Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை போலீஸாருக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போலீஸாருக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுவது ஏன்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை போலீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு, இந்த பாடத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கை போலீஸ் சேவை அதிகாரிகள் அடங்களாக 70 பேர் பங்குப்பற்றியிருந்தனர்.

 

இலங்கை போலீஸ்

பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA

நிகழ்வின் ஆரம்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரின் சிறப்பு செய்தி குறிப்பு வாசிக்கப்பட்டது.

இந்தி மொழியின் பிரபலத்தையும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சிறப்பு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தி மொழி கற்பதில் இலங்கை போலீஸ் அதிகாரிகள் கொண்டுள்ள ஆர்வத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வரவேற்றுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசார மற்றும் மொழி உறவுகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலானது என பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் கூறியுள்ளார்;.

இந்த உறவு இந்தி மொழியின் ஊடாக, மேலும் வலுப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி படிப்பைத் தொடர்வதற்கு வருடா வருடம், இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான சந்தர்ப்பத்தை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

இலங்கை போலீஸ்

பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA

இலங்கையிலுள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் 80 அரச பாடசாலைகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு மறைந்த பேராசிரியர் இந்திரா தஸநாயக்க, பாரிய பங்களிப்பு வழங்கியதாகவும், அவர் மறைவின் பின்னர், அவரை கௌரவிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது, இந்திய ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம், இலங்கையுடனான கலாசார உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதை இது வலியுறுத்துகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்தார்.

இலங்கை போலீஸாருக்கு, இந்திய அரசாங்கம் அவ்வப்போது வழங்கி வரும் உதவிகளுக்கு அவர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்ள ஹிந்து பாடத்திட்டம் பாரிய உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை போலீஸாருக்கு, ஹிந்து பாடத்திட்டத்தின் முதல் பகுதி விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை போலீஸாருக்கு ஏன் இந்தி மொழி அவசியம்?

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள் என்பதனால், அவர்களுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு இந்தி மொழி கற்பது கட்டாயமானது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ஆங்கிலம் தெரியாத பெரும்பாலான சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருகின்றமையினால், போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏனைய மொழிகளை கற்பது கட்டாயமானது என அவர் குறிப்பிடுகின்றார்.

 

இலங்கை போலீஸ்

பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA

''எமது மொழி என்பது மிகவும் முக்கியமானது. இந்தி, கொரியன், ரஷ்யன் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் எமக்கு முக்கியமானது. அதற்கு காரணம், இலங்கைக்கு அனைத்து நாட்டு பிரஜைகளும் வருகைத் தருகின்றனர். குறிப்பாக சுற்றுலாத்துறைக்கு மொழி என்பது மிக முக்கியமானது. வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தவுடன், அவர்களுடன் தொடர்புகளை பேணும் போது, சிலருக்கு ஆங்கிலம் தெரியாது. அவ்வாறானவர்களுடன் தொடர்புகளை பேணுவது போலீஸாருக்கு மிக கடினமான ஒன்றாகும். அதனால் போலீஸ் திணைக்களத்திலுள்ளவர்கள் அனைத்து மொழிகளையும் கற்பது அவசியமானது என்பதே பொதுவான கருத்தாகும். அதேநேரம், சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை பேணும் போதும், தூதரகங்களுடன் தொடர்புகளை பேணும் போது மொழி கட்டாயமானது." என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இலங்கை போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்பிக்கும் வகையிலான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

''போலீஸாருக்கு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மாத்திரம் கற்றால், அது போதுமானதாக இருக்காது. இதற்கு முன்னர் தனிப்பட்ட ரீதியில் வேறு மொழிகளை கற்ற அதிகாரிகள் போலீஸ் திணைக்களத்தின் இருந்தனர். நாம் நிறுவனம் என்ற ரீதியில் போலீஸ் அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்றுக்கொடுப்பது குறித்து தற்போது அவதானம் செலுத்தியுள்ளோம்." என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59954024

  • கருத்துக்கள உறவுகள்

அங்க பாதிசனம் மாண்டரின்ல டிகிரி முடிக்க போகுது… இவரு இப்பத்தா 70 பேருக்கு இந்தி கத்துக்கொடுக்க ஆரம்பிச்சிருக்காரம்….😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இலங்கை போலீஸாருக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுவது ஏன்?

இது ஒரு நேரத்தில் உளவு பார்க்க சீனனுக்குத் தான் உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இது ஒரு நேரத்தில் உளவு பார்க்க சீனனுக்குத் தான் உதவும்.

கிந்தியாவிட்ட  சீனன்  உளவு பாக்கிற அளவுக்கு என்ன ரகசியம் கிடக்கு??????

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

கிந்தியாவிட்ட  சீனன்  உளவு பாக்கிற அளவுக்கு என்ன ரகசியம் கிடக்கு??????

சைனாக்காரனின் பணம் டெல்லி மத்திய மந்திரிகளையும் தாண்டி பாயும் வல்லமை பெற்றது .

 

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அங்க பாதிசனம் மாண்டரின்ல டிகிரி முடிக்க போகுது… இவரு இப்பத்தா 70 பேருக்கு இந்தி கத்துக்கொடுக்க ஆரம்பிச்சிருக்காரம்….😂

நான் நினைக்கிறன் நாட்டை இந்தியாவுக்கும் சைனாவுக்கும் பிரித்து கொடுக்கப்போறாங்கள் போல் உள்ளது .

 

21 minutes ago, ஈழப்பிரியன் said:

இது ஒரு நேரத்தில் உளவு பார்க்க சீனனுக்குத் தான் உதவும்.

