Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போனை மீட்பது /தரவுகளை திரும்ப பெறுவது எப்படி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi  s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு  ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன்.
அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்?
பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது 
பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன .
தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களது email, password தெரிந்திருக்கவேணும்.
அடுத்தது முறையாக backup ஆகி இருக்கவேணும். இது இரண்டும் இருந்தால் தரவுகள் மீட்க வாய்ப்பிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

 வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi  s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு  ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன்.
அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்?
பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது 
பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன .
தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி 

கீழேயுள்ள இணைப்பு பயன்படுமாவென பாருங்கள்..கொஞ்சம் முயன்றால் தகவல்களை மீள பெற இயலும்.

https://itechify.com/2020/01/26/recover-data-from-stolen-samsung-galaxy-phone-remotely/

https://itechify.com/2019/03/01/how-to-recover-track-and-locate-lost-galaxy-s10-s10-plus-or-s10e/

https://itechify.com/2018/01/29/access-samsung-cloud-pictures-pc-mac/

  • கருத்துக்கள உறவுகள்

https://www.panspy.com/android-track/how-to-remotely-locate-your-lost-or-stolen-samsung-galaxy-s10.html

இதில் உங்களுக்கான தகவல்கள் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முயற்சி செய்து பார்த்தேன் ....சரி வரவில்லை ... அந்த படங்களை கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் ...நிறைய பெறுமதியான படங்கள் கடைசியாய் ,இலங்கைக்கு போயிருந்த போது எடுத்த படங்கள் எல்லாமே போய் விட்டது.
நான் அந்த சிம்மை புளக் பண்ணி விட்டேன்[அதே நம்பரில் எனக்கு புது சிம் தந்தார்கள் .] . ..அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 
வங்கிகளுக்கான பாஸ்வேட்டை மாத்த வேண்டுமா?
வேறு ஏதாவது பிரச்சனைகள் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் எல்லாவற்றையும் மாற்றுங்கோ...... முன்பு மக்களுக்கு இடையே ஆங்காங்கு திருடர்கள் இருந்தார்கள். இப்போ நவீன நூதனமான திருடர்களுக்கு நடுவே நாங்கள் வாழவேண்டி இருக்கு. சென்றவாரம் எனது பெறாமகள் சிக்கினலில் காரோடு நிற்கையில் ஒருத்தன் வந்து முன் கண்ணாடியை உடைத்து கைப்பையை தூக்கிக் கொண்டு கூலாக நடந்து போகிறான். நிறையபேர் நின்றும் யாரும் தடுக்கவில்லை. நாங்கள் ஜாக்கிரதையாக இருந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடக் கூடாது சகோதரி.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் முயற்சி செய்து பார்த்தேன் ....சரி வரவில்லை ... அந்த படங்களை கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் ...நிறைய பெறுமதியான படங்கள் கடைசியாய் ,இலங்கைக்கு போயிருந்த போது எடுத்த படங்கள் எல்லாமே போய் விட்டது.
நான் அந்த சிம்மை புளக் பண்ணி விட்டேன்[அதே நம்பரில் எனக்கு புது சிம் தந்தார்கள் .] . ..அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 
வங்கிகளுக்கான பாஸ்வேட்டை மாத்த வேண்டுமா?
வேறு ஏதாவது பிரச்சனைகள் வருமா?

எல்லா  கடவுச்சொற்களையும் உடனடியாக மாற்றுங்கள் திருடர்கள் புகுந்து விளையாட முதல். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 

ஃபோன் லொக் ஆகியிருந்தால் உடைத்து உள்ளே போவது கடினம். என்றாலும் வங்கிகளுடன் தொடர்புகொண்டு ஒன்லைன் பரிவர்த்தனைகளை நிப்பாட்டச் சொல்லுங்கள்.

