Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து தென் தமிழீழப் போராளிகளை அவர்கள் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் தலைவர் ஆற்றிய உரை அது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

️ கருணா தனது வரலாற்றுத் துரோகத்தை மறைக்க பிரதேசவாதத்தை கையிலெடுத்துத் தமிழர் தேசத்தைக் கூறுபோட முற்பட்டபோது வெளியிட்டிருக்க வேண்டிய காணொளி ஒன்றை யாரோ ஒரு புண்ணியவான் இப்போது காலம் தப்பி வெளியிட்டிருக்கிறார்-நன்றி

யாருக்குச் சொல்லி அழுவது?

புலிகளும் ஏன் இது போன்ற ஆதாரங்களை அப்போது வெளியிடவில்லை என்பது இன்று மண்டையைக் குடையும் கேள்வியாக இருக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து தென் தமிழீழப் போராளிகளை அவர்கள் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் தலைவர் ஆற்றிய உரை அது.

தென் தமிழீழப் போராளிகள் மீதும், மக்கள் மீதும் அவருக்கிருந்த கரிசனையும், கவலையும், அக்கறையும், ஏக்கமும் அந்த உரை முழுக்க நிரம்பி வழிகிறது.

ஒரு கட்டத்தில் இவர்களுக்கு ஒரு ஓய்வு வேண்டும், அவர்கள் குடும்பத்துடன் இணைய வேண்டும், அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியில் குறைந்தளவிலேனும் நிறைவு காண வேண்டும் என்பதற்காகத்தான் யுத்த நிறுத்தத்திற்கு உடன் பட்டாரா என்று எண்ணுமளவிற்கு அவரது உரை நீள்கிறது.

கடைசியில் மதிவதனி அக்காவையும் அருகில் வைத்துக் கொண்டு 'பிள்ளையள் கவனமாகப் போட்டு வாங்கோ' என்று அவர் பரிவுடன் சொல்வதை கண்ணீர் சிந்தாமல் எம்மால் பார்க்க முடியாது - குறிப்பாக தென் தமிழீழ மக்களால்..

இந்த உரையில் இது மட்டுமல்ல அரச பயங்கரவாதிகளினதும், அவர்கள் அடிவருடிகளினதும் புலிகள் குறித்த பொய்கள், புனைவுகள், கட்டுக் கதைகள் அடித்து நொருக்கப்படிருக்கிறது.

புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையை அணுகிய விதம், முஸ்லிம்கள் விவகாரம், சிறுவர் போராளிகள், கட்டாய ஆட் சேர்ப்பு, நோர்வே, மேற்குலக தலையீடு, குறிப்பாக இறுதி இலட்சியம் உட்பட பல கதைகளுக்கு தெளிவான பதில் உள்ளது.

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இது பொது வெளியில் பேசப்பட்டதல்ல - அடிச்சு விடுறதற்கு . போராளிகளினுடனான தனிப்பட்ட உரையாடல் இது.

இந்த 37 நிமிடக் காணொளி குறித்து ஆயிரம் பக்கங்களிற்குத் தனிப் புத்தகமே போடலாம்.

இது நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளிக்குக் கிடைத்த வரலாற்று புதையல் என்றால் அது மிகையல்ல.

புலிகளை வரலாறு விடுவிக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதைப் பார்க்க இந்தத் தலைமுறைக்கு வாய்ப்பில்லை என்று நம்பினோம்.

ஆனால் நாம் வாழும் காலத்திலேயே அந்த அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

https://www.facebook.com/100077021799801/posts/118607930716600/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் இந்த உரையை சில தினங்களுக்கு முன் சிறு காணொளியாக பார்த்திருந்தேன். கொஞ்சம் தலை சுற்றியது. இந்த உரையை பூரணமாக பார்க்கும் போது.........இன்னும் எத்தனை உண்மைகள் மண்ணோடு மண்ணாக போய் விட்டதோ யாருக்குத்தெரியும்?

இணைப்பிற்கு நன்றி விசுகர்.

