Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் ! கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார் ?

15 ஆவது ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான  ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது.

May be an image of 4 people and people standing

May be an image of table and indoor

No photo description available.

அந்தவகையில் குறித்த ஏலம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 

May be an image of 13 people, people standing and indoor

May be an image of table, indoor and text that says 'RAJASTHAN ROYALS'

ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

வீரர்களின் அடிப்படை விலை ரூபா 2 கோடி, ரூபா 1½ கோடி, ரூபா ஒரு கோடி, 75 இலட்சம், 50 இலட்சம், 40 இலட்சம், 30 இலட்சம், 20 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

May be an image of 4 people, people standing and indoor

No photo description available.

அதிகபட்ச அடிப்படை விலையான ரூபா 2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள 10 அணிகளும் தங்கள் அணியை ஒரு வலுவான அணியாக கட்டமைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும். 

No photo description available.

May be an image of 1 person, table and indoor

அதற்காக அந்த அணிகளுக்கு தேவையான வீரர்களை போட்டிபோட்டு வாங்க முயலும். இதேபோல், அந்த அணிகள் தக்க வைக்க தவறிய வீரர்களை மீண்டும் அணியில் இணைக்க ஏலத்தில் முடிந்தவரை போராடும். 

May be an image of indoor

இந்த ஏலத்தில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர், டேவிட் வார்னர், இஷான் கி‌ஷன், தீபக் சாஹர், ஜேசன் ஹோல்டர், யுஸ்வேந்திர சாஹல், ரபடா, தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வாய்ப்புள்ளது. 

May be an image of table and indoor

இதேபோல் ஜூனியர் உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய இளம் வீரர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அஸ்வினை 5 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ரோயல்ஸ்!

May be an image of 1 person and text

ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, 5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி. டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே சில கடுமையான போட்டி நடந்த நிலையில் அஸ்வினை 5 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்.

May be an image of drink

ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person

ஷிகர் தவானுக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் ரூ. 2 கோடிக்கு ஏலத்தைத் தொடங்கியது, பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் குதித்தது. இரண்டிற்கும் இடையே ஏலம் முன்னும் பின்னுமாக சென்றது. தவானின் ஏலம் 5 கோடியைத் தாண்டியதால் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் இரண்டும் பின்வாங்கின. இறுதியில் நுழைந்த பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் அவரை 8.25 கோடிக்கு வாங்கியது.

May be an image of table and indoor

May be an image of table and indoor

May be an image of table, indoor and text that says 'GUJARAT TITANS GUJARAT TITANS M'

 

பெட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியால் 7.25 கோடிக்கு வாங்கப்பட்டார்

May be an image of 1 person

ஐபிஎல் மெகா ஏலத்தில் அவுஸ்திரேலியா வீரர் பெட் கம்மின்ஸை 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

 

ககிசோ ரபாடா 9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்

May be an image of 1 person and text that says '3 IPL TATA AUCTION INR 9.25 CR KAGISO RABADA SOLD TO PBKS PUNJAB t KINGS #TATAIPLAuction iplt20.com'

ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாபிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

 

ட்ரெண்ட் போல்ட் 8 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text that says 'B IPL A AUCTION INR 8 CR TRENT BOULT SOLD TO RR P RAJASTHAN ROYALS #TATAIPLAuction iplt20.com'

ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டை, 8 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி.

 

ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 12.25 கோடிக்கு வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ், 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

 

இந்திய வீரர் முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியால் 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.

May be an image of 1 person

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் முகமது ஷமி, ₹6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

 

பாஃப் டு பிளெசிஸ் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7 கோடிக்கு வாங்கப்பட்டார்!

May be an image of 1 person

ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளெசிஸ் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7 கோடிக்கு வாங்கப்பட்டார்.

டேவிட் வோர்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

குயின்டன் டி கொக், 6.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக், 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

ரொபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரொபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்!

ஷிம்ரோன் ஹெட்மியர் 8.50 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர்  8.50 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

மணீஷ் பாண்டே 4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்!

May be an image of 1 person and text

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் மணீஷ் பாண்டே ரூ4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.

 

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரசல் (12 கோடி, பர்சில் இருந்து 16 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி)

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)

டெல்லி கேப்பிடல்ஸ்:

ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, 8 கோடி பர்ஸில் இருந்து கழிக்கப்படும்), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)

ராஜஸ்தான் ரோயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)

குஜராத் டைட்டன்ஸ்:

ஹர்திக் பாண்டியா (15 கோடி), ரஷித் கான் (15 கோடி), சுப்மான் கில் (8 கோடி)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (9.2 கோடி), ரவி பிஷ்னோய் (4 கோடி)

 

 

https://www.virakesari.lk/article/122354

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

ஐபிஎல் ஏலம் - ஏலம் போகாத முன்னணி வீரர்கள்!

