Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணாத்த சினிமா விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 மணி நேரங்களுக்கு முன்னர்
அண்ணாத்த சினிமா விமர்சனம் - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் படம் எப்படி உள்ளது?

நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன்; இசை: டி. இமான்; இயக்கம்: சிவா.

தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை சென்டிமென்டிற்கு அழிவேயில்லை என்ற நம்பிக்கையில் இந்தத் தீபாவளிக்கு களமிறங்கியிருக்கிறது ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த".

தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்) பல ஊருக்கு பிரெசிடென்ட். அவருடைய தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). காளையனுக்கு தங்கையின் மீது அதீத பாசம்.

ஒரு கட்டத்தில் தங்கைக்கு தான் அடிக்கடி சண்டைபோடும் ஒருவரின் (பிரகாஷ்ராஜ்) மகனுக்கு கட்டிவைக்க முடிவுசெய்கிறார். ஆனால், திருமணத்திற்கு முதல் நாள் தங்கையைக் காணவில்லை. தங்கை தங்க மீனாட்சிக்கு என்ன ஆனது, அவருடைய பிரச்னைகளில் இருந்து அண்ணன் அவரை எப்படி மீட்கிறார் என்பது மீதிக் கதை.

தங்கை மீது உயிராக இருக்கும் அண்ணன், அவளுக்கு வரும் துன்பத்தை அவளுக்கே தெரியாமல் நீக்கி, அவளைக் காப்பாற்ற நினைக்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன் - லைன். ஆனால், அதற்கு தேர்ந்தெடுத்த கதையும் திரைக்கதையும் படு சொதப்பலாக இருக்கிறது.

படம் ஆரம்பித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஒரு திசையில் ஓடுகிறது. அந்த ஒரு மணி நேரத்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன. ஏழைகளின் நிலத்தை அடித்துப் பிடுங்கும் பிரகாஷ்ராஜுடன் அடிக்கடி சண்டை போடுகிறார் ரஜினி.

அண்ணாத்த - ரஜினிகாந்த் படத்தின் சினிமா விமர்சனம்

அதற்குப் பிறகு, கல்யாணமாகி நடுத்தர வயதில் இருக்கும் குஷ்புவும் மீனாவும் ரஜினியை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுவதுபோல சில பல காட்சிகள். பிறகு, தங்கை மீது ரஜினி எப்படி பாசத்தைப் பொழிகிறார் என்பதைக்காட்ட சில காட்சிகள்.

பிறகு, ஏழையின் நிலத்தை அடித்துப்பிடுங்கியதற்காக தான் அடித்துத் துவைத்த பிரகாஷ்ராஜின் மகனுக்கே தான் உயிராக வளர்த்த தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவுசெய்கிறார் கதாநாயகன். இதற்கு நடுவில் நயன்தாராவுடன் காதல். இதுக்கே கண்ணைக் கட்டினால் சமாளித்துக்கொள்ளவும். இதற்குப் பிறகு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

தமிழ் சினிமாவின் ஆரம்பகால திரைப்படங்கள் சிலவற்றில், கதாநாயகிகளோ அல்லது நாயகனின் தங்கைகளோ பயங்கரமான துன்பங்களை அனுபவிப்பார்கள். அதைவிட பல மடங்கு துன்பத்தை அனுபவிக்கும் பாத்திரம் கீர்த்தி சுரேஷிற்கு.

அவர் திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளையிடமிருந்து அவரது ஸ்டீல் தொழிற்சாலையைப் பறித்துக்கொள்ளும் வில்லன் (அபிமன்யு சிங்), அவரை சிறையிலும் அடைத்துவிடுகிறான்.

ஏற்கனவே பிரகாஷ்ராஜ்தான் வில்லன் என நினைத்துக்கொண்டிருந்த நமக்கு, இந்த புதிய வில்லனின் அறிமுகம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த வில்லனுக்கு ஒரு வில்லன் இருக்கிறார்.

