Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘‘உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லையே?’’

‘‘வெற்றிபெறவில்லை என்பதைவிட வெற்றிபெறவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வென்றவர்களுக்கும் எங்களுக்குமான வாக்கு வித்தியாசம் அதிகமில்லை. சில இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றும், ஆளும் தரப்பு வென்றதாக அறிவித்துக்கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை அதிகமாகப் பிடித்திருக்கிறோம்.’’

‘‘முடிவுகளை மாற்றி அறிவித்தார்கள் எனில், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கலாமே?’’

‘‘காவல்துறை எங்கள் புகாரை எடுத்துக்கொள்வதே இல்லை. மாவட்ட ஆட்சியரும் சரி, மாநில தேர்தல் ஆணையமும் சரி, எங்களைக் கண்டுகொள்வதே இல்லை.’’

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்
 
‘‘ஏற்கெனவே வென்றிருந்த உங்கள் கட்சியைச் சேர்ந்த ஓர் ஒன்றியக் கவுன்சிலரும் தி.மு.க-வுக்குப் போய்விட்டாரே?’’

‘‘ஆட்சியில் இருக்கிற கட்சிக்குப் போய்விடலாம் என நினைத்துப் போயிருக்கலாம்.’’

‘‘நீங்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை... அதனால்தான் போய்விட்டார் என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. ஒருமுறை பாராட்டலாம். தினமும் கூப்பிட்டுப் பாராட்டிக்கொண்டிருக்க முடியாது. அவர் மக்கள் பணியைத்தான் செய்திருக்க வேண்டும்.’’

‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகப் பேசுவது சரியா?’’

‘‘அவர்களும்தான் தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கிப் பேசுகிறார்கள். நீங்கள் ஏன் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. அதேவேளையில் அரசியல் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசுவதை நான் வரவேற்கவில்லை. நானே அப்படிப் பேசியிருந்தாலும் அது தவறுதான். சில நேரங்களில் கோபத்தில் அப்படிப் பேசிவிடுகிறேன். ஆனால், அவர்களுக்குத் தற்போது அரசியல் செய்ய வேறு விஷயம் இல்லை. தி.மு.கவும் பின்னாலிருந்து உசுப்பிவிடுகிறது.’’

‘‘ `சைவத்துக்கும் வைணவத்துக்கும் திரும்புங்கள்’ என சீமான் யாரை அழைக்கிறார்?’’

‘‘தமிழர்கள் யாரும் இந்துக்கள் இல்லை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தில் உருவானதுதான் இந்து மதம். அதை நான் ஏன் ஏற்க வேண்டும்? அப்படிச் சட்டப்படி இந்துவாக்கப்பட்டவர்களைத்தான் அழைத்தேன். கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் அழைத்ததாகத் தவறாகத் தகவல் பரப்பப்படுகிறது.’’

‘‘வழிபாடு சார்ந்த விஷயங்களை சீமான் அரசியலாக முன்னெடுப்பதற்கான தேவை எங்கிருந்து வந்தது?’’

‘‘தேசிய இன மீட்சி என்பது பண்பாட்டு மீட்சியையும் உள்ளடக்கியதுதான். ஒரு வீடு கட்டும்போது நான்கு சுவர்களையும்தான் சரியாகக் கட்ட வேண்டும்.’’

‘‘சங் பரிவாரின் தூண்டுதலில்தான் நீங்கள் இது போன்ற விஷயங்களைச் செய்வதாக கார்த்தி சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்ட பலர் விமர்சிக்கிறார்களே?’’

‘‘என்னை விமர்சிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சங் பரிவாருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் என் சமயம் குறித்துப் பேசுகிறேன்... அவ்வளவுதான். யார் சங் பரிவாரின் ஆட்கள் எனக் காலம் பதில் சொல்லும்!’’

‘‘உங்கள் கட்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடுருவிவிட்டனர் என இயக்குநர் அமீர் சொல்கிறாரே?’’

‘‘அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எங்கே ஊடுருவியிருக்கிறார்கள் என ஆதாரத்தோடு அவர் பேச வேண்டும். என் அளவுக்கு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை எதிர்த்து பேசியது யார் என அவர் சொல்வாரா? அவர் மதச் சிந்தனைகொண்டவர். அந்த அடிப்படையில்தான் என்னை அப்படிப் பேசுகிறார். மொழி, இனம் எனப் பரந்துபட்ட பார்வை அவருக்கு இல்லை. அவர் தி.மு.க-வை ஆதரிக்கிறார். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.’’

‘‘விடுதலைப்புலிகள் உங்கள்மீது கோபத்தில் இருக்கிறார்கள் என வைகோ சொல்கிறாரே..?’’

‘‘புலிகள் என்னுடன் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என ஆலோசனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வைகோ அவர்களின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.’’

‘‘நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியது சர்ச்சையானதே?’’

‘‘அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சொல்லவே இல்லை. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். விவசாய, தோட்ட வேலைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து ஓய்வளிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.’’

‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடுமா?’’