ஐபிஎல் ஏலம் - ஏலம் போகாத முன்னணி வீரர்கள்!

 

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா ஏலம் போகவில்லை.

ஐபிஎல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரெய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் மற்றும் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல்ஹசன் ஆகியோரை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை.

ராபின் உத்தப்பா, ஜேசன் ராய், ஆகியோர் அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ராபின் உத்தப்பா சென்னை அணியும் ஜேசன் ராய் குஜராத் அணியும் ஏலம் எடுத்தது.
Link to comment
Share on other sites

70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி!

70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனவை 70 இலட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பெருந்தொகைக்கு விலை போன துஷ்மந்த சமீர

பெருந்தொகைக்கு விலை போன துஷ்மந்த சமீர

 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஐபிஎல் மெகா ஏலத்தில் பெருந்தொகைக்கு விலை போயுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் அவர் வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Link to comment
Share on other sites

 
பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யாரும் எதிர்ர்பாராத வகையில், வீரர்களைத் தேர்வு செய்து வருகிறது.
நேற்றைய தினத்தில், மொத்தம் 6 வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், உத்தப்பா, ஆசிப் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்களை எடுத்திருந்தது.
இதில், துஷாரைத் தவிர மற்ற 5 வீரர்களும், ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து அடியவர்கள் தான்.
faf-du-plessis-shares-a-heart-warming-vi
புதிய வீரர்களை ஏலத்தில் இலக்காக கொள்ளாமல், மீண்டும் கடந்த முறை கோப்பையைக் கைப்பற்றிய அதே அணியைக் கொண்டு, தங்களின் அணியைக் கட்டமைத்து வருகிறது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு, கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
பாப் டு பிளஸ்ஸிஸ்
பிராவோ, ராயுடு உள்ளிட்ட சீனியர் வீரர்களை எடுத்த சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் தாங்கள் கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த பாப் டு பிளஸ்ஸிஸை ஏலத்திற்கு முன்பாக, அணியில் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இது போக, ஏலத்திலும் அவரை எடுப்பதற்கான முயற்சிகளை சிஎஸ்கே மேற்கொள்ளவில்லை. இறுதியில் பெங்களூர் அணி, டுபிளஸ்ஸிஸை ஏலத்தில் எடுத்தது.
கடுப்பான ரசிகர்கள்
சிஎஸ்கேவின் முடிவு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனந்த்தை சந்தித்து வருகிறது. சிஎஸ்கே அணி கண்ட சிறந்த தொடக்க வீரரைத் தக்க வைத்துக் கொள்ளாமல், மற்ற சிஎஸ்கே வீரர்களை அவர்கள் குறி வைத்ததை கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய பாப் டு பிளஸ்ஸிஸ், இந்த பிரிவு குறித்து, வீடியோ ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
மிஸ் செய்கிறேன்
அதில் பேசும் டுபிளஸ்ஸிஸ், ‘சென்னை அணிக்கு எனது நன்றி. ரசிகர்கள், ஊழியர்கள், அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நினைவுகளை அளித்துள்ளனர். இதனால், அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதே போல, அனைவரையும் நான் மிஸ் செய்கிறேன். ஒரு கதவு அடைத்தால், வேறு வழி திறக்கும்.
மனம் வருந்திய ரசிகர்கள்
இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். என்னிடம் இருந்தும், எனது குடும்பத்தினரிடம் இருந்தும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என உருக்கத்துடன் டு பிளஸ்ஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை, சிஎஸ்கே அணி, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே டுபிளஸ்ஸிஸ் விலகிச் சென்றதால், வேதனையில் உள்ள சிஎஸ்கே ரசிகர்கள், இந்த வீடியோவைக் கண்டதும், அதிகம் மனம் வருந்திப் போயுள்ளனர்.

https://thinakkural.lk/article/165623

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அதன்படி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனவை 70 இலட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

 

https://www.espncricinfo.com/player/maheesh-theekshana-1138316

 

சிங்கள சிறிலங்கா தரைப்படையின் கோப்ரல் மகேஸ் தீக்சனா தமிழ் நாட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார்!

என் வயதொத்த தொப்புள் கொடி உறவுகளிடம் கேட்டால் அரசியலும் விளையாட்டும் வேறாம்!