அது அந்த இரண்டாவது வில்லனின் அண்ணன் (ஜெகபதிபாபு). இந்த வில்லன் கொல்கத்தாவில் இருந்தாலும், ஆந்திராவில் செங்கல்சூளை நடத்தும் வில்லனைப்போல நடந்துகொள்பவர். இந்த மூன்றாவது வில்லனுக்கும் இரண்டாவது வில்லனுக்கும் ஆகாது. இப்படி பல வில்லன்கள் படத்தில் இருக்கிறார்கள், இயக்குநரையும் சேர்த்து.

அண்ணாத்த சினிமா விமர்சனம் - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் படம் எப்படி உள்ளது?

ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்களிலேயே இந்தப் படத்தில்தான் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். காமெடி காட்சிகளிலும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி 90களின் ரஜினியைப் பார்க்க முடிகிறது. ஆனால், கதையிலும் திரைக்கதையிலும் சொதப்பியிருப்பதால், அவரது உழைப்பு முழுக்க வீணாகியிருக்கிறது.

ரஜினியும் நயன்தாராவும் வரும் துவக்க காட்சிகள் நன்றாகவும் ரசிக்கும்படியும் இருக்கின்றன. பிறகு, இயக்குநர் உஷாராகிவிடுவதால் நயன்தாராவின் பாத்திரம் திடீரென காணாமல் போய்விடுகிறது. பிற்பாதியில் மீண்டு வரும் நயன்தாரா, ஒரு வழக்கமான நாயகியைப்போல வந்து போகிறார்.

வீரம், வேதாளம் போன்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் நகைச்சுவைக்கென சூரி, சதீஷ், சத்யன் என பல நடிகர்கள் இருக்கிறார்கள். அந்தப் படங்களில் எல்லாம் நகைச்சுவைக் காட்சிகள் எப்படி சிரிப்பு வரவில்லையோ, அதேபோல இந்தப் படத்திலும் நகைச்சுவைக் காட்சிகளில் சிரிப்பு வரவில்லை.

இமானின் இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக, "சார சார காத்தே" பாடலும் "வா சாமி" பாடலும் அட்டகாசமாக இருக்கின்றன. சார சார காத்தே பாடல் படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கிறது.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், வில்லனின் ஆட்கள் எல்லாம் தாறுமாறாக அடிபட்டுக் கிடக்கும்போது, அவர்களையெல்லாம் யார் அடித்தது என்று தெரியாத கீர்த்தி சுரேஷ் ஒவ்வொருவரிடமாகச் சென்று, "யாருடா உங்களையெல்லாம் அடிச்சது, தயவு செஞ்சு சொல்லுங்கடா" என்று கேட்பார். அந்தக் கேள்வி, உண்மையில் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.

அண்ணாத்த சினிமா விமர்சனம் - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் படம் எப்படி உள்ளது? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்த விமர்சனம்: ரசிகரின் பார்வையில்!

மின்னம்பலம்2021-11-05T07:30:01+5:30
spacer.png

திரைப்படங்கள் வெளியான பின்பு படம் பற்றி வலைதளங்கள், இணையதளங்கள், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. ஒரு படத்தின் வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் காரணிகளில் இதுவும் ஒன்றாக மாறி வருகிறது. ரசிகர்கள் படம் நன்றாக இருந்தால் சமூக வலைதளங்களில் கொண்டாடுவார்கள். ரஜினி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம் அண்ணாத்த. அப்படம் பற்றிய எதிர்பார்ப்பை சன்பிக்சர்ஸ், ஊடகங்கள் எகிற வைத்திருந்தன. நேற்று அதிகாலை ஐந்துமணி சிறப்புக்காட்சிக்கு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி அடைமழையில் தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ரசிகர் அதிர்ச்சிக்கு உள்ளானார். அவரது வாக்குமூலமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள படம் பற்றிய கருத்துக்கள் என்ன?