‘‘தேர்தல் என்றாலே தனித்துத்தான் போட்டியிடுவேன். அதில் எப்போதும், எந்த மாற்றமும் இல்லை!’’

‘‘மத்தியில் இப்போது இருக்கும் ஆட்சியே தொடர வேண்டுமா... இல்லை, ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறீர்களா?’’

‘‘காங்கிரஸ் என் இனத்தின் எதிரி; பா.ஜ.க மனிதகுலத்தின் எதிரி. அதனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது. நிச்சயமாக ஒரு மாற்றம் தேவை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும்!’’

‘‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நாம் தமிழர் கட்சி அந்தக் கூட்டணியில் இணையுமா?’’

‘‘தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி அமைத்தால், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். அவர்களை ஆதரிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான களத்தைப் பார்த்துக்கொள்வோம்!’

Junior Vikatan - 03 November 2021 - கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக் | Naam Tamilar Katchi seeman interview - Vikatan

நன்றி: ஜூனியர் விகடன்

  • Replies 78
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான்… கோபத்தில், பேசினாலும்….  உண்மையை தானே சொல்கிறார். 👍🏼

அதில், தவறே இல்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

விகடனுக்கு   தி.மு.கவினரை பேட்டி எடுக்க  தில் உள்ளதா?   குறிப்பாக ஸ்ராலின்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

‘‘தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி அமைத்தால், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். அவர்களை ஆதரிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான களத்தைப் பார்த்துக்கொள்வோம்!’

உங்கள் கூற்றுப்படி, இன எதிரி திமுக வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்கப்பட வேண்டிய இன விரோதிகள் இல்லையா சீமான்?

அவர்களுக்கு மத்தியில் ஆட்சி அதிகாரம் வர வழி பண்ணி கொடுப்பதுதான் தமிழ் தேசிய அரசியலா?

திமுக காங்கிரஸ் கூட்டு அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என பச்சை குழந்தையும் சொல்லும். இப்பவே, தனியாக நிண்டு வாக்கை பிரித்து பாஜகவுக்கு பி டீம் வேலை பார்ப்போம் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் சீமான்.

1 hour ago, nunavilan said:

விகடனுக்கு   தி.மு.கவினரை பேட்டி எடுக்க  தில் உள்ளதா?   குறிப்பாக ஸ்ராலின்.

If you can’t defend your message, kill the messenger 🤣

தன்னை வம்படியாக பேட்டி எடுக்கிறார்கள் என தெரிந்தும் போய் இருந்து நீட்டி முழக்குகிறாரே சீமான்? ஸ்டாலினை போல் விலகி நடக்கும் அளவுக்கு சமயோசிதம் இல்லையா?

அல்லது சீமான் பேட்டி தராவிட்டால் விகடன் அவரை கொலைசெய்து விடுமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

தன்னை வம்படியாக பேட்டி எடுக்கிறார்கள் என தெரிந்தும் போய் இருந்து நீட்டி முழக்குகிறாரே சீமான்? ஸ்டாலினை போல் விலகி நடக்கும் அளவுக்கு சமயோசிதம் இல்லையா?

அல்லது சீமான் பேட்டி தராவிட்டால் விகடன் அவரை கொலைசெய்து விடுமா?

ஸ்ராலின், ஜெயலலிதா, விஜயகாந்த்… போன்ற அரசியல் வாதிகள், பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை.

இந்த விடயத்தில்… சீமான், ஒரு ஜென்ரில் மேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின், ஜெயலலிதா, விஜயகாந்த்… போன்ற அரசியல் வாதிகள், பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை.

இந்த விடயத்தில்… சீமான், ஒரு ஜென்ரில் மேன். 😁

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்,

என்ன….எப்பெல்லாம் பொது கூட்டத்தில உணர்சிய கட்டுபடுத்த முடியலயோ அப்பெல்லாம் ரேப் பண்ணிடுவேன் எண்டு பேசுவார்……

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்,

எப்பெல்லாம் ரேப் பண்ணிடுவேன் பேசுவாரோ, அப்பெல்லாம் அரசியல் தலைவர்களை ஒருமையில் பேசுவார்….

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்

எப்பெல்லாம் ஒருமையில் பேசுறாரோ அப்பெல்லாம் ரஜனி காந்த் மகளை பற்றி முச்சந்தியில் ஆபாசமாக பேசிய சாட்டை மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுடுவார்..

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியர் "ஜென்ரில்மேன்" என்றால் அது வேற அர்த்தம்! டீசண்டான ஆள் என்ற பொது அர்த்தம் கிடையாது!😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, goshan_che said:

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்,

சீமான் என்றவுடன் தங்களுக்கும் தங்கள் போன்றோருக்கும் முள்ளாய் குத்தும்.

மிக மிக கேவலமான அரசியல் மேடைப்பேச்சாளர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். உங்கள் ஸ்டாலின் ஐயா உட்பட.....சரி விடுவம். உங்கள் மூத்த அரசியல் தலைவர் கருநாநிதி கண்ணியமாக வார்த்தைகளை உதிர்ப்பவரா?

