Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
சீன தூதுவர்

பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA

படக்குறிப்பு,

சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்

''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நூலகம்

இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவொன்று, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர், முதலில் ஆசியாவிலேயே மிகப் பழைமை வாய்ந்த நூலகமாக விளங்கும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளார்.

நூலகத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்களை சீனா இதன்போது கையளித்துள்ளது.

சீனத் தூதுவர், யாழ்ப்பாணம் நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் கலந்துக்கொண்டிருந்தார்.

சீன தூதுவர், தன்னுடன் எந்தவொரு விடயமும் கலந்துரையாடவில்லை என யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மாறாக தான் யாழ்ப்பாணம் நூலகத்தை காண்பிப்பதற்காகவே அங்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன், சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தமிழ் சமூகத்தின் வாழ்வாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும், ஐந்து நீர் சுத்திகரிப்பு நடமாடும் ஆலைகளை சீன தூதுவர், நன்கொடையாக வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம், இந்த ஆலைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தியா எவ்வளவு தூரம்?

பருத்தித்துறை கடற்கரை பகுதிக்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், இந்தியாவிற்கு எவ்வளவு தூரம் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகளிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த இராணுவ அதிகாரி, 30 கிலோமீட்டர் என கூறினார்.

இதையடுத்து, பருத்தித்துறை பகுதியிலிருந்து ட்ரோன் கேமரா மூலம் குறித்த பகுதியை சீன தூதுவர் ஆராய்ந்துள்ளார்.

இந்த செய்தி காணொளியை நியூஸ் பெஸ்ட் வெளியிட்டிருந்தது.

சீன தூதுவர்

பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA

படக்குறிப்பு,

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு வந்த சீன தூதுவர்

இந்து கலாசார ஆடையில் யாழ்ப்பாணம் சென்ற சீன தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள சீன தூதுவர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்து கலாசார ஆடைகளை அணிந்தவாறு, அவர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

கடல் தொழிலாளர்களுக்கு உதவி

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சீனத் தூதர் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால், சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளையும், 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் சீனா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கையளித்துள்ளது.

சீன தூதுவர் ஏன் யாழ்ப்பாணத்திற்கு திடீர் வருகை புரிந்தார்?

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் தொடர்ந்தும் காணப்பட்ட நல்லுறவு கடந்த சில காலமாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உரத்தை, இலங்கை, நாட்டிற்குள் அனுமதிக்காதிருந்த சம்பவம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது.

இவ்வாறு சீன உரத்தை அனுமதிக்காத இலங்கை, இந்தியாவிடமிருந்து திரவ உரத்தை பெற்றுக்கொண்டிருந்தது.

சீன தூதுவர்

பட மூலாதாரம்,MINISTRY OF FISHERIES MEDIA UNIT

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்சக்தி திட்டத்தை கைவிட சீனா அண்மையில் திடீரென தீர்மானித்திருந்தது.

மூன்றாவது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த மூன்று தீவுகளையும் சீனாவிற்கு வழங்குவதற்கு, இந்தியாவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

தேசிய பாதுகாப்பு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, இந்தியா இந்த அழுத்தத்தை பிரயோகித்திருந்தது.

இவ்வாறான நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, டிசம்பர் மாதம் முதல் தேதி இந்தியா பயணத்தார்.

பஷில் ராஜபக்ஷ, இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்திலேயே, யாழ்ப்பாணத்தை அண்மித்து செய்யவிருந்த மின்சார திட்டத்தை கைவிடுவதாக சீனா டிவிட்டரில் பதில் அறிவித்திருந்தது.

அதேவேளை, மாலத்தீவில் 12 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் சீன தூதரகம் அன்றைய தினமே அறிவித்திருந்தது.