படத்தில அத்தனை பேர அடி அடினு அடிச்சியே தலைவா, அந்த டைரக்டர் சிவாவ ரெண்டு வெளுத்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா...

டைரக்டர்... படமாயா இது...விஸ்வாசம்னு ஒரு காவியத்த எடுத்தேனு தலைவர்ட்ட ஒரு வார்த்தையாச்சும் சொன்னியா மேன்...

வயசானத் தலைவர பாக்கறத விட நோஞ்சானா கீர்த்தி சுரேஷ பாக்கத் தாங்கமுடில...நடிகையர் திலகமா கலக்கின கீர்த்திய என்னய்யா பண்ணி வைச்சிருக்கிங்க...

சூப்பர் ஸ்டார்னு நயனுக்கு பேரு வைச்சியே மேன், அந்தப் புள்ளைக்கு சோறு வைச்சியா...

படம் ஆரம்பிச்சு தலைவர் வந்ததும் பக்கத்தில இருந்தவங்க விசிலடிச்சு தலைவானு கத்தி ஆராவாரம் பண்ணப்ப அடடானு சந்தோஷமா உக்காந்திருந்தேன்...கடைசில கீர்த்தி புள்ள தப்பு பண்ணிட்டேனு அழும்போது பக்கத்தில நீயில்லமா நாங்கதாம்மா தப்பு பண்ணிட்டோம்னு டை ஹார்ட் ஃபேன்ஸ் ரத்தக்கண்ணீர் வடிக்க வைச்சிட்டியே மேன்...

கதையக் கூட மசாலானு மன்னிச்சு விட்டறலாம்...அந்த வசனம் எழுதினவரை புடிச்சு கட்டி வைச்சு இதே படத்த நூறு தடவ பாக்கவுடனும்....

தலைவர் பேசறது பூராமே பன்ச் டயலாக்னு நினைச்சு....அந்தக் கொடுமைய எப்படி சொல்வேன்...

பக்கத்தில உக்காந்திருந்தவங்க ஒவ்வொரு டயலாக்கும் பதில் சொல்லி தெறிக்கவுட்டு சிரிச்சது மட்டுந்தா ஒரே ஆறுதல்...

மீனா குஷ்பு பாண்டியராஜ்னு எதுக்கு சர்க்கஸ்ல கலர் கலரா கோமளிங்களாட்டம்னே தெர்ல...

படத்தோட பாதி பட்ஜெட் அருவா வாங்கத்தா செலவு பண்ணிருக்காப்ல...அதில கொஞ்சமாச்சும் காஸ்ட்யூம் டிசைனருக்கு கொடுத்திருக்கலாம்...

இந்த படத்தையும் தலய வைச்சே எடுத்திருக்கலாம்ல...தலைவரு என்ன பாவம்யா பண்ணாரு உமக்கு...

தலைவா நீ இமயமலைக்கே போயிரு சிவாஜி...இவனுக கிட்ட மாட்டிட்டு பட்டது போதும்...

அந்த டைரக்டர மட்டும் எங்கியாச்சும் பாத்தா சொல்லுங்க..

ம்.... படம் ஸ்டார்ட் ஆகுது “பேட்டை” படத்தோட ஓப்பனிங் சீன் மாதிரி இருக்கேனு யோசனை வரும் போதே…

படக்குனு “விஸ்வாசம்” படத்தில ரஜினி சார் எங்க வந்தாருனு இரண்டாவது யோசனை தோனுது

அப்போ பிரகாஷ்ராஜ் சார் எண்ட்ரி அவர் இப்போ வில்லனா நடிக்கிறது இல்லையேனு முடிக்கலை....

நயன் தாரா எண்ட்ரி ஓகேனு சமாதானமாகிட்டு ரசிக்கும் போது….