😢😢😢

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுகாலமாக இந்த மாதிரி வீடியோக்களை வைத்துக்கொண்டு வெளியவிடாமல் இருப்பவர்கல்தான் மிகப்பெரிய தேசத்துரோகிகள்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவ்வளவுகாலமாக இந்த மாதிரி வீடியோக்களை வைத்துக்கொண்டு வெளியவிடாமல் இருப்பவர்கல்தான் மிகப்பெரிய தேசத்துரோகிகள்.. 

அவ்வளவு எளிதல்ல  சகோ இப்படியான வீடியோக்களை கடத்துவது???

அந்த பக்கத்தாலும்  நாம்  சிந்திக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்+

நான் அண்டைக்கு திண்ணையில சொன்னது இந்த நிகழ்படத்தைத்தான். 😥

இந்த நிகழ்படத்தை மறுவளமாக கொஞ்சம் ஓசித்து பார்த்தால் கருணாவிற்கு ஆதராவகவும் எழுதலாம் எண்டு எனக்கு தோன்றுகிறது.

"மட்டுநகர் மண்ணை எடுத்து நெத்தியிலே பூசு"😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொலி  எப்போதோ வெளியிடப்பட்டிருந்தால் நமக்கு பாதகமான அம்சங்களும் அதில் இருக்க வாய்ப்புண்டு.

புரிந்துணர்வு ஒப்பந்தத நடைமுறையின் போது ஆட்சேர்ப்பு ஆயுத பெருக்கம் போன்றவற்றில் ஈடுபடகூடாது என்றொரு அம்சம் இருந்ததாக நினைக்கிறேன். 

இதில் தலைவர் இந்த இரண்டையும் மேலும்  தொடர் பயிற்சிகளையும் யுத்ததை எதிர்நோக்கியிருக்க சொல்லி தயார் நிலையையும் வலியுறுத்துகிறார் , புலிகள் சமாதான காலத்தை தம்மை பலப்படுத்தவே பயன்படுத்துகிறார்கள் என்று சிங்களவன் ஒவ்வொரு சமாதான காலத்திலும் ஓயாமல் சர்வதேச சமூகத்தை நோக்கி ஒப்பாரி வைத்ததுண்டு ,  சர்வதேசத்துக்கு சிங்களவனுக்கு அது  பெரிய ஆதாரமாக இந்த காணொலி கை கொடுத்திருக்கும்.

ஆனால் அதே காலத்தில் சிங்களவன் சர்வதேச உதவியுடன்  சமாதான தூதுவர் நோர்வே பாத்துக்கொண்டிருக்க தமது ஆயுத ஆள் பலத்தை பலமடங்கு அதிகரித்தான் என்பது வேறு கதை.

கருணா பிரிவின் பின்னர் மட்டக்களப்பில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு வன்னி தலமையே காரணம் என்று அந்நாட்களில் ஊடகங்களுக்கு சொன்னதை கவனித்திருக்கிறேன், ஆனால் காணொலியில் முஸ்லிம்களுடன் எந்த வகையிலும் முரண்படவேண்டாம், அவர்கள் நமது பிரதேசத்தின் ஒரு அங்கம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறார்.

ஆனால் முஸ்லீம்கள் இன்றுவரை புலிகள்மீது வஞ்சம் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள்மீது எந்த பரிவு காட்டினாலும் அது விழலுக்கிறைத்த நீர் என்பது மீண்டுமொரு தடவை நிரூபணமாகிறது.

இந்த கூட்டம் நடந்து சரியாக ஒன்றரை வருடங்களுக்குள்ளயே கருணாவின் பிளவு புகைய ஆரம்பித்து இயக்கமும் பிளவானது, அப்போ மனசுக்குள் ஏதோ ஓடிக்கொண்டிருக்கவே தலைவர் பக்கத்தில் பச்சபுள்ளபோல் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்த இந்த மனிதன் எவ்வளவு நம்பிக்கைக்கு பாத்திரமில்லாத ஆபத்தானவன்  என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

லைவரின் இந்த உரையை சில தினங்களுக்கு முன் சிறு காணொளியாக பார்த்திருந்தேன். கொஞ்சம் தலை சுற்றியது. இந்த உரையை பூரணமாக பார்க்கும் போது.........இன்னும் எத்தனை உண்மைகள் மண்ணோடு மண்ணாக போய் விட்டதோ யாருக்குத்தெரியும்?