 

 

 

Boycott Chennai Super Kings' – Fans outraged after Sri Lankan army player  joins IPL champions | Tamil Guardian

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022: ஒன்பது அணிகளின் கேப்டன்கள்... பெங்களூரு அணிக்கு யார்?

 
spacer.png

15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒன்பது அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாவது அணியான பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த சீசனில் எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில் 2022 ஐபிஎல்லில் இரண்டு புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கி உள்ளது.

அகமதாபாத் அணியை சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிட்டல் ரூ.5,600 கோடிக்கு வாங்கி உள்ளது. புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பத்து அணிகள் பங்கேற்பதால் இந்த சீசனுக்கான போட்டி முறைகள் மாறுதல் செய்யப்பட்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புனேயில் நடைபெறுகிறது. சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ்அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஒன்பது அணிகளுக்கு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஒரே ஒரு அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கு மட்டும் இன்னும் கேப்டன் அறிவிக்கப்படவில்லை.

பெங்களூர் அணிக்கு கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐபிஎல் கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டுபிளிசிஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பது அணிகளின் கேப்டன்கள் யார், யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா

டெல்லி கேபிட்டல்ஸ் - ரி‌ஷப் பண்ட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஸ்ரேயாஸ் அய்யர்

ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்

பஞ்சாப் கிங்ஸ் - மயங்க் அகர்வால்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - லோகேஷ் ராகுல்

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்ட்யா

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

https://minnambalam.com/entertainment/2022/03/02/7/IPL2022-teams-captains

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான போட்டி அட்டவணையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடரின் நடப்பு ஆண்டுக்கான அத்தியாயம், எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி தொடங்கி மே 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில். 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. 4 பிளே ஒப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

மே 22ஆம் திகதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதி லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வான்கடே மைதானம் மற்றும் டி.வை. பட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் போட்டிகளும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச விளையாட்டரங்கில் தலா 15 போட்டிகளும் நடைபெறுகின்றன.

இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

பிளே ஒப் போட்டிகளுக்கான போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரில், இம்முறை இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

குழு ‘ஏ’இல் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, டெல்லி கெபிடல்ஸ் அணி, லக்னோவ் சுப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குழு ‘பி’இல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசஸ் ஹைதரபாத் அணி, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இம்முறை இரண்டு புதிய அணிகளின் வருகையுடன் மொத்தம் 10 அணிகள் விளையாட ஒரு அணி, 14 லீக் போட்டிகளில் (7 சொந்த ஊர் மற்றும் 7 வெளியூரில்) விளையாடவுள்ளது.

ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும், மற்ற குழுவில் அதே வரிசையில் உள்ள அணியுடன் இரண்டு முறையும் விளையாடும். மற்ற குழுவில் உள்ள மீதமுள்ள நான்கு அணிகளுக்கு எதிராக, ஒவ்வொரு அணியும் ஒரு முறை மட்டுமே விளையாடும்.

புனே வோரியர்ஸ் இந்தியா மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகளைக் கொண்டிருந்த 2011ஆம் ஆண்டு பதிப்பில் பயன்படுத்தப்பட்ட வடிவம் போன்றது.
 

https://athavannews.com/2022/1270726

 

 

லீக் போட்டிகள் தொடர்பான முழுமையான அட்டவணையை பெற

https://bcciplayerimages.s3.ap-south-1.amazonaws.com/documents/IPL/document/2022/03/TATA_IPL_2022-Match_Schedule.pdf

spacer.png

 

spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது பெங்களூர் அணி !!

by Mohamed March 12, 2022

வெறித்தனம்... ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது பெங்களூர் அணி !! 1

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை பெங்களூர் அணி இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

வெறித்தனம்... ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது பெங்களூர் அணி !! 2

இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கடந்த தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்கி மேத மாதம் வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர், அதே போல் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால் ஒவ்வொரு அணியும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன.

வெறித்தனம்... ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது பெங்களூர் அணி !! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் தங்களது வீரர்களுக்கு தீவிரமான பயிற்சி கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் பெங்களூர் அணியோ இதுவரை தனது புதிய கேப்டன் யார் என்பதை கூட அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.