43 minutes ago, goshan_che said:

என்ன….எப்பெல்லாம் பொது கூட்டத்தில உணர்சிய கட்டுபடுத்த முடியலயோ அப்பெல்லாம் ரேப் பண்ணிடுவேன் எண்டு பேசுவார்……

இதெல்லாம் தங்கள் போன்றோரின் கண்களுக்கு தெரியவே மாட்டாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, goshan_che said:

எப்பெல்லாம் ஒருமையில் பேசுறாரோ அப்பெல்லாம் ரஜனி காந்த் மகளை பற்றி முச்சந்தியில் ஆபாசமாக பேசிய சாட்டை மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுடுவார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் தமிழ்நாட்டு அரசியலையும் தமிழ்நாட்டு ஊடகங்களையும் நன்கு அறிந்துவிட்டு சீமான் அரசியலை பற்றி பேச வாருங்கள்.
சம நிலை பேணுகின்றோம் என நினைத்துக்கொண்டு சீமான் விடும் தவறுகளை மட்டும் கண்ணுக்குள் எண்ணைவிட்டு எரிய விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உங்கள் கூற்றுப்படி, இன எதிரி திமுக வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்கப்பட வேண்டிய இன விரோதிகள் இல்லையா சீமான்?

அவர்களுக்கு மத்தியில் ஆட்சி அதிகாரம் வர வழி பண்ணி கொடுப்பதுதான் தமிழ் தேசிய அரசியலா?

திமுக காங்கிரஸ் கூட்டு அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என பச்சை குழந்தையும் சொல்லும். இப்பவே, தனியாக நிண்டு வாக்கை பிரித்து பாஜகவுக்கு பி டீம் வேலை பார்ப்போம் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் சீமான்.

If you can’t defend your message, kill the messenger 🤣

தன்னை வம்படியாக பேட்டி எடுக்கிறார்கள் என தெரிந்தும் போய் இருந்து நீட்டி முழக்குகிறாரே சீமான்? ஸ்டாலினை போல் விலகி நடக்கும் அளவுக்கு சமயோசிதம் இல்லையா?

அல்லது சீமான் பேட்டி தராவிட்டால் விகடன் அவரை கொலைசெய்து விடுமா?

நீங்கள் சொல்வது சரி.  சமயோசிதம் இருந்த படியால் தான் தமிழக மக்களின் தலையில் சம்பல் அரைக்க முடிகிறது தி.மு.க கும்பலால்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மிக மிக கேவலமான அரசியல் மேடைப்பேச்சாளர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்

முற்றிலும் உடன்படுகிறேன்🤣

1 hour ago, குமாரசாமி said:

உங்கள் ஸ்டாலின் ஐயா உட்பட.....

அவர் மட்டும் இல்லை எனக்கு எவரும் ஐயா கிடையாது🤣. நான் இங்கே ஸ்டாலின் ஜெண்டில்மேன் என்று எங்கேயும் எழுதவில்லை. இந்த திரியில் மட்டும் அல்ல, எந்த திரியிலும். தத்தி என்றும், அரசியல் ஞானம் அற்றவர் எண்டும் எழுதியுள்ளேன்.

1 hour ago, குமாரசாமி said:

உங்கள் மூத்த அரசியல் தலைவர் கருநாநிதி கண்ணியமாக வார்த்தைகளை உதிர்ப்பவரா?

கருணாநிதி - படுமோசமான இரெட்டை வசன கொசப்பு கிழவன். வயசால் மட்டுமே ஒரு மனிதன் மரியாதைக்குரியவர் ஆக மாட்டார் என்பதை வாழ்ந்து காட்டி விட்டு போன ஜென்மம். இந்திராவின் மாதவிடாய் இரத்தம், ஜெயாவின் சேலை பறிப்பு என்று அவர் ஒரு வேற ரகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதெல்லாம் தங்கள் போன்றோரின் கண்களுக்கு தெரியவே மாட்டாது.

நான் அதிகம் இந்த முகவரியில்லாத கீச்சக ஊத்தையளை பார்ப்பதில்லை. பார்த்தாலும் ஊரில் உள்ள ஊத்தையளுக்கு எல்லாம் எதிர்வினையாறுவதும் இல்லை. யாரிவர்?

1 hour ago, குமாரசாமி said:

முதலில் தமிழ்நாட்டு அரசியலையும் தமிழ்நாட்டு ஊடகங்களையும் நன்கு அறிந்துவிட்டு சீமான் அரசியலை பற்றி பேச வாருங்கள்.

எங்கள் சிற்றறிவுக்கு, வாழ்ந்து, வாசித்து தமிழ்நாட்டை அறிந்த அளவில் நாங்கள் எழுத முனைகிறோம். 