எங்கள் வாழ்வின் எல்லையை அடைவதற்கு முன்பாகவேனும் எமது இனத்திற்கு ஒரு நல்லது நடக்குமா? அதனைக் காண்போமா? என்ற ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும், இதுவரை காணக்கிடைக்காத இந்தக் கானொளியைத் தானும் காண்பதற்கு உதவிய விசுகு அவர்களுக்கு மனம்நிறைந்த நன்றிகள்.🙏

ஒன்றல்ல, இவ்வாறான பல நூறு காணொளிகள் உள்ளன. ஆனால் அன்று இவற்றை எவருக்கும் பகிர வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தலைமையகத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவு இடப்பட்டு இருந்தது. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு முன்னரும் இவ்வாறான பல காணொளிகளை அழித்து விடும்படி கட்டளை இடப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது.

இக் காணொளியை YouTube, முகனூல் நீக்க முன்னர் தரவிறக்கி வைத்திருக்க விரும்பியர்கள் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, valavan said:

கருணா பிரிவின் பின்னர் மட்டக்களப்பில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு வன்னி தலமையே காரணம் என்று அந்நாட்களில் ஊடகங்களுக்கு சொன்னதை கவனித்திருக்கிறேன், ஆனால் காணொலியில் முஸ்லிம்களுடன் எந்த வகையிலும் முரண்படவேண்டாம், அவர்கள் நமது பிரதேசத்தின் ஒரு அங்கம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறார்.

இங்கே யாழ்களத்திலும் மற்றும் பொது இணைய வழிகளிலும் விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை ஒதுக்கினார்கள் என பக்கம் பக்கமாக எழுதியவர்களுக்கு நல்லதொரு சாட்டையடி இந்த ஒளிப்பதிவு. அது மட்டுமில்லாமல் சிறுவர்களை படையில் சேர்ப்பது பற்றியும் தலைவர் மிகுந்த அவதானத்துடன் இருந்துள்ளார் என மிக மிக தெளிவாகத்தெரிகின்றது.விடுதலைப்புலிகள் சிறுவர்களை  போராட அழைத்தார்கள் அதனால் தான் சர்வதேசம் அவர்கள் மீது வெறுப்பு கொண்டனர் என இங்கே வாய்க்கு வந்தபடி கதைத்தவர்களும் இங்கு பலர்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் படிப்பறிவில்லாதவர். எதையும் யாராவது எழுதி கொடுத்ததை மட்டுமே வாசிப்பவர் என நையாண்டி பணியவர்களும் இங்கே உள்ளனர்.

நிற்க...

 அண்மையில் இங்கே விடுதலைப்புலிகளைப்பற்றி  தரக்குறைவாக,மாவீரர்களை இழிவாக,தலைவரின் படிப்பை இழிவாக எழுத விடவில்லை என ஒரு குழுவாக யாழ்களத்தை விட்டு விலகியிருக்கும் நண்பர்களும்  இந்த காணொளியை பார்ப்பார்கள் பார்த்திருப்பார்கள் என நம்புகின்றேன். பத்தோடு பதினொன்றாக சென்றவரே நலமா? 🤣

இதில் முக்கியமானது தலைவனின் ஆளுமையை கேள்விக்கு உட்படுத்திய விடயம்  தலைமையின் கட்டளையை மீறி கருணா தனது படையணியுடன் மணலாறு சென்று அங்கிருந்து தென் தமிழீழம் சென்றது என்ற மாயைக்கு விடைகிடைத்து இருக்கிறது் ் தலைவனின் பாதுகாப்பு வலயத்துகுள் கருணா இடுப்பில் தூப்பாக்கி வைக்க கூட அனுமதிக்க பட வில்லை என்பது கூட இந்த கணொளி ஊடக வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது

