை மாட்டில் மழை பெய்த கதையாகத்தான் முடியும்.

15 minutes ago, குமாரசாமி said:

 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன மாநிலத்தில் வாழும் தமிழர்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளை நீங்கள் காணாவிட்டால் நீங்கள் ஒரு கிணற்று தவளை.

பல சான்று காணொளிகள் இருக்கின்றன. அதை உங்களுக்காக இணைத்து பயனில்லை. எருமை மாட்டில் மழை பெய்த கதையாகத்தான் முடியும்.

 அடுத்தவன் நட்டில் வந்து வாழ்ந்து பிள்ளைகளையும் படிப்பித்து வளமுடன் வாழும் நீங்கள் அடுத்த நாட்டில் பல தலைமுறையாக  வாழும் மக்கள் மீது இவ்வளவு வன்மத்துடன் பேசுகின்றீர்களே. உங்களை விட கோட்டபாய மகிந்த கும்பல் எவ்வளோ மேல். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, tulpen said:

 அடுத்தவன் நட்டில் வந்து வாழ்ந்து பிள்ளைகளையும் படிப்பித்து வளமுடன் வாழும் நீங்கள் அடுத்த நாட்டில் பல தலைமுறையாக  வாழும் மக்கள் மீது இவ்வளவு வன்மத்துடன் பேசுகின்றீர்களே. உங்களை விட கோட்டபாய மகிந்த கும்பல் எவ்வளோ மேல். 

அடுத்தவன் நாட்டில் நான் வாழ்ந்தாலும் நான் தற்போது வாழும் நாட்டைப்போல் சகல அரசியல் உரிமைகளும் தனி மனித சுதந்திரமும் நான் பிறந்த நாட்டிலும்  இருக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது ஐயா?

மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நானும் கேட்டால் உங்களுக்கு வன்மமாகத்தான் தெரியும்.

சுவீஸ் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உள்ள உரிமை வடகிழக்கு பகுதி வாழ் தமிழ் மக்களுக்கு இருக்கின்றதா???

8 minutes ago, குமாரசாமி said:

உரிமையை கேட்கும் நீங்கள் அடுத்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு இயல்பாக இருக்கும் உரிமையை மறுக்கும் உரிமை உங்களுக்கு அறவே இல்லை.  இங்கு அடுத்த மாநில மக்களைப்பற்றிய பேச்சே இல்லை. அது வேறு விடயம் . அது பற்றி விரிவாக உரையாடப்பட்டு விட்டது. 

7 hours ago, பெருமாள் said:

சனதொகை குறைந்த சுவிஸுடன் மக்கள் தொகையில் கூடிய தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு முக்கிய சந்தில் நின்று வெளி மாவட்ட மக்களுக்கும் வேலை வேணும் என்று போட்  பிடித்தால் அடுத்தநிமிடம் அங்குள்ள சனம்  பின்னி பெடலெடுத்து விடும் அளவில் தமிழ் நாட்டு வேலையில்லா திண்டாட்டம் .

அவ்வாறு நான்  கூறவில்லை என்பது தெரிந்தும்   போக்கில் உங்கள் பங்களிப்பாக  ஒரு  படுபொய்யை கூறிவிட்டு செல்வதேன்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.