கீர்த்தி எண்டரி சரி பார்ப்போம்னு சரிஞ்சு உக்காந்தேன்....

“திருப்பாச்சி” படம் இடையில ஓடி தங்கச்சிக்கி

மாப்பிள்ளை பார்க்குது.

மீனா, குஷ்பு எண்ட்ரி ஏன்? எதற்கு? எப்படி? எனக்கு தலை வலிக்கிறது என நான் யோசித்து முடிக்கல....

சதீஸ், சத்யன் ரெண்டு பேரும் அதை அதிகப்படுத்த பிரகாஷ் ராஜ் சார் திருந்தி அவர் தம்பிக்கு கீர்த்தியை மணம் முடிக்க கேட்டு வர கீர்த்தி காதலனோடு ஓடிப்போக.

கொல்கத்தா, அபிமன்யு சிங் மட்டுமே போதுமே, ஆனால் ரஜினி சாருக்கு சமமா வில்லன் வேணும்னு ஜெகபதி பாபு சார்.

தம்பி கெட்டவன் அண்ணன் அத விட கெட்டவன் அட “வேதாளம்கதையில்ல” இது.

என் ராசாவின் மனசிலே” படத்தில ராஜ்கிரண்சார் கறி சாப்பாடு சாப்பிடுற காட்சி வைத்தாலும் வைத்தார் இன்னும் எத்தனை படத்தில் வருமோ.

படத்தின் இடைவேளைக்கு முன்பே பாரதி ராஜா சாரின் மைத்துனர் மனோஜ் குமார் படத்தில வராறு எதுக்குனு அப்புறம் யோசிக்கும் போது தான் புரிஞ்சது அவர் “வானத்தை போல” நாடகத்திலயும் அவர் நடிக்கும் விஷயம் புரிஞ்சது. ஒரே கதை தானே அதினால தான் அவர் நடிக்கிறார் என்பது குறியீடு.

“பேட்டை”யையே ஓவர் டேக் பண்ணிய “விஸ்வாசம்” மாதிரி ஒரு படம் பண்ணனும்னு ரஜினி சார் கேட்க சிவா சார் எப்பயும் போல கலந்து கட்டி அடிச்ச படம் தான் இது.

ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்.

உங்களுக்கு வயதாகிவிட்டது என்று கூறினால் நீங்கள்எப்படியும் நம்ப போவதில்லை. தொடர்ந்து நடிப்பீர்கள் எனும் பட்சத்தில் வெற்றி மாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், புஷ்கர் காயத்ரி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடியுங்கள்.

இல்லையெனில்… மன்னிக்க... நான் அதை சொல்லப்போவதில்லை....

-தர்மலிங்கமுருகு*

https://minnambalam.com/entertainment/2021/11/05/14/annatha-review

  • கருத்துக்கள உறவுகள்
நெஞ்சு பொறுக்குதில்லையே
 
புலம்பெயர் தமிழர்களுக்குத் தமது பலம் என்ன என்பது பற்றிய புரிதல் கிடையாது.
 
நேற்றைய தினம் சண் குழுமத்தின் சண் பிக்ஸ்சர்ஸ் தயாரித்த நடிகர் ரஜனிகாந் அவர்களது அண்ணாத்தை எனும் "குப்பைப்படம்"
இலங்கைத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய புலம்பெயர்தேசங்கள் எங்கும் வெளியிடப்பட்டது.
இப்படத்தைக்கண்டுகளிக்க, மாரியம்மன் கோவிலுக்குக் கூழ் காச்சி ஊத்த வண்டில்கட்டிக்கொண்டுபோகுமாப்போல் கூட்டம் கூட்டமாகப் போய் தங்களது மணி பேர்சுகளில் உள்ள யூரோக்களை டாலர்களை ரஜனிகாந் எனும் நடிகனுக்கு அவர் இப்படத்துக்காக வாங்கிய இருநூறு கோடியும் சொச்சம் சில்லறையையும் நான் கொடுக்கிறேன் எனுமாப்போல் தங்கள் கலைச்சேவையச் செய்து முடித்தார்கள்.
 