அவன் அமைதியாய் தயாராகி விட்டான் At a Beijing radio station, a little Hindi, Urdu and Tamil

Zhang Qin, a 21-year-old from Beijing, is staring at a computer screen, occasionally stopping to scribble in her notepad. Look over her shoulder and you’ll see the text is in Hindi. https://indianexpress.com/article/world/asia/at-a-beijing-radio-station-a-little-hindi-urdu-and-tamil/

மூன்று தமிழ் ஹிந்தி உருது மொழிகளில் வானொலி நிலையங்களில் சீன  பெண்களே ஹிந்தியை படித்து பேசுகிறார்கள் இது நேற்று முந்தநாள்  நடந்த முடிவு அல்ல பலவருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு உள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

கிந்தியாவிட்ட  சீனன்  உளவு பாக்கிற அளவுக்கு என்ன ரகசியம் கிடக்கு??????

மாடு.. மாட்டு சாணம்.. மாட்டு மூத்திரம்… 🤮🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இனி எந்த நாட்டுக்கு போகிறோமோ அந்த நாட்டு மொழி படிக்க வேணும் போல.
ஜேர்மன் காரர் தான் இந்தியர், சீனருக்கு அடுத்தாக வரும் உல்லாச பயணிகள்.  ஜேர்மனை சிறிலங்கா பொலிசார் படிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

இனி எந்த நாட்டுக்கு போகிறோமோ அந்த நாட்டு மொழி படிக்க வேணும் போல.
ஜேர்மன் காரர் தான் இந்தியர், சீனருக்கு அடுத்தாக வரும் உல்லாச பயணிகள்.  ஜேர்மனை சிறிலங்கா பொலிசார் படிப்பார்களா?

இல்லை எந்தெந்தநாட்டிட்டை கடன் வாங்கிறமோ அந்தந்தநாட்டு மொழி படிக்கவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

இனி எத்தனை பாஷைகள்   தெரியும் என்று  பார்த்து தான் பாராளுமன்ற தெரிவு ...தாய் மொழி தமிழ்  . கல்வி மொழி ஆங்கிலம் ,, சிங்களம் தலை   நகரில் உரையாட . மாண்டரின் .....இந்தி.....படிக்க எங்கு போவது ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிலாமதி said:

இனி எத்தனை பாஷைகள்   தெரியும் என்று  பார்த்து தான் பாராளுமன்ற தெரிவு ...தாய் மொழி தமிழ்  . கல்வி மொழி ஆங்கிலம் ,, சிங்களம் தலை   நகரில் உரையாட . மாண்டரின் .....இந்தி.....படிக்க எங்கு போவது ?

மாண்டரின் தெரியாட்டி இலங்கைக்கே போகேலாத நிலை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இல்லை எந்தெந்தநாட்டிட்டை கடன் வாங்கிறமோ அந்தந்தநாட்டு மொழி படிக்கவேணும்

எந்தெந்த நாட்டிடம் கடன் வாங்கவில்லை என்று கணிப்பது சுலபம்.

எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

சைனாக்காரனின் பணம் டெல்லி மத்திய மந்திரிகளையும் தாண்டி பாயும் வல்லமை பெற்றது .

சைனாக்காரன்ரை பண வல்லமை அமெரிக்கன்காரனுக்கும் ஐரோப்பியனுக்கும் நல்லவடிவாயே தெரியும். சைனாக்காரன்ரை பண வலிமை ஒருகணம் அங்கெலா மேர்கலின்ரை ஆட்சியையே சின்ன ஆட்டம் காணச்செய்தது.Wirecard (https://www.wirecard.com/de/homepage/)

சேர்பிய நாட்டு நண்பன் ஒருவன் சொன்னான்.சீனர்கள் தனது நாட்டின் பல இடங்களிலும் தனது ஊரிலும் பெரிய பெரிய மாடமாளிகைகளும் மாடி கடைகளும் அளவுகணக்கில்லாமல் கட்டிக்கொண்டு வருகின்றார்களாம். தனது சிறிய நகரத்தில் சீனா ரவுண் என ஒரு இடத்தை நிறுவி விட்டார்களாம்.அந்த இடத்தில் மின்சார உபகரணங்கள் தொடக்கம் சாப்பாட்டு வகைகள் அனைத்தும் குப்பை மலிவாம்.

கதை இப்படியிருக்க சீனனுக்கு இந்தியா சிறிலங்கா எல்லாம் ஜுசுப்பி 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

மாண்டரின் தெரியாட்டி இலங்கைக்கே போகேலாத நிலை வரும்.

ஜேர்மன் பாசை முழுக்க தெரிஞ்சு கொண்டே நான் இஞ்சை இவ்வளவுகாலமும் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறன்?

கைப்பாசையின்ர விளக்கம் எந்தப்பாசைக்கும் நிகராகாது.😎

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலீசும் தெரியாது தமிழும் தெரியாது, இதுக்க ஹிந்தியை படிச்சு என்ன செய்ய போகினம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2022 at 17:43, குமாரசாமி said:

கிந்தியாவிட்ட  சீனன்  உளவு பாக்கிற அளவுக்கு என்ன ரகசியம் கிடக்கு??????

 

On 11/1/2022 at 18:15, பாலபத்ர ஓணாண்டி said:

மாடு.. மாட்டு சாணம்.. மாட்டு மூத்திரம்… 🤮🤣

முடியல  ராசாக்கள்

சிரிப்பை  அடக்கமுடியல🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.