Jump to content

31ஆண்டுகள் கடந்த நிலையிலும் யாழ்.முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு முற்றுப்புள்ளியா?


colomban

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

20211027_083506.jpg

பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்.

யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 31ஆண்டுகளாகின்றன. 31ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.

 

“யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்

 

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள். 

 

காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று "இளம்பருதி" கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். 

 

புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா? 

 

ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம். 

 

பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.

 

பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது......

 

 விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள். 

 

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

 

2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 

 

காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது. 

 

முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 31 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.

 

தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம். 

 

 

 

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம். 

 

 

யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்...!! 

பரீட் இக்பால்

யாழ்ப்பாணம்.

 

https://www.madawalaenews.com/2021/10/31_27.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப இவிங்களை மீள  குடியேற   யார் தடுக்கிறங்கா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்

Posted by eelamalar on May 24th, 2021 12:17 AM | செய்திகள்

மனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..

Puli.jpg

யாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் மனிதநேய அடிப்படையில் தான் முஸ்லீம்களை யாழ் மண்ணில் இருந்து அனுப்பி வைத்தார்கள். அன்று என்ன நடந்தது தெரியுமா ?யாழ் செம்மா தெருவில் அமைந்துள்ள ஒஸ்மானியா கல்லூரிக்கு பின்னால், விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. அங்கே சங்கிலியன் என்னும் போராளி ஒருவர் முஸ்லீம் வீடு ஒன்றில் வழமைக்கு மாறகாக சிலர் வந்து செல்வதை கண்டு சந்தேகமுற்றார். அவர் சென்று குறித்த வீட்டில் உள்ளவர்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் பெரும் பதற்றத்தோடு காணப்பட்டார்கள். இதனை அடுத்து புலிகளின் வேவுப்படை பிரிவு அங்கே சென்று விசாரணைகளை நடத்திக்கொண்டு இருக்க சோதனைப் பிரிவு சோதனைகளை நடத்த. வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்க்கப்பட்டது.1990களில் யாழ்ப்பாணத்திற்கு பொருளாதாரத் தடை இருந்தது. அதாவது உணவுப் பொருட்களை மட்டுமே கொழும்பில் இருந்து யாழ் கொண்டு செல்ல முடியும். அந்த வேளைகளில் லாரி உரிமையாளர்களாக இருந்த பல முஸ்லீம்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். அதிலும் “முபீன்” என்னும் பெரும் செல்வந்தரிடம் 40க்கும் அதிகமான லாரிகள் இருந்தது. இவர் உணவு பொருட்களை யாழ் கொண்டு வரும் வேளை. சிங்கள அரசு கொடுத்துவிட்ட பெருந்தொகையான ஆயுதங்களையும் கொண்டு வந்து யாழில் பல முஸ்லீம்களிடம் கொடுத்து அதனை மறைவாக வைத்திருக்க சொல்லி இருந்தார். ஏன் எதற்கு என்று சொல்லவில்லை.இதனை கண்டறிந்த புலிகள் சகல வீடுகளையும் சோதனை போட்டு பெரும் தொகையான ஆயுதங்களை மீட்டார்கள். உடனே புலிகளின் மத்திய குழு கூடி ஒரு முடிவை எட்டினார்கள். அது அதிர்சியான முடிவு தான். யாழில் இருந்து முஸ்லீம்களை மனித நேயத்தோடு அனுப்பி வைப்பது. அவர்கள் தமது உடமைகளை எடுத்துச் செல்லலாம். வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். மீண்டும் வரும்போது கையளிக்கப்படும். இதுவே எட்டப்பட்ட முடிவு. அதனை சுட்டறிக்கையாக அச்சடித்து உடனே அனைத்து முஸ்லீம் மத தலைவர்களிடம் கொடுத்தார்கள். வழி அனுப்பி வைத்தார்கள்.நாங்கள் உயிரைக் கொடுத்து சிங்களவனிடம் இருந்து, எமக்கான உரிமை வேண்டும். தனி அரசு ஒன்று அமைந்தால் தான் தமிழர்கள் நிம்மாதியாக வாழ முடியும் என்று போராடுகிறோம். போராட்டத்தில் எங்களுக்கு உதவி செய்ய வேண்டாம். காட்டிக் கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள், ஆமி காரன் முன்னேறி வந்தால் , வந்த ஆமிக்காரனுக்கு ஆயுத சப்பிளை செய்ய ஆயுதங்களை இப்பவே தயார் செய்து வைத்திருக்கிறீகள். எங்கள் போராட்டத்தை அதள பாதாளத்தில் தள்ள பார்கிறீர்கள். உங்களில் நல்லவர் யார் ? கெட்டவர் யார் என்று நாம் விவாதிக்க வரவில்லை. எனவே நீங்கள் போரில் இறக்காமல் இருக்கவும். பாதுகாப்பாக இருக்கவுமே உங்களை நாம் அனுப்பி வைக்கிறோம் என்று மதிப்போடு கூறி மனித நேயத்தோடு அனுப்பி வைத்தார்கள் புலிகள்.இன்று யாழில் குண்டு வெடிக்கவில்லையே…. அன்று புலிகள் எடுத்த முடிவு. இன்று இதனை எத்தனை பேர் சரி என்று சொல்கிறார்கள். அன்று எதிர்த்தவர்கள் கூட இன்று மனம் மாறியுள்ளார்களே…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