(சொச்சச்சில்லறை என்பது அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் அவரது சம்பளத்துக்கான வரிப்பணம் இந்தச் சினிமாக்கழிசடைகள் எல்லாம் வெண்திரையில் நேர்மை, நியாயம், தர்மம், அது, இது, புண்ணாக்கு எனப் பேசும் அதுவும் யாரோ எழுதிக்கொடுத்த இரவல்தான்)
இதில் வேதனைப்படவேண்டிய விடையம் என்னவென்றால்,
இதே ரஜனிகாந்தின் மாப்பிள்ளையாகிய தனுஸ் நடித்த "ஜெகமே தந்திரம்" திரைப்படத்தில் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் வெறும் வன்முறையாளர்களாக மட்டுமே வாழ்கிறார்கள் எனும் விம்பம் தெறிக்கவிடப்பட்டதை சினிமாக்கொட்டகை வாசலில் வெடிக்கும் சோழப்பொரிச்சத்தத்தில் மறந்தே போய்விட்டார்கள்.
 
சரி
ரஜனிகாந் அவர்கள் அண்மையில் இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேபல்கே விருதைப் பெற்றிருந்தார் ஆகவே அனைத்து இந்திய சினிமாவின் அடையாளமாக (ஐகோன்) அவர் கருதப்படுகிறார். அப்படியானவர் இலங்கைத்தமிழ் பெண்களை அதுவும் ஒரு போராளிப்பெண்ணை மிகவும் இழிவாகச் சித்தரித்து வெளியிடப்பட்ட பாமிலி மான் தொலைக்காட்சித் தொடர இதுவரையில் கண்டிக்கவில்லை.
இலங்கைத்தமிழர் வாழும் நாடுகளில் இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தையும் சிறிய பக்கோடாக்கம்பனிகளே வெளியிடும். இப்போது புலம்பெயர் தேசங்களில் விரிந்துகிடக்கும் சந்தைவாய்ப்பைக் கணிப்பிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டு மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் திரைப்படங்கள் இங்கும் திரையிடப்படுகின்றன.
இவைகளை முன்வைத்து எம்மை இழிவுபடுத்தும் திரைப்படங்களுக்கு எதிராக நாம் எதிர்குரல் கொடுக்கும் ஒரு தருணத்தை நேற்று இழந்துவிட்டோம்.
நடிகர் ரஜனிகாந் அவர்களுக்குத் தும்மல் எடுக்கும் செய்திகூட பொதுவெளியில் பகிரப்பட்டு விவாதத்துக்குள்ளாக்கும் நிலை இப்போது சினிமா உலகிலும் இணையத்தளங்களிலு காணப்படுகிறது. எமது எதிர்ப்பை நாம் இத்தருணத்தில் தெரிவித்திருந்தால் அது சம்பந்தப்பட்டவர்களது செவிக்குப்போய்ச்சேர்ந்திருக்கும்.
தண்ணிர்விட்டோ வளர்த்தோம்
இப்பயிரைச்
செந்நீரும் கண்ணீரும் விட்டெல்லோ வளர்த்தோம்
கருக்கத்திருவுளமோ!
 
ஆக்கம்
எழுஞாயிறு
 
Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Elugnajiru said:

நூற்றுக்கு நூறு வீதம் சரியாக சொன்னீர்கள்    எழுஞாயிறு.

