Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதே ரவுடிகள் சாணக்கியன் பேச்சை ஏன்குழப்ப முயலவில்லை?அதுவும் சாணக்கியன் சென்ற பொதுத் தேர்தலில் மகிந்த கட்சியில் போட்டியிட்டுத் தோற்றவர். அந்த ரவுடிகள் யாரைக் கேள்வி கேட்க வேண்டும் என்று தெpந்துதானே கேட்ருக்கிறார்கள். 2009 இற்குப் பின் வந்த அத்தனை குழப்பத்திற்கும் காரணம். சம்பந்தனும் சம்பந்தனால் பின்கதவால் கொண்டு வரப்பட்ட சுமத்திரனுமே.அவுசிலும் சுமத்திரனைக் கேள்வி கேட்டார்கள் யாழ்ப்பாணத்திலும் கேள்விகேட்டார்கள்.கனடாவிலும் கேள்விகேட்டார்கள். சுமத்திரனை யார் கேள்விகேட்டாலும் அவர்கள் ரவுடிகள்.யார் ஆதரித்தாலும் அவர்கள் புத்தியீவிகளா?உழுத வயலை உழுது போட்டோவுக்குப் போஸ் கொடுத்து பிடிபட்ட சுமத்தினும்>அவரது ஆதரவாளர்களளும் புத்திசாலிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என்று கூறுவது மொத்த தமிழினத்தையும் கொசசைைப்படுத்துவதாகும் மஆத்திரத்தின் உச்சத்தில் அவர்களின் பேச்சில் நாகரீகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கோபம் நியாயமானது.

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கொஞ்சம் உசார் மடையர்கள்தான். ஆனால் மனதால் இனத்துக்கு தீங்கு எண்ணாதவர்கள். 

👇இதை கூட விளங்கி கொள்ளமுடியாதவர்களா? ஆகவேதான் சில agent provocateurs இவற்றை தூண்டி விடுகிறார்களோ என எண்ணுகிறேன்.

 

தீங்கு மனத்தால் எண்ணாமலே நிகழக்கூடும் என நினைக்கிறேன்.

ஒருவர்/பலர் தூண்டினார்கள் என்று யோசிக்காமல் றௌடிகளாக மாறுவோர் 18- 21  வயதுக்கு மேல் என்றால் தங்கள் செயல்களுக்குத் தாமே பொறுப்பேற்க வேண்டுமென்பது சிம்பிள் விதி! இவர்களுக்கு  விதி விலக்கா என்ன?

நரம்பியலில் - மூளையின் ஹிப்போகம்பஸ் (அதில் இருக்கும் அமிக்டலா என்ற பகுதி) முன்மூளைப் படை என்பன மூன்றும் சேர்ந்து தான் உணர்ச்சிகளை எப்படி செயலாக்குவது என்று கட்டுப் படுத்துகின்றன. 21 வயது தாண்டும் போது இந்த coordination வலுவாகிறது. இது தான் முதிர்ச்சியாக வெளிப்படுகிறது.

இவர்கள் போன்ற றௌடிகளுக்கு இந்த கனெக்ஷன் இன்னும் வலுவாகவில்லையென்பதே உயிரியல் விளக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

அதே ரவுடிகள் சாணக்கியன் பேச்சை ஏன்குழப்ப முயலவில்லை?அதுவும் சாணக்கியன் சென்ற பொதுத் தேர்தலில் மகிந்த கட்சியில் போட்டியிட்டுத் தோற்றவர். அந்த ரவுடிகள் யாரைக் கேள்வி கேட்க வேண்டும் என்று தெpந்துதானே கேட்ருக்கிறார்கள். 2009 இற்குப் பின் வந்த அத்தனை குழப்பத்திற்கும் காரணம். சம்பந்தனும் சம்பந்தனால் பின்கதவால் கொண்டு வரப்பட்ட சுமத்திரனுமே.அவுசிலும் சுமத்திரனைக் கேள்வி கேட்டார்கள் யாழ்ப்பாணத்திலும் கேள்விகேட்டார்கள்.கனடாவிலும் கேள்விகேட்டார்கள். சுமத்திரனை யார் கேள்விகேட்டாலும் அவர்கள் ரவுடிகள்.யார் ஆதரித்தாலும் அவர்கள் புத்தியீவிகளா?உழுத வயலை உழுது போட்டோவுக்குப் போஸ் கொடுத்து பிடிபட்ட சுமத்தினும்>அவரது ஆதரவாளர்களளும் புத்திசாலிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என்று கூறுவது மொத்த தமிழினத்தையும் கொசசைைப்படுத்துவதாகும் மஆத்திரத்தின் உச்சத்தில் அவர்களின் பேச்சில் நாகரீகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கோபம் நியாயமானது.