இந்த கணொளியை நோர்வேயில் இருக்கும் புலனாய்வு துறை போராளியிடம் பெற்று 5 நாட்களுக்கு முதல் முக புத்தகத்தில் வெளியிட்டேன் 3000 வியு வரும் வரை விட்டு விட்டு முகபுத்தகம் பதிவை நீக்கி விட்டது அந்த போராளி 2002ல் முதல் தடவையாக  பொட்டம்மான் மட்டகளப்பு   சென்ற போது  அவருடைய பாதுகாப்பு அணியின் பொறுப்பாளராக சென்றவர் 2005ல் தனிபட்ட காரணங்களுக்கா புலனாய்வு பொறுப்பாளரின் அனுமதியுடன் அமைப்பை விட்டு  வெளியேறிபிரித்தானியாவில்  அகதி அந்தஸ்து கேட்டு போர்குற்றசாட்டு சுமத்தபட்டு நீண்ட சட்ட போராட்த்தின் பின் அகதியாக ஏற்று கொள்ளபட்டவர்

4 hours ago, valavan said:

இந்த காணொலி  எப்போதோ வெளியிடப்பட்டிருந்தால் நமக்கு பாதகமான அம்சங்களும் அதில் இருக்க வாய்ப்புண்டு.

புரிந்துணர்வு ஒப்பந்தத நடைமுறையின் போது ஆட்சேர்ப்பு ஆயுத பெருக்கம் போன்றவற்றில் ஈடுபடகூடாது என்றொரு அம்சம் இருந்ததாக நினைக்கிறேன். 

இதில் தலைவர் இந்த இரண்டையும் மேலும்  தொடர் பயிற்சிகளையும் யுத்ததை எதிர்நோக்கியிருக்க சொல்லி தயார் நிலையையும் வலியுறுத்துகிறார் , புலிகள் சமாதான காலத்தை தம்மை பலப்படுத்தவே பயன்படுத்துகிறார்கள் என்று சிங்களவன் ஒவ்வொரு சமாதான காலத்திலும் ஓயாமல் சர்வதேச சமூகத்தை நோக்கி ஒப்பாரி வைத்ததுண்டு ,  சர்வதேசத்துக்கு சிங்களவனுக்கு அது  பெரிய ஆதாரமாக இந்த காணொலி கை கொடுத்திருக்கும்.

ஆனால் அதே காலத்தில் சிங்களவன் சர்வதேச உதவியுடன்  சமாதான தூதுவர் நோர்வே பாத்துக்கொண்டிருக்க தமது ஆயுத ஆள் பலத்தை பலமடங்கு அதிகரித்தான் என்பது வேறு கதை.

கருணா பிரிவின் பின்னர் மட்டக்களப்பில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு வன்னி தலமையே காரணம் என்று அந்நாட்களில் ஊடகங்களுக்கு சொன்னதை கவனித்திருக்கிறேன், ஆனால் காணொலியில் முஸ்லிம்களுடன் எந்த வகையிலும் முரண்படவேண்டாம், அவர்கள் நமது பிரதேசத்தின் ஒரு அங்கம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறார்.

ஆனால் முஸ்லீம்கள் இன்றுவரை புலிகள்மீது வஞ்சம் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள்மீது எந்த பரிவு காட்டினாலும் அது விழலுக்கிறைத்த நீர் என்பது மீண்டுமொரு தடவை நிரூபணமாகிறது.

இந்த கூட்டம் நடந்து சரியாக ஒன்றரை வருடங்களுக்குள்ளயே கருணாவின் பிளவு புகைய ஆரம்பித்து இயக்கமும் பிளவானது, அப்போ மனசுக்குள் ஏதோ ஓடிக்கொண்டிருக்கவே தலைவர் பக்கத்தில் பச்சபுள்ளபோல் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்த இந்த மனிதன் எவ்வளவு நம்பிக்கைக்கு பாத்திரமில்லாத ஆபத்தானவன்  என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.