தமிழ் நாட்டு அரசியலில் எம்மை விட அதிக ஆழம் போய் சுழியோடிய வித்தகர்கள் தர்க ரீதியாக எம்மை நல்வழி படுத்தினால் ஏற்றும் கொள்வோம்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சம நிலை பேணுகின்றோம் என நினைத்துக்கொண்டு சீமான் விடும் தவறுகளை மட்டும் கண்ணுக்குள் எண்ணைவிட்டு எரிய விடாதீர்கள்.

எல்லாரும் விடும் தவறுகளையும் அந்த அந்த திரிகளில் சுட்டியே காட்டியுள்ளோம். வைரமுத்து, கருணாநிதி போன்றோர் இங்கே நன்றாக தோய்த்து தொங்கவிடப்பட்டுள்ளமை தாங்கள் அறிந்ததே.

சீமான், தன்னை அவர்களை விட தூய அரசியலை முன்னெடுப்பவராக, கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்கவல்ல, உடைத்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் புரட்சியாளராக, பொது வாழ்வில் தூய்மையின் வடிவம் தலைவர் பிரபாகரனின்  அரசியல் வாரிசாக பிரகடனபடுத்துவதால் அவரின் அரசியலை அப்படித்தானா? என சீர்தூக்கி பாக்கிறோம்.

நாளைக்கே சீமான், நானும் ஸ்டாலின், கருணாநிதி போல் ஒரு ஏமாற்று பேர்வழிதான் என்பதை ஏற்று கொண்டால் நாமும் அவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பதை விட்டு விடலாம்.

26 minutes ago, nunavilan said:

நீங்கள் சொல்வது சரி.  சமயோசிதம் இருந்த படியால் தான் தமிழக மக்களின் தலையில் சம்பல் அரைக்க முடிகிறது தி.மு.க கும்பலால்.

நீங்கள் சொல்வது மிக்க சரி.

கெட்டிகார திருடனுக்கும் மொக்கு திருடனுக்கும் உள்ள வித்தியாசம்தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தவிகடன்..... எம்ஜியார் இறந்த போது எழுதியது..... தமிழக அரசியல் இனி.... கலைஞர்  - ஜெயலலிதா தான் என.... பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதே போல... எனது பார்வையில், தமிழ்நாட்டு அரசியலில்...... இனி ஸ்ராலின் - சீமான் தான்.

எடப்பாடி - சசிகலா - ஓபிஸ் மோதல் அதிமுகவுக்கு முடிவுரை எழுதும். தமிழகத்தில் ஊழலை, அதுக்காக சிறைக்கு போனதை மக்கள் மறப்பார்கள், மன்னிப்பார்கள். உதாரணம், கருணாநிதி, கனிமொழி, ஏ ராசா, ஜெயலலிதா ..... இனி சசிகலா..... ஆனால் கொலை, கொள்ளையை மன்னிக்க மாட்டார்கள். ஆக, விரைவில் எடப்பாடி அரசியல் முடிவுக்கு வரும்.

அதேவேளை சசிகலா தலைதூக்காமல்.... சரியான நேரத்தில் மத்திய அரசு தடுக்கும்.

ஓபிஸ் உடன், அதிமுக எம்எல்க்களை கையில் வைத்துக் கொண்டு, திமுகவின் எம்எல்ஏக்களுடன்..... பாஜக அரசமைக்கும்....பல மாநிலங்களில் செய்துள்ளது....

கொடுக்கும் குடைச்சல் தாங்க முடியாது, நாம் காங்கிரஸை கழட்டி விட்டு, உங்களுடன் கூட்டணி அமைக்கிறேன் என திமுக சொல்லும். ஆனால் பிஜேபிக்கு அப்படி ஒரு தேவை இல்லை.

காரணம், பொதுப்பணித்துதுறை அமைச்சர், துரைமுருகன் முதல், அவரது மகன் கதிர் ஆனந்த், செந்தில் பாலாஜி, கனிமொழி, ஏ ராசா, பொன்முடி, அவரது மகன் சிகாமணி, ஸ்ராலின் மருமகன் சபரீசன் அணைவருமே ரெயிடில் சிக்கிவிட்டார்கள்.

இந்த கனிமொழியுடன் ரெயிடில் சிக்கிய ஒரு புள்ளி, அவரது பினாமி.... பாதிரியார் கெகத் கஸ்பார்..... இன்னும் ஒரு திமுக புள்ளி, ஜெகதரட்சகன், மணைவி, மகளுடன்.... இலங்கையில் ஒரு பில்லியன் டாலர் முதலிட முயன்று மாட்டினார்...

தேவையானால், அழகிரியையும், பத்திரிகை அலுவலக கொலை வழக்கில் போட்டு உலுக்கலாம்.

ஸ்ராலின், தேப்பன் கலைஞர் அறிவுரைப் படி எந்த சொத்துமே இல்லாமல்..... வீடு...கார் கூட இல்லாமல் இருக்கிறார். மகன் உதயநிதி வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்.... வாழ்க்கையில் வேலையே செய்யாமல், கம்மர் காரும்...... படங்களும்...... பிடித்த நடிகைகளுக்கு வீடுகளும் வாங்கிக் கொடுக்கும் உதயண்ணா, ரெய்டு ராடரில் இருக்கிறார்.

