Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேகமெடுக்கும் விஜயலட்சுமி வழக்கு; ஹரி நாடார் கைது - சீமானுக்கு சிக்கல்?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பி.ஆண்டனிராஜ்

நடமாடும் நகைக்கடையாக வலம் வருபவர், ஹரிகோபால கிருஷ்ணன் என்ற ஹரி நாடார். நெல்லை மாவட்டம் இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே மும்பைக்குச் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.

ராக்கெட் ராஜாவின் `பனங்காட்டுப் படை’ கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

வட்டித் தொழில் செய்டுவந்த ஹரி நாடார் பின்னர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். புதிய திரைப்படங்களுக்கு பூஜை போட்டிருந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் உள்ளிட்ட சிலருக்குக் கடன் வாங்கிக் கொடுப்பதாக 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

நடிகை விஜயலட்சுமி
 
நடிகை விஜயலட்சுமி

இது தொடர்பான வழக்கில் பெங்களூரு போலீஸார் கடந்த ஆண்டு அவரைக் கைதுசெய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர். இதனிடையே, சீமான் மீது குற்றம்சாட்டி வந்த நடிகை விஜயலட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை சென்னை திருவான்மியூர் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், ``உடல் நிலை சரியில்லாத நிலையிலும், சிலரின் தூண்டுதலின் பேரில் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். சீமானுக்காக என்னை ஹரி நாடார் மிரட்டுகிறார். அதனால் சீமான், ஹரி நாடார், சதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்திருந்தார்.

ஹரி நாடார்
 
ஹரி நாடார்

இது தொடர்பாக வீடியோவும் வெளியிட்டிருந்தார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது இந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து அவர் தன் புகார் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பழைய வழக்கை இப்போது போலீஸார் தூசு தட்டி எடுத்துள்ளனர்.

சீமான் மீது வழக்கு பாயுமா?

ஹரி நாடார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக 506 (1), 506 ஆகிய குற்றப் பிரிவுகளிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஹரி நாடாரைக் கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியுடன் பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பினார்கள்.

திருவான்மியூர் காவல்துறையினர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று ஹரி நாடாரை கைது செய்தனர். பின்னர் சிறைத்துறை நடைமுறைகளுக்குப் பின்னர் அவரை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அவரை மூன்று நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் சீமான் தூண்டுதலில் ஹரி நாடார், சதா ஆகியோர் தன்னை மிரட்டியதாகவும் அதனால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சீமான் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சீமான்
 
சீமான்

ஹரி நாடாரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்த பின்னர் சீமானிடமும் விசாரணை நடத்த திருவான்மியூர் போலீஸார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஹரி நாடார் அளிக்கும் வாக்குமூலத்தில் சீமான் பெயரைக் குறிப்பிட்டாலும் சீமானுக்கு சிக்கல் ஏற்படக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

வேகமெடுக்கும் விஜயலட்சுமி வழக்கு; ஹரி நாடார் கைது - சீமானுக்கு சிக்கல்?!| police arrested hari nadar in vijayalakshmi case will they arrested seeman also - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

தனது குடும்பத்தை தரக்குறைவாக பேசியதுக்கு , ஸ்டாலின் சீமானை வைத்து செய்யப்போகின்றார் போல் உள்ளது.😜

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, zuma said:

தனது குடும்பத்தை தரக்குறைவாக பேசியதுக்கு , ஸ்டாலின் சீமானை வைத்து செய்யப்போகின்றார் போல் உள்ளது.😜

ஸ்டாலினா?? சீமானா என்ற நிலை வந்தாச்சு என்கிறீர்கள்??