பாதகத்தை விட விடுதலை போரட்டத்தில் ஒப்பீட்டளவில் அந்த பல  கால பகுதியில் சாதகமான பல விடயங்கள் நடக்க சாத்தியம் இருந்து இருக்கும்

Edited by London Ranjan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பெருமாள் said:

இந்த காணொளியை கடத்தியே விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தாருங்கள்... இந்நிகழ்படம் இதற்குள் போட்டப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் எடுத்துக்கொள்ளவும்.

https://eelam.tv/watch/தல-வர-மற-ற-ம-ஜ-யந-தன-பட-யண-சந-த-ப-ப-ந-கழ-வ-leader-and-jeyanthan-regiment-farewell-event_xuzCKB4eSZQYzpx.html

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இக் காணொளியை YouTube, முகனூல் நீக்க முன்னர் தரவிறக்கி வைத்திருக்க விரும்பியர்கள் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வேறு வேறு பெயர்களில் அந்த காணொளி வரும் 

கவலை வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

நான் அண்டைக்கு திண்ணையில சொன்னது இந்த நிகழ்படத்தைத்தான். 😥

இந்த நிகழ்படத்தை மறுவளமாக கொஞ்சம் ஓசித்து பார்த்தால் கருணாவிற்கு ஆதராவகவும் எழுதலாம் எண்டு எனக்கு தோன்றுகிறது.

"மட்டுநகர் மண்ணை எடுத்து நெத்தியிலே பூசு"😂

எப்பிடி? கருணாவுக்கு ஆதரவாக ஏன் எழுதவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்+
6 minutes ago, ரஞ்சித் said:

எப்பிடி? கருணாவுக்கு ஆதரவாக ஏன் எழுதவேண்டும்?

மடலில் விவாதிப்பம். நீங்கள் என்ன விழுத்திற்றியள் எண்டால் இஞ்ச எல்லாரும் வாசிக்கிற மாதிரி போடுவம். இல்லையோ எங்களோட முடிச்சு விடுவம். என்ன சொல்லுறீங்கள்?

நானே அடித்தளம் போட்டதாக இருக்க விருப்பமில்லை.

இதைவிட இன்னும் ஒன்டு ஈழம் டிவிக்குள்ள (சிங்களவர் வெளியிட்டது) இருக்குது. அதையும் இதையும் இணைச்சால் கருணா வால்களுக்கு கொள்ளை லாபம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நன்னிச் சோழன் said:

மடலில் விவாதிப்பம். நீங்கள் என்ன விழுத்திற்றியள் எண்டால் இஞ்ச எல்லாரும் வாசிக்கிற மாதிரி போடுவம். இல்லையோ எங்களோட முடிச்சு விடுவம். என்ன சொல்லுறீங்கள்?

நானே அடித்தளம் போட்டதாக இருக்க விருப்பமில்லை.

இதைவிட இன்னும் ஒன்டு ஈழம் டிவிக்குள்ள (சிங்களவர் வெளியிட்டது) இருக்குது. அதையும் இதையும் இணைச்சால் கருணா வால்களுக்கு கொள்ளை லாபம்.
 
நான் வரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இங்கே யாழ்களத்திலும் மற்றும் பொது இணைய வழிகளிலும் விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை ஒதுக்கினார்கள் என பக்கம் பக்கமாக எழுதியவர்களுக்கு நல்லதொரு சாட்டையடி இந்த ஒளிப்பதிவு. அது மட்டுமில்லாமல் சிறுவர்களை படையில் சேர்ப்பது பற்றியும் தலைவர் மிகுந்த அவதானத்துடன் இருந்துள்ளார் என மிக மிக தெளிவாகத்தெரிகின்றது.விடுதலைப்புலிகள் சிறுவர்களை  போராட அழைத்தார்கள் அதனால் தான் சர்வதேசம் அவர்கள் மீது வெறுப்பு கொண்டனர் என இங்கே வாய்க்கு வந்தபடி கதைத்தவர்களும் இங்கு பலர்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் படிப்பறிவில்லாதவர். எதையும் யாராவது எழுதி கொடுத்ததை மட்டுமே வாசிப்பவர் என நையாண்டி பணியவர்களும் இங்கே உள்ளனர்.

நிற்க...