மூத்த பத்திரிகையாளரின் பார்வை

இவ்வாறான பின்னணியில், சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீரென விஜயம் மேற்கொண்டமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

''இந்தியா, இலங்கையில் தங்களின் ராஜதந்திர முயற்சிகளில் வலுவிழந்திருப்பதையே, சீன தூதுவர், யாழ்ப்பாணத்திற்கு சென்று காண்பித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்குள் சீனா முழுமையாக ஊடுறுவியுள்ளது. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரை சந்தித்துள்ளார்கள். பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது, இந்தியா அழுத்தங்களை பிரயோகித்தது. எனினும், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றார். சீனாவும் தற்போது யாழ்ப்பாணத்திற்குள் சென்றுள்ளது. நல்லூருக்கு சென்றமை மற்றும் மீனவர்களை சந்தித்தமை ஆகிய சீனாவின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது என்பதையே காட்டுகின்றது." என பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

சீன தூதுவர்

பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA

இலங்கையின் வட பகுதியில், இந்திய பக்கமாக காணப்படுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மீனவ சமூகத்திற்கு மாத்திரம், முதற்கட்டமாக சீனா உதவிகளை வழங்கியமையானது, இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான நோக்கமாக இருக்கலாமா? என பிபிசி தமிழ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம் வினவியது.

''இல்லை, வலுப்படுத்துவதற்கு இல்லை. மீனவர்களின் நல் அபிப்பிரயத்தை பெற்றுக் கொள்வதே சீனாவின் நோக்கம். ''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகின்றார்கள்" என்ற நல் அபிப்பிரயத்தை பெற முயற்சிக்கின்றார்கள். நல்லூர் ஆலயத்திற்கு கலாசார ரீதியில் சென்றமையானது, தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்கும் ஒரு செயல். மேலாடையை கழற்றி விட்டு நல்லூர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என கூறியமைக்காக, இந்திய தலைவர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு செல்லவில்லை. ஆனால் சீனத் தூதர் நல்லூர் ஆலயத்திற்கு செல்வதற்கான அவசியம் கிடையாது. எனினும், கலாசார ரீதியில் சென்றார். ஏனெனில், தமிழர்களின் மனங்களில் இடம்பிடிப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. சிங்களவர்களின் மனங்களில் இடம்பிடித்து விட்டார்கள். இனி தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சீன தூதுவர் யாழ்ப்பாணம் சென்றார். இந்திய மீனவர்கள் எம்மை அடிக்கின்றார்கள். சீனா எமக்கு உதவி செய்கின்றது என்றே வடபகுதி மீனவர்கள் எண்ணுவார்கள். வட பகுதி மீனவர்ளுக்கு இந்தியா இன்று வரை இவ்வாறான உதவிகளை செய்யவில்லை. சீன தூதுவர் மீனவரிடம் செல்வது மிக பெரிய விடயம். சாதாரண மக்களுக்கு இது பெரியதொரு விடயம்" எனவும் அவர் கூறினார்.

''நல்லூரிலிருந்து ஆரம்பமான சீனாவின் பயணம்" என்றே செய்திக்கு தலைப்பு இட வேண்டும்" எனவும் மூத்த பத்திரிகையாளர் குறிப்பிடுகின்றார்;.

அதானி மன்னாருக்கு விஜயம்

இந்தியாவை அண்மித்துள்ள மன்னார் வளை குடாவில் புதிய வர்த்தக திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில், அதானி நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.

இதன்படி, இந்த திட்டம் குறித்து ஆராய்வதற்காக கடந்த அக்டோபர் மாதம், அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி குடும்ப உறுப்பினர்கள் மன்னார் சென்றிருந்தார்கள்.

சீன தூதுவர்

பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA

அதேபோன்று, யாழ்ப்பாணத்தை அண்மித்த மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டமானது, இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கோணத்தில், இந்தியாவினால்; விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த திட்டம் சீனாவிற்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த திட்டத்தை இந்தியா முன்னெடுக்கக் கோரியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்து வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் பிபிசிக்கு உறுதிப்படுத்தின.

இவ்வாறு இந்தியாவிற்கு அருகிலுள்ள மன்னார் வளைகுடா மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ள கருத்து வெளியாகிய இந்த நிலையில், சீன தூதுவர் உள்ளிட்ட குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடற்றொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கியமை பல்வேறு கேள்விகளை தோற்று வித்துள்ளது.

