Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல், மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 04:07, சுவைப்பிரியன் said:

இங்கை வன்னியில் நீங்கள் சொன்ன நேரமும் பின் இரவு 8.30 இல் இருந்த 9.15 வரை மீன்டும் மின் வெட்டு இடம் பெற்றுள்ளது.😟

வன்னிக்குள் எது நடந்தாலும் அல்லது அவர்கள் எதைச் செய்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. வன்னியில் எங்கே இருக்கிறீர்கள்?

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No power supply in Indirapuram for 2 hours on June 16'

காலை 8.30 முதல் மாலை 5.30 க்குள் 3 மணிநேர மின்வெட்டு – புதிய அறிவிப்பு இதோ !

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நேரத்திற்குள் சுழற்சி முறையில் 3 மணிநேரத்திற்கு மின்சாரம் தடைப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவசியம் ஏற்படின், இரவு வேளையில் முன்னறிவிப்பு அற்ற 30 நிமிட மின் தடை அமுலாகும் என்றும் குறித்த ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் பாவனையை குறைக்க கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ள அதேநேரம் பல நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளமையால் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சாரம் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

https://athavannews.com/2022/1269707

  • கருத்துக்கள உறவுகள்

எமது பகுதியில் இன்று 01/03/2022 பகல் 11.30am - 2.30pm வரை மின்தடைப்பட்டிருந்தது.

நாளை 02/03/2022 காலை 8am - 1pm வரையும் இரவு 6pm - 8.30pm வரையும் மின்தடை இருக்குமென CEB Care செயலி மூலமாக தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2022 at 21:26, ரஞ்சித் said:

வன்னிக்குள் எது நடந்தாலும் அல்லது அவர்கள் எதைச் செய்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. வன்னியில் எங்கே இருக்கிறீர்கள்?

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ரஞ்சித்.நான் கிளிநொச்சியில இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ரஞ்சித்.நான் கிளிநொச்சியில இருக்கிறேன்.

மீண்டும் வந்தாச்சோ??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் வந்தாச்சோ??

மின்சாரம் அனுப்பி விடவும்!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DC Blackout - TV Fanatic

நாடளாவிய ரீதியில்... இன்று, ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று(புதன்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாலை 06 மணியிலிருந்து இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1269709

  • கருத்துக்கள உறவுகள்

எமது பகுதியில் நாளை 03/03/2022 காலை 8am - 1pm வரையும் இரவு 6pm - 8.30pm வரையும் மின்தடை இருக்குமென CEB Care செயலி மூலமாக தெரியவருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

எமது பகுதியில் நாளை 03/03/2022 காலை 8am - 1pm வரையும் இரவு 6pm - 8.30pm வரையும் மின்தடை இருக்குமென CEB Care செயலி மூலமாக தெரியவருகிறது.

இரவில் மின் வெட்டு வரும் போது… என்ன விளக்கு பாவிக்கின்றனீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

இரவில் மின் வெட்டு வரும் போது… என்ன விளக்கு பாவிக்கின்றனீங்கள்.

ஞாபகம் வருகின்றதோ......நான் ஜாம் போத்தல் விளக்கில் தான் O/L உம்  , A/L உம்  படித்தேன். அதனால் தான் இன்றுவரை மின்சாரத்தை சிக்கனாக பவிக்கின்றேன்.

No photo description available.

Edited by zuma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

ஞாபகம் வருகின்றதோ......நான் ஜாம் போத்தல் விளக்கில் தான் O/L உம்  , A/L உம்  படித்தேன்.

No photo description available.

சென்ற தலைமுறைகள்…. மண் எண்ணை விளக்கு, தேங்காய் எண்ணை விளக்கு, இலுப்பெண்ணை விளக்கு என்று பலவற்றை  பாவித்தார்கள்.

இப்ப “சோலார்” விளக்குகள் பாவனைக்கு வந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சென்ற தலைமுறைகள்…. மண் எண்ணை விளக்கு, தேங்காய் எண்ணை விளக்கு, இலுப்பெண்ணை விளக்கு என்று பலவற்றை  பாவித்தார்கள்.

அதையும் சிக்கனமாக உப்பு, தண்ணி, பாதிக்கு நிரப்பி, பஞ்சு சேர்த்து பாவித்தோம். யாரும் குறை கூறவுமில்லை, காணவுமில்லை. நிம்மதியாக படித்தோம், உறங்கினோம். இப்போ மட்டும் அது ஏதோ எப்போ நடந்தது மாதிரி முழிக்கிறோம். ஏனிப்படி மாறிவிட்டோம்?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

இரவில் மின் வெட்டு வரும் போது… என்ன விளக்கு பாவிக்கின்றனீங்கள்.