மூத்திரத்தை அடக்க முடியாவிட்டால் திரவங்களை வயிறு முட்டக் குட்டிக்கக் கூடாது, ஆத்திரத்தை அடக்க முடியாவிட்டால் நாகரீகமாக உரையாடல் வேண்டும் இடங்களுக்கு வரக்கூடாது! 

வந்து அநாகரீகமாக நடப்போரை புத்தியில்லாதோர் என்று கூறுவதை எப்படிக் குறை காண்கிறீர்கள்? வெளித்தோற்றம், நடத்தை வைத்து ஆட்களை மதிப்பீடு செய்யும் சமூகத்தில், றௌடித் தனம் செய்வோரை எப்படி புத்திசாலிகள் என்று கடந்து போவர்?

எனவே, றௌடிகளுக்கு apologists ஆக மாறி இவர்களை ஊக்குவிக்காமல், கண்டித்து , வெட்கத்திற்குள்ளாக்கி ஒதுக்கி வைப்போம்! இவர்கள் தமிழர்களின் நற்பண்புகளுக்கு சான்றான பேர்வழிகள் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனைக் கையாள்வது வெறி  சிம்பிள். சுமத்திரனை அடக்கிவைத்தால் எல்லாம் அடங்கும். கடந்த தேர்தலில் சிறிதரனுக்கு தமிழரசுக்கட்சித் தலைவர் பதவி என்று ஆசை காட்டி  இவரது தயவில் மாவைக்கைு ஆப்படிச்சு இப்ப சிறிதரனைக்கழட்டி விட்டு( சிறிதரன் இடைக்கிட தாயகம்>சுயநிர்ணயம் என்று பேசுவார்) சாணக்கியனை (சாணக்கியனை தன் பாட்டுக்கு இழுத்துச்செல்லலாம்)கைக்குள் போட்டுக் கொண்டு கட்சிக்குள் ஆள்சேர்க்கிறார். தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழரசுக்கட்சிக்குள் இருந்தவர்களைப் பின் தள்ளி விட்டு 2010 இல் பின்கதவால் வந்த சுமத்திரனும் 2020 ஆண்டு மகிந்தவின் கட்சியில் இருந்து சுமத்திரனால் உள்வாங்கப்பட்ட சுமத்திரனுமா தமிழர்களுக்குத் தீர்வு வாங்கித்தரப் போகிறார்கள்?(சாணக்கியனின் தாய் வழியில் சிங்களத் தொடர்பும் இருப்பதாக ஒரு கேள்வி (ச)ரியான விபரம் தெரியவில்லை.)அதூகன் தலையைக்குறிவைக்கிறார்கள். சுமத்திரனை தமிழ் அரசியல் பரப்பில் இருந்து அகற்றினால்  எல்லாம் ஓழுங்காக நடக்கும் இவர்கள் 2 பேரையும் விட்டால் தமிழர்களில் படித்தவர்கள் இல்லை கோணத்தில் எழுதுபவர்களைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and people standing

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் சிலர் தமது பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் பாதுகாப்பாக கொஞ்சி குலாவி இருந்து கொண்டு, மாற்றான் பிள்ளைகளை ரவுடித்தனம் செய்ய ஊக்கிவிக்கின்றார்கள். அவர்கள் நேர்மையானவர்கள் என்றால் தமது பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் இப்படிபட்ட செயல்களை செய்ய ஊக்கிவிக்க வேண்டும். ஆனால் இந்த காகித புலிகள் அப்படி செய்யமாட்டார்கள், அவர்களுக்கு தெரியும் அதன் பக்கவிளைவுகள்.

25 minutes ago, புலவர் said:

சுமத்திரனை தமிழ் அரசியல் பரப்பில் இருந்து அகற்றினால்  எல்லாம் ஓழுங்காக நடக்கும்

35 வருடமா இப்படி அகற்று அகற்றி என்னத்தை கண்டோம். எத்தனை  பேர்  துப்பாகிகளால் அகற்றப்பட்டார்கள். முடிவு பூச்சியம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்பவர்கள் முதலில் ஜனநாயகவாதிகள் போன்றா நடந்து கொண்டீர்கள் ?