மெயிலின் பாஸ்வேர்ட்டை மாற்றி 2 factor authentication செய்தால் பாவிக்கலாம். புதிய சிம்முக்கு கோட் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி முன்னாடி எங்கயோ எழுதின நாபகம்.. யாழ் இணையம் கணக்குகூட உள்ளபோகமுடியும் எண்டு.. மோகன் அண்ணை உசார் ரதி போன் தமிழ் ஆளுங்களிட்ட சிக்கினால் யாழை ஹக் பண்ணிவிடுவார்கள்.. 😃

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நான் முயற்சி செய்து பார்த்தேன் ....சரி வரவில்லை ... அந்த படங்களை கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் ...நிறைய பெறுமதியான படங்கள் கடைசியாய் ,இலங்கைக்கு போயிருந்த போது எடுத்த படங்கள் எல்லாமே போய் விட்டது.
நான் அந்த சிம்மை புளக் பண்ணி விட்டேன்[அதே நம்பரில் எனக்கு புது சிம் தந்தார்கள் .] . ..அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 
வங்கிகளுக்கான பாஸ்வேட்டை மாத்த வேண்டுமா?
வேறு ஏதாவது பிரச்சனைகள் வருமா?

வடிவா சோதித்து பாருங்கோ.. கைப்பேசி வாங்கியவுடன் தரவுகளை தானாக கூகிள் டிரைவில் சேமிக்கும்படிதான் (Default setting) பொதுவாக இருக்கும்.

தவறவிட்ட உங்கள் கைப்பேசியிலுள்ள தரவுகளை தொலைவிலிருந்தே அழித்துவிடவும் முடியும். (Remote Erase)

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போன் போனவுடனேயே ஓப் ஆகி விட்டது . இனி மேல் அது ரோமெனியாவுக்கு போய்த் தான் திறப்பார்கள் என்று நினைக்கிறேன் ....வங்கித் தகவல்கள் மாத்தி விட்டேன்.
 
1 hour ago, ராசவன்னியன் said:

வடிவா சோதித்து பாருங்கோ.. கைப்பேசி வாங்கியவுடன் தரவுகளை தானாக கூகிள் டிரைவில் சேமிக்கும்படிதான் (Default setting) பொதுவாக இருக்கும்.

தவறவிட்ட உங்கள் கைப்பேசியிலுள்ள தரவுகளை தொலைவிலிருந்தே அழித்துவிடவும் முடியும். (Remote Erase)

அண்ணா , நான் அந்த போன் வாங்கினவுடன் சீரியஸ்னஸ் தெரியாமல் சும்மா ஒரு ஐடி கிரியேற் பண்ணி கொடுத்தேன் ....அதன் பாஸ்வேட் மறந்து விட்டது ஒரு மாதிரி பாஸ்வேட்டை மாத்தி முயற்சி செய்தேன். ஆனாலும் சரி வரவில்லை ...1} போன் ஒப்பில் இருப்பதால் 2}என்னுடைய முயற்சி சரியில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2021 at 15:43, ரதி said:

 வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi  s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு  ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன்.
அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்?
பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது 
பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன .
தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி 

வங்கி தகவல்கள் மட்டும் அல்ல. பாவிக்கும் இமெயில், இணையதளங்கள், ஈ பே அமேசன் போன்ற எல்லாவற்றினதும் பாஸ்வேர்ட்டையும் மாற்றுவது உசிதம்.

குறிப்பாக எங்கே எல்லாம் remember my card details என்று கொடுத்து வைத்தீர்களோ அந்த தளங்களில்.

அதே போல் பேபால் போன்ற தளங்களிலும்.

கூடவே, உங்கள் பாஸ்வேர்டுகளை, பின் நம்பர்களை போனில் சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தால் அவற்றையும் மாற்றுங்கள்.

படங்கள் - இதை மீள பெற, cloud storage இற்கான உள்நுழைவு அவசியம். முதலில் அந்த பாஸ்வேர்ட்டை எடுக்க பாருங்கள். Memorable name, alternative email address மூலம் எடுக்க முடியலாம்.