பெங்களூர் அணியின் ரசிகர்களே பொறுமை இழந்து பெங்களூர் அணியை விமர்சித்து வந்த நிலையில், இன்று ஒரு வழியாக புதிய கேப்டன் யார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெறித்தனம்... ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது பெங்களூர் அணி !! 4

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியின் கேப்டனாக டூபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தின் போது டூபிளசியை கடும் போட்டிக்கு பிறகு பெங்களூர் அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக், கிளன் மேக்ஸ்வெல் போன்ற சீனியர் வீரர்கள் அணியில் இருந்தாலும், மற்றவர்களை விட டூபிளசிஸ் கேப்டன் பதவியில் அதிக அனுபவம் உள்ளவர் என்பதால் டூபிளசியை பெங்களூர் அணி கேப்டனாக்கியுள்ளது.

அதே போல் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியையும் பெங்களூர் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெங்களூர் அணியின் இந்த புதிய ஜெர்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

https://tamil.sportzwiki.com/cricket/ipl-2022-royal-challengers-bangalore-rcb-reveal-their-jersey-for-the-tournament/

 

Link to comment
Share on other sites

IPL போட்டியில்  புதிய விதிமுறைகள்!

IPL போட்டியில் புதிய விதிமுறைகள்!

 

கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பாக செயல்படுகிறது எம்.சி.சி. தற்போது கிரிக்கெட்டில் சில மாற்றங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களின் ஒரு பகுதியை ஐபிஎல் போட்டியிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ கடைபிடிக்கவுள்ள புதிய விதிமுறைகள் :

* கொரோனா காரணமாக 12 வீரர்களுக்குக் குறைவான வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் (அவர்களில் 7 வீரர்கள் இந்தியர்கள்), அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்படும். இது சாத்தியமில்லை என்றால் ஐபிஎல் தொழில்நுட்பக் குழு ஆட்டம் குறித்த முடிவை எடுக்கும்.

* ஓவ்வொரு அணிக்கும் இரு டிஆர்எஸ் முறையீடு வழங்கப்படும். தற்போது ஒரு வாய்ப்பு தான் அளிக்கப்படுகிறது.

* சர்வதேச கிரிக்கெட்டில் எம்.சி.சி. அறிமுகம் செய்யவுள்ள விதிமுறை இது. ஐபிஎல்-லிலும் நடைமுறைக்கப்படுத்தப்படுகிறது. ஒரு வீரர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கும்போது கேட்ச் பிடிக்கும் முன்பு மறுமுனையில் இருந்த பேட்டர் மறுபக்க கிரிஸூக்குச் சென்றால் அவரால் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள முடியும். இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இப்போது புதிய பேட்டர் தான் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள பேட்டர், அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளலாம்.

* நாக் அவுட் ஆட்டங்களில் சூப்பர் ஓவரை முடிக்க முடியாமல் போனால், லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

ஐபிஎல் போட்டி மார்ச் 26 இல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. முதலில் ஏப்ரல் 15 வரை 25% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும், அதன்பிறகு கொரோனா பரவலின் பாதிப்பைக் கொண்டு கூடுதல் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐயும் மஹாராஷ்டிர அரசும் முடிவு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் முதல் போட்டியில் மொயின் அலி மிஸ்சிங்

Tamil_News_3_20_2022_66636295.jpg

15வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 26ம்தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் மொயின் அலி முதல் போட்டியில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசா இன்னும் கிடைக்காததால் அவரின் வருகை தாமதமாகி உள்ளது. 

அவர் பிப்.28ம் தேதி தான் இந்தியா வர விசாவிற்கு விண்ணப்பித்தார். இன்னும் அவருக்கு பயண ஆவணங்கள் கிடைக்கவில்லை. விரைவில் அவர் அணியில் இணைவார் என நம்புகிறோம் என சிஎஸ்கே நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் அவர் முதல் போட்டியில் ஆடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

 

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=751161

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022: கவனம் ஈர்க்க காத்திருக்கும் 5 இந்திய வீரர்கள் பட்டியல் இதுதான்!

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலக்க இருக்கும் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய 5 அன்-கேப்டு இந்திய வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

IPL 2022 Tamil News: 5 Uncapped Indian Players To Watch Out For

IPL 2022 Tamil News: கிரிக்கெட் உலகில் மிகப்பிரபலமான மற்றும் பணக்கார தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் வலம் வருகிறது. இத்தொடரில் ஒரு வீரர் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கும் பட்சத்தில் அவருக்கு குவியும் வாய்ப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஐபிஎல்லின் கடந்த சீசன்களில் கலக்கிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு அந்த நாட்டு தேசிய அணிகளில் இடம் கிடைத்தது. அவர்களுக்கான ஸ்பான்சர்களும் வந்து குவிந்தன.