இப்ப இவிங்களை மீள  குடியேற   யார் தடுக்கிறங்கா ?

புத்த பிக்குகள். 😂 🤣

Posted
1 hour ago, பெருமாள் said:

இப்ப இவிங்களை மீள  குடியேற   யார் தடுக்கிறங்கா ?

உங்களுக்கு சிறி லங்காவில் என்ன பிரச்சினை? ஏன் கூண்டோடு கைலாயம் போனீர்கள்? 

1 minute ago, தமிழ் சிறி said:

புத்த பிக்குகள். 😂🤣

தமிழீழம் வேணுமா? இலாபாய் இலாபாய் 😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, colomban said:

அப்பாவி மக்களாகிய நாம்

???????????????????????????????????????????????????🧐

மிழின அழிப்பில் முஸ்லிம்களின் முக்கிய பங்கு

 முஸ்லீம்கள் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழிக்க எங்களுக்கு நிறைய உதவிகளை முஸ்லீம்கள் செய்தார்கள். அவர்கள் தமிழ் பேச வல்லவர்கள் என்பதனால் புலிகளின் இடங்களுக்குள் ஆள ஊடுருவி, எல்லா தகவல்களையும் எங்களுக்கு தந்தார்கள். மக்களோடு மக்களாக கலந்து எமக்கு புலனாய்வு தகவலை தந்ததும் அவர்களே....முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன் என்று கூட்டுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்தார்.

sl-army.jpg

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது இனவாத வன்முறையாகும். யுத்தமல்ல. எனவே எமது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போது அவசரகால நிலையின் கீழ் இந்த விடயத்தில் தலையிட எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் நாங்கள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.

 

தற்போது இராணுவத்தினர் அனைத்துப்பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒருவிடயத்தை கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு எமக்கு பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலைமை தொடர்பில் நான் கவலையடைகிறேன். நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://freegirel.blogspot.com/2018/03

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

இப்ப இவிங்களை மீள  குடியேற   யார் தடுக்கிறங்கா ?

எங்களை சிங்களம் திரத்தி அடிச்சது....
 

நாங்களும் திரும்பி போக முடியாமல் முழுசிக் கொண்டு நிக்கிறம்... இவயள் வேற..புலம்பிக் கொண்டு நிக்கினம்.... 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

AVvXsEhTJDxxp-ijbC3BGvQM6RuNodunG1BMvm2ZW7lkZsQs8EzCYpAeOiofFx9Mqo0sbc9slE5w-jQgStqSVgv_DirKUlZlEnRhHQXfrvpmg7aipgsoaDmNKDFXu-nc64ygroH8BdzVFzBmfCrL2Ds5G6YC3nToaLMh6cC2CaXryo6_KEKpKFskplDN_AW6=w466-h640

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு.. அதற்கு புலிகளே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கின்றனர்.. ஆகையால் அதை நியாயப்படுத்தி முட்டுக்கொடுப்பது தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அசிங்கம்..