ஆக..... முதுகில் புண் இருப்பதால்...... திராவிடம்..... தடுமாறுகிறது.

எனது பார்வையில்..... திராவிடம் செய்த இமாலய ஊழல்களை வைத்து.... அதன் கதையை ஆரியம் முடிக்கும்.....

உளறிக் கொட்டுவார் என்பதால், பிரசாந் கிசோர்.... ஆலோசணைப் படி ஸ்ராலின் , பத்திரிகையாளரை சந்திப்பதில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது மிக்க சரி.

கெட்டிகார திருடனுக்கும் மொக்கு திருடனுக்கும் உள்ள வித்தியாசம்தான் இது.

கருணாநிதி கெட்டிக்கார திருடன் என்றும் ஸ்டாலின் மொக்கு திருடன் என்றும் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

கருணாநிதி கெட்டிக்கார திருடன் என்றும் ஸ்டாலின் மொக்கு திருடன் என்றும் எடுக்கலாம்.

எடுங்கோ…🤣

1 hour ago, Nathamuni said:

ஆனந்தவிகடன்..... எம்ஜியார் இறந்த போது எழுதியது..... தமிழக அரசியல் இனி.... கலைஞர்  - ஜெயலலிதா தான் என.... பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

நான் இதை ஒரு அறிவு விருத்திக்காக கேட்கிறேன். எம் ஜி ஆர் இறந்த போது ஆனந்த விகடன் இப்படி எழுதியது என்பதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதே போல... எனது பார்வையில், தமிழ்நாட்டு அரசியலில்...... இனி ஸ்ராலின் - சீமான் தான்.

எனக்கு என்னமோ நாம் சீமானை குறைத்து மதிப்பிடுவதாக படுகிறது.

நான் கண்ணை சுருக்கி ஒரு ஒரு பார்வை பாத்தனான்…. ஜோ பைடன் அடுத்த முறை தேறுவது கஸ்டம் போலதான் தெரியுது. ரிபப்ளிகன் நொமினேசன் மட்டும் கொஞ்சம் கஸ்டமாய் இருக்கும். அதை தாண்டி விட்டால் …நேரா பென்சில்வேனியா அவனியுதான்.

2 hours ago, Nathamuni said:

எனது பார்வையில்..... திராவிடம் செய்த இமாலய ஊழல்களை வைத்து.... அதன் கதையை ஆரியம் முடிக்கும்.....

அப்படியே ஒரு டைம்லனையும் போடுங்கோவன். எப்ப கதை முடியுமாம்? 5, 10, 15 வருசம்?

பிகு

மேலே வடிவாக கூறியுள்ளேன். சர்காரிய கமிசனே “விஞ்ஞான முறை ஊழல்” என்று கூறிய கெட்டிகார திருடர்கள் திமுக. 

2g ஊழல் நியாபகம் இருக்கா? அதில் ராசாவும் கனி மொழியும் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பு 2017 வந்தது (CBI அப்பீல் பண்ணியுள்ளது). நேற்று மான நஸ்ட வழக்குக்கு பயந்து நிருபமிடம் மன்னிப்பு கோரி உள்ளார் அந்த நேரத்தில் ஆடிட்டர் ஜெனரலான வினோத் ராய். 

அது மட்டும் அல்ல, ஸ்டாலின் கார் இல்லை என கொடுத்த பத்திரம்தான் ஏற்று கொள்ளபட்டது. 

ஆனால் வருட வருமானம் 10,000 (அல்லது இதை ஒத்த ஒரு சிறிய தொகை) என எழுதி விட்டு, சீமான் பின்னர் இன்னொரு பத்திரம் கொடுக்கும் படி ஆகிற்று.

இதுதான் கெட்டிகார கள்ளனுக்கும், மொக்கு கள்ளனுக்கும் உள்ள வேறுபாடு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

//

காங்கிரஸ் என் இனத்தின் எதிரி; பா.ஜ.க மனிதகுலத்தின் எதிரி. அதனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது. நிச்சயமாக ஒரு மாற்றம் தேவை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும்!’’

‘‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நாம் தமிழர் கட்சி அந்தக் கூட்டணியில் இணையுமா?’’

‘‘தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி அமைத்தால், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். அவர்களை ஆதரிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான களத்தைப் பார்த்துக்கொள்வோம்!’//

மதவாத பாஜாகாவை வீழ்த்த மிகச்சிறந்த முடிவு.. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மதவாத பாஜாகாவை வீழ்த்த மிகச்சிறந்த முடிவு.. 

இல்லை மூன்றாம் அணி என்பது வாக்கை பிரித்து தொடர்ந்தும் பிஜேபி ஆளவே வழி கோலும்.

உபியில் அகிலேஷ், மாயாவதி போட்டியில், மேற்கு வங்கத்தில் மம்தா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு போட்டியில் இப்படிதான் பிஜேபி லாபம் அடைந்தது.