சீன தூதுவர்

பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA

இலங்கை அரசாங்கத்தின் பதில்

இவ்வாறு எழுந்த கேள்வி குறித்து, ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் பிபிசி தமிழ் வினவியது.

''அதே கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு, அவ்வாறே தெரியும்" என அவர் பதிலளித்தார்.

''அந்த கண்ணாடியில பார்க்கின்றவர்களுக்கு, அவ்வாறான நோக்கம் தெரிகின்றது. இது எதிர்பாராமல் இடம்பெற்ற ஒரு சம்பவமாகவே நான் பார்க்கின்றேன். இந்திய நாடு என்பது எங்களுக்கு மிகவும் நெருங்கிய நாடு என்ற அடிப்படையில, வட பிராந்தியத்தில் கலாசார ரீதியில் தொடர்பு இருக்கிறது. பல மொழி ரீதியான தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில நாங்கள் இன்னும் இணைந்து அவர்களோடு செயல்படுகிறோம். ஆனால், வேறு எந்தவொரு நாடும் வந்து உதவி செய்வதற்கு, யாரும் இல்லை என்று சொல்லப் போவதில்லை. ஆனால், மூன்று தீவுகளுக்கும் நடந்த விடயம் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இந்தியா என்கின்ற எங்களுடைய சகோதர நாடு, வேண்டாம் என்று சொன்னால், அதற்கான நடவடிக்கை எடுத்து, அதை இந்தியா ஊடாக செய்வதாக இருந்தால், அது நல்லது. இந்தியா ஓர் ஆஃபர் வழங்கியுள்ளது. அதைதான் எடுக்க போகிறார்கள் என்று நம்புகிறேன்" என அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/global-59689659

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

'தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் என்று பெயர் போனவர்கள் வேட்டியும் உடுத்து அரிச்சனை தட்டுடன் கோவிலுக்கு போகிறார்கள் என்றால் மண்மேல் உள்ள காதலாகவே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

கம்யூனிஸ்ட் என்று பெயர் போனவர்கள் வேட்டியும் உடுத்து அரிச்சனை தட்டுடன் கோவிலுக்கு போகிறார்கள் என்றால் மண்மேல் உள்ள காதலாகவே இருக்கும்.

யாழ் களமும் சீன அரசுறவியலாளர்களால் வாசிக்கப்படுதோ?!
இங்க தானே சீனாவிடமும் கதைக்கோணும் என்று எழுதுறவங்க!

25 minutes ago, ஏராளன் said:

யாழ் களமும் சீன அரசுறவியலாளர்களால் வாசிக்கப்படுதோ?!
இங்க தானே சீனாவிடமும் கதைக்கோணும் என்று எழுதுறவங்க!

கூகிளின் மொழிபெயர்ப்பு செயலியின் உதவியுடன் ரஷ்ய அதிபர் புட்டின் கூட யாழ் களத்தை வாசித்த பின் தான் படுக்கையில் இருந்தே எழும்புவார் என்று சொல்லினம். பைடன் கொஞ்சம் லேட்டாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் தான் பார்ப்பவராம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாழ் களமும் சீன அரசுறவியலாளர்களால் வாசிக்கப்படுதோ?!
இங்க தானே சீனாவிடமும் கதைக்கோணும் என்று எழுதுறவங்க!

எல்லாரும் வாசிக்கினம். மாங்கு மாங்கு எண்டு எழுதினாலும் ஒரு தமிழ் அரசியல்வாதியும் வாசிக்கேல்லப் போல🤣.

1 hour ago, நிழலி said:

கூகிளின் மொழிபெயர்ப்பு செயலியின் உதவியுடன் ரஷ்ய அதிபர் புட்டின் கூட யாழ் களத்தை வாசித்த பின் தான் படுக்கையில் இருந்தே எழும்புவார் என்று சொல்லினம். பைடன் கொஞ்சம் லேட்டாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் தான் பார்ப்பவராம்.

கமலாக்கா வாசிச்சி சொல்றேல்லயாமோ🤣.