அப்போ  சீமானும்  தயாராகத்தான்  இருப்பார்????😜

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

அப்போ  சீமானும்  தயாராகத்தான்  இருப்பார்????😜

என்ன கழி தின்னவா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

என்ன கழி தின்னவா? 🤣

ஸ்டாலினும்  அவர்  அப்பாவும்  சாப்பிடாததா???😂

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

ஸ்டாலினும்  அவர்  அப்பாவும்  சாப்பிடாததா???😂

அப்ப அண்ணர் கழி தின்னுகின்றது கன்போம்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, zuma said:

என்ன கழி தின்னவா? 🤣

அவர் கழி ஏன் தின்ன வேண்டும்? எங்கள் அண்ணன் கறி திங்குவார்.😎 ஏலுமெண்டா எங்கள் அண்ணனை கைது செய்யட்டும் பாப்போம். 🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, zuma said:

அப்ப அண்ணர் கழி தின்னுகின்றது கன்போம்.🤪

மாற்றம் ஒன்றே  மாறாதது  ராசா?

9 minutes ago, shanthy said:

அவர் கழி ஏன் தின்ன வேண்டும்? எங்கள் அண்ணன் கறி திங்குவார்.😎 ஏலுமெண்டா எங்கள் அண்ணனை கைது செய்யட்டும் பாப்போம். 🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇

உண்மையில் நாம்  தமிழர் கட்சியினருக்கே இந்தளவு ஆர்வம்  இருக்காது??🤣

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கழி என்றால் கோல் அல்லது தடி. உதாரணம் மூங்கிற் கழி. 

இப்ப சொல்லுங்கோ ஆர் நல்லா கழி தின்னப் போகினம் என்று!🤪

பிற்குறிப்பு, சாப்பிடுறது களி 🙄

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கழி என்றால் கோல் அல்லது தடி. உதாரணம் மூங்கிற் கழி. 

இப்ப சொல்லுங்கோ ஆர் நல்லா கழி தின்னப் போகினம் என்று!🤪

பிற்குறிப்பு, சாப்பிடுறது களி 🙄

ஓம் ஓம் வாலி சாப்பிடுவது களி.😄 ஆனால் கழி என்பது கழிவு என்றும் ஒரு கருத்து வருமெல்லோ. 😄 அதுக்காக அண்ணன் கழி வு என்று சொல்லேல்ல.

2 hours ago, விசுகு said:

மாற்றம் ஒன்றே  மாறாதது  ராசா?

உண்மையில் நாம்  தமிழர் கட்சியினருக்கே இந்தளவு ஆர்வம்  இருக்காது??🤣

கட்சியினருக்கு அண்ணன் பற்றி அக்கறை இல்லை. அந்தச்சீவனை கழி வாக்கி போட்டிட்டு நிக்கினம். ஏலுமெண்டா முதல்வர் அண்ணனை சிறையில போடட்டுமென். பிறகு தெரியும் என்ன செய்வமெண்டு.😯

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, zuma said:

தனது குடும்பத்தை தரக்குறைவாக பேசியதுக்கு , ஸ்டாலின் சீமானை வைத்து செய்யப்போகின்றார் போல் உள்ளது.😜

ஏனெண்டால் கருணாநிதி வம்சம் சுத்தமான சொக்க தங்கங்கள் தானே?
மற்றவனை வைச்சு செய்யுறதுக்கு முதல் திராவிடத்தை வைச்சு பிழைப்பு நடத்துவதை நிறுத்தட்டும்..😎

  • கருத்துக்கள உறவுகள்

கைவிலங்கும் தங்கத்தில் வேண்டும் என்று ஹரி நாடார் அடம் பிடிக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிட கட்சி.. பெண்களை.. நடிகைகளை வைச்சு அரசியல் செய்வது சகஜம் தானே. ஏதோ புதிசு மாதிரி.. கதைக்கிறாய்ங்க. 

சீமானை கருணாநிதியே உள்ள வைச்சவர் தானே. அப்பன் செய்ததை மகன் செய்யக் காலம் எடுக்காது. சீமான் எதையும் தாண்டி வரக் கூடியவாராக வளர்த்துவிட்டுவிட்டார்கள். அதுதான் தி முக செய்த நன்மை. 