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஒவ்வொரு இந்திய வீரரின் கனவும் அதுவாகத்தான் இருக்கிறது. கடந்த சீசனில் பல இளம் வீரர்கள் களத்தில் தங்கள் முழுத்தினையும் வெளிப்படுத்தி கவனம் பெற்றனர். இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் களமிறங்கி மிரட்டிய வெங்கடேஷ் ஐயர் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்தார். அவர் போன்ற திறன்மிகுந்த வீரர்களுக்கு ஐபிஎல் பொன்னான வாய்ப்பு.

அந்தவகையில், 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலக்க இருக்கும் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய 5 அன்-கேப்டு (இந்திய சீனியர் அணியில் இடம் பெறாத) இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கவனம் ஈர்க்க காத்திருக்கும் 5 இந்திய வீரர்கள்:

  1. ராகுல் திரிபாதி

2018-19 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ராகுல் திரிபாதி 8 போட்டிகளில் 504 ரன்கள் சேர்த்து, தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முத்தலிடம் பிடித்தார். அவர் 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2018ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தார். 2020 ஆம் ஆண்டு முதல் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது 2022ம் ஆண்டுக்கான ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.8.5 கோடிக்கு எடுத்துள்ளது.

tamil-indian-express-2022-03-23T144519.9

இதுவரை 62 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 1,385 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 136.31 ஆக உள்ளது. கொல்கத்தா அணிக்காக மிடில்-ஆடரில் களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் கவனித்த இந்திய வீரர்களுள் ஒருவராக இருக்கிறார். 

  1. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
tamil-indian-express-2022-03-23T144441.8  

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணியில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இடம்பிடித்திருந்தார். தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் உலகக் கோப்பை தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெகா ஏலத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை அணிகள் வலைவீசி தேடி வந்த நிலையில், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடிக்கு வாங்கியது.

tamil-indian-express-2022-03-23T144448.2

தற்போது அணியின் பயிற்சியாளர்களாலும், ஜாம்பவான் வீரர் தோனியாலும் பட்டை தீட்டப்பட்டு வருகிறார். அவர் களமிறங்கும் பட்சத்தில் அனைவரும் கவனத்தையும் ஈர்ப்பார் என்பதில் ஐயமில்லை.

  1. ஷாருக் கான்

தமிழக வீரரான ஷாருக் கான் உள்நாட்டு அரங்கில் மிகவும் அசாத்தியமான வீரராக உருவெடுத்துள்ளார். அவரது ஃபினிஷிங் திறனால் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார். நடந்து முடிந்த மெகா ஏலத்தில் அவரை எடுக்க சென்னை அணி தொடர் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.9 கோடிக்கு லாவகமாக தூக்கியது.

tamil-indian-express-2022-03-23T144544.6

பவர் ஹிட்டரான ஷாருக் கான் ஐபிஎல்லில் 11 போட்டிகளில் விளையாடி 153 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 134.21 ஆக உள்ளது. கடந்த சீசனில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இம்முறை அது அமைந்தால் அவர் அதிரடியால் மிரட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.

  1. ராஜ் பாவா
tamil-indian-express-2022-03-23T144553.9

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தடம் பதித்த இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் ஆல்ரவுண்டர்களில் பாவாவும் ஒருவர். 6 ஆட்டங்களில் விளையாடிய இவர் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மட்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சு சராசரி 63 ஆக உள்ளது. தற்போது அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ 2 கோடிக்கு வாங்கியுள்ளது.

  1. ஷிவம் மாவி

2018 ஆம் ஆண்டு இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற அணியில் மிகச்சிறப்பான பங்கை அளித்திருந்தார் ஷிவம் மாவி. அதுமுதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்து வரும் அவர் காயம் காரணமாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். எனினும் சில ஆட்டங்களில் தனது அற்புதமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால் அசத்தி இருந்தார்.

tamil-indian-express-2022-03-23T144637.3

ஷிவம் மாவியை தற்போது நடந்த முடிந்த மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியே (ரூ. 7.25 கோடி) மீண்டும் வாங்கியுள்ளது. அவர் 26 ஐபிஎல் போட்டிகளில் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் தனது திறனை நிரூபிக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

tamil-indian-express-2022-03-23T150829.3

15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதன் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://tamil.indianexpress.com/sports/ipl-2022-tamil-news-5-uncapped-indian-players-to-watch-out-for-429475/

 

 

Link to comment
Share on other sites

கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி

கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி

 

ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.

அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டோனி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022: புதிய அணிகள் முதல் புதிய விதிமுறைகள் வரை - முக்கிய தகவல்கள்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ எதிர்கொள்கிறது முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

போட்டிகள் நடைபெறும் தேதி

மார்ச் 26 முதல் மே 22 வரையிலான 58 நாட்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி மே 29ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெறுகின்றன?