சீரியசாக,

இவரை தமிழ் அரசியல்வாதிகள் சந்திக்கவில்லையா அல்லது அவர்கள் சந்திக்க விரும்பவில்லையா என யோசிக்க வேண்டும்.

பயணம் முற்றாக இலங்கை அரச ஆதரவுடனே நடப்பதாக தெரிகிறது. சந்தித்தவ அமைச்சரும் ஆளுனரும் அரசின் ஆட்களே.

தமிழ் தேசிய அரசியலை, அரசியல்வாதிகளை bypass பண்ணி, இலங்கயின் நண்பனாக தமிழ் மக்களை நேரடியாக - அரச ஆதரவு தமிழர்கள் மூலம் அணுக எத்தனிக்கிறார்கள்.

அதாவது - தமிழ் தேசியத்தை கைவிட்டு, சீனா தரும் வாய்புக்களை பயன்படுத்தி, அரசியல், சுயாட்சி அபிலாசைகளை விடுத்து, இலங்கையராக வாழுங்கள் என்பதே செய்தி என நான் நினைகிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பைடன் கொஞ்சம் லேட்டாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் தான் பார்ப்பவராம்.

நோ நோ
அவருக்கு நான் தான் மொழிபெயர்த்து அனுப்புகிறேன்.

அப்பதான சரியான தகவல் போய்ச் சேராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கூகிளின் மொழிபெயர்ப்பு செயலியின் உதவியுடன் ரஷ்ய அதிபர் புட்டின் கூட யாழ் களத்தை வாசித்த பின் தான் படுக்கையில் இருந்தே எழும்புவார் என்று சொல்லினம். பைடன் கொஞ்சம் லேட்டாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் தான் பார்ப்பவராம்.

இவ தான் அந்த மொழி பெயர்ப்பாளரோ?!

வணக்கம் நம்பர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

இவரை தமிழ் அரசியல்வாதிகள் சந்திக்கவில்லையா அல்லது அவர்கள் சந்திக்க விரும்பவில்லையா என யோசிக்க வேண்டும்.

விருப்பம் தான்.
ஆனாலும் இந்தியா உத்தரவு வரணுமே?

19 minutes ago, ஏராளன் said:

இவ தான் அந்த மொழி பெயர்ப்பாளரோ?!

வணக்கம் நம்பர்களே!

ஆரம்பத்தில் சமயம் பரப்பும் போதும் பாதிரிமார்கள் விழுந்தடித்து அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:
2 hours ago, goshan_che said:

விருப்பம் தான்.
ஆனாலும் இந்தியா உத்தரவு வரணுமே?

இதுவா காரணம்  ?

அல்லது பேச அழைக்கவில்லையா?

அல்லது பேசினாலும் - இலங்கையின் நிலைப்பாட்டில்தான் சீனாவும் இருப்பதால் - ஒரு பலனுமில்லை என்பதால் பேசவில்லையா?

இந்தியாவுக்கு காட்ட படும் இந்த சீன பூச்சாண்டியில் விரும்பியோ விரும்பாமலோ எமம்மை சிக்க வைத்து, அதன் மூலம் இந்தியாவை முற்றாக இலங்கை பக்கம் வரவைக்கும் முயற்சியா.

இதுவரைக்கும் எமது பிரச்ச்னையில்:

சீனா - அது இலங்கையின் பிரச்சனை நாம் தலையிடோம்.

இந்தியா - தமிழருக்கு 13 பிளஸ் கொடுக்க வேண்டும்.

இதில் ஓரளவு திறம் இந்தியா. அதையும் நம்மை இழக்க வைக்கும் சதியாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கஜன் அணியினரை சீனாவுடன் பேச சொன்னது ????????

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மண்ணின் முக்கியத்துவம் உலத்தில எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குது.. ஆனால்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு காணி விற்கும் எம்மவருக்கும்.. உள்ளூர் தமிழ் அரசியல் வியாதிகளுக்கும் தான் புரியுதே இல்லை. எவ்வளவு தியாகங்களை செய்து புரிய வைக்க முயன்றாலும் புரிதுதில்லை. சிங்களவரோடு வாழ்வதே பாக்கியம் என்று கொண்டு அலையுதுகள்.. இராமநாதன் தொடங்கி சுமந்திரன் வரை. 