காங்கிரஸ், மம்தா, மாயாவதி, அகிலேஷ், சரத்பவார், திமுக, கம்யூனிஸ்டுகள், சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத் இன்னும் பல உதிரிகள் முடிந்தால் இப்போ பிஜேபியோடு ஓட்டி கொண்டு இருக்கும் அகாலி, முக்தி மோட்ஷா, நிதிஷ்குமார்,  போன்றோரை எல்லாம் இழுத்து ஒரு secular grand opposition coalition ஐ அமைத்தால் மட்டுமே, அதுவும் போராடி பிஜேபியை அகற்ற முடியும்.

இந்திய தேசிய அரசியலில் இப்போ மூன்றாம் அணி என பேசுபவர்கள் - நிச்சயம் மறைமுகமாக பிஜேபி ஆதரவு நிலை எடுக்கும் ஆட்களே.

மிகவிரைவில் இராமதாஸ், கமல், கிருஸ்ணசாமி போன்ற ஏனைய பிஜேபி ஆசி பெற்ற பிரமுகர்களும் இப்படியான கருத்துக்களை முன்வைக்க கூடும் என நான் எதிர்பார்கிறேன். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எடுங்கோ…🤣

நான் இதை ஒரு அறிவு விருத்திக்காக கேட்கிறேன். எம் ஜி ஆர் இறந்த போது ஆனந்த விகடன் இப்படி எழுதியது என்பதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா?

நான் எடுத்தால் நீஙகள் எடுத்த மாதிரி தானே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

‘‘உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லையே?’’

‘‘வெற்றிபெறவில்லை என்பதைவிட வெற்றிபெறவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வென்றவர்களுக்கும் எங்களுக்குமான வாக்கு வித்தியாசம் அதிகமில்லை. சில இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றும், ஆளும் தரப்பு வென்றதாக அறிவித்துக்கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை அதிகமாகப் பிடித்திருக்கிறோம்.’’

‘‘முடிவுகளை மாற்றி அறிவித்தார்கள் எனில், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கலாமே?’’

‘‘காவல்துறை எங்கள் புகாரை எடுத்துக்கொள்வதே இல்லை. மாவட்ட ஆட்சியரும் சரி, மாநில தேர்தல் ஆணையமும் சரி, எங்களைக் கண்டுகொள்வதே இல்லை.’’

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்
 
‘‘ஏற்கெனவே வென்றிருந்த உங்கள் கட்சியைச் சேர்ந்த ஓர் ஒன்றியக் கவுன்சிலரும் தி.மு.க-வுக்குப் போய்விட்டாரே?’’

‘‘ஆட்சியில் இருக்கிற கட்சிக்குப் போய்விடலாம் என நினைத்துப் போயிருக்கலாம்.’’

‘‘நீங்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை... அதனால்தான் போய்விட்டார் என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. ஒருமுறை பாராட்டலாம். தினமும் கூப்பிட்டுப் பாராட்டிக்கொண்டிருக்க முடியாது. அவர் மக்கள் பணியைத்தான் செய்திருக்க வேண்டும்.’’

‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகப் பேசுவது சரியா?’’

‘‘அவர்களும்தான் தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கிப் பேசுகிறார்கள். நீங்கள் ஏன் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. அதேவேளையில் அரசியல் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசுவதை நான் வரவேற்கவில்லை. நானே அப்படிப் பேசியிருந்தாலும் அது தவறுதான். சில நேரங்களில் கோபத்தில் அப்படிப் பேசிவிடுகிறேன். ஆனால், அவர்களுக்குத் தற்போது அரசியல் செய்ய வேறு விஷயம் இல்லை. தி.மு.கவும் பின்னாலிருந்து உசுப்பிவிடுகிறது.’’

‘‘ `சைவத்துக்கும் வைணவத்துக்கும் திரும்புங்கள்’ என சீமான் யாரை அழைக்கிறார்?’’

‘‘தமிழர்கள் யாரும் இந்துக்கள் இல்லை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தில் உருவானதுதான் இந்து மதம். அதை நான் ஏன் ஏற்க வேண்டும்? அப்படிச் சட்டப்படி இந்துவாக்கப்பட்டவர்களைத்தான் அழைத்தேன். கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் அழைத்ததாகத் தவறாகத் தகவல் பரப்பப்படுகிறது.’’

‘‘வழிபாடு சார்ந்த விஷயங்களை சீமான் அரசியலாக முன்னெடுப்பதற்கான தேவை எங்கிருந்து வந்தது?’’

‘‘தேசிய இன மீட்சி என்பது பண்பாட்டு மீட்சியையும் உள்ளடக்கியதுதான். ஒரு வீடு கட்டும்போது நான்கு சுவர்களையும்தான் சரியாகக் கட்ட வேண்டும்.’’

‘‘சங் பரிவாரின் தூண்டுதலில்தான் நீங்கள் இது போன்ற விஷயங்களைச் செய்வதாக கார்த்தி சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்ட பலர் விமர்சிக்கிறார்களே?’’