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் உள்ள 4 மைதானங்களில் 25% பார்வையாளர்களுடன் நடத்த மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

புதிய அணிகள் என்னென்ன?

ஐபிஎல் தொடரில் இந்த முறை முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில், தற்போது புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் என 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ வில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயந்த்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய விதிமுறைகள் என்ன?

10 அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் ஏராளமான மாற்றங்களை காண தயாராக இருக்க வேண்டும்.

இந்த சீசனில் புதியதாக 3 விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 2 முறை டி.ஆர்.எஸ். முறையீடு செய்யலாம்.

ஒரு வீரர் கேட்ச் கொடுத்தால், கேட்ச் பிடிக்கும் முன்பு மறுமுனையில் இருந்த ஆட்டக்காரர் மறுபக்க கிரிஸூக்குச் சென்றால் அவரால் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள முடியும். இந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இப்போது புதிய ஆட்டக்காரர்தான் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை ஓவரின் கடைசிப் பந்தில் ஒருவர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள ஆட்டக்காரர், அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளலாம்.

மூன்றாவது நாக் அவுட் ஆட்டங்களில் சூப்பர் ஓவரை முடிக்க முடியாமல் போனால், லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை அணியின் முகமாக திகழ்ந்த எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ஜடேஜா தலைமையில் சி.எஸ்.கே களம் காண்கிறது. தொடக்க அட்டகாரராக களமிறங்கி ஜொலித்த டு பிளெசிஸ் இப்போது அணியில் இல்லை. புதிய வீரர்களை கையாளுவது அணியை கட்டமைப்பது என ஜடேஜாவுக்கு அதிக வேலைகள் உள்ளன.

சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் விளையாடுகிறாரா?

சென்னை அணியில் விளையாடி வந்த ரெய்னா இந்த ஏலத்தின் மூலம் அணியில் தக்க வைக்கப்படவில்லை. ரசிகர்களால் 'சின்ன தல' என்று அழைக்கப்படும் அவரை எடுக்காதது குறித்து சென்னை ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர் இந்த சீசனில் வர்ணனையாளராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலமா?

 

rohit sharma

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய பலமே அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவதுதான். இந்த முறை பெரும்பாலான ஆட்டங்கள் மும்பையில் நடைபெறுவது மும்பை இந்தியன்ஸ்க்கு சாதகமாக அமையும். ஆனால் 'இது எங்களுக்கு பெரிய அளவில் சாதாகமாக அமையாது' என்றும் 'அணியில் உள்ள 80% வீரர்கள் மும்பையில் இதுவரை விளையாடியதில்லை' எனவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ், போலார்ட், இஷான், பும்ரா ஆகியோர் மட்டுமே மும்பையில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏலத்தில் அதிக விலைக்கு போன இஷான் கிஷன்

15வது ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் எனும் பெருமை பெற்ற இஷான் கிஷன், மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் கூடுதல் வலு சேர்க்க கூடும். 23 வயதான இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார்?

ராயல் சேலஞ்ரஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக டு-பிளெசிஸ் தலைமை தாங்குகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த டு-பிளெசிஸை அணியில் தக்க வைக்கவில்லை என்று சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அணிக்கு வலு சேர்க்க கொல்கத்தாவின் முன்னாள் கேப்டனும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் உள்ளது கூடுதல் பலமாக அமையலாம்.

ரஷிப் பந்த் தலைமையில் டெல்ல் கேப்பிடல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சன் ரைசர்ஸ் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இணைந்துள்ளார்.

ஷ்ரெயஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷ்ரேயஸ் ஐயர், ரஹானே, ஆரோன் ஃபின்ச், பேட் க்யூமின்ஸ், ஆண்ட்ரே ரசல், டிம் சவுதி, சுனில் நரேன் என நட்சத்திர பட்டாளமே உள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டியில் கோப்பையை தரவ விட்ட கொல்கத்தா இந்த முறை ஷ்ரேயாஸ் தலைமையில் எப்படி செயல்படும் என்பது உற்று நோக்கப்படும்.

தமிழக வீரர் நடராஜன் எந்த அணியில்?

தமிழக வீரர் நடராஜன் ஐதராபாத் அணியில் களமிறங்குகிறார்.

டேவிட் வார்னர் இல்லாத வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஏய்டன் மார்க்ரம் உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்கள் மீது நிரம்பியுள்ளது. பந்துவீச்சில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மீதும் கவனம் படர்ந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் எந்த அணியில்?