அதுவும் சரி வராவிட்டால் எனக்கு தெரிந்த ஒருவர் iCloud பாஸ்வேர்ட்டை, Apple தொடர்பு கொண்டு அவரின் பாஸ்போர்ட் ஐ இமெயில் பண்ணி, மேலும் சில ரசீதுகளையும் காட்டி அவரின் அக்கவுண்டை திரும்ப பெற்றார். அப்படி சாம்சுங்கில் செய்ய முடியுமா என்று பாருங்கள்.

Cloud storage இற்கு உள்ளே போனால் - நீங்கள் படங்களை backup பண்ணி வைத்திருந்தால் - படங்களை எடுக்கலாம்.

இல்லை - போனில் மட்டுமே அவை சேமிக்கபட்டிருந்தால் - எடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

அடுத்த முறை போன் வாங்கும் போது எல்லாவற்றையும் சரி வர செய்யுங்கள்.

மேலே கூறியது ஐ ஓ எஸ் பற்றிய என் புரிதல் அடிப்படையில். சாம்சுங்கிற்கு இது பொருந்துமா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரதி said:

...அண்ணா , நான் அந்த போன் வாங்கினவுடன் சீரியஸ்னஸ் தெரியாமல் சும்மா ஒரு ஐடி கிரியேற் பண்ணி கொடுத்தேன் ....அதன் பாஸ்வேட் மறந்து விட்டது ஒரு மாதிரி பாஸ்வேட்டை மாத்தி முயற்சி செய்தேன். ஆனாலும் சரி வரவில்லை ...1} போன் ஒப்பில் இருப்பதால் 2}என்னுடைய முயற்சி சரியில்லை 

ஏம்மா, இவ்வளவு அஜாக்கிரதையா இருந்தால் எப்படி? அதுவும் வங்கிக் கணக்குகள், சொந்த படங்களை அதில் வைத்துக்கொண்டு குறைந்த பட்சம் அதன் பிரதிகளை கணணியிலாவது சேமித்திருக்கலாமே..?

கைப்பேசியை திறப்பதற்கு கடவுச் சொல்லாவது உள்ளதா..? SD அட்டையிருந்தால், அதிலுள்ள கோப்புகளை/படங்களை எளிதாக இன்னொரு கைப்பேசியில் பயன்படுத்த முடியும்.

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி வழிகாட்டுவது என தெரியவில்லை, ஏனெனில் அடிப்படையிலேயே குறைந்த பட்ச முன்னெச்ரிக்கை எடுப்புகள் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது அம்மணி.

இனிமேலாவது வலு கவனமாக சொந்த விவரங்களை கைப்பேசியில் பயன்படுத்துங்கள், கூகிள் டிரைவில் சேமியுங்கள். கைப்பேசியின் தரவுகளை என்கிரிப்ட்(Encrypt) செய்து பயன்படுத்துங்கள். கடினமான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.

தெரிந்த கணணி வல்லுநரை தொடர்புகொண்டு, கைப்பேசி நுணுக்கங்களையும், தரவுகளை எப்படி பாதுகாப்பாக சேமிக்க முடியுமென அறிந்துகொள்ளுங்கள்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஆப்பிள் ஸ்டோர்  ரூம்களில் வயது போனவர்களுக்கு பேரன் பேத்திகள் ஐபோனை  பரிசாக கொடுத்து விட உபயோகிக்க தெரியாமல் இருப்பார்கள் அவர்களுக்கு இலவச கிளாஸ் ரூம் எப்படி ஆப்பிள் போன் இலகுவாக பாதுகாப்பாக உபயோகிப்பது துலைந்தால் எப்படி சமாளிப்பது போன்ற விடயங்களை இலவசமாக சொல்லிக்கொடுப்பார்கள் அப்பிளின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் பின் ஆப்பிளை பின்பற்றி மற்றைய கொம்பனிகள் செய்தது .இங்கு என்னதான் குத்தி முறிந்தாலும் சரி வராது அப்படியான கிளாஸ் ரூம் ஒன்லைனில் சொல்லிக்கொடுக்கிறார்கள் கொரனோ காரணமாக . அக்காசிக்கு  வயது போயிட்டுது🤣 அப்படியான ஒன்றுக்கு இவ  மினக்கெட்டால்  நல்லது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.