  • கருத்துக்கள உறவுகள்

எம் பண்பாட்டுக்குள் புகுந்து
தன்னை மறைக்க எவன் முனைந்து நடிக்கிறானோ
அவன் எம்மை ஆளத் துடிக்கிறான்
வட்டக்கச்சி
வினோத்
May be an image of 5 people and people standing
 
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, MEERA said:

கஜன் அணியினரை சீனாவுடன் பேச சொன்னது ????????

ஓம் இப்பவும் பேசத்தான் சொல்கிறேன்.

அவர்கள் ஏற்கனவே இந்திய எதிர் நிலையை எடுத்து விட்டார்கள். கிட்டதட்ட இந்தியாவும் இனப்படுகொலையில் கூட்டு என்ற நிலை.

அதே நேரம் அதி தீவிர தமிழ் தேசிய அரசியலை முன் தள்ளுகிறார்கள்.

ஆகவே சீனன் நல்லூர், மன்னார் போவதிலும் பல மடங்கு பீதியை டெல்லியில் கிளப்பும், இவர்களை போல ஏலவே இந்திய எதிர் நிலைப்பாட்டில் அதே சமயம் அதி தீவிர தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருப்பவர்கள் சீனாவிடம் பேசுவது.

இந்த பீதி, இலங்கை தமிழர்களை, கூட்டமைப்பை இழந்து விட கூடாது என்ற சிந்தனையை டெல்லியில் தோற்றுவித்தால் - எமக்கு ஒரு ஆமான தீர்வை பெறுவது இலகுவாக இருக்கும்.

ஆகவே இவர்கள் அரசின் வழி காட்டலில் இலங்கையும், சீனாவும் போடும் ஒரு கூட்டு நாடகத்தின் அங்கமாக யாழ் வந்திருந்தாலும் அவர்களை சந்திக்க கஜன்ஸ் போன்றோர் முயல வேண்டும்.

Play them at their own game.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆகவே இவர்கள் அரசின் வழி காட்டலில் இலங்கையும், சீனாவும் போடும் ஒரு கூட்டு நாடகத்தின் அங்கமாக யாழ் வந்திருந்தாலும் அவர்களை சந்திக்க கஜன்ஸ் போன்றோர் முயல வேண்டும்.

Play them at their own game.

படைபலத்தை எப்படி ஒன்றிணைந்து அழித்தார்களோ, அதேபாணியில் தமிழரது அரசியல் விருப்பையும்  முதுகிலே தடவித் தலையை அமுக்கும் கூட்டுத்தந்திரம். இதனூடாகத் தமிழரை அன்னியப்படுத்தி(இப்போது அந்நியோன்யமா என்று கேட்கக்கூடாது) முழுமையாக இலங்கையரசின் பக்கம் வீழ்த்தும்  நகர்வு. அதனைத் சிறப்பாகச் சம் ஐயாவும் செய்கின்றார் என்பது வேறுவிடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் சமயம் பரப்பும் போதும் பாதிரிமார்கள் விழுந்தடித்து அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார்களாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மவர் பிள்ளைகளை விட சீனன் தமிழ் படிக்கிறதிலை மும்முரமாய் நிக்கிறான்...:)
உந்த தமிழை படிச்சு என்ன செய்யிறது என்பவர்கள் கவனிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே முடிவும் ஆரம்பமுமாகும் - சீன தூதுவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, nunavilan said:

இதுவே முடிவும் ஆரம்பமுமாகும் - சீன தூதுவர்

சம்பந்தப்பட்டவர்களுக்கு ரோஷம் மானம் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தப்பட்டவர்களுக்கு ரோஷம் மானம் வருமா?

நாங்கள் வர வைக்க என்ன செய்கிறோம்?

என்ன செய்யலாம்?

1. கஜன்ஸ்சை சீனாவிடம் நெருங்குவது போல் பாசாங்காவது காட்ட சொல்லலாம்.