அருமையான கருத்து. 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்

கீழடியிலே இன்னுமொரு 10 அடி தோண்டி இருந்தால், இந்த படத்தோட ஒரிஜினல் ஸ்கிரிப்ட், ஓலை சுவடியாய் கிடைத்திருக்கும்.கொண்டு போய் மியூசியத்திலே டோனோசோர் எலும்புக் கூட்டுக்கு பக்கத்திலே வைத்திருக்கலாம். செம கலாய்🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிழம்பு said:

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், வில்லனின் ஆட்கள் எல்லாம் தாறுமாறாக அடிபட்டுக் கிடக்கும்போது, அவர்களையெல்லாம் யார் அடித்தது என்று தெரியாத கீர்த்தி சுரேஷ் ஒவ்வொருவரிடமாகச் சென்று, "யாருடா உங்களையெல்லாம் அடிச்சது, தயவு செஞ்சு சொல்லுங்கடா" என்று கேட்பார். அந்தக் கேள்வி, உண்மையில் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.

நல்ல கேள்வி. 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, zuma said:

கீழடியிலே இன்னுமொரு 10 அடி தோண்டி இருந்தால், இந்த படத்தோட ஒரிஜினல் ஸ்கிரிப்ட், ஓலை சுவடியாய் கிடைத்திருக்கும்.கொண்டு போய் மியூசியத்திலே டோனோசோர் எலும்புக் கூட்டுக்கு பக்கத்திலே வைத்திருக்கலாம். செம கலாய்🤣

 அண்ணாத்தய செதச்சிட்டான் புளூ சட்டை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, zuma said:

கீழடியிலே இன்னுமொரு 10 அடி தோண்டி இருந்தால், இந்த படத்தோட ஒரிஜினல் ஸ்கிரிப்ட், ஓலை சுவடியாய் கிடைத்திருக்கும்.கொண்டு போய் மியூசியத்திலே டோனோசோர் எலும்புக் கூட்டுக்கு பக்கத்திலே வைத்திருக்கலாம். செம கலாய்🤣

அரதப் பழசான... மீனாவும், குஸ்புவும்....
அண்ணாத்தே.... படத்தில்,  நடித்திருக்கிறார்களாமே.... 😎

அதைப் பார்த்த... விசர் கூட்டகளை, என்ன வென்று சொல்லி அழைப்பது.
பைத்தியக் காரங்கள்.   😡

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்தே... பட விமர்சனம் இணைத்த,
பிழம்புக்கும், கிருபன் ஜீக்கும்...
யாழ்ப்பாணத்து  உறைப்பு, செத்தல் மிளகாயை... 
பாதியாய்...  பிச்சு, மூக்கில்.. செருகி, விட வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211107-084905.jpg

அண்ணாத்த மசாலா குழம்பு

≠======================

தேவையான பொருட்கள்

முள்ளும் மலரும் -3/4 kg

திருப்பாச்சி -20g

சிறுத்தை -50 g

வீரம் -100 g 

வேதாளம் - 100g

விஸ்வாசம்- சுவைக்கு ஏற்றவாறு

செய்முறை : முள்ளும் மலருமை எடுத்து அதன் பழைய பச்சை வாசனை எல்லாம் போக நன்றாக கழுவவும். பின் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கழுவிய முள்ளும் மலருமை போட்டு கிளறவும் .

பொன்னிறமாக வந்தவுடன் திருப்பாச்சி ,சிறுத்தை, வீரம் வேதாளம் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும் பதமாக வந்தவுடன் சுவைக்கு ஏற்றவாறு கொஞ்சம் விஸ்வாசத்தைப் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.சுவையில்லா அண்ணாத்த மசாலா குழம்பு ரெடி.! 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211107-113223.jpg

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

269558916_669536254063672_91689761821410

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் அண்ணன்களுடன் சேர்ந்து ரஜனி படம் பார்க்கப் பிடிக்கும். இந்தப் படத்தை பார்க்கும்போதுதான் நம்ம ரசிப்புத்தன்மை இவ்வளவு மொக்கையா? என்று கொஞ்சம் வெட்கமாகிவிட்டது. இனி ரஜனி படம் பார்ப்பதென்றால்.... ரைம் வேஸ்ட் என்று விலகிப் போகவேண்டியதுதான்.🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.