இதற்க்கு பதிலை  சொல்லுங்கள் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் .

இங்கே இரண்டு   விடயங்களைக் குறிப்பிடலாம். 

1) சுமந்திரன் குழுவினர் Canada வருகின்றனர் என்றவுடன் அவர்களுக்கு செருப்படி கிடைக்க வேண்டும் என விரும்பியவர் நீங்கள். ஆதலால் நீங்கள் நிச்சயமாக இந்த காடையர் குழுவினரின் குழப்பத்தை ஆதரிக்கிறீர்கள்.

2) சிலரிடம் நேர்மையோ/துணிவையோ  எதிர்பார்க்கக் கூடாது

 

ஜென் மதக் கதையொன்று(சுருக்கமாக)

ஓர் அரசன் ஜென் மதத் துறவி ஒருவரிடம் சென்று  தனது சந்தேகம் ஒன்றை நிவர்த்தி செய்யும்படி கேட்டார்.

அதற்கு பதில் ஏதும் கூறாத துறவி, தனக்கு வழங்கப்பட்ட குவளையில் தேனீரை மிகவும் சிறிதாக , தொடர்ச்சியாக, நிறுத்தாமல் ஊற்றியபடியே இருந்தார். குவளை நிரம்பி வழியத் தொடங்கியது.

துறவி தேனீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தேனீர் கோப்பை நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. 

அரசனுக்கு தனது கேள்விக்கு பதிலளிக்காத துறவி மீது பெருங்கோபம் ஏற்பட்டது. ஆனால் அதனையும் மீறி துறவி தொடர்ந்து தேனீரை வழிந்தோட விடுவது அவருக்கு  பெரும் ஆச்சரியமாய் இருந்தது. 

தாள முடியாமல் துறவியிடம் அரசன் கேட்டார், "தேனீர் கோப்பை நிரம்பி வழிந்தோடிக்கொண்டேயிருக்கிறது. ஆனாலும் நீங்களும் நிறுத்தாமல் ஊற்றிக்கொண்டேயிருக்கிறீர்களே, அது வீணாகவல்லா போகிறது ?"

துறவி கூறினார்..

ஏற்கனவே வேறு கற்பிதங்களால் நிறைந்துள்ள மனதை வேறு விடயங்களைக் கொண்டு மீண்டும் நிரப்ப முடியாது.

படிப்பினை 

1) கோப்பை வெறிதாக இருந்தால் மாத்திரமே அதனை நிரப்ப முடியும்.

2) ஏற்கனவே நிரம்பியுள்ள கோப்பைக்குள் மேலதிகமாக ஊற்றுவது பலனற்றுப் போகும். 

😔

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

வேலிக்கு ஓணான் சாட்சி....

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு…. போற இடங்கள் எல்லாம் எதிர்ப்பு காட்டுவதால்…

ஜேர்மனிக்கு வந்து… ஒரு கூட்டம் வைக்கும்படி, அழைக்கின்றோம். 😁

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தச் சுமந்திரன் எம்மை 'சிறுபான்மை இனக்குழு' எனக் கூறிவர்களின் அழைப்பை ஏற்று அந்த அமெரிக்க கூட்டத்திற்கு எலும்புத்துண்டு போல சென்றது வெறிப்பிலும் மேலான நஞ்சுத்தனமான செயல்.

எமது இனம் சிறுபான்மை இனக்குழுவா?

நாமென்ன ஒன்டு ரெண்டு இல்லக்கத்தவரா?

இதையே வெள்ளையர் தேசத்து மக்களை பார்த்து அமெரிக்க சொல்லுமா?.... 

ஓம், ஈழத்தமிழர்கள் சிறுபான்மை இனக்குழுதான் என அந்தக் கூற்றையும் ஏற்று சுமந்திரன் என்ற 'சின்னக் கதிர்காமர்' தமிழரின் இருப்பையே இல்லதொழிக்கும் இந்த அழிவு வேலைக்கு துணை போயிருப்பதும் அவ(னை)ரை சிலர் ஆதரிப்பதும் *******************  

இந்தச் சுமந்திரன் என்ற மனித உருவத்தில் உள்ள நரியானது நச்சுத்தன்மை உடைய உயிரினம் ஆகும். கூடவே ஒரு சாணவால்🤦‍♂️

நாம் மக்கள் கூட்டம் என்று கூட சொல்லாத அமெரிக்க இப்போது கேவலம் ஒரு 'சிறுபான்மை இனக்குழு' எனக் கூறியுள்ளது.