‘‘என்னை விமர்சிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சங் பரிவாருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் என் சமயம் குறித்துப் பேசுகிறேன்... அவ்வளவுதான். யார் சங் பரிவாரின் ஆட்கள் எனக் காலம் பதில் சொல்லும்!’’

‘‘உங்கள் கட்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊடுருவிவிட்டனர் என இயக்குநர் அமீர் சொல்கிறாரே?’’

‘‘அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எங்கே ஊடுருவியிருக்கிறார்கள் என ஆதாரத்தோடு அவர் பேச வேண்டும். என் அளவுக்கு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை எதிர்த்து பேசியது யார் என அவர் சொல்வாரா? அவர் மதச் சிந்தனைகொண்டவர். அந்த அடிப்படையில்தான் என்னை அப்படிப் பேசுகிறார். மொழி, இனம் எனப் பரந்துபட்ட பார்வை அவருக்கு இல்லை. அவர் தி.மு.க-வை ஆதரிக்கிறார். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.’’

‘‘விடுதலைப்புலிகள் உங்கள்மீது கோபத்தில் இருக்கிறார்கள் என வைகோ சொல்கிறாரே..?’’

‘‘புலிகள் என்னுடன் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என ஆலோசனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வைகோ அவர்களின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.’’

‘‘நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியது சர்ச்சையானதே?’’

‘‘அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சொல்லவே இல்லை. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். விவசாய, தோட்ட வேலைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து ஓய்வளிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.’’

‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடுமா?’’

‘‘தேர்தல் என்றாலே தனித்துத்தான் போட்டியிடுவேன். அதில் எப்போதும், எந்த மாற்றமும் இல்லை!’’

‘‘மத்தியில் இப்போது இருக்கும் ஆட்சியே தொடர வேண்டுமா... இல்லை, ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறீர்களா?’’

‘‘காங்கிரஸ் என் இனத்தின் எதிரி; பா.ஜ.க மனிதகுலத்தின் எதிரி. அதனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது. நிச்சயமாக ஒரு மாற்றம் தேவை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும்!’’

‘‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நாம் தமிழர் கட்சி அந்தக் கூட்டணியில் இணையுமா?’’

‘‘தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி அமைத்தால், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். அவர்களை ஆதரிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான களத்தைப் பார்த்துக்கொள்வோம்!’

Junior Vikatan - 03 November 2021 - கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக் | Naam Tamilar Katchi seeman interview - Vikatan

நன்றி: ஜூனியர் விகடன்

‘என்னை விமர்சிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

இந்த வரிகள் சீமானை விமர்சிப்பவர்கள் எல்லோருக்குமான பதில் இந்த திரி நீண்டு செல்வதற்கு காரணம் இருக்கிறது.ஸ்டாலினின் பேட்டியோ அவர் சம்பந்தமான காணொளிப் பதிவுகளை விட சீமானுக்கு கூடுதல் வரவேற்பு இருக்கிறது.காயத்த மரம்தான் கல்லடி படுகிறது.தேர்தலில் வெல்ல வில்லை என்பதற்காக நக்கல் பண்ணபவர்கள் திமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிடத் தயங்பகுவது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எனக்கு என்னமோ நாம் சீமானை குறைத்து மதிப்பிடுவதாக படுகிறது.

நான் கண்ணை சுருக்கி ஒரு ஒரு பார்வை பாத்தனான்…. ஜோ பைடன் அடுத்த முறை தேறுவது கஸ்டம் போலதான் தெரியுது. ரிபப்ளிகன் நொமினேசன் மட்டும் கொஞ்சம் கஸ்டமாய் இருக்கும். அதை தாண்டி விட்டால் …நேரா பென்சில்வேனியா அவனியுதான்.

அப்படியே ஒரு டைம்லனையும் போடுங்கோவன். எப்ப கதை முடியுமாம்? 5, 10, 15 வருசம்?

பிகு

மேலே வடிவாக கூறியுள்ளேன். சர்காரிய கமிசனே “விஞ்ஞான முறை ஊழல்” என்று கூறிய கெட்டிகார திருடர்கள் திமுக. 

2g ஊழல் நியாபகம் இருக்கா? அதில் ராசாவும் கனி மொழியும் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பு 2017 வந்தது (CBI அப்பீல் பண்ணியுள்ளது). நேற்று மான நஸ்ட வழக்குக்கு பயந்து நிருபமிடம் மன்னிப்பு கோரி உள்ளார் அந்த நேரத்தில் ஆடிட்டர் ஜெனரலான வினோத் ராய். 

அது மட்டும் அல்ல, ஸ்டாலின் கார் இல்லை என கொடுத்த பத்திரம்தான் ஏற்று கொள்ளபட்டது. 

ஆனால் வருட வருமானம் 10,000 (அல்லது இதை ஒத்த ஒரு சிறிய தொகை) என எழுதி விட்டு, சீமான் பின்னர் இன்னொரு பத்திரம் கொடுக்கும் படி ஆகிற்று.