தமிழகத்தில் திராவிட **** ஆட்சி நிலவும் வரை உண்மையான சனநாயகத்துக்கு வழியில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, shanthy said:

அவர் கழி ஏன் தின்ன வேண்டும்? எங்கள் அண்ணன் கறி திங்குவார்.😎 ஏலுமெண்டா எங்கள் அண்ணனை கைது செய்யட்டும் பாப்போம். 🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇

சீமானை கைது செய்து களி தின்ன வைத்தாலும் அதுவும் ஒருவித வளர்ச்சிதான். ஆனால் உங்கள் கள்ளத்திராவிடம் அதை செய்ய தயங்கும்.ஏனெனில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் பேசு பொருள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

கட்சியினருக்கு அண்ணன் பற்றி அக்கறை இல்லை. அந்தச்சீவனை கழி வாக்கி போட்டிட்டு நிக்கினம். ஏலுமெண்டா முதல்வர் அண்ணனை சிறையில போடட்டுமென். பிறகு தெரியும் என்ன செய்வமெண்டு.😯

உண்மை தான்

சீமான் தொடமுடியாத இடத்துக்கு வந்து கனகாலமாச்சு.

கைவைத்த நிலை        கைவைக்க யோசித்த நிலையும் போய்                                          இப்ப கை வைத்து பார் என்ற நிலையில் சீமான்.

வைத்து தான் பார்க்கட்டுமே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, shanthy said:

கழி என்பது கழிவு என்றும் ஒரு கருத்து வருமெல்லோ. 😄 அதுக்காக அண்ணன் கழி வு என்று சொல்லேல்ல.

சீமான் மீதுள்ள வெறுப்பு காரணமாக நீங்கள் விஜயலட்சுமிக்காக வக்காளத்து வாங்குகின்றீர்கள் என்பது நன்றாகவே தெரியும்.

ஆனால் விஜயலட்சுமி எப்படிப்பட்டவர் என்பதற்காக பல காணொளிகள் இருக்கின்றன யாழ்கள நிர்வாகம் அனுமதித்தால் இங்கே இணைத்து விடுகின்றேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:
ஹரி நாடார்
 
ஹரி நாடார்

அடி ஆத்தீ இம்புட்டு நக போட்டா நம்ப நாடார் அண்ணனுக்கு கழுத்து வலிக்காத?🙄

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சீமானை கைது செய்து களி தின்ன வைத்தாலும் அதுவும் ஒருவித வளர்ச்சிதான். ஆனால் உங்கள் கள்ளத்திராவிடம் அதை செய்ய தயங்கும்.ஏனெனில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் பேசு பொருள்.:cool:

3 hours ago, விசுகு said:

உண்மை தான்

சீமான் தொடமுடியாத இடத்துக்கு வந்து கனகாலமாச்சு.

கைவைத்த நிலை        கைவைக்க யோசித்த நிலையும் போய்                                          இப்ப கை வைத்து பார் என்ற நிலையில் சீமான்.

வைத்து தான் பார்க்கட்டுமே. 