2. திமுக வை நட்பு சக்தியாக வைத்திருந்தால் - சுபவீ, வீரமணி, திருமா போன்றோர் மூலம் திமுகவை அணுகி, அதன் மூலம் காங்கிரஸை டெல்லியில் huge diplomatic failure for India in Sri Lanka, both Sinhalese and Tamils are now friends of China. India is without any allies in SL எண்டு கூப்பாடு போடவைக்கலாம்.

இலங்கையில் மோடி அரசு இராகதந்திர தோல்வியை அடைகிறது, வடக்கிலும் சீனா, தமிழரிடம் நட்புடன் சீனா என இதை மோடியை எதிர்க்கும் ஆயுதமாக காங்கிரஸ் கூட்டணியை பாவிக்க வைக்க வேண்டும்.

அப்போ வேறு வழியில்லாமல் இந்தியா கூட்டமைப்பை அழைக்கும் - அப்போது அவர்களை நெளிவு சுளிவாக கையாண்டு - எமக்கு தேவையானதை அடைய வேண்டும். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரது ஆயுதபலத்தை இல்லாமற் செய்து கடைசியா வேதாரணியமும் தனுஸ்கோடியும் சீன எல்லைக்குள் வந்தமாதிரியிருக்குது. காங்கரஸின் பழிவாங்கும் அரசியலால் தமிழிப்படுகொலையில் முடிந்ததோடு, தொடர்ந்து வரும் இந்தியஅரசுகளின் நேர்மையற்ற வெளியுறவுக் கொள்கையால் சீனா தலைப்பகுதில் நெருப்பை மூட்டியவாறு சிறிலங்காவின் உதவியோடு காலையும் கடிக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nochchi said:

இதை வட இந்தியாவில் தேர்தல் சமாச்சாரம் ஆக்குவதில்தான் எமது தீர்வுக்கான சாவி இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, goshan_che said:

நாங்கள் வர வைக்க என்ன செய்கிறோம்?

என்ன செய்யலாம்?

1. கஜன்ஸ்சை சீனாவிடம் நெருங்குவது போல் பாசாங்காவது காட்ட சொல்லலாம்.

2. திமுக வை நட்பு சக்தியாக வைத்திருந்தால் - சுபவீ, வீரமணி, திருமா போன்றோர் மூலம் திமுகவை அணுகி, அதன் மூலம் காங்கிரஸை டெல்லியில் huge diplomatic failure for India in Sri Lanka, both Sinhalese and Tamils are now friends of China. India is without any allies in SL எண்டு கூப்பாடு போடவைக்கலாம்.

இலங்கையில் மோடி அரசு இராகதந்திர தோல்வியை அடைகிறது, வடக்கிலும் சீனா, தமிழரிடம் நட்புடன் சீனா என இதை மோடியை எதிர்க்கும் ஆயுதமாக காங்கிரஸ் கூட்டணியை பாவிக்க வைக்க வேண்டும்.

அப்போ வேறு வழியில்லாமல் இந்தியா கூட்டமைப்பை அழைக்கும் - அப்போது அவர்களை நெளிவு சுளிவாக கையாண்டு - எமக்கு தேவையானதை அடைய வேண்டும். 

காங்கேசன் துறை தொடக்கம் பருத்தித்துறை , மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரைக்கும் கரையோர புகைரதப்பாதை அமைக்கும் திட்டம்  சீனாவிடம் உண்டு.

அப்புறம்........😁

2 minutes ago, goshan_che said:

இதை வட இந்தியாவில் தேர்தல் சமாச்சாரம் ஆக்குவதில்தான் எமது தீர்வுக்கான சாவி இருக்கிறது.

வட இந்தியாவில் ஈழப்பிரச்சனை தூசுக்கு சமன். வட இந்திய மக்களுக்கு தலைமேல் பிரச்சனைகள் அதிகம். அவர்களுக்கு பாக்கிஸ்தானும் காஷ்மீரும் போதுமான தேர்தல் பிரச்சார பிரச்சனைகள்.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதர்

வட மாகாண விஜயத்தின் ஒரு பகுதியாக சீன தூதுவர், மன்னாருக்கு இன்று (17) விஜயம் மேற்கொண்டிருந்தார். மன்னார் - தாழ்வுபாடு பகுதி ஊடாக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விரைவு படகில் சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பாக் நீரிணை நோக்கி பயணத்தை தொடங்கினர்.