அதேவேளை.. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.. எங்கள் ஊர் பள்ளிவாசலில் கூட குண்டுகள்வாக்கிடோக்கிகள் என்று பல ஆயுதங்களை புலிகள் கைப்பற்றி இருந்தனர்.. அப்பொழுது நான் சிறுவன்.. சந்தைக்கு அப்பாவுடன் போன இடத்தில் என்கண்களால் கண்டகாட்சி இது.. இது அந்த பள்ளிவாசலுக்கு செல்லும் அவ்வூர் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் தெரியும்.. யாரும் புலிகளுக்கு தெரிவிக்காமல் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர்.. அதுமட்டுமல்ல எங்கள் ஊரில் நிகழ்ந்த நாலைந்து விமானத்தாக்குதல்களுக்கு வாக்கிடோக்கி மூலம் கீழிருந்து புலிகளின் முகாம்கள் குறித்து தகவல் விமானிக்கு கொடுத்துக்கொண்டிருக்கும்போதே ஓரிரு முலீம்களை கையும் களவுமாக புலிகள் புலனாய்வுப்புரிவு எங்கள் ஊரில் கைது செய்ததை பார்த்திருக்கிறேன்.. இவர்கள் கொடுத்த தகவலில் வீசப்பட்ட குண்டுகளில் எமது ஊர் அப்பாவி சிறுவர் சிலரும் பொதுமக்களும் கொல்லப்பட்டிருந்தனர்.. எனது ஆதங்கம் இந்த விடுதலைப்போரில் முஸ்லீம்கள் ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை உபவத்திரவம் தராமல் தாமுண்டு தம்பாடு உண்டு என்று நடு நிலையாவது வகித்திருக்கலாம்.. ஆனால் துரதிஸ்டவசமாக முஸ்லீம்கள் வலிமை கூடியது தமக்கு பயன்தரக்கூடியது எதுவென்று பார்த்து அரச ஆதரவு நிலைப்பாடு எடுத்தது தமிழ் முஸ்லீம் இனங்களுக்குடையில் விழுந்த மாபெரும் பிளவுக்கோட்டுக்கும் அதன் விளைவாக நிகழ்ந்த மாறாவடுக்களுக்கும் காரணம் ஆகிவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு.. அதற்கு புலிகளே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கின்றனர்.. ஆகையால் அதை நியாயப்படுத்தி முட்டுக்கொடுப்பது தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அசிங்கம்..

அதேவேளை.. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.. எங்கள் ஊர் பள்ளிவாசலில் கூட குண்டுகள்வாக்கிடோக்கிகள் என்று பல ஆயுதங்களை புலிகள் கைப்பற்றி இருந்தனர்.. அப்பொழுது நான் சிறுவன்.. சந்தைக்கு அப்பாவுடன் போன இடத்தில் என்கண்களால் கண்டகாட்சி இது.. இது அந்த பள்ளிவாசலுக்கு செல்லும் அவ்வூர் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் தெரியும்.. யாரும் புலிகளுக்கு தெரிவிக்காமல் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர்.. அதுமட்டுமல்ல எங்கள் ஊரில் நிகழ்ந்த நாலைந்து விமானத்தாக்குதல்களுக்கு வாக்கிடோக்கி மூலம் கீழிருந்து புலிகளின் முகாம்கள் குறித்து தகவல் விமானிக்கு கொடுத்துக்கொண்டிருக்கும்போதே ஓரிரு முலீம்களை கையும் களவுமாக புலிகள் புலனாய்வுப்புரிவு எங்கள் ஊரில் கைது செய்ததை பார்த்திருக்கிறேன்.. இவர்கள் கொடுத்த தகவலில் வீசப்பட்ட குண்டுகளில் எமது ஊர் அப்பாவி சிறுவர் சிலரும் பொதுமக்களும் கொல்லப்பட்டிருந்தனர்.. எனது ஆதங்கம் இந்த விடுதலைப்போரில் முஸ்லீம்கள் ஆதரவு தராவிட்டாலும் உபவத்திரவம் தராமல் தாமுண்டு தம்பாடு உண்டு என்று நடு நிலையாவது வகித்திருக்கலாம்.. ஆனால் துரதிஸ்டவசமாக முஸ்லீம்கள் வலிமை கூடியது தமக்கு பயந்தரக்கூடியது எதுவென்று பார்த்து அரச ஆதரவு நிலைப்பாடு எடுத்தது தமிழ் முஸ்லீம் இனங்களுக்குடையில் விழுந்த மாபெரும் பிளவுக்கோடும் அதன் விளைவாக நிகழ்ந்த மாறாவடுக்களுக்கும் காரணம் ஆகிவிட்டது..