 அண்மையில் இங்கே விடுதலைப்புலிகளைப்பற்றி  தரக்குறைவாக,மாவீரர்களை இழிவாக,தலைவரின் படிப்பை இழிவாக எழுத விடவில்லை என ஒரு குழுவாக யாழ்களத்தை விட்டு விலகியிருக்கும் நண்பர்களும்  இந்த காணொளியை பார்ப்பார்கள் பார்த்திருப்பார்கள் என நம்புகின்றேன். பத்தோடு பதினொன்றாக சென்றவரே நலமா? 🤣

பத்தோடு… பதினொன்றாக போனவர், யாராக இருக்கும்….? 🤔 😂
எவ்வளவு யோசித்தும், கண்டு பிடிக்க முடியவில்லையே…….. 🤣 🤪

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசுக்குறு யுத்தத்தின் முக்கியத்தையும் ,ஜெயந்தன் போராளிகளின் முக்கியத்தை பற்றி எழுதிய  போது இதே யாழில் சிலர் அதை நக்கலடித்தார்கள் ...அவர்களுக்கு இந்த காணொளி முதற் கண் சமர்ப்பணம்.
தலைவர் , ஜெயந்தன் போராளிகளை விடுமுறைக்கு போனாலும் , பயிற்சியை விட வேண்டாம் என்று சொல்கிறார் ...அதை அவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் போராளிகளுக்கு அறிவுறுத்தினரா?....அறிவுறுத்தி இருந்தால் இலகுவாய் போரில் தோத்து இருக்க மாட்டார்கள் .
கிழக்கில்  முஸ்லீம்கள் , தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியது , புலிகள் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தியது 89,90களில் ...அதுவும் குமரப்பா, புலேந்திரன் மரணத்தின் பின்னர் தான் ...அந்த நேரம் தலைவருக்கு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த தேவை இருந்தது ...பின்னர் சமாதான காலத்தில் அதற்கான தேவை இல்லாமல் போன போது அவர்களுடன் உறவை புதுப்பிக்க சொல்கிறார்...இங்கு தலைவர் தனது அமைப்பு சார்ந்தே செயற்படுகிறார்.
கிழக்கில் முஸ்லீம்களது ஆக்கிரமிப்பு பற்றி தலைவருக்கு போதியளவு தெளிவூட்டல் இல்லை /கொடுக்கப்படவில்லை 
அப்படி என்ன தலைவர் இதில் பேசி இருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை ...ஒரு தலைவர் எப்படி கதைக்க வேண்டுமோ அப்படி கதைத்திருக்கிறார் .
ஜெயந்தன் படையணியின் முக்கியத்துவம் தெரிந்த தலைவர் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை செயல் வடிவில் கொடுத்திருந்தால் , கருணா பிரிந்தாலும் , அந்த போராளிகள் வன்னியோடு இணைந்திருப்பர்.
பேச்சும், செயலும் ஒன்றாய் இருக்கா விட்டால் இப்படி தான் நடக்கும் .
இந்த காணொளி வெளியிட்டதன் மூலம் ஜெயந்தன் படையணியின் பெருமை வெளி வந்து இருக்கு ....அவ்வளவு தான் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, London Ranjan said:

இதில் முக்கியமானது தலைவனின் ஆளுமையை கேள்விக்கு உட்படுத்திய விடயம்  தலைமையின் கட்டளையை மீறி கருணா தனது படையணியுடன் மணலாறு சென்று அங்கிருந்து தென் தமிழீழம் சென்றது என்ற மாயைக்கு விடைகிடைத்து இருக்கிறது் ் தலைவனின் பாதுகாப்பு வலயத்துகுள் கருணா இடுப்பில் தூப்பாக்கி வைக்க கூட அனுமதிக்க பட வில்லை என்பது கூட இந்த கணொளி ஊடக வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது

பொட்டம்மான் வைத்திருக்க அனுமதி இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, London Ranjan said:

கருணா இடுப்பில் தூப்பாக்கி வைக்க கூட அனுமதிக்க பட வில்லை என்பது கூட இந்த கணொளி ஊடக வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது

ஐய்யா  ரஞ்சன் ஆத்தா கேள்வி உங்களைத்தான் கேட்கிறா பதிலை  சொல்லி போட்டு போங்கள் 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

பத்தோடு… பதினொன்றாக போனவர், யாராக இருக்கும்….? 🤔 😂
எவ்வளவு யோசித்தும், கண்டு பிடிக்க முடியவில்லையே…….. 🤣 🤪

கண்டு பிடிக்கிறது சரியான கஷ்டம் சிறித்தம்பி :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.