2008ல் ஒரேயொரு முறை மட்டுமே கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி இந்த முறையாவது மீண்டும் கோப்பையை வெல்ல சஞ்சு சாம்சன் தலைமையிலான இளம் படை முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கலாம். பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தும் வீரர் யாரும் பஞ்சாப் கிங்ஸ்ல் இல்லை. இந்த முறை கோப்பையை வெல்வது பஞ்சாப்புக்கு கடினம் என சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். இந்த கருத்தை ஆட்டத்திறன் மூலம் முறியடிக்க வேண்டிய பெரிய பொறுப்பு மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் வீரர்களுக்கு உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் குஜராத் டைடன்ஸும், கே.எல். ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயந்த்ஸ் அணியும் ஏலத்தில் நட்சத்திர வீரர்களை எடுத்திருந்தாலும் ஆடுகளத்தில் அவர்களின் மேஜிக் ஜொலிக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/sport-60873673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஐபிஎல் 2022: புதிய அணிகள் முதல் புதிய விதிமுறைகள் வரை - முக்கிய தகவல்கள்

ஏன் @கிருபன்போட்டியை நடாத்தாமல் விட்டுடுட்டார்?

ஏதோ நாளிருக்கு என்று எண்ணியிருந்தேன்.

இப்ப தான் பார்த்தால் நாளைக்கு தொடங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் @கிருபன்போட்டியை நடாத்தாமல் விட்டுடுட்டார்?

ஏதோ நாளிருக்கு என்று எண்ணியிருந்தேன்.

இப்ப தான் பார்த்தால் நாளைக்கு தொடங்குகிறது.

எல்லாம் உங்களுக்கெதிரான சூழ்ச்சிதான். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

எல்லாம் உங்களுக்கெதிரான சூழ்ச்சிதான். 

ஆஆஆ
அப்ப கவுக்க போறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் @கிருபன்போட்டியை நடாத்தாமல் விட்டுடுட்டார்?

ஏதோ நாளிருக்கு என்று எண்ணியிருந்தேன்.

இப்ப தான் பார்த்தால் நாளைக்கு தொடங்குகிறது.

உக்கிறேன் பிரச்சனை தான் காரனமாம்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் @கிருபன்போட்டியை நடாத்தாமல் விட்டுடுட்டார்?

ஏதோ நாளிருக்கு என்று எண்ணியிருந்தேன்.

இப்ப தான் பார்த்தால் நாளைக்கு தொடங்குகிறது.

ஒருவரும் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.😐

அதோட itinerary அண்மையில்தான் வந்திருந்தது. Template உம் மாற்ற நேரம் கிடைக்கவில்லை. அதனால் நானும் பேசாமல் இருந்துவிட்டேன்.

உலகக் கிண்ணம் வரும்போது பார்ப்போம்! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்!

spacer.png

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 26) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 14 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் 15ஆவது ஐபிஎல். திருவிழா இன்று (மார்ச் 26ஆம் தேதி) தொடங்குகிறது. மே 29-ந் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலத்தில் மும்பையில் உள்ள வான்கடே , பிராபோர்ன் ஸ்டேடியங்கள், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல், புனேயில் உள்ள எம்சிஏ ஆகிய நான்கு மைதானங்களில் போட்டி நடக்கிறது.

இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் இரண்டு புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் 2011 ஆண்டு போட்டியை போல இந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடுகின்றன.

10 அணிகள் கலந்து கொள்வதால் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை. 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் - ஏ: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

குரூப் - பி: சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் இரண்டு தடவையும் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

மே 22ஆம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்ட விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டி மே 29ஆம் தேதி நடைபெறும்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 26) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


 

https://minnambalam.com/entertainment/2022/03/26/9/IPL-festival-starts-today

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

உக்கிறேன் பிரச்சனை தான் காரனமாம்.😄

உக்ரேனில் என்ன பிரச்சனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடித்து வைத்த சென்னைக்கு ஆரம்பத்தில் பதிலடி கொடுத்த கொல்கொத்தா  : மலிங்கவின் சாதனை முறியடிப்பு

(என்.வீ.ஏ.)

இண்டியன் பிறீமியர் லீக்கின் 14ஆவது அத்தியாயத்தை கடந்த வருடம் முடித்து வைத்த சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இந்த  வருடம்   ஆரம்பித்துவைத்த 15 ஆவது அத்தியாயத்தில் பதிலடி கொடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

New captains Shreyas Iyer and Ravindra Jadeja pose with the IPL 2022 trophy, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

இதன் மூலம் கடந்த வருட இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிடம் அடைந்த தோல்வியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிவர்த்திசெய்துகொண்டது.