அவ்வளவுதான்டா தமிழா இனி நீ!

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்தச் சுமந்திரன் எம்மை 'சிறுபான்மை இனக்குழு' எனக் கூறிவர்களின் அழைப்பை ஏற்று அந்த அமெரிக்க கூட்டத்திற்கு எலும்புத்துண்டு போல சென்றது வெறிப்பிலும் மேலான நஞ்சுத்தனமான செயல்.

1) எமது இனம் சிறுபான்மை இனக்குழுவா?

2) நாமென்ன ஒன்டு ரெண்டு இல்லக்கத்தவரா?

3) இதையே வெள்ளையர் தேசத்து மக்களை பார்த்து அமெரிக்க சொல்லுமா?.... 

ஓம், ஈழத்தமிழர்கள் சிறுபான்மை இனக்குழுதான் என அந்தக் கூற்றையும் ஏற்று சுமந்திரன் என்ற 'சின்னக் கதிர்காமர்' தமிழரின் இருப்பையே இல்லதொழிக்கும் இந்த அழிவு வேலைக்கு துணை போயிருப்பதும் அவ(னை)ரை சிலர் ஆதரிப்பதும் *******************  

இந்தச் சுமந்திரன் என்ற மனித உருவத்தில் உள்ள நரியானது நச்சுத்தன்மை உடைய உயிரினம் ஆகும். கூடவே ஒரு சாணவால்🤦‍♂️

நாம் மக்கள் கூட்டம் என்று கூட சொல்லாத அமெரிக்க இப்போது கேவலம் ஒரு 'சிறுபான்மை இனக்குழு' எனக் கூறியுள்ளது.

4) அவ்வளவுதான்டா தமிழா இனி நீ!

 

 

1) இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அதுதான் உண்மை. 

2) எம்மிடம் என்ன இருக்கிறது? அப்படி  ஏதும் இருப்பின் அதை நிறுவ வேண்டியது நாமேதான்.

3) ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

4) இப்போதுதான் உங்களுக்கு இது புரிந்தத..😔இப்போதாவது புரிந்ததே என்று மகிழ்ச்சியடையுங்கள். 

நாங்கள் பூச்சியமும் அல்ல, - நிலையில் இருக்கிறோம்.  -(Minus)இதிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

வாட்சப்பில் வந்தது இது.

 

20-11-2021
ரொறன்ரோ
ஊடக அறிக்கை

சிங்கள - பவுத்த பேரினவாதிகளின் பரப்புரைக்கு இந்தச் சனநாயக விரோதிகள்  அவல் கொடுத்திருக்கிறார்கள்! 


இன்று மாலை கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டம் சுமுகமாக நடந்தது. ஆனால் இறுதி நேரத்தில் எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது மண்டபத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்த சிலர் பேச்சைத் தொடரவிடாமல் உரத்த குரலில் கூச்சல் போடத் தொடங்கினார்கள். 
கூட்டத்தில் அரை மணித்தியாலம் பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். அவருக்கு பலத்த கைத்தட்டலும் கிடைத்தது.
அவையோர் எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது. இருந்தும் அவற்றைச் செவிமடுக்காது தொடர்ந்து சுமந்திரனை பேச விடாது கூட்டத்தைக் குழப்பினார்கள். இதனால் கூட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம். இப்படி நடப்பது இதுவே முதல் தடவை ஆகும். 


கூட்டம் தொடங்கு முன்னர் சிலர் மண்டபத்துக்கு எதிர்ப்புறமாக புலிக்கொடியுடன் நின்றிருந்தார்கள். கனடா நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. கனடா ஒரு சனநாயக நாடு என்ற முறையில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட சட்டம் அனுமதிக்கிறது.
கனடிய தமிழ்ச் சமூகம் சட்டத்தை மதிக்கிற ஒரு சமூகம். இந்த நாட்டில் எல்லோருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை நூறு விழுக்காடு இருக்கிறது. ஆனால் சட்டத்தை மதியாது சட்டத்தை கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. படித்தவர்களைப் பிடிக்காத ஒரு சிலரே சட்டத்தை தங்கள் கையில் எடுக்கத் துணிகிறார்கள். 


இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமிழ்மக்களது உரிமைகளை சனநாயக வழிமுறையில் - பேச்சு வார்த்தைகள் மூலம் - அமெரிக்கா, இந்தியா போன்ற வெளிநாடுகளின் ஆதரவுடன்தான் பெறமுடியும். எங்கள் வழி வன்முறைதான் என்றால் மேற்குலக நாடுகள் முன்னர் போல் எம்மைக் கைவிட்டு விடும்.
இதைத்தான் கூட்டத்தை குழப்பியவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்க விரும்புகிறோம்? அவர்களது சனநாயக விரோத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை அவமதித்தது அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதித்தற்கு ஒப்பாகும். 


நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இருவரும் எமது தாயக மக்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். அந்த மண்ணில் நின்றுகொண்டு அந்த மக்களுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்கள். குறிப்பாக நா.உ சுமந்திரன் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளது  இராசதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளோடு  நா.உ சம்பந்தன் ஐயா அவர்களது அறிவுறுத்தலுக்கு இணங்க எங்கள் மக்களது சிக்கல்கள், குறிப்பாக அரசியல் தீர்வு பற்றி  தொடர்பாக  தொடர்ச்சியாகப் பேசி வருபவர். அவரது அமெரிக்க வருகை ததேகூ க்கு  அந்த நாடு விடுத்த அழைப்பின் பேரிலேயே அவரும் சனாதிபதி சட்டத்தரணி கனக-ஈஸ்வரன் மற்றும் முனைவர் நிர்மலா சந்திரகாசன் வருகை தந்துள்ளார்கள்.

 
தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற சிங்கள - பவுத்த பேரினவாதிகளின் பரப்புரைக்கு இந்த சனநாயக விரோதிகள் இன்று அவல் கொடுத்திருக்கிறார்கள் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் எங்கள் தாயக உறவுகளே.  

நன்றி.

வே.தங்கவேலு
தலைவர்
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

வேறை என்ன அவருக்கு ஒழிக என்டு பழிகப்போச்சு.மற்றவருக்கு வாழ்க என்று பழகிப்போச்சு.ஒருத்தரை கதிர்காமர் மாதிரியும் மற்றவரை ரவி ராஜ் மாதிரியும் பாக்கிறார்கள்.அம்புட்டும் தான்.மற்றும் படி சும் தான் சொல்வது தான் சரி என்று (அது பிழை என்டு குழந்தைப்பிள்ளைக்கும் தெரிந்த விடையைத்தை)ஊடகங்களை வெருட்டுவது ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ட மாதிரி அராஜாகமான மனிசன்.

16 minutes ago, சுவைப்பிரியன் said:

ஒருத்தரை கதிர்காமர் மாதிரியும் மற்றவரை ரவி ராஜ் மாதிரியும்

சுவைப்பிரியன் நீங்கள் கூறிய அந்த ரவிராஜ் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவரும் ஒரு துரோகியாக தான் இன்று புலம்பெயர்ஸ் கும்பலால் கருதப்பட்டிருப்பார். இற்ந்ததால் அவர் மாமனிதர்.

யாழ் நகரின் மேயர்களாக இருந்த இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதின் பின்னர் சிறிது காலம் யாழ் மேயராக இருந்த ரவிராஜ் மூன்றாவதாக கொலை செய்யப்பட்டிருந்தாலும் அவர் துரோகிதான். ஆகவே தமிழ் சூழலில் துரோகிக்கும் தியாகிக்கும்  இடையான வித்தியாசம் மிக சிறியது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

கூட்டமைப்புக்காக பேசவல்ல  வேலுப்பிள்ளை தங்கவேலு

அவர்கள் இருவருக்கும் (சுமந்திரன், சாணக்கியன்)  தானாகவே புலப்படும் ஏன் தங்களை இவர்கள் (தமிழர்கள்) வேண்டாம் என்கிறார்கள் என்பது தெரியும்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு…. போற இடங்கள் எல்லாம் எதிர்ப்பு காட்டுவதால்…

ஜேர்மனிக்கு வந்து… ஒரு கூட்டம் வைக்கும்படி, அழைக்கின்றோம். 😁

சிறி 
அடுத்த வெள்ளி எப்படி வசதியோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

ஜனநாயகத்தின்படி  மக்களை அணுகுங்கள் என்று விளக்கம் கொடுத்தாலும் விளங்காதது போல் நீ EPDP யா அல்லது எங்கள் டெலோ வா என்பது போல் நீங்கள் கேட்பதை பார்க்க பழக்க தோஷம் ஆக்கும் புரிந்துகொள்ளுங்கள் தயவு செய்து .