ஓணாண்டியார்… இதனைப் பற்றி, யாழ். களத்தில்… பல திரிகளில் பக்கம் பக்கமாக விவாதித்த பின்பும், மீண்டும் அதே தலைப்புகள் வருகின்ற பின்னணியையும் பார்க்க வேண்டும்.

கிழக்கு முஸ்லீம்கள்… தமிழனுக்கு செய்த கொலைகளையும், காணி அபகரிப்புகளையும்… தோண்ட வெளிக்கிட்டால், நாறிப் போயிடுவாங்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

ஓணாண்டியார்… இதனைப் பற்றி, யாழ். களத்தில்… பல திரிகளில் பக்கம் பக்கமாக விவாதித்த பின்பும், மீண்டும் அதே தலைப்புகள் வருகின்ற பின்னணியையும் பார்க்க வேண்டும்.

கிழக்கு முஸ்லீம்கள்… தமிழனுக்கு செய்த கொலைகளையும், காணி அபகரிப்புகளையும்… தோண்ட வெளிக்கிட்டால், நாறிப் போயிடுவாங்கள். 😡

இந்தக் கிழக்கில் முசிலீம்கள்🐷 செய்த குரூரங்களை தனியாக ஆவணப்படுத்த வேண்டும்.😈

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு.. அதற்கு புலிகளே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கின்றனர்.. ஆகையால் அதை நியாயப்படுத்தி முட்டுக்கொடுப்பது தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அசிங்கம்..

பாலபத்திர ஓணாண்டி அவர்களே! புலிகளே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கின்ற போது அதை நியாயப்படுத்தி முட்டுக்கொடுக்க... தமிழ்தேசியத்தை நேசிக்கும் எந்தத் தமிழனும் முன்வரப்போவதில்லை. வரவும் மாட்டார்கள். இந்தத் திரிக்கான எனது பின்னூட்டமும் அப்படியானதல்ல.

ஆனால்....பரீட் இக்பால் என்ற அந்த மனிதப் பிறவி தெரிவித்த விடயங்கள் எத்தனை அபத்தமானவை.   இதனை ஏற்று, எந்தப் பதிலும் கொடுக்காது இருப்பதுதான் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அசிங்கம்..

 

1 வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.

2 இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” 

3 புலிகள் மனமிரங்கவில்லை. இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். 

4 இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. 

5 புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள்.

6 பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. 

7 சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். 

 

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் ஒருவர் எதையும் எழுதிவிடலாமா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Paanch said:

பாலபத்திர ஓணாண்டி அவர்களே! புலிகளே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கின்ற போது அதை நியாயப்படுத்தி முட்டுக்கொடுக்க... தமிழ்தேசியத்தை நேசிக்கும் எந்தத் தமிழனும் முன்வரப்போவதில்லை. வரவும் மாட்டார்கள். இந்தத் திரிக்கான எனது பின்னூட்டமும் அப்படியானதல்ல.

ஆனால்....பரீட் இக்பால் என்ற அந்த மனிதப் பிறவி தெரிவித்த விடயங்கள் எத்தனை அபத்தமானவை.   இதனை ஏற்று, எந்தப் பதிலும் கொடுக்காது இருப்பதுதான் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அசிங்கம்..

 

1 வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.

2 இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” 

3 புலிகள் மனமிரங்கவில்லை. இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். 

4 இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. 

5 புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள்.

6 பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. 

7 சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். 

 

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் ஒருவர் எதையும் எழுதிவிடலாமா??

இதை சிங்களத்தில் ‘பொய் பொத்தல்’ என்பார்கள் என்று கொழும்பார் சொல்லி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகள் மன்னிப்புக் கேட்டு விட்டனர், அது தவறென ஒத்துக் கொண்டு விட்டனர் . மேலும், புலிகள் வெளியேற்ற முடிவெடுத்ததற்கும் சாதாரண தமிழ் மக்களின் அபிப்பிராயத்திற்கும் கட்டுரையாளர் சொல்லியிருப்பது போல வேறு பாடு இருந்தது. மதத் தலைவர்கள் புலிகளின் முடிவை மாற்ற முயற்சித்தனர் . சாதாரணமக்களும் உதவ முயன்றனர். யாழ் தபாலகத்தில் பணியாற்றிய முஸ்லிம் இளைஞர்களின் நலன்களை அந்த நேரத்தில் காக்க தபாலக ஊழியர் சங்கத்தில் இருந்த என் தந்தை உடபட்ட பல தபாலக அதிகாரிகள் புலிகளுடன் வாதாடியது எனக்குத் தெரியும். 