Umesh Yadav accounted for both Chennai Super Kings' openers, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி  நடப்பு சம்பியன்

சென்னை சுப்பர் கிங்ஸ்  அணியை 131 ஓட்டங்களுக்கு  கட்டுப்படுத்தினர்.

Sheldon Jackson had Robin Uthappa stumped, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

தொடர்ந்து அஜின்கியா ரஹானே, அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் கொல்கத்தாவின் வெற்றியை இலகுபடுத்தின.

ஆரம்பப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ரவிந்த்ர ஜடேஜா தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Andre Russell had Shivam Dube holing out, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

  சென்னை சுப்பர் கிங்ஸ்   ஆரம்ப வீரர்களை குறைந்த எண்ணிக்கைக்கு இழந்த து.   அனுபவசாலியும் முன்னாள் அணித் தலைவருமான எம். எஸ். தோனி, புதிய அணித் தலைவர் ஜடோஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்திரா விட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிலை மோசமடைந்திருக்கும்.

Ravindra Jadeja had a big repair job on his hands in his first game as Chennai Super Kings captain, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

தோனி 38 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 50 ஓட்டங்களுடனும் ஜடேஜா 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

MS Dhoni struggled to get going against Kolkata Knight Riders, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

இவர்கள் இருவரை விட ரொபின் உத்தப்பா 28 ஓட்டங்களைப் பெற்றார்.

Sheldon Jackson was sharp behind the stumps, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

கொல்கத்தா பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Sam Billings played his shots as Chennai Super Kings tried to apply the brakes, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கி கொல்கத்தாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

Ajinkya Rahane was solid for Kolkata Knight Riders at the top, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

அஜின்கியா ரஹானே (44), வெங்கடேஷ் ஐயர் (16) ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து   நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

MS Dhoni gestures in the field, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

தொடர்ந்து நிட்டிஷ் ரானா (21), ஷ்ரேயாஸ் ஐயர் (20 ஆ.இ.), சாம் பில்லிங்ஸ் (25) ஆகியோர் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

சென்னை பந்துவீச்சில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ட்வேன் ப்ராவோ, இண்டியன் பிறீமியர் லீக்கில் 170 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார்.

Dwayne Bravo finished with figures of 4-0-20-3 to draw level with Lasith Malinga as the IPL's highest wicket-taker, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Mumbai, March 26, 2022

இதன் மூலம் இண்டியன் பிறீமியர் லீக்கில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய லசித் மாலிங்கவின சாதனையை ப்ராவோ சமன் செய்தார்.

 

https://www.virakesari.lk/article/124803

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐபிஎல் 2022- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
அக்சர் பட்டேல்

 

104 ரன்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ்- அக்சர் படேல் ஜோடி அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

மும்பை:

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. 

அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 32 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கவனமாக ஆடிய துவக்க வீரர் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் தனது பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 104 ரன்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ், அக்சர் படேல் இருவரும் அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 

லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் விளாச, டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்த டெல்லி அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 

https://www.maalaimalar.com/news/topnews/2022/03/27192540/3616493/IPL-2022-Delhi-Capitals-won-by-4-wickets-against-Mumbai.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி

பதிவு: மார்ச் 27,  2022 23:35 PM
 

கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி
image courtesy: IndianPremierLeague twitter

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டாவதாக நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்சிசும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். அனுஜ் ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து டு பிளெஸ்சிசுடன் விராட் கோலி கைகோர்த்தார். இருவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக டு பிளெஸ்சிஸ் அதிரடியாக ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டு பிளெஸ்சிஸ், 88 ரன்களில் (57 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழந்தார். 

ஆட்டத்தின் கடைசியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் தன் பங்குக்கு 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. விராட் கோலியும்(41), தினேஷ் கார்த்திக்கும்(32) ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். 

இதனை தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது. பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய மயங்க் அகர்வால் 32 ரன்களும் தவான் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய பனுகா ராஜபக்ச 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதிரடியாக ஆடிய ஓடின் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது.

 

https://www.dailythanthi.com/Sports/Cricket/2022/03/27233513/IPL-Cricket-Punjab-Kings-win-by-5-wickets.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி

வழமையில் தோற்றுப் போகும் இந்த அணி நாங்க போட்டி வைக்கலை என்றதும் வென்லுதே.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.