 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

குறிப்பாக நா.உ சுமந்திரன் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளது  இராசதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளோடு  நா.உ சம்பந்தன் ஐயா அவர்களது அறிவுறுத்தலுக்கு இணங்க

உங்களுடைய இராஜதந்திர சந்திப்புக்கள் எங்களுக்கும் தெரியும் ஐயா,

 

46 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

படித்தவர்களைப் பிடிக்காத ஒரு சிலரே சட்டத்தை

ஐயா "படிப்பு" என்று எதனை அளவிடுகிறார்கள்,

நீங்கள் ஸ்ரீலங்காவில் படித்த  SLAS, அல்லது இந்தியாவில் வாங்கிய சட்டத்துக்கான பட்டம்....

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

எப்படி எனக்கில்லை என்று என்னையும்  கூட்டு சேர்க்கிறீர்கள் ?

படிப்பறிவற்ற நானே இம்முறை சுமத்திரன்  லைவ் சோ காட்டுவார் பாருங்கள் என்று சொன்னேன் அவரின் அமெரிக்க அழைப்பு திரியில் ஆனால்  நான் அப்படி  அந்த புத்தகம் படித்தேன் இந்த புத்தகம் படித்தேன்  என்று திரிக்கு திரிக்கு அலப்பறை பண்ணும் உங்களுக்கு விளங்கவில்லையே ? 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

ஜனநாயகத்தின்படி  மக்களை அணுகுங்கள் என்று விளக்கம் கொடுத்தாலும் விளங்காதது போல் நீ EPDP யா அல்லது எங்கள் டெலோ வா என்பது போல் நீங்கள் கேட்பதை பார்க்க பழக்க தோஷம் ஆக்கும் புரிந்துகொள்ளுங்கள் தயவு செய்து .

 

உங்களுக்கு  பதில்கள் மேலே கூறப்பட்டுள்ளது. தயவுசெய்து வாசிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

உங்களுக்கு  பதில்கள் மேலே கூறப்பட்டுள்ளது. தயவுசெய்து வாசிக்கவும். 

அந்த பதில்களை  வாசித்தபின்தான் மேல் உள்ள கருத்து என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம் .

4 hours ago, Kapithan said:

1) சுமந்திரன் குழுவினர் Canada வருகின்றனர் என்றவுடன் அவர்களுக்கு செருப்படி கிடைக்க வேண்டும் என விரும்பியவர் நீங்கள்.

எதிர்வு கூறலை விரும்பியது என்று சொல்லலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உங்களுக்கு நித்திரை வராது அதுக்கு நானா கிடைசேன் போங்கய்யா கொட்டாவி வருது இனிய இரவு உங்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு…. போற இடங்கள் எல்லாம் எதிர்ப்பு காட்டுவதால்…

ஜேர்மனிக்கு வந்து… ஒரு கூட்டம் வைக்கும்படி, அழைக்கின்றோம். 😁

சுமந்திரன் ஜெர்மனி வந்தால், கட்டாயம் நீங்கள் மாத்திரம் இல்லை, உங்கள் பிள்ளைகளையும் புலிக்கொடி ஏந்திய வண்ணம் அழைத்து சென்று, சுமந்திரனுக்கு எதிராக கோஷம் எழுப்ப வேண்டும், ஜெர்மனி காவல்துறை படம் எடுத்தால் வடிவாக pose கொடுங்கள், அவர்களுடைய ஆவணப்படுத்தலுக்கு இலகுவாக இருக்கும்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அந்த பதில்களை  வாசித்தபின்தான் மேல் உள்ள கருத்து என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம் .

எதிர்வு கூறலை விரும்பியது என்று சொல்லலாமா ?

தேனீர் நிரம்பிவழியும் கோப்பை என்கிறீர்கள்... 🥺

நன்று நன்றி. உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.