சார்ச்சர் லைற் இருக்கு. 
கைகாவலா அரிக்கன் லாம்பும் இருக்கு, ஆனால் மண்ணெண்ணெய் இல்லை!
90-95 காலங்கள் பரவாயில்லை என நினைக்கும் நாட்கள் வரும்போல இருக்கண்ணை, அப்ப சங்கக்கடையில் பகிர்ந்தளிக்கும் முறையில் ஓரளவு பொருட்கள் கிடைத்தது.
70kg நெல்லு 7000 ரூபாவிற்கு வாங்கி வைக்கப்போறம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

சார்ச்சர் லைற் இருக்கு. 
கைகாவலா அரிக்கன் லாம்பும் இருக்கு, ஆனால் மண்ணெண்ணெய் இல்லை!
90-95 காலங்கள் பரவாயில்லை என நினைக்கும் நாட்கள் வரும்போல இருக்கண்ணை, அப்ப சங்கக்கடையில் பகிர்ந்தளிக்கும் முறையில் ஓரளவு பொருட்கள் கிடைத்தது.
70kg நெல்லு 7000 ரூபாவிற்கு வாங்கி வைக்கப்போறம்.

முக்கியமாக...  அரிசி, நெல்லு போன்றவைகள்...
நியாய விலையில் கிடைத்தால், வாங்கி வைப்பது நல்லது.
அந்தரம் ஆபத்திற்கு... கிடைக்கும் ஒரு  கறியையாவது, சமைத்து உண்ணலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2022 at 18:31, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் வந்தாச்சோ??

ஓம் இப்பவெல்லாம் இங்கை தான் கூடக்காலம் நிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

PVVNL releases notice regarding power cut in Indirapuram on June 15

இன்றும் ஏழரை, மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1270249

############   ###############   #################

அதென்ன.. ஏழரை கணக்கு? 
ரவுண்டாக... ஏழு, அல்லது எட்டு என்று வையுங்கப்பா.

சிலவேளை... ஏழரை, சிங்களளவனுக்கு ராசியான இலக்கமோ... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்றும் மின்வெட்டு அமுல் – புதிய அறிவிப்பு !

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏ.பி மற்றும் சி. வலயங்களில் மாத்திரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வார இறுதி என்பதால் மாலை வேளையில் 1,550 மொகாவொட் மின்சார தேவையும் இரவு 2, 350 மொகாவொட் மின்சாரத்தின் தேவையும் உள்ளது என மின்சார சபை அறிவித்துள்ளது.

ஆகவே தற்போதைய நிலையில் மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.

https://athavannews.com/2022/1270590

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நேற்றும் எமது பகுதியில் மின்தடை ஏற்படவில்லை.

நாளை 07/03/22 காலை 9am - 11am வரையும் மாலை 5pm - 6pm வரையும் CEB Care செயலி மூலமாக தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

இன்றும் மின்வெட்டு அமுல் – புதிய அறிவிப்பு !

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போரை வென்ற  எமக்கு வேறு எந்தப்பிரச்சனையையும் சுலபமாக வென்று விடுவோம் என சூளுரைத்தது பொய்யா கோபால்.

தனிச்சிங்கள வாக்குகளை பெற்று வெற்றியீட்டியும்.........
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

போரை வென்ற  எமக்கு வேறு எந்தப்பிரச்சனையையும் சுலபமாக வென்று விடுவோம் என சூளுரைத்தது பொய்யா கோபால்.

தனிச்சிங்கள வாக்குகளை பெற்று வெற்றியீட்டியும்.........
 
மகிந்த கூட்டத்திலை இருக்கிறவன் எல்லாம்… 
அவசரப் பட்டு வார்த்தைகளை விட்டு விட்டு… பிறகு அதை மறைக்க,
பொய்யுக்கு மேலை பொய் சொல்லிக் கொண்டு திரியிற ஆக்கள். 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மகிந்த கூட்டத்திலை இருக்கிறவன் எல்லாம்… 
அவசரப் பட்டு வார்த்தைகளை விட்டு விட்டு… பிறகு அதை மறைக்க,
பொய்யுக்கு மேலை பொய் சொல்லிக் கொண்டு திரியிற ஆக்கள். 🙂

பொய்யுக்கு மேலை பொய் சொல்லி சொந்த இனத்தையே அழிக்கின்றார்கள். 

இருக்கும்  காங்கேசன் துறை சீமேந்து தொழிற்சாலையை அழித்து விட்டு புதிதாக என்னவெல்லாம் செய்கின்றார்கள் பாருங்கள்.