இதன்போது, ராமர் பாலம் என்று நம்பப்படும் மூன்றாவது மணல் திட்டை, சீன தூதுவர் பார்வையிட்டார். கடந்த சில தினங்களாகவே சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர், வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கினார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள மீனவ சமூகத்திற்கு சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை சீன தூதுவர் வழங்கி வைத்திருந்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர், நூலகத்திலுள்ள இந்திய வளாகத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்தார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு சென்ற சீன தூதுவர், அங்கிருந்து ''இந்தியாவிற்கு எவ்வளவு தூரம்?'' என வினவியதுடன், அந்த இடத்தை ட்ரோன் கேமராக்களின் மூலம் கண்காணித்தார்.

https://www.bbc.com/tamil/global-59689659

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

வட இந்தியாவில் ஈழப்பிரச்சனை தூசுக்கு சமன். வட இந்திய மக்களுக்கு தலைமேல் பிரச்சனைகள் அதிகம். அவர்களுக்கு பாக்கிஸ்தானும் காஷ்மீரும் போதுமான தேர்தல் பிரச்சார பிரச்சனைகள்.🤣

ஈழப்பிரச்சனை தூசுக்கு சமம்தான்.

ஆனால் இந்திய எல்லைகளில் சீனா காலூன்றுகிறது என்பது அங்கே அரசியலை புரட்டி போடக்கூடிய விடயம்

14 hours ago, குமாரசாமி said:

காங்கேசன் துறை தொடக்கம் பருத்தித்துறை , மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரைக்கும் கரையோர புகைரதப்பாதை அமைக்கும் திட்டம்  சீனாவிடம் உண்டு.

அப்புறம்........😁

👍🏿 ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக, ஒரு வஞ்சிக்க பட்ட இனத்தின் மகனாக, உங்கள் இந்தியா மீதான ஆத்திரம் புரிகிறது. எனக்கும் உண்டு.

ஆனால் எதிரிக்கு சகுனபிழை வேண்டும் என்பதற்காக நாம் மூக்கை அறுக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

காங்கேசன் துறை தொடக்கம் பருத்தித்துறை , மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரைக்கும் கரையோர புகைரதப்பாதை அமைக்கும் திட்டம்  சீனாவிடம் உண்டு.

அப்புறம்........😁

வட இந்தியாவில் ஈழப்பிரச்சனை தூசுக்கு சமன். வட இந்திய மக்களுக்கு தலைமேல் பிரச்சனைகள் அதிகம். அவர்களுக்கு பாக்கிஸ்தானும் காஷ்மீரும் போதுமான தேர்தல் பிரச்சார பிரச்சனைகள்.🤣

சீனா, சிங்கப்பூர் முன்னேற்றத்துக்கு, காரணம் சீனர்கள் கடின உழைப்பு..... ஊழல் இல்லை.

ஊழலுக்கு கடும் தண்டணை.

இந்தியா ஒரு போதுமே முன்னேற முடியாது, காரணம் ஊழல்....

அவர்கள், ஒரு போதுமே.... எமக்கு ஆதரவு தரப் போவதில்லை.

எமக்கும் தேவையில்லை, காரணம் இழக்க எதுவும் இல்லை.

ஆக.... அமெரிக்காவோ, சீனாவோ, வாறதை கெட்டியா பிடிக்க வேண்டியது தான்.....

மிக, நீண்டகாலமாக, இந்தியாவை நம்பி, இழந்தது மிக அதிகம்..... மேலும் காத்திருக்க எவ்வித காரணமும் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆனால் எதிரிக்கு சகுனபிழை வேண்டும் என்பதற்காக நாம் மூக்கை அறுக்க கூடாது.

எததைனையோ மாவீரர்களும் மக்களும் உயிரையே கொடுத்த போது மூக்கை அறுத்தால் என்ன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.