சாதித் தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் குய்யோ முய்யோவென கத்துவது,சேரித்தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் நவதுவாரங்களையும்  பொத்திக்கொள்வது.
தமிழர்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரை வந்தேறி என்று தூற்றி விட்டு,கைபர் கணவாய் வழியாக  வந்த பார்ப்பானை பச்சைத் தமிழர் என்பது.
நாம் தமிழர்கள் என்று கூறிக்கொண்டே தனது சோம்பிகளிடம் சுயசாதி வெறியை தூண்டி விடுவது.
இம்மானுவேல் சேகரனார்  நினைவிடத்தில் மரியாதை செய்துவிட்டு, அவரது கொலைக்கு காரணமான முத்துராமலிங்க தேவருக்கும் கூஜா தூக்குவது.
ஈழத்து விதவை பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு பணக்கார பெண்ணை பார்த்தவுடன் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, தனது மகள் வயது பெண்ணான கயல்விழியை திருமணம் செய்தது.
தலைவரை  கைது செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து தூக்கில் போடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா அவர்களை, ஈழத்தாய் என்று கொஞ்சம் கூடவெட்கமே இல்லாமல் அழைத்தது.
அரசியல் தலைவர்களை சினிமாவில் தேடாதீர்கள் என்று,தானும் சினிமாவில் இருந்து வந்தவன் என்பதை மறந்து தன்னிலை இல்லாமல் பேசுவது.
ஆமைக்கறி சாப்பிட்டது, ஆமை ஓட்டை படகாக பயன்படுத்தி கடலில் பயணம் செய்தது, ஆஸ்திரேலியாவின் அரிசி கப்பல்,  தலைவரிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றது, ஏகே74 துப்பாக்கி என புதுப்புது கதைகளை வடிவமைத்து மேடையை சுவாரசியமாக மாற்றுவது.
தனது 45 வயதுவரை கடவுள் மறுப்பு பேசிவிட்டு,ஏழு கழுதை வயதில் புத்தி வந்துவிட்டது போல் தற்போது  வயிற்றுப் பிழைப்பிற்காக முப்பாட்டன் முருகன் என்று காவடி தூக்குவது.
என்று செந்தமிழன் திரு.சீமான் அவர்களின் புகழை பேசிக் கொண்டே போகலாம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

மாற்றம் ஒன்றே  மாறாதது  ராசா?

உண்மையில் நாம்  தமிழர் கட்சியினருக்கே இந்தளவு ஆர்வம்  இருக்காது??🤣

kudal erichaluku veetu vaithiyam: சாப்பிட்டதும் வயிறு எரியுதா? என்ன  காரணம்... அதுக்கு வீட்லயே என்ன மருந்து இருக்கு?... - Samayam Tamil

வயிறு எரியுது😂

  • கருத்துக்கள உறவுகள்

மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரை நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றபோது அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, zuma said:

சாதித் தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் குய்யோ முய்யோவென கத்துவது,சேரித்தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் நவதுவாரங்களையும்  பொத்திக்கொள்வது.
தமிழர்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரை வந்தேறி என்று தூற்றி விட்டு,கைபர் கணவாய் வழியாக  வந்த பார்ப்பானை பச்சைத் தமிழர் என்பது.
நாம் தமிழர்கள் என்று கூறிக்கொண்டே தனது சோம்பிகளிடம் சுயசாதி வெறியை தூண்டி விடுவது.
இம்மானுவேல் சேகரனார்  நினைவிடத்தில் மரியாதை செய்துவிட்டு, அவரது கொலைக்கு காரணமான முத்துராமலிங்க தேவருக்கும் கூஜா தூக்குவது.
ஈழத்து விதவை பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு பணக்கார பெண்ணை பார்த்தவுடன் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, தனது மகள் வயது பெண்ணான கயல்விழியை திருமணம் செய்தது.
தலைவரை  கைது செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து தூக்கில் போடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா அவர்களை, ஈழத்தாய் என்று கொஞ்சம் கூடவெட்கமே இல்லாமல் அழைத்தது.
அரசியல் தலைவர்களை சினிமாவில் தேடாதீர்கள் என்று,தானும் சினிமாவில் இருந்து வந்தவன் என்பதை மறந்து தன்னிலை இல்லாமல் பேசுவது.
ஆமைக்கறி சாப்பிட்டது, ஆமை ஓட்டை படகாக பயன்படுத்தி கடலில் பயணம் செய்தது, ஆஸ்திரேலியாவின் அரிசி கப்பல்,  தலைவரிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றது, ஏகே74 துப்பாக்கி என புதுப்புது கதைகளை வடிவமைத்து மேடையை சுவாரசியமாக மாற்றுவது.
தனது 45 வயதுவரை கடவுள் மறுப்பு பேசிவிட்டு,ஏழு கழுதை வயதில் புத்தி வந்துவிட்டது போல் தற்போது  வயிற்றுப் பிழைப்பிற்காக முப்பாட்டன் முருகன் என்று காவடி தூக்குவது.
என்று செந்தமிழன் திரு.சீமான் அவர்களின் புகழை பேசிக் கொண்டே போகலாம்.😜