ஆனால், கட்டுரையாளர் சொல்வது போல உடனடியான சூறையாடல் நடக்கவில்லை. ஒரு கொஞ்சப் பணம் எடுத்துக் கொண்டு, மிகுதி எல்லாச் சொத்துக்களையும் விட்டு செல்லுமாறு தான் உத்தரவு. யாழ் நவீன சந்தையின் முஸ்லிம் வியாபாரிகள் பலர் புலிகளிடம் கடைச் சாவிகளை விட்டுச் சென்றனர். சிலர் கொடுக்காமலே சென்றனர். சாவி இருந்த கடைகள் சில மாதங்கள் கழித்து திறக்கப் பட்டன, சாவி இல்லாதவை உடைக்கப் பட்டன. அந்தக் கடைகளில் இருந்த பொருட்கள் தான் புலிகளால் திறக்கப் பட்ட "எழிலகம்" விற்பனை நிலையத்தில் பனையுற்பத்திப் பொருட்களோடு சேர்த்து விற்பனைக்கு வைக்கப் பட்டன. 

எனவே, கட்டுரை சொல்லும் தகவல்கள் சில மிகைப் படுத்தப் பட்டவை. ஆனால், புலிகளின் தற்போதுள்ள வால்கள் சொல்வது போல , "மிக மனிதாபிமான முறையில்" அனுப்பி வைக்கப் பட்டனர் என்பது கட்டுரையாளரின் மிகைப்படுத்தலை விடப் பெரிய பூச்சுத்தல்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு.. அதற்கு புலிகளே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருக்கின்றனர்.. ஆகையால் அதை நியாயப்படுத்தி முட்டுக்கொடுப்பது தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அசிங்கம்..

எல்லாம் சரி இப்பவும் புலிகள் தான் மீள் குடியேற தடையாய் இருக்கினமா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போது இலங்கையில் முஸ்லீம்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது என யாராவது சொல்லி தொலையுங்கப்பா.....மண்டை வெடிக்குது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தக் கிழக்கில் முசிலீம்கள்🐷 செய்த குரூரங்களை தனியாக ஆவணப்படுத்த வேண்டும்.😈

நிச்சயமாக...  ஆவணப்படுத்த வேண்டும்.
உங்களால் அல்லது ரஞ்சித்தால்  முடியும். 👍

இல்லாவிடில்.... வருடா வருடம், இதே வேலையாக...  
புலிகளை, வம்புக்கு இழுத்துக் கொண்டு இருப்பார்கள்.  😡

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக...  ஆவணப்படுத்த வேண்டும்.
உங்களால் அல்லது ரஞ்சித்தால்  முடியும். 👍

இல்லாவிடில்.... வருடா வருடம், இதே வேலையாக...  
புலிகளை, வம்புக்கு இழுத்துக் கொண்டு இருப்பார்கள்.  😡

முயற்சிக்கிறேன்.👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரிசாத்துப் பையனும் 200 ரூபாவோடை தானை போனவர்....இப்ப

  • கருத்துக்கள உறவுகள்
Posted

AVvXsEjH9zzVVa0unnsTpgBYq6LceOJj4BeXFo_maHF6Uom3HBF9vv1TfJIzWgRJra-ISB3KUGrkpUrDf1SujVTpQbUhbiCTjCDr95AoUP5DjMXJg9AZT6P8IAS3SkLVaun0SJOmd4QG7Rytj4wnL6gcCE8XvWekzEqY_1zd_MtW7LDQ3W-abFILzUeniNSC=w640-h446

யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு புலிகளினால் நிகழ்த்தப்பட்டு (30-10-1990) வருடங்கள் 31 நிறைவடைந்துள்ளன. ஒரு சகோதரி அதுபற்றி மிக அழகாக சித்திரம் ஒன்றை வரைந்துள்ளார். ஒரே ஒரு கிறுக்கலில் மொத்த சமூகத்தின் அவலத்தை, காட்டிய சகோதரிக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்...!!

http://www.jaffnamuslim.com/2021/10/blog-post_165.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது,  அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
    • இப்படியான வேகத்தில் பயனித்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் சாத்pயம் இருக்குதாம்.அப்புறம் உங்கள் விருப்பம்.😂
    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.