இதுதான் கெட்டிகார கள்ளனுக்கும், மொக்கு கள்ளனுக்கும் உள்ள வேறுபாடு.

 நான் எனது அவதானிப்புகளை பதிந்தேன். அது தொடர்பில் உங்களுடனோ, வேறு யாரிடமும் விவாதித்து, உங்கள் நேரத்தினை விரயமாக்க விரும்பவில்லை.

காலம் பதில் சொல்லும்.....

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புலவர் said:

‘என்னை விமர்சிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

இந்த வரிகள் சீமானை விமர்சிப்பவர்கள் எல்லோருக்குமான பதில் இந்த திரி நீண்டு செல்வதற்கு காரணம் இருக்கிறது.ஸ்டாலினின் பேட்டியோ அவர் சம்பந்தமான காணொளிப் பதிவுகளை விட சீமானுக்கு கூடுதல் வரவேற்பு இருக்கிறது.காயத்த மரம்தான் கல்லடி படுகிறது.தேர்தலில் வெல்ல வில்லை என்பதற்காக நக்கல் பண்ணபவர்கள் திமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிடத் தயங்பகுவது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

1. எப்போதும் இந்த விதி உண்மையில்லை. மதுக்கடையில் வாசிகசாலையை விட கூட்டம் அதிகம் இருப்பதும் உண்டு.

2. ஒவ்வொரு நாட்டின் அரசியலும் ஒவ்வொரு மாதிரி, 60 களுக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் எல்லா கட்சியிம் ஏதோ ஒரு வகையில் கூட்டணி அமைத்தே ஆட்சியை பிடிக்கிறன. இலங்கையில் கூட சந்திரிக்காவின் 95, மகிந்தவின் 2010 வெற்றிகள் கூட கூட்டணியாகத்தான். 

ஜேர்மனியில், இரு பிரதான கட்சிகள் சேர்ந்து தேர்தலுக்கு பின்னான கூட்டணி ஆட்சி செய்தது, போன தடவை.

Politics is the art of the possible அடைய வாய்புள்ளதை அடையும் கலையே அரசியல் என்கிறார் பிஸ்மார்க்.

அப்படித்தான் கூட்டணி அரசியலும். இவ்பாலவு ஏன் 1977 வட்டுகோட்டை தீர்மான அரசியல் வெற்றி கூட ஒரு “கூட்டணி” வெற்றிதான். தலைவர் கூட கூட்டமைப்பு மூலம் ஒரு கூட்டணியைத்தான் முன் தள்ளினார்.

ஆகவே கூட்டணி அரசியல் என்பது ஒன்றும் இழுக்கானது அல்ல. 

உண்மையில் ஒரு நாட்டில் வேறு எந்த கட்சியோடும் சேராத அல்லது சேர்த்து கொள்ள படாத அரசியலே ஆபத்தானது.

அண்மைய ஜேர்மன் தேர்தலில் 6 கட்சிகள் வென்றன. ஆனால் 5 கட்சிகள் தமக்குள் மட்டுமே பேச்சு வார்த்தை, 6ம் கட்சியோடு பேச்சே இல்லை என்ற நிலை எடுத்தன.

அந்த 6ம் கட்சி? AfD எனப்படும் இனத்தூய்மைவாத கட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

 நான் எனது அவதானிப்புகளை பதிந்தேன். அது தொடர்பில் உங்களுடனோ, வேறு யாரிடமும் விவாதித்து, உங்கள் நேரத்தினை விரயமாக்க விரும்பவில்லை.

காலம் பதில் சொல்லும்.....

உங்கள் அவதானிப்பை பகிர உங்களுக்கு முழு உரிமையுண்டு. 

அதே உரிமை அந்த அவதானிப்புகளை பற்றி தமது அவதானிப்பை பகிர ஏனையோருக்கும் உண்டு.

ஆனால் ஆனந்த விகடன் இந்த நேரம் இப்படி எழுதியது என்பது அவதானிப்பல்ல, அது ஒரு தரவு. அதை கொடுத்தால் ஆதாரம் கேட்பது வழமைதான். 

நான் யாழ் களத்திற்கு வருவது கருத்து பரிமாறவும் விவாதிக்கவுமே. விவாதம் தெளிவாக்கலின் அடிப்படை என்பதால். ஆனால் குறிப்பிட்ட தலைப்புகளை மட்டுமே. 

இராணி வகுப்புக்கு மட்டம் போட்டார் போன்ற திரிகளில் நான் விவாதிப்பதில்லை என்பதை கண்டிருப்பீர்கள்.

விவாதிக்க விருப்பம் இல்லாவிடில் விலகி போகலாம். ஆனால் கருத்து களத்யில் கருத்து என்று ஒன்றை எழுதினால், அது ஏனையோரால் கையாளப்படுவது தவிர்கவியலாது.

காலம் பதில் சொல்லும், சொல்லாமலும் போகும், எப்போ சொல்லும்? எதுவுமே தெரியாமல் இப்படி சொல்வது மழுப்பல் என்பது என் பார்வை.

என் பார்வை மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.