உங்களுக்கு பத்தரை மாற்று தங்கம் போல் ஒரு தமிழினத்தலைவர் வேண்டும்.
உலகில் ஒரு அரசியல் தலைவரை முன்னுதாரணமாக நிறுத்தி விட்டு மிகுதியை பேசுவோம் வாருங்கள். :cool:

திண்ணையில் நின்று குலுக்குபவர்களும் பதில் அளிக்கலாம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு பத்தரை மாற்று தங்கம் போல் ஒரு தமிழினத்தலைவர் வேண்டும்.
உலகில் ஒரு அரசியல் தலைவரை முன்னுதாரணமாக நிறுத்தி விட்டு மிகுதியை பேசுவோம் வாருங்கள். :cool:

திண்ணையில் நின்று குலுக்குபவர்களும் பதில் அளிக்கலாம். 😎

அண்ணா

செயலுக்கும் சும்மா  இருத்தலுக்குமான வித்தியாசம்  இது  தான்

கல்  எறி விழுகிறது  என்றால்  நீ ஏதோ  செய்கிறாய்  என்று  அர்த்தம்

நீ முன்னேறுகிறாய்  என்று  அர்த்தம்

யாருடையதோ வரிசையில் நீயும்  வரத்தொடங்கிவிட்டாய் என்று  அர்த்தம்

மதில்  மேல்  பூனைகள்  கூட ஏதாவது  ஒரு  பக்கம் தாவ  தயாராக  இருக்கும் 

ஆனால் இந்த  ஒன்றுமே செய்யாதவர்கள் தான் ஆகக்கூடிய குடைச்சல்காரர்கள்

சீமான் சார்ந்து  எனது  பார்வை

பல்லுக்குத்தவாவது  உதவும்  என்பதே.

ஆனால் ஈழம் எடுத்து  தருவார்  என்பவர்கள்  தான் தூய்மையை வேண்டுகிறார்கள்

பிரபாகரனாலேயே முடியாததை சீமானிடம்  எதிர்பார்ப்பவர்களை பரிதாபங்கள்  என்று  கடந்து  செல்லவேண்டியது  தான்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

அண்ணா

செயலுக்கும் சும்மா  இருத்தலுக்குமான வித்தியாசம்  இது  தான்

கல்  எறி விழுகிறது  என்றால்  நீ ஏதோ  செய்கிறாய்  என்று  அர்த்தம்

நீ முன்னேறுகிறாய்  என்று  அர்த்தம்

யாருடைய வரிசையில் நீயும்  வரத்தொடங்கிவிட்டாய் என்று  அர்த்தம்

மதில்  மேல்  பூனைகள்  கூட ஏதாவது  ஒரு  பக்கம் தாவ  தயாராக  இருக்கும் 

ஆனால் இந்த  ஒன்றுமே செய்யாதவர்கள் தான் ஆகக்கூடிய குடைச்சல்காரர்கள்

சீமான் சார்ந்து  எனது  பார்வை

பல்லுக்குத்தவாவது  உதவம்  என்பதே.

ஆனால் ஈழம் எடுத்து  தருவார்  என்பவர்கள்  தான் தூய்மையை வேண்டுகிறார்கள்

பிரபாகரனாலேயே முடியாததை சீமானிடம்  எதிர்பார்ப்பவர்களை பரிதாபங்கள்  என்று  கடந்து  செல்லவேண்டியது  தான்???

நல்லதொரு விளக்கம் விசுகர்!👍
இதற்கு பிறகும் குத்துது குடையுது என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று அர்த்தம்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.