இலங்கையின் மிகப்பெரிய  சீமெந்து தொழிற்சாலை“LANWA Sansta Cement" நாளை அம்பாந்தோட்டையில் திறப்பு. 

Bild

Bild

Bild

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

இன்றும் நேற்றும் எமது பகுதியில் மின்தடை ஏற்படவில்லை.

நாளை 07/03/22 காலை 9am - 11am வரையும் மாலை 5pm - 6pm வரையும் CEB Care செயலி மூலமாக தெரியவருகிறது.

எல்லாம் குறுகிய நேர சந்தோசங்கள்.
ஆனால் இங்கே பாருங்கள் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க.....

ஒரு ஆடம்பர.......

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

இருக்கும்  காங்கேசன் துறை சீமேந்து தொழிற்சாலையை அழித்து விட்டு புதிதாக என்னவெல்லாம் செய்கின்றார்கள் பாருங்கள்.

இங்கு அந்த தொழில்சாலை இருந்து இருந்தால் யாழில் நன்நீர் வளம் காணாமல் போயிருக்கும் LANWA Sansta Cement க்கு  யாழில் இருந்து சுன்னாம்புகல் போகாதவரைக்கும் நிம்மதி பிரேமதாச உடனான யுத்த ஆரம்பத்தில் சுண்ணக்கல் அரவை இயந்திர பகுதிக்குள் எதிர்கால யாழ் நன்மை கருதி பாரிய சக்கை தொகுதியை இறக்கி வெடி வைத்து அழிக்கப்பட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

பொய்யுக்கு மேலை பொய் சொல்லி சொந்த இனத்தையே அழிக்கின்றார்கள். 

இருக்கும்  காங்கேசன் துறை சீமேந்து தொழிற்சாலையை அழித்து விட்டு புதிதாக என்னவெல்லாம் செய்கின்றார்கள் பாருங்கள்.

இலங்கையின் மிகப்பெரிய  சீமெந்து தொழிற்சாலை“LANWA Sansta Cement" நாளை அம்பாந்தோட்டையில் திறப்பு. 

Bild

Bild

Bild

Bild

சுற்றுச்சூழல் மாசுபாட்டினை உருவாக்கும் சீமெந்து உற்பத்தி காங்கேசந்துறையிலிருந்து போனது சந்தோசம், ஆனால்  சீமெந்து உறபத்திக்கு மூலப்பொருளை யாழ் பிராந்தியத்திலிருந்தா பெறுகிறார்கள்? முருகைக்கல்லிருந்தே கிளிங்கர் பெறப்படுவதாக நினைக்கிறேன் ( சரியாக நினைவிலில்லை),யாழ் குடாவை தவர்த்து இலங்கையின் வேறுபகுதியில் இந்த வகை முருகை கற்கள் கிடைக்காது என நினைக்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).
 
யாழ் குடாவில் முருகைகற்கள் அகழபடுவது யாழ் குடாவிற்கு பாதிப்பை உருவாக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, பெருமாள் said:

இங்கு அந்த தொழில்சாலை இருந்து இருந்தால் யாழில் நன்நீர் வளம் காணாமல் போயிருக்கும் LANWA Sansta Cement க்கு  யாழில் இருந்து சுன்னாம்புகல் போகாதவரைக்கும் நிம்மதி பிரேமதாச உடனான யுத்த ஆரம்பத்தில் சுண்ணக்கல் அரவை இயந்திர பகுதிக்குள் எதிர்கால யாழ் நன்மை கருதி பாரிய சக்கை தொகுதியை இறக்கி வெடி வைத்து அழிக்கப்பட்டது .

1 minute ago, vasee said:

சுற்றுச்சூழல் மாசுபாட்டினை உருவாக்கும் சீமெந்து உற்பத்தி காங்கேசந்துறையிலிருந்து போனது சந்தோசம், ஆனால்  சீமெந்து உறபத்திக்கு மூலப்பொருளை யாழ் பிராந்தியத்திலிருந்தா பெறுகிறார்கள்? முருகைக்கல்லிருந்தே கிளிங்கர் பெறப்படுவதாக நினைக்கிறேன் ( சரியாக நினைவிலில்லை),யாழ் குடாவை தவர்த்து இலங்கையின் வேறுபகுதியில் இந்த வகை முருகை கற்கள் கிடைக்காது என நினைக்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).
 
யாழ் குடாவில் முருகைகற்கள் அகழபடுவது யாழ் குடாவிற்கு பாதிப்பை உருவாக்கும். 

நீங்கள் இருவரும் எது வசதியென ஒரு முடிவுக்கு வாருங்கள் 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.